வாதம் போக்கும் மூலிகைகள்

67 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 7, 2023, 12:52:10 AM11/7/23
to வல்லமை, hiru thoazhamai
வாதம் போக்கும் மூலிகைகள்

வாதம், பித்தம், சிலேட்டுமம் உடலில் எப்போதும் சுரப்பது. வாதம் நுரையீரலில் மூச்சு திணறல், நெஞ்சக  நோய், சிறுநீரக நோய், ஈறு வீங்கி பல் ஆட்டம், பல் நகர்வு, பல் வீழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இதற்கு வாழை வடி நீர், முட ஆட்டுக்கால்  கிழங்கு, மூக்கிரட்டை சாறு ஆகியன பெரிதும் உதவும்.   

வாழை வடிநீர்: மாலைப் பொழுதில் வாழைக் கன்றின் மேல் பகுதியை வெட்டிவிட்டு வெட்டிய பகுதிக்கு சற்று கீழே ஒரு plastic பையை கட்டி விட்டு அதன் இரு முனையையும் ஒரு clip போட்டு இறுக்கவேண்டும். இப்போது வாழையில் இருந்து நீர் சொட்டு சொட்டாக கசிந்து பையில் வந்து சேர்ந்து விடும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரில் 15-20 ml குடித்து வரவேண்டும். எஞ்சியவற்றை frig இல் சேமித்து வைக்கலாம். இப்படி 15 நாள் குடித்தால் குடல் புண் முற்றாக ஆறும். வாழையில் sodium bicarbonate உள்ளதால் உடலில் உள்ள acidity ஐ கரைத்து alkalaize செய்யும். குடல் புண் புற்று நோயாக மாறுவதை தடுக்கும். joint pain, சிறுநீர் கல், வாதம் போன்றவற்றை வீழ்த்தும். இடது கை அக்குள் ஓரம் அவ்வப்போது ஏற்படும் வலி எதிர்கால நெஞ்சக நோய்க்கு அறிகுறி என்பர். அதையும் இந்த வாழைவடி நீர் காணாமல் அடிக்கும். ஆனால் வற்றல், வடகம், அப்பளம் போன்ற எண்ணெய் பலகாரத்தையும், வறுவல், பிஸ்கட், கடலை மாவு காரவகைகள் ஆகியவற்றை இனி உணவில் எப்போதும் தவிர்க்க வேண்டும். மீறி இவற்றை உண்டால் மீண்டும் வாதம், பித்தம் கூடி குடல் புண் உண்டாகும்.

வாழைவடி நீரை எடுக்கும் போது வாழைக்கன்றின் வேரில் ஒரு நாளில் நான்கு பொழுது தண்ணீர் ஊற்றவேண்டும். இந்த நீர் தான் உறிஞ்சப்பட்டு நீராக கசிகிறது. இப்படி தண்ணீர் ஊற்றினால் தொடர்ந்து மூன்று நாளுக்கு ஒரே வாழைக்கன்றில் இருந்து வடிநீர் கிடைக்கும். வாழைக்கன்று மீண்டும் துளிர்த்து வளரும். இப்படியே மீண்டும் இன்னொரு கன்றில் இருந்து இதே போல் வடிநீர் எடுக்கவேண்டும். 15 நாள் உண்டால் காய், கால் மூட்டுகளில் உள்ள பிடிப்பு தளர்ந்து வாதக் கட்டு விலகும்.

image.png
image.png
முட ஆட்டுக்கால் கிழங்கு: முடஆட்டுக்கால் கிழங்கை 3 கிலோ வாங்கி Frig இல் வைத்து சேமித்து ஒவ்வொரு நாளும் காலை 250 கிராம் கிழங்கை அளந்து எடுத்து மேல் தோலை வெட்டி சீவி வெள்ளை கிழங்கை மட்டும் சல்லடையில் சீவி அல்லது mixie இல் அரைத்து எதுத்து அதை 1,300 ml நீரில் போட்டு அதனுடன் சிறிதளவு மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை நசுக்கி அதிலே போட்டு 45 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைத்து அந்த வெந்நீரை சிறிது ஆறவிட்டு வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும். இப்படி 10- 15 நாள் குடித்தால் பல் வாதம் நீங்கி ஈறு கெட்டி ஆகி பல் ஆட்டம் நின்று பல் ஆழும்.
மூக் கிரட்டை: மூக்கிரட்டை இலையை நீர்விடாமல் இடித்து அல்லது mixie இல் அரைத்து சாறு பிழிந்து அதை 4-5 நாள் காலையில் வெறும் வயிற்றில் 20ml குடித்தால் உடலில் உள்ள வாதநீர், பித்தநீர், நச்சு ஆகியன சிறுநீர் வழியே கழிக்கப்பட்டு முடக்கு வாதம் (arthritis, rheumatism)  விடுபடும். 

image.png

வாதநீர்  என்பது எப்போதும் உடலில் சுரப்பதால் 6 மாதம் ஒரு முறை இவற்றில் ஏதேனும் ஒன்றை 4 நாள் காலை வெறும் வயிற்றில் குடித்து உடலில் சேர்ந்த வாதத்தை கழிக்க வேண்டும். இதனால் நீண்ட நாள் நோயின்றி வாழ முடியும்.


Reply all
Reply to author
Forward
0 new messages