செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!

101 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Apr 3, 2015, 6:07:00 PM4/3/15
to thiru thoazhamai, Thiru Chudar Nambi

செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!


அன்புடையீர் வணக்கம்!!!
 தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
  கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம்!!!!
 கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்…
 அப்படிச் செய்தால்தான் என்ன? தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ?? என்ற எண்ணத்தின் உந்துதலால்,
எங்கள் ஐயா, செந்தமிழ் வேள்விச் சதுரர், தமிழ் வழிபாட்டுப் போராளி, தமிழ் ஆகம அறிஞர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள்,
 சென்னையில் முற்றிலும் தமிழே முழங்கும் செந்தமிழ்க் கோயில்
ஒன்றை  எழுப்ப ஆய பணிகளை உலகத் தமிழர்களின் ஆதரவோடு தொடங்கி உள்ளார்…
 அதன் தொடர்பாக இதே எண்ணம் கொண்டு உலகின் பல பகுதிகளில் பரவி உள்ள தங்களை போன்ற தமிழன்பர்களிடம் அவர் விடுத்துள்ள விரிவான விண்ணப்பத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
 தாங்கள் மனமுவந்து இந்த அரிய முயற்சிக்கு உதவ வேண்டுகின்றோம். மேலும் இதனைத் தாங்கள் அறிந்த நட்பு வட்டத்தில் பகிர்ந்திடவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்…
 இப்படிக்கு,
 என்றும் மாறா அன்புடன்…
 ச.திருச்சுடர் நம்பி
(சத்தியவேல் முருகனாரின் மகன்)

Plea for Tamizh Koyil02_Page_1 Plea for Tamizh Koyil02_Page_2

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

K. Loganathan

unread,
Apr 4, 2015, 3:42:39 AM4/4/15
to vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
அன்பரே 

இருக்கின்ற கோயில்களையே செந்தமிழ் கோயில்களாக ஆக்குவதை விட்டு விட்டு இப்படி இன்னொரு கோயில் எதற்கு? இதுபோன்ற தமிழ் வெறிகளால் ஆக்கபூர்வமாக தமிழை வளர்க்க முடியுமா? சுமேருத் தமிழை ஆராய்ந்து அது எவ்வாறு சங்கத் தமிழாக வளர்ந்தது என்றும் காட்டுங்கள் எப்படி முதற் சங்க காலத்திலேயே எல்லாம் தமிழில் இருந்தது என்பதைக் காட்டுங்கள். எப்படி வடமொழி தமிழின் திரிபே என்பதை ஆக்கப் பூர்வமான முறையில் தகுந்த சான்றுகளோடு காட்டுங்கள். இபடிப்பட்ட வீணான கனவுகள் வேண்டாம். பிழையான் வழி.

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Apr 4, 2015, 7:53:40 AM4/4/15
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, vall...@googlegroups.com
முனைவர் வீரபாண்டியன்ன் அவர்களே

மிக்க நன்றி. என்று தமிழர்கள் தமிழின் மீது உண்மையான அன்பும்  மதிப்பும் கொண்டுள்ளார்களோ அன்றே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாகும். கோயில்களிலும் பள்ளிகளிலும் பலகலைகளிலும் தமிழ் செங்கோலோச்சும்

என்னை வியப்பில் ஆழ்த்துவது தமிழ் மேல் வெறிபோல் பற்றுக் கொண்டவர்கள் அதன் தொன்மையை பண்டே  கோயில்களிலும் மற்றும் எல்லா துறைகளிலும் செங்கோல் ஓச்சியதை உறுதி செய்யும் சுமேருத் தமிழ் ஆய்வினை தொடராது இருப்பதே. மேலும் இதே ஆய்வு வடமொழி தமிழின் திர்பே என்பதையும் உணர்த்தும்

வெறி இருக்கும் அளவிற்கு உருப்படியான பயனுள்ள: ஆய்வுகள் இல்லை, தக்க ஆய்வுகளைப் புறக்கணித்து வெறியாடி மகிழ்வதுதான் நடக்கின்றது. 

உலகன்

2015-04-04 19:37 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

"பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை" என்ற கருத்து,

எந்த ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கோவில்களில் பக்தர்கள் விரும்பினால், தமிழில் வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஏன் அதை பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை? அவை தவிர, சைவ மடங்களும், தமிழர்களாக உள்ள தனியார் வசத்திலும் பல கோவில்கள் உள்ளன?.அங்கெல்லாம் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது யார்?

பெரும்பாலான தமிழர்களின் மூளைகளில் 'பக்தி' தொடர்பாக, என்னென்ன கருத்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?  'தமிழில் வழிபட்டால், வேண்டியதெல்லாம் கிடைக்கும்' என்று, ஒரு புரளியை வெற்றிகரமாக கிளப்பி விட்டால், தமிழர்களெல்லாம் தமிழில் வழிபட மாட்டார்களா? அப்படி தமிழில் வழிபட்டாலும், அதற்கு தமிழ் மீது உள்ள பற்று காரணமாகுமா? அல்லது 'அதிர்ஷ்டத்தின்' மீது உள்ள பற்று காரணமாகுமா?

தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க மாணவரின்றி, ஆயிரக்கணக்கில், மூடப்பட்டு வரும் நிலையில், எஞ்சியுள்ள பள்ளிகளின் கழிவறை, வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெருக்கி, மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடம் நடத்தும், ஆசிரிய மனித தெய்வங்களை ஊக்குவிக்க, தம்மால் இயன்ற பொருள் உதவி உள்ளிட்ட, அனைத்து உதவிகளையும், விளம்பரமின்றி, தமிழ் ஆர்வலர்கள் செய்தால், தமிழ்வழி பிழைக்கும்; தமிழ்ப்பற்று வளரும்; அப்போது தமிழில் வழிபடும் ஆர்வமும் வளரும்.

செ. அ. வீரபாண்டியன்


From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: vall...@googlegroups.com; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com
Sent: Saturday, 4 April 2015 1:12 PM
Subject: [MEYKANDAR] Re: [வல்லமை] செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!

__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (2)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Apr 4, 2015, 11:04:39 PM4/4/15
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, vall...@googlegroups.com

டாக்டர் கணேசலிங்கம் அவர்களே

 

மிக்க நன்றி, சத்தியவேல் முருகனாரின் தமிழில் தான் அர்ச்சனை நடக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு, ஆனால் இதன்பொருட்டு செந்தமிழே முழங்கும் வகையில் ஓர் கோயிலை எழுப்பவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு அறவே இல்லை, எல்லா கோயில்களையும் செந்தமிழ் கோயில்களாக ஆக்க வேண்டும் அதற்ககான முயற்சிகளில் நாம் தீவிரங் காட்ட வேண்டும் அருட்போர் புரிந்து தமிழை மீண்டும் கோயில்களில் இருத்த வேண்டும் முதற் சங்க இடைச் சங்க காலத்தினைப் போல் என்று நான் வற்புறுத்துகின்றேன்

 

தாங்களும் இக்கருத்தையே வற்புறுத்துவதோடு தமிழை வளர்க்க தமிழை மற்ற எல்லா இடங்களிலும் வற்புறுத்த வேண்டும் என்றெல்லாம் வழிமொழியும் போது நான் உடன் படுகின்றென்

 

ஆயினும் இங்கு ஓர் கேள்வி எழுகின்றது: வடமொழியை ஒதுக்க வேண்டுமா?

 

தங்கள் கூற்று:

 

...>>>>>

 

தேவார காலத்தும் அதன் முன்னரும் தமிழ் தழைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் தமிழிலேதான் அர்ச்சனை,வழிபாடுகள் இருந்தனவா?   

மாணிக்க வாசகர் 'இருக்கொடு   தோத்திரம் இயம்பினர்' என்று பாடுகிறாரே! 'ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலாவந்தகர்’, ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’, 'வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’, 'வேதம் ஓதி, 'வேத வேதாந்தன்’, என்றெல்லாம் திருமுறைகள் அறைகின்றனவே. வடமொழி வேண்டாம், வேதம்வேண்டாம் என்றால் இத்தகைய திருமுறைப் பாடல்களை  என்ன செய்வது? ஒதுக்கலாமா?     

உண்மையில் வடமொழி வழக்கு தேவார காலத்துக்கு முன்பும் இருந்தது. சங்க இலக்கியங்களில் சான்று உள்ளது.

 

>>> 

 

இங்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். முதற்சங்கக் காலமாகிய சுமேருத் தமிழ் காலத்தில் எல்லாமே தூயத் தமிழில் தான் இருந்தன. இடைச் சங்க காலத்திலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்

 

‘ஆரியன்’ என்ற இனக் கற்பிதமும் ‘ஆரிய மொழி” என்ற மொழி கற்பிதமும் சுமேருத் தமிழர்களில் ஓர் கிளையாகிய பிறகாலத்தில் ‘தெய்வ பிறவி” என்ற கருத்தில்  வரண தர்மத்தை உருவாக்கிய பிராமணர்களின் இன்னொரு படைப்பே ஆரியமொழி அல்லது தெய்வ மொழி எனும் கற்பிதமும் ஆகும். ஏறக்குறைய கி,மு 5ஆம் நூற்றாண்டு வாக்கில் செயற்கையாக ஓர் மனித மூளையில் கற்பிதமாக உருவாக்கப் பட்டதே  ஆரிய மொழி எனும் செங்கிருதம், இதுவம் சுமேருத் தமிழர்களின் ஓர் கிளையினர் செய்ததாக இருக்கலாம். நாகரீகம் பெறாத யாதோவோர் ஐரொப்பிய பழங்குடியினரின் சாதனையாக இருக்க முடியாது.

 

ஆரியமொழியாகிய தெய்வமொழியாகிய வடமொழி ஆரியர்க்கே உரிய மொழியாகிய வடமொழியே இறைவனுக்கு உரிய மொழி அதிலேயே அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற இந்த வரகாற்று கற்பிதம் வலுப்பெற்ற காலத்தில் தேவாரத் திருமுறைகள் பாடப்பட்டன. அங்கும் வடமொழிக்கும் செந்தமிழிற்கும் ஓர் வகையான  tension இருப்பதைக் காணலாம். இதனை உணர்ந்தே ஓர் வேதியராகிய சம்பந்தர் தான் முதலில் ஓர் தமிழன் என்பதை வற்புறுத்த தன்னை ஓர் தமிழ் விரகன் என்று பறைசாற்றினார்.

 

ஆயினும் அப்பர் சம்பந்தர் திருமூலர் மாணிக்கவாசகர் போன்ற பத்தி கால ஞானிகள் ஆரியர் என்பதின் தோற்றத்தையும் ஆரியமொழி எனும் வடமொழியின் மிகப் பிற்கால தோற்றத்தையும் அதன் பிராமணீய அடிப்படைகளையும் அறிந்திருக்க வில்லை, பொதுவாக இந்தியர்கட்கு ‘வரலாறு’ எனும் அறிவியல் துறை வளர்க்கபடாதே இருக்கின்றது. ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட ஓர் கலை இது, புதியது இன்னும் ஆழமாக பதியவில்லை,

 

இப்படி ஆரிய இனத்தின் மொழியாக ஆரிய மொழியாக ஆகவே ஓர் தெய்வமொழியாக வடமொழியை தமிழைத் திரித்தே உருவாக்க்கப் பட்ட ஓர் செயற்கை மொழி எப்படி வழிபாட்டிற்கு உரியதாக இருக்க முடியும்?

 

வடமொழியை நம் கோயில்களில் தொடர்ந்து அனுமத்தித்தால் ‘வடமொழியே தெய்வமொழி, தமிழ் அல்ல’ என்ற வர்ண தர்மத்தின் பிராமணீயமே இந்து சமயமாக வளர ‘ ஒன்றே குலமும் ஒருவனேத தேவனும்’ என்ற அழகிய சீவ சமத்துவமும் அதனை வற்புறுத்தும் சைவமும் எடுபடாதே விழும்.

 

வடமொழி நம் கோயில்களில் தொடர்ந்து இருந்தால், வர்ணீயம் ஆகவே சாதீயமும் தொடர்ந்து வளரும். பிராமணர்களின் ஆதிக்கமும் தொடர்ந்து எல்லா இடங்க்ளிலும் இருக்கும் தமிழை கீழ் தள்ளும் புதியப் புதிய நம்பூதிரிகளும் சிவச்சாரியார்களும் தோன்றிய வண்ணம் இருப்பர்.

 

இன்னுமொன்று. மந்திரங்கள் வடமொழியுமல்ல செந்தமிழும் அல்ல. அவை மொழி கடந்தவை. அக்கரங்கள் எல்லா மொழிகட்கும் மூலமாக இருக்கும் ஒலிகள். ஆகவே மந்திரங்களை இங்கு கொண்டு வரத் தேவையில்லை. மேலும் மந்திராயணத்தின் தோற்றத்தை சுமேருத் தமிழிலேயே ககணலாம். ‘ஓம்’ எனும் மந்திரம் அங்குண்டு

 

மேலும் கீழ்கண்டவாறு நான் ;பிரமணீயத்தின் தோற்றமும் அழிவும்’ என்ற கட்டுரைத் தொடரில் (கட்டுரை 5) கூறியுள்ளேன்

 

>>>>>> 

தெய்வ பிறவிகளாகிய ஆரியர்கட்கு தெய்வ மொழியாகிய ஓர் ஆரியமொழி உரியதாக இருக்கவேண்டும் அதுவே பாணினி உருவாக்கிய செங்கிருதமாக ஆய்விட, ஏனைய உலகியல் மொழிகள் பிராகிருதங்கள் ஆகின்றன. இதன் காலம் கி.மு 500 போல் இருக்கலாம. பாணினி மகேசுர சூத்திரங்கள் எழுத பதஞசலி போன்றோர் அதற்கு உரை எழுத இருவரும் சைவர்களாக இருக்கின்றதைக் காண்க.  தெய்வ உதவியால் தான் இது நடந்ததுபோலும், பதஞ்சலி என்பது ஆடும் திருவடிகள் என்று பொருள்பட்டு சிவ நாடராசப்பெருமானையேக் குறிக்கும்.  இப்பெயர்களும் நல்ல தமிழ் பெயர்களாவே இருக்கின்றன. பாணினி எனும் பெயர் ‘பாணன்’ என்ற பெயரோடு தொடர்புடையதாகவும் பெண்பால் பெயர் போன்றும் தோன்றுகின்றது. உண்மை அறிந்த அறிஞர்கள் தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்

வேதங்கள் ஆரியம் ஆகி பிரமாணம் ஆவது

 செங்கிருதமே தெய்வமொழி, ஆரியர்களின் தனி மொழி, சாதாரண மக்கட்கு உரிய மொழி அல்ல. இனி இவ்வாறு செயற்கை முறையில் பல நியமனங்களோடு செங்கிருதம் உருவாக்கப்பட்டாலும் அதற்கு மூலமாக இருந்த இருக்கிருதம் அதனோடு ஒன்றாக்கப்பட்டு வேதங்களும் செங்கிருத மொழியின் நூற்கள் ஆக்கப்பட, அந்த நூற்களும் தெய்வ வாக்குகள் ஆகின்றன. வேதவாக்கு என்றாலே தெய்வவாக்கு என்றாகி அதனால் வேதங்கள் பொய்மையே இராத, இருக்க முடியாத பிரமாண நூற்கள் ஆகின்றன.மேலும் இதனால் வேதங்கள் தெய்வப் பிறவிகளாகிய பிராமணர்கட்கே தனி உரிமையுடையவையும் ஆகின்றன. அநேகமாக எழுத்து மொழியாக இருந்த வேதங்கள் இதன் பிறகு எழுதா மறையாகி வாய்மொழி வழியாக பிறப்பால் பிராமணர்கள் போன்று அங்கீகரிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமே போதிக்கப்பட்டவாறு நிலைநாட்டப்டுகின்றது. மனு ஸ்மிருதி போன்ற நூற்களில் சூத்திரர்கள் போன்றோர் அவற்றை கேட்கவும் கூடாது மீறி கேட்டுவிட்டால் அவர்கள் பிராமணர்கள் போன்று உயர் வர்ணத்தர் ஆகிவிடுவார்கள் என்ற அச்சத்தில்  கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுகின்றது

>>>> 

எந்த வடமொழி நூலை எடுத்துக்கொண்டாலும் நேராகவோ மறைமுகமாகவோ பிராமணீயமும் ஆகவே வர்ணதர்மமும் போத்திக்கப்படும்  பிராமணீயம் வளர்ந்தால் ‘மெய்ப்பொருள் காண்பதே அறிவு” எனும் மெய்கண்டாரியம் தலை தூக்காது. வடமொழி முற்றிலும் ஒதுக்கப்பட்டு செந்தமிழே திருக்கோயில்களில் விளங்கினா; இந்த பொல்லா வரண பேதங்கள் சாதிபேதங்கள் எல்லாம் மடிந்தொழிய உண்மையான சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே தமிழப் பண்பாட்டின் அடிப்படையாக இருந்த மெய்கண்டாரியம் செழித்தோங்கி வளரும் என்றே நினைக்கின்றேன்

 

உலகன்

 


2015-04-04 21:05 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

அன்புடையீர்,
சத்தியவேல் முருகனாரின் செந்தமிழ்க் கோயில் கட்டும் முயற்சி  குறித்த எனது கருத்துக்களை உங்கள் சிந்தனைக்கு முன்வைக்கிறேன்.

தமிழர்களுக்கு தமிழுணர்வு, இன உணர்வு, தன்மான உணர்வு இருக்க வேண்டுமென விரும்புபவன் நான். ஆனால் இந்த உணர்வு எமது அறிவை மறைக்கக் கூடாது; நடுநிலை பிறழச் செய்யக்கூடாது.
தமிழ் நாட்டில் தமிழ் தழைத்து இருந்த நிலை மாறி இன்றைய கோயில் வழிபாட்டு முறையால் தமிழ் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தமிழ் வழிபாட்டுக்கென்று தனியே ஒரு கோயில் க்ட்டுவதென்றும், அதில் முற்றும் தமிழே முழங்கும், என்றும் கூறப்படுகிறது. வடமொழி மந்திரங்கள் சொல்லப்படும் வழிபாட்டால்தான் தமிழ் வீழ்ந்தது என்ற கருத்து இங்கே உணர்த்தப்படுகிறது. வடமொழி, வடமொழி வேதம் முதலியன தேவையில்லை என்றும் கூறப்படுகிறது;
தேவார காலத்தும் அதன் முன்னரும் தமிழ் தழைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் தமிழிலேதான் அர்ச்சனை, வழிபாடுகள் இருந்தனவா?   
மாணிக்க வாசகர் 'இருக்கொடு   தோத்திரம் இயம்பினர்' என்று பாடுகிறாரே! 'ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா வந்தகர்’, ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’, 'வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’, ' வேதம் ஓதி’, 'வேத வேதாந்தன்’, என்றெல்லாம் திருமுறைகள் அறைகின்றனவே. வடமொழி வேண்டாம், வேதம் வேண்டாம் என்றால் இத்தகைய திருமுறைப் பாடல்களை  என்ன செய்வது? ஒதுக்கலாமா?     
உண்மையில் வடமொழி வழக்கு தேவார காலத்துக்கு முன்பும் இருந்தது. சங்க இலக்கியங்களில் சான்று உள்ளது. 'வேதத்து மறை நீ' என்கிறது பரி பாடல். (மறை - உபநிடதங்கள் என்பது உரை). 'மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட' கண்ணகியை கோவலன் மணம் புரிந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது.
இவ்வளவும் இருந்தும் தமிழ் அன்று எழுச்சிபெற்று வாழ்ந்தது. கோயில் வழிபாட்டு முறையால் அது வீழ்ச்சி அடையவில்லை. இதன் காரணம் என்ன? அன்றுள்ள தமிழர்கள் தமிழிலே பேசி, தமிழிலே எழுதி, தமிழை ஆய்ந்து தமிழ் வளர்த்தார்கள். இயல் இசை நாடகம் முதலிய தமிழ்க் கலைகளை கோயிலிலும் வளர்த்தார்கள்.
இன்றென்ன நடக்கிறது? வீட்டிலும் வெளியிலும் தமிழா பேசுகிறோம்? வளரும் குழந்தைகளுடன் தமிழில் உறவாடி தமிழ் மொழி ஆர்வத்தை வளர்க்கிறோமா? சங்க  காலம் முதல் வளர்ந்த இலக்கிய வளம் மிக்க எண்ணக் கருவூலங்கள் பல தமிழில் இருக்கின்றனவே. இவற்றை அறியவும், பரப்பவும் முயற்சி எடுக்கிறோம? இவற்றைச் சிந்தியாது, சத்தியவேல் முருகனாரின் செந்தமிழ்க் கோயில் கட்டும் பணியைப் போற்றிப் புகழ்வது அறிவீனம்; பயனற்றது, என்பதே எனது கருத்து.
செந்தமிழ்க் கோயில் கட்டி தமிழ் முழக்கம் செய்வதால் தமிழை வளர்க்க  முடியாது? (அது என்ன தமிழ் முழக்கம்? அரசியல் போராட்டமா?!) சமய குரவர் வழியில் திருமுறை பாடித் திருநெறிய தமிழை வளர்ப்பதே உகந்த வழி.  என்பது எனது தாழ்மையான கருத்து. கோயில் கட்டும் நிதியால் ஊர்தோறும் தமிழர்களுக்கு திருமுறை ஆர்வத்தை ஊட்டி அதில் ஈடுபாடு கொண்டு படிக்கவும் அதில் தெளிவு பெறவும் வழி வகுத்தால் அதுவே பெரும் பயனாகும். திருநெறிய தமிழைப் பரப்ப வேண்டும். அதற்கேற்ற வழிகளை வகுத்து உழைக்க  வேண்டும்.
இனி அர்ச்சனையைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். "அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு என்றார் தூமறை பாடும் வாயார்" என்பது சுந்தரரைப் பற்றிக் கூறும் சேக்கிழார் பாடல். "உன்னுடைய தமிழ்ப் பாடல் எனக்கு அர்ச்சனையாக இருக்கிறது. ஆகையால் நீ தமிழ்ப் பாடலையே  பாடு" என்பது இதன்பொருள். இப்பாடலைச் சொல்லி இறைவனே தமிழில் பாடி அர்ச்சனை செய்யும்படி  சொல்லிவிட்டான், ஆகையால் வடமொழி அர்ச்சனை தேவையில்லை என்பவருண்டு. சுந்தரர் பாடுவதும் நாம் பாடுவதும் ஒன்றாகுமா? இறைவன் பாடும் தூமறை எது? தமிழ் அர்ச்சனை என்போர் அது தமிழ் மறை எனலாம்? ஆனால் அருளாளர் வார்த்தைகளைப் பார்க்கும் போது அவ்வாறு கருத முடியாதிருக்கிறது.
ஒரு தெய்வத்தின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வணக்கம் செய்வதை இன்று பொதுவாக அர்ச்சனை என்கிறோம். விக்னேச்வராய நம(ஹ) என்றால் விக்னேஸ்வரனுக்கு வணக்கம். விநாயகரின் பல்வேறு பெயர்களைச் சொல்லி மலரிட்டு, தீபம் காட்டி வணங்குவது போல் சிவன், முருகன் முதலிய தெய்வங்களையும், அவர்களின் நாமங்களைச் சொல்லி வணக்கம் செய்வதை எங்கும் காணலாம். இவை நாமாவளி வழிபாடாகும். நாமாவழி அர்ச்சனை என்றும் இன்று இது சொல்லப்படுகிறது.
வடமொழியில் செய்யப்படும் இவ்வருச்சனையை எந்த மொழியிலும் செய்யலாம். தமிழருச்சனை என்ற பெயரால் இன்று இது தமிழில் செய்யப்படுகிறது. பல இடங்களில் தேவார திருவாசகம் போன்ற செய்யுள்களில் காணப்படும் 'போற்றி' என்று முடியும் வரிகள் பயன்படுத்தப் படுகின்றன. திருமுறைகள் இறையருளால் வந்தவையாதலின் இவற்றில் குறை காண முடியாது. ஆனால் எம்போன்றவரோ சத்தியவேல் முருகன் போன்றவரோ  ஆக்கிய வார்த்தைகளும் தமிழர்ச்சனையில் இடம்பெறுவது பெரும் பிழை  என்பது எனது கருத்து.
மந்திரம் என்று வரும்போது தமிழில் என்ன செய்யலாம்? ஒன்று புதிதாக எழுதலாம். இன்னொன்று வடமொழி மந்திரங்களை மொழி பெயர்க்கலாம்.
புதிதாக எழுதுவதாயின், எழுதுபவருக்கு அதற்கேற்ற ஆற்றல், ஒழுக்கம், சீலம், ஞானம் முதலியவை வேண்டும். இவை உள்ளவர் யார்? அவர்  எழுதிய மந்திரங்களை  ஆற்றல் மிக்கவையாகக் கொள்ளலாமாசங்க காலம் முதல் இன்றுவரை இருந்த தமிழ்ப் புலவர்களும் ஞானிகளும் தமிழ் அர்ச்சனைக்கு ஏன் வழிகோலவில்லை? தன்னைத் தமிழ்ஞான சம்பந்தன் என்றும் தனது தமிழைச் சம்பந்தன் தமழ் என்றும் சொன்னவர் சம்பந்தப் பெருமான். தனது கவிதைகளில் புதுப்புது பாவகைகளை உருவாக்கியவர் அவர். அவர் போன்ற ஞானிகள் ஏன் தமிழ் மந்திரங்களை ஆக்கவில்லை? வடமொழியையும் அதிலுள்ள மந்திரங்களையும் ஏன் போற்றினார்கள்? இவை ஆய்வுக்குரியன.
திருமந்திரத்தில் வரும் 'சக்கரங்களிலும்' பிற இடங்களிலும் காணும் மந்திரங்களை திருமூலர் தமிழில் பெயர்த்துத் தரவில்லை. இது ஏன்? தமிழில் பெயர்த்தால் சக்கரங்களில் அடைக்கலாமா? சிந்திக்கவேண்டியது இது.
மொழி பெயர்ப்பதாயின் 'நமசிவய' என்னும் பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து) போன்ற மந்திரங்களை எப்படி மொழிபெயர்ப்பது? 'சிவனுக்கு வணக்கம்' என்பது இதன் நேரடிப்பொருள். இதனைவிட இதற்குச் சில மறை பொருள்களும் இருக்கின்றன. (சித்தாந்தம் படித்தவருக்கு சில தெரியும்). 'நமசிவய' என்னும் மந்திரத்தை எமது நாயன்மார்களும் அருளாளர்களும் விதந்து போற்றியுள்ளது அனைவருக்கும் தெரியும். தமிழ் அர்ச்சனை செய்பவரும் இந்த வடமொழி மந்திரத்தைப் பாவிக்கின்றனர்.
மந்திரம் என்ற சொல்லுக்கே இன்னும் ஏற்ற தமிழ்ச் சொல் காணப்படவில்லை. மந்திரம் என்பது மனனம், திராவணம் (காத்தல்; உறை) என்பவற்றால் ஆனது. மனனம் செய்பவரை அல்லது நினைப்பவரைக் காப்பது என்பது பொருள்.
மந்திரங்களில் ஏகாச்சரம், பஞ்சாட்சரம், ஷடாட்ச்சரம், அஷ்டாட்சரம், நவாச்சரம் முதலியன உள்ளன. இவற்றோடு காயத்திரி, ஹம்சம், பஞ்சப்பிரமம், ஷடாங்கம், ஹ்ருதயம், பிரசாதம், ஸப்தகோடி, கலா, சம்ஹிதா, ஆசமனம், பீயம், அஷ்டோத்திர சதம், சஹாச்ரம் எனப் பலவுள்ளன. இவை அனுட்டானத்துக்குத் தேவையானவை. மந்திரம், கிரியை, பாவனை சைவத்தில் முக்கியமானவை. இவை சைவக் கிரியைகளில்  ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவை எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா?
மந்திரத்தின் ஒலியும் (சப்தமும்) பொருளும் முக்கியமானவை. மந்திர சப்தம் சக்தி மயம்; மந்திர அர்த்தம் சிவமயம். அபிராமி அந்தாதியில் வரும் "சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" என வரும் அடி இதனைக் குறிப்பதாக உள்ளது. எனவே சப்தமும் அர்த்தமும் ஆற்றலுடையன. மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்தாலும் மூல மந்திரத்துக்கு உள்ள ஆற்றல் மொழிபெயர்ப்புக்கு வருமா? இவற்றை நாம் சிந்திக்க வேண்டாமா?
இறைவன் கொள்ளும் மந்திரத் திருமேனி பற்றி ஞானிகள் பேசுகிறார்கள். முருகனை, "வேத மந்திர சொருபா நமோ நமோ" என்று அருணகிரிநாதர் போற்றுகிறார். தமிழ் மந்திர சொருபா என யாராவது பாடியுள்ளாரா? ஏன் பாடவில்லை?
இன்னும் பல எழுதலாம். நீட்ட விரும்பவில்லை.
எனது, கருத்தில் இன்று தமிழ் அர்ச்சனை என்று அழைக்கப்படும் நாமாவளி வழிபாடு நடத்தலாம். ஆனால் இதுவே நிறைவானதல்ல. கோயில் கிரியைகளில் நிறைவாக உள்ள வடமொழி மந்திரங்களைப் பாவிப்பதால் தமிழ் தாழ்ந்து போகாது. ஆங்கிலத்தில் பல விஞ்ஞான, ஆராய்ச்சி நூல்கள் உள்ளன. அவற்றில் பிரெஞ்ச், இலத்தீன் போன்ற பிற மொழிகளில் உள்ள கலைச் சொற்கள் உள்ளன. அவற்றால் ஆங்கிலம் தாழ்ந்து விடும் என்று எவரும் எண்ணுவதில்லை.
கோயில்களில் தமிழ் வழிபாடு செய்வதை எவரும் தடுக்கவில்லை. ஆனால் எத்தனை பேர் செய்கிறார்கள்?
தமிழ் உணர்வைக் கிளறி செந்தமிழ் கோயில் கட்டுவோம் என்பதும், அதற்கு நிதி சேர்ப்பதும் தன்னலச் செயல்களாகவே கருதப்படும்.
சைவர்களாகிய நாம் எமது சைவ அருளாளர் காட்டிய வழியில் திருநெறிய தமிழைப் பரப்பி சைவத்தையும் தமிழையும் பேணி வளர்ப்போமாக.
அன்பன்
. கணேசலிங்கம்


From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: "meyk...@yahoogroups.com" <MEYK...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com; vall...@googlegroups.com
Sent: Saturday, 4 April 2015, 22:53
Subject: Re: [MEYKANDAR] Re: [வல்லமை] செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!

__._,_.___

Posted by: "Dr.K.Ganesalingam" <kganes...@yahoo.com>
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Apr 6, 2015, 11:06:11 PM4/6/15
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, vall...@googlegroups.com
அன்பர்களே

நான் பெரிதும் மதிக்கின்ற சிவஞானியும் நல்ல சைவ சித்தாந்தியுமாகிய டாகடர் கணேசலிங்கம் அவர்களோடு ஓர் சிறிய கருத்டு பேதம். வடமொழி தமிழக் கோயில்களில் தொடர வேண்டுமா என்பதைப் பற்றி இருவரும் சில கருத்துப் பேதங்களோடு இருக்கின்றோம். இது இன்னும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தில் இதனை இன்னும் பல குழுமங்கட்கு அனுப்பி வைக்கின்றேன். யானும் எனது கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து இன்னொரு பதில் ம்டல் எழுத விருக்கின்றேன்

உலகன்

2015-04-07 9:45 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

அன்புள்ள முனைவர் உலகன் அவர்களே,

தங்கள் கருத்துகள் பல எனக்கும் உடன்பாடானவையே. வடமொழி தேவ மொழி, தமிழ் நீஷ பாஷை  என்று சொல்லும் பிராமணர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரு பொருட்டாக நாம் மதிக்கத் தேவையில்லை. வேதத்திலும்  வட மொழியிலும்  எல்லாம் உள்ளன என்போரையும் கருத்தில் எடுக்க வேண்டியதில்லை. தமிழர்களே இவர்களைப் போல் பேசி தமிழை இழிவுபடுத்துவது பொறுக்க முடியாதது. இது எனது கருத்து. உங்களுக்கும் இது உடன்பாடானது என்பதை அறிவேன்.

வடமொழி வேண்டாம், வேதம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. வேத இலக்கியங்களில் பல முரண்பாடுகளும் ஏற்க முடியாத கருத்துக்களும் இருக்கின்றது தெரிந்ததே. ஆயினும் அவற்றில் ஏற்றுக் கொள்ளக் கூடியவையும் இருக்கின்றன என்பது அருளாளர், அறிஞர் கருத்தாக உள்ளது. இல்லை எனில் சம்பந்தர், திருமூலர் போன்றவர்கள் அதனை ஒதுக்காது  போற்றுவார்களா?

// ஆயினும் அப்பர் சம்பந்தர் திருமூலர் மாணிக்கவாசகர் போன்ற பத்தி கால ஞானிகள் ஆரியர் என்பதின் தோற்றத்தையும் ஆரியமொழி எனும் வடமொழியின் மிகப் பிற்கால தோற்றத்தையும் அதன் பிராமணீய அடிப்படைகளையும் அறிந்திருக்க வில்லை//
என்று கூறுவது சரியென்று தோன்றவில்லை. இதற்கு என்ன ஆதாரம்?

தாங்களும் நானும் போற்றும் மெய்கண்டார் தனது சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத்து உதாரண வெண்பாவில் இருக்கு வேதத்தைக் குறிப்பிட்டு எழுதியுள்ளது தெரிந்ததே. "ஒன்றென்பது ஒன்றே காண்" என்று தொடங்கும் இவ்வெண்பா "இருக்கு என்றே முடிகிறது". வேதத் தொடருக்கு வேதாந்திகளும் பிறரும் தரும் தவறான பொருளைச் சுட்டிக் காட்டுவதாக இது உள்ளது.

"ஏகம் ஏவ அத்விதீயம் பிரமம்" என்ற வடமொழித் தொடருக்கு சரியான விளக்கத்தை  "ஒன்றென்பது ஒன்றே காண்" எனற வெண்பாவில் மெய்கண்டார் கொடுத்துள்ளார். (விரிவஞ்சி இந்த விளக்கத்தை நான் தரவில்லை). இதனால் மெய்கண்டார் இருக்கு வேதத்துக்குக் கொடுக்கும் மதிப்பை உணரலாம். இவற்றை எழுதுவதால் நான் தமிழைத் தாழ்த்தி வடமொழி வேதத்தை உயர்த்துகிறேன் என்று எவரும் கருத வேண்டாம். ஞானக்கருத்துக்கள் எந்த மொழியிலும் இருக்கலாம்.
கோயில் வழிபாடு என்று வரும்போது மந்திரம் கிரியை முதலியன வருகின்றன. இவை ஆரியரின் சிருஷ்டி என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் தமிழருடையது எது?  - என்ற கேள்வி  எழுகிறதே! ஆரிய வழக்கு இது; இதனை விடுத்து தமிழ் முறையில் வழிபாடு செய்வோம் என்பவர் தாம் நினைத்தபடி எழுதி மந்திரங்கள் என்று தருகிறார்கள். 'ஆரிய வழக்கில்' உள்ள கிரியை முறைகளையே பின்பற்றுகிறார்கள். இங்கேயும்  'ஆரிய மணம்' வீசுகிறதே!

"நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று தொல்காப்பியர் மந்திரத்துக்கு ஒரு வரைவிலக்கணம் தருகிறார். அவர் கூறும்   "நிறை மொழி மாந்தர்" யார்? "மறைமொழி" என்பது எது? இத்தகைய கேள்விகள் எழுகின்றனவே! இவற்றை எவராவது சிந்தித்துப் விடை கண்டார்களா?
சுமேருத் தமிழ் பற்றி தங்கள் எழுத்துக்களில் இருந்துதான் நானறிந்தேன். பிறரும் இவாறே அறிந்திருப்பர் என எண்ணுகிறேன்.  தாங்கள் எழுதிய சுமேருத் தமிழ் வசன்களின் பொருள் விளங்க தங்களின் மொழிபெயர்ப்பே உதவின. இல்லையானால் அவையும் சமஸ்கிருதம் போல் புரியாமலே இருக்கும்.
சுமேருத் தமிழ் இலக்கியம் குறித்த தங்கள் ஆராய்ச்சி மேலும் வளர்ந்து அறிஞர்களாலும் பொதுமக்களாலும் அறியப்பட்டு பரந்தளவில் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்குமுன்,
//முதற்சங்கக் காலமாகிய சுமேருத் தமிழ் காலத்தில் எல்லாமே தூயத் தமிழில் தான் இருந்தன///.
///இந்த பொல்லா வரண பேதங்கள் சாதிபேதங்கள் எல்லாம் மடிந்தொழிய உண்மையான சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே தமிழப் பண்பாட்டின் அடிப்படையாக இருந்த மெய்கண்டாரியம் செழித்தோங்கி வளரும் என்றே நினைக்கின்றேன்///
என்று எழுதுவது சரியென்று தோன்றவில்லை.
கோயில்களில் பூசை நடக்கு போது, அது தமிழிலா, வட மொழியிலா நடைபெறுகிறது என்று வழிபடுவோர் கவனிப்பது இல்லை. அந்தச் சிந்தனையே எழுவதில்லை. வர்ண பேதங்களுக்கு கோயில் அர்ச்சனை அடிப்படையாக அமைந்ததென்று கருத முடியாது. அதனை நீக்குவதற்கு எத்தனையோ  வழிகள் உண்டு.
சில ஆண்டுகளின் முன்பு அறவழிப் போராட்டம் செய்து ஈழ மக்கள் சாதி வேற்றுமைய அகற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டனர். இப்பொழுது RSS போன்ற அமைப்புக்கள் அமைதி  வழியில் மத  நல்லிணக்கம், சாதி வேற்றுமை களைதல் ஆகியவற்றில் வெற்றி கண்டு வருகின்றனர். இரு தினங்களின் முன் இந்த இணையத்தில் வந்த அறிஞர் வீரபாண்டியன் அவர்களின் மடல் இதனைத் தெளிவாக விளக்குகிறது. (“What is RSS take on Casteism”, Posting of 6 April, 2015). இத்தகைய வழிகளையும் முயற்சிகளையும் கண்டு கொள்ளாமல் கோயில் வழிபாட்டிலும் அர்ச்சனையிலும் பிழை கண்டு, குறுகிய வட்டத்தினுள் நின்று, குமுறுவதும் கொந்தளிப்பதும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை. 
///மந்திரங்கள் வடமொழியுமல்ல செந்தமிழும் அல்ல. அவை மொழி கடந்தவை. அக்கரங்கள் எல்லா மொழிகட்கும் மூலமாக இருக்கும் ஒலிகள். ஆகவே மந்திரங்களை இங்கு கொண்டு வரத் தேவையில்லை. மேலும் மந்திராயணத்தின் தோற்றத்தை சுமேருத் தமிழிலேயே ககணலாம். ஓம் எனும் மந்திரம் அங்குண்டு///
மந்திரங்கள் மொழி கடந்தவை என்பது எனக்கும் உடன்பாடான கருத்தே. பின் ஏன் அவற்றை தமிழில் பெயர்த்து எழுத வேண்டும்? மந்திரங்கள்  மொழிபெயர்க்க  இயலாதவை என்பது எனது கருத்து. கோயில் கிரியைகள் என்று வரும்  போது மந்திரங்களைத் தவிர்க்க முடியாது.
'ஓம்' என்ற சொல் இருப்பதால் மந்திராயணத்தின் தோற்றம் சுமேருத் தமிழில் இருக்கிறது என்று கருதலாமா?
அன்பன்
க. கணேசலிங்கம்

Sent: Sunday, 5 April 2015, 13:04
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Apr 8, 2015, 11:40:39 PM4/8/15
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, vall...@googlegroups.com

டாக்டர் கணேசலிங்கம் அவர்களே

 

மிக்க நன்றி. சுமேருமொழி முதற் சங்கத் தமிழ், வடமொழி அதன் பிற்கால ஓர் திரிபு என்பதொடு “ஆரியம்’ என்ற ஆக்கம் சுமேருத் தமிழ் சூல்கியின் ஆட்சியில் வந்த ‘தெய்வப்பிறவி” என்பதின் தாக்கத்தின் விருத்தி என்பதே உண்மை என்று பட, வடமொழி கோயில்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் ஓர் தத்துவ மொழியாக இலக்கிய மொழியாக அது தொடர்ந்து மக்கள் நடுவில் பயில்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை என்பதொடு அதனை பெரிதும் ஆதரிக்கவும் செய்கின்றேன். ஆனால் அதுவே ஆரிய மொழி ஆகவே தெய்வமொழி ஆகவே அதுவே கொயில்களில் வழிப்பாட்டிற்குரிய மொழி என்பதில் எனக்கு உடன்பாடு அறவே இல்லை, எனது கருத்து உலகைல் மூல முதல் தெய்வமொழி தமிழே என்றும் ஆரியமொழி வெறும் கற்பித தெயவமொழி என்றும் ஆகவே கோயில்களில் பயிலக் கூடாது என்றும் கூற விரும்புகின்றேன். கீழே தேயையாப சான்றுகளோடு  அதனை சிறிது விளக்க முற்படுகின்றேன்

 

 முதலில் கீழே தங்கள் கருத்து:

 

 <<< கோயில் வழிபாடு என்று வரும்போது மந்திரம் கிரியை முதலியன வருகின்றன. இவை ஆரியரின் சிருஷ்டி என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் தமிழருடையது எது?  - என்ற கேள்வி  எழுகிறதே! ஆரிய வழக்கு இது; இதனை விடுத்து தமிழ் முறையில் வழிபாடு செய்வோம் என்பவர் தாம் நினைத்தபடி எழுதி மந்திரங்கள் என்று தருகிறார்கள். 'ஆரிய வழக்கில்' உள்ள கிரியை முறைகளையே பின்பற்றுகிறார்கள். இங்கேயும்  'ஆரிய மணம்' வீசுகிறதே!>>>

 

இது மிக பிழையான கருத்தாகப் படுகின்றது. மந்திரங்கள் சரியாகிரியைகள் யோக ஞானங்கள் எல்லாம் இருக்குவேதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் இருக்கு வேதமே அக்நி வழிபாட்டின் யாகத்தை மையமாகக் கொண்டு விளங்குவது. இதுவும் சுமேரு கோயில் பண்பாட்டின் ஆகமநெறியின் ஓர் கூறாக விளங்கியதின் ஓர் விஜாரமே என்றும் பல இடங்களில் தக்க சான்றுகளோடு காட்டியுள்ளேன்

 

‘ஆரியன்” என்று சுமேருத் தமிழன் சூல்கி தனனைக் கூறிக்கொண்டாலும் “  உளுகள் ஆரிய நின்னே தொட்ட மான்” ( ஆரிய அரசனாகிய என்னை அம்மையே ஈன்றெடுத்தாள்) என்று கூறிகொண்டாலும் பிறகு ஆரிய இனம் என்றும் அது வரணாச்சிரம தர்மத்தில் இயங்குவது என்றும் அந்த ஆரிய இனம் தெய்வப் பிறவியாக அந்த இனத்திற்கு உரிய ஓர் தெய்வமொழி வேண்டும் என்ற கருத்தில் பாணினியால் செய்ற்கையாக உருவாக்கப்பட்டதே ஆரியமொழியாகிய வடமொழி என்று தெரிகின்றது. பிறகாலத்தில் இந்து இருக்கிருதத்தோடு இணைக்கப்பட்ட நிலையில் இருக்கிருதமும் ஆரிய மொழி ஆக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் ஆரியமொழியாக வடமொழி ஓர் கற்பித தெய்மொழியேத் தவிற உண்மையான தெய்வ மொழி அல்ல. சுமேருத் தமிழ் காலதிலிருந்தே அதாவது முதற் சங்க காலத்திலிருந்தே இயல்பாகவே தெய்வங்களை போற்றிப் போற்றி புகழ்ந்து பல ஆழமான தத்துவாஞானங்களை சுமந்து வரும் சிறப்பால் உண்மையான தெய்வமொழி மூல தெய்வமொழி தமிழே யாகும். தெய்வங்களை தெய உணர்வினைச் சுமந்து வருவதே தெய்வ மொழியாகும்.

 

வடமொழி பாணினி மூளையில் கற்பனை ஆரிய இனத்திற்கென்று செயற்கை முறையில் வடிக்கப்பட்ட ஓர் கற்பித தெய்வமொழி. இப்படிப்பட்ட கற்பித தெய்வமொழியின் கற்பிதக் கூற்றைக் காணாது மதி மயங்கி உண்மையான தெய்வ மொழியாகிய தமிழை புறந்தள்ளி ஒதுக்கி கோயில்களிலிந்து விரட்டுவது எப்படி நியாயமாகும் என்று தெரியவில்லை, வரலாற்றையும் தமிழின் தனிச் சிறப்பையும் சரியாக புரிந்துக்கொள்ளாமையால் வந்து பெரும் பிழை என்றே நினைக்கின்றேன்

 

மணித மூளையில் அதிலும் குறிப்பாக பாணினி என்பார் மூளையில் ஓர் செயற்கை தெய்வ மொழி வர்ணாச்சிரமம் அடிப்படையில் எழுந்த ஓர் மொழி எப்படி உண்மையான தேய்வீக உணர்வைத் தாங்கி வரும் ஓர் மொழியாகும்?

 

ஆரிய இனவாதம் வர்ணாச்சிரம தர்மம் போன்ற அடிப்படைகளில் செயற்கையாக வடிப்பட்ட ஓர் மொழி எப்படி மெய்யான இறையுணர்வினைத் தாங்கி வர முடியும்?  அதனை கேட்பார் உள்ளத்தில் மெய்ஞான எழுப்ப முடியும்? எழுப்பி இருந்தால் இன்று பிராமணன் என்று வர்ணபேதம் போற்றும் மக்கட் கூட்டம் இருந்திருக்காதே?

 

இவ்வாறான் ஆரிய மொழி கோயில்களை ஆக்கிரமிக்கின்ற வரையில் வர்ணாச்சிரமமும் அதற்கு அடிப்படையாக இருக்கும் பிராமணீயமும் அழிக்கப்படாது. அப்படியென்றால் எவ்வாறு ‘மெய்பொருள் காண்பதே அறிவு” எனும் மெய்கண்டாரியமும். ‘ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்” என்று திருமூலர் ஒருமைப்பாட்டு ஒளியும் இந்து மக்களிடையேப் பரவும்?

 

இனி சரியா கிரியைகள் ‘ரியமொழியில் தான்’ இருக்கின்றன என்பது ஓர் வரலாற்று உண்மையே அல்ல. ஆகமநெறியின் கோயில் வழிபாடு சுமேருத் தமிழில் பரக்கப் பரக்கக் காணலாம், அங்கே கோயில் கோயில்களாக பாடப்பட்ட திருப்பதிகங்களும் உண்டு. கீழே கேசி(> காசி?) கோயில் பாட்டு எனும் அழகிய நூலிலிருந்து சில வரிகளைத் தருகின்றேன்

 

Kes temple Hymn 7

 

105. e en-bi (d) a-nun-na-mes ( The temple , whose lords are the Anunna-gods)

*Ta. il ENbi  vaanunnaa meeyiccu ( The temple whose ruler are the heavenly beings)

( en Ta. eeN> veeN> veeL: lord, ruler etc. . veeL> veeLir: the kings of the ancient Tamil kingdoms.  a-nun-na> Ta. vaan-nunna: the beings concealed in the skies and hence the heavenly beings, the gods who are there with the invisible mantra-bodies; me-s, me-es Ta. -icu, iccu  etc. Now a singular  marker of the non person  gender as vanticcu , pooniccu etc. Also for the feminine  gender)

106. nu-es-bi giri-la e-an-na-me-es  ( Whose nu-es priest are the sacrificers ? of Eanna)

* Ta. nuul-icaibi kirialai el annai meeyaccu ( Those who recite verses go around the temple for the Mother )

( nu-es Ta. nuul-icai: reciting verses  Ta. nuul: a text, nuval: to utter ; giri Ta. kiri: that which are extended and hence the legs here. la Ta. alai: to roam about.  an-na Ta. annai: Mother Goddess)

107. e-e lugal-bur-ra am-mi-gub ( The lugalburra- priest stepped up to the temple)

*Ta. illee  uLugaL puram aammee kubbu ( Inside the temple the chief of the enclosure always sits )

( bur-ra Ta. puram: fortress, citadel, an enclosure etc.  gub Ta. kuppu, kappu , kuntu  etc. : to squat)

108. en-du sa ese-la am-mi-in-la ( The good en-priest ... held the lead-rope? suspended)

*Ta. Veentu saan  icai-azai azaimin aam ( The great one , the person sings the songs of calls, is there calling)

( es, ese Ta. icai: music, song etc. la Ta. azai: to invite, call etc. ; en-du Ta. veeNtu: the Great one, the king etc.)

109. a-tu sibir su bi-in -du ( The atu-priest held the staff)

*Ta. atu? civiRi cuurbiyin edu ( The eunuchs? hold the fans with their hands)

( a-tu Ta. atu: that ( the non person object)  sibir Ta. civiRi : the fans made of fine hair. Also see Ta. cavuri:  hair attachments)

110. tu-e a-ur-ra-a am-mi-tum ( The ... brought the gathered waters)

* Ta. tuuvee aal uuruva tuummin aam ( The sprinkler sprinkles running waters )

111. lal-e ki-ku-ga am-mi-in -tus ( The  ..... took his seat in the holy place)

* Ta. laaliyee  kiiz kooga tunjcuminin aam ( The one who sings the laali stays in the holy precincts itself)

112. enkum-e-ne ara ki am-ma-gal-le-es ( The enkum bowed down in prayer)

* Ta. eenkummu-y-inee aRai kiiz kaaliiccu aamma ( The dancers or yogis gathered in the lower grounds)

Enkummu: those who dance or remain in deep silence , ara : Ta. aRai: room

113. pa-ses--e-ne kus mu-un-sig-ge-ne ( The pases beat on the (drum-) skin )

*Ta. paa cissu-inee koosam mun siikkinee ( The youths  beat on the (drum-) skin)

( pa Ta. paa: persons,  -pa: the third person plural marker; ses Ta. cicu: child, ciiden : the  student < Sk sisya;  kus Ta. koocam: loud noise made as a group  sig-ge Ta. ciikku: to beat)

114. e-sub uru-sub-a  mu-ni-ib-be-e-ne (They recited the e-sub and uru-sub (verses)

* Ta il cuba uuru cuba munin immiyinee ( They recited the songs for the security and welfare of the temple and the city)

(sub Ta. cubam: safety security and welfare; ib-be Ta. immee: to mutter , to hum)

115. si-am-ma-ke gum-ga mi-ni-ib-za ( The bull's horn kept sounding)

*Ta. cii amaake  gummaka iyamci minee( The bull's horn  kept sounding)

(si Ta. cii : the peak, something sharp? cimam: the hill top, peak ; am-ma Ta. amaa: wild cow; gum-ga Ta. kummu: to crowd around as a herd)

116. (gis) al-gar-sur-ra suh-sah mi-ni-ib-za ( The drum sticks kept beating)

*Ta. yaaz kaalcuRRuva cuucaa mini iyamciya ( The harp with  legs to stand made the sounds cuu-caah )

( al Ta. yaaz: harp gar-sur-ru Ta. kaal cuRRu : round legs? )

117. tigi nun-du-ge mu-un-du-a (  The " good prince" played the tympanum for them)

* Ta. tiki nun tungakee mun eduva ( They also played the tiki of fine and pleasant tones)

118. e al-du giri-zal-bi al-du ( The temple is built; its abundance is good!)

*Ta. il vaLattu  kiirai caalbi vaLattu ( The temple is prosperous, the harvest  is  plentiful)

119. e-kes al-du giri-zal-bi al-du ( The Kes temple is built; its abundance is good)

*Ta. il Keci vaLattu kiirai caalbi vaLattu ( The Keeci temple is prosperous, the harvest is plentiful)

120 nin-bi DIN-bi mu-un-tus ( Its lady has taken a seat in its ...)

*Ta. Ninbi DIN-bi mun tunjcu ( Its lady is resting inside....)

121. (d) nin-hur-sag-ga nin-bi DIN-bi-a mu-un-tus ( Ninhursag, its lady , has taken seat in its ...)

*Ta. Ninoorsaangka ninbi DIN-biya mun tunjcu ( The lady of the mountain peak, its lady  resides inside ....)

>>>> 

 

 இவ்வரிகளில்  பல வகையான் சரியா கிரியைகளையும் அதற்கேற்ப பல வகையான பண்டாரங்களையும் காண முடிகின்றது, இந்தப் பாட்டின் காலம் கி,மு 2300 போல். ஆக இருக்குவேதம் போன்ற வேதங்கள் தொன்றுவதற்கு முன்பே ஏறக்குறைய ஓர் ஆயிரம் வருடங்கட்கு முன்பே சுமேருத் தமிழ் எனும் முதற் சங்கத் தமிழில் கோயில் வழிபாடு பல வகையான சரிய க்ரியைகள் பண்டாரங்கள் என்றேல்லாம் இருந்திருக்கின்றன

 

பிற்காலத்தில் இவை ஆரிய மொழி ஆக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றை தமைழ் படுத்துவது இவற்ரின் உணமையான வடிவத்தை மீட்பதாகும்.

 

உலகன்

 

 


2015-04-07 9:45 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
அன்புள்ள முனைவர் உலகன் அவர்களே,

தங்கள் கருத்துகள் பல எனக்கும் உடன்பாடானவையே. வடமொழி தேவ மொழி, தமிழ் நீஷ பாஷை  என்று சொல்லும் பிராமணர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரு பொருட்டாக நாம் மதிக்கத் தேவையில்லை. வேதத்திலும்  வட மொழியிலும்  எல்லாம் உள்ளன என்போரையும் கருத்தில் எடுக்க வேண்டியதில்லை. தமிழர்களே இவர்களைப் போல் பேசி தமிழை இழிவுபடுத்துவது பொறுக்க முடியாதது. இது எனது கருத்து. உங்களுக்கும் இது உடன்பாடானது என்பதை அறிவேன்.

வடமொழி வேண்டாம், வேதம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. வேத இலக்கியங்களில் பல முரண்பாடுகளும் ஏற்க முடியாத கருத்துக்களும் இருக்கின்றது தெரிந்ததே. ஆயினும் அவற்றில் ஏற்றுக் கொள்ளக் கூடியவையும் இருக்கின்றன என்பது அருளாளர், அறிஞர் கருத்தாக உள்ளது. இல்லை எனில் சம்பந்தர், திருமூலர் போன்றவர்கள் அதனை ஒதுக்காது  போற்றுவார்களா?

// ஆயினும் அப்பர் சம்பந்தர் திருமூலர் மாணிக்கவாசகர் போன்ற பத்தி கால ஞானிகள் ஆரியர் என்பதின் தோற்றத்தையும் ஆரியமொழி எனும் வடமொழியின் மிகப் பிற்கால தோற்றத்தையும் அதன் பிராமணீய அடிப்படைகளையும் அறிந்திருக்க வில்லை//
என்று கூறுவது சரியென்று தோன்றவில்லை. இதற்கு என்ன ஆதாரம்?

தாங்களும் நானும் போற்றும் மெய்கண்டார் தனது சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத்து உதாரண வெண்பாவில் இருக்கு வேதத்தைக் குறிப்பிட்டு எழுதியுள்ளது தெரிந்ததே. "ஒன்றென்பது ஒன்றே காண்" என்று தொடங்கும் இவ்வெண்பா "இருக்கு என்றே முடிகிறது". வேதத் தொடருக்கு வேதாந்திகளும் பிறரும் தரும் தவறான பொருளைச் சுட்டிக் காட்டுவதாக இது உள்ளது.

"ஏகம் ஏவ அத்விதீயம் பிரமம்" என்ற வடமொழித் தொடருக்கு சரியான விளக்கத்தை  "ஒன்றென்பது ஒன்றே காண்" எனற வெண்பாவில் மெய்கண்டார் கொடுத்துள்ளார். (விரிவஞ்சி இந்த விளக்கத்தை நான் தரவில்லை). இதனால் மெய்கண்டார் இருக்கு வேதத்துக்குக் கொடுக்கும் மதிப்பை உணரலாம். இவற்றை எழுதுவதால் நான் தமிழைத் தாழ்த்தி வடமொழி வேதத்தை உயர்த்துகிறேன் என்று எவரும் கருத வேண்டாம். ஞானக்கருத்துக்கள் எந்த மொழியிலும் இருக்கலாம்.
கோயில் வழிபாடு என்று வரும்போது மந்திரம் கிரியை முதலியன வருகின்றன. இவை ஆரியரின் சிருஷ்டி என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் தமிழருடையது எது?  - என்ற கேள்வி  எழுகிறதே! ஆரிய வழக்கு இது; இதனை விடுத்து தமிழ் முறையில் வழிபாடு செய்வோம் என்பவர் தாம் நினைத்தபடி எழுதி மந்திரங்கள் என்று தருகிறார்கள். 'ஆரிய வழக்கில்' உள்ள கிரியை முறைகளையே பின்பற்றுகிறார்கள். இங்கேயும்  'ஆரிய மணம்' வீசுகிறதே!

"நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று தொல்காப்பியர் மந்திரத்துக்கு ஒரு வரைவிலக்கணம் தருகிறார். அவர் கூறும்   "நிறை மொழி மாந்தர்" யார்? "மறைமொழி" என்பது எது? இத்தகைய கேள்விகள் எழுகின்றனவே! இவற்றை எவராவது சிந்தித்துப் விடை கண்டார்களா?
சுமேருத் தமிழ் பற்றி தங்கள் எழுத்துக்களில் இருந்துதான் நானறிந்தேன். பிறரும் இவாறே அறிந்திருப்பர் என எண்ணுகிறேன்.  தாங்கள் எழுதிய சுமேருத் தமிழ் வசன்களின் பொருள் விளங்க தங்களின் மொழிபெயர்ப்பே உதவின. இல்லையானால் அவையும் சமஸ்கிருதம் போல் புரியாமலே இருக்கும்.
சுமேருத் தமிழ் இலக்கியம் குறித்த தங்கள் ஆராய்ச்சி மேலும் வளர்ந்து அறிஞர்களாலும் பொதுமக்களாலும் அறியப்பட்டு பரந்தளவில் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்குமுன்,
//முதற்சங்கக் காலமாகிய சுமேருத் தமிழ் காலத்தில் எல்லாமே தூயத் தமிழில் தான் இருந்தன///.
///இந்த பொல்லா வரண பேதங்கள் சாதிபேதங்கள் எல்லாம் மடிந்தொழிய உண்மையான சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே தமிழப் பண்பாட்டின் அடிப்படையாக இருந்த மெய்கண்டாரியம் செழித்தோங்கி வளரும் என்றே நினைக்கின்றேன்///
என்று எழுதுவது சரியென்று தோன்றவில்லை.
கோயில்களில் பூசை நடக்கு போது, அது தமிழிலா, வட மொழியிலா நடைபெறுகிறது என்று வழிபடுவோர் கவனிப்பது இல்லை. அந்தச் சிந்தனையே எழுவதில்லை. வர்ண பேதங்களுக்கு கோயில் அர்ச்சனை அடிப்படையாக அமைந்ததென்று கருத முடியாது. அதனை நீக்குவதற்கு எத்தனையோ  வழிகள் உண்டு.
சில ஆண்டுகளின் முன்பு அறவழிப் போராட்டம் செய்து ஈழ மக்கள் சாதி வேற்றுமைய அகற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டனர். இப்பொழுது RSS போன்ற அமைப்புக்கள் அமைதி  வழியில் மத  நல்லிணக்கம், சாதி வேற்றுமை களைதல் ஆகியவற்றில் வெற்றி கண்டு வருகின்றனர். இரு தினங்களின் முன் இந்த இணையத்தில் வந்த அறிஞர் வீரபாண்டியன் அவர்களின் மடல் இதனைத் தெளிவாக விளக்குகிறது. (“What is RSS take on Casteism”, Posting of 6 April, 2015). இத்தகைய வழிகளையும் முயற்சிகளையும் கண்டு கொள்ளாமல் கோயில் வழிபாட்டிலும் அர்ச்சனையிலும் பிழை கண்டு, குறுகிய வட்டத்தினுள் நின்று, குமுறுவதும் கொந்தளிப்பதும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை. 
///மந்திரங்கள் வடமொழியுமல்ல செந்தமிழும் அல்ல. அவை மொழி கடந்தவை. அக்கரங்கள் எல்லா மொழிகட்கும் மூலமாக இருக்கும் ஒலிகள். ஆகவே மந்திரங்களை இங்கு கொண்டு வரத் தேவையில்லை. மேலும் மந்திராயணத்தின் தோற்றத்தை சுமேருத் தமிழிலேயே ககணலாம். ஓம் எனும் மந்திரம் அங்குண்டு///
மந்திரங்கள் மொழி கடந்தவை என்பது எனக்கும் உடன்பாடான கருத்தே. பின் ஏன் அவற்றை தமிழில் பெயர்த்து எழுத வேண்டும்? மந்திரங்கள்  மொழிபெயர்க்க  இயலாதவை என்பது எனது கருத்து. கோயில் கிரியைகள் என்று வரும்  போது மந்திரங்களைத் தவிர்க்க முடியாது.
'ஓம்' என்ற சொல் இருப்பதால் மந்திராயணத்தின் தோற்றம் சுமேருத் தமிழில் இருக்கிறது என்று கருதலாமா?
அன்பன்
க. கணேசலிங்கம்

Sent: Sunday, 5 April 2015, 13:04
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Apr 10, 2015, 9:55:13 PM4/10/15
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, vall...@googlegroups.com
டாகடஎ  கணேஷ் அவர்களே

தாங்கள் கூறுவது உண்மைதான். சுமேருத் தமிழ் ஆய்வின் வழி நான் எனது க்ருத்துக்களை கூறுகின்றேன். இது வரலாற்றில் புதுமையாக இருக்கலாம். ஆயினும் 'ஒருவன் கூறினும் உண்மை உணமைதான்; என்ற போதிலும் பல்லோர் உடன்பட்டால்தானே இதுபோன்ற கருத்துக்கள் அனைவருக்கும் ஏற்புடைதைத்தாக இருக்கும்?

ஆக இவ்விசயத்தில் தங்களோடு உடன்பட்டு இந்த பரிமாற்றத்தை நிறுத்தி விடுகின்றேன்.  என்னை பலவாறு புதிய முறையில் சிந்திக்கத் தூண்டிய தங்களுகு மிக்க ந்னறி/

உலகன் 

2015-04-11 9:28 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 
அன்புள்ள முனைவர் உலகன் அவர்களே,

செந்தமிழ் கோயிலில் தொடங்கிய எங்கள் உரையாடலும் கருத்து மோதலும் நீண்டுகொண்டே போகிறது. அதை மேலும் நீடிக்க நான் விரும்பவில்லை. எனது கருத்துக்களைத் தொகுத்து சுருக்கிக் கூறுகிறேன்.

1. கோயில்கள் மலிந்த தமிழ் நாட்டில் செந்தமிழ்க் கோயில் என்றோ வேறு பெயரிலோ இன்னொரு கோயில் தேவை இல்லை.

2. வடமொழி தேவ மொழி, சரியை, கிரியை ஆகியன ஆரிய மொழியில் தான் உள்ளன, என்பன போன்ற கருத்துக்களை நான் சொல்லவும் இல்லை, அவை எனக்கு உடன்பாடானவையும் இல்லை.

3. தமிழ் அர்ச்சனை என்ற பெயரில் இறைவன் பெயர்களைச் சொல்லி போற்றி என்று வழிபடுகின்றனர். இந்த வழிபாடு எனக்கு உடன்பாடானதே. இதில் எம் போன்றோரின் வசனங்கள் இடம்பெறக்கூடாது. தொல்காப்பியம் கூறும் "நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்ப" என்பது கருதற்பாலது. அருளாளரின் வார்த்தைகள் இடம்பெற வேண்டும். இவை எனது கருத்துக்கள்.

4. கோயில் கிரியைகள் பெரும்பாலும் ஆகம முறையிலேயே அமைந்துள்ளன. இவற்றில் மந்திரங்களும்  இடம்பெறுகின்றன. தமிழ்ப் புலவர்களும் அருளாளரும் தமிழில் ஏன் இந்த மந்திரங்களை உண்டாக்கவில்லை என்பது சிந்தனைக்குரியது. அவர்கள் ஆரியர் வந்த வரலாற்றை அறிந்திருக்காததே இதற்குக் காரணம் என்பது ஏற்கக்கூடியதல்ல. மந்திரங்கள் மொழிபெயர்க்கக் கூடியனவுமல்ல.
5. எளிதில் படித்து விளங்க முடியாத சுமேருமொழி முதற் சங்கத் தமிழ் என்பதும், அதில் ஆகம வழிபாடும் கோயில் கோயில்களாக பாடப்பட்ட திருப்பதிகங்களும் உண்டு என்பதும் அறிஞரிடமும் பொதுமக்களிடமும் பரவி, அவர்களால் படிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறவேண்டும். அதுவரை கருத்து மோதல்களும் வேற்றுமைகளும் எழுவது இயல்பே.
தங்கள் சைவ, தமிழ் ஆர்வத்தையும் ஆய்வு முயற்சிகளையும் மதித்துப் போற்றுகிறேன்.

அன்பன்
க. கணேசலிங்கம்

Sent: Thursday, 9 April 2015, 13:40
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

Reply all
Reply to author
Forward
0 new messages