Re: {தோழமை:29196} 1. சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்

11 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 8, 2025, 3:53:24 AM (9 days ago) Oct 8
to thiru-th...@googlegroups.com, வல்லமை

சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்

 நிகழ்ச்சிக்கு ஏன் இந்த தலைப்பு என்பதை முதலில் பார்ப்போம்.

//2014முதல் 2025 வரையில் ஒன்றிய அரசு சமற்கிருதத்திற்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழ் மொழிக்கு ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது .தெலுங்கு ,மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு சேர்த்து உரூ 34 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஐந்து மொழிகளுக்கு ஒதுக்கி உள்ள தொகையைக் காட்டிலும், மிகக் குறைந்த அளவே பேசப்படும் சமற்கிருத மொழி மேம்பாட்டிற்கு 17 மடங்கு அதிகம் ஒதுக்கி ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்றும் , சமற்கிருதத்திற்கு அதிக நிதி மற்ற மொழிகளுக்கு அநீதி என்றும், போலி பாசம் தமிழ் மீது பணமெல்லாம் சமற்கிருதத்திற்கு என்றும் ,சமற்கிருதத்திற்கு கோடிக்கணக்கில், தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டும் என்றும், யாருமே பேசாத சமற்கிருதத்திற்கு ஏன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது//  

  • Greece and Rome: Many countries, particularly in Europe, have programs and university departments dedicated to the study of ancient Greek and Latin, funded through both public and private means.
  • China: The Chinese government supports research and study of classical Chinese through various academic institutions and cultural heritage programs.
  • Arabic-speaking world: Funding for classical Arabic scholarship is often integrated into religious and cultural heritage initiatives across the Middle East.
  • Academic institutions: Major universities worldwide, such as the University of Oxford, have dedicated academic centers that support research, preservation, and teaching of classical languages. 

இவ்வளவு நிதி ஒதுக்குவதில் ஒன்றும் தவறு இல்லை.  உலகம் முழுவதும் செவ்வியல் மொழிகளுக்கு பல நாட்டு அரசுகள் தாராளமாக செலவு செய்கின்றன. இந்த மொழிகள் பேச்சு வழக்கற்ற மொழிகள் தாம். பேச்சு வழக்கு இல்லாவிட்டால் என்ன அவற்றில் அறிவு பொதிந்து உள்ளது அன்றோ?சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் பேசப்படுவது கிடையாது என்னும் போது அதை புணர்வதற்கான பொறுப்பு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. இதை கண்டிப்பது மிக தவறானது. சம்ஸ்கிருதத்தில் 3 லட்சம் நூல்கள் உள்ளன. இவற்றில்  மருத்துவம், வானியல், கணிதம், தத்துவம் என பல நூல்கள் அடங்கும். இவற்றை ஆண்டிற்கு 300 பேர் ஆய்வு செய்கிறார்கள். தமிழில் 25 பேர்கூட ஆய்வதில்லை. கன்னடத்தில் ஆய்வாளர் எவரும் இல்லை எனவே அதற்கு ஒதுக்கப்படும் பணம் பயன்படுத்தாமல் இருக்கிறது. எனவே செலவு திட்டத்திற்கு ஏற்றபடி தான் நிதி ஒதுக்கீடு. பழைய நூல்களில் இருந்து இக்காலத்திற்கு ஏற்றவாறு எந்த கருத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதே சமஸ்கிருதத்தை  ஆய்வதற்கான நோக்கம். எப்படி பார்த்தாலும் சமஸ்கிருத்தத்தை வழக்காற்று படுத்த முடியாது. ஏனென்றால் பிராகிருதம் வழக்கொழிந்து வெவ்வேறு மொழிகளாக திரிந்து விட்டது தான் காரணம். பிராகிருதத்திற்காக உருவாக்கப்பட்ட மொழி சமஸ்கிருதம்  ஆதலால் மக்கள் சம்ஸ்கிருதத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அப்படி அல்ல.

சமற்கிருதம் எந்த மாநிலத்திலும் பேசப்படுவது இல்லை. கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் .அதற்காக இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும், இந்திய மொழிகளுக்குக் குறைந்த அளவிலே ஒதுக்கப்படுகிற நிலையிலேயே, 61℅ சமற்கிருதத்திற்கா எனத் தமிழ்நாட்டில் கண்டன குரல் எழுந்துள்ளன .வழக்கம் போல் எழுந்ததும் அடங்கிவிட்டன. இவ்வாறு பேசுபவர்கள் அறிந்தே மக்களை ஏமாற்றும் வகையில் பேசுகிறார்களா அல்லது அறியாமல் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை. ஏனெனில். சமற்கிருதத்திற்கு நிதி ஒதுக்கீடு ஏதோ செப்பு வைத்து விளையாடுவதற்காகக் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் சமற்கிருதத்திற்கு 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன நூற்றுக்கணக்கிலான சமற்கிருதக் கல்வி நிறுவனங்கள் உள்ளன சமற்கிருத இயக்கங்கள் பல்வேறு உள்ளன.

அகில பாரத வித்தியா பரிசத்து

வித்தியா பாரதி

சிட்சா சமற்கிருதி

அகில பாரத இதிகாச சங்கலன் யோசனா

சமற்கிருத பாரதி

விஞ்ஞான பாரதி

அகில பாரதிய சாகித்திய பரீட்சத்து

சிக்குசத பச்சாவோ அந்தோலன்

அகில பாரதிய இராசுட்ரிய சமற்கிருத மகா சங்கம்

சன்சுகார் பாரதி

பாரதிய சிக்குசன் மண்டல்

எனப் பல்வேறு கல்வியகங்கள் உள்ளன. இவற்றின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன?

பொதுவாகவே சமற்கிருதத்திற்குப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது அறிவித்த அமைப்புகளும் இன்னும் சில அமைப்புகளும் உள்ளன. இதன் அடிப்படை நோக்கம் என்ன? மரபு வழியிலான சமற்கிருதப் பாடசாலைகள், சமற்கிருத மகா வித்தியாலயங்கள் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், பரம்பரையான சமற்கிருதப் பாடசாலைகள் மகா வித்தியாலங்களில் நவீன பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், மாநில அரசு பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை உயர்நிலைப் பள்ளிகளில் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், குரு சீடர் பரம்பரை நிறுவனங்களில் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி, குடியிருப்புகள் பேணுகை, மாணவர்கள் தங்கும் விடுதி, மாணவர்களுக்கு நண்பகல் உணவு இரவு உணவு வழங்குதல், வறிய சூழலில் சிறந்த சமற்கிருத பண்டிதர்களுக்கும் உணவு வழங்கி, சம்மான் இராட்சிகா நிதியுதவி, சமற்கிருதத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்துதல், அரிதான சமற்கிருதப் புத்தகங்கள் வெளியிடுதல், மொத்தமாக வாங்குதல், மறு பதிப்பு செய்வதற்கான நிதி உதவி, சமற்கிருத இலக்கிய இதழ்கள் வெளியிடுதல், சமற்கிருதப் புத்தகங்கள் மொத்தமாக வாங்குதல், அரிய சமற்கிருத புத்தகங்களை மறு பதிப்பு செய்தல், சிறந்த அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பயன்படுத்த நிதியுதவி அளித்தல், பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் பரம்பரை சமற்கிருத பாடசாலைகள் அல்லது நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்த நிதி உதவி சமற்கிருத, பாலி, பிராகிருத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என மேலும் பலவகையாகச் சமற்கிருதப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பெறுகிறது..

அகில இந்திய சமற்கிருதச் சொற்பொழிவுகளும் போட்டிகளும் சமற்கிருதத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்துகின்றன. 18 திட்டங்கள், குடியரசுத் தலைவர் விருதுகள் மகரிசி பாதராயன் வியாக சம்மான் விருதுகள், ஆதர்ச சமற்கிருத மகா வித்தியாலயங்கள், ஆதர்ச சோத சத்சங்கு நிதியுதவி, சமற்கிருத அகராதித் திட்டம் இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி ஒன்றிய அரசு அளித்துக்கொண்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இத்தகைய விதிகளை நிறுவி இந்த அமைப்புகளை நடத்துவதற்கான வாடகை. செலவுகள், பணியாளர் செலவுகள், நூல் வெளியிட சமற்கிருத திரைப்படங்கள் எடுக்க நிதி உதவி என்று அடுக்கிக் கொண்டே போகிற பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இத்தனைத் திட்டங்களுக்குப் பணம் தேவைப்படும்போது அரசு நிதி ஒதுக்கத் தானே செய்யும்! அதை விடுத்து ஒதுக்கி விட்டார்கள் ஒதுக்கி விட்டார்கள் என கூக்குரலிட்டு என்ன பயன்?



--

Reply all
Reply to author
Forward
0 new messages