வாழ்க உறவுகள் ...

வேலை, வேலை என்று ... இதுவரையிலும் வாழ்நாளின் பாதிநாட்களை பயணத்திலேயே கழித்திருக்கிறேன் ( இனியும் அப்படித்தான் போலும்:) ... நல்லதுதான் ..இருந்தும் அந்தப் பயணங்கள் பெற்றுத்தந்த பாதிப்புகள் / கற்றுத்தந்த பாடங்களை இதுவரையிலும் எங்கும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமலேயே இருந்திருக்கிறேன்.
இங்கே உங்களிடம் சிலவற்றை உள்ளது உள்ளபடியே பேசப்போகிறேன்..
முன் குறிப்பு :
சில நம்பமுடியாததாக இருக்கலாம், இன்னும் சில கிறுக்குத்தனமானதாக இருக்கலாம்... ’எதோ பிதற்றுகிறான்’ என்று மன்னித்து விடுங்கள் J
இதோ ஆரம்பிக்கப் போகிறேன் ...

இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ முன்குறிப்பு : திடீரென்று அறிமுகமில்லாத ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தால் .. அந்த நொடியில்..அதன்மூலம் அவருக்கோ , எனக்கோ ஏதாவது நடக்க வேண்டுமென்று நிர்ணயிக்கப் பட்டிருப்பதாக.. எங்கோ எனக்குள் ஒரு நம்பிக்கையுண்டு.. (கேயாஸ் தியரியாக்க் கூட இதைக் கொள்ளலாம் )
எனக்கு மேலானவர்களிடன் நான் எதிர்பார்த்து நிற்பதுபோல ..என்னிலும் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களுடன் ஏற்படும் எதிர்பாராத சந்திப்புகளுக்குப் பின்ஒரு மறைமுக/முக்கிய செய்தியுண்டு என நினைப்பேன்...
இருக்கட்டு..இனி ...பயணிப்போம் :
(காலைல 6க்கு கிளம்பி ..சென்னைவந்து , வேலையை முடித்து இரவு7.30க்கு வடபழனியில புறப்பட்டு , (சனிக்கிழமை) ட்ராப்பிக்ல சிக்கி,சின்னாபின்னமாகி விழுப்புரம் தாண்ட.. இரவு 11மணி ..
லேசாக கண் அசத்த..ஒரு சாலையோர உணவுவிடுதி கண்ணில் பட ஒதுங்கினேன்.
“. லைட்டா சாப்பிட்டு, ஒரு காப்பி குடிச்சா அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடி போயிறலாம் ..”
சாப்பிட்டு முடிந்ததும் பில் வந்தது.. டிப்ஸ் சேர்த்து வைக்கும் போது , மேஜையை சுத்தம் செய்ய வந்தார் ஒரு வயசான அம்மா..
(நான் சாப்பிட்டு கிளம்பும் நேரத்துக்குள் இந்த சுத்தம் செய்யும் பணியாளர்கள் வந்தால் கையில் உடனே முதலில் கிடைக்கும் 10, 20(அ) 50 ரூபாய் கொடுப்பேன் ... இவர்களுக்குப் பொதுவாக (எனக்குத் தெரிந்து) யாரும் கொடுப்பதில்லை.. அதனால் நாம் கொடுப்பது அவர்களுக்கு பெரிதாக உதவாது என்றாலும் ஒரு சின்ன மகிழ்ச்சியைத் தரலாம் என்பதால் இதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் )
”ஆத்தா..இந்தா வச்சுக்கோ’’
ஒரு 50 ரூ நோட்டைக் கொடுத்தேன் ...
என்னவோ நினைவில் வாங்கியவர் ..(காலையில் இருந்து வேலையாய் இருந்திருக்கும் போல ..தூக்கக் கலக்கம் கண்ணில் ) கவனித்து , பதறி ரூபாயை தனது முந்தானையில் துடைத்து என்னிடம் நீட்டினார் ..
“எங்கிட்டே எதுக்கு இது .. வேணாங்க சாமி .அவருக்கு நீங்களே கொடுத்திருங்க”
துடைத்துக் கொடுத்த வேகமும், அவரது ‘சாமி’யும் ‘ங்க’வும் என்னவோ செய்த்து என்னை..
” யாருக்கு கொடுக்க ?’”
“சப்ளயருக்கு”
“அவருக்கு கொடுத்துட்டேன்..இது உனக்குத்தான் ஆத்தா “
எனது “ஆத்தா’ அவருக்குள் ஏதோ கிளப்பி விட்டிருக்க வேண்டும் .. குப்பென கண்கலங்க ..கவனிக்கும்முன் துடைத்துக் கொண்டு இயல்பானார்..
‘இல்லய்யா... யாரும் எங்களுக்குத் தர்ரதுல்ல... இப்போ வாங்குனா ..அப்புறமா ஒன்ன மாதிரி புள்ளயப் பார்த்தா மனசு தேடும் ..வேணாம்“
சாமி அய்யாவாகி, உங்க என்பது உன்னை என்றானதும்.. அவர் ஒரு அம்மாவாய் என்னிடம் பேசியதை உணர்ந்தேன்..அவர் முகம் லேசாக மகிழ்வில் பூத்தாற்போல் இருந்தது எனக்கு .. ... ’ஆத்தா’ தந்த பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்..
”வர்ரேன்”
ஆறுதலான வார்த்தைக்காக ஏங்கிக் கிடந்த ஒருதாயை மகிழ்விக்க பணம் தேவையில்லை.. அவரது மனம் வருடும் வார்த்தைகளே போதும் .. அந்த அளவில் ஏதோ சாதித்த மகிழ்வு எனக்கும் ..
இரண்டே நிமிடங்கள் பார்த்தமுகம்..இருக்கும் வரை மறக்காது எனக்கு
வண்டியைக் கிளப்பினேன்....
(பின்குறிப்பு :இன்றும் அந்த 50 ரூபாய் எனது பர்ஸில் பத்திரமாய் என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது )
.gif?part=0.2)
.
இவ்ளோ வரவேற்பா !!!!!!..பயமால்ல இருக்கு :)
1.சுத்தமானது மேசை மட்டுமல்ல :
(பின்குறிப்பு :இன்றும் அந்த 50 ரூபாய் எனது பர்ஸில் பத்திரமாய் என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது )

--
Follow my blogs on http://tnelango.blogspot.com/
Follow my tweets on https://twitter.com/kiramaththan
My FB account http://www.facebook.com/T.N.Elango
--
இவ்ளோ வரவேற்பா !!!!!!..பயமால்ல இருக்கு :)
--
பஸ்ஸில் நாங்களும் உங்க கூடவே வரோம்..
.jpg?part=0.1)
செருப்பு :
தூத்துக்குடி – கோவை பயணத்தின் நடுவில் திண்டுக்கல் –பழனி இடையே........
வெய்யில் கொஞ்சம் தூக்கலாக இருக்க, எனக்கும் அயர்ச்சியாகத் தெரிய .. வண்டிக்கும் கொஞ்சம் ஓய்வு தரலாமென்று ஓரம் ஒதுக்கி இறங்கினேன்.
சாலையின் ஓரத்தில் அடர்த்தியாய் வேலிபோல முள்ச்செடி..பின்னணியில் கரிசல் காடு... வயல்வெளி.. இங்கொன்றும் அங்கொன்றுமாய் வேலையாட்கள் .. அமைதியான சூழல்

அப்போதுதான் தற்செயலாகத்தான் கண்ணில் பட்டது.. தூரத்தில் ஒரு பெண்..தலையில் ஒன்று , இடுப்பில் ஒன்றென இரண்டு குடங்கள் .. ஒரு கை இடுப்புக் குடத்தைப் பிடித்திருக்க ..இன்னோரு கையில் மண்வெட்டி...

ஆகா..அருமையான காட்சி..படம் பிடிக்கலாம் என்று ஓடிவந்து கயல்விழியை (காமிரா-நிக்கான் டி5100) எடுத்து ‘ஜூம்’ செய்தபோதுதான் கவனித்தேன்.. இரண்டு செருப்புகள் ..அவரது கையில் உள்ள மண்வெட்டியில் மாட்டி இருந்தது.. அந்த வெய்யிலில் வெறும் காலோடும் , தலையில் இடுப்பில் சுமையோடும் ,தன் செருப்பைத் தானே சுமந்துகொண்டும் ..மிக வித்தியாசமான காட்சியாக உணர்ந்தேன்.. அட காட்சிப் படுத்தினால் அருமையாக இருக்குமே .
.
அவசரமாக 2, 3 படங்கள் எடுத்தேன்..மிகத்தொலைவாய் இருந்ததால் படம் தெளிவாக வரவில்லை.. முக்கியமாக அந்த செருப்பு.. வண்டியை மூடிவிட்டு , முட்களை விலக்கிக் கொண்டு , வயல்வெளிக்குள் வேகமாக தட்டுத் தடுமாறி நடந்தேன்.. (ஒடுனா விழுந்திருப்பேன் J . உழுத தரையில் நடப்பது கொஞ்சம் ரிஸ்க்கானது .. நமக்கு.. விழுந்துதான் கெடப்போம் J)
(இடைக் குறிப்பு :சாலையோரக் கிராமங்களில் விளைந்த சோளம் , உழுந்து மற்றும் தானிய வகைகளை போரடிக்க சாலையில் கதிர்களை கொட்டி வைத்திருப்பார்கள். பின்னர் தனியான தானியங்களைச் சேகரித்து , சலித்து மூட்டை கட்டி எடுத்துப் போவார்கள்.
அந்த நேரத்தில் நான் எப்பொழுது அவர்களைக் கடக்க நேர்ந்தாலும் நின்று சில படங்கள் எடுப்பேன் .. அப்பொழுது அவர்கள் தரும் ஒத்துழைப்பு, முகத்தில் வரும் வெட்கம் , அவர்கள் கேட்கும் வெள்ளந்திக் கேள்விகள்....
ஆஹா.... அதுவரைக்கும் மனசுக்குள் இருந்த பாரம் , கவலை, இன்னபிற எல்லாம் ஒரு நொடியில் மறைந்துவிடும் ..
அதுக்குள்ள எங்கே இருந்தாவது ஒரு ட்ம்ப்ளர்ல காப்பி வந்திரும் ...

குடித்து விட்டு, அவர்களிடமே அந்த சோளம், கம்புல கொஞ்சம் கேட்டுவாங்கிக் கொண்டு (அதைக் கையால் அள்ளிக்கொடுக்கும் போது அவங்க மொகத்துல ஒரு வெளிச்சத்தைப் பாக்கணுமே. நாமளும் ஒருத்தருக்குக் கொடுக்கோம்யான்னு ஒரு பெருமிதம் தெரியும் ) .. அந்த நாளில் ஒரு 10 நிமிடத்தை நல்லபொழுதாக கழித்த மகிழ்வோடு கெளம்புவேன் ...)
இனி........
பக்கத்தில் வரவரத்தான் கவனித்தேன் ..வயதானபெண் இல்லை ..ஒரு25- 30க்குள்தான் இருக்கும் .. ஏற்கனவே கவனித்துவிட்டாள் போலும்.. நின்று என்னையும் காமிராவையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள்..
அஹா...ஆர்வக் கோளாறுல கொஞ்சம் வேகமாத்தான் நடந்துமோ ?
சுத்தும் முத்தும் ஆளில்லையேன்னு பயந்து நம்மை ஏதும் தப்பா ஏதும் நெனைச்சிருப்பாளோ ?
லேசா சத்தம் போட்டாலும் நம்ம டங்குவாரு அந்து போயிருமே !
மெல்லக் கேட்டேன்.”” “தாயி..ஒரு போட்டோ புடிச்சிக்கவா ?” “
அவள் அதைக் கவனித்த்தாய்த் தெரியவில்லை ..
” “என்ன ..ஒங்க பாட்டுக்கு உள்ள வந்துட்டீய! “
எனக்குப் புரியவில்லை ...
எதுக்குள்ள ? ..ஓ ..பர்மிசன் வாங்காம வந்துட்டேன்னு சொல்கிறாளோ?..யாரும் இல்லையே அங்கே?
திருதிருவென நான் விழிக்க
“ஒங்க பாட்டுக்கு செருப்புக்காலோட எங்க வந்து நிக்கீய ?” “என்றாள்..
ஓ..கடவுளே... அப்போதுதான் நான் செய்திருக்கும் தவறு எனக்கு உறைத்தது.
நடுமண்டையில் நாலு இன்சுக்கு ஆணி இறங்கினாற்போல இருந்த்து.
பதறி ‘சூ’க்களை உடனே கழட்டி கையில் எடுத்துக் கொண்ட நொடியில் பாதம் சூட்டில் தகிக்க ..
திரும்பி ஓடி வரப்பில் ஏறினேன். காலுறையையும் தாண்டியும் சூடு..சூடு..
படமெடுக்கும் ஆவலெல்லாம் ஆவியாகிப் போக வண்டியை நோக்கி எடுத்தேன் ஓட்டம்...
(பின்னால அந்த புள்ள சிரிக்கும் சத்தம் கேட்டது:(
கல்லும் முள்ளும் காலைப் பதம்பார்க்க ஒருவழியாக (விழாமல்) வண்டி வந்து சேர்ந்தேன்.
வண்டிக்குள் வந்து உக்கார்ந்தபின் தான் பார்த்தேன்.. பாதத்தில் ரெண்டு ’’ ‘ஆக்கர் ‘ வசம்மா இறங்கி இருந்தது ... காலில் பயங்கர வலி இருந்தாலும் , காதில் அந்த சிரிப்பொலி எதிரொலிக்க .. ஏதோ இதமாய் உணர்ந்தேன்...:))
மண்ணை மதிக்கும் இது போன்ற வெள்ளை உள்ளங்கள் உள்ளதாலேயே ..இன்னும் மழைகிடைத்துக் கொண்டிருக்கிறது நமக்கு
செருப்பைப் படம் பிடிக்கப்போனேன்..
செருப்பால் பாடம் படித்துவந்தேன் J)
மண்ணை மதிக்கும் இது போன்ற வெள்ளை உள்ளங்கள் உள்ளதாலேயே ..இன்னும் மழைகிடைத்துக் கொண்டிருக்கிறது நமக்கு
செருப்பைப் படம் பிடிக்கப்போனேன்..
செருப்பால் பாடம் படித்துவந்தேன் J)
ஆஹா,
என்ன ஒரு நிகழ்வு தோழர்.
2012/11/21 துரை.ந.உ <vce.pr...@gmail.com>இவ்ளோ வரவேற்பா !!!!!!..பயமால்ல இருக்கு :)1.சுத்தமானது மேசை மட்டுமல்ல :
(பின்குறிப்பு :இன்றும் அந்த 50 ரூபாய் எனது பர்ஸில் பத்திரமாய் என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது )
--அன்புடன் ஜோ
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
அந்த அம்மாவின் மனம் மிகப்பெரியது. வாழ்க வளமுடன் அந்த அன்னை !
--
அந்த 100கி மீசைக்குள்ளே எதையோ ஒளிச்சி வச்சிருந்திருக்காரு தலைவரு. !

திருநெல்வேலி..தீபாவளிக்கு முந்தைய நாள்.சாயங்காலம்.. மொகமெல்லாம் வேர்வையும் எண்ணையும் வடிய..(பின்னே காலைல இருந்து வெயிலுக்குள்ள பார்க்கிங்குக்கு எடம் கெடைக்காம... நெல்லையப்பரை 4 சுத்தி சுத்தி..கடைசியா..3 மணிக்கு ஒரு கேப்புல புகுந்து ... வண்டிய ஓடவிட்டுட்டு .. ஒரே எடத்துலல்ல ஒக்காந்திருக்கிறேன்...:(
இந்த எடத்துல ஒரு நாள் பழைய ப்ளாஸ்பேக் : (தூத்துக்குடி)
முந்தைய நாள் வரையிலும் எல்லா ஊரிலும் வேலை நடக்கும் இடங்களுக்கும் போனது , உரிமையாளர்கள் சந்திக்கிறது, 300 ,400 வேலையாட்களுக்கான சம்பளம் போனஸ் போடுறது, எல்லாரையும் மூட்டை கட்டி அவங்க அவங்க வூருக்கு அனுப்புறது (# கைல சாம்பளக் காசு மொத்தமா இருக்குமா ... அங்கேயே தண்ணீயப் போட்டு எதாவது சிக்கல் இழுத்திட்டு,சிம்புளா ’இங்கத்தான் வேலை பார்க்கோம் அய்யா’ன்னு பணிவோட நம்ப நம்பரக் கொடுத்திருவாய்ங்க .. போலீஸ் நம்பளக் கூப்பிடும் .. அப்புறம் தீவாளி அம்புட்டுத்தான் .. இதுமாதிரி ரெண்டு தீவாளி ஆகிப்போச்சுது ... அதான் முன்னேற்பாடா வேன், லாரி புடிச்சு எல்லாத்தையும் மொத்தமா கெளப்பி விட்டுட்டுத்தான் அந்தந்த ஊர்ல இருந்து நான் கெளம்புவேன் J ), கணக்கு வழக்கு முடிக்கிறது , (பழைய கடனை அடைக்கிறது , புதுசா கடன் வாங்குறது J)ன்னு ரொம்ப்பிசியா சிங்கம் மாதிரி இருந்துட்டு ,எல்லாம் முடிஞ்சு வீட்ல வந்து அக்கடான்னு படுக்கலாமுன்னு வந்தவன் ..இந்தப் படைகள் கிட்டே வசமா சிக்கீட்டேன் ..
”ஏபுள்ளைங்களா..காரு வந்தாச்சூன்னு சொல்லுங்க..ஒடுங்கடோய்..துணியெடுக்கக் கெளம்புங்க “
வூட்டம்மா வுட்ட அறிக்கையால, புறாக்கால்ல கடுதாசி கட்டி தகவல் சொல்றதத் தவிர்த்து எல்லா மொறைலயும் செய்தி எட்டுத்திக்கும் பறக்குது ...எனக்குக் கிறுகிறுங்குது .
“ஏய்.ஏய்..இரு..என்னா வெள்ளாட்டா இருக்கா ஒனக்கு..அதான் எல்லாருக்கும் எடுத்தாச்சுல்லா.. இப்போ யாருக்குச் சொல்லிவுடுத..என்னாத்த எடுக்கணும் ?”
“அதுவா..இப்போ உங்க ஒறவுக்காருங்க வருவாங்க.அவங்கக்கிட்ட பேசிக்கோங்க “ கொழப்பத்துல என் மண்டைக்குள் அடுத்து கிர்ரடிக்க .. ”அது யாரு....அட .. கேக்குரமுல்ல..இப்போ என்னத்தச் சொல்லுத நீயி ..”
’’அந்தா வந்தாச்சி .. கொஞ்சம் எட்டிப் பாருங்க “வூட்டம்மா சொல்லி முடிக்கும் முன் வாசல்ல நெழலாட... அவளோட நண்பிகள், பக்கத்துவீட்டு மாமிகள்ன்னு ஒரு 6 பேரும்... 4,5 நண்டு சுண்டும்..
வந்தவுடனே ஒருபெரிசு கொஞ்சம் பாசமா ஆனா ..ஆர்டராப் போடுது
“கண்ணு தொர.. நாளைக்கு ஒரேஒரு நாத்தான் இருக்கு ..
இங்கே ஒன்னும் சேலை டிசைன் சரியில்ல ..அப்டியே தின்னவேலிக்கு எங்களவச்சு
ஒரு நடை அடிச்சிரு .. அதான் கேக்க வந்தோம்..அப்பிடியே சாந்திக்கும் ஒரு பட்டும்
எடுத்தமாரி இருக்கும் ..என்ன இருந்தாலும் தின்னவேலி துணி மாதிரி இருக்குமா ?“
சாந்திக்கா ???..அதான் எடுத்தாச்சே...கொழம்பிபோய் “என்ன நடக்குது இங்கே!’ ன்னு நான் அவளை முறைக்க ..”நீங்களாச்சு, அவங்களாச்சு’’ன்னு ன்னு அவ சிரிச்சிக்கிட்டே உள்ளேபோக ..
“இப்ப்டி.கேட்ட ஒடனே..ஏன்னு கேக்காம கூப்பிட்டுப் போறதுக்கு எங்களுக்குன்னு வேற யார் இருக்கா..எங்கவூட்டு ஆளுங்களுக்கெல்லாம் சட்டப்பைய பிசுக்கிப் பிசுக்கிக் கணக்குப் பாக்குறதுக்குத்தான் நேரஞ்சரியா இருக்குது “ வந்து விழுந்த்து அடுத்த ராக்கெட்டு..நான் மொத்தமா அவுட்டு J ஏற்கனவே வூடல்யும் பேசி முடிச்சிட்டாங்க போல .. நம்ம கிட்ட இப்போ மெசேஜ்தான் சொல்றாங்க ..நான் வசமா சிக்கீட்டேன்னு தெரிஞ்சுபோச்சு ..
மாட்டேன்னு சொல்லீட்டா நாளைக்கு நாம தாண்டிப் போகும் போதெல்லாம் ..கெழவிங்க மாநாட்டுல காதுபாடவே கிண்டலடிச்சு கும்மீறுவாங்க...ம்ம்ம் .... ’சர்ர்ர்ரி...எவ்ளவோ செய்சிட்டோம் ..இதச் செய்ய மாட்டோமா ’L
“பாருங்க..காலைல எட்டுக்கு வீட்ல இருந்து கெளம்பீரணும்..போக ஒரு மணி நேரம்..பன்னெண்டுக்கு அங்கிருந்து கெளம்பீரணும்..அம்புட்டுத்தான்..இது ஒன்னுதான் கண்டிசன்...லேட்டாச்சுன்னா விட்டுட்டு வந்துகிட்டே இருப்பேன்... என்னப் பார்க்க இங்கே எவ்ளோபேரு வருவாங்கன்னு ஒங்களுக்கே தெரியும்.. பாத்துக்கோங்க.. சரியா... நீங்க ஆறுபேரா ? ..ம்ம்ம் .அப்போ ஜீப்ல போயிறுவோம்”
சொல்லி முடிக்கும் முன்னாடி ஒரு பெரிசு வந்து கன்னத்தக் கிள்ளி “எங்கய்யான்னா..அய்யாதான்’’ன்னு முத்தீட்டுப் போயிடுச்சு ..அங்கதான் லைட்டா ஏமாந்துட்டேன் ..அதான் இதோ இன்னிக்கு இங்கே அவங்க பேக்கெல்லாம் பாத்துக்கிட்டு பேக்கு மாதிரி நின்னுக் கிட்டு இருக்கேன்..
நேத்து 6 பேர்ன்னு சொல்லீட்டு, இன்னிக்கு வந்தது 11 பேரு+3 அரை டிக்கெட்டு ... எல்லாரையும் புடிச்சு அமுக்கி கதவைப் பூட்டி, 60 கிமீ. கொண்டு வர்ரதுக்குல்ல 10மணிக்கே எனக்குப் பாதிஉஉயிர் போயிருச்சு..காலைல கடைக்குள்ள போனக்ரூப்ல இருந்து ஒருசுடுகுஞ்சுக்கூட இன்னும் திரும்பி வரக் காணோம்..இருக்குறக் கூட்டத்தப் பார்த்தா...இன்னிக்கு யாரும் வர்றாப்புல ஒரு அறிகுறியும் தெரியல்ல :(..இங்க வண்டிக்குள்ள அவங்க விட்டுட்டுப்போன அந்த அரைட்டிக்கெட் 3ம் சண்டை போட்டு உருண்டுகிட்டுக் கெடக்க ..தாங்க முடியாம ..தீபாவளி நமக்கு இங்கேதான் போலன்னு நொந்துபோயி முகத்தைத் துடைத்துக் கொண்டே கீழே இறங்கும் போதுதான் அவனைப்பார்த்தேன்...
அந்த செக்யூரிட்டி...என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் ஓடி வந்தான்.. ”துரை தானே நீங்க” கேட்டுக் கொண்டே கட்டிப்பிடித்துக் கொண்டான். அந்த ‘சத்தம்’..அட.. இவன் சங்கர்.. கல்லூரி நண்பன் ..பார்த்து ஒரு 15 வருடங்கள் ஆகி இருக்கும் ..மிக மெலிந்துபோய்.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உருகிப் போயிருந்தான் ..
ஆள்மாற்றி ஆள் நலம் விசாரித்து, நெருங்கி, குடும்பங்கள் பற்றி விபரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது டக்கென்று வண்டியின் நெற்றியில் இருந்த கம்பெனியின் பெயரைக் கவனித்துக் கொண்டே கேட்டான்
”இதான் கம்பெனி பேரா...நல்லா படிச்சியேப்பா....ட்ரைவராத்தான் இருக்கியா ? ”..!”
அவன் சராசரியாகப் படிப்பான் 50-60% வரை மார்க் எடுப்பான் .. நான் டாப் ஸ்கோரர் லிஸ்ட்லத்தான் இருப்பேன். (80%க்கு மேலேதான் எப்பவுமே )..
‘’இல்லப்பா.. இது வந்து.....” நான் மறுத்து சொல்லத்தொடங்க.. அவன் நிறுத்தாமல் தொடர்ந்தான் ..
“எனக்கு ஈசியான வேலைப்பா...இங்கதான் ..செக்யூட்டி..12 அவர் டூட்டி... பெர்மணட் மாதிரித்தான் ..இந்த வருசம் பிஎப் பிடிக்கப் போறாங்களாம்”
”இல்லடா... நீ தப்பா ...” என்று நான் பேச ஆரம்பிக்க..என்னக் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தான் அவன்.
”உம்பாடுதான் தான்டா ..கஸ்ட்டம்..ராத்திரி பகல் கெடையாது... அவங்க சொல்ற எல்லா வேலையும் செய்யணும்.இந்தேரு” வண்டிக்குள்ள கையைக் காட்டி ”இதுகளையும் பாத்துக்கணும்..இல்ல” என்றான்.
ஓஹ்..அவன் என்னையும், எண்ணைவடியும் என் மூஞ்சியையும், கசங்கிப் போயிருக்கும் என் உடையையும், வண்டியையும் சேர்த்துவைத்து நான் ’ட்ரைவர்’ என்ற முடிவுக்கே வந்துவிட்டான் .
(இடைக் குறிப்பு : என் அப்பா எப்பவும் வெள்ளைச் சட்டையும் , காக்கிப் பாண்டும்தான் அணிவார்.அப்பாவின் மறைவுக்குப்பின் பெரும்பாலாலும் அதுதான் எனது ஆடையாகிப் போனது )
”இல்லடா.. நாந்தான் இந்தக் கம்பெனியின்....” சொல்ல வந்தவன் அவனது தொடர்ந்து வந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் டக்கென்று நிறுத்தினேன்..
”நல்லாப் படிச்சியேடா .. நாந்தான் ரொம்பவும் சங்கடப் படுறேன்னு நினச்ச்சுக்கிட்டு இருந்தேன்..இப்போப் பாரு.. என் நெலமை உன்னவிட நல்லா இருக்குன்னா .. எனக்கு நேரம் பரவாயில்லத்தான் போல”
மிகமன உளைசலில் இருக்கிறான் போலும்.. அவன் புரிந்து கொண்ட எனது நிலையை... அவனோடு ஒப்பிட்டுப் பார்த்து,,அதனால் அவனுக்கு ஏதோ ஒரு ஆறுதல்,கொஞ்சம் சந்தோசமுன்னா..அதையேன் கெடுப்பானேன்.. பின்னாடி மேட்டர் தெரிஞ்சா சமாளிச்சுக்கலாம்.. ........அவன் வழியிலேயே பேசத் தொடங்கினேன்..
“ஆமாம் மக்கா .. ட்ரைவர் வேலை ரொம்ப கஸ்ட்டமாத்தான் இருக்கு..வேற வேலை கெடைச்சா ஓடிப் போயிருவேன் “
“ஆமாம் மக்கா .. ட்ரைவர் வேலை ரொம்ப கஸ்ட்டமாத்தான் இருக்கு..வேற வேலை கெடைச்சா ஓடிப் போயிருவேன் “
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”உறுப்பினர்கள் :நான் , சாந்தி, புள்ளைங்க ((கார்த்திக், உமா) , பாஸ்(BOSS – நம்ம வாகனம்/க்ராண்டே :)
காலைலயே கெளம்பியாச்சு ..மதுரையில் ஒரு சின்ன(குழும)சந்திப்பு முடிந்து...பிள்ளையார்பட்டி போய்ட்டு அறந்தாங்கியில் இரவு தங்கல்... அங்கே அமீரக அண்ணல் .. அள்ளிக்கொடுக்கும் வள்ளல்.. மாமனிதர் XXXXXஅவர்களின் திருமணம் . (விளம்பரங்களை அவர் விரும்புவதே இல்லை ..அதனால் இங்கே பெயர் வேண்டாம்..) .அவரது விருந்தோம்பலில் சிக்கி மூச்சுத் திணறி ,ஒருவழியாக நாங்கள் மட்டும் தப்பித்து , விடைபெற முடியாமல் முழித்துக் கொண்டு நின்ற மற்ற இணைய நண்பர்களிடமும் விடைபெற்று (அவர்களின் நிலையை இப்போது நினைத்தாலும்...அவர்கள் முகத்தில்தான் என்ன ஒரு சின்ன மகிழ்ச்சி .. நான் போகிறேன் என்றா ? அவர்கள் இன்னும் இருக்கப்போகிறார்கள் என்றா ??. . ஆகா..இது போல் ஒருசூழலெல்லாம் எல்லார்க்கும் , எப்போதும் அமையாது .. வாழ்க அ.அண்ணல் ) ..புதுக்கோட்டையை நோக்கிக் கிளம்பும் போது மதியம் மணி 2 ஆகி இருந்தது ..
ஒரு சாலைத் திருப்பத்தில் வேகமாக எதிர்வந்த வாகன ஓட்டியோடு சின்ன வாக்குவாதமாக...
(வண்டிக்குள்ள இவங்க மட்டும் இல்லேன்னா ..ரெண்டுல ஒன்னு பாத்திருப்பேன் )சிறிது தாமதமாக.. ஒரு இறுக்கத்தோடுத் தொடர்ந்தது பயணம்..
ஒருவளைவில் சாலையின் ஓரத்தில் ஒரு மாருதி 800 . ஒருவர் வண்டியை நிறுத்தச் சொல்லி சைகைகாட்ட,இரண்டுபேர் சாலைசரிவில் ஒதுங்கி நிற்க..ஏதோசிக்கல் போலும். . நான் வண்டியை மெதுவாக்கி நிற்க முயல ,
சாந்திக்குப் பதட்டம் . “வேண்டாம்! வேண்டாம்! போங்க!! நிக்காதீங்க!!!”..
புதிய இடம் . அந்த ரோட்லயே அப்போத்தான் முதன்முதலா வாரோம் . அதனால கொஞ்சம் கலவரமாயிட்டாங்க போல !. அதுவும் ’வழியில் இடையில் எங்கேயும் எதுக்கும் நிற்காதீங்க.. நெலவரம் ஒன்னும் சரியில்லன்னு’ அவங்க அப்பா (எஸ்.ஐ /ரிட்டையர்டு) வேறு சொல்லி கெளப்பி விட்டிருக்கிறார்...எல்லாம் ஒரு பாதுகாப்பாம்...
நானும் மெதுவாகி ..ஆனால் நிறுத்தாமல் அவங்களைக் கடந்துபோகும்போது அந்த வண்டிக்குள் ஒரு பெண்ணும் , கைக்குழந்தையும் இருப்பதைக் கவனித்தேன். உடனே ஒதுங்கினேன் .கை காட்டியவர் ஓடிவந்தார்.
”சார் பெட்ரோல் தீந்திடுச்சு, அதான்! குழந்தைக்கு கொஞ்சம் முடியல..பக்கத்துல எதாவது பங்க்ல இறக்கிவிட்டுருங்க என்னை...”
”அப்டியா..அப்போ கொஞ்சம் இருங்க “
என்னோட வண்டியில் எப்போதும் 5 லி டீசல் (எனக்காகவும்); 2லி பெட்ரோல் (பைக்ல குழந்தை குட்டிகள் / பெண்களோட வந்து பெட்ரோல் காலியாகி தள்ளிக்கிட்டுப் போற இதுபோன்ற அறிவுக் கொழுந்துகளுக்காகவும்) தனியா கைவசம் இருக்கும் .
அந்த பெட்ரோலை எடுத்துக் கொடுத்தேன் “இந்தாங்க”
மொதல்ல சந்தோசமா வாங்கியவர்.. கண்சுருக்கி சந்தேகமா என்னை பார்த்தார்
”டீசல்வண்டிதானெ உங்களோடது ! எதுக்குப் பெட்ரோலெல்லாம் வச்சிருக்கீங்க ???”
பகீரென்றது எனக்கு. பெட்ரோல் குண்டு ..அது இதுன்னு ’தீவிரவாதி ரேஞ்சுக்கு நம்மள நினைச்சுட்டாரோ?’.
ஊத்தீட்டு திரும்பிவந்தார்..””””ரொம்ப தேங்க்ஸ் . இந்தாங்க..வாங்கிக்கோங்க “ கொஞ்சம் பணத்தை நீட்டினார் . ரூ.120 இருந்தது ..நான் “100 போதும்” “ என்று 20ஐத் திருப்பிக் கொடுத்தேன் . ( அப்போதைய விலை 56.சில்லறை இருக்கும்.. ஆனால் அந்தப் பெட்ரோல் லிட்டர் 50ஆக இருக்கும்போது வாங்கியது ) .’‘அட ஏன்சார்” ‘ ன்னு ஆச்சரியமாக் கேப்பார். நாம நம்ம நேர்மையைச் சொல்வோம் என்று நினைத்த வேளையில் நான் நினைச்ச மாதிரியே கேட்டார்..
”ஏன்சார்?”
” அதா..அது வந்து நான் வாங்கும் போது வி...”என நானும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் நிற்காமல் தொடர்ந்தார்...”அப்போ பாட்டில்ல 2 லிட்டர் இல்லையா? ..சே. நான் தான் கவனிக்கலயோ? ..எவ்ளோ கம்மியா இருந்துச்சோ தெரியலயே ???”
சந்தேகமா கேட்டுக்கொண்டே பதில் எதிர்பார்க்காமல் எனக்கு முன்னால் வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டார் . மறையும் வரைக்கும் அந்த வண்டியைப் பார்த்துக் கிட்டே நின்றேன் .
’தேவையா...தேவையா இது ஒனக்கு..பாவப்பட்டு நின்னதுக்கு இதுவும் வேணும் , இதுக்கு மேலேயும் வேணும்’ . எனக்கு நானே (மனசுக்குள்) பேசிக்கிக்கிட்டு இருக்கிறப்பவே என்மனையாள் என்னைச் சுரண்டிக் கூப்பிட்டு மெல்ல சிரித்துச் சொன்னார்
’’உங்களுக்கு இதுவும் வேணும் , இதுக்கு மேலேயும் வேணும்’’

.
4. அவசர உதவிக்கு ...:
--
26) எதையும் எதிர்பாராது காலத்தால் செய்யும் உதவிகளை வாயில்லா ஜீவனும் மனதிற்குள் கண்ணீர்விட்டுத் தொழும். - ரிஷிமொழி 20121113-25.0
என்றாவது ஒரு நாள் அந்த அன்பர் அமைதியாக இருக்கும்பொழுது அவரது ஆழ்மனம் அப்பொழுது இந்த நிகழ்வினை அசைபோடும். அப்பொழுது அவரது மனசாட்சி அவரை உணர்த்தி உணர வைக்கும்பொழுது மேற்கண்ட ரிஷிமொழி செயலுக்கு வரும்.
இன்றைய உலகில் நாம் உதவி செய்தாலும் இயற்கையாகவே சந்தேகப்படும் நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கின்றது என்பது நம் கலாச்சாரம் நசிந்து கொண்டுவருதலின் அடையாளமே.
அது அவரின் தவறன்று. அவர் வாழும் சூழலின் தாக்கம். அது போன்ற எண்ணங்கள் அவர் மனதினில் உட்சென்றிருக்கின்றது. உங்களது மனதினில் குடிபுகுந்த எண்ணங்கள் வேறு .
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல்
- நல்லதை மட்டுமே செய்யுங்கள்
- நல்லதை மட்டுமே நினையுங்கள்
- நல்லதை மட்டுமே பேசுங்கள்
உங்கள் கருமையம் தூய்மையடைந்து உங்களின் அடுத்த சந்ததியினர், வாழ்க்கை வளங்களுடன் வாழ வான்காந்தத்தில் நல்ல பதிவுகளை பதிப்பீர்கள்.
அவருக்கு உதவியதில் மகிழ்ச்சியாக உணருங்கள்.
அவர் உங்களைத் தூற்றினாலும் நீங்கள் அவரைப் போற்றுங்கள்; வாழ்த்துங்கள்.
அவருள்ளிருக்கும் இறைநிலைக்கு வணக்கம் செலுத்துங்கள்.
காரினுள்ளிருக்கும் அந்தக் குழந்தையின் உள்ளிருக்கும் அந்த ஆன்மா, மனதினுள் உங்களைக் கையெடுத்துத் தொழும். அந்த ஆன்மாவைத் தரிசியுங்கள் ! ஒரு பச்சிளங்குழந்தைக்கு ... அதனுள் உறைந்திருக்கும் இறைநிலைக்கு உதவி செய்ததை எண்ணி மகிழுங்கள் !
அதனைப் புரிந்து கொள்ளும் சக்தியையும் நுட்பத்தினையும் வளர்த்துக்கொண்டால் நீங்கள் மிகவும் உற்சாகமாய் மகிழ்வீர்கள் !
--

அன்று....கல்லூரி வகுப்பில் ....
ப்ளூயிட் மெக்கானிக்ஸ் வகுப்பு ;
சார் சில்லிக் கொண்டிருந்தார் ”த மோஸ்ட் கண்டாமினேட்ட்ட் வாட்டர்.. உலகிலேயே மிகவும் அசுத்தமான நீர் என்றால் அது ஆற்று நீர்தான் .. இங்கே யாரெல்லாம் ஆற்றில் குளித்திருக்கின்றீர்கள்”
சிலர் கையை உயர்த்தினோம்..
”அங்கே நடக்கும் அசிங்கங்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்” என்றார் ..
’என்ன இப்பிடி குண்டு போடுறாரு’ நாங்கள் ஒன்றும் சொல்லாமல் விழிக்க ..அவரே தொடர்ந்தார் ..”இனி குளிக்கும் போது நான் சொவதெல்லாம் உங்களைச் நடக்கிறதா என்று கவனியுங்கள் ..உங்கள் பக்கத்திலோ , கொஞ்சம் தூரத்திலோ மாடுகள் மூழ்கிக் கிடக்கும் , எங்காவது ஒருவர் கால்கழுவிக் கொண்டிருப்பார், எங்கோ ஓரத்தில் உங்கள் ஊரின் சாக்கடை வந்து கலந்து கொண்டிருக்கும் , மேலே உள்ள தண்ணீரை விலக்கிவிட்டு தண்ணீர் அள்ளி ஒருவர் வாய் கொப்பளித்து கொண்டிருப்பார் , இந்த தண்ணீரில்தான் நன்றாக சொப்புப் போட்டுவிட்டு நீங்களும் மூழ்கி எழுவீர்கள்”
”அட..ஆமால்ல ”
அன்றே மிகப் பிரமாண்டமாய் ஆறுக்கும் எனக்கும் இடையில் ஒரு சுவர் எழுந்துவிட்ட்து.. இனி ஆத்துலயே குளிக்கக் கூடாது இன்றுவரையிலும் இந்த உறுதிமொழியில் ஸ்ட்ராங்காத்தான் இருக்கேன். .ஆனால் எல்லாம் ஆற்றங்கரையைத் தொடும் வரைக்கும்தான்.. காலில் தண்ணீர் பட்டவுடன் அதுவரையிலும் இருந்த உறுதி எல்லாம் ஆற்றிலேயே கரைந்து ஓடிப்போகும்
“இந்தத் ஒரு தடவ மட்டும் ஓகே..வீடல போயி தலைக்கு தண்ணி ஊத்திக்கலாம்”
இன்று ........
”.பெரியாத்தா கீழே விழுந்துட்டாளாம்.... புள்ளைங்களப் பாக்கணுமாம்.. எல்லாருக்கும் சொல்லி விட்டுட்டாங்களாம் எல்லாரையும் கெளப்பு ..ஒரு எட்டு ,..போய்ட்டு வந்துடலாம்”
சாந்தி மெல்ல சிரித்துக்கொண்டே உள்ளே போனாள் “ஹே..வாங்க ..வாங்க..இன்னிக்கு தின்னவேலி டூரு..”
பெரியாத்தா...அப்பாவோட அம்மாவுக்கு அம்மா...இப்போ இருக்குறதுலயே மூத்தவா அவதான் ..வயசு எப்படியும் 100 பக்கத்துல இருக்கும் ..கண்ணு மட்டும் கொறைஞ்சு போச்சு..ஆனா பல்லு ஒன்னொன்னும் கல்லு..காதுன்னா காது ..பாம்புக் காது ... சும்மா இருக்கமாட்டா..எதாவது செய்யறேன்ன்னு கெளம்பி எங்கியாவது இடிச்சுக்கிட்டு..விழுந்துட்டு ..ஊரையே கூட்டீருவா ...
எங்கிட்டேயும் ஒரு சத்தியம் வாங்கி வச்சிருக்கா “ எனக்கு என்னமாவது ஆயி..நா ஏஞ்சாமி,மவராசன் கிட்டே போயிச் சேர்ரதுக்குள்ள.. நீ எங்கிருந்தாலும் சரிதான்... புள்லக் குட்டியக் கூட்டிவந்து காட்டீரு கடைசீயா ஒருதடவ தொட்டாச்சும் பாத்துக்கிடுவமய்யா”
நானும் 10 வருசமா கூட்டி வந்து காட்டிக்கிட்டுத்தான் இருக்கேன்...
ஊருமுக்குல வண்டி திரும்புபோதே மனசு தடதடன்னு அடிக்க ஆரம்பிக்க.. வீட்டுவாசல்ல வண்டிய நிப்பாட்டி எறங்கும் போது உள்ளிருந்து கேட்டது அந்தக் குரல் “எய்யா ..வந்துட்டியா “
”பெரியாத்தா சத்தம் மாதியே இருக்கு” – சந்தேகத்தோடு நான்
”மாதிரி என்னா மாதிரி.. அவங்கதான்” – சிரித்துக்கொண்டே சாந்தி...
ஓடிப்போய் பாத்தா.. வெத்தல உரல்ல போயலையும் பாக்கும் போட்டு டொக்கு டொக்குன்னு இடிச்சிக்கிட்டு கல்லு மாதிரி ஒக்காந்திருக்கா...””” “லேசா தல கிறுகிறுத்திருச்சய்யா அம்புட்டுத்தான்”” “
’இருக்குறதப் பார்த்தா நம்பள எல்லாம் அனுப்பி வச்சிட்டுத்தான் இவா கெளம்புவாப் போல’ ..காலைல சாந்தி சிரிச்சதுக்கு அர்த்தம் இப்போத்தான் தெரிஞ்சது எனக்கு ..
“சரியப்பா..இதெல்லாம் நமக்கு சகஜமப்பா” எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டு ..அவளச் சுத்தி ஒக்காந்து விசாரிச்சிட்டு.. கெளம்ப எந்திரிக்கும் போது ஆத்தா சொன்னா “ ஆத்துல புள்ளைங்கள ஒரு முங்கு போட்டுட்டு, கூட்டிப் போ ராசா “
“அதெல்லாம் வேணாம் . நான் குளிக்க மாட்டேன்.. அவங்களும் காலைலயே குளிச்சாச்சு..அங்க நெறையா வேலை கெடக்கு”ன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“ஐ... ஆத்துலயா..ஜாலி..” எல்லாரும் குதியாட்டம் போட ... (இப்படிப்பட்ட எடத்துல எல்லாம் நம்ம கிட்டே பெர்மிசன் கேப்பாங்கன்னு எதிர்பார்க்குறதே பெரிய தப்பூன்னு எனக்குத் தெரியும் L ) ..வேறுவழியில்லாமல் நானும் கிளம்பினேன்..
”கால் சுடும் ..டாக்டர்ல போங்கய்யா ..”
ட்ராக்டர் .. இப்போ எல்லாம் தார் ரோடும் ..முக்கியமா அங்கங்கே ஸ்பீடு ப்ரேக்கு வந்தப்புறமா மாட்டுவண்டிக்கு மாற்று இதுதான் ..( மாட்டு வண்டி ஸ்பீடு ப்ரேக் ஏறி எறங்கும் போது ..கழுத்துல மாட்டி இருக்கும் அந்தத் தடி முன்னயும் பின்னயும் போயி கொம்புல முட்டி கழுத்தில இறுக்கும்..பாருங்க .. நான் சின்னவனா இருக்கும்போது ..இதைப்பார்த்து அழுததுல இருந்து .. நான் வரும்போதெல்லாம் எனக்கு மட்டும் ட்ராக்டர்தான்)
ஒத்த சீட்டு ட்ராக்டர்ல..க்ளச்சுல ஒன்னு, ஆக்சிலேட்டருல ஒன்னு, ப்ரண்டு ஆக்சில்ல ஒன்னு, பின்னாடி ஊக்கு கொக்கியில ரெண்டூன்னு ஒம்போது பேரு..
அஞ்சே நிமிசம்..காற்றின் ஈரப்பத்த்தில் மாற்றம் தெரிய , ஆத்துத் தண்ணியின் வாசம் ஆளைத் தூக்க , எனது உறுதி மீண்டும் ஒருமுறை கலைய ஆரம்பித்தது ..
தொடரும்.............
.
6. ஆறு : (5ன் தொடர்ச்சி :)
(#டிஸ்கி: மிக முக்கியமான விவகாரம் .. சொல்லியே ஆகணும் .. இடையில் சில கிராமத்து வட்டாரச் சொற்கள் வரும் .. தவறாக நினைக்க வேண்டாம் ... மன்னிக்கவும் )
அஞ்சே நிமிசம்..காற்றின் ஈரப்பத்த்தில் மாற்றம் தெரிய , ஆத்துத் தண்ணியின் வாசம் ஆளைத் தூக்க , எனது உறுதி மீண்டும் ஒருமுறை கலைய ஆரம்பித்தது ..

ஆத்துல நான் வழக்கமா குளிக்குற அந்தஎடத்துல .. நட்ட நடுவுல ஒரு தீவு போல.. மணல்த்தேரி மாதிரி இருக்கும் அதுல ஒரு அரையடி உயரத்துக்குத்தான் தண்ணி போகும் ..ரெண்டு கரைப்பக்கமாத்தான் ஆழமா இருக்கும்.. புள்ளைங்கள அங்கே கூட்டிப்போயிட்டா அப்புறமா நாம கவலை இல்லாம குளிக்கலாம். அவங்க வெள்ளாடவும் சரியான எடம் அதுதான் .
’ அட..போனதடவப் பாத்த்துக்கும் இப்போ பாக்குறதுக்குமே நெறையா மாறுதலாத் தெரியுதே ‘
ஆத்துக்குள்ளே இருந்த மணல்த் திட்டு எதையும் காணோம்.. ஒன்னு ரெண்டு மாட்டுவண்டி நடு ஆத்துக்குள்ள நிக்க, வண்டிக்கு ரெண்டுபேரு மண் அள்ளும் சட்டியோட ஆழத்துக்கு முங்கு நீச்சடிச்சி ஒவ்வொரு சட்டியா சொரண்டி சொரண்டி மண்ணையெல்லாம் அள்ளிச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்... அன்னிக்கு தொட்டுப் பிடிச்சு , ஓடி வெள்ளாடி ,பல்ட்டியடிச்சு உருண்டு கெடந்த மணலிருந்த எடமெல்லாம் இப்போ தொடைச்சு வச்சாப்ல இருக்கு.. அந்த எடமெல்லா கல்லும் பாறையுமா கெடக்கு L(
பழகிய எனக்கே தண்ணிக்குள்ள பள்ளம் மேடு தெரியல்ல ..எல்லாரும் ஒருத்தர் கைய ஒருத்தர் புடிச்சிக்கிட்டு பாறை எது படுகுழி எதுன்னு தெரியாமத் தட்டுத்தடுமாறிப் போக .. குளிச்சிக்கிட்டு இருந்த அந்தூருப் பயபுள்ள ஒன்னு கத்துது“தூத்துக்குடி ட்ரெயினு ..இங்கே ஆத்துக்குள்ள போகுதுடியோய்ய்ய்..எல்லாரும் ஒதுங்கிகோங்கப்ப்போய்ய்ய்ய்ய்ய்” இப்போ இதுக்கு எதாச்சும் பதில் சொன்னா..ஒன்னு சேர்ந்து கிண்டிக் கெழங்கெடுத்திருவாங்க .. பேயாமப் போகுறதுதான் இப்போதைக்குப் பெட்டரு ..மெதுவா சிரிச்சிக்கிட்டே அந்த எடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம் ..
”அப்பாடி..வந்தாச்சு.. பசங்க எல்லாம் அந்த மேட்டுல வெளையாடுங்க .. அம்மா துணி அலசப்போறாங்க .. நான் அந்தா அந்தப் பாறைக்குப் பக்கத்துல குளிக்கப் போறேன்”
”டாட்..போலீஸ் தீஃப் கேம் ஆட்ட்டுமா ?”
“ம்ம் சரி ...எதுவா இருந்தாலும் சரி .. அந்தப்பக்கம் தூரமா போக்க் கூடாது ..ஓகேவா”

(படம் : நானல்ல .. நன்றி: நண்பர் சந்திர சேகரன் அவர்களுக்கு)
ரைட்டு ..எல்லாரையும் களட்டி விட்டாச்சு ..இனிமே நாம நம்ம எடத்துக்குப் போவோம்.. இனிமே எல்லாத்தையும் களட்டி வச்சிட்டு, உச்சிமண்டைல எண்னைய தேச்சிக்கிட்டு ... மல்லாக்கப் படுத்துக்கிட்டு..உடம்பு பாதியும் , தலைல காதுவரைக்கும் முங்குறப்புல மொகத்தைமட்டும் வெளியே வச்சுக்கிட்டு, நீட்டி கண்ணை மூடி (வெயிலுக்குக் கண்ணு கூசும்) பள்ளமா இருக்குற ஒரு பாறைல படுத்தா... தண்ணியோட ஓட்டத்துக்குத் தகுந்தாப்ல உடம்பு லேசா மேலே தூக்கித் தூக்கி அமிழும் ..அப்போ தண்ணி நம்ம மேல ரெண்டு பக்கமும் சலப்பு சலப்புன்னு மோதி மசாஜ் பண்றப்புல மோதும். மொகத்துலயும் மேல்பக்கம் உடம்புலயும் வெயில் சுர்ருன்னு சுட.. கீழே மத்த பக்கமெல்லாம் குளிர ... ஒரு அரைமணி நேரம் அப்டியே கெடக்கணும்.. அப்றமாத்தான் சோப்புப் போட எந்திரிக்கணும். கை,கால் விரல்ல தோலெல்லாம் சுருக்கம்விழ ,உள்ளே வெளியே உடல்சூடு மாறி இருக்கும் போது..........
’அட..அட..அட... தண்ணிக்குள்ள ஒன்னுக்கு போகும் சொகத்துக்கு ஈடு எந்த சொர்க்கத்துலயும் இருக்காதுய்யா ..இதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்யா ‘
“டாடீ” -தலைக்குப்பின்னால் தூரத்திலிருந்து கார்த்திக்கின் சத்தம்
”என்னா?” –அசையாமல் படுத்துக் கொண்டே கேட்டேன் .எந்திரிச்சுட்டா இப்போ செட்டாகி இருக்குறாப்ல இடம் இன்னோரு முறை அமையாது .. ”எந்தப்பக்கம் போக ?” ஒளிய எடம்தேடுகிறான் போல ... நான் அப்படியே ”அங்கே” என்று கை காட்டிவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டேன்...அங்கே தான் ஒளியிராப்ல பாறையுண்டு...ஒளிந்துகொண்டு விட்டான் போல ..பதிலில்லை...
திடீரென ஒரு பையனோட சத்தம் “ ஏஏஏ..செறுக்கியுள்ள ..அந்தக் கார்த்தி எங்கப் போகுது.. பாரு.. புடி..புடி” – நான் பதறி எழ...”எலேய்..பெரியவனே.. ஓடு .. நிப்பாட்டு..அங்கிட்டு ரொம்பக் கசம் “ ஒரு தாத்தாவும் கத்தினார் ..
திரும்பிப்பார்க்க எதிர்க்கரையைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தான் அவன்.. உயிர் அத்துப்போச்சு எனக்குள்.எங்கே போகிறான் ? அந்தப்பக்கம் கரையெல்லாம் மணல் அள்ளிய குழிகள் அதிகமா இருக்குமே!
எல்லாரும் கத்திக் கொண்டு ஓட ... அதற்குள் அவன் ஒரு முறை தண்ணீருக்குள் மூழ்கிக் காணாமல் போய்.. பத்தடி தாண்டி வெளியே வந்தான் ..”அய்ய்ய்யோ.” மீண்டும் காணமல் போய்.. சிறிது தூரம் தாண்டி எதையோப் பிடித்துக் கொண்டு கரையில் ஏறி முகத்தைத் துடைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான் .. நாங்க எல்லாரும் ஓடி வருவதைப் பார்த்ததும் அவனுக்குக் குழப்பம் ... என்ன என்பது போல பார்த்துக் கொண்டே நின்றான்..
எல்லாரும் ஓடி வந்து அவன் கையைப் பிடிக்க , சாந்தி அவனைக் கட்டிப் பிடிச்சு அழ ஆரம்பிக்க .. அப்புறமா எனக்கு விழுந்தது பாருங்க திட்டு..ஒங்க வீட்டுத்திட்டு.. எங்கவீட்டுத் திட்டு இல்ல..ஒலகத் திட்டுL(
“ஏழுவயசு புள்ளைய தண்ணிக்குள்ல தனியா விட்டுட்டு என்னாத்தப் பண்ணிக்கிட்டு இருந்த நீயி”
” நீஞ்சத் தெரியாம இங்கிட்டு வந்த யாரும் பொழச்சதில்ல தெரியுமா “
“கொள்ளைல போறவன் ..மொத்தமா எல்லாரு சோலியயும் முடிக்கப் பாத்தானே” “
எனக்குக் கோபம் தலைக்கேற
“ஏய்..உன்னை அங்கேயே தானே விளையாடச் சென்னேன். ஏன் இங்கே வந்தே”
“ நீதானே இந்தப் பக்கம் கைகாட்டினே டாடி”
நானா .. ஆகா..கூட்டத்துக்கு நடுவுல வச்சுக் கோர்த்து விடுகிறானே .....
“ நான் எப்பலச் சொன்னேன் உங்கிட்ட ”
“ ஒன் டய்லெட் எங்கே போகணுமுன்னு கேட்டேனே,, நீதானே இந்த சைடுன்னு கை காட்டினே”
ஓ..அவன் எனக்குப் பின்னால நின்னுக்கிட்டு வெரலைக் காட்டி சிகனலா எங்கே போகணும் என்றுக் கேட்டிருக்கிறான் போல.. .. நான்தான் ஓளிய எடம் தேடுறான்னு தப்பாக் கைகாட்டி இருக்கிறேன் .
சூழலின் இருக்கம் சட்டெனக் குறைந்து எல்லாரும் சிரிக்க ஆரம்பிக்க .. நானும் சிரித்துக் கொண்டே கேட்டேன் ”ஒன்னுக்கா...இதுக்கா இவ்ளோ தூரம் தாண்டி வந்தே”
கண் சுருக்கி “ஆமா..” என்றான்.
”அங்கேயே போக வேண்டியதுதானே “
”எங்கே ?” என்றான் கேள்வியாய்
”தண்ணியில தான் ..வேறெங்கே போவாங்க ”
”அங்கேயா?” அதிர்ந்துபோய்க் கேட்டான் ..
அப்போதுதான் உறைத்தது எனக்கு.பகீரென அடிவயிற்றில் பற்றியது தீப்பற்றியது போலிருந்தது ...எல்லாம் தெரியுமென்ற திமிர் கண்ணை மறைக்க எதுவும் தெரியாமல் இருந்திருக்கிறேனே.. எதுவுமே தெரியாதவர்கள் என நான் நினைத்தவர்கள்தாம் எல்லாம்தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள்...
எனகையைப் பற்றி இழுத்து அதிர்ச்சி மாறாமல் மீண்டும் கேட்டான்
“டாடி..ஆத்துக்குள்ளேயேவா ?”
சாணியை மிதித்த செருப்பை எடுத்து என்முகத்தில் சப்பென்று அடித்தாற்போல் வந்து மோதியது அந்தக் கேள்வி ..
.
.
.
.
.
.
நினைவுக்கு வரும்போதெல்லாம் இன்றும் கூட .
மாலை மணி 6 .. வேலை முடிந்து கிளம்பும் வேளை, சேகர் மறித்தான்.. ”சார் நாளைக்கு மதியம் 2க்கு மீட்டிங் கன்பர்ம் ஆயிடுச்சு …சென்னையில் இருந்தும் கிளம்பி விட்டார்களாம்”
சரி… அப்போ நெறையா ஏற்பாடெல்லாம் செய்யணும் … “எனக்கு காலைல 10 மணிக்கு ஒரு ரிமைண்டர் போட்டிரு ”
வீட்டுக்குள் வரும்போது 7 …வாசலிலேயே காத்திருந்தார்கள் பாரதியும் காந்தியும் ( உமாபாரதி –மகள் , கார்த்திக் காந்தி –மகன் J)
“டாடி.. நாளைக்கு சண்டே…”
“அதான் தெரியுமே”
“ஆல் ட்யூசனும் லீவ்”
“ஓ.. லீவா”
“ ஆமாம் டாட்..புல் டே ..ஹாலி டே…..ஐ….ஜாலி”
”ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா..கெளம்புங்க மக்கா,, நாளைக்கு எல்லாம் ஊரு தோட்டத்துலத்தான் ” –இது புள்ளைங்களோடு குதித்த படியே நான்…
கிராமம் நோக்கிய ஓர் ஒருநாள் பயணத்திறக்கான தொடக்கம் இது. சிட்டி சண்டே ஒன்று ... கிராமத்து நாயித்துக்கெழமையாக மாறப்போகுது J
புள்ளைங்க அவங்க ப்ரண்ட்ஸ்க்கு சொல்ல ஓட (எப்பிடியும் 2,3 வந்து ஒட்டிக்கிடும்) , வூட்டம்மா பேக்கிங் செக்சனுக்குள் நுழைய ( ஒரு நாள் தான் அங்கே இருப்போம்,ஆனாலும் எல்லாம் எடுத்து வைக்க எப்படியும் காலைல ஆயிடும் ..[ ஒரு 10 நாளுக்கான சாமான்செட்டு ,ட்ரெஸ்ஸூன்னு ஒரு லாரிக்கு லக்கேஜ் சேத்திருவாங்க]
உடனே செல்லெடுத்தேன்…
”சேகர் .. நாளைக்கு எனக்கு காய்ச்சலப்பா..அதனால என்னால முடியாது .. மண்டேதான்னு எல்லாருக்கும் சொல்லீரு”
“ சாருக்கு நாளைக்கு காய்ச்சல்..மீட்டிங் சேன்சல்ன்னு இன்னிக்கே சொல்லீரவா”
“ஏய்ய்ய்ய்..இவனே .. நாளைக்கு நான் இல்ல … மீட்டிங்கும் இல்ல .. இதான் மேட்டரு.. அவங்ககிட்ட என்னவாவது சொல்லிக்கோ..என்ன சொன்னியோ அதை எங்கிட்டயும் சொல்லீரு.. நானும் அதையே பார்க்கிறப்போ சொல்லிருவேன்… என்னத்தையாவது சொல்லி சிக்க வச்சிறாதே..நாளைக்கு நீயும் எஞ்சாய் மேன் “
அடுத்து ஊருக்கு போன்..
“அப்பத்தா… நாளைக்கு காலைல வாரோம், மச்சிய தொறந்து, தூத்து வையி.. பம்புசெட்டு ரூமை காலைல கழுவிவிடச் சொல்லீரு … வீட்ல ஒன்னும் செஞ்சி வச்சிறாத ..எல்லாம் தோட்டத்துலதான் “
ராத்திரி பூராம் புள்ளைங்க ஏதோ பேசிக்கிட்டே கெடக்குதுங்க .
“ நாளைக்கு மதியத்துக்குள்ள நான் ஸ்விம்மிங் பண்ணீருவேன்”- பையன்
“அம்மா ..அங்கே நாளைக்கு என்னா டிஷ் செய்யப் போறோம்” – பாப்பா
ஞாயிறு: அதிகாலை 5; எல்லாரும் தீபாவளிபோல குளிச்சுக் கெளம்பி காருக்கும் போயாச்சு .. (மத்த நாளுன்னா ..காட்டுக்கத்துக் கத்துனாலும் 7க்கு முன்னால எந்தப்புள்ளயும் அசஞ்சுகூடக் கொடுக்காது )
இன்னிக்கு நான்தான் லேட்டு…
ஓடு ஓடுன்னு வெரட்டி,கொளத்தாங்கரையில வண்டி ஏறும்போது மணி 9..
உடையார் குளம்.. குளத்தின் நடுவே உள்ள கிராமம்.. மூன்று பக்கம் தண்ணீர் சூழ ஒருபக்கம் வயற்காடும், கோவிலும்,சர்ச்சும், வந்து செல்ல ரோடும்.
கரைல இருந்து நெட்டுக்குத்துல டைவ் அடிக்குறாப்ல ஒரு 60கிமீ ஸ்பீடுல எறங்கி, 3 – 4 அடித்தண்ணியில அரை பர்லாங்கு போனாத்தான் ஊர் எல்லையத் தொடமுடியும் ( சுத்திக்கிட்டு ரோட்லயே போணோமுன்னா ஒரு 2 கிமீ சுத்தணும் .. அதுக்கா வந்திருக்கோம் நாம ;)
“பசங்களா ..ரெடீயா”
”ஏன் ஏன் ஏன் என்னா செய்யபோறீங்க அங்கிள்…”
”வண்டி கொளத்துக்குள்ள குதிக்கப் போகுது … சின்ன க்ரொக்கோடைல் ,சார்க் எல்லாம் இருக்கும் … கைய உள்ளே வச்சுக்கோங்க … ”
”ஐய்ய்யோ…” எல்லாம் கண்னாடிய ஏத்த ஆரம்பிக்க …
”பாத்து பாத்து” ன்னு சாந்தி கத்த .. ”வேணாம் ..வேணாம்”ன்னு பாப்பா கத்த “போட்டும் போட்டும்”ன்னு பசங்க குதிக்க வண்டி தலைக்குப்புற வேகம் எடுத்து தண்ணியத் தொட , ரெண்டுபக்கமும் ரெக்கை மாதிரி தண்ணீர் விரிந்து எழும்ப , மிதந்தே வண்டி பாதிதூரம் தாண்டிய பின்னரே டயர் தரையைத் தொட, மீண்டும் வேகமெடுத்து தண்ணீரைத் தாண்டியது வண்டி …
சாதித்துவிட்ட பெருமையோடு நான் இறங்க, ”சூப்பர்”ன்னு கத்திக்கிட்டே பசங்க வெளியே வர. ஊர்ல பாதி எங்களைச் சுத்தி நிக்குது.
”ஏல..கிறுக்குப்பய புள்ள … புள்ள குட்டிய வச்சிக்கிட்டு ..மாட்டுவண்டி தடத்துல மோட்டாரு வண்டிய உட்டுட்டு நிக்கிறதப் பாரு… ” ஒரு பெரியாத்தா தொடங்கி வைத்தாள்..
சாந்தி எறங்குறதுக்கு முன்னாலயே வந்து விழுந்தது ஸ்கட்டு..”ஏன் மயினி.. நல்லா செவ செவன்னுதானே எங்க அண்ணன கூடிப்போனீய ..இப்போ இப்படி கரிச்சாங்குஞ்சி மாதிரி மாத்திக் கூட்டி வந்திருக்கீய ?”
பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுவென பேசிக்கொண்டார்கள்..
[ ஏய்.. அம்மாவைக் கிண்டல் பண்றாங்க...இல்ல இல்ல அப்பாவைத்தான்]
சாந்தி பதில் சொல்லாமல் (சொல்ல முடியாமல்) சிரித்தாள். அங்கே மாதிரி இல்ல ..இங்கே வாயத் தொறந்தா சிக்கிக்குவோமுன்னு தெரியும் அவளுக்குJ
[ ஹே..இங்கேப் பார்ரா ..அம்மா அமைதியா இருக்கு]
”அடியாத்தி ..எங்களுக்குத் தெரியாதாக்கும் சிலேட்டுக்கு வெள்ளையடிச்ச கதையெல்லாம்…என்னா ..சரிதானே கொழுந்தனாரே “ –இது இன்னோரு க்ரூப்பு …
[இப்போ அப்பாவை ஓட்டுறாங்க]
”இங்கேப் பாருங்கப்பு..இதை வந்து ஒரு காக்கா சொல்லுது” – நான்
[ ஹேய்ய்ய்ய்ய்ய்..டாடியப்பாரு.. வேற லேடி கூட எல்லாம் பேசுது ]
”எய்யா ..ராசா..இப்பிடி ..வருசத்துக்கு ஒருவாட்டியாவது வந்துட்டுப் போய்யா ..புள்ளைங்களப் பாரு..எப்பிடி திருதிருன்னு முளிக்கிறாங்கன்னு”
[ஐய்ய்யோ..இப்போ நம்மைக் கார்னர் பன்றாங்க ..ஓடு ஓடு]
காலை டிபன் முடிச்சு ஒடனே கெளம்புனோம் தோட்டத்துக்கு ..(புளிச்சகம்பங்கூழும் மோர் வத்தலும் எனக்கு, புல்லு தோசயும், நெலக்கடல தேங்காத் தொவையலும் அவங்களுக்கு)

மாட்டு வண்டியில கொண்டுவந்த லக்கேஜ்ல பாதிய மாத்திவச்சு, அதுக்குமேல சாந்தி ஒக்கார, நாலு மூளைல நிக்கும் கம்பையும் புடிச்சிக்கிட்டு பசங்க ஸ்டாண்டிங்ல நிக்க ..இப்போவும் நாந்தான் ட்ரைவர்..
அதே வந்த வழிதான் … முக்கால் அளவுக்கு வண்டிமுங்கிப் போக … பாதி தூரத்தில் ‘ஓ’ன்னு ஒரு அலறல்.. கார்த்திக் ப்ரெண்டு….
”சீக்கிரம்..சீக்கிரம் போங்க அங்கிள்..க்ரோக் வருது க்ரோக் வருது “
”சும்மா இருல .. நான் சும்மா சொன்னேன் ..முதலை எல்லாம் இதுல கெடயாது ”
“அங்கே பாருங்க அங்கே பாருங்க” பதறி அவன் காட்டிய திசையில் தலைமட்டும் தெரிய கரையைத் தாண்டியபடி இருந்தன இரு எருமைகள் ..
கூட வந்த ஊருப் புள்ளைங்க எல்லாம் கூடிச் சிரிக்க … தண்ணீரைத் தாண்டினோம் …
“மச்சான் ..இனிமே மேடு ஏற்றது கொஞ்ஜம் செரமம் ..கொடுங்க நான் ஓட்டுறேன்..”
”இருக்கட்டும் . நாங்களே ஓட்டுவோம்..’”. சொன்னாலும் பயம் தான்
வாலில் லைட்டா கைய வச்சவுடன் துள்ளிக் கிளம்பிய செவலையும் , வெள்ளயனும் 60டிகிரி மேல் நோக்கிய சாய்மானத்தில் கரையின் உச்சியை நொக்கிக் கிளம்ப .., மேலே வருவதற்குள் ..எனக்கு வயித்துல உள்ளதெல்லாம் தொண்டைக்கு வந்துவிட்டது…
தூரத்தில் தோட்டம் ……..

நன்றி : அதீதம். காம் : தொலைந்து போன பக்கங்கள்
7.உயிர்க் கொல்லும் கேள்வி :
--


வண்டிக்குள்ளிருந்த அலைபேசி தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்க ...
நான் எனோ அங்கேயே நின்று கொண்டு இருக்கிறேன் ...:((
கடைசியாய் இந்த உலகினை வாழ்த்தி என்குறள் இரண்டு
வான்பொழிந்தும் மண்விளைந்தும் கையேந்தும் வாழ்வுதந்து
செய்தோம் உழவுக்(கு) உயர்வு............................................................ 01
வாழும் வழியின்றி தாழ்ந்தழிந்து வீழும்:
உழவனைக் கொல்லும் உலகு............................................................. 02..
மாலை மணி 5.
மாலை மணி 5.

28.02.13 காலைல சென்னைல இருக்கணும் .. ஒரு புது வேலை ஆரம்பம் ... வேக வேகமாக (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், ஐயா.செங்கை பொதுகன் சந்திப்பு ,கவர்னர் கல்ந்துகொள்ளும் (செல்வமுரளி விழா) , அலுவல்முறையான சில சந்திப்புகள் , குழும நண்பர்கள் மற்றும் குறுந்தகவல் நண்பர்கள் சந்திப்பு என ஒரு மெகாப் பயணத்திட்டம் தயாரானது ...
27ல் ஒரு அலைபேசி அழைப்பு ..எதிர் முனையில் ஆசாத் ஐயா
“வணக்கம்..ஒரு முக்கிய பிரமுகர் என்னுடன் இருக்கிறார் .உங்களுடன் பேச வேண்டுமென்றார் “
யாராய் இருக்கும்..குழம்பும் பொழுதே “எப்டியிருக்கீங்க... “ வந்து விழுந்த தெளிந்த அந்த உற்சாகம் கொப்பளிக்கும் ஒரு வார்த்தையே ..எதிமுனையின் உருவத்தைக் காட்டிக் கொடுத்துவிட்ட்து ..
” சென்னைக்கு வாரீங்களாமே .. பார்க்கணுமே உங்களை “
“ஆமாம் அண்ணாச்சி..28ல அங்கேதான் இருப்பேன் ..மாலையில் சந்திப்போமா”
“இல்ல..இல்ல .. 1ம்தேதி பையனுக்கு தேர்வு...அவன் கூடவே இருக்கப்போறேன்.. அதுக்க்கத்தான் அங்கே(அமீரகம்) இருந்தே வந்தேன்..மறுநாள் பார்ப்போமா “
ஓஹ்... குழந்தையின் தேர்வுக்காக, அவனுக்குத் துணையிருக்க நாடுதாண்டி ஓடி வந்திருக்கிறார் ஒருவர்... அவருக்கு இடைஞ்சல் தராமல் , அவருக்காக , ஒரு நாள் தங்கி இருந்தாவது சந்தித்தே ஆகவேண்டும்.. ஒரு மாமனிதருக்காக இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி ...
“சரி அண்னாச்சி ... 1ம் தேதி உங்களைப் பார்க்கிறேன் “
பயணத் திட்ட்த்தை இரண்டு நாடகளுக்கு விரிவுபடுத்திக் கொண்டேன்.
28.ல் சென்னை.. அந்த ஊரின் பரபரப்பு எனக்கும் தொற்றிக் கொள்ள , நொடிமுள்ளுக்குப் போட்டியாக , காலில் சக்கரம் மாட்டாதது ஒன்றுதான் குறை J
மதியம் மணி 3 தாண்ட ..வயிறு பசிக்க..உடன் நினைவுக்கு வந்தது உதயன்,,
எவ்ளோ பசியோடு வந்தாலும் போய்ப்பார்தோமென்றால் இரண்டு கப் ’டீ’ கன்பர்ம். உதயனிடன் வாரேனென்று சொல்லிவிட்டு சென்றேன் .. முதல் ‘டீ’முடிந்த்தும் ஆசாத் ஜீயும் சேர்ந்து கொள்ள இர்ண்டாம் ‘டீ’யும் முடிந்தது.. நல்லதொரு திடீர் சந்திப்பு முடியும் வேளையில் ...மாலை மணி 5.. வீட்டிலிருந்து அழைப்பு ..பாப்பா ..பள்ளிவிட்டு வந்தவுடன் அழைக்கிறாள் போலும்
“அப்பா ... சாப்பிட்டாச்சா “
“இல்லப்பா..இன்மேதான் “
“சாப்பிடணும் மொதல்ல..என்ன சரியா ... எப்போ கெளம்புற “
“ நாளைக்குத் தாண்டா “
“என்னாது .. நாளைக்கா.. நாளைக்கு எனக்கு (+2) எக்சாம் , தெரியுமில்ல .. நீதானே கூடிப்போய் விடணும் ... வந்துரு ஒழுங்கா “
“.........................”
” என்னா ..பதிலே இல்ல “
“ சரிடா...வந்துர்ரேன் “
இணைப்பு துண்டானது ... அட..இன்னிக்குத்தானே வந்தோம் ? என்ன செய்யலாம் ? இதை எப்படி நான் கவனிக்கவில்லை?? கொண்டுவிட எத்தனையோ பேர் இருக்காங்களே ,,,பின்னே ஏன் ?!...
சரி.. குழந்தையின் ஆசையைவிட வேறென்ன பெரிசா இருக்க முடியும் ?
எனக்குள்ளிருந்த தொழிலாளி பதில் தெரியாமல் ஒளிந்து கொள்ள , அப்பா விழித்துக் கொண்டார் .. சரசரவென மூளைக்குள் திரிபற்றிக்கொள்ள இன்னும் சுறுசுறுப்பானேன்.. இருநாள்த் திட்டம் மீண்டும் ஒரு நாளானாது ..
கால்சக்கரத்தை அங்கேயே கைவிட்டுவிட்டு பறக்கத் தொடங்கினேன் .. 9மணிக்குள் 90சதம் வேலையை முடித்து அண்னாச்சியை அழைத்தேன் ..
“அண்ணாச்சி ..உங்களை இன்று பார்க்க முடிந்தால் மகிழ்வேன்”
“அட்டா..வாங்க வீட்டுக்கு”
ஓடிப்போனேன்..என பாக்கியமென்றே சொல்ல வேண்டும் ..அன்பால் வார்த்தெடுத்த அப்துல் ஜாபர் ஐயாவும் , அம்மாவும் வாழ்த்த , அழகுக் குழந்தைகள் ஆசையாய் வரவேற்க , எல்லாம் கலந்த கலவையாய் அண்ணாச்சி .அங்கிருந்த ஒருமணி நேரமும் ..என்வாழ்வின் ஓர் அற்புத்த் தருணம்..சாப்பாடு ..ஆஹா ..கண்ணை மூடிக்கொண்டேனென்றால் ... நான் என் வீட்டில் இருப்பதுபோலவே ஒரு பிரமை ... வாழ்க உறவுகள்
குழந்தைகளுக்கு தேர்வுசிறக்க வாழ்த்துச் சொல்லி , பெரியவர்களிடம் ஆசி வாங்கி .எல்லாரிடமும் பிரியா விடைபெற்று... வாடகை வண்டியைக் கணக்கு முடித்து அனுப்பிவிட்டு , ஓட்டல் கணக்கு முடித்து, ஆச்சு ..மணி இரவு ..11... என வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் தூத்துக்குடி நோக்கி ........
ம்ம்ம்ம்ம்..700கி.மீ..8 மணி நேரம் இருக்கிறது ...
1ம் தேதி காலை 9.மணி...
பள்ளி வளாகம் ...
பரீட்சை அட்டையோடு உள்ளே ஓடுகிறாள் பாப்பா
”அப்பா ...1.15க்கு வந்திடணும் ..சரியா “
” நல்லா எழுது பாப்பா”
கையசைத்துவிட்டுக் கிளம்புகிறேன் வீட்டுக்கு ...
ஏறக்குறைய 36மணி நேரம் , 1500 கிமீ கடந்த நிலையில் லேசாகத் தூக்கம் எட்டிப்பார்க்கிறது ..
..(அடுத்த பிதற்றல் தொடரும்)
இப்பத்தான் தலைப்பைப் பார்த்தேன்...என்னா பாவம் இல்லை என்னா பாவம்ன்றேன்...என்னோட பாப்பா எப்போ எக்ஸாம் எழுதுறாங்கனு கூட தெரிஞ்சுக்காம வேலை வேலைன்னு இருந்துட்டு, போன் பண்ணி கூப்பிட்டப்புறம் என்டர் ஆகிட்டு பாவமாமில்ல பாவம்...ஆக்சுவலா எக்ஸாம் தேதியை மறந்ததுக்கு நீங்க ஒரு செட் கைவளையே தங்கத்துல எடுத்து தரணுமாக்கும்,,,
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஒரு மகளின் அப்பாவாகிய நான் ...!
+2 ரிசல்ட்
கோவையில் நான் ..செல்போன் அடிக்க எடுத்தேன்
”அப்பா .. நான் 1132 மார்க்”
”ஆகா ..கலக்கீட்டியேடா ... இதோ வாரேன் ..”
எல்லாத்தையும் பாதியில நிறுத்திவிட்டு கெளம்பியாச்சு ..4மணி நேரம்
தூத்துக்குடி..கேக்கும் சாக்லேட்டுமாக துள்ளிக்குதித்து வீட்டுக்குள் நுழைய ..
அட என்ன் இது ..அங்கே (ஒரு அமானுஷ்ய) அமைதி .... ஏன் ..என்னாச்சு ..
”ஏன் எல்லாரும் இப்பிடி இருக்கீங்க ?”
”அவளையேக் கேளுங்க”
”என்னடே ..”
”அப்பா.. காலேஜுக்கு நான் வெளியூரெல்லாம் போக மாட்டேன் .. வீட்ல இருந்துதான் போய்ட்டு வருவேன் ... இப்டீன்னு தெரிஞ்சிருந்தா நான் மார்க் குறைச்சலாவே எடுத்திருப்பேன்”
”அட..இதுக்குத்தானா .. கோவைல நம்ம காலேஜ்லயே ( நான் கட்டிய கல்லூரி அது..தற்புழுதும் வேலை நடக்கிறது அங்கே ) சேர்துக்கலாம் .. அங்கே வீட்ல இருந்து போய்க்கலாம் ..அடுத்த வருசம் தம்பியும் காலேஜ்தானே..அவனும் வந்திருவான் ,.. அப்புரமா எல்லாரும் அங்கேதானே”
இருண்டுகிடந்த முகத்தில் லேசாக வெளிச்சம் ...
”அங்கே என்கூட யார் இருப்பா”
”இப்போ ஆச்சி இருக்கட்டும் .. நான் வாரம் 2 நாள் வந்திருவேன்..சனி ஞாயிறு அம்மா வந்திருவா ..பிறகென்ன”
”ஐஈஈஈஈ..ஜாலி..ஜாலி...” அவள் மகிழ்ச்சியில் குதிக்க நண்டு சுண்டுகள் எல்லாம் சேர்ந்து கொள்ள வீடும் சேர்ந்து குதிக்க ஆரம்பித்த்து ..
நான் நழுவி என் அறைக்குள் நுழைந்தேன் ..பின்னாலேயே வீட்டம்மா .சாந்தி..
அவள்முகம் அப்படியே முன்பார்த்த மகள்முகம்போல் இருண்டு கிடந்த்து ..
கூடுதலாக கண்ணும் கலங்கி இருந்த்து
”இப்போ உனக்கென்ன?”
”ஏங்க ,, நீங்க சொன்னதெல்லாம் உண்மையா”
”பாப்போம்”
”என்ன பாப்போம் ..அப்போ பொய்யா சொன்னீங்க”
”பாதி”
அவள் கண்ணைத் துடைக்க .. நான் கோபமானேன்
”என்ன இது சின்ன பப்பா மாதிரி அழுதுகிட்டு ... அவ என்ன சின்னப்புள்ளயா .
நல்லாப் படிக்கணுமுன்னா வெளியே போய்த்தானே ஆகணும் .. குழந்தை மாதிரி அழுது மத்தவங்களையும் குழப்பி விட்ட்டு விடாதே”
வெடுக்கென்று திரும்பினாள் ”உங்களுக்கென்ன நீங்க ஆண்புள்ள”
’என்ன இப்படி சொல்லீட்டாளே’
பிறந்ததிலிருந்து ஒருநாள்கூட அவளில்லாமல் தூங்கியதில்லை..இருக்கட்டும்
தும்மினால் கூட மகள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் – இருக்கட்டும்
இப்போ உனக்குத் தும்மல் வரும் பாருன்னு அம்மா மகளிடம் சொல்வாள் – இருக்கட்டும் .. ஆனாலும் நடைமுறை வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே .. அதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் .. இதுகூடப் புரியாமல் வயசாகி என்ன ப்ரயோசனம் ?
”இனிமே என்முன்னால கண்ணுல தண்ணிவுட்டேன்னா பாத்துக்கோ .. என்னக் கோவப்படுத்தாம நிலைமையப் புரிஞ்சுக்கப் பாருங்க”
மகளைவிட அம்மாவுக்குத்தான் சொல்லிப் புரிய வைக்க நாளாகுமோ .. பார்ப்போம் ..
அவளுக்கு படம் வரைவதிலும் , புதியனவற்றை உருவாக்குவதிலும் ஆர்வம் அதிகம் என்பதால் ‘ஆர்க்கிடெக்ட்’ஆகணும்/ ஆக்கணும் என்றே முடிவாகிவிட்ட்தால் .. NATA விலும் நல்ல தேர்ச்சி ( ஒரு மாதக் கோச்சிங் க்ளாஸ் இதற்கு உண்டாம் ..ஆனால் இவள் வீட்டிலிருந்தே 150 ரூ புத்தகம் மட்டும் தான் வாங்கிப் பார்த்திருந்தாள் )... மாநிலக் கோட்டாவில் 7வது இடம் வாங்கிவிட்டாள் .
வீட்டில் எனக்கு சிக்கல்கள் ஆரம்பம்
”இந்தாங்க .. நல்லா சப்பிட்டுக்கோங்க இன்னிக்க்கு ..இந்தமாதிரி இனிமே வைக்க மாட்டேன் ..இது அவளுக்கு ரொம்ப்ப் பிடிக்கும் ..லீவுல அவ வ்வார அன்னிக்குத்தான் இதெல்லம் கெடைக்கும்”
”இந்தாங்க ..செர்ரி பழம் .. நல்லா சாப்பிட்டுக்கோங்க இன்னிக்கு....”
”இந்தாங்க எலுமிச்சை சர்ப்பத் நல்லா....”
”இந்தாங்க பாயாசம் .....”
”இந்தா...”
”இ..”
ஆகா .. நம்மள கொல்றாய்ங்களே
கோவைக் கல்லூரியின் சேர்மன், முதல்வர் எல்லாரிடமும் பேசி எல்லா ஏற்பாடுகளும் முடித்து வைத்தாகிவிட்ட்து ..
சென்னையில் கவுன்சிலிங்கிற்கு 3 நாட்களுக்கு முன்பு
”அப்பா நான் மதுரைல படிக்கிறேனே ... ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடலாம்பா ... ப்ளீஸ்ப்பா”
”என்ன இப்போப்போயி இப்படிச் சொல்ற ,, மதுரைன்னா ஹாஸ்ட்டல்லதான் தங்கணும்..பரவாயில்லையா ?”
”பரவாயில்லப்பா .. நெனச்சா நீ வந்து கூட்டிப்போயிருவேல்ல”
”பார்ப்போம்டே”
பாவமாக இருந்தது ..
என்ன செய்ய .. கோவையில் என்ன பதில் சொல்ல ..குழப்பத்திலேயே இரவு கழிந்த்து
மறுநாள் காலை.. சென்னைக்குக் கிளம்பியாகி விட்ட்து.. வழியில் மதுரைக் கல்லூரிக்குச் சென்று பார்த்துவிட்டு ( எல்லாருக்கும் பிடித்துப்போய் விட்ட்து.. அதுதானே அவுங்க திட்டமும் கூட : நன்றி மதுரை நட்புகள் பாலாஜி பாஸ்கரன், சுப்புரமணி, உதயன் ) சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று மறுநாள் நிகழ்வுக்காக ஒரு ஒத்திகைப் பார்த்துவிட்டு
சென்னை நண்பர்களைப் பார்த்துவிட்டு (’அவளை சென்னைலயே சேருங்க .. நாங்க எங்க குழந்தைப் போலப் பாத்துக் கொள்கிறோம்’ / நன்றி – ஆசாத் ஜீ , விழியன், உதயன், மோர்சுப்ரா) இரவு சிறிது குழப்பத்துடனேயே உறங்கச் சென்றோம்
அண்ணா பல்கலைக் கழகம் :
சில பல குழப்பங்களுக்கிடையே ... ஆரம்பக் கட்டங்களை எல்லாம் தாண்டி இடம் தேர்வு செய்யும் பகுதி ... கால் லெட்டரைக் கொடுத்துவிட்டு
கம்ப்யூட்டர் முன் நான் , அவள் ...
”எந்த காலேஜ் வேணும் உங்களுக்கு?”
”கோவை அல்லது மதுரைல கிடைக்குமா பாருங்களேன்”
கொஞ்சம் அமைதி
திடீரென்று பக்கத்து மேசையில் ஒரு பெண் ‘ய்ய்ய்ய்ய்ய்யெஸ்ஸ்ஸ்’ என்று வேகமாக அலற, அவளது அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் குதிக்க ..
(அவங்க கேட்ட காலேஜ் கிடைத்து விட்டதாம் )
”அமைதி அமைதி” எனக் கூறிக்கொண்டே வந்தார் ஒரு அம்மையார் ..
”என்ன இது ..சுற்றிலும் எத்தனை பேர் பதட்டமா உக்கார்ந்திருக்காங்க பாருங்க .. இப்படி சத்தப் போட்டால் ஏதாவது தப்பா எண்ட்ரி போட்டுட்டா என்னாவது ..”
”உக்காருங்க மொதல்ல” என்று கொஞ்சம் மிரட்டலாகச் சொல்லிவிட்டு .. எங்கள் பக்கம் திரும்பினார் ..”இவங்களுக்கு என்னவாம்” .. எனக் கேட்டுக் கொண்டே உமாவின் பேப்பர்களை கையிலெடுத்த்தார் ... திரையைப் பார்த்தார் .. என்னைப் பார்த்தார் ...
”அப்பாவா”
”ஆமாம் அம்மா”
”என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க”
”எஞ்சினியர்”
”இப்போ இங்கே என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்”
நான் திரு திருவென்று முழிக்க
”அவள் ரேங்க் 7 .. தமிழ் நாட்டின் டாப் 40 ஸ்ட்டூடண்ட்ஸ் படிக்கப்போற SAP லயே அவளுக்கு இடம் கிடைக்கும் .. இந்த வாய்ப்பை விட்டுவிட்டு வேற எங்கேயோ தேடிக்கிட்டு இருக்கீங்க”
”அது வந்து ..பக்கத்துல இருந்து ..
”சார் உங்க வசதிக்காக பசங்க வாய்ப்பைக் கெடுத்திடாதீங்க ,, அவ்ளொதான்”
போய்விட்டார் .. ( அவர்தான் SAPன் டீன் SAP = ஸ்ஹூல் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் / அண்ணா யுனிவெர்சிட்டி ) ...
நான் பாப்பாவைப் பார்க்க , அவள் என்னைப்பார்க்க , ஆபரேட்டர் கணினியை பார்த்து ஓகே சொல்லி ஆர்டரை எடுத்துக் கையில் கொடுத்து ”””கண்கிராட்ஸ்” என்றார் .
எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடம் , எத்ர்ர்பார்ப்புகளே இல்லாமல் வந்த எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்துவிட்ட்து ..
”வெளியே காத்திருங்க சார் .. அவங்க மட்டும் இருக்கட்டும் .. ஆர்டரோடு வருவார்ங்க”
நான் வெளியே போய் நிற்க ..வீட்டம்மா ஆவலாய் ஓடிவந்தார்
”எங்கே?”
”சென்னை!”
”சென்னையா!!!!”
ஒவ்வொரு குழந்தையாய் கையில் ஆணையுடன் துள்ளிக் குதித்துவர ..இவள் மெதுவாக நடந்து வந்தாள் ..முகம் கவலையால் சுருங்கிப்போய் இருந்த்து
”அடுத்தவாரமே ஜூலை 19ல் காலேஜ் தொடங்குதாம்”
ஒருவாரம்..
மிக்க் கடினமான காலமாகிப் போனது எனக்கு
வீட்டில் ஒவ்வோருவரையும் சமாளித்து சமாதானப் படுத்தி , அழுதவர்களை மிரட்டி ஒருவழியாக ஒரு நிலைக்குக் கொண்டுவந்து ... ஒரு லாரி சாமான்களோடு 18ல் சென்னை வந்து சேர்ந்தோம்
சில நிர்வாக்க் குறைபாடுகள் ... அங்கே இங்கே என்று அலைச்சல்கள் ..மனதில் சஞ்சலம் உருவாக்க .. ஒருவழியாய் விடுதி அறைஎண்
4 மணிக்குத்தான் கொடுத்தார்கள் .. அங்கும் சில குறைகள் ..எல்லாவற்றையும் சரிசெய்து கிளம்ப இரவு மணி 9 ஆகி இருந்த்து
”பாப்பா ..கெளம்பட்டுமா ...”
காலைல பெற்றோர்கள் சந்திப்பு 9 மணிக்கு .. அதுக்கு வந்திட்டு ..சாயங்காலம் வரைக்கும் இங்கெ இருந்திட்டுத்தான் கிளம்ப்புவோம் ..
அவள் அமைதியாய் குனிந்து நின்றாள்
”நானும் உங்ககூட இன்னிக்கு வாரேனே”
”ஏண்டா”
’எனக்கு இங்கப் பிடிக்கல அப்பா”
எனக்குப் பகீரென்றது .. முதன்முதலாய் எனக்குத் தொண்டை அடைத்தது
”புரிஞ்சுக்கோடா ... காலைல நீ 8.30க்கு வகுப்புல இருக்கணும் .. நைட்டு புது ரூம் ப்ரண்ட்ஸ் கூட அறிமுகமாகி சந்தோசமா இருக்கணும் ..என்ன..சரியா”
”நான் வாரேன்பா ..ப்ளீஸ் ...”
அவள் இதுவரைக்கும் என்னிடம் வேண்டுகோளாய் எதுவும் கேட்டதில்லை ..
என்கண்கள் கலங்கியது போலத் தெரிந்த்து
’அழுதிருவேனோ’
சாந்திக்கு ஏதோ புரிந்திருக்கும் போல ( இப்போது சாந்தி மிகத் தெளிவாய் இருந்தாள் ) ..அவளை மெல்ல அழைத்துக்கொண்டு தூரம் சென்று ஏதோ சொல்லியபடி இருந்தாள் ... பாப்பா திடீரென ஓடிவந்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ( இது இரவு படுக்கப் போகும் முன்னால் தினமும் கிடைக்கும் ) திரும்பிப் பார்க்காமல் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள் .. மழை தொடங்கி இருந்தது
மெல்ல வண்டியை எடுத்து எங்கோ சாப்பிட்டு, எங்கோ அறை எடுத்து படுக்கப் போகும்போது மணி 11 .. அலைச்சல் காரணமாக சாந்தி உடன் தூங்கிப்போக .... எனக்குள் மட்டும் ஏதோ இனம் புரியாத குடைச்சல் ..
இரவு மணி 2 .. ஒரு எஸ் எம் எஸ் ...
பதட்டத்தோடு எடுக்க ..அவள் தான்
‘ஐ மிஸ் யூ டாட் ‘
அதுவரையில் இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் ஒளிந்து கிடந்த எனக்கேத் தெரியாத அவன் ‘ஓ’ வென்று வாய் விட்டுக் கதற ஆரம்பித்தான் ..
எப்பொழுது தூங்கினேனோ தெரியவில்லை ..சாந்தி 6 மணிக்கு எழுப்பினாள்
“கிளம்புங்க .. 8க்கு முன்னால்யே அங்கே போனாத்தானே நல்லா இருக்கும்
அட..என்ன கண்ணெல்லாம் வீங்குனாப்ல இருக்கு”
”சரியா தூக்கமில்ல”
அவள் நம்பினதுபோல் தெரியவில்லை
பல்கலைக் கழகம் ..காலை 8 மணி ..விடுதியில் இருந்து அவள் வரக் காத்திருந்தோம் ... ஒரு கூட்டமாய் வந்தார்கள் .. பின்னால் கடைசியாக அவள் .. பகிரென்றது ..LKGல் இருந்து +2 வரையில் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை ( 14 ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே 2 மணி நேரம் முன்னதாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அழைத்து வந்திருக்கிறோம்) தாமதமாகப் போனதில்லை .. எதிலும் முதலாய் இருக்க வேண்டுமென்று நினைப்பவள் ..
எங்களைப் பார்த்த்தும் கூட்ட்த்தை பிளந்து ஓடி வந்தாள் .. கண்கள் வீங்கி இருந்தது .. சாந்தி அர்த்தத்தோடு என்னைப் பார்க்க ,என்னிடம் ஏதோ எதிர்பாத்து என்கண்ணுக்குள் பாப்பாவும் பார்க்க , நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்க்க எங்கோ பார்க்க ஆரம்பித்தேன் ..
சந்திப்பு முடிந்து எல்லாரும் கிளம்ப எத்தனிக்க ., ஆங்காங்கே குடும்பம் குடும்பமாய் கூடி நின்று பேசி சிரித்து விடைபெற்றுக் கலையத் தொடங்க , எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்த்து .. கண்ணீர் பெருக்கெடுக்க .. வண்டியை பார்த்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்
”என்னாங்க எங்கே போறீங்க ?”
திரும்பாமலேயே சொன்னேன்
”அங்கேயே இருங்க ..இதோ முகம் கழுவீட்டு வாரேன்”
அந்த அரைமணிக்குள் 6 முறை முகம் கழுவிய என்னைபார்த்து முதலில் பயந்த குழந்தைகள் எல்லாம் இப்போது சிரிக்கதொடங்கி இருந்தன ..
ஆஹா ..எல்லார் முன்னாலயும் அசிங்கப் பட்டிருவேனோ ???

தொடரும் .....
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வாழ்க உறவுகள்....
அப்பாவின் உணர்வை உள்வாங்கி.... மருந்திட்ட என்சொந்தங்கள் அனைவருக்கும் நான் மிக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் .
இப்பொழுது இந்த அண்ணனையும் கொஞ்சம் கவனியுங்கள் !
ஊர்சுற்றியின் பிதற்றல்கள் 10
பாச மலர் எல்லாம் .....பத்தடிக்குப் பின்னால் தான் .......!

ஒரு சின்ன ப்ளாஷ் பேக் : எங்க வீட்டுல நான் 5 வருசத்துக்கு அப்புறமாத்தான் பிறந்தேன்..என் தம்பி அடுத்த 5வது வருசத்துல ... நாங்க 2 பேர்தான் ........
-------------------------------------------------------------
ஒரு 10 வருசத்துக்குப் பிறகு ..கிராமத்தில் / சித்திக்குச் சொந்த ஊர் .. கோவில் கொடை ... வெள்ளை (வாடகை) அம்பாசிடர்ல போய் எறங்கினோம் .. டேப் ரெக்கார்டர் , முன் சீட்டுல / பின் சீட்டுக்கு ரெண்டு பக்கமும் ஃபேன் என்று ஹைடெக் கார் அது ... கோவிலுக்கு வந்த நண்டு சுண்டுங்க கூட்டத்தில் முக்கால்வாசி காரைச் சுத்தித்தான் J.. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊர் திரும்ப..காரில் ஏறி உட்கார்ந்தவுடன் தொடங்கியது புது சிக்கல் ... சித்தியின் மகள் ..செலவ லெட்சுமி.. ஒரு 1.75 வயசிருக்கும் ...போட்டிருந்த ஜட்டியோடு வண்டியின் முன்னே.. இந்தப்பக்கத்துத் தெருவுக்கும் அந்தப்பக்கத்துத் தெருவுக்கும் உருண்டு புருண்டு ஒரே அழுகை
“ நானும் போவேன் “ ..
யார் பிடித்தும் உருளல் நிற்கவில்லை. அதற்கு மேல்
என்னாலும் தாங்க முடியவில்லை ...
இறங்கி ஓடிப்போய்த் தூக்கிக் கொண்டேன் ..
“ நாங்க கொண்டுபோறோம் “
“எய்யா ..என்ன திடீர்ன்னு இப்பிடி சொல்லுத”
“பின்னே..புள்ள இப்டி கெடந்து அழுவுது ..அவ்ளோதான் .. நீங்க ஒரு வாரம் கழிச்சு வந்து தூக்கீட்டுப்போங்க “
அன்னிக்கு வந்தவதான் ..அப்பிடியே எங்க வீட்டு மகாலெட்சுமி ஆகிப்போனாள் .. இப்போ எங்க வீட்டுல நாங்க 3 பேரு
....................................................
வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தேன் ..ஏற்கனவே உள்ளே ஒரு பெருங்கூட்டம் .. புரியவில்லை ..கொஞ்சம் குழப்பமாக சாந்தியிடம்
“என்ன?”
“பொண்ணு கேட்டு வந்திருக்காங்க “
‘யாருக்கு “
“5வது தெரு குமார் வீட்டுல இருந்து “
“அதுசரி ..அதுக்கு இங்கே என்னாக் கூட்டம்”
“அட..லெட்சுமியத்தான் கேட்டு வந்திருக்காங்க “
எனக்கு சுர்ர்ர்ர்ர்ருன்னு எங்கோ பற்றியது .. ’அவளுக்கா!!!!!! ..சின்னப்புள்ளை.. இன்னும் படிக்க வேணாமா ... என்ன சின்னப் புள்ளத்தனமா வந்து உக்காந்திருக்குக இந்தப் பெரிசுக எல்லாம் ..’
“அதெல்லாம் ஒண்ணும் இப்போ..........”
நான் பேசும் போதே எனவாய் பொத்தப்பட்ட்து ..
“போய் அங்கே நடுவுல உக்காருங்க ... நல்ல சம்பந்தம் ..இங்கே பக்கத்துல வேறு ..அப்பா. அம்மா எல்லாரும் சரீன்னுட்டாங்க .. நல்ல புள்ளையா அடக்கமா அங்கே சிரிச்சுக்கிட்டே தலையாட்டீட்டு வ்ந்திடுங்க “
’அட..இவ்ளோதானா நம்ம வெய்ட்டு ... எல்லாம் நீங்கதான் நீங்கதான்ன்னு சொல்லுவாங்க...ஆனா எல்லாம் முடிச்சு வச்சிட்டு... கடைசீல சிக்னலுக்குத் தலையாட்டத்தான் நாம்பளா L’ ரைட்டு .. பாத்துக்குகிடுவோம்’
கூடத்தில் கேலியும் கும்மாளமுமாக இருக்க ..வேகமாய்ப் போய் நடுவில் உட்கார்ந்தேன்..
“கடைசீல பக்கத்துலயே மாபளைய புடிச்சிட்டீரேய்யா ”
- யாரு நானா?? ஏன் சொல்ல மாட்டீங்க !
”எல்லாம் சரி.. மாப்ள வீட்டுல அவங்க மனசுக்கு மேலேயே செய்து விடுகிறேன் .. ஆனால் ...”
”என்னய்யா ஆனால்”?””’ “
”ஒரே ஒரு கண்டிசன் ”
”என்னது அது ”
”எந்தங்கச்சி இங்கே எப்டி இருந்தாளோ ...அதேப் போல அங்கேயும் வச்சிருக்கணும் ... அவ்ளோதான் ..எதாவது மாறிச்சுன்னா ..அப்புறம் பாத்த்துக்கோங்க .. என்னைபத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும் .... சொல்லீட்டேன் “
”இதெல்லாமா கண்டிசன் ..அதெல்லாம் அப்டித்தான் நல்லாவே பார்த்துப்பாங்க ”
”அப்போ சரி ...”
கிளம்பும் போது மாப்பிள்ளை மெதுவாக என்னிடம் வந்தார்
“ அது வந்து ..அவ இங்கே எப்டி இருந்தான்னு சொன்னீங்கன்னா...”
” அதையும் சொல்லியாத் தருவோம் ... அதெல்லாம் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கோங்கன்னேன் “
”போய்ட்டு வாரோம்” ந்னு சொல்லிப் பறந்தே விட்டார் .
கல்யாணம் ..
ஒருபக்க அழைப்பிதழுக்கு , 40பக்க உறவினர் பட்டியல் இலவச இணைப்பு. இதுல இனிசியல் மாறிப்போச்சு, படிப்பு போடல, பேரு கீழே வந்திருச்சு, கமா போடல , புள்ளி வைக்கலன்னு ஒரு பெரிய பஞ்சாயத்து .. வழக்கமான கல்யாணக் கலாட்டாக்கள் களேபரங்கள் ..
எல்லாம் இனிதே முடிந்து ( நான் பட்டப் பாடு எனக்கேத் தெரியும் ..அது தனியான புலம்பலாக வரும் ) .. சாயங்காலம் அவங்க வீட்டுல கொண்டு விட்டுவிட்டு (... 3 தெரு தள்ளி இருக்கும் அவங்க வீட்டு மாடியில இருந்து போன் இல்லாமலேயே “ஹலோ” ந்னு கூப்பிட்டா ., இங்கிருந்து
“ஹலோ நீங்க யாரு பேசரது ”ன்னு கேக்கும் அளவுக்குப் பக்கம் ..)
”மாப்ளே... கண்டிசன்..கண்டிசன்..பாத்துக்கோங்க” ந்னு சிரிச்சுக்கிட்டே ஒரு எச்சரிக்கை அறிக்கையையும் கொடுத்துட்டு, வீட்டுக்கு வந்து நிம்மதியா ஒரு காப்பிக் குடிச்சு முடிக்கல்ல ..கோவைல இருந்து போன்
“காலைல ஒரு அவரச மீட்டிங்க்.. நீங்க உடனே கிளம்பி வந்தீங்கன்னா நல்லா இருக்கும் “
’ஆஹா..கொஞ்சம் தூங்கலாமுன்னு பாத்தேனய்யா’
இரவோடு இரவாக கிளம்பியாகி விட்ட்து
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
3 நாட்கள்... வேலை பரபரப்பில் வீடு மறந்தே போனது ... வேலை முடித்து கோவையில் கிளம்பி தூத்துக்குடி வர மாலை மணி 5 ஆகிப்போனது ..
3வது தெரு நெருங்கும்போதுதான்.. அட.. ..தங்கையின் புதுவீடு .. வாசலில் ‘சர்க்’ எனக் பிரேக் அடித்து நின்றேன் ..
‘என்ன செய்யலாம் இறங்கி உள்ளே போவோமா? .. மொதமொதல்ல போவதற்கு ஏதாவது முறை இருந்தால்? ..அதனால் வீட்டுக்குப் போய்ட்டு சாந்தி, புள்ளைங்களொட வருவோமா ...??
யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே வீட்டின் கதவு வேகமாகத் திறக்க “அண்ணே” என்று சத்தமாக அழைத்தபடியே லெட்சுமி ஓடிவந்தாள் ... நான் திடுக்கிட .. பின்னாலேயே மாப்பிள்ளையும் ஓடி வர.. வந்தவள் என் கையைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கி அழ ஆரம்பிக்க ... எனக்கு மண்ண்டக்குள் ரத்தம் சூடாகப் பாய்ந்தது ..
சரட்டென வண்டிக் கதவைத் திறந்தேன் .(ஸ்லைடிங் டோர்)
“ஏறு உள்ள”
மாப்பிள்ளையைப் பார்த்தேன் ..
“என்ன செல்லி அனுப்பி வச்சேன் அவளை .. புள்ளைய அழவச்சுப் பாத்துக் கிட்டு இருக்கீங்களோ”
பின்னாலயே மாப்பிள்லையின் அப்பாவும் ஆச்சியும் வந்து சேர , எனக்கு கோபம் எல்லைக் கடந்தது
“எல்லாரும் உள்ளேதான் இருந்தீங்களா .. நல்லா இருக்குங்க “
லெட்சுமி இன்னும் தயங்கி நிற்க
“இப்போ ஏறப் போறியா ..இல்லையா”
நான் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கம் எல்லா வீட்டிலிருந்தும் ஆட்கள் வெளியே வர ...
“மச்சான் ..ஏன் கோவப் படுறீங்க ..இருங்க”
மாப்பிள்ளை ஏதோ சொல்ல வர ...
”எதுன்னாலும் எங்கே பேசனுமோ ..அங்கே வச்சுப் பேசிப்போம்”
சொல்லீட்டு நான் கதவை மூடி வண்டியைக் கிளப்பிய வேகத்தில் தெருவே கலங்கிப் போனது ..
வண்டி வீட்டிற்கு வருவதற்குள் , சாந்தி, அம்மா, அப்பா எல்லாம் வாசலுக்கு வந்து காத்து நிற்க ( அதுக்குள்ல்ள செய்தி வந்திடுச்சா இங்கே !)...
வேகமாக நிறுத்தி, கதவைதிறந்து “போ உள்ளே” என்றேன் ..
இறங்கியவள் “அண்ணீஈஈ” என்று அலறியபடியே ஓட ..
இன்னும் வெறியானேன்..
‘எப்படியும் அவங்க ஆளுங்க பேசுவதற்கு வரப்போறாங்க .. நாம் நம்ம ஆளுங்களுக்குச் சொல்லி விடுவோமா ..சே.சே வேண்டாம் ..எத்தனை பேரு வந்திரப்போறாங்க ..தனியாவே மோதிப் பாத்திருவோம் ’
வீட்டுக்குள் போகாமல் நான் வெளியவே காத்திருக்க ..எதிர்பாத்தது போலவே அவர்கள் ஒரு பத்து இருபதுபேர் ஆணும் பெண்ணுமாக கூட்டமாக வந்தார்கள் ..
ஒரு பெரிசு ஆரம்பித்தது
“என்ன தம்பி”
”என்ன என்ன தம்பி”
”ஏன் இவ்ளோ கோவம் ”
”என்ன ஏன் இவ்ளோ கோவம் ”
”பொறுமையா இருங்க ”
”என்ன என்ன பொறுமையா இருங்க”
”ஏங்க !”
இது சாந்தியின் குரலாச்சே!
திரும்பிப் பார்க்க ...வீட்டு வாசலில் எல்லாரும் குசுகூவென்னு பேசியபடியும் சிரித்துக் கொண்டும் நிறக ...எனக்கு இங்கே கொந்தளிப்பு அதிகமானது ..
’மனுசன் தனியா நின்னு எத்தனை பேரை சமாளிச்சிக்கிட்டு இருக்கோம் ..அங்கே என்னா இளிப்பானி வேண்டிக் கெடக்குது ’
”என்னா இப்பொ”
”இங்க வாங்க ”
”பேசிக்கிட்டு இருக்கேன்ல்ல .. கொஞ்ச நேரம் இரு”
”அட ..ரொம்பக் குதிக்காம இங்கே வாரீங்களா இல்லையா ”
ஆஹ்ஹா ..இது டேஞ்சரான சிக்னலாச்சே... கோவத்துடன் வந்தவங்களை முறைத்தபடியே ... அதே வேகத்தில் திரும்பி வந்து சாந்தியின் முன் நின்றேன்
”இப்போ என்ன சொல்லித் தொலை ”
”ஆங் .. பன்றதையும் பண்ணிப்புட்டு பேச்சப் பாருங்க ..நல்லா பேசிக்கிட்டு இருந்த புள்ளைய தூக்கி, வண்டிக்குள்ள அடைச்சுத் தூக்கீட்டு வந்துட்டு, .. இங்கே வந்தவங்க கிட்டே ஆட்டம் போடுறீங்க ”
’தூக்கீட்டு வந்தேனா ??????????’
அப்போத்தான் லெட்சுமியப் பார்த்தேன் ..அவள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தபடி நிறக ..’என்னய்யா நடக்குது இங்கே ...’
”அவ அழுதுகிட்டே ஓடி வந்தாளே எங்கிட்ட ..”
”உங்க வண்டி வந்து நின்னதைப் பார்த்திருக்கா ..உடனே காப்பிப் போட எடுத்துவச்சிட்டு வந்து பார்த்தா.. நீங்க இன்னும் இறங்காம வண்டியிலயே இருந்திருக்கீங்க.. அட்டா! அண்ணனை வான்னு கூப்பிட யாரும் வரலயேன்னு அண்ணன் நெனைச்சிக்கிட்டு உக்காந்திருக்கோன்னு பதறிப்போயி ஓடி வந்திருக்கா ... 3 நாளு கழிச்சுப் பாத்தவுடன் கண்ணு கலங்கி இருக்கு .. நீங்க என்னடான்னா வான்னு சொல்ல வந்தவளை வந்தளை வண்டிக்குள்ள தள்ளி இங்கே கொண்டு வந்துட்டீங்க ...
’ஆஹ்ஹ்ஹ்ஹா ..அவசரத்துல நாமதான் தப்புப் பண்ணீட்டமோ ..’
மெல்லத் திரும்பிப் பார்க்க ..தெருவே என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ....
பி.கு:
1) ஒரு வாரத்துக்கு வெளியில் தலைகாட்ட முடியவில்லை .. நண்டு சுண்டுகள் எல்லாம் என்னைப் பார்த்தவுடன் “மாமாஆஆஆ” ந்னு கண்ணைக் கசக்கிய படியே ஓடி வந்து .என்னைத் தலைதெறிக்க ஓட வைத்தன
2) குடும்ப நிகழ்வுகளில் இதுபோன்ற சூழலில் லெட்சுமி தவறாமல் சொல்வது ”எங்க அண்ணே முன்னால யாரும் அழ மட்டும் செஞ்சிறாதீக”
...

வாழ்க உறவுகள் ....
பெரிசா ப்ளானெல்லாம் பண்னாம மனசுல தோன்றத அப்படியே பதியப் போறேன் .. அங்கங்கே இடைவெளி தெரிந்தால் .. நீங்களே ஏதாவது போட்டு நிரப்பிக்கோங்க .. கொஞ்சம் சுய புராணம் கூட இருக்கும் ... அதையும் சமாளிச்சுக்கோங்க !
சனவரி கடைசி....
அண்ணா பல்கலைக்கழகம் .. சென்னை.. ஹாஸ்டல்ல இருந்து ... வீட்டுக்கு அழைப்பு..
”அப்பா..”
”லீவு போட்டாச்சா ”
”இல்லேப்பா”
”ஏன் ?”
”சப்மிசன் இருக்கு... என்னால வர முடியாது”
”ஓ...! ”திடீரென ஒரு இறுக்கமான சூழல் ..
பிப்ரவர் 3 ல் அவளுக்குப் பிறந்த நாள் .. அது திங்களில் வருகிறது .. அதனால் சனியும் , திங்களும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவள தூத்துக்குடி வந்து , பிறந்த நாள் கொண்டாடிவிட்டு அன்றிரவு கிளம்பிச் செல்வதாகத் திட்டம் ..
சரீன்னுதானே சொல்லி இருந்தாள் .. ஆனாலும் அவளது சரி எனக்கு சந்தேகமாத்தான் இருந்த்து . லீவு என்னும் சொல்லே அவளது பள்ளி வாழ்க்கையில் இல்லை ..
14
வரவில்லை என்று சொன்னது வருத்தமாய் இருந்தாலும் , கூடவே ஒரு மகிழ்ச்சி ... கல்லூரி சென்ற பின்னரும் அவளுக்குள் இருக்கும் அந்த ‘பள்ளி மாணவி’ இன்னும் மாறவில்லை .
”அப்போ நாங்க வரட்டுமாடா”
”வேண்டாம்ப்பா .. இந்த வாரம் முழுதும் ரொம்ப வேலை இருக்கு ..”
”உங்ககூட ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது ”
”அடுத்த வாரம் நான் வாரேன் ..இல்லேன்னா நீங்க வாங்க ”
”சரிடா ... ”
”........”
அங்கே மெளனம்
”டே... இருக்கியா ”
”......”
”என்னான்னு சொல்லு ”
”........”
”பாப்பி....? ”( இது சூழல் சரியில்லை எனில் நான் அழைக்கும் பெயர்)
”அப்பு ( இது அவள எனக்கு வைத்த பெயர்) .. ஐ மிஸ் யூ எ லாட் ”
குண்டை மண்டையில் இறக்கிவிட்டு போனை வைத்துவிட்டாள் ...
அவள் கல்லூரியில் சேர்ந்த இந்த எட்டு மாதங்களில் .. எங்களின் வாழ்க்கை முறையும் சேர்ந்தே மாறி போனது .. அவளுக்கு வரை படம் , எழுத்து (டிசைன் / டிராயிங்) எல்லாம் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும் .. அவளே செய்ய வேண்டும் .. நேரத்துக்குச் செய்யவேண்டும் .. இப்படி நிறைய கட்டுப்பாடுகள் உண்டு அவளிடம் .. பாடக் குறிப்புகள் எஸ்.எம்.எஸ்சிலும் , மெயிலிலும் வரும் .. வந்தவுடன் ஆரம்பித்துவிடுவாள் வேலையை .. அறைக்கு வந்தவுடன் ’வீடியோ கால்’ வேலை செய்ய ஆரம்பித்துவிடும் ... அங்கே அறையின் சுழலை அது காட்டும் .. இங்கே வீட்டுச் சூழலை ( அம்மா போனோடுதான் வீட்டுக்குள் அலைய வேண்டும் .. இங்கு நடப்பதெல்லாம் அவள் பார்க்க வேண்டும் ) .
இரவு 12க்கும் மேல் எனக்கான நேரம்
”அப்பா”
”சொல்டா ’’
”2 பாயிண்ட் பெர்ஸ்பெக்டிவ், 3 பாயிண்ட் பெர்ஸ்பெக்டிவுக்கு மாடல் அனுப்பு .. ஒரு 10 நிமிசத்துக்குள வேணும் ”
2 மணிக்கு
”சிமபாலிசம்ன்னா என்ன , அதுல 4 வகையான பில்டிங் மாடல் – சிறு குறிப்போட வேணும் ...அப்படியே ... அடையாறு பாலம் நீளம் வேணும் , செண்டல் ஸ்டேசன் அளவு தெரியணும் ....”
இப்படியே பொழுது ஆகிப் போகும் ... அவளும் இரவே 12மணிக்குக் குளித்துவிட்டு, படம் வரைந்து விட்டு காலையில் முகம் கழுவி வகுப்புக்கு செல்லுவதுபோல ஒரு நிரலை உருவாக்கி விட்டாள் ..
”எம்மா .. மத்த பசங்கள்ளாம் இப்படியா இருக்காங்க .. எல்லாரும் வெளியே போய்ட்டு வாராங்களேம்மா ..”
(பசங்க , புள்ளைங்கன்னு பாதிப் பேருக்கும் மேலே எனக்கும் , சாந்திக்கும் நண்பர்களாகி விட்டார்கள் J.. தினமும் எல்லாரிடமும் ஒரு முறையாவது பேசிவிடுவது சாந்தியின் வழக்கமாகி விட்ட்து .. அதனால் அவர்களின் நடைமுறைகள் அனைத்தும் இங்கே தெரிந்துவிடும் J)
“இல்லைப்பா ”
”அப்போ நீ மட்டும் ஏன் ?”
”நாங்க 4 பேரு இருக்கோம் .. நாங்க முடிச்சப்புறமா மத்தவங்க கேட்டுப் போட்டுக்குவாங்க ... அவங்களுக்கு வேலை கம்மி” என்று சிரிப்பாள்
மிக்க் கடினமான படிப்பில் சேர்த்து விட்டு விட்டோமோ!!! என்னும் கவலையில் அல்லது இவள் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்கிறாளா?? என்னும் குழப்பத்தில் என் இரவுத் தூக்கம் மீதியும் கலைந்து போகும் ..
’படிப்புக்குத்தானே புள்ள முக்கியத்துவம் தாரா... பின்னே என்னான்னேன்’ன்னு என்னையே சமாதானம் செய்து கொள்வேன் ..
அப்படியே இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன ..
17ம் தேதி ...போன்
”அப்பா”
”சொல்டா ... ”
”உங்க பிறந்த நாளுக்கு இங்கே வந்திருங்க ..”
”எங்க ”
”சென்னைக்கு ”
”எதுக்கு”
”என்னால தூத்துக்குடி வரமுடியாது ... இது சார்ட் செமெஸ்ட்டராம் ..பாடம் / சப்மிசன் அதிகம்... முகம் கழுவக் கூட நேரமில்லப்பா”
”பாப்பா.... எனக்கு இங்கே நெறையா வேலை இருக்குடா ... கோயில்ல பூஜை.. வீட்டுக்கு ஆள் வருவாங்க அப்புறமா நாங்......”
”அதெல்லாம் முடியாது .. நீங்க வாறீங்க ....பசங்க கிட்டேயும் சொல்லீட்டேன் உங்கெ ரெண்டு பேருக்கும் ஒரே நாள்லதான் சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க ... அதனால இங்கே காலேஜ்லதான் உங்க பிறந்த் நாள் கொண்டாட்டம் .. ”
அதுவந்து.....”
பாக்கணும் போல இருக்குப்பா.. ரைட்டா ?”
”ரைட்டு .......!”
அவள் ரைட்டா என்று கேட்டுவிட்டால் ..இதுவரையிலும் ரைட்டு என்று சொல்லியே பழகிய வாய் அன்றும் அவ்வாறே.....
அவ்வ்வ்வ்வ்வ்.. இப்போ என்னா செய்ய ..யாருக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமுன்னு தெரியலியே ... சரி .. சமாளிக்க வேண்டியது தான் .. எல்லா அலுவலகப் ப்ளானும் கேன்சல் .. 21ம் தேதிக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டாச்சு ..
..தொடரும்
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 
ps.jpg?part=0.4&view=1)
ps.jpg?part=0.1&view=1)
ps.jpg?part=0.3&view=1)
ps.jpg?part=0.3&view=1)
ps.jpg?part=0.10&view=1)
ps.jpg?part=0.5&view=1)
ps.jpg?part=0.4&view=1)
ps.jpg?part=0.9&view=1)

ps.jpg?part=0.7&view=1)
ps.jpg?part=0.6&view=1)
ps.jpg?part=0.2&view=1)
ps.jpg?part=0.1&view=1)