காதல் இனிது! கவிதைகள் மற்றும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. வருகிற 14.02.2015க்குள் அனுப்பி வையுங்களேன்...

196 views
Skip to first unread message

Kaviri Maindhan

unread,
Feb 5, 2015, 6:48:10 AM2/5/15
to Ziavudin Ahmed Syed Ibrahim

காதல் இனிது! 

 

காலங்கள் கடந்தபோதும்

கற்பகத்தருபோல காட்சிதருவது!

கவிதைக்குள் விதையாக

சொற்பொருள் பெருகிவருவது!

முதல்கவிதையின் மூலப்பொருளாவது!

எவனையும் கவிதை எழுதவைப்பது!

என்னையும் எழுத வைத்தது!

எத்தனை முறையெழுதி ஓய்ந்தபோதும்

இன்னமும் எழுதிடத் தோன்றுவது!

கற்பனை கைகுலுக்கி வருவது!

இயற்கையும் இடம்பெறும் இடமது!

புதுப்புனல் போலவே பொங்கிடும்

இதயங்களிரண்டின் சங்கமம்!

கரைபுரண்டோடிடும் உணர்வுகள்

விடைசொல்லவரும் உறவுகள்..

உனக்கென நான் எனும்..

எனக்கென நீ எனும்..

உரிமையைத் தருகிற சொந்தம்!

உயிரினில் கலந்தே கொஞ்சும்!

மனதினில் தோன்றிடும் மின்னல்

மறுபடிமறுபடி சுழன்றிடும்!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே

ஆண்டவன் வழங்கிடும் பந்தம்!

இதற்கென உள்ளதோர் மகிமை

இணையென எதுவுமே இல்லை..

கணக்கினில் கூடினால் இரண்டு..

காதலில் மட்டுமே ஒன்று!!               

ஆதலால் காதல்செய்வீர் என்றே

மாகவி பாரதி பாடினான்!

அன்பினில் வாழ்ந்திடும் உன்னதம்

அகிலத்தில் தழைக்கட்டும் என்றே

இம்முறை காதல் இனிது!  என்பதே

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பாய்..

உம்மிடம் உருவாகும் கவிதை..

எம்மிடம் சேரட்டும் இனிதே!!

 

அடுத்தத் தலைப்பு..  காதல் இனிது!

Jan-Kaathal.jpg

சி. ஜெயபாரதன்

unread,
Feb 5, 2015, 10:00:58 AM2/5/15
to vallamai, Kaviri Maindhan


தேய்பிறைக் கோலம் !


Crescent Moon -2

சி. ஜெயபாரதன், கனடா


அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா தே

​ன்கடலி
ல்
முத்தெடுத்தோம் !
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர்பிறைக் கோலம் !
கட்டினோம் நீள் பாலம்
கடல் அலை மீது !


எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் !
மண்ணில் கால் படாது,
விண்ணில்

​மித
ந்தோம் !
தாகம் மிகுந்து
மோக
​த் தேன்
 
​சுவைத்தோ
ம்!


சிப்பிக்குள் முத்துண் டா

​கும்​
!
ஒப்புடன்
விதியின் ஆ
​ணை
 முடிந்ததெம்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் குளித்து,
சொர்க்க புரிச் சிகர
​ம்
​ ஏறிச்

​சுகம் கண்டு
 கீழே
இறங்கும் போது
​ தேனீ கொட்டி​

தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !
முழு நிலவின் பொன்
​னொளி​

பழுதாக்
​கும்

உழுது எம் நெஞ்சை !


நேற்று ம

​றைத்

வேற்றுமை விழுதெல்லாம்
​புயலாய்த்​
 தாக்கின
முறிந்தது
​ எம்​
பாலம் !
சேயிழைக்கு
​ம்
 காயம் !
நாயக னுக்கும் காயம் !
தேய்பிறைக் கோலம் !
இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம் !
அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !


++++++++++++


சி. ஜெயபாரதன்

unread,
Feb 5, 2015, 11:33:35 AM2/5/15
to vallamai, Kaviri Maindhan
​செம்மைப்படுத்தி​



தேய்பிறைக் கோலம் !


Crescent Moon -2


சி. ஜெயபாரதன், கனடா


அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா தேன்கடலில்
முத்தெடுத்தோம் !
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர்பிறைக் கோலம் !
கட்டினோம் நீள் பாலம்
கடல் அலை மீது !

 

எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் !
மண்ணில் கால் படாது,

விண்ணில் மிதந்தோம் !


தாகம் மிகுந்து

மோகத் தேன் குடித்தோம்!

 

சிப்பிக்குள் முத்துண் டானது !
ஒப்புடன்
விதியின் ஆணையில் முடியும்,


அதிசயத் திருமணம்!
தேனிலவில் குளித்து,
சொர்க்க புரிச் சிகரம் ஏறி

இறங்கும் போது தேனீ கொட்டி
தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !

முழு நிலவின் கருமை ஒளி


பழுதாக்கும்

கிழித்து எம் நெஞ்சை !

 

நேற்று மறைந்த


வேற்றுமை விழுதெல்லாம்

மூர்க்க மாய்த் தாக்கின
முறிந்தது பாலம் !
சேயி ழைக்குக் காயம் !
நாயக னுக்குப் பெருங் காயம் !
தேய்பிறை மாயம் !


இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்

முற்றுப் புள்ளி  முளைக்கும் !


அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !

 

++++++++++++


Tthamizth Tthenee

unread,
Feb 5, 2015, 1:48:04 PM2/5/15
to vall...@googlegroups.com, Kaviri Maindhan
​ஆஹா  காவிரி மைந்தனின்  காதல் இனிது   கவிதையும்

ஜெயபரதன் அவர்களின் தேய்பிறைக் கோலமும்       சுவைத்தேன்


அன்புடன் 
தமிழ்த்தேனீ

இதோ  என் பங்குக்கு  ஒரு காதல்  கவிதை


  " இதுதான்  காதல் "             

 

பார்த்த  பார்வை  கண்ணுக்குள்  பாயும்

படம் விரித்து-விரித்து நெஞ்சுக்குள் மோதும்

தேர்ந்த சிற்பியின் கைச்சிலையாய்த் தெரியும்

வேய்ந்த  கூரையிலும் ஒளியாய்ப் பரவும்

 

மனதைப் பிசையும் மனனப் பாடம்

நீரில் தெரியும் நிலவாய் ஒளிரும்

நினைவால் நிறையும் நெஞ்சம் குளிரும்

மலராய் மலரும் மனதும் மகிழும்

 

அத்தனை அழகும் புறந்தள்ளி -அவளின்

மதிவதனம் விஸ்வ ரூபம் எடுக்கும்

பாலும் படுக்கையும் விஷமாய்த் தெரியும்

நூலிடையாள் அவள்  நினைவே வளரும்

 

மனதைத் திறந்து உள்ளே சென்று

றுபடியும் அவள் மலர் முகம்-தெரியும்

நிலைக் கண்ணாடியிலும்  அவள்

பிம்பம் தோன்றும்  இதுதான்  காதலா ?

 

கடிமணம் கழ்ந்த பின் ஒரு கணப் பிரிவிலும் 

மனம் கனமாய்க் கனக்கும் கனவிலும் நினைவிலும் 

அவள் முகமே தெரியும் -கண்டதும் காதல் கொண்டது

மாறி பிரிவிலும்  அவளின் நினைவே நிறையும் - 


இதுதான்   காதல்  இதுதான் காதல்

      

 

 




அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

mani muthu

unread,
Feb 6, 2015, 6:23:59 AM2/6/15
to vall...@googlegroups.com, Kaviri Maindhan
கவிதை அருமை தமிழ்த்தேனீ அவர்களே!.

காவிரி மைந்தனின்  காதல் இனிது மற்றும் ஜெயபரதன் அவர்களின் தேய்பிறைக் கோலமும் நன்றாக இருந்தது.

வாழ்த்துக்கள்!


என்றும் அன்புடன்,
மணிமுத்து.

Ravi Subramanian

unread,
Feb 6, 2015, 6:28:56 AM2/6/15
to vall...@googlegroups.com, Kaviri Maindhan
ஒரு கோடைக்காலத் தனிமை இரவு

அது ஒரு கடும் கோடைக்காலம்.. மனை,மக்கள் சென்னையிலும், நான்மட்டும் வேலை நிமித்தமாக வேற்றூரிலும் பிரிந்திருந்த நாடகள்..பிரிவின் தாபத்தில் மனைவிக்கு எழுதிய கவிதை...

ஒரு கோடைக்காலத் தனிமை இரவு


விலகி இருக்கும் நெஞ்சுக்குள்ளே விரகம் எரிக்கிறது
        விம்மித் தணியும் மார்பைத் தழுவ விரல்கள் தவிக்கிறது
நிலவு தகிக்கும் இரவில் உறக்கம் அணைய மறுக்கிறது
          நிம்மதி இழந்த உடலோ புரண்டு புரண்டு படுக்கிறது!


கண்ணே உந்தன் கைகளிரண்டில் கட்டுப் படவேண்டும்
           கனவுமிதக்கும் கண்களிரண்டில் முத்தம் இடவேண்டும்
வண்ணம் சிவந்த கன்னமிழைத்துக் காதல் உறவேண்டும்
            வார்குழல் கோதி மார்பிலணைத்து நிம்மதி பெறவேண்டும்!


குலவி முகிழ்த்துக் கலவிநிகழ்த்த தேஹம் துடிக்கிறது
             குவளை விழிக்குள் கவலை மறக்க ஆசை பிறக்கிறது
மலரிலிருக்கும் மதுபருகத்தான் வண்டு பறக்கிறது
             மனது சுமக்கும் வேட்கைகளாலே வேட்டை நடக்கிறது!

நீயில்லாமல் கற்பகவனமும் கள்ளிப் பாலையடீ-உன்
             நிழலில்லாமல் எல்லாநாளும் கோடைக் காலமடீ
தீயில்லாமல் தாபம் ஏற்றும் ஜ்வாலை தனிமையடீ-நீ
             தீண்டியணைத்தால் மட்டும் வாழ்வில் சேரும் இனிமையடீ!


சு.ரவி
Su.Ravi
Sent from my I pad
--
Su.Ravi
+91 9922446887

Sent from Gmail Mobile

சி. ஜெயபாரதன்

unread,
Feb 7, 2015, 11:46:41 PM2/7/15
to vallamai, Kaviri Maindhan, KAVIRI MAINDHAN

சி. ஜெயபாரதன், கனடா


உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டி,
விற்பனை செய்பவன்
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தைப் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத் துணைக்கோளாய்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !


உரிமைச் சிறையி லிட்டு, 
 உன்னை உயிருள்ள மட்டும் மறைத்து,
உள்ள மற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பொருளாய்,
ஓடும் கைப் பம்பரமாய்,
பசும் பொன்னாய்  நிறுப்பவன்
அசுரக் கணவன் !


காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?


ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை புகும் காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் பெறும் பதிக்கு !
வீணையாய் உனை மீட்டுவோன்
கலைஞன் !
தேனிசை நாதமாய் மூழ்க்குவோன்,
கலைஞன் !
கலைமானாய் உனை மாற்றுவோன்,
கலைஞன் !
நடன மயிலாய், நாட்டியச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய்க் காட்டுவோன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !


கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுவோன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !


உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞனும்
ஒரு காதல னில்லை !


காதலன் கணவ னானதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னானதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !


காரிகை முன் செல்பவன்
கணவன் !
கன்னி பின் செல்பவன்
கலைஞன் !
கைகோர்த்துச் செல்பவன்
காதலன் !
கலைஞன் ஒரு கருடன் !
காதலன் ஒரு திருடன் !
கணவன் ஒரு குருடன் !
 

கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளை இறைவன்
ஒருவனுக்கு அளித்திடான் !
மும்மூர்த்திகள்
வேண்டாமா  உனக்கு ?

+++++++++++++++++++



+++++++++++++++++

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 9, 2015, 12:11:05 PM2/9/15
to vall...@googlegroups.com
காதல் இனிது
==========================================ருத்ரா

காதல் இனிது
எழுதிப்பார்த்தேன்.
காகிதம் இனித்தது.
எறும்பு மொய்த்தது
பேனா நிப்பில்.

ஊதிவிட்டேன்
காற்றின் அணுக்களில்.
காதல் மகரந்தம்
பட்டது தெரியும்

மண்ணாங்கட்டியும்
பிருந்தாவனங்கள்!
அருகம்புல்லிலும்
ஆதாம் ஏவாள்.

நிலவையும் உரசி
தீப்பொறி உதிர‌
திங்கள் இங்கே
ஞாயிறு ஆனது.

பொன் பூசிய‌
அட்டைகள் குவியும்.
இதய மேடுகள்
எழுத்துகள் நிரடும்.

அவளை நினைத்த
அவளில் நனைத்த‌
அஞ்சல் தலைகளில்
ஆயிரம் தடவை
ஆயிரம் நாவு.

தேனில் ஊறிய‌
நிமிடங்கள்.
பஞ்சு மிட்டாய்
தருணங்கள்.

வருடங்கள் தோறும்
வருட வந்திடும்
மனதில் ஆயிரம்
மயிற் பீலிகள்.

வேலன்டைன்
வேட்டையின்
காகித அம்பில்
சிக்குமா அது?

"ஐ லவ் யூ டா.."
அலைவிரிக்கும் அதில்
ஆயிரம்
வங்காள விரிகுடா.

காதல் கடலின்
பாய்மரம்
கரை தட்டும் வரை
காற்றே உணவு.

அவள்
உள்ளங்கையும்
புறங்கையும்
மெகந்தியை
மறந்து போனது.

செல்ஃபோனின்
ஆல்பா நியுமரிக்கில்
எங்கள் ஆயுளின்
ரங்கோலி செகண்டுகள்.

செவிமடல்கள் மற்றும்
செவ்விதழ்கள் மட்டுமே
நசுக்கி நசுக்கி
தமிழில் ஜூஸ் குடித்தன.

காதல் உலகம்
உலகத்துள் ஒரு உலகம்.
"பூ"மத்ய ரேகை
அவள் புன்சிரிப்பூ.

செம்பஞ்சு மேகங்களே.
கடப்பாரை தூக்கி வருகிறார்கள்.
உங்களை தூளாக்க.

அன்பே சிவம் என்பதில்
அன்புக்குள் நீங்கள்.
பாவம் 
உடைவது எல்லாம்
சிவமே சிவமே சிவம் தானே!

===========================================

coral shree

unread,
Feb 10, 2015, 12:15:26 AM2/10/15
to Kaviri Maindhan, vallamai


யாசகமில்லா வாசகமெல்லாம் வரமாய்
தேவதைகளின் வாசமிக்க தனமாய் 
மரணமில்லா மனராச்சிய  வேதமாய்
சரணமெனும் சங்கமத்தின் சத்சங்கம்.

எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் சந்தங்கள்
ஏழிசையும்  எட்டாமல்போகும் அதிசயங்கள்
புன்னகை சூட்டும் புத்தொளி கீதங்கள்
புனிதமாகும் புதுப்புனல் சாகரங்கள்!

தொலைதூரமும் தொடுவானமும் வெகுஅருகில்
நிலைமாறாத உணர்வுகளின் மொழிபெயர்ப்பு
சரம்சரமாய் செண்பகத்தின் அணிவகுப்பு!
வளம்கூட்டும் கற்பக  விருட்சமாச்சுதப்பு!

காதல் இனிது! காதல் இனிது! காலமெல்லாம்
 கனிந்திருப்பில் தெவிட்டாத கவிச்சுவையில்
காண்பதெல்லாம் காட்சியாய் கடந்ததெல்லாம்
கற்சிலையாய் காமமில்லா கனிரசமாம்.

வேதம் புதிதல்ல வீழ்ச்சி வேதனையல்ல 
சோகம் சுமையல்ல மானம் விலையல்ல
நேசம் பாரமல்ல பாசம் பாவமல்ல
வேசம் விவேகமல்ல வானம் தூரமல்ல!


நன்றி.

அன்புடன்
பவளா



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Feb 10, 2015, 1:33:59 AM2/10/15
to vallamai, Kaviri Maindhan
எல்லாரும்  இங்கே  அனுப்பி இருக்கிறார்கள் நான் மட்டும் அன்றே  கவிஞர் காவிரி மைந்தனுக்கு   தலைப்பு கேட்டபடி  தமிழ்த்தேருக்காக  தனி மடலில் அனுப்பிவிட்டேனே:)):

//கணக்கினில் கூடினால் இரண்டு..

காதலில் மட்டுமே ஒன்று!! //


பவழா   ...கவிதை  அழகு!


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே
கனியிலே இனிப்பதென்னே கண்ண பெருமானே!

பாரதி.

coral shree

unread,
Feb 10, 2015, 1:37:56 AM2/10/15
to vallamai
//தமிழ்த்தேருக்காக  தனி மடலில் அனுப்பிவிட்டேனே:))://

ஓ அப்படியா... ஏன் இப்படி... இப்ப போடுங்க ஷைலு அவர் தனி மடல் போடச்சொன்னாரா என்ன.. நன் தான் தெரியாமல் போட்டுவிட்டேனா... 

அன்புடன்
பவளா

shylaja

unread,
Feb 10, 2015, 1:43:27 AM2/10/15
to vallamai
தெரியல  பவழா   கா.மை வந்து  இதுக்கு பதில் சொல்லட்டும். நீங்க அளித்துவிட்டதால்  அடுத்து நானும்  இங்கே அதனை அளிக்கப்போகிறேன்!!

coral shree

unread,
Feb 10, 2015, 2:00:21 AM2/10/15
to vallamai
அப்படி வாங்க வழிக்கு..! ஷைலு

தேமொழி

unread,
Feb 11, 2015, 1:09:31 PM2/11/15
to vall...@googlegroups.com
///
அடுத்து நானும்  இங்கே அதனை அளிக்கப்போகிறேன்!!
///


காக்கவைப்பது .....
காதலுக்கு வேண்டுமானால் சுவை சேர்ப்பதாக இருக்கலாம்  ...
கவிதையை வழங்குவதற்குமா ???

..... தேமொழி

shylaja

unread,
Feb 11, 2015, 10:14:47 PM2/11/15
to vallamai
2015-02-11 10:09 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///
அடுத்து நானும்  இங்கே அதனை அளிக்கப்போகிறேன்!!
///


காக்கவைப்பது .....
காதலுக்கு வேண்டுமானால் சுவை சேர்ப்பதாக இருக்கலாம்  ...
கவிதையை வழங்குவதற்குமா ???>>>>:):) வந்தாச்சு:)
 

..... தேமொழி
காதல் இனிது!
ஷைலஜா  பெங்களூர்

உன் நட்பு வேண்டித்தான்
என் இருகரங்களை நீட்டுகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
எப்படி சாத்தியம்?;

வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்

மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
நுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்

பனி படர்ந்த சோலைகளுக்குள்
படர்ந்து விரிகிறது
பூக்களுக்கான என் கனவு

சில்லென்ற காற்றில்
சிறகடிக்கும் மழைத்தும்பிகள்
சேர்க்க வேண்டும் உன்னிடம்
என் மகரந்தங்களை. 

நில வெ(வொ)ளியில் திரிகிறது
என் காதல் நினைவுகள்
அறுசுவை என்பது உணவிற்கு
அழிவில்லா காதலுக்கு 
அத்தனையும் சுவைதானே!
’இச்’சுவைதவிர இன்னும்
இனிதான சுவையும் உண்டோ!
அச்சுவை பெறினும் வேண்டேன்
அன்பினும் காதல் இனிதே!

சி. ஜெயபாரதன்

unread,
Feb 11, 2015, 11:17:20 PM2/11/15
to vallamai
///வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்

வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்
இச்சுவைதவிர இன்னும்
இனிதான சுவையும் உண்டோ!
அச்சுவை பெறினும் வேண்டேன்
அன்பினும் காதல் இனிதே!////

கற்கண்டு வரிகள் ஷைலஜா.

சி. ஜெயபாரதன்

Tthamizth Tthenee

unread,
Feb 11, 2015, 11:36:38 PM2/11/15
to vall...@googlegroups.com

                    காதல் இனிது

 

 

ஒரு கூறையின்கீழ் வாழும்போது தெரியும்

ஒத்துப் போகிறதா   இல்லையா என்று

 

இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து

தொடர் சந்திப்பாய்  வழியும் போதும்

கடற்கரைப் படகின்  மறைவில் மடியில் படுத்து

காதலைப் பகிர்ந்து கொள்ளும் போது

இருசக்கர விசையூர்தியில் ஒட்டிக்கொண்டு

ஊரெல்லாம் சுத்தும் போது

திரைரங்கின் இருட்டிலே படம்பார்த்து

நாயக நாகியாய் மாறும் போது

 

அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு

குளிர் சாதன  அறையில் ஒரு நாள் பகர்தல்

 

உயிரே நீ தானென்றும்  க‌டைசீவ‌ரை

உடன் வரும் துணை நீதானென்றும்

வாய்க்கு வாய் பொய்யாய் ச‌த்திய‌ங்க‌ள்

ப‌றிமாரிக் கொள்ளும்போது

 

அத்த‌னையும் என்ன‌வென்று

ஒரு கூறையின் கீழ் இருந்து

நீ   உண்மையான நீயாய்,

அவ‌ன் உண்மையான அவனாய்

நிதர்சனங்களை புரிந்து விட்டுக்

கொடுத்து வாழும் போதுதான்

 

ஒரு கூறையின் கீழிருந்து வாழும்போது  

உண்மையான காதல்தானா என்று

அத்தனையும் புரியும். புரிந்தால் தெரியும்

காதல்  இனிதென்று

 

 

அன்புடன்

 

தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




தேமொழி

unread,
Feb 11, 2015, 11:52:39 PM2/11/15
to vall...@googlegroups.com
அருமை...அருமை ஷைலஜா...

காதல் பாடல் எழுதினாலும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் தாக்கம் வந்துவிட்டது :)))

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 11, 2015, 11:54:46 PM2/11/15
to vall...@googlegroups.com
:((

வாழ்க்கையின் நடைமுறை உண்மை...

ஆனாலும் இது மறைமுக அச்சுறுத்தலோ தமிழ்த்தேனீ ஐயா?

..... தேமொழி 

coral shree

unread,
Feb 11, 2015, 11:59:30 PM2/11/15
to vallamai
தமிழ்த்தேனீ ஐயாவின் அற்புதமான கருத்தாடல். அவரசரமாக அள்ளித் தெளித்த வசனமாக உள்ளதை தயவுசெய்து சீரமைத்து கவிதையாக வழங்கினால் மேலும் சுவை கூடும் என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி

அன்புடன்
பவளா

coral shree

unread,
Feb 12, 2015, 12:00:21 AM2/12/15
to vallamai
ஷைலு, கலக்கிட்டீங்க.... அருமை! வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா

2015-02-11 22:14 GMT-05:00 shylaja <shyl...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
Feb 12, 2015, 12:02:44 AM2/12/15
to vall...@googlegroups.com
நான் அமைதி காக்கிறேன், காதல் செய்ய தெரியாது. நானொரு ரிஷ்யசிருங்கன்.

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2015, 12:11:34 AM2/12/15
to vall...@googlegroups.com
தமிழ்த்தேனீ ஐயாவின் அற்புதமான கருத்தாடல். அவரசரமாக அள்ளித் தெளித்த வசனமாக உள்ளதை தயவுசெய்து 


மடல்களில்  எழுதும்போது  சொற்களை யோசிக்காமல்  அள்ளித் தெளிக்கிறீர்களே  சகோதரி

அவசரமாக அள்ளித் தெளித்த  என்று நீங்கள் கூறுவது  யோசிக்காமல் சொற்களை அவசரமாக அள்ளித் தெளிக்கும்   அரைகுறை போல் உள்ளதே.  


சற்றே  நிதானியுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




coral shree

unread,
Feb 12, 2015, 12:35:41 AM2/12/15
to vallamai
எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன் சார். சுட்டியமைக்கு நன்றி.

அன்புடன்
பவளா

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2015, 12:44:25 AM2/12/15
to vall...@googlegroups.com
எழுத்துப் பிழையல்ல  சகோதரி  

கருத்துப் பிழை


சொற்களை  அள்ளித் தெறிப்பது  எளிது

 அள்ளுவது கடினம்

சொற்களை  எழுதும்போது  கவனமாக எழுதுங்கள்

தவறு இருந்தால் சுட்டுங்கள்  திருத்திக் கொள்கிறோம்

அதை விடுத்து    ஏதோ  அவசரக் கோலத்தில் அவரசரமாக அள்ளித் தெளித்த வசனமாக உள்ளதை          என்றெல்லாம்  எழுதாதீர்கள்

என் மேல் ஏதேனும் கோபமிருப்பின்  சொல்லுங்கள்


அதற்காக  மனம் வருந்தும்படியான சொற்களை  இனி  எழுதாதீர்கள்

நான் உங்களைப் போன்ற  மரபுக் கவிஞன்   அல்ல

மிகச் சாதாரணமாக   எழுத வந்த  கருத்தை   எழுதுபவன் அவ்வளவே

அன்புடன்
தமிழ்த்தேனீ


  

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 12:48:44 AM2/12/15
to வல்லமை, Kaviri Maindhan

2015-02-05 22:02 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
​செம்மைப்படுத்தி​



தேய்பிறைக் கோலம் !

 
அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:00:17 AM2/12/15
to வல்லமை, Kaviri Maindhan
2015-02-06 16:58 GMT+05:30 Ravi Subramanian <ravi...@gmail.com>:

தீயில்லாமல் தாபம் ஏற்றும் ஜ்வாலை தனிமையடீ-நீ
             தீண்டியணைத்தால் மட்டும் வாழ்வில் சேரும் இனிமையடீ!


​ 

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:04:42 AM2/12/15
to வல்லமை
2015-02-09 22:41 GMT+05:30 ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com>:
காதல் இனிது
==========================================ருத்ரா

செம்பஞ்சு மேகங்களே.
கடப்பாரை தூக்கி வருகிறார்கள்.
உங்களை தூளாக்க.

அன்பே சிவம் என்பதில்
அன்புக்குள் நீங்கள்.
பாவம் 
உடைவது எல்லாம்
சிவமே சிவமே சிவம் தானே!


​ 

===========================================



shylaja

unread,
Feb 12, 2015, 1:07:10 AM2/12/15
to vallamai
நன்றி  விஞ்ஞானி சார்! கல்கண்டு என்றும் சொல்லலாமா  கற்கண்டினை?

shylaja

unread,
Feb 12, 2015, 1:08:47 AM2/12/15
to vallamai
கவிதை நன்று  தேனி சார்..கூறை என்பது ஆடை  கூரை  தான் கட்டிடக்கூரை என்ப்படுவதாக இருக்கவேண்டும்.. ஆனால்  நிச்சயமாக  தெரியவில்லை நான் சொல்வது தவறானால் மன்னிக்க.

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:09:01 AM2/12/15
to வல்லமை, Kaviri Maindhan
2015-02-10 10:45 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:


காதல் இனிது! காதல் இனிது! காலமெல்லாம்
 

shylaja

unread,
Feb 12, 2015, 1:10:33 AM2/12/15
to vallamai
ஆழ்வார் பாடல்களைப்படித்தால் அவர்கள் இறைவன் மீது கொண்ட காதலின் வலிமை தெரியும்!! ஆழ்வார்(திருவரங்க) ப்ரியாவான எனக்கு மட்டும் எப்படி  அரங்கனையே பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தாக்கம் வராமல்போகும்?:)  நன்றி கருத்துக்கு. 

shylaja

unread,
Feb 12, 2015, 1:11:23 AM2/12/15
to vallamai
நன்றி பவழா

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:12:27 AM2/12/15
to வல்லமை
2015-02-12 8:44 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:


வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்

 
​.​

 

shylaja

unread,
Feb 12, 2015, 1:13:30 AM2/12/15
to vallamai
துரைத்தம்பி  என் கவிதைக்கு அட்டகாசமான  படம் அளித்தால் இன்னொரு கவிதை  அளிப்பேன்:):)

shylaja

unread,
Feb 12, 2015, 1:14:02 AM2/12/15
to vallamai
அட  அட கேட்டுமுடிப்பதற்குள்>>>>>:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Feb 12, 2015, 1:14:23 AM2/12/15
to vallamai
ஆமா  இதயம் ஏன் ரொம்ப  சிவப்பா இருக்கு துர?:) 

coral shree

unread,
Feb 12, 2015, 1:15:57 AM2/12/15
to vallamai
​//மிகச் சாதாரணமாக   எழுத வந்த  கருத்தை   எழுதுபவன் அவ்வளவே//

ஐயா, தங்கள் கவிதைகளை நான் நிறைய வாசித்திருக்கிறேனே.. இதோ இது போன்று... தங்கள் கவிதையின் ரசிகை என்ற அந்த உரிமையில்தான் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னித்தருளுங்கள். 

ஆடியிலே காற்றடிக்கும்
அம்மியையே பறக்க வைக்கும்
புரட்டாசியில் பொன்னுருகக் காய்ந்து         
மண்ணுருகப் பெய்யும் என்றெல்லாம்
எதிர்பார்த்துப் பொய்த்த மழை
மானாடி மயிலாடி மற்றவைகள்
தானாடிக் காத்திருந்து காத்திருந்து
ஏமாற்றம் தந்த மழை
இயல்பான சுழற்சியினால்
இயற்கையின் எழுச்சியினால்
திரண்டெழுந்த கார்முகிலின்
கருணையினால் ஐப்பசியில் அடை
அடையாய் அடர்ந்து பெய்த மழை
காரணமாய் ஆதவனே நனைந்தான்
ஐப்பசியின் அடை மழையில்
ஆதவனே நனைந்தான்!

உதய சூரியனோ மறையும்
சூரியனோ உலகிலே உண்டோ?
ப்ரபஞ்சம் சுழலுவதால் தோன்றி
மறைவதுபோல் மாயம்            
காட்டுகிறார் சூரியனும் சந்திரனும்!

ஆதவனே நீராடும் ஐப்பசியில்
மானிடரே நாமும்தான்
தீபாவளித் திருநாளில்
கங்கையின் புனித நீரால்
நீராடி மகிழ்ச்சியில் நனைவோமே!
நாருசிக்கும் பலகாரம்
அருந்தியே மகிழ்வோமே!

ஒரு வருடம் காய்ந்த சூரியன்
ஒரு நாளில் நனைந்தான்
சூழ்நிலையின் குளிராலே
நடுநடுங்கும் சூரியனும்
குளிர்காயத் தீபங்கள் ஏற்றியே
ஒளியும் ஒலியும் காண…
நம் நாட்டுப் பட்டாசும் மத்தாப்பூ
புஸ்வாணம் ஏற்றியே மகிழ்வோமே!

விண்முட்டும் ராக்கெட்டு இங்கிருந்தே
விட்டு அத்துணை கிரகங்களையும்
ஆராய்ந்தே அங்கிருக்கும் ரகசியங்கள்
அதிசயங்கள் இங்கிருந்தே அறிவோமே!

சூரியனே நனைந்தான் நாமும்
தான் நனைந்தோம் கூட உள்ள
மக்களும் நனைந்தாரே
அவருக்கும் குளிர்தானே
நாமெடுக்கும் ஆடைகள்
விதவிதமாய்ப் பலகாரம்
குளிர் நீக்கும் பட்டாசு
அத்தனையும் மொத்தமாய்
ஓரிடத்தில் குவித்து வைத்து
ஒன்றாக எரியவிட்டால்
உலகமே வெடிந்து போகும்

வாங்கி வந்த அத்தனையும்
பங்கு போட்டுப் பிரித்தெடுத்து
அவருக்கும் அளித்தால் மகிழ்வாரே
அவர் மகிழ்ந்து புன்னகைத்தால்

அகிலமும் ஒளி பெறுமே! ​

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:16:49 AM2/12/15
to வல்லமை
​கட்டுக்குள் வரமறுக்கும் இளரத்தம் :)​

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:24:42 AM2/12/15
to வல்லமை
2015-02-12 10:06 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

                    காதல் இனிது

 

 

ஒரு கூறையின் கீழிருந்து வாழும்போது  

உண்மையான காதல்தானா என்று

அத்தனையும் புரியும். புரிந்தால் தெரியும்

காதல்  இனிதென்று



​ 

 

 

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2015, 1:25:52 AM2/12/15
to vall...@googlegroups.com
 ஷைலஜா அவர்களே   நீங்கள் சொல்வதுதான் சரி

கூறை       அல்ல    

கூரைதான்    சரியான சொல்  மிகச் சரியான  நேரத்தில்  சுட்டிக்காட்டியமைக்கு  நன்றி

தவறைத் திருத்தி  அனுப்புகிறேன்



காதல் இனிது

 

 

ஒரு கூரையின்கீழ் வாழும்போது தெரியும்

ஒத்துப் போகிறதா   இல்லையா என்று

 

இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து

தொடர் சந்திப்பாய்  வழியும் போதும்

கடற்கரைப் படகின்  மறைவில் மடியில் படுத்து

காதலைப் பகிர்ந்து கொள்ளும் போது

இருசக்கர விசையூர்தியில் ஒட்டிக்கொண்டு

ஊரெல்லாம் சுத்தும் போது

திரைரங்கின் இருட்டிலே படம்பார்த்து

நாயக நாகியாய் மாறும் போது

 

அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு

குளிர் சாதன  அறையில் ஒரு நாள் பகர்தல்

 

உயிரே நீ தானென்றும்  க‌டைசீவ‌ரை

உடன் வரும் துணை நீதானென்றும்

வாய்க்கு வாய் பொய்யாய் ச‌த்திய‌ங்க‌ள்

ப‌றிமாரிக் கொள்ளும்போது

 

அத்த‌னையும் என்ன‌வென்று

ஒரு கூரையின்கீழ் இருந்து

நீ   உண்மையான நீயாய்,

அவ‌ன் உண்மையான அவனாய்

நிதர்சனங்களை புரிந்து விட்டுக்

கொடுத்து வாழும் போதுதான்

 

ஒரு கூரையின்கீழ்  வாழும்போது  

உண்மையான காதல்தானா என்று

அத்தனையும் புரியும்புரிந்தால் தெரியும்

காதல்  இனிதென்று

 

 

அன்புடன்

 

தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:27:48 AM2/12/15
to வல்லமை
2015-02-12 10:32 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
நான் அமைதி காக்கிறேன், காதல் செய்ய தெரியாது. நானொரு ரிஷ்யசிருங்கன்.

​:_)​

​ 



--

Innamburan S.Soundararajan

unread,
Feb 12, 2015, 1:34:11 AM2/12/15
to vall...@googlegroups.com
தொரை! சிரிச்சு மாளலெ.

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2015, 1:35:20 AM2/12/15
to vall...@googlegroups.com
காதல் இனிது
 
 
ஒரு கூரையின்கீழ் வாழும்போது தெரியும்
ஒத்துப் போகிறதா   இல்லையா என்று
 
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய்  வழியும் போதும்
கடற்கரைப் படகின்  மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போது
இருசக்கர விசையூர்தியில் ஒட்டிக்கொண்டு
ஊரெல்லாம் சுத்தும் போது
திரையரங்கின் இருட்டிலே படம்பார்த்து
நாயக நாகியாய் மாறும் போது
 
அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு
குளிர் சாதன  அறையில் ஒரு நாள் பகர்தல்
 
உயிரே நீ தானென்றும்  க‌டைசீவ‌ரை
உடன் வரும் துணை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் ச‌த்திய‌ங்க‌ள்
ப‌றிமாரிக் கொள்ளும்போது
 
அத்த‌னையும் என்ன‌வென்று
ஒரு கூரையின்கீழ் இருந்து
நீ   உண்மையான நீயாய்,
அவ‌ன் உண்மையான அவனாய்
நிதர்சனங்களை புரிந்து விட்டுக்
கொடுத்து வாழும் போதுதான்

ஒரு கூரையின் கீழிருந்து வாழும்போது  
உண்மையான காதல்தானா என்று
அத்தனையும் புரியும். புரிந்தால் தெரியும்
காதல்  இனிதென்று
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




தேமொழி

unread,
Feb 12, 2015, 1:42:54 AM2/12/15
to vall...@googlegroups.com
துரை உங்களிடம் இருந்து படம் பெறுவதற்காகவே, மூளையை கசக்கி  காதலைப் பற்றி எனக்கு தெரிந்ததை வைத்து கவிதை (என்று) எழுதினேன்..

எனக்கும் படம் போடுவீங்களா...ப்ளீஸ் ...ப்ளீஸ்....


காதலுக்கு ...
ஜாதியில்லை மதமுமில்லை
மொழியினமில்லை நிறபேதமுமில்லை
வயதில்லை பொழுதென்பதுமில்லை 
கண்களில்லை வாய்மொழியுமில்லை 
ஏழையென்றாலும் ஒரு பொருட்டில்லை

காதல்...
உணர்வுகளால் உறவை வளர்த்து 
உயிர்களிடத்தில் அன்பை நிறைத்து 
காலந்தோறும் தொடர்ந்திடும் காதல்   
இனிது ... இனிது...காதல் இனிது
ஆதலினால் காதல் செய்வீர்....


துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 1:54:29 AM2/12/15
to வல்லமை
2015-02-12 12:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
துரை உங்களிடம் இருந்து படம் பெறுவதற்காகவே, மூளையை கசக்கி  காதலைப் பற்றி எனக்கு தெரிந்ததை வைத்து கவிதை (என்று) எழுதினேன்..

எனக்கும் படம் போடுவீங்களா...ப்ளீஸ் ...ப்ளீஸ்....
​அக்காவுக்கு இல்லாமலா :)

இரண்டு வருகிறது பாருங்க 
 


காதலுக்கு ...
​​
ஜாதியில்லை மதமுமில்லை
மொழியினமில்லை நிறபேதமுமில்லை

 

காதல்...
உணர்வுகளால் உறவை வளர்த்து 
உயிர்களிடத்தில் அன்பை நிறைத்து 
​​
காலந்தோறும்
தொடர்ந்திடும் காதல்   
இனிது ... இனிது...காதல் இனிது
ஆதலினால் காதல் செய்வீர்....

​ 

தேமொழி

unread,
Feb 12, 2015, 2:14:16 AM2/12/15
to vall...@googlegroups.com
Soooooooooooo...Sweeeeeeeeeet ...

நன்றி துரை ....


..... தேமொழி

coral shree

unread,
Feb 12, 2015, 2:19:16 AM2/12/15
to vallamai, துரை. ந. உ
அழகான படத்திற்கு மிக்க நன்றிங்க துரை தம்பி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Feb 12, 2015, 7:22:01 AM2/12/15
to coral shree, vallamai
காதல் இனிது ...!
என் கிறுக்கலை ... மைந்தன்  மெயிலுக்கு அனுப்பிவிட்டேன் :)

சி. ஜெயபாரதன்

unread,
Feb 12, 2015, 11:37:33 AM2/12/15
to vallamai
ஷைலஜா,

கற்காலம் என்றுதானே சொல்வோம்.  கல்காலம் என்றால் பல் இடறுதே ! 
கற்கண்டு என்றால் இனிக்குது;  கல்கண்டு என்றால் கல்தான் தெரியுது !  

நீங்கள் தமிழ்வாணன் ரசிகையா ?  

சி. ஜெயபாரதன்

Nagarajan Vadivel

unread,
Feb 12, 2015, 12:09:45 PM2/12/15
to vallamai
ஒரு வேளை இடக்கரடகல்லோ

மின்னம்பலம்

shylaja

unread,
Feb 12, 2015, 11:24:37 PM2/12/15
to vallamai
ஜெயபாரதன் சார், கலகண்டு  பேச்சு வழக்கு அதைத்தான் சொன்னேன்!  மற்றபடி நான் தமிழ்வாணன்  ரசிகைலாம்  இல்ல:):) ஆனால் என் அப்பாவின் நண்பர் ஒருவர் ஸ்ரீரங்கத்தில்  பயங்கர ரசிகர் தமிழ்வாணனுக்கு. கல்கண்டு தவிர வேறேதும் புத்தகம் வாங்கமாட்டார். துப்பறியும் சங்கர்லால் மாதிரி  எந்த நவினமும் கிடையாது என்று அடித்துச்சொல்வார்:0 தமிழ்வாணன்  போலவே கறுப்புக்கண்ணாடி  தலைல   தொப்பி என  சாகும்வரை இருந்ததாய்  பிறகு  நான் கேள்விப்பட்டேன்!
'மிகச் சிறந்தது 
என்றுமே 
புதியது.'
- Emerson
('The excellent is new for ever.')

shylaja

unread,
Feb 12, 2015, 11:25:31 PM2/12/15
to vallamai
ி      இடக்கரடகல்  என்றால் என்னனே தெரில்லயே! 

Nagarajan Vadivel

unread,
Feb 12, 2015, 11:29:31 PM2/12/15
to vallamai
கணக்கில் அடங்கலேன்னா பக்கத்தில் கடன் வாங்குவதுபோல் தெரியலேன்னா தெரிந்தவர்களிடம் கேட்கலாமே.  தெரிந்தவர்களில் கணினிவாசி கூகிளானும் அடக்கம்

கணினிதாசன்

Hari Krishnan

unread,
Feb 13, 2015, 12:54:33 AM2/13/15
to vallamai
2015-02-13 9:55 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
இடக்கரடகல்  என்றால் என்னனே தெரில்லயே! 

இங்கிலீஷ்ல சொன்னா விளங்குமா?  Euphemism என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  இலக்கணப் புத்தகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் எடுத்துக் காட்டு, ‘கால் கழுவி வந்தேன்’.  இடக்கர் அடக்கல்.  இப்ப?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Feb 13, 2015, 1:09:35 AM2/13/15
to vallamai
To Soften an Expression..புரிஞ்சுது!  நன்றி. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 13, 2015, 1:59:25 PM2/13/15
to vall...@googlegroups.com, kavir...@gmail.com

காதல் கொண்டாடுகின்றார்.."
=======================================================ருத்ரா

இதை பரிசு கொடுத்தான் அவளுக்கு
அதன் பிறகு அந்த கையடக்க‌
கண்ணாடியில் தான் 
அவள் பேசிக்கொண்டேயிருந்தாள்

"லிப்ஸ்டிக்"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________

பொன்னில் பொறித்த இதயம்.
அட்டை பூரித்தது.
ஆனாலும் அஞ்சல் முத்திரைகளே
அனுபவித்தது.

வேலன்டைன் கார்டு

______________________________________________


அனிச்சம் பூக்களைக்கொண்டு
கடிதங்கள் திணித்தாலும் இன்று
தபால் பெட்டிகளும் உடைந்து போகலாம்.

"பீலிபெய்ச்சாகாடும்..."

________________________________________________

வெள்ளைக்காரன் கலாச்சாரமடா இது!
கழுத்து நரம்பு புடைத்தார் அப்பா!
அவர் பொறாமை அவருக்கு.
கூட்டுக்குடும்பத்து தாத்தாவுக்கு பயந்து
ஒருக்களித்த கதவு இடுக்கில்
அம்மாவோடு இனிப்பாய் கிசுகிசுத்தார்
என்று 
பாட்டி சொல்லியிருக்கிறாளே.

ஒரு தேவ ரகசியம்.

______________________________________________


"வசந்த விழா! ஒசந்த திருவிழா"
பீச்சாங்குழலில்
கலர் கலராய் குமிழிகளின் கும்பமேளா
இந்த அகோரிகள் 
கூவங்களுக்குள் கூப்பாடு 
போட்டுக்கொண்டிருக்கட்டும்.

கும்பமேளா

______________________________________‍‍‍‍‍_______


தேவியும் பிரித்துப்பார்த்தாள்.
சிவனும் பிரித்துப்பார்த்தார்.
இருவரும் சிரித்துக்கொண்டார்கள்
பூலோகவாசிகளின் வேலண்டைன் கார்டுகள் பார்த்து.
இது வரைக்கும் இந்த‌
பதஞ்சலியின் சூத்திரம் ஒரு மண்ணும் விளங்கலெ
இன்று எல்லாம் புரிந்தது.

ஒரு சூத்திரம்

_____________________________________________

அவர்கள் இதயங்கள் பரிமாறிக்கொண்டார்கள்.
அவர்கள் இருவருக்கும்
இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து
டாக்டர்கள் வெளியே வந்து சொன்னார்கள்.

"சக்ஸஸ்..சக்ஸஸ்..சக்ஸஸ்"

_________________________________________________

அவள் இந்த வருடம்
வேலன்டைன் அனுப்பிவிட்டாளே!
என் எட்டு செமஸ்டர் அர்ரியர்சும் இனி
தூள்.. தூள்... தூள்.

ஒரு எட்டுத்தொகை

______________________________________________________


On Thursday, February 5, 2015 at 3:48:10 AM UTC-8, Kaviri Maindhan wrote:

காதல் இனிது! 

 

காலங்கள் கடந்தபோதும்

கற்பகத்தருபோல காட்சிதருவது!

கவிதைக்குள் விதையாக

சொற்பொருள் பெருகிவருவது!

முதல்கவிதையின் மூலப்பொருளாவது!

எவனையும் கவிதை எழுதவைப்பது!

என்னையும் எழுத வைத்தது!

எத்தனை முறையெழுதி ஓய்ந்தபோதும்

இன்னமும் எழுதிடத் தோன்றுவது!

கற்பனை கைகுலுக்கி வருவது!

இயற்கையும் இடம்பெறும் இடமது!

புதுப்புனல் போலவே பொங்கிடும்

இதயங்களிரண்டின் சங்கமம்!

கரைபுரண்டோடிடும் உணர்வுகள்

விடைசொல்லவரும் உறவுகள்..

உனக்கென நான் எனும்..

எனக்கென நீ எனும்..

உரிமையைத் தருகிற சொந்தம்!

உயிரினில் கலந்தே கொஞ்சும்!

மனதினில் தோன்றிடும் மின்னல்

மறுபடிமறுபடி சுழன்றிடும்!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே

ஆண்டவன் வழங்கிடும் பந்தம்!

இதற்கென உள்ளதோர் மகிமை

இணையென எதுவுமே இல்லை..

கணக்கினில் கூடினால் இரண்டு..

காதலில் மட்டுமே ஒன்று!!               

ஆதலால் காதல்செய்வீர் என்றே

மாகவி பாரதி பாடினான்!

அன்பினில் வாழ்ந்திடும் உன்னதம்

அகிலத்தில் தழைக்கட்டும் என்றே

இம்முறை காதல் இனிது!  என்பதே

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பாய்..

உம்மிடம் உருவாகும் கவிதை..

எம்மிடம் சேரட்டும் இனிதே!!

Reply all
Reply to author
Forward
0 new messages