திருவள்ளுவரின் இயற்பெயர்

3,051 views
Skip to first unread message

Oru Arizonan

unread,
Oct 5, 2015, 1:30:49 AM10/5/15
to mintamil, vallamai
"வல்லுவந்தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று தமிழ்நாட்டுக்கே பெருமைசெர்த்தவர் திருவள்ளுவர்.  அவருடைய திருக்குறளைத்தான் எத்தனை உலகமொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்!  தமிழ்மறை என்று அவரின் திருக்குறள் போற்றப்படுகிறது.

மேலும், முப்பாநூல், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, பொதுமறை என்று உயர்த்திப் பேசப்படுகிறது.

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி
குறுகத் தரித்த குறள்."

என்று ஔவையும் திருவள்ளுவமாலையில் குறளின் பொருட்செறிவுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறாள்.  

பொய்யாமொழிப்புலவர், செந்நாப்போதார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், தேவர், நாயனார் என்று பலவிதமான பெயர்களால் திருவள்ளுவர் அழைக்கப்படுகிறார்.

அப்படிப்பட்ட சிறந்த ஒரு மனிதரை.சைவர்கள், சமணர்கள், கிறித்தவர்கள், என் புத்தசமயத்தினரும் உரிமை கொண்டாடுவதிலிருந்தே அவரது மேன்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்காநிற்கிறது.

இவ்வளவுதூரம் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியும், திருவள்ளுவரின் இயற்பெயர் என்று தெரியவில்லை. அவரது மனைவியின் பெயர் வாசுகி என்பதை அனைவரும் அறிவோம்.  அப்படியிருக்க அவரின்பெயர்மட்டும் ஏன் இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது?

எனவே, அவரது இயற்பெயர் எதுவாக இருக்கும் என்று யாருக்காவது கருத்து இருக்கிறதா?

ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Oct 5, 2015, 1:32:39 AM10/5/15
to mintamil, vallamai
முதல்வரி "வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து" என்றிருக்கவேண்டும்.  தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.

Banukumar Rajendran

unread,
Oct 5, 2015, 1:57:27 AM10/5/15
to vallamai, mintamil
2015-10-05 11:00 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
"வல்லுவந்தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று தமிழ்நாட்டுக்கே பெருமைசெர்த்தவர் திருவள்ளுவர்.  அவருடைய திருக்குறளைத்தான் எத்தனை உலகமொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்!  தமிழ்மறை என்று அவரின் திருக்குறள் போற்றப்படுகிறது.

மேலும், முப்பாநூல், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, பொதுமறை என்று உயர்த்திப் பேசப்படுகிறது.

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி
குறுகத் தரித்த குறள்."

என்று ஔவையும் திருவள்ளுவமாலையில் குறளின் பொருட்செறிவுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறாள்.  

பொய்யாமொழிப்புலவர், செந்நாப்போதார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், தேவர், நாயனார் என்று பலவிதமான பெயர்களால் திருவள்ளுவர் அழைக்கப்படுகிறார்.

அப்படிப்பட்ட சிறந்த ஒரு மனிதரை.சைவர்கள், சமணர்கள், கிறித்தவர்கள், என் புத்தசமயத்தினரும் உரிமை கொண்டாடுவதிலிருந்தே அவரது மேன்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்காநிற்கிறது.

இவ்வளவுதூரம் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியும், திருவள்ளுவரின் இயற்பெயர் என்று தெரியவில்லை. அவரது மனைவியின் பெயர் வாசுகி என்பதை அனைவரும் அறிவோம்.  

அவரின் துணைவியார் வாசுகி என்பது, பின்னாளில் கற்பிக்கப்பட்ட கதாப்பாத்திரம்!


இரா.பா






 
அப்படியிருக்க அவரின்பெயர்மட்டும் ஏன் இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது?

எனவே, அவரது இயற்பெயர் எதுவாக இருக்கும் என்று யாருக்காவது கருத்து இருக்கிறதா?
ஒரு அரிசோனன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 5, 2015, 2:12:52 AM10/5/15
to vallamai


2015-10-04 22:57 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

//அவரின் துணைவியார் வாசுகி என்பது, பின்னாளில் கற்பிக்கப்பட்ட கதாப்பாத்திரம்!//

இதற்குச் சான்று தருகிறீர்களா!

ஒரு அரிசோனன்

Banukumar Rajendran

unread,
Oct 5, 2015, 2:20:42 AM10/5/15
to vallamai, மின்தமிழ்
2015-10-05 11:42 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2015-10-04 22:57 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

//அவரின் துணைவியார் வாசுகி என்பது, பின்னாளில் கற்பிக்கப்பட்ட கதாப்பாத்திரம்!//

இதற்குச் சான்று தருகிறீர்களா!


:-))

அப்படியில்லாததற்குச் சான்றுத் தர தேவையில்லை!

அவரின் துணைவியாரின் பெயர் வாசுகி என்பதற்குத்தான் தாங்கள் சான்றுத் தரவேண்டும். :-)

(அச்சான்றுக் குறைந்தபட்சம் குறளாசிரியர்க் காலத்தவையாகயிருக்க வேண்டும்!)

இரா.பா





 

ஒரு அரிசோனன்

--

Oru Arizonan

unread,
Oct 6, 2015, 4:45:15 PM10/6/15
to vallamai, mintamil

2015-10-06 12:11 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:

//வாசுகி ​என்பவர் வள்ளுவரின் துணைவியார் என்பது எந்த நூலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது என அறிய எனக்கும் ஆவல். 

சுபா//


//(அச்சான்றுக் குறைந்தபட்சம் குறளாசிரியர்க் காலத்தவையாகயிருக்க வேண்டும்!)

இரா.பா//

  1. ஒரு அரிசோனன் பள்ளி இறுதி ஆண்டுவரைதான் தமிழ் கற்றவன். 
  2. அவன் சமணம் அறிந்தவனே, தமிழ் முனைவனோ, அறிஞனோ அல்லன்.
  3. இவ்விழையில் அவன் அறிய முயன்றது பொய்யாமொழிப் புலவரின் இயற்பெயர் என்ன என்பதே.
  4. இதுவரை ஒருவரும் அதைப்பற்றிக் கருத்துப் பதியவேயில்லை.
  5. வாசுகி அவரது மனைவி என்று குறித்தது அவன் பள்ளியில் பயிலும்போது, மதிப்பிற்குரிய தமிழ்ப்பேரறிஞர் தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்கள் கற்பித்ததே!  மனைவியார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, செந்நாப்போதாரின் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லையே என்று வியந்தேழுதியதேயன்றி வேறொன்றுமில்லை.
  6. அதைக் 'கற்பிதம்' என்கிறார் சமணப்பெரியவரான நண்பர் பானுகுமார். அதற்குச் சான்றும் கேட்கிறார்.
  7. இவர் தமிழண்ணல் அவர்கள் சொல்லையே 'கற்பிதம்' என்னும்போது, அவரைவிடச் சிறந்த தமிழறிஞரை நானறியேன் என்னும்போது, எங்கு தேடுவேன்?.  அதையும் நண்பர் பானுகுமார் அவர்களே செய்யலாம்.  எனக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை.  அவர் பள்ளியில் பலவாண்டுகளுக்குமுன்னர் கற்பித்ததற்கு சான்று கேட்டாலும் என்னால் கொடுக்கவியலாது.
  8. அதையே தமிழ் முனைவரான மதிப்பிற்குரிய சுபா அவர்களும் வேறுவிதமாகக் கேட்கிறார்.
  9. நான் என்ன முனைவருக்கு முனைவரா, அல்லது தொல்பொருள் ஆராய்ச்சியாளனா?
  10. இல்லவே இல்லை.
  11. எனவே, உங்கள் இருவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க என்னால் இயலாது.  You both are barking up the wrong tree.
  12. அது இந்த இழையின் நோக்கமும் இல்லை.
  13. வள்ளுவரின் இயற்பெயர் என்ன?  
  14. அறிந்த பெருமக்கள் சொல்லலாம்.  இன்னவாக இருக்கலாம் என்று விவாதிக்கலாம்.
  15. அறியவியலாத ஒன்று அது என்றால், அது ஏன் என்றும் வாதிடலாம்.
  16. அதுதான் இவ்விழையின் நோக்கம்.  
  17. அவருக்கு மனைவி இல்லையென்றோ, அது கற்பிதம் என்றோ நிறுவவேண்டுமென்றால், அதற்குத் தனி இழை துவங்கலாமே!
  18. அறியாத ஒரு அரிசோனனிடம் சான்று கேட்பது, கற்றறிந்த பெரியோரை விட்டுவிட்டு, அறியாச் சிறுவனிடம் அறிவுரை கேட்பதைப் போன்றவோன்றேயாகும்!

பணிவன்புடன்,

செல்வன்

unread,
Oct 6, 2015, 6:08:36 PM10/6/15
to vallamai, mintamil
வள்ளுவர் என்ற பெயரே முதன் முதலில் வள்ளுவர் வாழ்ந்து ஆயிரமாண்டுகள் கழித்தே திருவள்ளுவமாலையில் பயன்பாட்டுக்கு வருகிறது.

வாசுகியின் பெயர் 19 அல்லது 20ம் நூற்றாண்டில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். கன்யாகுமரியில் வள்ளுவரின் குடிகள் வள்ளுவர் ஒரு சிறு நாட்டை ஆண்டதாகவும் அவரது மனைவியாக வள்ளுவத்தி என்பவரையும் வள்ளுவசாதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். வள்ளுவத்தி மலை என்ற மலையும் அங்கே உள்ளது. 105 வயது பாட்டி ஒருவர் தான் சிறுவயதாக இருக்கையிலேயே வள்ளுவத்தி தான் வள்ளுவரின் மனைவி என ஊரார் கூறிவந்ததை கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் வள்ளுவத்தி என்பது கூட அவரது மனைவியின் பெயராக இருக்கும் வாய்ப்பில்லை. பிறக்கையிலேயே கணவன் பெயரை சூட்டிகொண்டா பெண்கள் பிறப்பார்கள்?

தமிழ் புலவர் பலரது பெயரும் நமக்கு தெரியாது. செம்புலபெயல்நீரார், தொல்காப்பியர் என நூல் பெயரிலிலும், பாடல் பெயரிலும் புலவர்களை அழைத்து வருகிறோம். நம்மிடம் இருப்பது தொன்மங்களே ஒழிய வரலாறல்ல. ஆனால் அன்னியர் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் நம் தொன்மங்கள் முறையாக பதிவாகவில்லை. நாளந்தா, காஞ்சி பல்கலைகழங்களில் இந்த தகவ்ல்கள் பதிவாகி இருந்திருக்கலாம். அதை எல்லாம் இழந்துவிட்டோம்

Reply all
Reply to author
Forward
0 new messages