தமிழக வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை .
-தொல் துறை முன்னாள் இயக்குனர் சாந்தலிங்கம்.
தமிழக வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் s.சாந்தலிங்கம் கூறி உள்ளார். காரைக்குடியில் அவர் கூறி உள்ளதாவது :
*1980-களில் மத்திய தொல் துறையினர் தமிழக கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ளனர் ; நுாலாக வெளியிடவில்லை.
*கீழடியை போன்று 100-க்கும் மேற்பட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.
*2004-ல் புள்ளிமான் (புலிமான்) கோம்பையின் நடுகல் கல்வெட்டு கி.மு. 4-ஆம் நுாற்றாண்டை சேர்ந்தது. அதில் எழுத்துகள் தெற்கிலிருந்து வடக்கு சென்ற சான்று உள்ளது.
*அகழாய்வில் , எழுத்து பொறித்த பானை தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
*இதுவரை 60 000 கல்வெட்டுகள் படிக்கப்பட்டுள்ளன ; 40 000 கல்வெட்டு விபரங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன.
*கல்வெட்டுகள் படிக்க தமிழகத்தில் மொத்தமே 10 ஆய்வர்தான் உள்ளனர்... அவர்களும் 60 - ஐ கடந்தவர்கள்.
*கல்வெட்டு குறித்த பட்டயப் படிப்பை அரசு நடத்தினாலும், வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை இல்லாததால், மாணவர் வருவதில்லை. செயல் அலுவலர் , சுற்றுலா அலுவலர் , வரலாறு , தமிழ் துறை பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வெட்டு படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்.