[வல்லமை] ????? கவிதைகள் கண்டுபிடிங்க

54 views
Skip to first unread message

Madhu mitha

unread,
May 21, 2013, 9:14:59 AM5/21/13
to vall...@googlegroups.com
1. கடவுள் என்று சொன்னாலே
கலிபுருஷன் ஒரு நமட்டு சிரிப்பு
சிரிக்கிறானே ! ஏன் ?
இந்தக் குப்பைக்கூளங்களில்
வஜ்ரப்படை எங்கோ விழுந்து கிடக்கிறது.
பொறுமையாகத் தேட வேண்டும்.
அழிவிற்கு ஏங்கி
கால நதிக்கரையில்
ஊடலில் சிணுங்கி நிற்கும்
உலகை சினையாக்க
ருத்ரன் தன்னை சிங்காரித்துக்கொள்கிறான்
அழிவே அமுதாகி அதையும்
கவர்ந்துண்ணும் உலகை
முதல் திரை வளைத்துப் பரிமாறித் துடைக்க

*

2.உலகம் அழியத் தொடங்கி விட்டது
உலகைத் திருத்தாதீர்!
ஈர நெஞ்சைப் பிழியாதீர்
தீயணைந்தால்
உங்கள் ஆன்மா சிதையேறும்
நம்பிக்கையால் பொத்தி அணைக்காதீர்
உங்கள் நெஞ்சு கொதிக்கும்
அழியத் தொடங்கி விட்டது
உலகம். திருத்தாதீர்!

*

3. ஆரம்பப் பள்ளி நினைவுகள்
ஆட்டுக்காலில் அ ஆவன்னாவை
போட்டு ஆட்டியவாறே
மதில் மேல் குருவிகள்
ஆறடிச் சந்தில்
பாடம் பண்ணி வைத்த காலத்தின்
பக்குவம் சொல்லிய காக்கைகள்
பன்றியின் தணிக்கை உறுமலை
கவனியாதது போல்
காலை கொதித்து பகலாகி
மாலை வடிந்த நிழலில்
படிந்த தூவல்.

இந்தக் கவிதைகள் நம் வல்லமை உறுப்பினர் ஒருவரின் கவிதைகளே. கண்டுபிடிங்க கண்டுபிடிங்க

வாழ்த்துகள் கவி ஞானியே! கவிப்பேரொளியே!! கவிப்பிரபஞ்சமே!!!

நான் எழுதியதல்ல. டைப்பியது மட்டுமே நான்  :)

shylaja

unread,
May 21, 2013, 9:54:15 AM5/21/13
to vallamai
கண்டுபிடிசசா  பரிசுதரவாவது மீண்டும்  வருவீங்களா மின்னலே?:):)


2013/5/21 Madhu mitha <madhumi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

தேமொழி

unread,
May 21, 2013, 10:19:29 AM5/21/13
to vall...@googlegroups.com
கண்டு பிடிசிட்டேன் மதுமிதா, தணிக்கை  பற்றி கவிதையில் இருக்கே...
அதனால் இது "இ" ஐயா எழுதிய கவிதை...

..... தேமொழி  

Swathi Swamy

unread,
May 31, 2013, 3:31:02 PM5/31/13
to vallamai
:) நம்ம ரங்கனார் ஐயாவோட கவிதங்களாம் ......காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன்.... 

சைலஜா!! ரெடியா ?? :) 


2013/5/21 Madhu mitha <madhumi...@gmail.com>
1. கடவுள் என்று சொன்னாலே

Swathi Swamy

unread,
May 31, 2013, 3:32:14 PM5/31/13
to vallamai
கவிஞரின் முழுப்பெயர் ஶ்ரீரங்கம் மோஹனரங்கனார் ஐயா!! :) 


2013/5/31 Swathi Swamy <mswat...@gmail.com>

shylaja

unread,
Jun 1, 2013, 1:13:08 AM6/1/13
to vallamai
:):):)   Swathi!


2013/6/1 Swathi Swamy <mswat...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 

Swathi Swamy

unread,
Jun 1, 2013, 4:59:10 PM6/1/13
to vallamai



2013/6/1 shylaja <shyl...@gmail.com>
:):):)   Swathi!


என்ன சைலு? :)

 


Mohanarangan V Srirangam

unread,
Jun 1, 2013, 11:21:46 PM6/1/13
to vallamai
கம்ப்யூட்டர் பிரச்சனை தீர்ந்து (ஹா டி அவுட்டு) வந்து பார்க்கும் பொழுது எதேச்சையாக கேள்விக்குறியுடன் கவிதை பற்றிய இழை மதுமிதா போட்டிருந்தார்கள். என்னவா இருக்கும் என்று திறந்தால் எனக்கு ஓர் இனிய ஷாக். 

தேவலை. நம் எழுத்துகளையும் கவனத்துடன் படித்து ரசித்து அதை வெளிப்படையாக இழைத் தலைப்பாக்கி ஒருவர் போடுகிறார் என்றால்,,,, உற்சாகமாய் இருக்கிறது எழுத. 

எழுத்தின் கூலி என்பது இதுதானே..! 

2002ல் வந்த என் கவிதைத் தொகுப்பு. அந்த முதல் தொகுப்பு வந்ததும் அடேயப்பா என்ன பல்ஸ் ரேட்! காதலியைச் சந்திப்பதில் கூட அவ்வளவு அடித்துக்கொள்ளாது இதயம் போலும்! 

நீங்க என்னதான் சொல்லுங்க உலகத்திலேயே மிக இனிமையான வார்த்தைகள் என்றால் அது நம்மைப் பற்றிப் பிறர் பாராட்டும் வார்த்தைகள்தாம். அதைவிட இனிமை அவர்கள் தாமாகப் பாராட்டும் வார்த்தைகள். நன்றி மதுமிதா. 

ஷைலஜா, ஸ்வாதி ! ஸ்பெஷல் நன்றிகள். 

***


2013/6/1 Swathi Swamy <mswat...@gmail.com>

shylaja

unread,
Jun 2, 2013, 12:38:01 AM6/2/13
to vallamai
ஆரம்பப் பள்ளி நினைவுகள்
ஆட்டுக்காலில் அ ஆவன்னாவை
போட்டு ஆட்டியவாறே
மதில் மேல் குருவிகள்
ஆறடிச் சந்தில்
பாடம் பண்ணி வைத்த காலத்தின்
 
>>>>>மதில்மேல் குருவிகள்  ஆறடிச்சந்து   ..இந்த வரிகள் போதும் எனக்கு உங்களை அடையாளம் காட்ட  ஸ்ரீரங்கவீதியில் வசித்த வாசம்!!:)
 
பொத்தி  வச்சாலும் மல்லிகை மொட்டு வாசம்  வீசத்தான் செய்யும்  கவிஞரே!!! 
சுவாதிக்குத்தெரிந்தது என்பதில்  என் மகிழ்ச்சியை  ஸ்மைலியாக  தெரிவித்தேன்! 


2013/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages