______________________________________
கறியொடு பகன்றை முளி இசைந்தன்ன
பொருள் செயின் நோக்கில் கூர்மிக்கு ஏகி
பெயர் பெயர் செய்தான் திண்ணிய மள்ளன்.
அற்றைத்திங்கள் மணிமாட முன்றில்
ஆழித்திரள் கொடு முத்தென ஒரு சொல்
ஈந்தாள் ஆங்கு யாது அது எனவே.
செல்வத்துட்செல்வம் மலையென மருள்தரும்
அச்செல்வம் யாது என மீட்டும் மீட்டும்
நரம்பின் நாப்பண் நடுங்க யாழ் மீட்டினாள்.
குறிப்பின் குறிப்பை உணர்ந்தான் ஆங்கே.
ஆங்கு அவள் நீளக் குறித்தது ஒரு பால்.
என் இறைவளை இறுக்கி நெகிழா நின்று
நெகிழ்தரும் நின் நெடிய வரம்பின் இன்பமே
ஈண்டு கடல் மருள் செல்வம் தெளிவாய் மன்.
இவனோ கோடி செல்வம் ஈட்டுதல் ஒன்றே
காழ் பரல் ஒலிக்கும் கடம் பூண் ஆண்மை
என ஒரு பால் ஏற்றி ஆறலை கள்வரின்
கொடுஞ்சுரம் புகுதரும் குறீஇ மீக்கொண்டு
கொல் வழி கல் வழி கால் பொரிய நீடு
நிரம்பா நீளிடை அழல் ஆர கடந்து
அத்தம் நண்ணும் குறி எய்திப் படர்ந்தான்.
நரிவெரூஉத்தலையார் பாலைப்பாழாறு
கண்டு பாடினார் அன்று அஃது அறிவீரோ.
"எருமை அன்ன கருங்கல் இடை தோறு"
தோன்றுதல் எற்றும் ஊழ்த்தல் ஆற்றா
ஏறென தொடர்ந்தான் முள்ளிய கல்லிய
எதிர்ப்படு ஆறு இடறிய போதும்.
_________________________________________________