தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
முனைவர் கி. லோகநாதன், 29-4-14
இடுகை 1: அறிமுகம்
உலகில் மிகச் சிறந்த நூலிய அறிவியல் சான்ற ஓர் அற்புதமான மெய்யறிவுக் கோட்பாட்டினை தமிழர்கள் சைவ சித்தாந்தம் என்ற பெயரில் வழங்கினாலும் அதன் பூர்விக்கத்தை எவ்வாறு அது வளர்ந்தது என்ற வரலாற்றை இன்னும் முறையாக யாரும் எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் தமிழர்களின் மெய்யறிவுச் சிந்தனை வடபுலத்திலிருந்து வந்தோரின் கொடையே, தமிழனுக்கு சுயமாக மெய்யறிவு சிந்திக்கத் தெரியாது, அவனுக்கு ஓர் மெய்ஞான பாரம்பரியம் இல்லை என்றே கூறி தமிழர்களின் ஆழமான அறிவியல் சான்ற சிந்தனைத் திறனை அறியாதும் பிறர் அறியவிடாதும் வீணான பல கற்பனைக் கதைகளை கூறி இருட்டடிப்பு செய்துள்ளதாகபடுகின்றது. இதுவும் ஓர் பண்பாட்டு ஆக்கிரமிப்புத் தான். தமிழனை மெய்யறிவு சிந்தனையில் அடிமைப்படுத்தி அவனுக்கு ஓர் சுயம் இல்லை என்று ஒர் வரலாற்றுப் பொய்யை நிறுத்துவதாகும்
சைவ சித்தாந்த சந்தான ஆச்சாரியர்களே இதற்கு பொறுப்பும் என்றும் இன்றளவு ஓர் கற்பனைக் கதையைக் கூறி சைவ சித்தாந்தத்தின் உண்மையான வரலாற்றை அறியாதும் அதன் சிறப்பினை உணராதும் ஆக்கிவிட்டனர்.
வர்லாற்றைக் கூறபுகும் போது அகச்சந்தானம் புறச்சந்தானும் என இரண்டு சந்தானங்களைக் கூறுவர். இதில் அகச் சந்தானம் என்பதை உமாபதி இவ்வாறு கூறுவர்:
சிவப்பிரகாசம்
5.
தேவர்பிரான் வளர்கயிலை காவல் பூண்ட
திருநந்தி அவர்கணத்தோர் செல்வர் பாரில்
பாவிய சத்திய ஞான தரிசினிகள் அடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள்பதியம் வெண்னெய்
மேவிய சீர் மெய்கண்ட திறலான் மாறா
விரவுபுகழ் அருணந்தி விரலார் செல்வத்
தாவில் அருள் மறைஞான சம்பந்தர் இவர் இச்
சந்தானத்து எமை ஆளும் தன்மையோரே
இங்கு புறச் சந்தானம் மெய்கண்டார் அருணந்தி கடந்தை மறைஞான சம்பந்தர் என்று கூறும் உமாபதி, அகச் சந்தானமாக கயிலையில் இருக்கும் நந்தி கணத்தைச் சேர்ந்த சத்திய ஞான தரிசினிகள் அவரது அடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் என்றும் குறிப்பிடுகின்றார்.
யார் இந்த அகச் சந்தானம் என்று புரியவில்லை, ஏதோவோர் புராணக் கதையாகவே இது படுகின்றது. இக்கதை சிவஞானபோதம் எழுவதற்கு முன்பு விளங்கிய திருவுந்தியார் திருகளிற்றுபடியார் போன்ற நூற்களை எழுதிய திரு உய்யவந்த தேவ நாயனார், அவரது மாணவர் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் ஆகியோரை குறிப்பிடவில்லை,
இன்னும் முக்கியமாக மெய்கண்டாரின் சிவஞானபோதம் தொல்காப்பியக் காண்டிக உரை உள்ளதையும் திருக்குறளின் வளர்ச்சியாகவே திருகளிற்றுபடியார் சிவஞான போதம் போன்ற மெய்ஞானப் பனுவல்கள் எழுந்துள்ளன என்பதும் சான்றுகளோடும் வரலாற்று உணர்வோடும் எழுதப்படாது போக, தமிழர்களின் சித்தாந்தச் சிந்தனையைப் பற்றி பல தவறான கருத்துக்கள் பரவியுள்ளன.
அதில் ஒன்றே தமிழர்களின் சைவ சித்தாந்தம் காஸ்மீர் சைவத்திற்கு கடன்பட்ட ஒன்று என்று பலர் கூறும் பெரும் பிழையாகும். மேலும் இந்த வரலாற்றை நன்றாக உணராத காரணத்தால் சித்தாந்த மரபை ஏதோவோர் தரிசனம்--- சாங்கீயம் நையாயிகம் வேதாந்தம் போன்ற ஒன்று என்று பிழையாக உனர்ந்திருப்பது ஆகும்.
சைவ சித்தாந்தம் சமய வாழ்க்கையை சமயாதீத வாழ்கையாக வடித்திருப்பது மாத்திரமல்ல, அதனை நூலிய அறிவியல் சான்ற ஒன்றாக வடித்திருப்பதும் உண்மையனதாக இருக்க, இது வேறு யாரும் சாதித்திதிராத ஓர் அற்புதம் என, அதனை உணர்ந்து நாம் நாம் பெருமைபட்டுள்ள் வேண்டும்
பெருமைப்பட வேண்டிய இடத்தில் பெருமை படுவதில் தவறில்லை.
இந்த அழகிய வரலாற்றை ஓரளவு விளக்கவே இந்த இழை. பலச் சான்றுகளோடு இது சுருக்கமாக நிறுவப்படும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 2
தமிழர்களின் மெய்யறிவு விசாரணை எத்தன்மைத்து? என்ற கேள்வியை எழுப்பினால், அறிந்தவர்கள் உடன் சொல்லக்கூடிய ஒன்று ‘மெய் நெறித்து” அதாவது மெய்யறிவினைத் தேடல் என்பதாகும்.
ஏன் இப்படி எனில் மெய்பொருள் கண்டோரே மீண்டும் பிறவாமை எனும் வீடு பேற்றினை அடைவர், பிறர் அடைய மாட்டார் என்பதே. இவ்வாறு மெய்யறிவினைத் தேடி வாழ்வதே வாழ்க்கை என வாழ்க்கைக்கு விளக்கம் தந்து சமய வாழ்க்கையையும் அதன்படி வளர்த்துள்ளதால் உலகில் வேறு எந்த பண்பாட்டிற்கும் இல்லாது சிறப்பு தமிழ் மெய்யறிவுச் சிந்தனை பாரம்பரியத்திற்கு உண்டு. நாம் தான் இதனை துணிந்து சொல்லத் தயங்குகின்றோம்
இது நான் ஏற்கனவே பன்முறை சுட்டியுள்ளதுபோல நமக்கு சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே வரும் ஓர் பண்பாட்டுக் கூறாகும்
சூருபாக்கு எனும் சுமேருத் தமிழ் அறிவர் தமது ‘நெறி” அதாவது ‘நந்நெறி’ எனும் நூலில்( கி,மு 3000) இவ்வாறு கூறியுள்ளளர்:
நிகழ்.நம் கல்.கல்.இன் நிகவே மெய்.கல்.கல்
நம்மைச் சூழ்ந்து நடப்பவற்றைக் கற்றால் மிகவே மெய்யறிவு கற்றலாகும் என்கின்றார்
இந்த அற்புதமான வரி நமக்கு பண்டே தொல்தமிழர்கள் உலகினை ஆய்ந்து மெய்யுணர்வுத் தேடல் அதனை வளர்த்து வாழ்கையின் நோக்கை வாழ்கையின் பொருளை அறிதல் அதற்குத் தக வாழ்தல் என்பதாக கொண்டிருந்தனர். மேலும் இதே நூலில் வாழ்க்கைஅயை ஓர் பெரும் நதிக்கு ஒப்பிட்டு அதன் கரை சேர்தல் வேண்டும் என்றும் கூறுகின்றார், வியப்பென்ன வென்றால் இதே உவமை திருக்குறளிலும் வருகின்றது.
இடையே இரண்டாம் சங்க நூற்கள் எல்லாம் தொலைந்து போக பெரும் இடப்பெயர்ச்சி என்றெல்லாம் நடந்த போத்லும், தொல்காப்பியத்தில் திருக்குறளில் சிவஞானபோதம் போன்ற மெய்கண்ட சாத்திரங்களில் இதன் தொடர்ச்சியைக் காண்கின்றோம்
இன்றளவு இது நம்மோடு இருந்தாலும் இந்த மெய்நெறிக்குப் புறம்பான வேதாந்த நெறியின் ஆதிக்கத்தால் அது வலுவிழந்து கிடக்கின்றது. சைவ ஆதீனங்களும் சைவத்தை சடங்கு பூர்வமாக வளர்த்தாலும் சித்தாந்தச் சிந்தனை வலுவாக உள்ள மெய்ய்றிவு பாரம்பரியத்தை வளர்க்காது விட்டனர் என்றே தோன்றுகின்றது.
சைவ சித்தாந்தம் ஓர் அறிவியல் சான்ற போக்கு என்பதால் அது சமயாதீத சாதீயாதீத நெறியாக உள்ளது. பண்டையோர் அவ்வாறே சைவத்தை வளர்த்துச் சென்றுள்ளனர். ஆனால் இன்று சைவ ஆதீனங்களும் பிற சைவ சித்தாந்தப் பேராசிரியர்களும் புலவர்களும் இந்த கூறுகளை மறந்துவிட்டதாகவேத் தெரிகின்றது.
இல்லையேல் எவ்வாறு தமிழ் நாட்டில் சாதிவெறி இந்த அளவிற்கு வளர்ந்திருக்கும் என்று தெரியவில்லை. ‘ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்” என்ற திருமூலரின் வாக்கெல்லாம் அர்த்தமற்ற சொற்களாகி விட்டன. சைவ சமயத்தில் சமயாதீதம் இருக்கின்றது சாதியாதீதம் இருக்கின்றது என்று யாரும் துணிந்து சொல்வதில்லை
அது சரி
வேதங்களில் உபநிடங்களில் இல்லாததாக மற்றும் புத்த சமண நூற்களில் இல்லாத இந்த ‘மெய் நெறி” (பிறகாலத்தில் திருநெறி சன்மார்க்கம்) தமிழ் இலக்கியங்களில் எங்கே இருக்கின்றது?
தொல்காப்பியத்தில் இருக்கின்றது மேலும் அதன் தாக்கமாக திருக்குறளில் ‘மெய்யுணர்தல்’ எனும் ஓர் நல்ல அதிகாரமாகவே வளர்ந்துள்ளது, இதுவே பிற்காலத்தில் திருமந்திரம் திருகளிற்றுப்படியார் சிவஞான போதம் போன்ற நூற்களிலும் அனைவருங் காணும்படியாக இருக்கின்றது.
இதனை அடுத்து விளக்குவம்
தொடரும்
உலகன்
அன்புள்ள முனைவர் உலகன் அவர்களே,சைவ சித்தாந்தத்தின் வரலாறு சரியாகவும் முழுமையாகவும் எழுதப்படவில்லை என்பது உண்மையே. எல்லாவற்றுக்கும் மூலம் வேதம் என்று கொள்ளும் எண்ணத்தால் உண்மை மறைக்கப்பட்டது.சிவஞான போதத்துக்கு சில நூறு ஆண்டுகளின் முன் வந்த ஞானாமிர்தம் ஒரு சிறந்த சித்தாந்த நூல். இது போல் வேறு நூல்களும் இருக்கலாம். இந்நூல்கள் வெளிவருவதற்கு முன்னரே அத்தகைய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இவை குறித்த தேடுதலும் ஆய்வும் தேவையானவை. உங்கள் முயற்சி பயனளிக்கும். எழுதுக!க. கணேசலிங்கம்
From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; vall...@googlegroups.com; "tolkaa...@egroups.com" <tolkaa...@egroups.com>; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>
Sent: Tuesday, 29 April 2014 9:27 PM
Subject: [MEYKANDAR] தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (2)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
நன்றி. முனைவர் உலகன் அவர்களே.
ஞானாமிர்தம் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்பதே அவ்வை துரைசாமி உட்பட்ட பலரின் கருத்து. ஆனால் அதன் நடை சங்க நூல் நடை போல் கடினமாக இருக்கிறது. .இதனால் இது காலத்தால் மிக முற்பட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் இது போன்றது எனினும் அதன் நடை அவ்வளவு கடினமானதில்லை.
இந்நூலின் அதிகாரங்கள் சம்மிய ஞானம்,, சம்மிய தரிசனம் என்றவாறான தலைப்புக்களுடன் தொடங்குகின்றன. 'சம்மிய' என்ற சொல்லின் பொருள் என்ன? இது பாளி மொழியைச் சேர்ந்ததா? இது குறித்த தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
அன்புடன்
க. கணேசலிங்கம்
From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: "meyk...@yahoogroups.com" <MEYK...@yahoogroups.com>; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; "tolkaa...@egroups.com" <tolkaa...@egroups.com>; vall...@googlegroups.com
Sent: Friday, 2 May 2014 5:50 PM
Subject: Re: [MEYKANDAR] தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
--.![]()
__,_._,___
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 3
தொல்காப்பியத்தின் ஓர் பின்னிணைப்பாக வருவதே ‘மரபியல்’ எனும் நூலாகும். இது தனியோர் நூலென்றும் பொருளதிகாரத்தோடு முடியும் உண்மை தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டு அநேகமாக அழிந்துபடாது காக்க, தொல்காப்பியத்தின் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஓர் தனி நூல் என்றே நினைக்கின்றேன்
இங்கு சூத்திரம் என்றால் என்ன, அது ஓர் கருத்தை ஆழமான ஓர் நுட்பத்தை கிளவியாக்க அது எவ்வாறு உண்மையென்று நிறுத்துவது என்பதை விளக்கும் பல சூத்திரங்கள் உண்டு. இங்குதான் ‘காண்டிகை உரை’ என்ற கருத்து எழுந்து ஏரணவியல் என்பதுதான் என்ன என்பதையும் விளக்குகின்றது.
1600
மேற்கிளந்த யாப்பின் உட்பொருளொடு
சில்வகை எழுத்தின் செய்யுட் டாகி
சொல்லுங் காலை உரை அகத்து அடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகித்
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப்
பலவகை யானும் பயன் தெரிபு உடையது
சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்
1601
பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்
கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்
pazippil cuuttiram padda paNbin
karapinRi mudivatu kaaNdikai yaakum
The KaaNdikai type of Logical Demonstration applies to faultless sutras and
serves to estabish what is stated beyond doubts and uncertainties.
Notes:
karappu: confusion , doubts, uncertainties all because of concealment of
meaning. The KandiKai must elucidate in such a way that there is no more this
concealment or hiddeness and hence it serves UNCONCEAL or bring to light
the meaning of the sutras.
1602.
விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்
மேவாங்கு அமைந்த மெய்நெறித்து அதுவே
viddakal vinRi virivodu poruntic
cuddiya cuuttiram mudittaR poruddaa
eetu nadaiyum eduttuk kaaddinum
meevaangku amainta meyneRittu atuvee
For this purpose the Kandikai type of logical demonstration stays strictly with
the intend of the sutra but at the same expounding the TRUTH of the sutra and
for which purpose it brings the Etu(Reasons) and Eduttukkaaddu
(Arguments)
வரலாற்று சிறப்புமிக்க இந்தச் சூத்திரங்களை தமிழ் புலவர்கள் மறந்தே போய்விட்டனர் என்று தெரிகின்றது. இதனால் ஏரணவியலையும் மறந்து நையாயிகத்தின் பிழையான அளவை வாதத்தையே பின்பற்றும் அவல நிலையை தமிழ வரலாற்றில் காண்கின்றோம்
காண்டிகை என்றால் என்ன?
ஒருவன் கண்ட ஆழமான உண்மையை இன்னொருவனும் காணவைத்து அவனும் தன்னோடு உடன்படுமாறு செய்வதே காண்டிகை ஆகும். இதனை ஆங்கிலத்தில் Logical Demonstration , Scientific Verification என்றெல்லாங் கூறலாம்
ஓர் சூத்திரத்தின் வழி ஓர் ஆழமான உண்மையைக் கூற அதனை கரப்பின்றி அதாவது ஐய்ப்பாடும் மறைப்பும் இன்றி மேலும் விட்டகல்வின்றி அதனை உண்மையென நிறுத்துவதே மெய்நெறி வாய்ப்பட்ட ஓர் அறிவின் செயற்பாடே காண்டிகை உரை எழுதுவதாகும்.
இது இன்றளவு உலகளாவிய நிலையைல் தமிழர்கட்கே உரிய ஓர் முறையியலாக இருக்கின்றது, இதுவே திருக்குறளின் மெய்யுணர்தல்லுக்கு அடிப்படை என்பதொடு சிவஞானபோதத்தற்கு மெய்கண்டாரே எழுதிய உரைக்கும் ஆகும். இதன் தோற்றம் சுமேரு காலத்திற்கே இட்டுச் செல்கின்றது. இதன் வரலாற்றை அறிய விரும்புவோர் கீழ் வரும் கட்டுரையைக் படித்து மகிழலாம்
https://sites.google.com/site/tolkaappiyam/eranaviyam
இங்கு நாம் கவனிக்க வேண்டியது.
1
இப்படிப்பட்ட ஏரணவியல் பிறகாலத்தில் அநேகமாக இதன் திரிபாகத் தோன்றிய நையாயிகம் கூறும் அளவை வாதம் அல்ல.இங்கு உண்மைக்கு பிரதியட்சம் அனுமானம் ஆகமம் எனும் அளவைகள யாதும் இல்லை, உண்மைக்கு அளவைகள் யாது இருக்க முடியாது. ஒர் உண்மை தன்னுள்லிருந்து தன்னையே உண்மையென உணர்த்திவிடும், விளக்கொளிபோல். காணாதிருப்பான் காணும்படிச் செய்வதே ஏதுக்கள் எடுதுக்காட்டுகள் தருவதாகும்.
2
காண்டிகையாவது காண வைப்பது ஆகவே விழிகள் திறப்பது, எங்கே தான் கண்டதை பிறனும் காணும் வகையில் ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் தருகின்றானோ அவனே காண்டிகையும் தருகின்றான். உண்மைகட்குத் தான் இவ்வாறு முடியும். கற்பனைகட்கு அல்ல
3,
இது கிரேக்கர்களின் syllogism அல்ல. இந்த syllogism அனுமானம் போன்றது, காண வைக்கும் காண்டிகை அல்ல, மேலும் இன்றளவு ஐரோப்பாவில் தோன்றியுள்ள கணித அளவை ( Mathematical Logic) இயல்பளவை ( Natural Logic ) போன்றவையும் அல்ல.
4
இந்த ஏரணவியலே திருகுறளின் மெய்யுணர்தல் அதிகாரத்திற்கு அடிப்படை குறள்கட்கும், சிவஞானபோதம் காண்டிகை உரைக்கும் அடிப்படை. இதுவே திருக்குறளின் சமயாதீத்தற்கும் அத்னை விடாது போற்றும் சைவ சித்தாந்தத்திற்கும் அடிப்படை. இந்த ஏரணவியல் வேதாந்த மரபிலும் மற்றும் புத்தம் சமணம் போன்ற வடபுலத்து சமயங்களிலும் இல்லை. மேலும் மேற்குலகின் பொறிலிய அறிவியலிலும்( விஞ்ஞானத்திலும்) இல்லை. அதனால் அவை சமயாதீதம் போற்றாத சமயங்களாக இன்றளவுத் திகழ்கின்றன.
எவ்வாறு இவை எல்லாம் என்பதை இன்னும் நுணுக்கமாக வரவிருக்கும் கட்டுரைகளில் காண விருக்கின்றோம்
தொடரும்
உலகன்
What a striking usage of Sumerian word sil, சில்வகை எழுத்தின்.... there I have taken double triple meaning fir word sil as light, soft, chillness, silk, siledai and so on, which find tough to interpret poems, sutra
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
அன்புள்ள உலகன் அவர்களே,தங்கள் கட்டுரை, காண்டிகை, எடுத்துக்காட்டு போன்ற சொற்களுக்கு தற்கரீதியான, தெளிவான விளக்கங்களைத் தருகின்றன. சிவஞான போதத்தில் இச்சொற்களைப் படிக்கும்போது அவற்றின் பொருளை முழுமையாகப் பலரும் புரிந்துகொள்வதில்லை. நானும் சிவஞானபோதம் தமிழ் மரபில் வந்ததென்று உணர்ந்து கொண்டாலும் அதற்கான போதிய சான்றுகளைத் தேடினேன். ஆனால் அறியமுடியவில்லை. இப்பொழுது உங்கள் கட்டுரை மூலம் அறிய நேர்ந்தது பெரு மகிழ்ச்சி தருகிறது. தொல்காப்பியத்தையும் அறிய முடிகிறது. நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.அன்பன்
க. கணேசலிங்கம்
From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; vall...@googlegroups.com; "tolkaa...@egroups.com" <tolkaa...@egroups.com>; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>
Sent: Saturday, 3 May 2014 10:22 PM
Subject: [MEYKANDAR] Re: தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 4
எனக்கு வியப்பாக இருக்கும் ஒன்று சங்கத் தமிழின் பிழிவே திருக்குறள் என்றவோர் உண்மையை நான் கூறப்போக, அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததே யாகும். இதற்குக் காரணம் திருகுறள் புத்த சமண் சமயங்களின் தக்கத்தால் எழுந்து நூல் என்ற பிழையான ஆனால் வலுவாக பதிந்திவிட்ட கருத்ததக இருக்கலாம். புத்த சமண சமயங்களின் தக்கங்கள் இருந்தாலும் அடிப்படையில் திருக்குறள் ஓர் சமயாதீத நூல் ஆகவே புத்த சமண தாக்கத்தால் எழுந்த நூல் அல்ல. இந்த சமயாதீததம் மேலே விரிக்கப்பட்ட தொல்காப்பிய காண்டிகை உரை கருத்தின் ‘மெய்நெறித்து’ என்பதில் அடங்கியுள்ளது.
திருக்குறளின் அடிப்படையே ‘மெய் நெறி” வழி செல்வதே வாழ்க்கை அப்படி சென்றால்தான் மீண்டும் பிறவாமை எய்தி வீடுபேறு மகிழ முடியும் எனும் வாழ்க்கை விளக்கந்தான். இதுவே பின்னாலில் சைவ வைணவ பத்தி எழுச்சிகட்கும் மேலும் திருமூலர் மெய்கண்டார் போன்றோர் வளர்த்த சைவ சித்தாந்தத்திற்கும் அடிப்படையாக அமைந்து வேத வேதாந்த நெறிகட்கு வேறுபட்டதாக மாறுபட்டதாக விளங்குகின்றது.
தொல்காப்பியத்தின் ‘மெய் நெறி” எவ்வாறு திருக்குறளில் விளங்குகின்றது?
பல வகையில், ஆனால் குறிப்பாக ‘மெய்யுணர்தல்’ எனும் அதிகாரமே இந்த மெய் நெறியின் விரிவுதான். அதிலும் குறிப்பாக ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் வரலாற்று சிறப்பு மிக்க கிளவி தோன்றும் கீழ்வரும் குறட்பாக்கள் இதற்குத் தக்க சான்றுகளாக அமைகின்றன.
355
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்: வாழ்க்கையின் கோள் நோக்கு அர்த்தம் என்றெல்லாம் பகரப் படும் பொருள் இறைவனே வெளிப்படுத்தியது, அறிவினை ஆய வருவது உலகினை ஆய வருவது, மறைநூற்கள் விளம்ப வருவது என்றவாறு எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு: அப்பொருளை உடன் மறுப்பது சிந்தியாது ஏளனம் செய்வது சீர்தூக்கிப் பார்க்காது ஒதுக்கி விடுவது என்றெல்லாம் செய்வது அறிவுடையார் செயலல்ல, மாறாக ஆழ்ந்து தக்க முறையில் விசாரித்து அந்த கூற்றில் மெய்ப்பொருள் இருக்குமாயின் அதனை அறிந்து போற்றுவதும் இல்லையெனின் ஒதுக்குவதுமே அறிவுடையார் செயல் என்கின்றார் நம் வள்ளுவர்.
இதேப் பொன்று கிழ் வரும் குறட்பாவும் விளங்குகின்றது:
அதிகாரம் 43: அறிவு உடமை
423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இவ்வாறு எத்தன்மைய பொருளாயினும் யார் கூறினாலும் அப்பொருள் மெய்ப்பொருளா பொய்ப் பொருளா என்று ஆய்ந்தலே அறிவுடமை என்றால், கூறப்படும் விசயத்திற்கு தக்க ஏதுக்கள் உண்டா எடுத்துக்காட்டுகள் உண்டா என்று விராப்பதுதானே குறிக்கப்படுகின்றது?
இது வேத வாக்கு புத்தர் வாக்கு தீர்த்தங்கரர் வாக்கு என்பதின் பொய்யாகாது என்றெல்லாம் கூறுவதாக இங்கு அமைகின்றதா? யார் எதைக் கூறினாலும் எப்படிப்பட்ட விசயமாயினும் தக்க ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் உண்டா காண்டிகை உண்டா என்று விசாரித்துச் செல்வதே வாழ்க்கை--- மெய்நெறியின் வாழ்க்கை என்று திருவள்ளுவர் கூறும் போது அவர் தொல்காப்பியர் வழிதானே செல்கின்றார் என்று பொருள் படும்?
மேலும் இதனை நலமே நாம் பல குறள்களிலும் காண்கின்றோம். அதிலும் குறிப்பாக முதற் குறளில். இங்கு உலகை வைத்தே இறையுண்மை காட்டப்படுகின்றது. இங்கு விளங்குவது தொல்காப்பியர் விரிக்கும் காண்டிகை வழி எழும் மெய்யநெறியே யாகும்.
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகர முதல் எழுத்தெல்லாம்: எல்லா மொழிகட்கும் உறுப்பாக விளங்கும் பொருண்மைத் தாங்கி வரும் எழுத்துக்கள் எல்லாம், இந்த பொருண்மைகளைத் தேற்றும் ஆன்மாவால் மூல ஒலியாகிய நாதசொரூபம் அல்லது ஓங்காரத்திலிருந்து பலவாறு தேற்றப்படுவதுபோல, ஆதிபகவன் முதற்றே உலகு: உயர்திணை என்றும் அஃறிணை என்றும் ஒன்றென்றும் பலவென்றும் பலவாறு பகுத்து வகுத்ததாகக் காணப்படும் இவ்வுலகை இவ்வாறு பகுத்து வகுத்துத் தரும் பல பகவர்களாக பல தெய்வங்கள் இருந்தாலும் இவற்றிற்கெல்லாம் ஆதியாக முழுமுதலாக இருக்கும் ஆதிபகவனையே நிமித்தகாரண முதலாக உடைத்து இவ்வுலகம் என்கின்றார் தான் எவ்வாறு இறையுண்மையை உணர்ந்தேன் என்பதை விளக்கும் வகையில்
இதனையே இவ்வாறு எழுதினால் எவ்வாறு இது காண்டிகையாகி தொல்காப்பிய மெய்நெறித்து ஆகின்றது என்பது தெளிவாகும்.
மேற்கோள்:
ஆதிபகவன் முதற்றே உலகு
ஏது:
உலகு பகுத்தும் வகுத்தும் பலவாக இருப்பதின் அங்கு ஓர் பொருண்மை உண்டென்பதின்
எடுத்துக்காட்டு:
நாத சொரூபமாகிய அகர ஒலி ஆன்மாவின் பொருண்மை சேரவே தான் எழுத்தொலிகள் ஆவது போல, உலகிற்கு பொருண்மை இருப்பதின் ஆதிபகவனாக இறைவன் உண்டென்பதாம்.
இதேப் போன்ற ஏரணவியல் மிகத் தெளிவாக சிவஞானபோதத்தின் முதற் சூத்திரத்தில் இருக்கின்றது. அந்த முதற் சூத்திரமும் இந்த முதற் குறளின் திரிபே என்று முன்பே காட்டியுள்ளோம்.
திருக்குறளின் எல்லா குறட்பாக்களும் இப்படி அல்ல. பெரும்பாலானவை ஏரணங்க்ள் தராத சூத்திரங்கள் போன்று மெய்ப்பொருள் தெரிப்பன. உரை எழுதுவாரே தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுக்கள் தந்து குறட்பா கூறும் மெய்ப்பொருள் யாதென்று விளக்க வேண்டும். ஆயினும் கூறப்படும் அனைத்தும் மெய்ப்பொருளே என்ற கருத்து இழையோடியவாறு முழு நூலிற்கும் செல்வதால், திருக்குறள் முழுவதுமே தொல்காப்பிய ‘மெய் நெறித்தே” யாகும்
இதனை மிகத் தெளிவாக மெய்கண்டாரின் சிவஞான போத்தத்தில் காண்கின்றோம். இந்த தொல்காப்பிய மெய்நெறியே இறந்துபடாது திருக்குறளிற்கும் சிவஞானபோதத்திற்கும் வழிகாட்டியாக நின்றும் சமயாதீதப் போக்கை தமிழ நாகாரீககத்தின் அடிப்படையாகவும் நிறுத்தியுள்ளது.
வடபுலத்திலிருந்து வந்த புத்த சமண சமயங்கள் இதனை வளர்த்ததாகத் தெரியவில்லை. பண்டே தமிழர்களோடு இருந்த வேத வேதாந்த நெறியும் இந்த மெய்நெறியை வளர்க்கவில்லை. இன்று உலகமே பொய் எனும் வேதாந்த மார்க்கமே பிராமணர்களின் பிரச்சார பலத்தால் வலுபெற்றிருக்க, ஏரணவியல் சான்ற மெய்நெறியாகிய திருநெறி பின் தள்ளப்பட்டு மக்களிடையே ஆதிக்கம் இழந்து கிடக்கின்றது. சம்ய வாழ்க்கை என்றால் ஆழ சிந்திக்க வேண்டிய வாழ்க்கை அல்ல, பஜனைப் பாடி மயங்குவது, பல ஆடம்பர பூசைகள் செய்து மயங்குவது என்றவாறு ஓர் மயக்க வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.
தொடரும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 5
மெய்கண்டாரின் மெய்ந் நெறி
தொல்காப்பிய மெய்ந்நெறி எவ்வாறு புத்த சமண வேத வேதாந்த தாக்கங்களையும் மீறி இறந்துபடாது தமிழச் சிந்தையில் இன்றளவு நலமே வாழ்வதற்குக் காரணம் இந்த அற்புதமான மெய்கண்டாரின் சிவஞான போதம் தான். உலகம் மித்தை கற்பிதம் என்றெல்லாம் கூறி மாயா வாதம் வளர்த்து உலகியல் ஆய்வையே முடக்கிய ஆதி சங்கரரை உலகமே அறியும் வகையில் பிராமணர்களின் பிரச்சாரம் அமைந்துவிட்டது. ஆனால் சமய வாழ்க்கையையே ஓர் அறிவியல் துறையாக்கி அது மெய் நெறித்து என்று உணர்த்தியருளிய மெய்கண்டாரை இந்த உலகம் மாத்திரம் அல்ல, தமிழர்களும் அறியாது இருக்கின்றனர். சைவ ஆதீனங்களும் இதனைப் பற்றி யாதும் செய்யாது நலமே தூங்குகின்றன.
மெய்கண்டார்: ஏன் இப்பெயர்?
மெய்கண்டாரின் இயற்பெயர் சுவேதவனப் பெருமாள் என்று அறிகின்றேன். இது அந்தப் பெருமாள் அருளால் மெய்கண்டார் அச்சுதக் களப்பாளருக்கு பிறந்ததால் அவர் இட்ட பெயர். ஆனால் சிவஞானபோதம் எழுதிய சிறப்பால் அவருக்கு அமைந்த சிறப்புப் பெயரே ‘மெய்கண்டார்” என்பது. ஆழமான் அழியா சத்திய ஞானங்களை தரிசித்து பிறரும் தரிசிக்க அவர் போதத்தை எழுதியதால் அவர் மெய்கண்டார் ஆனார் என்று தெரிகின்றது. அகச் சந்தானம் என்ற கதையில் கூறப்படும் சத்திய ஞான தரிசினி வேறு யாரும் இல்லாது இவரேயாக இருக்கலாம். மெய்கண்டார் எனும் பெயரின் வடமொழி ஆக்கமே இந்த சத்தியஞான தரிசினியாக இருக்கலாம். தொல்காப்பிய மெஎந்நெரி வழி சென்று அழிவிலுண்மைகளி தரிசித்து கண்டு பிறரும் காண போதம் எழுதிய நம் சுவேதவனப் பெருமாளே மெய்கண்டார் எனும் சத்டியஞனா தரிசினி என்று தெரிகின்றது.
சிவஞானபோதத்தின் பழைய ஓர் சிறப்புப்பாயிரமாக கீழ்வரும் வெண்பா வருகின்றது
எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழ இயல்பாய்
நந்தி உரைத்தருளும் ஞானநூல்--- சிந்தைசெய்து
தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணர
ஏது திருட்டாந்தத்தால் இன்று
இதுவும் உண்மையான வரலாற்றைக் கூறவில்லை, எவ்வாறு மெய்கண்டாரின் சிவஞானபோதம் தொல்காப்பிய காண்டிகையைத் தழுவியும் திருகுறளின் முதற்குறளைத் தழுவியும் எழுந்துள்ளது என்பதை விரிக்காவிட்டாலும் அகத்தே இறைவனே உணர்த்தி யருளிய ஞானத்தை தான் முறைப்படி சிந்தித்து தக்க ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் தந்து தொல்காப்பிய மெஎந்நெறி வழி சென்று உலகரும் இவற்றயெல்லாம் உனர்ந்து மகிழ் இந்த ஞானநூலை இயற்றினார் என்கின்றது இந்தப் பாயிரம்
இங்கு ஒன்று தெளிவாகின்றது. மெய்கண்டார் அகத்தே நந்தி என்பெருமானே உனர்த்டினாலௌம் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” என்ற வல்லுவர் வாக்கிற்கு ஏற்பவே ஏது எடுத்டுக்காட்டுகள் கண்டு மெய்யென உணர்ந்து அதனை பிறரும் உணர்ந்து மகிழ இந்த நூலை யாத்தர் என்று தெரிகின்றது.
இது தொடர்பாக முன்பே விளக்க்பட்ட ஓர் விசயம் மீண்டும் சிறிது இங்கு.
திருவள்ளுவர் உலகை வைத்தே இறையுண்மையை அனைவரும் காணத்தரும் உத்தியையே மெய்கண்டாரும் தழுவி இறையுண்மையை நிறுத்துகின்றார் தனது முதற் சூத்திரத்தில்.
வள்ளுவரும் மெய்கண்டாரும்
இனி இவ்வுலகம் சித்துப்பொருட்களாக உயர்திணை என அஃறிணை என மேலும் அவை ஆணென பெண்ணென வகுத்தும் பகுத்தும் நிற்க அசித்துப்பொருட்களாகப் பல பல்வேறு வகையில் வேறுபட்டு நிற்க இவற்றையெல்லாம் இருதிணை ஐம்பால இயல்நெறி என்றவாறு உனர்ந்து மனிதர்கள் மொழிபடுத்தி வாழ்வது தொல்காப்பியர் காட்டிச் சென்ற உலகியல் உண்மையாகும். இவ்வாறு உலகு இருப்பது மீண்டும் பிறவாமை என்பதை உயிர்கள் அடைவதற்கே எனும் பொருண்மை விளங்க அதனை அருள வல்லவனாக இறைவன் இருக்கின்றான் அவனே இந்த உலகிற்கு ஆதிபகவன் இக்காரணத்தால் என்று திருவள்ளுவர் முடிக்கின்றார்.
இனி இதனை அகப்படுத்தியே ஆனால் இன்னொரு கூறும் ஆழமும் கண்டு இந்த ஆதிபகவனே அந்தமாதி எனப்படும் சங்கார காரணனாகிய முதல் என்றும் முடிகின்றார் சிவஞானபோதம் எழுதி சமய வாழ்க்கையையே ஓர் நூலியய் அறிவியல் ஆக்கிய அற்புத மெய்கண்டார்.
அதுவென்ன இன்னொரு கூறும் ஆழமும்?
இவ்வாறு பலவாறு பகுத்து வகுத்து நிற்கும் பொருட்கள் அனைத்தும் மூவினைப் படும் என்பதே அது. உலகப் பொருட்கள் யாதும் நிரந்தரம் அல்ல. அது அது என சுட்டப்படும் அனைத்தும் தோன்றி நின்று மறையும் தனமைத்து,
இதுவே சிவஞான போதத்தின் முதல் சூத்திரத்தில் வெளிப்படும் ஆழுண்மையாகும்
காண்க:
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
(இவ்வுலகு) தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து, உளதாம் (அருளின்)
அந்தம் ஆதி(யே முதல்) என்மனார் புலவர்
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல்நுதலிற்று.
இங்கு வள்ளுவரின் ஆதிபகவன், உலகில் அழிவு இருப்பதையும் அகப்படுத்தி அந்தமாதி ஆகின்றான்
இதுவென்ன அனைத்திற்கும் ஆதியாய் இருக்கின்ற இறைவன் அவற்றின் அந்தமாகிய அழிவிற்கும் காரணமாய் நிற்கின்றவன் ஆவது?
இது மெய்கண்டார் கருத்தல்ல. அனைத்தையும் ஆதியாக நின்று தோற்றுவிக்கும் இறைவன் அவற்றை அழிக்கவும் மாட்டான். ஆயினும் அவனே சாங்கார காரணன் ஆகின்றான். எவ்வாறு?
அழிக்கின்ற சத்தியாக மலம் எனும் ஆணவ மலம் இருக்கின்றது. அனைத்தையும் விழுங்கி இருளில் வீழ்த்தும் மலம் எனும் ஆணவ மலம் இருக்கின்றது. அதுவே தோன்றி நிற்கின்ற அனைத்தையும் விடாது விழுங்கி அழிக்கின்றது. ஆயினும் முற்றிலும் அழியாது உலகென்றும் அதில் பல உயிர்கள் வாழ்வதென்றும் உண்டே! அது எப்படி? ஆணவ மலம் வலுக்குன்றாது இருந்தால் உலகம் என்றோர் பொருள் இருக்க முடியுமா?
இங்குதான் இறைவன் சங்கார காரணன் ஆகின்றான். தான் தனை இழுத்துக்கொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஆணவ மலம் மேலோங்கி அழித்தலைச் செய்ய, தான் வெளிபட்டுச் சுடர, அந்த மலம் பின்வாங்கி வலுவிழந்து நிற்க உலகம் தோன்றுவதும் ஆகவே இறைவன் ஆதியாக நிற்பதும் மெய்யென, இறைவன் உலகிற்கு சாங்கார காரணனாகிய முதல் ஆகின்றான், அந்தமாதி ஆகின்றான்
இவ்வாறான ஓர் அழகிய வரலாற்றுத் தொடர்பை திருவள்ளுவரிடையேயும் மெய்கண்டார் இடையேயும் காண்கின்றோம். தொல்காப்பியம் வழிகாட்ட திருவள்ளுவர் கல்லாடனார் கூறுவதுபோல, சமயக்கணக்கர் தம்மதி வழிச் செல்லாது உலகியில் உண்மை கூறி இறைவனை ஆதிபகவனாக காண்கின்றார். இனி மெய்கண்டார் இதனை அகப்படுத்தி வேதங்களையோ ஆகமங்களையோ மாணமுதல்களாக ( பிரமாணங்கள்) கொள்ளாது இந்த உலகையே அதன் இயல்பினைக் கண்டு அங்கு சங்காரகாரணாக இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை நிறுத்துகின்றார்.
இவ்வகையில் திருவள்ளுவரும் மெய்கண்டாரும் சார்பு சமயங்கள் யாதையும் தழுவாது அனைவருக்கும் பொதுவாகிய உலகினை வைத்தே இறையுண்மை கூறுதலின் இருவருமே அழகிய சமயாதீதர்கள் ஆகின்றனர். இதனால் மெய்கண்டாரிய சைவ சமயமும் சமயாதீத சமயம் ஆகின்றது.
இனி அடுத்து எவ்வாறு சிவஞானபோதத்தில் தொல்காப்பியக் காண்டிகை உரை வெளிப்படுகின்றது என்பதைக் காண்போம்.
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 6
மெய்கண்டாரின் விருத்தி காண்டிகை உரை
மிகத் தொன்மையான சைவப் பாரம்பரியம் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து வளர்ந்துள்ள அது இருவகைப்படும் என்று தெரிகின்றது. ஒன்று ஆகமநெறி வாய்ப்பட்டது. பிறிதொன்று நூலிய அறிவியல் வாய்ப்பட்டது. இதில் வடமொழியில் உள்ள 28 ஆகமங்கள் தமிழில் உள்ள ஞானாமிர்தம் தத்துவப்பிரகாசம் போன்ற பல ஞானப் பனுவல்கள் ஆகம நெறி வாய்ப்பட்டதாக இருக்க, மெய்கண்ட சாத்திரங்கள் அதிலும் குறிப்பாக சிவஞானபோதம் நூலிய அறிவியல் சார்ந்தவையாக தொல்காப்பிய ஏரணவியல் சான்ற நூற்ளாக விளங்குகின்றன.
ஆகமநெறி என்பது நாற்பாதத்து
நெறியாகும்- திருகோயிலைச் சார்ந்து எழுந்த்தாகும். சரியை கிரியை யோகம் ஞானம் என்றவாறு ஒர் வட்டமாக விளங்கும்
தன்மையது. உள்ளுணர்வாக இறையுண்மை தெளிவற்று கிடக்க ஆனால் பல சரியைகள் கிரியைகள் யோகங்கள்
தவங்கள் செய்ய தெளிவு இன்னும் உதிக்க ஞான விசாரனை வர தெளிவு இன்னும் அதிகமாக மீண்டும்
சரியை கிரியை என்றவாறு ஆனால் பலவாறு பக்குவத்தில்
முதிர்ந்த நிலையில் வாழ்வதாகும்
இந்திய மெய்யறிவு வரலாற்றிலும் மற்றும் உலக மெய்யறிவு வரலாற்றிலும் ஓர் பெரும் புரட்சியை உண்டாக்கியுள்ள சிவஞான போதம், எவ்வித மாணநூற்களுக்கும்(பிரமாணங்கள்) உடன்படாது, உண்மை என்பது ஓர் சூத்ததிரதின் வழியாக மொழியப்பட்டு காண்டிகை உரை வழியாக அனைவரும் உடன்படுமாறு நிறுத்த வல்லது என்ற புரட்சி சிந்தையோடு தொல்காப்பியர் திருவள்ளுவர் வழி சென்று யாக்கப்பட்ட பெருநூலாகும். இதனால சமய வாழ்க்கையை அறிவியல் துறையாக்கிய தனிப் பெரும் சிறப்பு இதற்கு உண்டு.
ஞான விசாரனையை முதன்மைப் படுத்துவதே சிவஞானபோதத்தின் தனிச் சிறப்பு. இதனால் சரியை கிரியை யோக ஞானம் போன்றவற்றிற்கு இடம் இல்லை என்று பொருள்படாது.
மெய்கண்டாரேக் கூறுகின்றார்
8ஆம் சூத்திரம்
முதல் அதிகரணம்
மேற்கோள்
ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது,
ஏது:
மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தை காட்டியல்லது மோட்சத்தைக் கொடா ஆகலான்
இங்கு நன்னெறி என்பது ஞான விசார்ணையே ஆகும் அதன் வழி சிவஞானம் தெளியாவிட்டால் மீண்டும் பிறவாமை அமையாது என்று திருவள்ளுவர் கூறுமாறே இவருங் கூறுவதைக் காண்க.
ஆரணம் என்பது ஆழமான மெய்யுணர்வாகும். அது அகத்தே ஒருவாறு உதிக்க அதனை காண்டிகை உரை வழி முதலில் தான் சிந்தித்துத் தெளிந்து உண்மை என்று உணர்ந்து பின் பரனையும் உடன்பட வைத்தலையே தன் முறையியலாகக் கொண்டதாகும்.
விருத்தி காண்டிகை உரையை சிவஞானபோதத்தில் செவ்வே காண்கின்றோம். இங்கு ஓர் சூத்திரம் நவிலும் ஆரணத்தை, அழிவிலுண்மையை பல அதிகரணங்கள் வழி அதாவது படிமெய்கள் வழியும் ஒவ்வொரு படிமெய்யையும் மேற்கோள் ஏது எடுத்துக்காட்டுகள் என்றவாறு காண்டிகைப் படுத்துவதை தன் முறையியலாகக் கொண்டுள்ளதை மிகத் தெளிவாகக் காண்கின்றோம்
இங்கு படிமெய் என்பதாவது, மேலான ஆழமான பேருண்மை ஒன்றை, சூத்திரத்தின் உட்பொருளை சிறிது சிறிதாக பைபையாக தெளிதற்கு வரும் உண்மைகள் என்றவாறு . குன்றுச்சி போல சூத்திரப் பொருளாகிய பேருண்மைகள், அதனை அடைவதற்கு உதவும் படிகளாக இம்மெய்கள் இருப்பதின், அவை படிமெய்கள் ஆகின்றன.
இனி இப்படிமெய்கள் அனைவராலும் உண்மையென மேற்கொளப்படும் வகையில் இருப்பதின் அவை மேற்கோள்கள் ஆகின்றன. எது உண்மையென்று மேற்கொள்ளப்படுகின்றதோ (presuposed) அதுவே மேற்கோள் ஆகின்றது. இனி சிவஞானபோதம் ஏரணவியல் வழி செல்வதின், மேலான உள்ளுணர்வுகளாக ஞானவுதிப்புகளாக இவை பகரப்படாது சிந்தித்துத் தெளிய வரும் உண்மைகளாகப் பகரப்படுவதின், ஒவ்வொன்றிற்கும் அவற்றை மெய்யென நிறுத்தும் ஏதுக்களும் மேலும் எவ்வாறு இவை ஏதுக்கள் ஆகின்றன வென்றும். இயைபு யாதென்றும் தக்க எடுத்துக்காட்டுகள் வழி விளக்கப்படுவதையும் காண்கின்றோம்
இனி இத்தகைய படிமெய்கள் பலவாக இருக்கவும் ஒன்றினைச் சார்ந்தே அடுத்தது வருவதாலும், அனைத்தும் முடிவில் ஒருங்கே சூத்திரத்தின் உட்பொருளை விளக்குவனவாகவும் அமையும் வகையில் ஓர் அதிகார முறைமையையும் அங்கு காண்கின்றோம்
இந்த அதிகார முறைமைதான் யாதெனின், முதற்படிமெய்யை அகப்படுத்தியே இரண்டாம் படிமெய்யும், இவ்விரண்டினையும் இம்முறையில் அகப்படுத்தியே மூன்றாம் படிமெய் என்றவாறு செல்வதே யாகும். முடிவில் எல்லா படிமெய்களையும் அகப்படுத்தித் தெளியும் போதே சூத்திரத்தின் உட்பொருள் பொழிப்பாகவன்றி மிகத் தெற்றென பிரகாசித்து ஏரணமாகவும் ஆரணமாகவும் விளங்கும் என்பதாம்.
இவ்வாறே ஓர் அதிகாரத்தில் அமையும் பல சூத்திரங்களின் அதிகார முறைமையையும், பல அதிகாரங்கள் விளங்கும் படலங்களின் முறைமையையும் பல படலங்களில் செல்லும் நூலின் அதிகார முறைமையும் என்றறிக.
இவ்வாறு செல்வதே ஏரணவீயம் சார்ந்த விருத்திக் காண்டிகை உரை காட்டும் முறையியல் ஆகும். அனைவர் உள்ளத்திலும் பேருண்மைகளாகிய சூத்திரப் பொருள் ஏற்கனவே இருக்கவே செய்கின்றன.ஆயினும் அவை புதைந்து கிடந்து தெளிவிலா வொன்றாகவும் மறையாகவும் கிடக்க, இத்தகைய ஏரணவியல் வழி செல்லும் சிந்தனை வேள்வி தேவையாகின்றது. இத்தகைய ஏரணவியல் புதைந்து கிடப்பதை வெளிப்படுத்தி அறிவினை நலமே சுடரும் ஒன்றாக ஆக்கும் வகையில் அறியாமை இருளைக் கடியும் என்பதாம்.
விழிதிறப்பித்து காணவைப்பது
இம் முறையியலில் எடுத்துக்காட்டுகட்கு தனி சிறப்பிடம் உண்டு. ஏதுக்களாகத் தரப்படுவதிலிருந்து எவ்வாறு அவ்வேது உண்மையென்று அதனின்று மேற்கோளென உறுத்தப்படுவது மெய்யாகின்றது என்பதை விளக்கியருள்வனவே எடுத்துக்காட்டுகள் ஆகும். இவ்வியைபினை தெற்றென எடுத்து அனைவரும் காணுமாறு காட்டுதலால், இவை எடுத்துக்காட்டுகள் ஆகின்றன. ஏதுக்கள் இன்றியும் எடுத்துக்காட்டுகள் இன்றியும் ஏரணவீயத்தின் காண்டிகை செல்லாது
ஆகையால் இது
அளவைநெறியில் வரும் அனுமானம் அல்ல—மாறாக விழிகளைத் ட்ஹிறக்க வைத்டு கானாதிருப்பதை
ககனவைப்பது ஆகும்.
இவ்வாறு செல்லும் ஏரணவீயக் காண்டிகை இயலிய நூனெறி பாற்பட்டதாகவே அமையும். கற்பனா சேட்டைகளை ஒதுக்கி, ஆயப்படும் பொருள் எவ்வாறு தன்னை தன்னுள் இருந்தவாறே காட்டி அருளுகின்றதோ அவ்வாறே காண்பது இயலியமாகும். இது தற்போத சேட்டைகளையும் அதனால் வரும் கற்பனைகளையும் ஒடுக்கி உள்ளதை உள்ளவாறேக் கண்டு உண்மையையே அறியும் திறனாகும். நூனெறி என்பது அறிவினிலே கிடக்கும் அறியாமை இருளைக் கடிந்து ஞானப்பிரகாசம் பெற்றுய்யும் கருத்தொடு செல்லும் ஆய்வு நெறியாகும். இத்தகைய ஞானபிரகாசங்களே ஏரணங்கள் ஆகின்றன. இவற்றை ஈட்டித் தரும் ஆய்வுநெறி ஏரணவீயம் என, அது இயலியநூனெறி பிழையாது செல்லும் கருத்தது என்றறிக. காட்டப்படுவதைக் கற்பனைகள் போக்கி காட்டப்படுவாறே காண்பதால் உண்மையறிவு சனிக்கும் என்றவாறு.
இனி இவ்வாறு உண்மை என்றறிதற்கு தனிப்பட்ட இலக்கணங்கள் உண்டோவென, இல்லை என்றவாறு. எவ்வாறு இருளைக் கடியும் தன்மையால் ஒளியின் ஒண்மை தெளிவாகிறதோ, அவ்வாறே அறியாமை இருளைக் கடியும் பண்பால் ஓர் உண்மை உண்மையென உணரப்படுகின்றது. மறுத்து மறுத்து எறிந்தும் மரியாவகை ஒளிர்ந்து உறுத்தி நிற்பதே உணமையென, எவ்வாறு மறுத்து நோக்கினும் வீழ்த்தப்பட முடியாது நின்றிலங்குவது யாதோ அதுவே உண்மையாம் என்றது. சூத்திரங்களின் உண்மையை, அவற்றை மறுக்க முடியாமையே ஒருவன் மாட்டு தெளிவுறுத்தும் என்றவாறு. இதனால் உண்மைக்கு பிரமாணங்களாக பிரத்தியட்சம் அனுமானம் ஆகமம் என்றெல்லாம் தேவை யில்லை. மெய்கண்டாரும் தமது நூலில் இவ்வாறான எந்த பிரமாணத்தையும் தரவில்லை.
ஆழ் உண்மைகளைக் கண்டு இணங்காமை இரண்டு காரணங்களால் வரும். கண்டுங் காணாதது போல நடிப்பாரும், பக்குவக் குறைவின் காரணமாக காணமுடியாது திகைப்பாரும் இணங்காது போவர். இவற்றில் முன்னது ஆணவச் செருக்கினால் வருவது என்பதால் ஏரணவியலிற்குப் புறம்பானது. பின்னது தகுந்த போதனாவழி போக்கப்படும் பண்பிற்று. இவ்வாறு இணங்காரை ஏரணவழி படுத்தியும் போதனை வழி படுத்தியும் இணங்குமாறு செய்வது கூடும் என்பதாம். அனைவரின் இணக்கத்துடனேயே செல்லும் இயல்பிற்று உண்மையையேக் கண்டு செல்லும் ஏரணவியலாகும். உண்மையைத் தவிர்த்து பிற அனைவரின் இணக்கத்தை பெற்றுச் செல்லா என்பதுவும் அறியப்பாற்று.
இதனால் ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் இயங்கும் உரை, தொல்காப்பியர் தம் மரபியலில் கூறும் காண்டிகை உரை என்பதொடு அதன் பிற்கால வளர்ச்சியே மெய்கண்டாரின் விருத்தி காண்டிகை உரை ஆகின்றது. தான் கண்டு பிறர் காணாது திகழும் பேருண்மைகளை மொழிப்படுத்தி பிறரும் கண்டு மகிழுமாறு போதித்து விளக்கும் பண்பிற்று இக்காண்டிகை உரை. காண வைப்பதாவது, அகத்தே காணவொட்டாது தடைசெய்து நிற்கும் மலமாசுக்களைத் துடைத்துப் போக்கி ஞானக் கண்ணை சுடர வைப்பதாகும்.
சிவஞானபோதத்தில் விருத்தி காண்டிகை உரை
இனி சிவஞானபோத்தத்தைக் காண, எழுதப்பட்ட 12 சூத்திரங்கட்கும் மெய்கண்டாரே விருத்திக் காண்டிகை உரை எழுதியிருப்பதையும் காண முடிகின்றது. இத்னால பிறகாலத்தில் எழுந்த பாண்டிப் பெருமாள் உரை, சிவஞான யோகிகளின் சிற்றுரை பேருரை போன்றவை உரைக்கு உரை என்றே கொள்ளவேண்டும். மெய்கண்டாரின் விருத்திக் காண்டிகை உரையை விளக்குவனவாகவே இவை அமைகின்றன. ஆயினும் ஓர் வேதனை என்னவென்றால், இதுவரை தோன்றியுள்ள எல்லா உரைகளுமே மெய்கண்டார் எழுதியது தொகாப்பியக் காண்டிகை உரை விருத்தி என்று அவர்கள உணராது போய், ஏரணவீயத்தை பிழையாக நையாயிகக் கண்ணோடு கண்டு போதத்தின் மெய்ப்பொருளை காணாது உரை எழுதிச் சென்றுள்ளதே யாகும். இதனைக் களையவே அடியேன் சிவ்ஞானபோதத்திற்கு நூலிய அறிவியல் உரை என்றவாறு ஒர் உரையை எழுதியுள்ளேன்
மெய்கண்டரின் விருத்திக் காண்டிகை உரைதான் என்ன ?. இதனை ஓர் சிறிது விளக்குவம். முதல் சூத்திரம் இவ்வாறு செல்லும்:
>>>>
முதல் சூத்திரம்
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து, உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்
என்பது சூத்திரம்.
இதன் உண்மையை காண்டிகைப் படுத்த மூன்று அதிகரணக்களை(படிமெய்களை) உபகரித்து, ஒவ்வொரு படிமெய்க்கும் மேற்கோள் ஏது எடுத்துக் காட்டு என்றவாறு அவர் ஏரண முயற்சி செல்கின்றது. மிகவும் சுருக்கமான முதல் படிமெய் இவ்வாறு செல்லும்.
முதற் படிமெய்:
மேற்கோள்: ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது
ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்.
எடுத்துக்காட்டு 1.1
பூதாதி ஈறும் முதலுந் துணையாக
பேதாய் திதியாகும் பெற்றிமையின் -- ஓதாரோ
ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்று என்றும் உண்டென ஆய்ந்து?
>>>>
இவ்வாறே ஏனைய இரண்டு படிமெய்களும் செல்லும். இதற்கு உரை என்பது இப்படிப்பட்ட காண்டிகைகளை தெற்றென புலப்படுமாறு விளக்குவதேயாகும்
இவ்வாறு மெய்கண்டார் தமது விருத்தி காண்டிகை உரையை வளர்க்கும்போது, நையாயிகத்தின் பிரத்தியட்சம் அனுமானம் ஆகமம் என்ற பிரமாணங்கள யாதும் பரிந்துரைக்கப்டவில்லை என்பதையும் காண்க. ஓர் சூத்திரத்திரத்தை காண்டிகை படுத்தும்போது ( bringing into logical
demonstration) உண்மைக்கு அதிகாரத்துவம் (authority) பகரும் பிரமாணங்கள் தேவை இல்லை என்பதொடு முரண்பாடான ஒன்றும் ஆகும்.
தொடரும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 7
தமிழர்களின் மெய்யறிவு விசாரணையின் தனித்துவம் இதுவரை நன்றாக ஆயப்பட்டு விளக்கப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. இந்திய தரிசனங்களின் வரலாறு என்ற பெயரில் எழுந்துள்ள பல நூற்களில் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாம்சம் புத்தம் சமணம் யோகம் என்றவாறு பல கூறப்பட்டாலும் தொல்காப்பிய மெய்ந்நெறி எவ்வாறு அது திருக்குறளில் வளர்ந்து பிறகு பக்தி எழுச்சியாக மலர்ந்து இந்தியாவையே ஆட்கொண்டது என்பதை எல்லாம் அதிகமாக யாரும் பேசுவதில்லை, அப்படியே பேசினாலும் எல்லாம வேதாந்திகளாகிய ஆதி சங்கரர் இராமாநுஞர் மாதவர் என்றவாறு தான் கதை செல்லும். இவர்களே இந்த பத்தி எழுச்சியின் விளைவுகள் என்பதை மறந்து விடுவார்கள். பிராமண ஆதிக்கத்தின் வர்ணதர்மத்தின் விளைவு இவை எல்லாம் என்று தெரிகின்றது.
இதுவரை தக்கச் சான்றுகளோடு நாம் விளக்கியதிலிருந்து திருக்குறளில் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ எனும் அடிப்படை கோட்பாடு தொல்காப்பிய ‘மெய்ந்நெறி” வழி வந்ததென்றும் ஆங்கு விளங்கும் காண்டிகை உரையின் உறுப்பாக அமையும் ஏரணவியல் மறையாக திருக்குறளில் வெளிப்பட்டாலும் மிகத் தெளிவாகவும் மிகவும் வளர்ந்த நிலையிலும் நாம் மெய்கண்டாரின் சிவஞானபோதத்தில் காண்கின்றோம்.
எவ்வாறு இந்த மெய்ஞானப் போக்கு சிவஞான போதத்தில் தோன்றியது என்பது நாம் இன்னும் தெளிவாகா அறிந்துகொள்ளாத ஒன்று, இடைப்பட்ட காலத்தில் திருக்குறளின் தாக்கத்தை காரைக்கால் பேயாரின் ‘அற்புத திருவந்தாதியிலும்’ திருமூலரின் திருமந்திரத்திலும் மிகத் தெளிவாகக் காண்கின்றோம். இதுவரை யாரும் விரித்திராத இந்த வரலாற்றுத் தொடர்பை இப்பொழுது நாம் காணவிருக்கின்றோம். இதன் வழி எவ்வாறு வள்ளுவர் பாரதம் முழுவதும் பரவிய பத்தி எழுச்சியின் வித்தகர் என்பதைக் காணவிருக்கின்றோம்
அற்புதத் திருவந்தாதியில் திருக்குறள்
திருக்குறளை ஆழக் கற்றே அதன் அடைப்படை மெய்யறிவுச் சிந்தனை ஓட்டங்களை அகப்படுத்தியே புனிதவதியார் தனது அற்புதத் திருவந்தாதியை யாத்துள்ளது மிகத் தெளிவு. இதனால் பக்தி எழுச்சியின் வித்தாக திருகுறளே விளங்குகின்றது.
கீழே இதற்குச் சான்றாக சில அம்மையார் பாடல்கள்
9
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பு அறுப்பதானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு
(அ-ரை திரு வி.க)
(ஈசன் அருளே -- ஈசன் அருளால்) எப்பொருளும் எனக்கு ஆவது என்றபடி. எல்லாவற்றையுந் திருவருட் கண்கொண்டு நோக்குவோர்க்கு எல்லாம் ஆவனவேயாகும். அவர்கட்கு ஆகாதது ஒன்றுமில்லை.
உரை (உலகன்)
உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் நல்லதென்றும் தீயதென்றும் சித்தென்றும் அசித்தென்றும் விண்ணென்றும் மண்ணென்றும் இன்னும் பலவாறும் பேதப்படுத்தவரும் இப்பேருலகையெல்லாம் அசைத்து இயங்குமா ஆள்விப்பது ஈசனது அருளேயாம். எல்லா ஆன்மாக்களுக்கும் இவ்வாறு மீண்டும் பிறந்துழலத் தந்து அஞ்ஞானம் போக்கும் அந்த அருளே, சிவஞானம் புணர்த்தி அஞ்ஞானம் போக்கி மீண்டும் பிறவாதிருக்குமா என் பிறப்பினை அறுப்பதுமாகும். அது எப்படியோவெனில் அந்த அருளாலேதான் பொய்ப்பொருளை விட்டு முத்திக்கு வித்தாகிய மெய்ப்பொருளை நோக்கி அதனையேப் பற்றிக்கொள்ளும் வாழ்க்கை விதியுடையவளும் ஆகினேன். இப்படிப்பட்ட மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையவளாக வளர்ந்துவிட்ட எனக்கு, வேண்டாவென எப்பொருளையும் தள்ளிவைக்கும் மனம் ஓர் சிறிதும் இல்லை என்பதைக் காண்க -- எல்லா பொருளும் இறைவனது அருளேயென எனக்கு ஆவதேயாம்.
இங்கு அம்மையார் வள்ளுவரைத் தழுவிச் சென்றாலும் ஒருபடி மேலேயும் செல்கின்றார்.
பிறப்பு அறுக்கவேண்டும் மீண்டும் பிறவாமை எய்ய வேண்டும் என்பதில் இருவருக்கும் உடன்பாடு. ஆனால் திருவள்ளுவர் மெய்யுணர்வே அதனை ஈட்டித்தரும் என்று கூற அம்மையாரோ அதனோடு உடன்பட்டாலும் அது இறைவனது அருளாலேயே நடக்கும் என்றும் முழங்குகின்றார். இந்த முழக்கத்தில் பக்தியின் எழுச்சியைக் காண்கின்றோம் மெய்ப்பொருளை நோக்கும் விதி இறைவனது அருளாலேயே நடக்கும் ஒன்று என்று கூறி ஏன் அது அனைவருக்கும் அமைவதல்ல என்ற கேள்விக்கு விடை தருகின்றார்.
இனி வள்ளுவரின் ‘எத்தன்மைத்தாயினும் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்பொருள் காண்பதே அறிவு’ என்ற ஏரணவியல் கூறும் விளம்பப்டுவதைக் காண்கின்றோம். ‘எப்பொருளும் ஆவது எனக்கு’ எனும் போது ஓர் பொருள் எத்தன்மைத்தாயினும் யார் முன்மொழிந்தாலும் உடன் அதன்காரணமாக ஒதுக்கித் தள்ளுவதுவதில்ல, சீர்தூக்கிப் பார்ப்பதற்குரியதே என்று உறுதியாகக் கூறுகின்றார்.
இங்கு நூலிய அறிவியல் போக்கை, ஓர் கருத்து வெளிப்பட அதனை ஆய்ந்து தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி மெய்யா பொய்யா என்று ஆயும் போக்கை தான் பின்பற்றுவதாக அம்மையயர் கூறுவது வள்ளுவத்தோடு ஒத்துப் போவதாகும்.
கீழே வரும் பாட்டில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனும் கருத்தும் வெளிப்படுவதைக் காண்கின்றோம்.
17
17
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாம் காதலாற் -காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்(கு)
ஆதியாய் நின்ற அரன்
(அ-ரை திரு வி.க)
காண்பார்க்கும் - யோகியர்க்கும். கைதொழுது காண்பார்க்கும் -- கைத்திருத் தொண்டர்க்கும். காதலால் காண்பார்க்குச் சோதியாய் சிந்தையுளே தோன்றுதலிலுள்ள சிறப்பு உன்னற்பாலது. காதல் நோக்குச் சிறந்தது என்றபடி.
உரை (உலகன்)
யோகங்கள் செய்து மலங்கள் வாட்டி, ஞானக்கண் திறந்திடுமா அருள் ஈட்டி மறையுலகை காண்பார்க்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் காணவரும் பொருளாகும். அவ்வாறின்றி தொழுது தொழுது போற்றி திருத்தொண்டனாய் வாழ்ந்தவாறு இறைவனைக் காண முயல்வாருக்கும் யாதோவோர் வகையில் அவன் காண வருகின்ற பொருளாகும். ஆயினும் மெய்பக்தியின் நெக்குருகக் காதலாற் கசிந்து அவனை காண முயல்வாருக்கு அருட்பெருஞ்சோதியாய் சிந்தையிலே தோன்றி அகத்தைத் தூய்தாக்குவன், இந்தப் பழம்பெரும் உலகிற்கு ஆதியாய் மூலமுதலாக நிற்கின்ற அரன் என்றறிக
இங்கு ‘தொல்லுலகிற்கு ஆதி” எனும் கருத்து வள்ளுவர் கருத்து. ஆனால் அதனை பிறகாலத்து மெய்கண்டார் அந்தமாதியாக அனைத்தும் மூவினைப்படுவது ஒட்டிக் கண்டது போல் அம்மையாரும் அதன் காரணமாகவே ஆதிபகவனை தொல்லுகிற்கு ஆதி என்பதொடு அழிக்கும் திறத்து ‘அரன்’ என்றும் ஓதுகின்றார். மெய்கண்டார் இதனையே ‘சங்கார காரணன்” என்பார்.
இனி சிந்தையுள்ளே சோதியா இறைவன் தோன்றுவான் என்பது சுமேரு காலத்திலிருந்து வரும் ஓர் கருத்து எனினும் இங்கு அது ‘தனக்கு உவமையிலாதன்’ எனும் வள்ளுவர் கருத்தோடு ஒத்துவருவதாக கொள்ளலாம். சோதியாய் சிந்தையுள்ளே தோன்றும் போது உருவத்து சிவன் என்றோ திருமால் என்றோ அமமை என்றோ கூறமுடியாது போய்விடுகின்றது.
இனி அடுத்து வரும் பாட்டு திருக்குறளின் முதல் அதிகாரத்தில் வரும் அதே குறளை வெண்பாவாக எழுதியுள்ளதைக் காண்கின்றோம்
16
இனியோ நாம் உயர்ந்தோம் இறைவன் தாள் சேர்ந்தோம்
இனியோர் இடர் இல்லோம் நெஞ்சே -இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்
(அ-ரை, திரு.வி.க)
கனை: ஒலித்தலை உடைய
உரை(உலகன்)
இருக்கின்ற இறைவன் தனை எவ்வாறு காட்டுகின்றானோ அவ்வாறே அறிய வருவன் எனத் தெளிந்து அறிவின் திமிரை எல்லாம் போக்கி அவன் அருளையே வேண்டி நிறகின்றவளாய் ஆய்விட்ட நாம் அதனால் பெரிதும் உயர்ந்துவிட்டோம். தானெனும் மமதை அற்றுவிழ இனி அவனே தான் என நிற்பதே கூடிவருவதென, அவன் இணையடி திருநிழல் அடைந்தும் விட்டோம். அல்லற்பட்டு நொந்த நெஞ்சே! அறிக, இனி உனக்கு எவ்வித இடர்களும் இல்லை ! ஏனெனில் பல்வேறு அற்ப ஆசைகளைப் பிறப்பித்து உழற்சி வினைகளில் வீழ்த்தி மீண்டும் மீண்டும் பிறப்பிக்கச் செய்யும் கன்மத் தளைகளாகிய வினைக்கடலை ஆக்குவிக்கும் கனைக் கடலாகிய இந்த ஆரவாரமிக்க பிறப்பு எனும் பெருங்கடலை இறையருளின் நீந்தி கரை சேர்ந்துவிட்டோம் காண்!
இது நமக்குச் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து வரும் ஓர் கருத்து எனினும் அதன் சொல்லாக்கம் கீழே வரும் குறட்பாவை ஒட்டி எழுந்துள்ளது மிகத் தெளிவு
10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தவர்
(இறைவன் அடி சேர்ந்தார்) பிறவிப்பெருங்கடல் நீந்துவர்: மாயாகாரிய உடம்போடு பிறந்து இறந்து மீண்டும் பிறப்பதாகிய இந்த பிறவிப் பெருக்கடலை நீந்தி கரைசேர்ந்து மீண்டும் பிறவாமை எய்துவர் இறைவனது திருவடிகள் சேர்ந்தவர்கள், நீந்தார் இறைவன அடி சேராதவர்: யார் இவ்வாறு இறைவனடி சேராதிருக்கின்றார்களோ அவர்கள் இப்பெருங்கடலை நீந்த முடியாது மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வர் என்பதாம்
வள்லுவரின் ‘பிறவிப் பெருங்கடல்” அம்மையாரின் ‘மீளாப் பிறவிக் கனைக்கடல்’ ஆகின்றது. அத்தோடு இரண்டிலும் இறைவனது அடி சேர்தலே வீடுபேற்றை நலகும், பிறவிக் கடலை நீந்தல் மெய்யாகும் என்பதொடு ஓர் தெளிவாக ‘வினைக்கடல்’ என்று கன்மத் தளையையும் குறிப்பிடுகின்றார் அம்மையார். இதனையே ‘இருவினை’ என்கின்றார் வள்ளுவர்.
குறிப்பு
மூத்த திருப்பதிகத்தை எழுதி பத்தி எழுச்சிக்கு வித்திட்ட அம்மையார் பாடல்களில் திருக்குறளின் மிக ஆழமான தாக்கத்தை மிகத் தெளிவாகக் காண்கின்றோம். இதேப் போன்று முதல் ஆழ்வார்கள் பாடல்களிலும் இதுபோன்ற திருக்குறள் தாக்கங்கள் உண்டோவென ஆயவேண்டும். அது எவ்வாறு இருப்பினும் அம்மையார் பாடல்களில் வள்ளுவத்தை மிக நன்றாகக் காண முடிவதைப் பார்க்க, பாரதத்தையே பத்தி மயமாக்கிய பெருமை திருவள்ளுவரையேச் சாரும் என்று தெரிகின்றது. பிற்காலத்தில் புராணங்கள் இதிகாசக் கதைகள் ஆகியவற்றோடு கலந்து அதன் தூய மெய்ப்பொருள் தேடல் எனும் பணபை இழந்துவிட்டது போலும். உணர்ச்சிகள் உணர்வுக்கள் மேலீட்டால் மெய்யறிவுச் சிந்தனை மக்களிடையே வேண்டிய அளவிற்கு பரவாது போய்விட்டது போலும். ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி மெய்ந்நெறி செல்லாத வேதாந்தத் தாக்கத்தாலும் பத்தி எழுச்சியில் வள்ளுவ மூலம் சிதைந்துவிட்டது போலும்
தொடரும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 8
பத்தி என்பது தமிழர்கட்கு மிகப் பழமையான ஒன்று, சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே வருவது, ஏண் உடு அம்மையாரின் சீர்பியம்( கி.மு. 2300) மிக அழகிய ஆழமான மெய்ஞானத்தை அகத்தே கொண்டிருக்கும் ஓர் பத்தி இலக்கியமாகும். இம்மரபு இறந்துபடாது பரிபாடல் போன்ற கடைச் சங்க இலக்கியங்களிலும் நாம் காண்கின்றோம். ஆயினும் அதன் பண்பும் இலக்கணமும் மாறிக்கொண்டே வந்துள்ளதையும் காண்கின்றோம். தொல்காப்பியம் வற்புறுத்தும் ‘மெய்ந்நெறி’ என்ற ஏரணவியல் சான்ற திருநெறியை பின்பற்றி வள்ளுவப் பெருந்தகை தமது திருக்குறளை உலகமே வியக்க அதன் தாக்கமே புதிய ஆழத்தோடும் வேகத்தோடும் காரைக்கால் அம்மையார் தொடங்கி எழுந்து இன்றும் சிறப்பாக விளங்கும் பத்தி இயக்கமாகும். இது யாரோவோர் நாரதன் வடமொழியில் ‘’பத்தி சூத்திரம்” எழுத அத்னால் எழுந்த மக்கள் இயக்கம் அல்ல. இப்படிப்பட்ட கதைகளைக் கூறித்தான் தமிழர்கள் எந்த சுயமும் இல்லாத மடையர்கள் என்று பிராமணர்களில் சிலரும் பிறகு வெள்ளையர்கள் சிலரும் கதைக் கட்டி வரலாற்றையே மாற்றி எழுதி தமிழர்களை சிந்தனை அடிமையாக்கியுள்ளனர்,
உண்மை என்ன?
இன்று உலகெங்கும் பரவி கிடக்கும் திருகோயிலை மையமாக கொண்டு இந்து சமயம் எனப்படுவது தமிழர்களின் நன்கொடை, பண்டே அவர்கள் வளர்த்து வந்துள்ள உருவழிபாட்டை மையமாகக்கொண்ட பத்தி இயக்கத்தின் நன்கொடை.
இந்த வரலாற்று உண்மையைத்தான் தக்க சான்றுகளோடு இத்தொடர் நிறுத்துகின்றது.
இனி இந்த பத்தி இயக்கம் மெய்ந்நெறியாகிய திருநெறியைத் தழுவிய ஒன்றாகவும் இருப்பதைக் காண்கின்றோம். இந்த மெய்ந்நெறி பொருளியல் ஆய்வை மையமாக் கொண்டு பல்லாயிர வருடங்கட்குப் பின்னரே அதுவும் இறவாப் பெரும்புகழ் திருக்குறளிற்கு பின்னரே அதன் தாக்கத்தால் பதியினைப் போல் பசு பாசம் அநாதி எனும் மிகச் சிறப்பான அநாதிப்பொருளியலை ஏரணவியல் பிழையாது நிறுத்தியுள்ளனர்.
இது இன்றளவு சைவத்திற்கு உரியதாக விளங்குகின்றது. வேதாந்தங்களிலும் மற்றம் சமணம் புத்தம் போன்ற சமயங்களிலும் இது இல்லாத ஒன்றுமாகும், மேலும் எத்தனையோ மெய்யறிவு ஞானவான்கள் பிறந்துள்ள ஐரோப்பாவில் கூட இன்றளவு இந்த அநாதிப் பொருளியலை யாரும் வேண்டிய அளவிற்குத் தெளிவாக இன்னும் கூறவில்லை, இதனால் அவர்களது மாந்தரியல் சார்ந்த எல்லா துறைகளும் குறைபாடுகள் பல உள்ளனவாகவே விளங்குகின்றன.
திருகுறளில் முப்பொருள் உண்மை
அநாதிப் பொருளியலின் தோற்றத்தை திருக்குறளில் முதல் அதிகாரத்தில் காண்கின்றோம். அதுவே சற்று விரிவாக இங்கு ஆயப்படும்.
5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு: இறைவனை உண்மையாக உணர்ந்து உளநெகிழ்ச்சியின் மெய்யான அன்பின் அவனை போற்றிப் புகழ்ந்து தன் நன்றிப் பெருக்கினைக் காட்டி அவனை அணுகி நிற்போர் அகத்தே; இருள்சேர் இருவினையும் சேரா; அஞ்ஞான அந்தகாரமாகிய இருளைச் சேர்க்கும் ஆணவ மலமும், மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகிய இருவினை என்னும் கன்மத் தளையும் ஆகவே மாயாமலமும் ஆன்மாவைச் சேராது என்பதொடு சேர்ந்திருந்தால் விட்டு விலகவும் செய்யும் என்பதாம்
இனி ‘இருள்சேர்’ எனத்தொடங்கும் இக்குறளும் சைவசித்தாந்தத் சிந்தனை வளர்ச்சிக்கு மூலமாக இருந்த வரலாற்று உண்மையையும் காண்போம்.
முதலில் நாம் காணவிருப்பது திருவள்ளுவர் குறிப்பிடும் ‘இருவினை’ என்னும் கன்மக் கோட்பாடு மிக விரிவாக ‘இருபா இருபது’ எனும் அருணந்தி சிவாச்சாரியாரின் அற்புதமான ஞானப்பனுவலில் விசாரிக்கப்படுவதைக் காண்கின்றோம். இந்த ஆய்வு அரிய ஒன்றாகும் என்பதொடு மிக ஆழ்மான ஒன்றும் ஆகும். மெய்கண்டாரையே வினாவும் ஓர் சிறப்பும் உடையது.
காண்க
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை யாயில்
கணத்திடை அழியும் தினைத் துணையாக
iruvinai enpathu ennaikol aruLiya
manamE kaayam vaakku enum mUnRin
ithamE akitham enum ivai yaayil
kaNaththitai aziyum thinaith thuNaiyaakaa
Now I have some questions pertaining to iruvinai or mUlakarma. If
it is said they are none other than the pleasant and unpleasant experiences
that are produced by effecting actions bodily, mentally or verbally, then it
would mean that karma is something ephemeral, that which gets destroyed immediately
after the onset and hence not something that accompanies one firmly as a help
in self development throughout the whole of existence.
யான் அறிந்த வரையில் ‘இருவினை’ எனுங் கன்மக் கோட்பாட்டை அருணந்தியார் தமது இருபா இருபதில் விசாரிக்கும் அளவிற்கு வேறு யாரும் விசாரிக்கவில்லை என்றே நினைக்கின்றேன், வேதாந்த மரபிலும் யான் இதனைக் கண்டதில்லை. சமணத்தின் நிகண்டவாதிகள் இருவினையையும் அவர்கள் கூறும் அணுவாதத்ஹ்டில் அணுக்களாகக் கொள்வர். இது த்ரிஉகுறளில் காணா ஒன்று.
இது திருக்குறள் விரிக்கும் அறத்துறை விளக்கத்தோடும் தொடர்புடையதாகத் தெரிகின்றது.
இனி மெய்கண்டாரின் அற்புதமான சிவஞான போதத்திலும் இந்தக் குறளின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காண்கின்றோம். பயனியல் பத்தாம் சூத்திரம் இவ்வாறு வருகின்றது:
பத்தாஞ் சூத்திரம்: (திருவடிப்பேறு)
அவனே தானே யாகிய வந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே
கருத்துரை: என் நுதலிற்றோவெனின், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று
இதன் பொழிப்பு (உலகன்):
"யான்" "எனது" எனும் தற்போதம் முன்நிற்க (foregrounded) ,சிவபோதம் பின்நிற்க(backgrounded) , பல்வேறு வேட்கைவாய்ப்பட்ட ஆன்மா, அது இதுவென சுட்டிசுட்டி அந்நியப் பார்வை வழியாகவே அனைத்தையும் கண்டு, அதனால்நிலைபேறில்லாத அசத்தே கண்டு நிறைவற்ற குறையாகவே உழலும் நிலை போக்கி, இறையருளைப் பெருக்கி பஞ்சவதிகாரங்களை திறம்பட ஆய்ந்து இலாடதானத்தே ஐந்தவத்தை எய்தி சிவபோதமே முன்நிற்க தான் ஒடுங்கிட அவனேதானே யாகியப் பெருநிலை மெய்யாகும். காட்டப்படும் அனைத்தும் தற்போதமற்ற சிவபோதமேயாக, பொய்யில்லையாம்.அந்நிலையில் அறியப்படும் அனைத்தும் காலவுணர்வு ஊர்ந்து வராத சத்தறிவாகிய சிவஞானமாம். இவ்வாறாகிய நந்நிலைதற்போதமொடுங்கிடவே மெய்யாகும் என்பதால், இறைவனோடு முற்றிலும் ஒன்றித்து பிரிப்பின்றி விட்டகலாது, எவ்வாறு இறைவன்ஊக்குகின்றானோ, ஆட்டுகின்றானோ அவ்வாறே சற்றும் பிழையாது ஆடி இறைபணியே நிற்க, தற்போதம் எழாவகை ஒடுங்குதலும்அதன்வழி அணுத்துவத்தைத் தரும் ஆணவமலத்தையும், திரிபறிவை தரும் மாயையையும் சம்சாரத் தளையில் தொடர்ந்துவீழ்த்தும் கன்மத் தளையும் ஒட்டாது விழும் என்றவாறு.
பாசக்ஷயம் என்பது மூல மலமாகிய ஆணவமலத்தையும், அதனால் எழும் மாயையோடிசைந்த வாழ்க்கையைப் பற்றச் செய்யும்மாயாமலத்தையும், புண்ணிய பாவ இருவினைச் சிந்தையில் வீழ்ந்து அல்லற்படும் வாழ்க்கையைதரும் கன்மத்தளையையும் துமித்து,ஆன்மாக்கள் சகலர் பிரளயாகலர் என இருப்பதொழித்து விஞ்ஞானகலர்களாக உயர்வதற்குக் காரணமாக இருப்பதாம். இதனால்கற்றளிபெயர்ச்சிக்கு அதனால் வரும் பக்குவ முதிர்ச்சிக்கு முலமாக இருப்பது தத்துவக் கழற்சிகளோடு இத்தகைய மாலங்களின்,தளைகளின் வல்லியப் பிடியிலிருந்து விடுபடுவதுமாகும். பாசக்ஷயமே, தளையறுப்பே மெய்யான விடுதிபேறு என்பதாக இங்கு.
இங்கு ‘மலம்’ என்பது திருவள்ளுவரின் இருள் என்பதுதான், அந்த இருளைத் தரும் ஆணவ மலந்தான். ‘வல்வினை’ என்பதும் ‘இருவினை’ என்பதும் பொதுவாக ‘வினை’ என்பதும் கன்மத் தளைதான், மீண்டும் மீண்டும் பிறந்துழவதற்கு ஏதுவாயது.
இந்தக் குறளைப்போல இறைவுனுடன் ஏகனாகி துதித்துப்பாடி நெருங்கி அவனோடு ஒன்றித்து நிற்க ஆணவம் கன்மம் மாயை எனும் மலங்கள் சேராது என்பதொடு இருப்பதும் விட்டு விலகும் என்றே இச்சூத்திரம் விளக்குகின்றது
ஆக இச்சூத்திரமும் இக்குறட்பாவின் தாக்கத்தால் எழுந்த ஒன்றே என்று தெரிகின்றது
இனி இவ்வாறு மும்மலங்களின் உண்மையும் அவற்றின் அநாதியாம் தன்மையும் இவ்வாறு தெளிவாக, பசுவாகிய ஆன்மாவும் பதியாகிய இறைவனும் அநாதி என்பது எவ்வாறு திருக்குறளில் விளங்கி பின் பிறகு எழுந்த பிற்கால இலக்கியங்களில் தெளிவாயிற்று?
இதனை அடுத்துக் காண்போம்.
தொடரும்
உலகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Dear Jean-Luc,
'I do not believe in Cross-Posting
(which means sending the same message to several mailing lists),because that creates a lot of confusion..'
I know this to my cost. Not only confusion, misrepresentation,
distortion etc. அதனால், உலகன் அய்யா அவர்களின் இழையை அணுகுவதில்லை. இதை
சொல்ல்ப்போனால், ஏன் உமக்கு பீதி? என்கிறார், புரிந்து கொள்ளாமலேயே.
நான் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது, கடந்த சில வருடங்களாக மட்டுமே,
என்று உமக்குத்தெரியும்.
பல ஆசான்களை நாடினேன். ஆனால், எனக்கு முறையாக, பொறுமையுடன்
கற்றுக்கொடுத்த தமிழ் ஆசான்கள், ஜெர்மானியர், ஃப்ரென்ச், ஆங்கிலேய
தமிழ்புலவர்கள். ஆகவே,' வெள்ளையரின்' தமிழ் ஆர்வம் அன்றும்,இன்றும்,
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 9
சைவத்தின் அநாதிப் பொருளியல்
ஏற்கனவே கூறியுள்ளதுபோல, சைவ சமயம் மிகத் தொன்மையானது சுமேருத் தமிழின் முதற்சங்க காலத்திலேயே அடையாளம் காணும் வகை இருந்தது என்ற போதிலும் சைவ சித்தாந்தம் எனும் மெய்யறிவு கோட்பாடு திருக்குறளிலிருந்தே வளர்ந்துள்ளதாகத் தெரிகின்றது. அதனை இத்தொடரில் ஒருவாறு விளக்கி வருகின்றேன்.
ஆய்வில் உள்ள
5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
எனும் இக்குறட்பா இவ்வகையில் தனிச் சிறப்புடையதாகத் தெரிகின்றது. இங்குதான் சித்தாந்தத்தின் தனிச் சிறப்பாக விளங்கும் மும்மல கோட்பாடு நலமே வெளிப்படுகின்றது.
ஆயினும் சித்தாந்தத்தின் தனிச் சிறப்பாக அடையாளமாக விளங்குவது பதியினைப் போல் பசுபாசம் அநாதி எனும் அதன் அநாதிப்பொருளியலே யாகும். இது முதன் முதலில் திருமூலரின் உபதேசம் 30 எனும் நூலில் வெளிப்பட்டாலும் அதன் தோற்றம் திருக்குறளே என்று தெரிய வர அதனை சிறிது இங்கு விளக்க விருக்கின்றேன். திருக்குறள் சிவத்திணையாகிய முதல் அதிகாரத்தில் உள்ள 10 குறள்களே இந்த அநாதிப் பொருளியலையும் தன் அகத்தே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது
இறைவன் அநாதி
முதற்குறள் இறைவனை ஆதிபகவன் என்கின்றது. இதனை மிக விரிவாக ஆய்ந்து எவ்வாறு உலகில் காணவரும் பொருட்களின் வகுப்பு தொகுப்பு போன்றவை ஓர் பொருண்மையைக் காட்ட, ஆன்மாக்களை வீடுபேறு நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் பொருண்மையைக் காட்ட, நூலியப் பார்வையின் வழி இறைவன் ஆதிபகவனாக அனைத்திற்கும் நிமித்த காரண முதலாக இருக்கின்றான் என்று அனைவரும் உலகினை வைத்தே இறைவனது உண்மையை திருவள்ளுவர் நிறுத்தியுள்ளார் என்று காட்டினோம்
இனி இந்த ஆதிபகவன் எனும் இறைவனை இன்னும் ஆழச் சிந்திக்க ஓர் அநாதி முத்தசித்துப்பொருள் என்றும் நாம் தெளியலாம்
அனைத்திற்கும் ஆதியாய் நின்று தனக்கு யாரையும் ஆதியாய் கொண்டில்லாத பொருளே அநாதிப் பொருள், யாராலும் தோற்றுவிக்கப்படாது தானே தனக்குத் தற்பரனாகிய ஓர் சித்துப் பொருள் ஆகின்றது. இப்பொருளே பதியும் ஆகி அது அநாதியும் ஆகின்றது. ‘பதி’ என்றால் ‘தலைவன்’ என்று படும். இது ஓர் சுமேருத் தமிழ் சொல்லாகும். மேலும் எல்லா உயிர்கட்கும் வீடுபேறு அருளவல்லது என்பதால் அநாதி முத்த சித்துரு ஆகின்றத
சைவ சித்தாந்தத்தில் இறைவனை இவ்வாறுதான் கூறுவர்
ஆன்மா அநாதி
இனி திருவள்ளுவர் நாம் சுட்டியுள்ளதுபோல, பல இடங்களில் ‘மீண்டும் மீண்டும் பிறத்தல்’ ‘மாணாப் பிறப்பு உறுதல்’ என்றவாறு யாதோ ஒன்று இறைவனுக்கு வேறாக மாறாக மீண்டும் மீண்டும் பிறந்து அல்லற்பட அது பிறப்பறுத்து வீடுபேறு அடைய உதவவே இறைவன் இந்த உலகையே தோற்றுவித்து அதிட்டித்து நிற்கின்றான் என்று கூறுகின்றார். இவ்வாறு பிறந்துழல்வது இறைவனாக இருக்க முடியாது போக அவனுக்கு வேறதாகிய ஆன்மாவே யாகும் என்று தெளிவாகின்றது.
இனி இவ்வான்மா பரப்பிரம்மமாகிய இறைவனின் உபாதிகள் தொந்தனையால் ஓர் மயக்கத்தால் தனித்த ஓர் பொருளாகத் தோன்றுகின்றது, உன்மையில் அது பிரம்மமே என்பர் வேதாந்திகள். ஆயினும் இந்த மாணாப்பிறப்பெடுத்து பல இடும்பைகளையும் அதிலும் குறிப்பாக மரணம் உற்று அவதிப்படலும் பிரமத்திற்கு தேவையில்லை என்பதால், ஆன்மா தனியொரு பொருள் என்பதொடு அது தோற்றுவிக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இறைவன் மிகக் கொடூரமான ஓர் பொருளாக இருந்தால்தான் உயிர்களை தோற்றுவித்து சிறிது வாழவைத்து பிறகு கொன்று அழிப்பான். இறைவன் அருளே வடிவினனாக இருக்க, ஏற்கனவே இருக்கின்ற உயிர்கட்கு வாழ்வளித்து கற்க வைத்து சுத்தமாகி வீடுபேறு அடைந்து இவ்வாறு பிறந்து இறப்பதிலிருந்து தப்பிக்க உதவுவான்
பாசங்கள் அநாதி
இனி இருளை சேர்க்கும் மலமும் மீண்டும் மீண்டும் பிறக்கத் தரும் இருவினையாகிய கன்மமும் தநுபுவனபோகம் மகிழத்தரும் அதேபொழுது உலகியல் பற்றுக்களையும் தரும் மூலமாயையும் பாசங்கள் ஆகும். வாழ்க்கையில் பற்று எனப்படுவது இவைதான். இதனாலேயே எல்லா வகை இடும்பைகளும் என்கின்றார் நம் வள்ளுவர்.
இவ்வாறு எல்லாவகை பற்றுகட்கும் அதனால் வரும் துன்பங்கள் துயரங்கள் மரணாவத்தைகள் போன்றவற்றிற்கெல்லாம் காரணமாக இருக்கும் இந்த பாசங்களையும் இறைவன் தோற்றுவித்திருக்க மாட்டான். அருளே வடிவாகிய இறைவன் உயிர்கள் இவ்வாறான பாசத்தளைகளில் மாட்ட வைத்து துன்புறுத்த மாட்டான். அவன் ஓர் அரக்கன் அல்ல,
அதனால் இந்தப் பாசங்களும் அநாதி ஆகின்றன்
பாசநீக்கம்
எல்லா இடும்பைகட்கும் இன்னல்கட்கும் துன்பங்கட்கும் துயரங்கட்கும் காரணமாகிய இந்த பாசங்களிலிருந்து நீங்கி சுத்தமாகுவதே வாழ்க்கையின் பொருளாக அமைய அது இறைவனது பொருள்சேர் புகழைப் பாடி அவனுக்கு அணுக்கமாகி நின்றால் சமலனாகிய ஆன்மா சுத்தமாகி நிமலம் ஆகும் வீடுபேறு மகிழும் என்பதே இக்குறளில் பரிந்துரைக்கப்படும் வாழ்வியலாகும்.
இவ்வாறு நாம் இக்குறளை புரிந்துகொண்டால், உடன் நம் நினைவிற்கு வருவது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்கும் கீழ்வரும் திருமூலரின்( கி.பி 600?) அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க பாடல்தான்
3.
115
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப் பசு பாசம்
பதியணுகிடில் பசுபாசம் நில்லாவே
patipacu paacam enappakar muunRil
patiyainaip pool pacupaacam anaati
patiyinaic cenRaNuKaap pacu paacam
patiyaNukidil pacupaacam nillaavee
யாராலும் தோற்றுவிக்கப்படாதனவும் யாண்டும் அழியாது நிற்பதுமாகிய அநாதிப்பொருள் என்று பகரப்படும் பதி பசு பாசம் எனப்படும் மூன்றில், பதியினை போல் பற்பல மாற்றங்கட்கு ஆளாகும் பசுவும் பாசமும் அநாதியே ஆகும். இவற்றில் பாசத்தோடுஅநாதியே பந்திக்கப்பட்டிருக்கும் பசு, பதியினைச் சென்று அணுகிட அதன்கண் பாசம் கழன்று நில்லாதுபோம். ஆயினும்இவ்வாறு அணுகாவிடில், பந்தித்திருக்கும் பாசமும் அகலாது பந்தித்துக் கொண்டே இருக்கும்
Among the metaphysical entities that constitute Fundamental Ontology and
That consists of BEING, the innumerable anmas and the enchaining fetters,
The innumerable anmas and the fetters are unoriginary just as BEING and in this
If the anma does not move unto BEING, it will continue to be engulfed by the
fetters but
If it does, then and only then, the fetters will not stand with the anmas
patipacu paacam enappakar muunRil: Among the metaphysical entities that
constitute Fundamental Ontology and that consists of BEING, the innumerable
souls and the enchaining fetters
patiyainaip pool pacupaacam anaati : the enchaining fetters and the enchained
souls are just as unoriginary as BEING
patiyinaic enRaNuKaap pacu paacam: In this if the anma does not move unto
BEING, it will remain engulfed by the fetters;
patiyaNukidil pacupaacam nillaavee: But if it does then the fetters will not
stand with it.
திருவள்ளுவர் இக்குறளில் இறைவனோடு இசைந்த வாழ்க்கைப் பொருளே, மலங்களால பந்திக்கப்பட்டிருக்கின்ற ஆன்மா, நின்மலனாகிய இறைவனை அணுகி அவனைப் போற்றிப் புகழ்ந்து அணுக்கமாகிடத்தான் சுத்தமாகிட முடியும், வீடுபேறு அடைந்து பிறப்பறுக்க முடியும் என்று விளக்குகின்றார். இதுவோர் சமயப்பொது வாகும். எல்லா சமயங்கட்கும் பொருந்தும் ஒன்றுமாகும்
இதைத்தான் திருமூலரும் கூறுகின்றார். மெய்கண்டாரும் சிவஞானபோதம் 10வது சூத்திரத்திலும் இதைத்தான் வற்புறுத்துகின்றார். சமலனாகிய ஆன்மா நிமலனாகிய இறைவனைத் தொழுது அணுகி ஏகனாகி இறைபணி நிற்க இந்த மும்மலங்கள் விட்டு விலகும் என்கின்றார்.
இதுவே சைவ சித்தாந்தம் கூறும் வாழ்க்கை விளக்கமாகும் இது மிகத் தெளிவாக திருவள்ளுவரின் தமிழ் இனத்திற்கே உலகிற்கே அருளிய மிகப் பெரிய ஞான நன்கொடையாகும்
வேதாந்தத்தில் இது இல்லை
நான் பன்முறை கூறியுள்ளதை மீண்டும் இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன். ஆதிசங்கரரின் மாயாவாத வேதாந்தத்தில்( இது தமிழ் நாட்டில் தொன்றியும் இருக்கலாம்) மற்றும் ஏனைய வேதாந்தங்களில் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்ற அநாதிபொருளியல் இல்லை. இதனால் இறைவனை நெருங்கி ஏகனாகி மும்மலங்கள் நீங்கி சுத்தமாகி பிறப்பு அறுப்பதே வாழ்க்கையின் நோக்கு என்று அவர்களால் கூற முடியாது. வேதங்கள் விதிப்பதை செய்வது என்றும் மற்றும் வீணான சோதிடக்கலை போன்றவை கூறும்படி நல்ல நாள் நல்ல முகூர்த்தம் என்றெல்லாம் பார்த்து ஒழுகினால் துன்பங்கள் வராது என்றும் ஓர் ஞான குருவை அடைந்து அவனுக்கு அடிமையாகி தொண்டு செய்தால் முத்தி என்றும் இன்னும் பலவாறு மக்களை இறைவனையே தொழுவதிலிருந்து வேறு பொல்லாத வழிகளில் கொண்டு செல்வர்.
இன்றைய தமிழ் உலகில் இந்த வேதாந்த மயக்கில்தான் மக்கள் கிடந்தவாறு இறைவனைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தொழுது அவதிப் படுகின்றனர். திராவிட இயக்கம் தோன்றி இருந்த சிறிது இறை நம்பிகையையும் போக்கிவிட்டது. உண்மையான தெய்வீக வாழ்க்கை மழுங்கிக் கிடக்க எங்கு பார்த்தாலும் ஊழலே மலிந்து கிடக்கின்றது
திருக்குறளின் மீட்சியே நல் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக அமையும் என்று நினைக்கின்றேன். சமயாதீத முறையில் இறைவனைத் தவிற வேறு யாரையும் தொழாத மனவுறுதியோடு மக்கள் வாழ்ந்தால் பண்பாடு உயரும் நாடும் உயரும்
தொடரும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 10
திருக்குறளும் திருகளிற்றுப்படியாரும்-1
என்று தோன்றிற்று சைவ சமயம் என்பதை நாம் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு தொன்மையானது. இப்பொழுது சுமேரு இலக்கியத்திலும் சிவ வழிபாடு இருப்பதைக் காணவும் அங்கு திருகோயில் வழிபாடு மிகத் தொன்மையானது என்பதைக் காணவும் இது உறுதியாகின்றது. இன்று இந்து சமயம் என்றும் மேலும் புத்தம் சமணம் என்றும் கூறப்படும் ஏனைய பாரத மண்ணில் தோன்றிய பிற சமயங்களும் அங்கு ஓர்ளவு இருப்பதையும் காண்கின்றோம்
இந்நிலையில் திருக்கோயிலை மையமாக கொண்ட ஆகமநெறி மிகத் தொன்மையானது என்பதும் ஆகவே பண்டே தூய செந்தமிழில் பல ஆகமங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பதும் உண்மையே. இதுவே நாற்பாத நெறியாக சரியை கிரியை யோகம் ஞானம் என்றவாறு வளர்ந்து பல ஆகமங்களாக எழுந்துள்ளதும் உண்மையாக இருக்கவேண்டும். ஏன் இன்று கிடைக்கும் ஆகமங்கள் வடமொழியில் இருக்கின்றன என்பதும் ஆராயப்படவேண்டிய ஒன்றாக்வே இருக்கின்றது. ஆயினும் திருமூலர் தனது திருமந்திரத்தை ‘சதாசிவ ஆகமம்’ என்றே கூறுவதையும் பிறகாலத்தில் அழகிய செந்தமிழில் ஞானாமிர்தம் போன்ற நூற்கள் இருப்பதையும் காண்க. இங்கு இந்த ஆகமநெறி இன்றளவு வழக்கில் இருக்கும் ஒன்றுதான். 16ஆம் நூற்றாண்டு ‘தத்துவப் பிரகாசம்’ 19ஆம் நூற்றாண்டு பாமபன் சுவாமிகளின் ‘பரிபூரணானந்தபோதம்’ போன்ற எத்தனையோ நூற்கள் ஆகமநெறி வழி செல்பவை.
இனி பண்டே இதற்கு புறம்பாக மெய்ந்நெறியை மையப்படுத்திச் சென்ற சைவ நெறியும் உண்டு, மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றவாறு இறைவன் உண்டா இல்லையா என்பன போன்ற மெய்ஞான அடிப்படைக் கேள்விகளைக் கேட்டு அதன் வழி வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மெய்ஞான வாழ்க்கையும் சைவ வாழ்க்கையாக மலர்ந்துள்ளதையும் காண்கின்றோம்
மெய்கண்டாரியம் எனப்படும் மெய்கண்டாரால் மிகச் சிறப்பாக அற்புதமான சிவஞானபோதத்தின் வழி நிறுத்தப்பட்ட நூலிய அறிவியல் சான்ற சைவ சித்தாந்த நெறி மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்று சென்ற நெறியாகும். இதனையே தொல்காப்பியம் வற்புறுத்தும் மெய்ந்நெறித்து வழி திருகுறள் சாற்றும் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதின் வழியாக எவ்வாறு காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாது திருமூலர் உபதேசம் 30 போன்ற நூற்கள் வழியாக சைவ சித்தாந்தமாக, திருநெறியாக சன்மார்க்கமாக சமயாதீத சைவமாக வளர்ந்து வ்ந்துள்ளதை இத்தொடரில் விளக்கிக்கொண்டிருக்கின்றோம்
அம்மையப்பரே உலகிற்கு அம்மையப்பர்
நம் ஆய்விற்குரியதாக இங்கு முதலில் வருவது திருகளிற்றுப்படியாரின் அற்புதமான முதற்பாடலாகும்
1.
அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்-- அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்
உரை:
தமக்கென எவ்வடிவும் இல்லாத இறைவன் உலகங்களை எல்லாம் தோற்றுவிக்குமா அம்மையப்பர் வடிவில் தோண்றி அந்த நற்காரியத்தைச் செய்கின்றான் என்று அறிக. ஒன்று ஒன்றில் தோன்றி உளவா இறப்பது இவ்வுலகிற்கும் பொருந்த இறைவன் இவ்வுலகங்களை எல்லாம் அவ்வடிவிலே அளித்து உதவுவர். இனி இவ்வாறு எல்லா உல்கங்களையும் தோற்றுவித்து மகிழும் அம்மையர் வடிவ இறைவன் இவ்வுலகங்களில் கட்டுண்டு அடங்காது, அனைத்திற்கும் அப்புறத்தில் நின்றவாறு எல்லாம் செய்வர் காண். இதனால் இப்புறத்தில் உள்ளிடாக இருந்தாலும் ஆங்கு எளிதில் காண வாராது அங்கு இல்லார்போல் இருப்பர் காண்.
இங்கு நாம் உடன் ஓர் ஒற்றுமையைக் காண்கின்றோம். எவ்வாறு திருக்குறள் முதல் குறளிலேயே உலகை வைத்தே இறையுண்மை கூறிச் செல்கின்றதோ அதேப் போலத்தான் இங்கும்- உலகை வைத்தே உலகிற்கு முதலாக அம்மையப்பராக இறைவன் இருக்கின்றார் என்கின்றார் உய்யவந்த தேவர். இதேப் போன்றுதான் சிவஞானபோதமும். மெய்ஞான வாழ்க்கையின் அடிப்படைக் கேள்வியே இறைவன் உண்டா இல்லையா? என்பதே. இதனை துல்லியமாக விளக்காவிட்டால் ஏனைய எல்லா உபதேசங்களும் வலுவற்றதாக விழுந்துவிடும், சித்தார்த்தர் இந்தக் கேள்விக்கு உறுதியாக விளக்காது மௌனம் சாதித்ததால் பின்னால் அவர் கூறிய அறநெறிகள் அடிப்படையற்ற கூறுகளாக விழுந்துவிட்டன.
தமிழ நெறியில் இறையுண்மை
இங்கு மூன்று வகைச் சிந்தனைகளைக் காண்கின்றோம். முன்பே இது தொடர்பாக யான் ஆங்கிலத்தில் எழுதியக் குறிப்பு மீண்டும் இங்கு.
In the vast body of Saiva metaphysical texts there are different cosmologies quite often in the same text and apparently without any contradictions. They are complementary to each and which highlight different views. The three most prominent are 1. The Physical Cosmology, 2. The Psychological Cosmology and 3. The Biological Cosmology.
In the first the fundamental physical processes of destruction and regeneration taken as the five fold universal Praxis lead them to conclude that BEING is the SaGkaara KaaraNan, the Primordial Cause of world dissolution and hence its regeneration and so forth. In the second we have the presence of consciousness taken as a fundamental and irreducible stuff of the cosmos and with the truth that the creature understanding is infected with Cuddu, reference and hence temporality of time consciousness and that it hinges on the Supreme Consciousness free of this . It is said there is BEING of this Supreme Consciousness and who is the GROUND of the creature consciousness and so forth.
The third model , the biological, notes that all living creatures are male and female and are subject to deaths and rebirths. Noting that this also applies to the inanimate objects, they extent the biological and affirm that the cosmos as a whole also has Parentage , the Ammaiappar, the World Mother Father just like ordinary living creatures that come to birth and die at a certain time. The world as a whole also organismic- comes to birth and then at a certain time die only to be reborn and so forth.
மேலே காட்டப்பட்ட முதற்பாடல் உலகிற்கு பெற்றோரியம் காணும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். உலகமே ஓர் பிரசவிக்கப்பட்ட பெரும்பொருள் என்று நாம் காணும்போது அதற்கு பெற்றோர்கள் என்ற ஓர் பெரும் பொருள் இருக்கவேண்டுமே. ஆண்மையும் பெண்மையும் அகத்தே கொண்டிருக்கும் ஓர் பெரும்பொருள்தானே இந்த உலகத்தை சனிக்க முடியும்? அப்படி எனில் அது அம்மையப்பராக வடிவெடுக்க வல்ல ஓர் மாப்ரும் சித்துப்பொருளாகவல்ல இருக்கவேண்டும்?
தோன்றி நின்று அழியும் திறத்து இவ்வுலகம் ஓர் ஈன்று புறந்தள்ளப்பட்ட பொருள் என்றும் காணவர, அதன் முதல் அம்மையப்பராக காணப்படுகின்றது.
வியப்பென்னவென்றால் திருக்குறளில் முதற் குறட்பாவில் இக்கருத்தும் புதைந்துகிடக்கின்றது.
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகர முதல் எழுத்தெல்லாம்: எல்லா மொழிகட்கும் உறுப்பாக விளங்கும் பொருண்மைத் தாங்கி வரும் எழுத்துக்கள் எல்லாம், இந்த பொருண்மைகளைத் தேற்றும் ஆன்மாவால் மூல ஒலியாகிய நாதசொரூபம் அல்லது ஓங்காரத்திலிருந்து பலவாறு தேற்றப்படுவதுபோல, ஆதிபகவன் முதற்றே உலகு: உயர்திணை என்றும் அஃறிணை என்றும் ஒன்றென்றும் பலவென்றும் பலவாறு பகுத்து வகுத்ததாகக் காணப்படும் இவ்வுலகை இவ்வாறு பகுத்து வகுத்துத் தரும் பல பகவர்களாக பல தெய்வங்கள் இருந்தாலும் இவற்றிற்கெல்லாம் ஆதியாக முழுமுதலாக இருக்கும் ஆதிபகவனையே நிமித்தகாரண முதலாக உடைத்து இவ்வுலகம் என்கின்றார் தான் எவ்வாறு இறையுண்மையை உணர்ந்தேன் என்பதை விளக்கும் வகையில்
இங்கு ‘பகவன்’ என்ற சொல்லில் வரும் ‘பா, பகு’ என்ற சொல், தருதல் அருள்தல் கொடுத்தல் போன்ற பொருண்மைகளோடு வர, அதனை ‘ஈனுதல்’ என்று கொண்டால் ஆதிபகவன் ஆகிய உலக முதல் ‘அம்மையப்பர்’ ஆகின்றார்.
இன்றளவு இறைவனை அம்மையப்பராக வழிபடுதல் சைவத்திற்கு உரிய ஒன்றாக இருக்கின்றது. சுமேருத் தமிழ் இலக்கியத்தில் வரும் ‘ஈன்.அன்னை” இந்த அர்த்தநாரி வடிவிலும் தோன்றுவதாக ஓர் குறிப்புண்டு. மேலும் ‘ஈன்.அன்னை’ என்றவாறு அம்மை அழைக்கபப்டுவதிலேயே இந்த அம்மையப்பர் கருத்தும் அடங்கி இருப்பதைக் காண்க.
மிகத் தொன்மையான இக்கருத்தை திருவள்ளுவர் மறவாது தமது நூலிலும் வற்புறுத்தி இறையுண்மையை நிறுத்தியுள்ளார் என்றும் அதுவே சைவர்கட்கும் உடன்பாடான ஒன்றாய் சைவ சித்தாந்தமாக வளர்ந்துள்ளது என்றும் தெரிகின்றது.
தொடரும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 11
திருக்குறளும் திருகளிற்றுப்படியாரும்-2
துறவு என்பது ஏறக்குறைய எல்லா சமயங்களும் போற்றும் ஒன்றாகும். எல்லா சமயங்களின் உடபுகுந்து அவற்றின் அடிப்படைகளை பொதுமைகளை செவ்வே புரிந்துகொண்ட திருவள்ளுவர், தான் கூறும் உட்சமயக் கூறாக துறவினைப் பற்றி அதனைப் பற்று அறுத்தல் என்பதாக பல குறட்பாக்களில் பாடி இருக்கின்றார். பற்ரு அறுத்டலே மீண்டும் பிறவாமை ஈட்டித் தரும் என்றும் கூறுகின்றார். அவற்றின் விளக்கமாகவே விரிவாகவே திருகளிறுப்படியாரில் வரும் பல பாடல்கள் இருக்கின்றன.
இங்கு கருத்து ஒற்றுமையோடு சொல் ஒற்றுமையையும் இருப்பது உய்ய வந்த தேவர் திருக்குறளை ஆழக்கற்று அதன் பல கருத்துக்களை திறன்பட புரிந்துகொண்டு சைவம் ஆக்கியுள்ளார் என்பது வெளிப்படை.
இவ்வகையில் நாம் அலச இருப்பது கிழ் வரும் திருகளிற்றுப்படியார் பாடலே யாகும்.
31.
பற்றினுட் பற்றை துடைப்பதொடு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற--- பற்றதனைப்
பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றம் இது சொன்னேன் அறி.
பொருள்:
பாசத் தளைகளாகிய பற்றுக்களில் அவற்றை எல்லாம் துடைத்து இல்லாதுபோக்கும் பற்று என்ற ஒன்று இருக்கின்றது. அதுவே இறைப்பற்று அல்லது மெய்ப்பொருள் காண்வேண்டும் என்னும் விருப்பமாகும். அதனைப் பற்றி ஞானம் தேடியவாறு நலமே வாழ்ந்து மெய்ப்பொருள் கண்டு அவ்வாறு பார்கின்ற முகத்தானே பாசத் தளைகளாகிய பற்றுவிடில் அவற்றால் அனூத்துவப்பட்டு பசுவாக இருக்கும் ஆன்மா தானே சிவத்துவம் பெற்று பரமாகி வீடுபேறு மகிழும். இதுவே அனைத்தையும் அற்று வீடுபேறு அடைதற்கு வழி என்று சொன்னேன், அறிந்துகொள்!
இங்கு பற்று’ என்றால யாது எனும்போது திருவள்ளுவர் காலத்திலேயே ‘பற்று’ என்றால் பாசத்தளைகள் என்றே உணரப்பட்டுள்ளது.
காண்க:
திரிகடுகம்
22.
பற்று என்னும் பாசத் தளையும் பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும் தெற்றெனப்
பொய்த்துரை எனும் புகை இருளும் --- இம்மூன்றும்
வித்து; அற வீடும் பிறப்பு
இங்கு ‘பாசத் தளை’ என்னும் பிறகாலத்து சைவ சித்தாந்த கலைச்சொல் பயில்வதைக் காண்க. பாசங்கள் என்னும் போது அவற்றை ஆணவம் கன்மம மாயை என்பர் பிறகாலத்து சிந்தனையாளர்கள். இது பத்தி எழுச்சியின் போதே தோன்றிவிட்ட கருத்துமாகும். திருமந்திரத்தில் பரக்கக் காணலாம். மிகத் தொன்மையான புராணங்களில் இக்கருத்து முப்புரம் செற்ற கதையில் வருகின்றது. முப்புரமாவது மும்மல காரியம் என்பார் திருமூலர்.
இனி திருக்குறளில் பல குறட்பாக்கள் இதற்கு மூலமாக இருப்பதைக் காணலாம். உய்ய வந்த தேவர் இவற்றை ஆழச் சிந்தித்தே மேலே காட்டியுள்ள பாடலைப் பாடி இருக்கவேண்டும்.
35. துறவு
350
பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
இதற்கு பரிமேலழகர் உரை இவ்வாறு செல்லும்:
எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை, இதுவே நந்நெறி என்று மனத்துக் கொள்க; கொண்டு அதன்கண் உபாயத்தை அம் மனத்தால் செய்க விடாது வந்து பற்று விடற்கு.
இங்கு பற்றற்றான்’ என்பதை ‘பற்றற்ற இறைவன்’ என்கின்றார். இது இயல்பாகவே அநாதியே பாசத் தளைகளால் கட்டுபடா நிமலனாகிய இறைவனைக் குறிக்கும்.
இதனையே ‘பற்றைத் துடைப்பதொரு பற்று’ என்றவாறு உய்யவந்த தேவர் ‘இறைப் பற்று’ என்றும் ‘மெய்ப்பொருள் பற்று’ என்றும் விதந்து கூறுகின்றார். மேலும் வள்ளுவரின் கருத்தை விரிவாக்கம் செய்வது போன்று, இறைப் பற்றே உலகியல் பற்றுக்களை அதாவது மும்மலங்களால் வரும் பாசத் தளைகளை தெற்றென அறிந்தும் அவற்றை பரிந்திருந்து அதாவது வாழ்ந்தும் மேலும் தக்க விழிகளோடு பார்த்து பற்றுகளை விடில் ஆன்மா பரமாகும் என்றும் கூறுவதைக் காண்க.
இவை எல்லாம் திருவள்ளுவர் பரிந்துரைக்கும் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற அடிப்படை முழக்கத்தொடு ஒத்துவருவதாகும்
மேலும் கீழ்வரும் குறளும் கருதற்குரியதே
349
பற்றுஅற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
இங்கு திருவள்ளுவர் ‘பிறப்பு அறுக்கும்’ என்று வீடுபேறு அடைதலைப் பற்றிக் கூற உய்யவந்த தேவரோ அதனை ஆன்மா ‘தானே பரமாகும்’ என்கின்றார், அதாவது ஆன்மா அணுத்துவம் போக்கி பரத்துவம் எய்தி இறைவனோடு வேறற இரண்டற்று நிற்கும் என்கின்றார்.
இதனால் திருக்குறளிற்கும் மெய்கண்டாரிய சைவ சித்தாந்தத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு வலுப்பெறுகின்றது.
இவ்வாறு இன்னும் பல சான்றுகள் உண்டு, அவற்றையும் அடுத்து வரும் கட்டுரைகளில் காணவிருக்கின்றோம்
தொடரும்
உலகன்
தொல்காப்பியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்
இடுகை 12
நேற்று மீண்டும் திருமந்திரத்தைப் புரட்டிக்கொண்டிருந்த போது, திருக்குறளின் பிழிவாகவே அமைந்துள்ள திருமந்திரப் பாடல் ஒன்றினைக் காண நேரிட்டது. திருகளிற்றுப்படியார் பாடல் நேராக திருக்குறள் பாவின் தாக்கமாக இல்லாது இந்த திருமந்திரப் பாடல் தக்கமாகவேப் படுகின்றது.
காண்க:
9ஆம் தந்திரம்
2865
பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள்
கற்று அற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
கற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியைப்
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே
இதற்கு ஜி. வரதராஜன் அவர்கள் நல்லவொரு உரையும் தந்துள்ளார்.
அது இவ்வாறு செல்லும்
உலகப் பற்றுகளை விட்டவர் பற்றிநின்ற மேலான பொருளும், கல்வியைக் கற்று அதன் முடிவான சிவஞானம் எய்தியவர் விரும்புகின்ற கண்ணுதலும், கல்வியின் முடிவினை உணர்ந்தோர் பொருந்தி நிற்கும் என் சோதியும் ஆகிய சிவபெருமானை அடைந்து பொருந்தியவர் பேச்சினை விட்டு நிற்பவர் ஆவர்
இங்கு திருக்குறளில் பற்றற்றான் பற்றாகிய இறைப்பற்றே, சாதாரண உலகப் பற்றை நீக்க வல்லது என்ற கருத்து இழையோடுகின்றது என்பதொடு. அதனை அடைய ஓர் சாதனமாக திருவள்ளுவர் பரிந்துரைத்த கற்றலையே கலவியையே திருமூலரும் இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.
மேலும் ‘வாலறிவன்’ என்று வள்ளுவர் குறிப்பிடும் இறைவனே இங்கு ‘கண்ணுதல்’ என்றும் சோதி வடிவ அதாவது உருவமற்ற இறைவன் என்றும் அவனது தரிசனத்தின் போது மோனமே கைக்கூடும் என்று சின்முத்திரையே சிவஞானத்தை உணர்த்தும் முத்திரை மொழி என்ற குறிப்பும் இருப்பதைக் காண்க.
இவ்வாறு திருமூலரும் திருக்குறளின் தாக்கத்திற்கு ஆளாகிய ஓர் தமிழ் சிவஞானி என்றே தெரிகின்றது.
உலகன்