கண் கவரும் கட்டிடங்கள்

6 views
Skip to first unread message

தமிழ்த்தேனீ

unread,
May 20, 2013, 2:39:28 AM5/20/13
to vall...@googlegroups.com
துபாயில்  கண் கவரும் கட்டிடங்கள்!

அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ள கட்டிடங்கள்

ஒவ்வொன்றும்  ஒவ்வொரு விதத்திலே சிறப்பு வாய்ந்தவை

ஒவ்வொரு முறை வரும் போதும்  ஒவ்வொரு பகுதி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

இங்கே துபாயில்  பாதாள சாக்கடை கூட கிடையாது, ஆனால் எந்த சாலையிலும் சாக்கடை நீர் கொப்பளித்து வெள்ளியே வருவதில்லை, லாரிகளில்தான் எல்லாக் கட்டிடங்களின் கழிவு நீரையும்   எடுத்துப் போகிறார்கள், ஆனால் அந்த லாரிகள் கூட   சாலையில் செல்லும்போது  மற்றவர்களுக்கு நாற்றம் தெரியாதவாறு  எடுத்துச் செல்கிறார்கள்,

இங்கே கொளுத்தும் வெய்யிலில்   கட்டிடங்களில் வேலை செய்து  வெகு நுணுக்கமான கட்டிடங்களை உருவாக்குபவர்கள் பெரும்பாலும்  இந்தியர்கள், மேலும் மற்ற நாட்டினர்

ஆனால் சாலைகள் ,கட்டிடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முறையாகத் திட்டமிட்டு  செயல்படுகிறார்கள்..

ஒரு பகுதியில்  வாழ்வதற்கு அடுக்குமாடிக்  கட்டிடங்கள்  அமைப்பதற்கு முன்பாகவே , அந்தப் பகுதியில் சாலைகளுக்கு   வருங்காலத்திலும்   விரிவாக்கத் தேவையான இடங்களை முதலில்  ஒதுக்கி விட்டு, நடைபாதைகள் அமைத்து , நடை பாதைகளில்  பலவிதமான  மரங்களை நட்டு, பாதசாரிகள் நடக்க  வசதியாக அமைத்துவிட்டு , வாகங்கள்  ஓட்ட பெரிய சாலைகளை  அமைத்து , ஆங்காங்கே விளையாடும் இடங்களை முறையாக அமைத்து  , செயல்படுகிறார்கள்,


இத்தனைக்கும்   இங்கே  எண்ணெய் வளத்தைத் தவிர  வேறு வளம் இல்லாத நாடு, தண்ணீர் கிடைப்பது கடினம், ஆனாலும் கடல் நீரிலிருந்து  சுத்திகரித்து  நல்ல குடி நீரை வழங்குகிறார்கள், மின்சாரம் ஒரு நாளும்  இல்லாமல் போவது இல்லை.

அனைத்து நாட்டிலும் கிடைக்கும் அத்துணிக் காய்கறிகளும், அனைத்து தேவையான பொருட்களும் கிடைக்கும் வண்ணம் பெரிய பெரிய  மால்கள்  எனப்படும் கடைகளைக் கட்டி இருக்கிறார்கள். அத்துணைக் கடைகளிலும்  குண்டூசி முதற்கொண்டு  கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம்,

எல்லா நாட்டு மக்களும்  இங்கே இருக்கிறார்கள், அந்தந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கின்றன,

மால்களில்   மாமிசமும் விற்கிறார்கள், ஆனால் அவற்றைப் பதப்படுத்தி கண்ணடிப் பெட்டியில் அடுக்கி குளிர் சாதன வசதியுடன் வைத்திருக்கிறார்கள்.ஒரு நாற்றமோ, அல்லது ஈக்கள் மெய்க்கும் படியாகவோ இல்லாமல்  வெகு சுத்தமான முறையில் விற்கிறார்கள்.


நகரெங்கும்  பேருந்து குளிர்சாதன வசதியுடன் ஓடுகிறது, வீடுகள், மால்கள், மெட்ரோ ரெயில் போன்ற எல்லா இடங்களிலும்  குளிர்சாதன வசதிகள் , மக்கள் கஷ்டப்படாமல்  இருக்க   எச்கலேட்டர் என்னும்  தானியங்கி  மாடிப்படிகள், போன்றவை  மக்களின் நலன் கருதி  பார்த்துப் பார்த்து செய்கிறார்கள், அதனால் பல மேல்நாட்டு மக்களும் விரும்பி  இங்கே வாழ்கிறார்கள்..

இவற்ரையெல்லாம் பார்க்கும்  போது  

என்ன வளம் இல்லஈந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்  வெளிநாட்டில்

எனும்பாடல்  நினைவுக்கு வருகிறது

எண்ணெய் வளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத நாட்டையே இப்படி சொர்க்கமாக மாற்ற முடியும் என்றால்
எல்லா வளங்களும்  உள்ள நம் நாட்டை ஏன் இப்படி ஆக்க முடியாது, ஏன் இப்படி ஆக்க முடியவில்லை என்று யோசித்துப் பார்த்தால் வருத்தமாக உள்ளது
எப்போது நாம் விழிப்போம்

நம் நாட்டையும்   இது போல் வசதியாக ஆக்கி  நம் மக்களை வாழவைக்கவேண்டும்  என்று  தோன்றுகிறது

எப்போது நம் நாடு அடிப்படை வசதிகளைப் பெருக்கி மக்களை  மக்களாக வாழவைப்பர்களோ என்று மனம் ஏங்குகிறது



அன்புடன்
தமிழ்த்தேனீ

WP_001355 - Copy.jpg
WP_001359.jpg
WP_001360 - Copy.jpg
WP_001360.jpg
WP_001361 - Copy.jpg
WP_001361.jpg
WP_001362.jpg
WP_001363.jpg
WP_001365.jpg
WP_001366.jpg
WP_001367.jpg
WP_001355.jpg
WP_001368.jpg
WP_001369.jpg
WP_001370.jpg
WP_001371.jpg
WP_001372.jpg
WP_001373.jpg
WP_001374.jpg
WP_001375.jpg
WP_001379.jpg
WP_001380.jpg
WP_001356 - Copy.jpg
WP_001381.jpg
WP_001382.jpg
WP_001383.jpg
WP_001384.jpg
WP_001385.jpg
WP_001356.jpg
WP_001357 - Copy.jpg
WP_001357.jpg
WP_001358 - Copy.jpg
WP_001358.jpg
WP_001359 - Copy.jpg

வேந்தன் அரசு

unread,
May 20, 2013, 9:59:34 PM5/20/13
to vall...@googlegroups.com
>இத்தனைக்கும்   இங்கே  எண்ணெய் வளத்தைத் தவிர  வேறு வளம் இல்லாத நாடு,

அதுக்கு கருப்பு தங்கம் என பேர் தேனி ஐயா

ககனத்தில் சுவனம் இருக்கு என கண்டுபிடித்தவருக்கு காலடியில் கருப்பு தங்கம் இருக்கு என தெரியலே. வெள்ளைக்காரன் கண்டு சொன்னான்.



20 மே, 2013 2:39 AM அன்று, தமிழ்த்தேனீ <rkc...@gmail.com> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Madhu mitha

unread,
May 21, 2013, 9:02:25 AM5/21/13
to vall...@googlegroups.com
அழகு புகைப்படங்கள். தேசியம் குறித்த சிந்தனையும் தேனீ ஐயா.
நம்மிடம் சுயநலம் இருக்கும் அளவில் தேச நலம் குறித்த செயல் ஊக்கம் இல்லைங்க. தப்பித்தவறி அது இருந்தாலும் அரசியல் காரணங்கள் செயப்புரியவிடாமல் நம்மைத் தடுத்துவிடும்.

ககனத்தில் சுவனம் ரசித்தேன் வேந்தன் அவர்களே 


2013/5/21 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
May 22, 2013, 6:48:11 PM5/22/13
to vallamai
ஐயா,

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஏழு எமிரேட்டுகளில் எண்ணெய் வளம் இல்லா ஒரு எமிரேட் தான் இந்த துபாய். அதனால் எண்ணெய் வளம் கூட இல்லை நீங்கள் சொன்னது போல.

இருந்தும் துபாய் எப்படி இத்தனை வளமாக இருக்கிறது???

எழுதலாம்... பரம்பரையாகச் சொத்து இருக்க வேண்டிய அவசியமில்லை பணக்காரனாவதற்கு... பணம் ஈட்ட வழிமுறை அறிந்தால் போதும்...

2013/5/20 தமிழ்த்தேனீ <rkc...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
May 22, 2013, 10:11:45 PM5/22/13
to vall...@googlegroups.com


22 மே, 2013 6:48 PM அன்று, PRASATH <pras...@gmail.com> எழுதியது:

ஐயா,

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஏழு எமிரேட்டுகளில் எண்ணெய் வளம் இல்லா ஒரு எமிரேட் தான் இந்த துபாய். அதனால் எண்ணெய் வளம் கூட இல்லை நீங்கள் சொன்னது போல.

இருந்தும் துபாய் எப்படி இத்தனை வளமாக இருக்கிறது???

எழுதலாம்... பரம்பரையாகச் சொத்து இருக்க வேண்டிய அவசியமில்லை பணக்காரனாவதற்கு... பணம் ஈட்ட வழிமுறை அறிந்தால் போதும்...

துபாய் கடத்தல்காரர்களின் சொர்க்கம் 
Reply all
Reply to author
Forward
0 new messages