என்ன வரம் வேண்டும்?

4 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Dec 5, 2025, 9:06:09 PMDec 5
to வல்லமை
என்ன வரம் வேண்டும்?
இந்த வரம் கொடுக்கும் விளையாட்டை
மாற்றி விளையாடலாமா?
நீ இங்கே.
நான் அங்கே.
சரியா?
சரி எனறார் கடவுள்.
கேள் என்றான் மனிதன்.
எனக்கு கொடுத்து தானே பழக்கம்
கேட்கத்தோன்றவே இல்லையே.
எனக்கு மட்டும்
உன் மாதிரி அதிகார ஒலி
எப்படி வந்தது?
அதைத்தான்
யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
அது தான்
உனக்கும் எனக்கும் வித்தியாசம்.
மனிதன் அறிய வந்தவன்.
கடவுள் அறியப்பட மட்டுமே வந்தவன்.
மனிதன் ஆயிரம் கடவுள்களை
அறிந்து கொள்பவன்.
கடவுள் மனிதனால்
அறியப்பட மட்டுமே வந்தவன்.
இன்னும்
அங்கே கேள்விகள் காத்துக்கிடக்கின்றன.
"படைப்பவனை படைப்பது எது?"
__________________________________________________
சொற்கீரன்
Reply all
Reply to author
Forward
0 new messages