ஜேம்ஸ் பிரின்செப்பின் பிறந்தநாளை "தம்ம லிபி தினம்" எனக் கொண்டாடும்போது, லிபி என்பது ஆவணம் (அ) சாசனம் என்ற புரிதல் முக்கியமானது. அசோகர் கரோஷ்டி, பிராமி இரு வகை எழுத்துக்களிலும் பௌத்த தர்ம சாசனங்களை (= லிபிகளை) வெளியிட்டுள்ளார். ஜேம்ஸ் பிரின்செப் முதன்முதலாக, அசோகரின் ஆவணங்களைப் படித்து அறிய வழிவகுத்தார். பிரின்செப் காலம் முதலாக, மிகச் சமீப காலம் வரை, எல்லா இந்திய ஆவணங்களும் அசோகர் காலத்திற்குப் பிற்பட்டது தான் என்று கருதப்பட்டது.
ஆனால், தமிழ் பிராமி பொறித்துள்ள பானை ஓடுகளும், அவற்றின் காலக் கணிப்பும், பிராமி எழுத்து வட நாட்டில் அசோகருக்குச் சில நூற்றாண்டு முன்னரே தோன்றிவிட்டது என உறுதி ஆக்குகின்றன.
https://www.deccanherald.com/india/fresh-scientific-dates-push-origin-of-tamili-script-by-a-century-2-3048845மகாராஷ்டிர மாநிலத்தில் சிலர் பிராமி லிபி என்பது தம்மலிபி எனப் பெயர் மாற்ற முயற்சி செய்தனர். அவர்களுக்கு, லிபி என்ற சொல்லின் பொருள் விளக்கப்பட்டுள்ளது. சமணத்தின் சமவயங்க சூத்திரம், மகாயான பௌத்த லலிதவிஸ்தாரம் போன்றவற்றில் "தம்மலிபி" என்ற எந்த எழுத்துவகையும் குறிப்பிடவில்லை.
https://www.youtube.com/watch?v=7_pr9XcCk6kபிராமி எழுத்து, கரோஷ்டி எழுத்து இரண்டிலும் அசோகர் தர்ம சாசனங்களை எழுதியுள்ளார். அவ்வளவுதான்.
https://x.com/cobbaltt/status/1291731767578120194Two words of Sumerian origin in Tamil: லிபி <lipi> 'script, writing' and தீவான் <dīvān> 'minister, dewan'.
Sumerian 𒁾 dub 'clay tablet > Akkadian 𒁾 ṭuppu > Elamite 𒁾 tippi > Old Persian dipi 'document' > Ashokan Prakrit 𐨡𐨁𐨤𐨁 dipi/lipi 'writing' > Sanskrit lipi > Tamil lipi
-------------
ஏற்கெனவே, நான் குறிப்பிட்டது போல, பிராமி எழுத்து வேத இலக்கியங்களின் வாய்மொழியாக ஆராய்ந்து அமைத்த நெடுங்கணக்கு அடிப்படை. பிராமியின் இந்தப் பெயர்க் காரணத்தை சமீப கால சர்ச்சை விவாதங்களில் யாரும் விளக்கியதாய்த் தெரியவில்லை. இந்திய மொழிகளிலேயே, தமிழில் தான் சமணர்கள் பிராமி எழுத்து எனச் சம்ஸ்கிருதப் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். பிற மொழிகளிலே, பிராகிருதப் பெயரைச் சமணர்கள் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.
Plus the Jain Sutras start with the salutation of Brahmi script 'namō baṁbhīē livīē' like this one 'vyākhyāprajñāptisutra'
https://x.com/Param_Chaitanya/status/1769947018330259887 பேரா. ஃப்ரிட்ஸ் ஸ்டால் மறைவதற்கு முன்னர் எனக்கு அனுப்பிய கட்டுரை, இந்திய பிராமி எழுத்துமுறை இந்தியாவிலும், ஆசியாவிலும் அமையக் காரணங்களை விளக்குகிறது. அரிய கட்டுரை, எங்கும் காணக் கிடைக்காதது.
https://dakshinatya.blogspot.com/2008/12/staal-sanskrit.htmlஆக, ஜார்ஜ் ப்யூலருக்கு முன்னரே, பிராமி பெயரைப் பயன்படுத்தியவர்கள் தமிழ்ச் சமணர்கள் தாம் என்பது வெள்ளிடைமலை.
https://nganesan.blogspot.com/2018/02/sripurana-sculpture-near-vanji-karur.htmlரிஷபதேவர், தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.
ஸ்ரீபுராணத்திலிருந்து சில வரிகள்
” பகவான் .................... ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம்காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், ........... அக்ஷரமாலையினையும்,சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர். சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணித ஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. ”
தமிழ் பிராமி அசோகச் சக்கரவர்த்தி காலத்திற்குப் பல காலம் முன்பே, கொங்குநாடு வழியாக தமிழுக்கு வந்துவிட்டது. இந்த விஞ்ஞான உண்மையை, டெல்லியில் ஆர்க்கியாலஜி பேரா. நயனஜோதி லாகிரி (Nayanjot Lahiri) சொல்லி "தம்மலிபி என்பது வேறு" என விளக்குகிறார்.
https://indianexpress.com/article/cities/mumbai/renaming-of-brahmi-script-to-dhammalipi-divides-teachers-historians-in-maharashtra-6504484/"The issue began to simmer with a June 11 letter to the textbook committee by Abhijit Dandekar, Associate Professor of Epigraphy, Palaeography and Numismatics at the Deccan College Post-Graduate and Research Institute, Pune. He wrote that there was no script by the name of Dhammalipi in ancient India.
Referring to Richard Solomon’s Indian Epigraphy, 1998, Dandekar added that research of Indian and Chinese texts, carried out by several scholars for over a century, shows that the name of the script is Brahmi.
Manjiri Bhalerao, Associate Professor, Shri Balmukund Lohia Centre of Sanskrit and Indological Studies, Pune, who has also written to Balbharati, said, “Unless and until we have concrete evidence of the name Dhammalipi it should not be introduced at the textbook level. When these students go for higher studies, they will become a laughing stock because not just in Maharashtra, but everywhere else too, the script is known as Brahmi,” said Bhalerao.
Historians and scholars are also firmly of the view that the script pre-existed Ashoka and his dhamma edicts.
Speaking to The Indian Express, professor of history at Ashoka University and author of the seminal Ashoka in Ancient India (2015) Nayanjot Lahiri said renaming Brahmi as Dhammalipi would be giving students a “skewed education”.
She said, “The archaeological evidence of the earliest Brahmi comes from Tamil Nadu. This is much before it was used by Emperor Ashoka for the propagation of Dhamma. There are scientific dates that go back to the 5th century BC. Pali again is not something that is associated only with the propagation of Dhamma. I really feel it is meaningless to be doing these kind of things. The name Brahmi is anyway mentioned in ancient texts.”
Head of the Ancient Indian History, Culture and Archaeology department at St Xavier’s College, Mumbai, Anita Rane Kothare said at least 40 students learn Pali in her department. “Brahmi is a script and Pali is a language. Ashoka proposed Dhamma through his edicts. It was called Dhammalipi, maybe, by people who followed Buddhism later but the script was always called Brahmi. It has nothing to do with Buddhism. Brahmi as a script has been used for Ardhamagadhi and Pali both. The Ardhamagadhi language was used by Jains. Ashoka never called it Dhammalipi at all.”
நா. கணேசன்