பள்ளியில் சதுரங்கப் போட்டி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான மாணவர்களுக்கு இடையே சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6, 7 ,8, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வாரியாக ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. இதனில் காரைக்குடி சாணக்கியா அகாடமியின் நிறுவனர் சோமநாதன் அதுலன் மற்றும் பயிற்சியாளர்கள் சாந்தினி , திவ்யா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்றது தங்களுக்கு புது தன்னம்பிக்கை ஏற்படுத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆசிரியை முத்துலட்சுமி நிறைவாக நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான மாணவர்களுக்கு இடையே சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார்.இதனில் காரைக்குடி சாணக்கியா அகாடமியின் நிறுவனர் சோமநாதன் அதுலன் மற்றும் பயிற்சியாளர்கள் சாந்தினி , திவ்யா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.