சுந்தரகாண்டம்.

159 views
Skip to first unread message

shylaja

unread,
Jul 22, 2014, 1:47:32 AM7/22/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்


-- கூஜந்தம்  ராம  ராம  இதி மதுரம்  மதுராக்ஷரம் |
ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் ||

(குயில் ஒன்று கூவும் 
மதுவாய்ச்  சொல்  மிழற்றிக் 
கற்கண்டு  போல்  இனிதாய் 
ராம  ராம  என  நித்தம் 
கவிதையின்  கிளைமீது  வீற்ற
புவிபுகழ் முனி வால்மீகிப்
பதமலர்  பணிவதென் பேறே.)
 
வால்மீகேர்  முனி  ஸிம்ஹஸ்ய  கவிதா  வன  சாரிண: |
ச்ருண்வந்  ராமகதா  நாதம்  கோ  ந  யாதி  பராங் கதிம் ||  )

(கவிதையாம்  கானில்  திரியும்
தவமுனி  வால்மீகிச்  சீயம்
எழுப்பிடும்  ராம   நாதம்
கேட்டவர்   எவர்தான்  செல்லார்
கேடிலா  உயர்ந்த  மார்க்கம் )

{அர்த்தம் முன்பு குழுமத்தில்  அளித்தவர்   ஸ்ரீரங்கம் மோகனரங்கன் நன்றி அரங்கனாருக்கு )


ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்/

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்

 இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். 

ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். 

ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். 

அனுமனுக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு ஆகவே சுந்தரகாண்டம் . அனுமனின் மகிமையை நன்குவிளக்கும் அழகுகொண்டதால் சுந்தரகாண்டம் . சீதையும் ராமனும்  ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அறிந்துகொள்ளும் மகிழ்ச்சியான பகுதி என்பதால் சுந்தரகாண்டம். அழகெ உருவான அன்னைசீதையின் மனம் அனுமனைக்கண்டு மகிழ்ச்சியடைவதால் சுந்தரகாண்டம்  .எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம்  . அழகென்பதே மகிழ்ச்சிதானே? 

சுந்தரகாண்டம்  கடந்தவாரம் மகிழ்ச்சியுடன் ஆரம்பமானது .
ராமர் பட்டாபிஷேகப்படமுடன் அதில் பணிந்துவீற்றிருந்த அனுமனுக்கு வடைமாலை சாற்றி மேலும் பூமாலையும் அணிவித்து கம்பனின் பாமாலையை  கையில் எடுத்தார் திரு ஹரிகிருஷ்ணன்.

கடல்தாவுப்படலம் .  காப்புச்செய்யுளுடன் தொடங்கியது 
இலங்கை நகரை  தனது விஸ்வரூப வடிவில் கண்ட அனுமன் கால்கள் ஊன்றியெழுந்ததால்  மகேந்திரமலையில் ஏற்படும் அதிர்வுகளை,' 

வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள்தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.'

என்று  வார்த்தைகளிலேயே  வீரம் தெறிக்க  கம்பன் அழகுற விளக்குவதை ரசிக்கும்பொழுதில்  ...

இந்தப்பாடல்  என்னவோ மிகவும் கவர்ந்தது பல  வகை இனிப்பில் ஓரிரு   இனிப்பு மட்டும் சற்று  அதிகமாக கண்ணையும் கருத்தையும் கவர்வதுபோல:) 

மைநாகமலை  அனுமனிடம்  வேண்டிக்கொண்டது 'என்னிடத்தில் தங்கி யான் செய்யும் விருந்தினை அங்கீகரிப்பாயாக' என்று  .

அனுமன் அதற்கு  மந்தகாசசிரிப்பை உதிர்த்துவிட்டு  சொல்கிறானாம் ....

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;

அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,

பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்தபோதே,

இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன்மேல் இனி ஈவது என்னோ?


(வருந்தேன்,அருந்தேன்,பெருந்தேன்,இருந்தேன்! நுகர்ந்தேன்....சஹானா ராகத்தில் அமைந்த பழைய பிரபலதிரைப்பாடல் நினைவுக்குவரவேண்டுமே )

அன்பின்  வலிமையை அதேநேரம் தன பணியின் நோக்கத்தை  அழகாக சொல்கிறார் சொல்லின் செல்வன் அனுமன் .


 

 என் துணைவனான ராமன்  என் மீது   வைத்துள்ள அன்பு  என்னைக்களைப்படையச்செய்யாது
  என் ஆசை நிரப்பின் அல்லால் ..என் மனோரதம் நிறைவேற்றலல்லாமல்  இனி இப்பொழுது யான் யாதும் அருந்தேன் .

பெருந்தேன் பொழி சார நின் அன்பு  மிகுதியான தேனைசொரிகின்ற  சாரல்=பக்கங்களை (தாழ்வரைகளை)  உடைய உன் பிரியமானது என் மீது உண்டானபோதே  இருந்தேன் நுகர்ந்தேன் மலையான உன்மீது தங்கி விருந்துண்டவனானேன்)  இதின் ஊ ங்கு --இந்த அன்பினைக்காட்டிலும்   இனி=இன்னமும் 
, ஈவது==நீ எனக்குக் கொடுக்கக் கூடியது  
உண்டே ---உண்டோ ?(இல்லையென்கிறபடியாக) 

'ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், , அந்த  வேலை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும். அதற்காக  சென்றுகொண்டிருக்கும் என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.

பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா? அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கி சாப்பிட்டு விட்டேன்  என்றாகிறதே ?"என்பதை கம்பன் ,அனுமன் வாயிலாக சுந்தரத்தமிழில் பாடலாய்க்கொடுத்துள்ளது பாகாய் இனிக்கிறது அல்லவா? 

***********************************************************************************************

 . 

//வெற்றியைத்தேடிக் கொண்டிருப்பவர்களை

  வெற்றி தேடிக்கொண்டிருக்கும் //

Rama_1.JPG
Food.JPG

Ranjani Narayanan

unread,
Jul 22, 2014, 2:24:01 AM7/22/14
to vall...@googlegroups.com
அன்புள்ள ஷைலூ,
சுந்தரகாண்டத்தில் எல்லாம் அழகு என்று விளக்கிய ஸ்லோகம் அருமை. 'தேன்' என்று முடியும் பாடல் அனுமன் 'சொல்லின் செல்வன்' என்பதைக் காட்டுகிறது.

//ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் || //
ஆரூஹ்ய கவிதா சாகாம்// என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தவறானால் மன்னிக்கவும்.

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - 'நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்' என்று ஆரம்பிக்கும் பத்து பாசுரங்களும் சுந்தர காண்டத்தில் அனுமன் பிராட்டியினிடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இராமாயணம் முழுவதையும் சொல்லும் பாசுரங்கள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் எங்கள் அகத்தில் தினமும் சேவிப்போம். தேனான தமிழில் தித்திக்கும் பாசுரங்கள். 

சுந்தர காண்டத்தின் அருமையான அனுபவத்தை (வடை, சுண்டல், புளியோதரையுடன்) பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அன்புடன்,
ரஞ்சனி 





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Ravi Subramanian

unread,
Jul 22, 2014, 2:56:57 AM7/22/14
to vallamai

https://archive.org/details/04Track4_20140522

Click on above link to a song by me on lord Anjaneyab( of sundara kandam) music Ramesh Vinayagam  sung by Pt sanjeev abyankar

Su.ravi

Anbu Jaya

unread,
Jul 22, 2014, 3:30:27 AM7/22/14
to vallamai
நல்ல பதிவு. நன்றி.



அன்புடன்,
அன்பு ஜெயா



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 22, 2014, 5:20:37 AM7/22/14
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
சுந்திர மொழி திருமிகு ஷைலஜா.

கம்பராமாயணம் முற்றோதலின் பயன் உங்கள் பதிவாக மலர்ந்துள்ளதன் மூலம் உறுதியாகிறது. அதிகம் அறிந்திராத இரண்டு பாடல்களை எடுத்து விளக்கியுள்ளது அருமை. “வானவன் வைத்த காதல் துணை” என்ற அனுமன் சொல் கவர்கிறது.
குன்று launching pad போன்று ஆனது என்று நண்பர் ஒருவர் கூறியதை முற்றோதல் காணொளியில் கேட்டபோது மகிழ்ந்தேன். இப்பொழுது பாடல்களைப் படித்து இரசிக்கத் தந்துள்ளீர்கள்.
நன்றி.பாராட்டு.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-07-22 11:17 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Jul 22, 2014, 6:35:47 AM7/22/14
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
மிக்கநன்றி  வினைதீர்த்தான் ஐயா.  எத்துணை ஆர்வமாக முற்றோதலை தாங்கள் கவனிக்கிறீர்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என்னைத்தவிர பலர் வெகுதொலைவிலிருந்து  வகுப்புக்குவருகிறார்கள் . அதுவும் இளம்வயதினர்..  அனைவரையும் கவர்கிறது கம்பனின் சொற் சித்திரம்.

அனுமான் 'இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?' என்று கூறுவது போலவே ராமரும் குகனுக்கு கூறுகிறார். ..

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் 
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே? 
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும் 
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான். 
 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/” வானவர் உரைத்தலும், 'மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்' எனா,
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான் “

கம்பன் 

shylaja

unread,
Jul 22, 2014, 6:36:34 AM7/22/14
to vallamai
நன்றி தங்களுக்கு .

shylaja

unread,
Jul 22, 2014, 6:43:24 AM7/22/14
to vallamai
வானரகுலவீரசுந்தரம்   பாடல் அருமை (.என்ன ராகம் சட்டென நினைவுக்கு வரவில்லை )

. . ஏ எம் ராஜாபோல இதமான குரல் ..ஹம்மிங் எல்லாம் அமர்க்களம் ..இசைந்து உடன் பாடுபவர்களும் உணர்வுபூர்வமாய் இசைக்கிறார்கள் . உங்கள் பாடல் வரிகள் சுந்தரம். 

shylaja

unread,
Jul 22, 2014, 6:47:39 AM7/22/14
to vallamai
ரஞ்சனி மேடம்  விரிவாக  விரைவில் பதில்தருகிறேன் நன்றி 

N. Ganesan

unread,
Jul 22, 2014, 9:03:21 AM7/22/14
to vall...@googlegroups.com


On Monday, July 21, 2014 11:24:01 PM UTC-7, ranjanidoraiswamy wrote:
அன்புள்ள ஷைலூ,
சுந்தரகாண்டத்தில் எல்லாம் அழகு என்று விளக்கிய ஸ்லோகம் அருமை. 'தேன்' என்று முடியும் பாடல் அனுமன் 'சொல்லின் செல்வன்' என்பதைக் காட்டுகிறது.

//ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் || //
ஆரூஹ்ய கவிதா சாகாம்// என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தவறானால் மன்னிக்கவும்.

சரிதான்

||śrīvālmīki namaskriyā||

kūjantaṃ rāma rāmēti madhuraṃ madhurākṣaram|
āruhya kavitāśākhāṃ vandē vālmīkikōkilam ||1||

vālmīkērmunisiṃhasya kavitāvanacāriṇaḥ|
śṛṇvan rāmakathānādaṃ kō na yāti parāṃ gatim ||2||

yaḥ piban satataṃ rāmacaritāmṛtasāgaram|
atṛptastaṃ muniṃ vandē prācētasamakalmaṣam ||3||


நா. கணேசன்

crazy mohan

unread,
Jul 22, 2014, 9:16:04 AM7/22/14
to vallamai, mintamil
அன்பு ஷைலஜா, அற்புதம்....அனுமனை நினைவூட்டியமைக்கு....’’மருந்துண்ணும் போது குரங்கெண்ணம் கூடாது’’ என்பார்கள்....நாம் எண்ணும் குரங்கு வாயுமைந்தன் மாருதியாய் இருக்கும் பட்ஷத்தில், கொண்ட மருந்து சமய சஞ்சீவியாய் மாறலாம் அல்லவா....!

    ‘’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
     மந்திர  சக்திமிகு  மாருதியே, -எந்திர,
     சம்சார  தன்னிலே, சந்தோஷம் காணருத்ர,
     அம்சாவ  தாரா அருள்’’....

   ‘’அனுமந்த ராயா, அசகாய சூரா,
     தினமுந்தன் பாதம் தொழுவேன், -எனையிந்த,
     பாழும் மனமென்ற, ஆழியைத் தாண்டிடத்,
     தோழா கொடுத்திடு தோள்’’....கிரேசி மோகன்....
new13 copy.jpg

shylaja

unread,
Jul 22, 2014, 9:42:46 AM7/22/14
to vallamai
2014-07-21 23:24 GMT-07:00 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
அன்புள்ள ஷைலூ,
சுந்தரகாண்டத்தில் எல்லாம் அழகு என்று விளக்கிய ஸ்லோகம் அருமை. 'தேன்' என்று முடியும் பாடல் அனுமன் 'சொல்லின் செல்வன்' என்பதைக் காட்டுகிறது.

//ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் || //
ஆரூஹ்ய கவிதா சாகாம்// என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தவறானால் மன்னிக்கவும்.>>>

//நீங்கதான் என்னை மன்னிக்கவீண்டும் ரஞ்சனி மேடம்  உங்கள் திருத்தமே சரியானது நன்றி அதற்கு .

பெரியாழ்வார் திருமொழி பற்றி உங்கள் மடல்முலம் தெரிந்துகொண்டேன் 
கிருஷ்ண வைபவம் மட்டும் அவர் பாடல்களில்  ஓரளவு பரிச்சயம் ஆனால் உங்களால்  இன்று இதனையும் அறிந்துகொண்டு கண்டிப்பாக  இனி நானும் வாசித்துவிடுவேன்.//



--
அன்புடன்
ஷைலஜா.

/” //ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!//
பாரதி .


shylaja

unread,
Jul 22, 2014, 9:46:15 AM7/22/14
to vallamai
முந்தைய மடலில் சொல்ல மறந்துவிட்டேனே  சுந்தரகாண்ட தொடக்க நாள் அன்று  மூவகை சுண்டல்கள்  தயிர்சாதம் வடை  பாதாம்கீர் என  பிரசாதங்கள் செவிக்குணவு முடிந்ததும்  வயிற்றையும் நிறைத்தன 

shylaja

unread,
Jul 22, 2014, 9:46:56 AM7/22/14
to vallamai
நன்றி திரு கணேசன்.

shylaja

unread,
Jul 22, 2014, 9:54:26 AM7/22/14
to vallamai, mintamil
ரொம்ப மகிழ்ச்சியும் நன்றியும் கிரேசி சார் !.ஆமா  எப்படி இப்படி வெண்பாக்களை அள்ளி அள்ளி  உங்களால் கொடுக்கமுடிகிறது? அனுமனின் அருள் தானோ  என்னவோ! ..Amazing really!
மலைதூக்கி வரும் மாருதியின் படமும் அழகு  !

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 22, 2014, 10:04:52 AM7/22/14
to வல்லமை
கண் முன்னால் நிகழ்வது போல் இருந்தது அக்கா!.. மிக அருமை!... தாங்கள் எடுத்துக் கொண்ட பாடல்களும் அதை விவரித்த விதமும், பாராட்ட வார்த்தைகளேயில்லை.

சுந்தரகாண்டம் படித்தால், முடியாத காரியங்களையும் முடித்து வைப்பார் 'அஸாத்ய சாதக ஸ்வாமி!'...எத்தனையோ பக்தர்கள் இதைக் கண்கூடான உண்மை என்று கண்டுள்ளனர்..நேரில் வர முடியாத குறையை பெருமளவில் தீர்த்தது தங்கள் பதிவு.. மிக்க நன்றி தங்களுக்கு!.

பிரசாதங்களை படமா மட்டும் போட்டுட்டீங்களே!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-22 16:17 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​                
​               

Ranjani Narayanan

unread,
Jul 22, 2014, 10:11:38 AM7/22/14
to vall...@googlegroups.com
அன்புள்ள பார்வதி, 

கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் நான் மேலே குறிப்பிட்டிருக்கும் பாசுரங்கள் இருக்கின்றன. சுலபமான தமிழ் பாசுரங்கள். தொடர்ந்து சேவித்து வந்தால் வெகு சீக்கிரம் மனதில் படிந்துவிடும். இவையும் சுந்தரகாண்ட பாசுரங்களே. 
சிறிய விளக்கமும் அதிலேயே இருக்கிறது. 

அன்புடன்,
ரஞ்சனி 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 22, 2014, 10:19:06 AM7/22/14
to வல்லமை, மின்தமிழ்
ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனி மேடம்!. சேமித்துக் கொண்டேன்!.. கட்டாயம் சேவிக்கிறேன்..மீண்டும் தங்களுக்கு என் நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-22 19:41 GMT+05:30 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
​          

coral shree

unread,
Jul 22, 2014, 10:45:40 AM7/22/14
to vallamai
நல்ல சுவையான பகிர்வு. நன்றி ஷைலு.

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2017, 4:40:19 AM5/30/17
to வல்லமை
ஷைலஜாவின் எழுத்து கண்ணில் பட்டது. அருமையாக இருக்கிறதே! 
ஏன் தொடர்ந்து அனைத்துக் காண்டங்களிலும் உங்களுக்குப் பிடித்த செய்திகளை இவ்வண்ணம் அழகுற இயம்பலாமே! 

*** 

Dhivakar

unread,
May 30, 2017, 2:20:55 PM5/30/17
to vallamai
ஷைலஜாவின் எழுத்து மிளிர்கிறது. வாழ்த்துகள். 

அன்புடன்
திவாகர்

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 31, 2017, 1:36:41 PM5/31/17
to vallamai


30 மே, 2017 ’அன்று’ முற்பகல் 1:40 அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

ஷைலஜாவின் எழுத்து கண்ணில் பட்டது. அருமையாக இருக்கிறதே! 
ஏன் தொடர்ந்து அனைத்துக் காண்டங்களிலும் உங்களுக்குப் பிடித்த செய்திகளை இவ்வண்ணம் அழகுற இயம்பலாமே! 


அன்றே உங்கள் கண்ணில்படாததால் இயம்புவதை நிப்பாட்டினார். 

Mohanarangan V Srirangam

unread,
May 31, 2017, 1:38:31 PM5/31/17
to vallamai
ஆம் ஐயா. நிரந்தரம் அற்ற நிலைமையில் இருப்பதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. என் தவறுதான். 

--

வேந்தன் அரசு

unread,
May 31, 2017, 4:37:12 PM5/31/17
to vallamai


31 மே, 2017 ’அன்று’ முற்பகல் 10:38 அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

ஆம் ஐயா. நிரந்தரம் அற்ற நிலைமையில் இருப்பதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. என் தவறுதான். 


உண்டேதி ஒக மொகுடு. வாடு பண்டகநாடு பரதேசம் போயாடு


Reply all
Reply to author
Forward
0 new messages