ஸ்ரீரங்கம் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணலில் புதைந் துள்ள பழங்கால நாணயங்களை தேடும் பணியில், தஞ்சாவூர் மாவட்டம் திட்டை அருகேயுள்ள மெலட்டூரைச் சேர்ந்த கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத் தொழிலாளர்களான இவர்கள் குறுவை சாகுபடி முடிந்து விட்டதால், அறுவடைக்கு இடைப்பட்ட நாட்களில் பிழைப்புக்காக ஆற்று மணலில் புதைந்துள்ள நாணயங்கள், தங்கம், வெள்ளிப் பொருட்களைச் சேகரித்து, விற்று வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் ஆற்று மணலை அரித்துப் பொருட்களை எடுக்கும் இவர்களை, நாணயம் சேகரித்து விற்பவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தேடிவருகின்றனர். 5 குடும்பங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காலை முதல் மாலை வரை சலியாது ஆற்றில் மணலை கைகளால் சலித்துப் பார்த்தவண்ணம் உள்ளனர்.
இங்கு கிடைக்கும் பழங்கால நாணயங்கள் மற்றும் அதன் மதிப்பு குறித்து இவர்களுக்கு ஏதும் தெரிவதில்லை. நாணயத்தை வாங்க வருவோரிடம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்று விடுகின்றனர். நாணயங்களைத் தேடும்போது குன்றிமணி தங்கம் ஏதாவது கிடைத்தால் இவர்கள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
விவசாய வேலையில்லாததால்..
பொறுமையாக மணலைக் கிளறிக் கொண்டிருந்த ராஜேந்திரனிடம் பேசியபோது அவர் கூறியது:
பழைய காசு பத்தின விவர மெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு வருமானம் வந்தால் சரி. விவசாய வேலை இல்லாதபோதுதான் இந்த நாடோடி பிழைப்பு. அறுவடைக்கு முன்னாடி ஊர் திரும்பிடுவோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை செப்புக் காசு, தங்கக் காசுகளை எல்லாம் எடைக்குதான் கொடுத்தோம். அதை அவர்கள் உருக்கி விடுவதாக சொல்வார்கள். தற்போது அப்படியில்லை. பழங்கால பொருட்கள் மற்றும் நாணயங்கள் சேகரிப்போர், மாணவர்கள் என பலர் எங்களைத் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். அதை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. எங்களுக்கு ஒரு நாள் பிழைப்பு அவ்வளவுதான் என்றார்.
பழங்கால நாணயம் கிடைப்பதில் வியப்பில்லை…
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகத்தின் நிறுவனர் ‘பழங்காசு’ சீனிவாசன் கூறுகையில், “சங்க காலத்தில் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சிபுரிந்தனர். 14, 15-ம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்கள் சிராப்பள்ளியை 2-வது தலைநகரமாக அறிவித்து ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து வந்த ஆற்காடு நவாப் ஆட்சிக் காலம் வரை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப்படுகை (ராஜபாட்டை) அரச பெருவழியாக இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாணிபம் நடந்துள்ளது. மேலும் யாத்ரிகர்கள் வந்து செல்லும் பாதையாகவும் பயன்பட்டுள்ளது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பல போர்களைச் சந்தித்த இப்பகுதி ஆற்றுப் படுகையில் பழங்கால நாணயங்கள் கிடைப்பதில் ஒன்றும் வியப்பில்லை.
இப்படி கிடைக்கும் பழங்கால நாணயம் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷம். எனவே, மணலில் புதைந்து கிடக்கும் அவற்றை அரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கிடைக்கும் நாணயங்கள் எடைக்கு போட்டு உருக்கும் நபர்கள் கையில் கிடைக்காமல் எங்களைப் போன்று நாணயம் சேகரிக்கும் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் கையில் கிடைக்குமாறு வழிசெய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன்” என்றார்.
இந்த விவசாயத் தொழிலாளர்கள், நாணய சேகரிப்பில் ஆர்வமுள்ளோர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்றுதான் கூற வேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பட்டுடை சூழ்ந்த காசு (சீவக. 468) - மேகலைக்கு ஆகுபெயராக இருக்கிறது.
பல்லாங்குழி யாட்டத்திற் காய்கள் சேர்தற்குரிய நடுக்குழிகள் = காசு.
-வல்லமையில் தேமொழி
அதனாலென்ன காசுதான் எக்காலத்திலும் உள்ளதே...... தேமொழி
----------------------------
On Friday, June 27, 2014 4:27:18 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
நாணயமே பழங்கால பொருள் ஆச்சு.
-----------------------------------------------
வேந்தன் அவர்கள்நாணயம்= குணம் என்பது இந்த கலி காலத்தில் (மிகக் கல ப்புள்ளசமூதாய காலநிலை ) யாரிடமும் காணாத பழங்கால செய லாகி விட்டதுஎனும் பொருளில் இரட்டுற மொழி ந்துளார் எனக்காண் கின்றேன்நிற்கஅன்புள்ள தேமொழி அவர்களுக்கு,காசுஎன்பது இ க்காலத்திலும் எக்காலத்திலும் (ஓரிரு நூற்றா ண்டுகளாக)உள்ளதில்லையே எனவே அது ஒரு பழங்காலச் சொல் தானே1947 க்கு முன் கூட ரூபாய் அணா பைசா தம்பிடி எனத்தானனே இருந்ததுஒரு ரூபாய் = 16 அணா = 64 பைசா = 192 தம்பிடி எனும் மாற்று வாய்பாடு அறிவீர்கள்அப்போது பைசா = 1/ 64 ரூபாய் ஆகும்சுதந்திரத்திற்குப் பிறகும் பழைய பைசா இருந்ததுபிறகு தசம முறையில் ரூபாய் பைசா என மாற்றினார்கள்1956 ல்தசம முறை வந்து பை சா = 1/100 ரூபாயாயிற்றுவேறு ஒரு நாணய மதிப்பைக் காட்டுவதால் அதனைஅப்போது நயா பைசா = புதிய பைசா என அழைக்கவேண்டும்என உத்தரவிட்டு அவ்வாறே அப்பெயரிட்டு வெளிவந்ததுபல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நயா =புதிய எனும் முன்னொட்டுதேவையில்லை எனும் நிலை வந்தவுடன் அதனை (கேவல=தனி நிலை) பைசா என மாற்றினார்கள்பழைய பைசாவும் ( pice = காலணா) இந்த பைசாவும் வேறு வேறு தான்மேலும்பழம் திரைப்பட பாடல் ஒன்று = செவியு ற்று ருக்கலாம்பணம் காசு சேர்க்கலாமடீ எனும் வரிகள் வருமேபெரிய மாற்று = பணம் = பணக்காரன் எனும் சொல் காட்டுவது காண்கஅக்கா லத்தில் பணம் என்பது ஓர் பெரிய மா ற்றுகாசு சிறிய( மா ற்று) அளவினதுஇந்த காசு எனவழங்கிய சொல் 16 17 நூற்றாண்டுகளில்வாணிபத்தில் பயன்கொண்டிருந்ததால் ஐரோப்பி யர்கள்இச் சொல்லை தங்கள் மொழியில் எழுதும்நிலை யில் எழுதcashஎன மாறியதுமேலும்காசு என்பது கஃசு என்பதன் திரிபேதிருக்குறளில் உழவு அ திகாரத்தில் வரும் கஃ சு எனும் சொல்லிற்கு கால்பலம் எனும்அவர்கள் காலத்து வழங்கு சொற்களிலிருந்து தவறான பொருளைக் (எடை)ஏறக்குறைய எல்லா உரையாசிரியர்கலும் வைத்துச் சென்றுள்ளார்கள் எனக்காண்கின்றோம் அப்பொருள் ஏதும் பொருத்தமாகத் தெரியவில்லை எடைஎப்படி உருவவழி எடுத்துக்காட்டு ஆகும் ?தொடிப்புழுதி க ஃசா உழைக்கின் பிடித்தொரு வும்வேண்டாது சாலப் படும்தொடிப்புழுதி = மகளிர் தோளி ல் அணியப்படும் தொ டியின்அளவினதாக திரண்டு கிடக்கும் மண் உருண்டைகள்கஃ சா உழைக்கின் = அக்காலத்து வழங்கிய காசின்(மிகச் சிறிய )அளவினதாக செய்து விட்டால்பிடித்தொருவும் = கால்ந டைப்பண்ணை களில் கிடைக்கும்எருவினில் கைப்பிடி அளவு கூடவேண்டாது சாலப்படும் = தேவைபடாதுவீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்கால்நடை தொகுதியைக் குறிக்கும்அதான்றுயாப்பருங்கல உரையில்கஃ சு எனும் சொல் ஒலிக்கும் போது கைசு என இயல்பாகவேவாயினில் (மயங்கி) வழங்கிவிடும் எனவே உள்ளது காணலா ம்
தொடிப்புழுதி = மகளிர் தோளி ல் அணியப்படும் தொ டியின்அளவினதாக திரண்டு கிடக்கும் மண் உருண்டைகள்கஃ சா உழைக்கின் = அக்காலத்து வழங்கிய காசின்(மிகச் சிறிய )அளவினதாக செய்து விட்டால்பிடித்தொருவும் = கால்ந டைப்பண்ணை களில் கிடைக்கும்எருவினில் கைப்பிடி அளவு கூடவேண்டாது சாலப்படும் = தேவைபடாதுவீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்கால்நடை தொகுதியைக் குறிக்கும்
On Friday, June 27, 2014 5:05:27 PM UTC-7, தேமொழி wrote:அதனாலென்ன காசுதான் எக்காலத்திலும் உள்ளதே...... தேமொழி
On Friday, June 27, 2014 4:27:18 AM UTC-7, வேந்தன் அரசு wrote:நாணயமே பழங்கால பொருள் ஆச்சு.நூதலோசு ஐயா அவர்களின் மடலில் இருந்துஇரண்டு கருத்துகளுக்கு என் மறுமொழி:NDLS> வீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்> கால்நடை தொகுதியைக் குறிக்கும்தொறு என்று வீரக்கல்களில் இருக்கிறது. ’தொறுப்பட்டார்’,’தொறுமீட்டு மாண்டார்’ என்றெல்லாம் இருக்கும்.தொழு என்ற சொல்லும் தொறு என்ற சொல்லும் பொருள் ஒன்றே.தொழுவம் - தொறு. Taurus சொல்லுடன் தொடர்புபடுத்திமயிலை வேங்கடசாமி உலகத் தமிழ் மாநாட்டு மலரில் கட்டுரைஎழுதினார். வடக்கே தொழுநை என்னும் நதி யமுனையுடன் சேரும்.அதை தோஹ்நா என்கின்றனர் என மு. ராகவையங்கார் எழுதியுள்ளார்.NDLS> மேலும் காசு என்பது கஃசு என்பதன் திரிபேகாய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.
அப்போ காயின் என்ற சொல்லை தமிழ்க்கிளவியாக பாவிக்கலாம்.
NDLS> மேலும் காசு என்பது கஃசு என்பதன் திரிபே
காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.
அப்போ காயின் என்ற சொல்லை தமிழ்க்கிளவியாக பாவிக்கலாம். - வேந்தன் அரசு
2014-06-26 15:05 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆற்றில் பழங்கால நாணயம் தேடும் விவசாயத் தொழிலாளர்கள்- நாணயம் சேகரிப்போர், ஆராய்ச்சி மாணவர்களின் ‘பொக்கிஷங்கள்’
இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். கிராம அதிகாரிகளும் மானில தொல்லியல் துறை அல்லது அருங்காட்சியகம் இந்த ஏழை விவசாயிகளுக்கு சம்பளம் அளித்து இதனை முறைப்படுத்தப்பட்ட பகுதி நேர தொழிலாக்கி அவர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்களை அருங்காட்சியகங்களில் ஒப்படைக்கப்படும் வகை செய்ய வேண்டும். இதன் வழி முக்கிய வரலாற்றுச் சான்றுகள் தனி நபர் சேகரிப்பு என்ற வகையில் அடங்கிவிடாமல் அல்லது அயலகம் சென்று விடாமல் அல்லது உருக்கி அதன் உரு மாற்றிவிடாமல் இருக்க வகை செய்யும்.சுபா
பொலங்கல வொருகா சேய்க்கும் = பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்
ஏய்ப்ப. அன்ன என்பன போல எனும் பொருள் தரும் கணேசரு. காயில் இருந்து காசு பிறந்ததாக கொள்ளலாகாது.
நா. கணேசன்
--
On Sunday, June 29, 2014 3:27:21 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:29 ஜூன், 2014 4:10 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Sunday, June 29, 2014 12:57:17 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:பொலங்கல வொருகா சேய்க்கும் = பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்
ஏய்ப்ப. அன்ன என்பன போல எனும் பொருள் தரும் கணேசரு. காயில் இருந்து காசு பிறந்ததாக கொள்ளலாகாது.
பொலங்கலம் = காசுமாலை. காய்கள் போன்ற காசுகள் தொங்கும் மாலை.யகர சகரப் போலி காய்/காசு.வேப்பம் பழம் மஞ்சளாக பொன்னால் ஆன துண்டங்கள் போல இருக்கும்.நீங்க காய்களை காசு என்கிறீர்கள்.
தெங்கம்பழத்தை தேங்காய் என்கிறோமே. மாம்பழத்தை மாங்காய் (Mango) என்றே ஆங்கிலத்தில் பெயர் அமைந்திருக்கிறது.
---
இங்கு கொன்றை என்பதுமலர் அல்லவா?மலர் என்ற சொல்லில் இருந்துதான் காசு பிறந்திருக்கும்
.

”This popular tree, native to Southeast Asia and not to be confused with the tree that produces a kind of cinnamon called "cassia", is seen blooming profusely all over Southern California in early Summer. It is the national tree and flower of Thailand and state flower of Kerala in India. The tree produces hard bean pods over a foot long and up to an inch across. The beans are said to be toxic, but unfortunately, they do not seem to be toxic to squirrels.
This is a highly medicinal tree, with all parts used throughout South and Southeast Asia and beyond. Culinary usage seems confined mostly to Thailand where both leaves and flower buds are used in curries and the like. They are both available lightly pickled in jars here in Los Angeles, but of course fresh leaves are available all over town, and fresh buds in the Summer.”
”In the photo to the left are cassia bud clusters that had been packed in a light brine. These were from Thailand, but purchased from an Indian market in Los Angeles. The largest were 3/8 inch diameter. They had a subtle flavor with a touch of bitterness.”
- buds of Konrai flower are pickled in lite brine (salt water). Compare the shape of the Cassia (கொன்றை) to those of neem fruits (வேம்பின் காய்). They are in the shape of ancient & first coins of Sangm age, That is why kAsu is a shape "aakupeyar". ~ N. Ganesan
On Sunday, June 29, 2014 7:04:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:இங்கு கொன்றை என்பதுமலர் அல்லவா?
NG> காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.
காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.
காய்ச்சிக் கொட்டியதால் காய்ச்சு < காசு என்றானதாக பாவாணர் விளக்கம் கூறுகின்றார்
சேசாத்திரி
வினைச்சொல் செக்கார்களின் ஒரு பெயர் மோதி என்று தருகிறது.) மோதகம் அரிசிமாவைவெல்லம் போன்றவையுடன் கையால் ஒரு பிடிபிடித்துச் செய்வது. அதனுடன் முன்னொட்டாகபொருளில்லாத ஆ முன்னொட்டை சேர்த்தால் ஆமோதகம் ஆகிறது. இனிப்பு/இனிமை என்ற இரண்டாம்பொருளை வடமொழியில் பெறுகிறது. காயா/காசா வண்ணத்தில் உள்ள விண்ணைக்காயம் (ஆகாயம்) என்பதும், மோதகம் ஆமோதகம் ஆதலும் ஒப்பிடலாம்.
நண்பர் திரு கணேசன், வணக்கம். பெண்ணாடம் அம்பாள் பெயர் அழகியகாதலி அம்பாள். அப்பெயரை இன்று ஆமோதானாம்பாள் என்று வடமொழியில் அழைக்கிறார்கள். அர்ச்சனை அப்பெயரிலேயே செய்கிறார்கள். ஆமோதனாம்பாள் வடமொழிச் சொல்லின் பொருளும் அது அழகியகாதலி என்ற பெயருடன் பொருந்துகிறதா என்று அறியவும் ஆவல்.