பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த
சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர்.
வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை
நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன
போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும்
பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன்
நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறுக்கில் எழுதிப்
போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.
ஊர் ஊராய்ச் சென்று சிவதரிசனம் செய்து, யாக்கை நிலையாமை, பூமியில்
சிற்றின்பக் கேணியில் மூழ்கிக் கிடந்து இறைவன் அருள் எனும் பேரருள்
பெருங்கடலை மறந்த மக்களுக்கு இடித்துரைப்பது போல் உண்மைகளை உணரவைக்கும்
பாடல்களைப் பாடிக் கொண்டு பரதேசியாத் திரிந்தார். உள்ளத்தை மெல்ல வருடிக்
கொடுத்து உண்மைகளை மெல்லப் புகட்டும் பழைய பாதையை விட்டு நீங்கி, உள்ள
உண்மையை போட்டு உடைத்து நம் கண் முன்னே பாதை தெரியுது பார் என்று உந்தித்
தள்ளும் பாடல்கள் அவை.
போலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும்
வாழும் முறைக்கு ஏற்றதல்ல, ஈசன் இணையடி நிழலே நாம் வேண்டும் நிரந்தர
பேரின்பம் என்பதை பறைசாற்றும் பாடல்கள் அவை. சொல்லுகின்ற சொல் கடுமையாய்,
உள்ளத்தைச் சுடும்படியாய், உள்ளதை உள்ளபடி கேட்கக் கூசினாலும் அதுவே
முற்றிலும் உண்மை என்பதை உணரச் செய்யும் பாடல்கள்.
மனதுக்கும், செவிக்கும், கண்களுக்கும் தற்காலிக இன்பம் சேர்க்கும் கலை
போலன்றி பட்டினத்தார் பாடல்கள் உண்மையை விண்டுரைக்கும் சத்திய வாக்கு
என்பதால், மருந்து கசக்குமென்றாலும், உண்மை சுடும் என்றாலும், பிறவிப்
பேற்றுக்கு அதுவே மருந்து என்பதால் பட்டினத்தார் சொற்களை விரும்பிப்
படிக்க வேண்டும். இது அந்த நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஒரு எளிய
முயற்சி. படித்தபின் கருத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.
அன்பன்,
தஞ்சை வெ.கோபாலன்
பட்டினத்தடிகளின் பாடல்கள்
ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
வெளியீடு : http://FreeTamilEbooks.com
Creative Commons Attribution-NoCommercial-NoDerivatives 4.0 சர்வதேச
உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
http://freetamilebooks.com/ebooks/pattinathar-songs/
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்பிற்கினிய உலகன் எனும் கே.லோகநாதன் அவர்கள் கேட்ட வினாவுக்கு பதிலாக நான் சொல்ல விரும்புவது:" பழம் பெரும் புத்தக பிரசுரகர்த்தர்களான பி.இரத்தின நாயகர் அன்ட் சன்ஸ், 26, வெங்கட்ராமய்யர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை 79 வெளியிட்டுள்ள பழைய நூலான "பட்டினத்தடிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு" எனும் நூலில் 'பட்டினத்தடிகள் சரித்திரச் சுருக்கம்' எனும் முன்னுரையில் காணப்படும் செய்தி இது: "நம் தென்னாட்டின் திலகமெனத் திகழ்ந்து வந்த காவிரிப்பூம் பட்டினத்தின் கவின்மிகு சிறப்பில் மயங்கிய குபேரனானவன், சிவாக்ஞைப்படி அக்காவிரிப்பூம் பட்டினத்திலே சிவநெறிச் செல்வரான சிவநேச செட்டியார் என்னும் வைசியப் பிரபுவின் மனைவியராகிய ஞானகலை என்பாருக்கு மகவாகப் பிறந்து 'சுவேதாரண்யர்' என்னும் பெயரிடப்பெற்று நல்லாசிரியரிடத்துச் சகல கலைகளையும் பழுதற வோதியுணர்ந்து இளம் பிராயத்திலேயே பக்குவராய்ச் சிவபக்தி அடியார் பக்திகளிற் சிறந்து ஒழுகி வரலாயினர். பின்னர் சிவகலை என்னுங் குணவதியை மணந்து இல்லற கடன்களை விழுவாதியற்றிக் குலத் தொழிலாகிய பொருளீட்டுதலை மேற்கொண்டு தம் மரபினர்க்குள் மேம்பட்டுத் தம்மை யாவரும் பட்டினத்துச் செட்டியார் என்று சிறப்புப் பெயரிட்டு வழங்க வாழ்ந்து வருகையில் மகப்பேரின்றி வருந்தலாயினர்.அக்கால், திருவிடைமருதூரிலே ஆதி சைவராகிய சிவசருமர், சுசீலை என்னும் தம்பதிகள்தமது செல்வ முழுவதையும் சிவனடியார் பூசையில் செலவழித்து சிறுமையுற்றிருக்கையில் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி "நாம் வில்வ விருட்சத்தினடியில் மகவுருக் கொண்டிருப்போம்; நீங்கள் அக்குழவியை யெடுத்துச் சென்று காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள சுவேதாரண்யர் வசம் ஒப்புவித்துக் குழவியின் எடைக்குப் பொன் பெற்று நுஞ் சிறுமை தீர்ந்தொழுகுவீராக" என்ற கட்டளைப்படி அவர்கள் அவ்விதம் கொண்டுவர, சிவ பெருமான் சுவேதாரண்யர் கனவிலும் தோன்றி இதுபற்றித் தெரிவிக்க, சுவேதாரண்யர் மிகமகிழ்ச்சியுடன் அக்குழவியை ஏற்று பொன் தந்து களிப்பெய்தி மருதப்பிரான் எனப் பெயரிட்டு வளர்த்து வரலாயினர்.பின்னர் மருதப்பிரானின் பதினாறாமாண்டில் ஒரு நாள் சுவேதாரண்யர் சற்றே சஞ்சலமுற்றிருக்கையில் அவர் மனைவியார் ஒரு சிறு பெட்டியை அவர்முன் வைத்து "இதனைத் தங்களிடம் தருமாறு நம் புதல்வன் தந்து போயினன்" எனலும், புதல்வனைக் காணாத சுவேதாரண்யர் (பட்டினத்தடிகள்) பேரவாவுடன் அதனைத் திறந்து பார்க்கையில் அதனுள் ஒரு காதற்ற ஊசியும், "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்று எழுதப்பட்ட ஒரு ஓலை துணுக்கும் இருக்கக் கண்டு, தனது பூர்வ வாசனையினாலும், சிவபெருமான் திருவருள் நோக்கத்தாலும் அதி தீவிரப் பக்குவராய்ச் சஞ்சலங்கள் நீங்கித் தெளிவு பெற்று, தனது குபேரச் செல்வமனைத்தையும் ஊரிலுள்ளோர் அனைவரும் எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டுத் துறவறம் பூண்டார்.இவ்வரிய துறவு பூண்ட 'பட்டினத்தடிகள்' பெரும் பித்தரைப் போலத் திரிதல் தம்முடைய குலப் பெருமைக்கு இழுக்கு என்று கருதிய அவருடைய தமக்கையார், நஞ்சு கலந்த அப்பத்தை இவருக்கு உண்ணக் கொடுத்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட அப்பம் நஞ்சு கலந்தது என்பதை உணர்ந்த அடிகள் "தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்" என்று கூறி அந்த அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட அவ்வீடு தீப்பற்றி எரிந்து சாம்பராயிற்று."இப்படிப் போகிறது பட்டினத்தாரின் வரலாறு. ஆகவே இந்தக் கதையின் மூலம் அவர் கடலோடி திரவியம் தேடிய வணிகர் வம்சத்தில் தோன்றியது தெரிய வருகிறது.
--
VGopalan
கம்பளச்செட்டி என்ற பெயர் மணிமேகலையில் இடம் பெறுகின்றது. இது 7ஆம் நூற்றண்டு நூல். எட்டி என்ற சொல் உயர்ந்தோன் என்று பொருளில் மன்னால் படை உடைய அல்லது தூது செல்லும் வணிகனுக்கு வழங்கப்பட்ட சிற்ப்புப் பட்டம். இந்த எட்டி என்ற சொல் சகர முன்மிகைப் (prothesis) பெற்று ச்+எட்டி = செட்டி என்றானது.சேசாத்திரி
2014-02-18 16:42 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
'வாணிபம். வணிகர்' என்ற சொற்கள் தமிழ வரலாற்றில் மிகப் பழமையானவை. ஆனால் 'செட்டியார் போன்ற சொற்கள் 10ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்ததா என்று தெரியவில்லை, மேலும் வாணிபம் செய்யும் அனைவரும் வைஷியர் என்று கூறப்பட்டார்களா என்றும் தெரியவில்லை, வைஷியர் என்பது வர்ண அடிப்படையில் எழுகின்றன மக்கள் பாகுபாடு. என்னைப் பொறுத்த வரையில் தமிழக வரலாற்றில் இந்த வர்ண கருத்துக்கள் அவ்வளவாக இல்லை என்றே நினைக்கின்றேன். அதுவும் 10 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியாது என்றே நினைக்கின்றேன்.
2014-02-18 17:05 GMT+08:00 Gopalan Venkataraman <priv...@gmail.com>:
அன்பிற்கினிய உலகன் எனும் கே.லோகநாதன் அவர்கள் கேட்ட வினாவுக்கு பதிலாக நான் சொல்ல விரும்புவது:" பழம் பெரும் புத்தக பிரசுரகர்த்தர்களான பி.இரத்தின நாயகர் அன்ட் சன்ஸ், 26, வெங்கட்ராமய்யர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை 79 வெளியிட்டுள்ள பழைய நூலான "பட்டினத்தடிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு" எனும் நூலில் 'பட்டினத்தடிகள் சரித்திரச் சுருக்கம்' எனும் முன்னுரையில் காணப்படும் செய்தி இது: "நம் தென்னாட்டின் திலகமெனத் திகழ்ந்து வந்த காவிரிப்பூம் பட்டினத்தின் கவின்மிகு சிறப்பில் மயங்கிய குபேரனானவன், சிவாக்ஞைப்படி அக்காவிரிப்பூம் பட்டினத்திலே சிவநெறிச் செல்வரான சிவநேச செட்டியார் என்னும் வைசியப் பிரபுவின் மனைவியராகிய ஞானகலை என்பாருக்கு மகவாகப் பிறந்து 'சுவேதாரண்யர்' என்னும் பெயரிடப்பெற்று நல்லாசிரியரிடத்துச் சகல கலைகளையும் பழுதற வோதியுணர்ந்து இளம் பிராயத்திலேயே பக்குவராய்ச் சிவபக்தி அடியார் பக்திகளிற் சிறந்து ஒழுகி வரலாயினர். பின்னர் சிவகலை என்னுங் குணவதியை மணந்து இல்லற கடன்களை விழுவாதியற்றிக் குலத் தொழிலாகிய பொருளீட்டுதலை மேற்கொண்டு தம் மரபினர்க்குள் மேம்பட்டுத் தம்மை யாவரும் பட்டினத்துச் செட்டியார் என்று சிறப்புப் பெயரிட்டு வழங்க வாழ்ந்து வருகையில் மகப்பேரின்றி வருந்தலாயினர்.அக்கால், திருவிடைமருதூரிலே ஆதி சைவராகிய சிவசருமர், சுசீலை என்னும் தம்பதிகள்தமது செல்வ முழுவதையும் சிவனடியார் பூசையில் செலவழித்து சிறுமையுற்றிருக்கையில் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி "நாம் வில்வ விருட்சத்தினடியில் மகவுருக் கொண்டிருப்போம்; நீங்கள் அக்குழவியை யெடுத்துச் சென்று காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள சுவேதாரண்யர் வசம் ஒப்புவித்துக் குழவியின் எடைக்குப் பொன் பெற்று நுஞ் சிறுமை தீர்ந்தொழுகுவீராக" என்ற கட்டளைப்படி அவர்கள் அவ்விதம் கொண்டுவர, சிவ பெருமான் சுவேதாரண்யர் கனவிலும் தோன்றி இதுபற்றித் தெரிவிக்க, சுவேதாரண்யர் மிகமகிழ்ச்சியுடன் அக்குழவியை ஏற்று பொன் தந்து களிப்பெய்தி மருதப்பிரான் எனப் பெயரிட்டு வளர்த்து வரலாயினர்.பின்னர் மருதப்பிரானின் பதினாறாமாண்டில் ஒரு நாள் சுவேதாரண்யர் சற்றே சஞ்சலமுற்றிருக்கையில் அவர் மனைவியார் ஒரு சிறு பெட்டியை அவர்முன் வைத்து "இதனைத் தங்களிடம் தருமாறு நம் புதல்வன் தந்து போயினன்" எனலும், புதல்வனைக் காணாத சுவேதாரண்யர் (பட்டினத்தடிகள்) பேரவாவுடன் அதனைத் திறந்து பார்க்கையில் அதனுள் ஒரு காதற்ற ஊசியும், "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்று எழுதப்பட்ட ஒரு ஓலை துணுக்கும் இருக்கக் கண்டு, தனது பூர்வ வாசனையினாலும், சிவபெருமான் திருவருள் நோக்கத்தாலும் அதி தீவிரப் பக்குவராய்ச் சஞ்சலங்கள் நீங்கித் தெளிவு பெற்று, தனது குபேரச் செல்வமனைத்தையும் ஊரிலுள்ளோர் அனைவரும் எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டுத் துறவறம் பூண்டார்.இவ்வரிய துறவு பூண்ட 'பட்டினத்தடிகள்' பெரும் பித்தரைப் போலத் திரிதல் தம்முடைய குலப் பெருமைக்கு இழுக்கு என்று கருதிய அவருடைய தமக்கையார், நஞ்சு கலந்த அப்பத்தை இவருக்கு உண்ணக் கொடுத்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட அப்பம் நஞ்சு கலந்தது என்பதை உணர்ந்த அடிகள் "தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்" என்று கூறி அந்த அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட அவ்வீடு தீப்பற்றி எரிந்து சாம்பராயிற்று."இப்படிப் போகிறது பட்டினத்தாரின் வரலாறு. ஆகவே இந்தக் கதையின் மூலம் அவர் கடலோடி திரவியம் தேடிய வணிகர் வம்சத்தில் தோன்றியது தெரிய வருகிறது.
பண்டு வணிகர்கள் படை வைத்திருந்ததால் மன்ன்னுக்கு படைஉதவி தேவைப்பட்ட காலத்தில் தம் படையை அனுப்பி உதவினர் அதற்கு சிறப்பு செய்யும் வகையில் மன்னன் அந்த வணிகர் தலைவனுக்கு மட்டும் எட்டி பட்டம் வழங்கினான். சில இடங்களில் குறுநில அரசர்களாக ஆட்சிப் பொறுப்பையும் அவர்களுக்கு வழங்கினான். சான்றாக இரு நடுல் கல்வெட்டுகள் கீழே.https://groups.google.com/forum/#!msg/mintamil/Q_78YLnyBbc/o9i5AfzcCyYJ
விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார் கோட்டை சிவன் கோவிலில் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. (வெ. வேதாசலம், ஆவ. இதழ் 10,1999)
சூரங்குடி / நாட்டு ஆ / தனூராந / கையம் / ஊர்கிழவன் / ஸ்ரீ வேழா / ன் சீலப்பு / கழான் க / லியுகக்கண் / டடி தன் / ம செட்டிக்கு / கோன் நோ / ற்றி தலை / தந்தான்
கிழவன் - ஊர்த்தலைவன்; வேள் > வேழ் - சிற்றரசன்; சீலம் - நல்ஒழுக்கம்; கண்டடி(கண்டு + அடி) - அடிக்கரும்பு; நோற்றி - நோன்பு இருந்து; தலைதந்தான் -தலைப்பலி கொடுத்தான்.
எட்டயபுரப் பகுதியில் இருந்த சூரங்குடி நாட்டின் பகுதியான ஆதனூரின் கையமூர் எனும் ஊருக்கு வேள் ஸ்ரீ வேழான் சீலப்புகழான் கலியுகக் கண்டடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் தன்ம செட்டிக்கு நலம் வேண்டி கோன் என்பவன் நோன்பு இருந்து தன் தலையை வெட்டிப் பலி தந்து உள்ளான்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)
ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு / கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் / றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்
நன்று - பெரிது, சிறப்பு, நல்லது; எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன், அரசன் வழங்கும் ஒரு பட்டம்; கோயில் – அரண்மனை
பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.
சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன். மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது.
சேசாத்திரி
2014-02-19 7:40 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
உலக்ன்வரலாறு புரியவில்லை, புரிவித்தால் மகிழ்வேன்யார் 'எட்டி. செட்டி' எனும் பட்டப்பெயர்களை சாதிப் பெய்ராக்கிப் பிறகு வர்ணப் பெயராக்கியது?திரு சேஷா அவர்க்ளேமிக்க நன்றி. எட்டி செட்டி என்பன பட்டப் பெயர்களாக இருக்கலாம். அப்படி என்றால் ஒரு சிலருக்கே உரிதாகியவையாக இருக்கலாம். ஆனால் இப்படி இது ஓர் சாதிப் பெயராக மாறியது? மேல்ம் அது எவ்வாறு வடபுலத்து மரபிலும் வேத மரபிலும் இருக்கும் வர்ணாஸ்ரமத்தின் ஓர் பெயராகவும் அதாவது செட்டி என்றால் வைஷியர் என்பது எப்படி வந்தது?
2014-02-19 10:00 GMT+08:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:கம்பளச்செட்டி என்ற பெயர் மணிமேகலையில் இடம் பெறுகின்றது. இது 7ஆம் நூற்றண்டு நூல். எட்டி என்ற சொல் உயர்ந்தோன் என்று பொருளில் மன்னால் படை உடைய அல்லது தூது செல்லும் வணிகனுக்கு வழங்கப்பட்ட சிற்ப்புப் பட்டம். இந்த எட்டி என்ற சொல் சகர முன்மிகைப் (prothesis) பெற்று ச்+எட்டி = செட்டி என்றானது.சேசாத்திரி
The sumerian gilgamesh epic later part depicts how people and certain groups are treated in the underworld after death, this also allows how these groups would have been treated when they are alive, I think some differentiation has already started in the later period, but we don't where present Indian ancestors were at that time and what they have been doing... Another interesting thing contrary to by belief that dravidan languages evolved here after Tamil speaking people and hindi formed after that, my intuition or feeling is many groups migrated out or formed about same time as Tamil, Telgu, Kannada and Hindi speaking people with newly found writing system and enabling coining of new words same and different meanings....as noted earlier kali kalam refers the period written language, incidently this kaliyuga concept would have evolved later the edubba of earlier period refers to various occupation and talks about high positions reached by the graduates next to kings, although it is not talking that education is only to priests, we have all occupation and egalitarian thinking, even it is not talking those serving girls in temples as prostitues, though epsd may be in error based on later part interpretations and insertions we have seen paarpanar having strong group identity to protect themselves and making tough for anyone to easily getting admitted a very similar systems of university phd holders - in a way and later such techniques, being followed by other groups, religions and sects with well known signs, symbols, dress andeven code of practice, even what we have modern military uniforms...this slowly had creeped in and made gaps starting from slaves and so on, hatred of biggest order as between waring groups on many counts and finally killing hurting illtreating inhuman ways...as of modern times such differentiations are seen in legal frame, capital punishment is one such, though we may have arquements eitherway or even balanced talks in our indian system we had gone too much andcorrected in a major way still lots of correction are required in thoughts and action generalizing and inhuman treatment are worst of our caste system, even we willsee some geraluzation in termsof paarpanar as we thing, so girtheir part, everyone states thinking in terms ofgroup or caste terms....
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (6) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
எனக்கு நண்பர்கள் அளவுக்கு ஆராய்ச்சி அறிவு அதிகமில்லையாயினும், நம் வரலாற்றுப் பின்னணியை ஓரளவு பயின்றவன் எனும் முறையில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். கூட்டுச் சமுதாயமாக நம் மக்கள் வாழத் தொடங்கிய போது எல்லோரும் ஒரே தொழிலைச் செய்வது இயலாது என்பதால் அவர்களுக்குள் யார் யார் என்னென்ன தொழில்களைச் செய்வது என்று அவர்களுக்குள் தீர்மானம் செய்து ஒவ்வொரு தொழிலையும் ஒவ்வொரு பகுதியினர் செய்து வந்தனர். ஆயிரக்கணாகான ஆண்டுகள் ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குள் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம் வளர்ந்து பல தொழில்புரிவோருள் பல்வகை பழக்க வழக்கங்கள், திருமண பந்தங்கள், வாழ்க்கை முறை, நாகரிகம் இவை அமைந்து விட்டன. இவ்வகைப் பிரிவுகளே பின்னர் தங்களை இன்னார் என அறிமுகம் செய்து கொள்ள தொழில் அடிப்படையில் பெயரையும் தாங்கிவரலாயினர். அதனையே ஜாதிப் பிரிவினை ஆயிற்று. பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர எனும் சொற்கள் தொழிலைக் குறிப்பனவே தவிர அதில் உயர்ச்சி தாழ்ச்சி என்பது அப்போது இல்லை. இது இருபதாம் நூற்றாண்டில் ஆதாயம் தேடவும், ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பிரித்துப் பார்க்கும் சூழ்ச்சியில் சில பிரிவினருக்கு இவர்களே கேவலமான ஒரு பெயரைச்சூட்டி அழைக்க அதுவே இன்று பலருடைய மனங்களில் ஆழப்பதிந்துவிட்டது. மகாகவி பாரதி பாடியது "ஜாதி பேதங்கள் இல்லையடி பாப்பா, அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்பதுதான். இதையே 40களில் அரசாங்கம் பாரதி பாடல்களை தொகுத்தபோது அவர் வார்த்தைகளை மாற்றி "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று எழுதிவிட்டனர். ஜாதிகள் இல்லை என்றால் அடுத்த அடியில் சொல்லப்படும் அதில் தாழ்ச்சி உயர்ச்சி என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காதே. ஜாதிகள் என்பது தொழிலால் வருவது பிறப்பால் அல்ல என்பது பாரதியின் கருத்து. "முரசு" பாடல்களைப் படித்தால் அவன் கருத்து புரியும். தஞ்சை மாவட்டத்தில் ஒரு இனத்தார் 'முடிபூண்டார்', 'காடுவெட்டியார்', 'நாட்டார்', 'சோழகர்' இதுபோன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். ஒரே ஜாதியில் அவரவர்கள் ஈடுபட்டிருந்த தொழிலையொட்டி இந்தப் பெயர்கள் வந்திருக்க வேண்டும். இப்படித்தான் அந்தக் காலத்தில் மக்கள் செய்த தொழிலையொட்டி பிரிவுப் பெயர்கள் ஜாதிப் பெயர்களாக மாறின. வைசியர் என்போர் பொருள்களை வாங்கி விற்போர். இவர்களுள் உள்ளூரில், வெளியூரில், கடல் கடந்து எனும்போது அவர்கள் தனித்தனிப் பிரிவுகளாக ஆயினர். இந்தத் தொழில் மக்கள் ஜாதிகள் பெயரால் பிரிந்தபோது ஏற்பட்டதல்ல, எல்லா காலத்தும் இருந்து வந்ததே. ஆனால் அந்தந்த காலத்து மக்கள் அதனைப் புரிந்து கொண்டதற்கேற்ப ஒன்றாகவும், பலவாகவும், உயர்வாகவும், தாழ்வாகவும் நினைத்துக் கொண்டு பூசலிடுவதோ, பெருமை பேசுவதோ, அல்லது புரட்சியாளர்களாக நினைத்துக் கொண்டு அவரவர் கருத்தை வலியுறுத்தி இது தவறு, இது சரி என்றெல்லாம் வாதிடுவதோ நடந்து கொண்டிருக்கிறது. மகாகவி பாரதியைப் புரிந்து கொண்டவர்களுக்கு இதன் உண்மைகள் நன்றாகப் புரியும். நாம் அணிந்திருக்கும் கண்ணாடிதான் கோளாறே தவிர வரலாற்றில் கோளாறு இருப்பதாகத் தெரியவில்லை. நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எனப்படுவோர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து கடல் வாணிபம் செய்து வந்த வைசியர்கள். புகார் கடல்கொண்ட காலத்தில் இவர்கள் இருக்க இடம் தேடி பாண்டி நாட்டுக்குச் செல்ல அங்கு துறைமுகம் அருகிலுள்ள இப்போதைய செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்துகொள்ள பாண்டிய மன்னனிடம் அனுமதி கேட்டுப் பெற்று வசித்து வருகின்றனர். இதெல்லாம் வரலாறு. ஜாதிப் பெயர்கள் எப்படித் தோன்றியது, எப்படி பிரிவினைகள் தோன்றின என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. மேம்போக்கான விவாதத்தினால் இதற்கு முடிவு காணமுடியாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
--
VGopalan

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2014-02-19 8:52 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
ஆனால் இவ்விளக்கங்கள எவ்வாறு 'செட்டி' ஓர் சாதிப் பெயர் ஆயிற்று எப்பொழுது அது வர்ணப் பெயராக வீழ்ந்தது என்று தெரியவில்லை,திரு சேஷா அவர்களேகல்வெட்டுகளில் எவ்வாறு எட்டி செட்டி போன்ற சொற்கள் பட்டப்பெயர்களாக இருந்தன எவ்வாறு சில வணிகர்கள் படைகளை வைத்திருந்தனர் அதன் வழி சில மன்னர்கட்கு உதவி செய்தனர் என்பதெல்லாம் தெரிகின்றது.
எனக்குத் தெரிந்த ஓர் செட்டியார் நண்பர் சாதிவிட்டு திருமணம் செய்துகொள்ள் எண்ணியபோது அவர் தந்தையார் தற்கொலை செய்துகொண்டு சாவேன் என்று மிரட்ட அவர் வேறு வழியின்றி ஓர் செட்டிப் பெண்னையே மணந்தார்.
இதேப் போன்று 'படையாட்சி' என்ற சாதிப்பெயரும் இன்னும் பலவும். சோழர் காலத்தில் படைத் தலைவராக இருந்த ஒரு சிலர் 'படையாட்சி' என்று அழைக்க்பட்டிருக்கலாம். பிறகு அதுவே ஓர் சாதிப் பெய்ராக மாறி விட்டது போலும்
எப்படி ஏன் பட்டப்பெயர்கள் சாதிப் பெய்ரகளாக மாறின? பிறகு ஏன் சில வரணப்பெயர்களாக மாறின? - உலகன்ஐயா!தொழில் அடிப்படையில் அமைந்த சாதி வழக்கம் பண்டுதொட்டே இருந்து வருகின்றது. ஆனால் அப்போது பிறப்படிப்படையில் ஏற்றத் தாழ்வு நிலவியதாகத் தெரியவில்லை. ஆனால் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வு, தீண்டாமை குறித்த பதிவு 8 - 9 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பட்டதாக கொள்ளலாம். சைவத்திற்கு தலைமையாக உள்ள சிதம்பரமும் வைணவத்திற்கு தலைமையாக உள்ள திருவரங்கமும் அதில் முன்னிலை பெற்றன என்பது நந்தனார், திருப்பாணாழ்வார் வரலாற்றில் இருந்து தெரிகின்றது. அதே நேரம் பறையர் குலத்தில் பிறந்த திருமழிசை ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலில் நுழைந்து பெருமாளை அழைத்துச் செல்லும் உரிமை பெற்றவராக இருந்துள்ளார் என்பது திருவரங்கம், சிதம்பரம் தவிர்த்து தீண்டாமைப் பழக்கம் பிற கோவில்களில் இன்னம் நடைமுறைப்படாததைக் காட்டுகின்றது. எனவே பிறப்பு வழி சாதியும் தீண்டாமையும் 10 ஆம் நூற்றாண்டளவில் வந்திருக்க வேண்டும்.கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டாம் – துணிவுடைய
செந்நாப் புலவன் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.
விளக்கம் தேவைப்படாத எளிமையான பாடல். ”நானும், என் சீடனும் போகிறோம்; நீயும் வா” என்று பெருமாளை அழைக்கிறார் ஆழ்வார். பெருமாளும் தன் நாகப்ப்டுக்கையைச் சுருட்டிக் கொண்டு ஆழ்வாரின் பின்செல்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள சாதிப்பெயர்கள் பெரும்பாலும் தொழிற்பெயர்கள் அல்லது பட்டப் பெயர்களே.சேசாத்தரி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இது வரலாறா புராணமா பிராமணர்களின் கட்டுக்கதையா? இன்றைய அறிவியல காலத்தில் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட கதைகள் வர்லாறாகக் கூறி நமது பண்டைய இருடிகள் இந்து மக்களை நன்றாக ஏமாற்றியுள்ளது இன்னுமா புரியவில்லை?
//ஆரியர் புலம்பெயர்ந்த கி.பி 6-ஆம் நூற்றாண்டுக்குப் பின் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் காஷ்மீரில் இருந்து தமிழகத்துக்குள் ஊடுருவும்வரை வர்ணாஸ்ரமம் தமிழகத்தில் நிலைபெறவில்லை??
இவ்வாறு தொல்காபியம் காட்டும் ஏரணவியல் அடிப்படையில் சிவஞான போதம் சூத்திரங்களை எழுதியதோடு காண்டிகை உரையும் மெய்கண்டார் எழுதியிருக்க அதற்கு வேண்டிய அடிப்படை கருத்டுக்கள் திருமூலரின் திருமந்திரத்திலும் அப்பர் திருஞான சம்பந்தர் பாடல்களிலும் இருக்க, எப்படித் தாங்கள இந்த காஸ்மீர் கட்டுக்கதையை முன்மொழிந்து செல்கின்றீர்?
26.
அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்
உத்தியால் பந்தம் வீடென்று உரைக்கும் வேதாந்தம் எல்லாம்
மித்தையால் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தான்
முத்தியாம் இவ்விரண்டின் முந்தி ஆரோபிதம் கேளாய்
27.
ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவ எல்லாம்
ஓர்ரொர் வஸ்த்துவினை வேறே ஓரோர் வஸ்துவென ஓர்தல்
நாரூடு பணியாத் தோன்றல் நரனாகத் தறியில் தோன்றல்
நீரூடு கானல் தோன்றல் நிரந்தரம் வெளியில் தோன்றல்
>>>
இது ஏறக்குறைய எல்லா வேதாந்திகளும் சொல்வதுதான். இதைத்தான் தாங்கள் சொல்கின்றீர்களா என்று தெரியவில்லை, பிழையாக உணர்தல் வேறு பிராந்தி ஞானமாக உணர்வது வேறு
காண்பதெல்லாம் அத்தியாசம் ஆரோபிதம் என்றால பொருளொடுபுணராச் சுட்டாகிய 'அது. இது" எனும் உணர்வுகள் என்னாவது?
அனைத்தும் கற்பிதம் என்றால் 'சுட்டுணர்வும்" அதன் வழி பலர் உடன்பட்டு உண்மை என்று உணர்வதும் என்னாவது? இங்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாகக் காண்பது இல்லையே?
'மரம், மாடு' என்று பொருளை உணர்வதெல்லாம் கற்பிதம் என்றால் -ஆரோபிதம் அத்தியாசம் என்றால் எப்படி பலர் உடன்பட்டு அது உணமையே என்றும் உணரப்படுகின்றது?
இந்த வேதாந்தத்தை நான் விரிவாக கண்டித்துள்ளேன். கீழ் வரும் சுட்டியில் என் கண்டணம் கிடைக்கும். படித்துவிட்டு மேற்கொண்டு தெளிவுகள் வேண்டும் என்றால் கேளுங்கள்
https://sites.google.com/site/meykandasastras/critique-vedanta
உலகன்
2014-02-19 21:01 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
ஆதிசங்கர்ரின் உலகம் பொய் என்ற கருத்துஆதிசங்கரர் உலகம் பொய் என்றா சொன்னார்பார்வையும் அகந்தையும் காட்சிப் பிழையையும் தோற்ற மயக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றுதானே சொன்னார்இங்கே பொய்வாதம் எப்படிப் பொருந்தும்மெளனம்