விக்ரம் இறங்குள் (Vikram Lander) - சந்திரயானம்-3

58 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 26, 2023, 8:07:27 AM8/26/23
to Santhavasantham
விக்ரம் இறங்குள் (Vikram Lander) - சந்திரயானம்-3

இயவுள், செய்யுள், இயங்குள் (எஞ்சின்), கடவுள் (< கடன். Cf. நேர்த்திக் கடன்), ... போல, வானில் இருந்து பூமியின், துணைக்கோள், கோள்களில் தரை-இறங்கும் Lander என்னும் வாகனத்தை, இறங்குள் ‘Lander' எனத் தமிழில் அழைக்கலாம்.

நா. கணேசன்

நடுவெ3101. பாரத நிலவுச் செலவு!
(நேரிசை வெண்பா)
.
அயர்தி உருண்டை பழையதன்று விண்ணை
நயந்த செலவெதிர் நன்மை — பயக்கும்
நகுடமகன் யௌவனம் நாடும் இயல்பு
இகம்சந் திரயான் செலவு.
.
செய்யுளின் சொல்: மூன்றெழுத்துச் சொல்: நடுவெழுத்து
• அயர்தி; அசதி: ச
• உருண்டை: பந்து: ந்
• பழையதன்று: புதிது: தி
• செலவெதிர்: வரவு: ர
• நகுடமகன்: யயாதி: யா
• இயல்பு: தன்மை: ன்
• நடுவெழுத்தலங்காரச் சொல்: சந்திரயான் (ஈற்றடியில்) - கவிஞர் இரமணி

kanmani tamil

unread,
Aug 26, 2023, 8:19:05 AM8/26/23
to vallamai
Lander = இறங்குள்

ஏற்கலாம்; நன்றாகத் தான் இருக்கிறது. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdBgk7POebaXxy8HQVv9PPYAYRG_vuLseYCweunJ%2B6iAQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Aug 26, 2023, 8:48:39 AM8/26/23
to vallamai
இன்னொரு choice.

விடுதல் + ஐ = விடுதலை

ஓர்தல் + ஐ = ஒருதலை 

மறுத்தல் + ஐ = மறுதலை

என்பது போல;

 இறங்கல் + ஐ = இறங்கலை

என்று கூட வைத்துக் கொள்ளலாம். 

சக 

N. Ganesan

unread,
Aug 26, 2023, 8:52:28 AM8/26/23
to vall...@googlegroups.com
இறங்கலை - பேச்சுத்தமிழில் இறங்கவில்லை எனப் பொருள்படும்.
மக்கள் தவறாகப் புரிந்துகொள்ள நேரும்.
விக்ரம் இறங்கலை. என்றால் Vikram has not landed. in ordinary speech.

kanmani tamil

unread,
Aug 26, 2023, 9:31:26 AM8/26/23
to vallamai
ஆமா ஆமா. 

இறங்குள் என்றே வைத்துக் கொள்ளலாம். 

சக 

S. Jayabarathan

unread,
Aug 26, 2023, 10:34:39 AM8/26/23
to vall...@googlegroups.com, நா. கணேசன், kanmani tamil, anne vaigai
SPACE CAPSULE - விண்சிமிழ்

ORBIT0R -  விண்சுற்றி, புவிசுற்றி, நிலாசுற்றி

LANDER - தள ஆய்வி, தளாய்வி, தளவுளவி

ROVER - தளவூர்தி

NEXT 0NE TO SUN - ஆதித்தியான் -1

சி. ஜெயபாரதன்

kanmani tamil

unread,
Aug 26, 2023, 11:01:22 AM8/26/23
to S. Jayabarathan, vallamai
ஜெயபாரதன் ஐயா,

Lander = தளவுளவி

சூப்பர் சொல்லாக்கம் ஐயா 

சக 

N. Ganesan

unread,
Aug 27, 2023, 9:08:29 AM8/27/23
to vallamai, housto...@googlegroups.com
On Saturday, August 26, 2023 at 8:10:03 AM UTC-5 குருநாதன் ரமணி wrote:
எனக்கென்னவோ தரையிறங்கி அல்லது இறங்கி என்பது இன்னும் இயல்பாகப் படுகிறது. அதேபோல் ரோவர் என்பதைத் தரைவண்டி/பொறிவண்டி என்பதுபோல் அழைக்கலாம்.

ஆமாம். எளிய தமிழில் சொல்லலாம். 

சற்றே செந்தமிழின் இயல்புகளைச் சிந்திக்கவைப்பதற்காக, இறங்குள் ‘Lander'  எனக் கருதுகிறேன்.

அறிவியற்றமிழினை நல்ல தமிழாக்கம் செய்வதில் மிகுந்த அநுபவம் வாய்ந்த விஞ்ஞானி ஜெயபாரதன்.
அவரது  ஆக்கம் ‘தளவுளவி’. 

 Lander: இறங்குள், Lander-Explorer: தளவுளவி (அ) தரையுளவி

NG

On Saturday, August 26, 2023 at 5:37:26 PM UTC+5:30 N. Ganesan wrote:
விக்ரம் இறங்குள் (Vikram Lander) - சந்திரயானம்-3

இயவுள், செய்யுள், இயங்குள் (எஞ்சின்), கடவுள் (< கடன். Cf. நேர்த்திக் கடன்), ... போல, வானில் இருந்து பூமியின், துணைக்கோள், கோள்களில் தரை-இறங்கும் Lander என்னும் வாகனத்தை, இறங்குள் ‘Lander' எனத் தமிழில் அழைக்கலாம்.

நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/249b1b08-542e-45f1-afdb-68970caba4c2n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 28, 2023, 10:24:16 PM8/28/23
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com
ஏனம் < யானம். Schwa (Ə) Phenomenon in Tamil
---------------------------------------

குமரி மாவட்டத்தில் பிறந்த நண்பர், ச. ச. மணிமேகலை கேட்டிருந்தார்:
>Schwa phenomenon- நிகழ்வை உணர்தல் என அறிகிறேன் அய்யா. சொல்லாடல் Schwa புதிது என்பதால் ஆழமாக அறியவும் பேரவா

யானம் என்னும் வடசொல்லுக்குக் கலம் (பாத்திரம்), செலவு (பயணம்) என்பது பொருள். எனவே தான், சந்திரயானம் என தில்லி சர்க்காரின் இஸ்ரோ பெயரிட்டது. சந்திரயான்-1  காலத்தில் எழுதிய பதிவு.  சந்திரயான் = திங்கட்செலவு/நிலவூர்தி என மொழிபெயர்த்தேன்.
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

பிரதமர் வாஜ்பாயி 2003-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில், இஸ்ரோவின் சந்திரயானம் பற்றி அறிவித்தார்.
”"Our country is now ready to fly high in the field of science. I am pleased to announce that India will send her own spacecraft to the moon by 2008. It is being named Chandrayaan."
https://twitter.com/myhistorytales/status/1679853976978853890
https://twitter.com/BJYM/status/1031732971181666304

இலங்கையில் உள்ள ஈனயானம், திபெத்தில் இருந்து ஜப்பான் வரை உள்ள மகாயானம் என்னும் பௌத்த சமயப் பெரும்பிரிவுகள் இரண்டு. ப்ர + யானம் = ப்ரயாணம் என்றாகும். இது பிராகிருதங்களில் பயணம் என்று மருவும் சொல். பிரயாணம்/பயணத்துக்குத் தூய தமிழ்ச் சொல் ‘செலவு’ என்பதாம். எனவே, சந்திரயானம் = திங்கட்செலவு. ப்ர+ யானம் = ப்ரயாணம், ஹரி + யானம் = ஹரியாணம், உத்தர + அயனம் = உத்தராயணம், ராம + அயனம் = ராமாயணம்,  ... வடசொற் புணர்ச்சி விதி. ஆனால், தக்ஷிண + அயனம் = தக்‌ஷிணாயனம். இங்கே, அயனம் எனும் வருமொழி மாறாது நிலைக்கிறது காண்க.

பிரயாணம்/பயணத்துக்குத் தூய தமிழ்ச் சொல் ‘செலவு’. இதனைப் புறப்பொருள்வெண்பாமாலையால் அறியலாகும்:
அரசரறுகுணம் aracar-aṟu-kuṇam , n. id. +. Six measures of foreign policy of a king, viz., சந்தி, விக்கிரகம், *யானம்*, ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகு. திக்கு. 20); நட்பு, பகை, *செலவு*, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல். (பு. வெ. 9, 37, உரை.)

யானஞ்செய்-தல் yāṉañ-cey- , v. intr. யானம் +. To go; செல்லுதல். பத்தியால் . . . யானஞ்செய (இரகுவம்மிசம். நாட்டுப். 41).

யானம் yāṉam , n. < yāna. 1. Conveyance, vehicle, carriage; வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10). 2. Palanquin, litter; சிவிகை. வாகன யானங் கண்மிசைக் கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 20). (சூடா.) 3. Vessel, ship, raft; மரக்கலம். (சூடா.) 4. March against an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.; அரச ரறுகுணங்களுள் ஒன்றான போர்ச்செலவு. சிந்தை கொள் யான மேற்செல்லல் (இரகு. திக்குவி. 21). 5. Room, chamber; அறைவீடு. (யாழ். அக.) 6. cf. pāna. Toddy; கள். (சது.)

சந்திரயானத்தில் உள்ள யானம் நாம் எல்லோரும் அறிந்தது தான். ஷ்வா, Ə (https://en.wikipedia.org/wiki/Schwa ) என்ற மாற்றத்துடன் விளங்குகிறது. யானம் >> ஏனம் என்கிறோம். ஏனம் = பாத்திரம்.

ஏனம்¹ ēṉam , n. 1. Palm leaf-vessel for drinking toddy from; ஒலைக்கலம். (திவா.) 2. Utensil, vessel; பாத்திரம். 3. Tool; கருவி. (W.) 4. Jewel; ஆபரணம். Loc.

ஏனபானம் ēṉa-pāṉam , n. Redupl. of ஏனம்¹ Utensils, implements; தட்டுமுட்டு.

ə https://en.wikipedia.org/wiki/Schwa  - ஆங்கிலத்தில் ’ஷ்வா’  எனப்படும் எழுத்தாக, பல பழைய சொற்களில் தமிழ் மொழியில் இயங்கியிருக்கிறது. ரங்கநாதன் ரெங்கநாதன் ஆகிவிடுவது இந்த  ə(Schwa) ஒலிப்பால் தான். சயசய என்றும், செயசெய என்றும் தேவாரப் பாடல்களில் உண்டு.  ஜயகுமார், ஜயலலிதா, ஜயந்தி ... ஜெயகுமார், ஜெயலலிதா, ஜெயந்தி, .... ஆகிறது. ceyam/jeyam (< jaya), srirengam (< ranga), keGkai (< ganga), ...

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 29, 2023, 8:31:44 AM8/29/23
to Santhavasantham
இறங்குள் என (விக்ரம்) Lander-ஐ அழைக்கலாம். *இறங்குள்* ~ எதுபோல் எனின், தமிழில் உள்ள -உள் விகுதி கொண்ட சொற்களை ஆராயலாம்:
அக்குள், பொருள், அகலுள், இருள், செய்யுள், அடிக்குள், கடவுள், அடுக்குள், அருள், ஆயுள், ஆனந்தப்பையுள், இகுள், இந்துள், இயவுள், சுருள், ஈருள், உறையுள், கண்ணுள், கணந்துள், கந்துள், கம்புள், கருள், கவுள், குருள், கொப்புள், கோகுள், சிம்புள், சிற்றுள், சீருள், சும்புள், செவுள், தெருள், தொப்புள், நருள், நெஞ்சுள், நெருள், பாய்த்துள், புரையுள், புலம்புள், பையுள், பொலம்புள், மருள், மெருள், மொக்குள், வகுள், வரப்புள், விக்குள், வியலுள், விளையுள், வெப்புள், வெருள், வேயுள், அங்குள், குச்சுள், கைக்குள், பாவுள், ...

kanmani tamil

unread,
Aug 29, 2023, 9:36:06 AM8/29/23
to vallamai
நல்ல தொகுப்பு; அருமை 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Aug 30, 2023, 2:28:53 PM8/30/23
to vallamai
ஆனாலும் ஜெயபாரதன் ஐயா கொடுத்திருக்கும் சொல்லாக்கம் காரண காரியத் தொடர்போடு எளிதில் பொருளை விளங்க வைப்பதாக உள்ளது. 

'இறங்குள்' என்ற சொல்லாக்கத்தில் '-உள்' எனும் பின்னொட்டிற்குப் பொருள் தொடர்பு என்ன?

வெறும் சொல்லாக்க உருபு என்று தானே எடுத்துக் கொள்ள இயல்கிறது. 

சக 

N. Ganesan

unread,
Aug 30, 2023, 3:06:54 PM8/30/23
to vall...@googlegroups.com
On Wed, Aug 30, 2023 at 1:28 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆனாலும் ஜெயபாரதன் ஐயா கொடுத்திருக்கும் சொல்லாக்கம் காரண காரியத் தொடர்போடு எளிதில் பொருளை விளங்க வைப்பதாக உள்ளது. 

'இறங்குள்' என்ற சொல்லாக்கத்தில் '-உள்' எனும் பின்னொட்டிற்குப் பொருள் தொடர்பு என்ன?

to land = இறங்கு- ; lander = இறங்கு + உள் (விகுதி) = இறங்குள்.

பொரு- (பொருந்து); பொரு + உள் = பொருள் போல.

seshadri sridharan

unread,
Aug 30, 2023, 9:15:20 PM8/30/23
to வல்லமை
On Thu, 31 Aug 2023, 12:36 a.m. N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:


On Wed, Aug 30, 2023 at 1:28 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆனாலும் ஜெயபாரதன் ஐயா கொடுத்திருக்கும் சொல்லாக்கம் காரண காரியத் தொடர்போடு எளிதில் பொருளை விளங்க வைப்பதாக உள்ளது. 

'இறங்குள்' என்ற சொல்லாக்கத்தில் '-உள்' எனும் பின்னொட்டிற்குப் பொருள் தொடர்பு என்ன?

to land = இறங்கு- ; lander = இறங்கு + உள் (விகுதி) = இறங்குள்.

பொரு- (பொருந்து); பொரு + உள் = பொருள் போல.

Meaning - பொருள் என்றால் விளக்கம். இரண்டும் வெண்மை வழி பிறந்த ஒளிக் கருத்து கொண்டவை. புல் - வெண்மை, ஒண்மை. புல் > பொல் >
பொருள். பொருந்துதல் என்பது வேறு கருத்து. மின் > மீன் - mean நோக்குக.


இன்னொரு பொருள் (object) > பரு என்ற கருத்து உடையது.

N. Ganesan

unread,
Aug 31, 2023, 4:58:04 AM8/31/23
to வல்லமை
On Wednesday, August 30, 2023 at 8:15:20 PM UTC-5 சிலம்பன் நீலன்   wrote:

Meaning - பொருள் என்றால் விளக்கம். இரண்டும் வெண்மை வழி பிறந்த ஒளிக் கருத்து கொண்டவை. புல் - வெண்மை, ஒண்மை. புல் > பொல் >
பொருள். பொருந்துதல் என்பது வேறு கருத்து. மின் > மீன் - mean நோக்குக.


 இந்த இழைக்கு எத் தொடர்பும் இல்லாதது. மொழியியலைக் கொச்சைப்படுத்தும் முயற்சி என பேரா. செ. ரா. செல்வகுமார் சொல்லியதை நினைவு கூர்கிறேன். 

தனியிழை செய்க. நன்றி.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Aug 31, 2023, 8:11:28 AM8/31/23
to vall...@googlegroups.com
வேரியல்  ஆய்விற்கு இவர் தான் அதிகாரி என்று யாரும் யாரையும் அமர்த்தவில்லை. அது இன்னும் குழந்தை நிலையிலேயே உள்ளது. பாவாணர் அதை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு அறைகூவல் விடுக்க யாருக்கும் வேரியல் தெரியாது. அவரது வேரியல் ஆய்வுரைகள் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழில் வந்ததால் அது அவரது ஆதரவாளர்களிடம் மட்டுமே பரவியது. 

பாவாணர் ஆய்வில் சறுக்கல்களை பெருஞ்சித்திரனார் மாப்பிள்ளை ப. அருளி சுட்டிக்காட்டத் தவறவில்லை. பாவாணரை அடியொற்றிய ஆய்வாளர் உலகம் பரவிய கல் நூல் அரசேந்திரன் என்னோடு பேசும் போது அருளி இவர்களை ஏற்கமாட்டார் மட்டம் தட்டுவார் என்று பேச்சின் ஊடே அவ்வப்போது சொல்லினார்.   

வேழம், யானை ஆகிய சொற்கள் நெடுமை கருத்தில் தோன்றியவை. ஆனால் அருளி யா என்னும் கருமைக் கருத்தில் யானை வந்தது என்கிறார். இதுவும் பிழை தான். எல் ஒளிர்வு கருத்து என்று காட்டி யெல் > ஞ ல் > நெல் > நெல்லி பழுத்த நிலையில் ஒளிர்வது என்றார். ஆனால் நெல் > நெடு என்ற கருத்தில் தான் நெல்லி மரம்  தோன்றியது.  ஆனால் பாவாணரினும் ப.  அருளி மேம்பட்ட ஆய்வாளர் என்பது அவரது ஆய்வுகளை படித்தோர் ஒப்புக்கொள்வார். அவருக்கும் அடி சறுக்கி உள்ளது. எனவே   மொழியியலைக் கொச்சைப்படுத்தும் முயற்சி என்பது பிழையான கருத்து. இதில் யாருமே சரியானவர், தலைமையானவர் கிடையாது.

N. Ganesan

unread,
Aug 31, 2023, 9:14:11 AM8/31/23
to vall...@googlegroups.com
நான் தொடங்கும் இழைகளில் வேண்டாம். தனியிழை.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Sep 1, 2023, 8:02:57 AM9/1/23
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com
திவாகர முனிவர், திவாகர நிகண்டில் யானம் என்ற சொல்லின் தற்பவம் தமிழில் பயனாவதைக் குறித்துள்ளார்:
ஆனம் āṉam , n. < yāna. 1. Raft, float; தெப்பம். (திவா.) 2. Ship, vessel, boat; மரக்கலம். (திவா.)

சொல்முதல் ய் மெய்யெழுத்து மறைந்து தோன்றும் சொற்கள் பல.
(1) யாமை > ஆமை. யாமையால் பெறும் பெயர்: யமுநா நதி, தில்லிகை மாநகர் அமைந்துள்ளது.
(2) யாடு > ஆடு. யாடவர் > யாதவர் (spontaneous loss of cerebral from D to d. Th. Burrow).
(3) வடம் போன்ற விழுதுகளால் பெற்ற பெயர் ஆல் என்பது.
வடம் போன்ற தும்பிக்கை இருப்பது யால்+னை (= யானை/ஆனை) > ஆல்-.
வடம் (< வளை-), ஆல்- போன்றன ஆல மரத்தின் சிறப்பாகிய விழுதுகளால் பெற்ற பெயர்.
மிகப் பெரிய பரப்பளவில், நூற்றுக்கணக்கான விழுதுகளுடன், பல காணி நிலத்தில் வாழ்வது யால்/ஆல மரம்.
ஆல் > அகல்- என்ற சொல் பிறந்துள்ளது. இறந்தோருக்கு அகல் விளக்கு வைத்திருப்பதைத்
தமிழ் பிராமி எழுத்தில் பானையோட்டில் கொடுமணலில் பொறித்துளர்.
(4) யாறு > ஆறு. யா- பிணைத்தல்/பொருத்தல்/இயைத்தல். நீரின் தொகுப்பு: யால்+து = யாறு.
(5) யாப்பு > ஆப்பு (6) யாளி > ஆளி (7) யாண்டு > ஆண்டு (8) யாட்டை > ஆட்டை (cf. யாடு ‘மேஷ ராசி’) (9) யாக்கை > ஆக்கை (10) யா மரம் > ஆ மரம் (தேவாரம்), ஆ/ஆச்சா - தமிழரின் மிகச் சிறந்த மங்கல வாத்தியம், நாதஸ்வரம் ஆச்சா மரத்தால் செய்யப்படுகிறது.
...

இவை போல, யானம் > ஆனம். எனவே, சந்திரயானம் = திங்கட்செலவு/ஊர்தி. மங்கலயானம் = செவ்வாய்ச்செலவு/ஊர்தி. ககனயானம் = வான்செலவு/ஊர்தி. பிரதமர் வாஜ்பாயி அளித்த சந்திரயானத்தில் தொடங்கி -யானம் ‘செலவு, ஊர்தி’ வெகுவாக   இஸ்ரோவால்  பயன்படுத்தப்படுகிறது.

கவிஞர் கோதைமோகன்:
> சந்திரயான் என்ற அந்தப் பெயரை வாஜ்பாய் சூட்டியபோது உடனிருந்தவர்களில் சிலர்:
> 1. கலாம் 2. மாதவன் நாயர் 3. மயில்சாமி அண்ணாதுரை. என் அண்ணன் சொல்லக் கேட்டேன்.

யானம் > ஆனம் பல காலமாகத் தமிழில் புழங்குவதைத் திவாகரம் அறிவிக்கிறது. எனவே, சந்திரயானம் = திங்கட்செலவு/ஊர்தி. மங்கலயானம் = செவ்வாய்ச்செலவு/ஊர்தி. ககனயானம் = வான்செலவு/ஊர்தி. பிரதமர் வாஜ்பாயி அளித்த சந்திரயானத்தில் தொடங்கி -யானம் ‘செலவு, ஊர்தி’ வெகுவாக   இஸ்ரோவால்  பயன்படுத்தப்படுகிறது.

நா. கணேசன்
PS: கோதை மோகனின் பெற்றோர் செவ்வி, அயல் நாடுகளில் இஸ்ரோவால் இந்தியாவுக்கு நற்பெயர்:
http://nganesan.blogspot.com/2008/11/chandrayaan-ripple-effect.html
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
Reply all
Reply to author
Forward
0 new messages