அந்த ராயப்பேட்டை எங்கே?

31 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 26, 2015, 11:01:27 PM8/26/15
to மின்தமிழ், Santhavasantham, vallamai










































1880களில் மரங்கள் நிறைந்த மவுபரிஸ் சாலை (டி.டி.கே சாலை - இன்றைய மியூசிக் அகாடமி அருகில்)


எழுத்து நடைக்காகத் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டவர் திரு.வி.க.என்று அறியப்பட்ட திரு.வி.கலியாணசுந்தரனார். சிறு வயதிலேயே சென்னை ராயப்பேட்டையில் அவருடைய குடும்பம் குடியேறியது.

நீண்டகாலமாக அப்பகுதியில் வசித்த அவர், தனது வாழ்க்கைக் குறிப்பில் ராயப்பேட்டையின் பழமையை மட்டுமல்லாமல், பசுமையையும் சுவைபட விவரித்துள்ளார். இதில் அவரது எழுத்து வன்மையைவிட, ஒரு எழுத்தாளராக இயற்கையை எவ்வளவு நுணுக்கமாக அவர் கவனித்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதிலிருந்து:

இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் முதலிய ஊர்கள், ஒரு சிறு கோட்டமெனத் திகழ்ந்தன. இவைகளின் பேரூர் மயிலாப்பூர். இவ்வூர்களின் ஒருமைப்பாட்டுக்கு உயிர்நாடியாய் இருந்தது ஒரு சிற்றேரி. அதன் இடம் தேனாம்பேட்டை. ஆனால், அது மயிலாப்பூர் ஏரி என்றே வழங்கப்பட்டது. அவ்வேரி மயிலைக் கோட்டத்தை ஓம்பியது. பின்னே அது மறைந்தது, மயிலைக் கோட்டத்தின் கட்டுங் குலைந்தது.

இயற்கை வரவேற்பு

அந்நாளில் இராயப்பேட்டையினின்றும் மயிலாப்பூர் செல்வோர் வெயிலின் தாக்குதல் இன்றியே போய்ச் சேர்தல் கூடும். செல்வோர்க்கு வழி நெடுக வரவேற்பு நிகழும். எத்தகைய வரவேற்பு? இயற்கை வரவேற்பு.

இயற்கை அன்னை பலபட பசுமைக்கோலம் பூண்டு வரவேற்பு அளித்த வண்ணம் இருப்பாள். வழிப்போக்கரை கொடிகளிற் குலவும் வெற்றிலைத் தாள்கள் வாழ்த்தும், வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை நீட்டி அழைக்கும், மாமரங்கள் காய்கனிகளை ஏந்தி இறைஞ்சும்.

தென்னைகள் காய்களைச் சுமந்து, 'இளநீர் பருக வாரும் வாரும்' என்று தலையாட்டும், கரும்புகள் 'அருந்துக அருந்துக' என்று சாறு பொழியும், ஆலும் அரசும் வேம்பும் ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள் (நெல் வகை) சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு விருந்தாகும். ஏற்றமும் மூங்கிலும் வண்டும் பறவையும் செவிக்கு அமுதம் ஊட்டும். இவ்வரவேற்புகள் இப்பொழுது உண்டோ?

தாவரப் பெருக்கம்

அட்லன் தோட்டம் என்ற சிறுவனம் காட்டைக் கடுக்கும். அவ்வனம் இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப் பயன்பட்டது. அதில் அத்தி, விளா, மா, நெல்லி, நாகை, கிச்சிலி, இலந்தை, இலுப்பை, புளியம், புரசை, புன்கு (புங்கம்), முண் (தாழை), முருக்கு (முள்முருங்கை), கொன்றை, மகிழம், அசோகு, புன்னை, நுணா, ஆல், அரசு, வேம்பு, பனை, மூங்கில் முதலிய மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன் பொருதும்; பெருங்களா (கரம்பை), காரை, நொச்சி, ஆமணக்கு, எருக்கு, வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை நோக்கும்; சிறுகளா, சங்கம், கள்ளி, கண்ணி (குண்டுமணி), மருட்டி, படர்காரை முதலிய தூறுகள் செடிகளைப் பார்த்து நகைக்கும்; தாளி, கோவை, பாலை, பிரண்டை முதலியன மரங்களையும் செடிகளையும் தூறுகளையும் பிணித்துப் பின்னிப் படர்ந்து இறுமாந்து கிடக்கும். முண்டகம் (நீர்முள்ளி), கண்டகம், முள்ளி, முளரி, ஆடாதோடை, ஆடுதின்னாப்பாலை, செருப்படை, தூதுவளை, தும்பை, துழாய், கண்டை, நாயுருவி, நாக்கடு, ஊமத்தை, கற்றாழை, கொடி, வேலி கண்டங்கத்திரி, அவுரி முதலிய மூலிகைகள் மருத்துவஞ் செய்யும்.

பறவைகளும் உயிரினங்களும்

ஆங்காங்கே குளம், கேணி, ஓடை முதலிய நீர்நிலைகள் தண்மை வழங்கும்; அவைகளின் உள்ளிலும் புறத்திலும் கொட்டி, ஆம்பல், தாமரை, நீலோற்பவம் முதலிய பூக்களும்; அறுகு, தருப்பை, நாணல் முதலிய புல்லினங்களும்; பொன்னாங்கண்ணி, கையாந்தகரை, வள்ளை, வல்லாரை முதலிய கீரை வகைகளும் பொலிந்து இன்பமூட்டும்; அங்கும் இங்கும் பழங்கள் தாமே கனிந்து கனிந்து வீழும்; பாம்பு, கீரி, உடும்பு, முயல், காட்டுப்பூனை, காட்டுக்கோழி முதலியன இரிந்தோடும்; கொக்கு, உள்ளான், நாரை, கள்ளிக்காக்கை, கிளி, பூவை (மைனா), சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, வர்ணக்குருவி முதலிய பறவைகள் பறந்தும் இருந்தும் பாடியும் மகிழும்; கால்நடைகள் உலவும், மேயும், நீர் அருந்தும், படுக்கும், உறங்கும்; மக்கள் விளையாடலும் நிகழும். அட்லன் தோட்டம் ஊருக்கு விறகு, பழம், கீரை, எருமுட்டை (வரட்டி) முதலியன தந்து உதவும். அதை இராயப்பேட்டை வனதேவதை என்று கூறலாம்.

இராயப்பேட்டை தோட்டங்களுக்குப் பேர் பெற்றது. இத்தோட்டப் பரப்பை என்னென்று சொல்வேன்? பசுங்கடல் ஒன்று பொங்கிப் பரவிய ஒரு பெருந் தேக்கம் என்று சொல்லலாம். இராயப்பேட்டையின் மலையும் ஆறும் காடும் கடலும் எங்கே? அவை எங்கே போயின? அவை மறைந்தன. அவ்விடங்களில் பலவிதப் புரங்கள் தோன்றியுள்ளன. மயிலாப்பூர் ஏரி, தியாகராய நகராக மாறினமையால், இராயப்பேட்டை தன் பழங்காலக் காட்சியை எப்படி வழங்குவதாகும்? பழைய இராயப்பேட்டை வேனிலிலும் மக்களை வதைப்பதில்லை. ஓய்வு நல்வழியில் செலவாகும்.

தகவல் உதவி: சு.சந்திரசேகரன், சத்தியமங்கலம்













N. Ganesan

unread,
Aug 27, 2015, 9:53:35 AM8/27/15
to மின்தமிழ், kra narasiah, K R A Narasiah, vallamai


On Thursday, August 27, 2015 at 5:31:13 AM UTC-7, dorai sundaram wrote:
அருமையான பதிவு .
சுந்தரம்.


நன்றி துரை சுந்தரம், திருமூர்த்தி காசி.

திரு. வி. க. கட்டுரைகள் காக்கப்பட்டு பிடிஎப் ஆக, யூனிகோட் ஆக
இணையம் ஏறினால் தமிழ் உய்யும்.

அட்லன் தோட்டம் எங்கிருந்தது? நரசையாவுக்குத் தெரியும்.

நா. கணேசன்
 
2015-08-27 9:22 GMT+05:30 Thirumoorthy Kasi <thirumo...@gmail.com>:
இருப்பிடம் அமிஞ்சிகரை செனைய்நகர் 

2015-08-27 9:18 GMT+05:30 Thirumoorthy Kasi <thirumo...@gmail.com>:
வணக்கம் பெருமை படுகிறேன் .1963 8 ஆம் வகுப்பில் மூன்று வருடங்கள் படித்துள்ளேன்.
அது தான் பெருமைக்குரிய திரு திரு வி  கா அரசினர் உயர் நிலை வகுப்பில்    படித்து வந்தேன் 
அப்போ கொட்டகை ஓடும் தான் தரையும் உட்காரும் பலகை . 













--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 28, 2015, 1:55:43 AM8/28/15
to மின்தமிழ், vallamai


On Thursday, August 27, 2015 at 10:50:35 PM UTC-7, shylaja wrote:
காந்திபஜார்  சாலையில் இருபுறமும் மரங்களின் கிளைகள்  மேல்நோக்கி ச்சென்று  கைகோத்தமதிரி இருக்கும்..குல்மொஹர் அதிகம் என்றாலும்  ஜூலை ஆக்ஸ்டில் அக்ஷ்யமல்லிகை என்னும் மரம்  அட்சதைதெளித்ததுபோல  மல்லிகை(மரமல்லிகைவடிவில்) சாலைமுழுக்க பரவலாக  இருக்கும் அதன் மணம்  மல்லிகையைவிட  அதிகம்!   லால்பாக்  தோட்டத்தில்  நட்சத்திரப்பூக்களுடன் அசோகமரங்களைஅதிக காணாலாம். : Flame of the Forest என்னும் பூக்கள்  சாலைகளில் நெருப்பு நிறத்தில்  பெரியமரங்களில்  காணப்படும்.பெரிய மழைவந்தால் இந்தமரங்கள்  தடாலென விழுந்துவிடுகின்றன

Flame of the Forest = புரசு (புரசவாக்கம்) > பரசு, ஹிந்தியில் பலசு/பலாசம்.
 

2015-08-27 22:32 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:


1981-1982-ல் கிண்டி பழமையான கல்லூரியில் பி.இ முடித்தபின், IISc ல் இருந்தேன். அப்போதிருந்த பெங்களூர் மரங்கள்
இன்று பெருமளவும் காணாமல் போய்விட்டன.

நா. கணேசன்

உண்மைதான்.  2005ல் இங்கே குடியேறியபோது நல்ல கோடைகாலத்திலும் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருக்கும்.  மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 50,000 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுவிட்டன என்கிறார்கள்.  சரியாகத் தெரியாது.  பேரளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது உண்மை.  இதன் விளைவாக, கடந்த நான்காண்டுகளாக மார்ச் ஏப்ரலில் வெப்ப நிலை, சென்னையில் நிலவுவதை விடவும் ஒன்று, இரண்டு டிகிரி அதிகமாக நிலவுகிறது. 

இருந்தாலும் இங்குள்ள மக்கள் மரங்களை நேசிப்பவர்கள்.  புதிதாக மரம் நடும் முயற்சிகளும் நடந்துகொண்டுதான் உள்ளன.  சென்னையில் இப்படி நடக்குமானால் மனம் மகிழ்வேன். 


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 




அன்புடன்
ஷைலஜா

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பெரியாழ்வார்

N. Ganesan

unread,
Aug 28, 2015, 2:04:19 AM8/28/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, August 27, 2015 at 10:55:43 PM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, August 27, 2015 at 10:50:35 PM UTC-7, shylaja wrote:
காந்திபஜார்  சாலையில் இருபுறமும் மரங்களின் கிளைகள்  மேல்நோக்கி ச்சென்று  கைகோத்தமதிரி இருக்கும்..குல்மொஹர் அதிகம் என்றாலும்  ஜூலை ஆக்ஸ்டில் அக்ஷ்யமல்லிகை என்னும் மரம்  அட்சதைதெளித்ததுபோல  மல்லிகை(மரமல்லிகைவடிவில்) சாலைமுழுக்க பரவலாக  இருக்கும் அதன் மணம்  மல்லிகையைவிட  அதிகம்!  

அக்ஷயமல்லிகை - தாவரவியல் பெயர் கேட்டுச் சொல்லுங்கள்.

N. Ganesan

unread,
Aug 28, 2015, 10:38:39 AM8/28/15
to மின்தமிழ், vallamai
On Thursday, August 27, 2015 at 11:44:08 PM UTC-7, shylaja wrote:
தேடுபுலி இருக்கக்கவலை இல்லை..நன்றி தேமொழி.  ஆமாம் இதே மரம்தான்  பெங்களூர்வந்ததுமுதல்  அக்ஷயமல்லி என்றே சொல்லிபழக்கமாகிவிட்டது:)  மௌவல் இதுதானா? பாசுரம் ஒன்றில் வரும் மறந்துவிட்டது இப்போ..

2015-08-27 23:35 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மரமல்லி (அக்ஷயமல்லி)

Millingtonia hortensis

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர்.




Indian Cork Tree (Millingtonia hortensis) எனப்படும் மரமல்லி (அ) ஆகாயமல்லி:  https://www.youtube.com/watch?v=Zxzi97uztd4
ஆனால், தமிழின் “மௌவல்” இது அல்ல.

மௌவல் = மனைமல்லிகை  ‘Jasminum Sessiliflorum'/ ‘Jasminum angustifolium’ ஆகும்.
மௌவல் ஒருவகைக் கொடி. சுவர்களிலும், மரங்களிலும் ஏறிப் படரும்.

பேரா. கு. சீனிவாசன் தாவரவியல் பேராசிரியர். தமிழில் புலமை மிகுந்தவர்.
வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். நா. மகாலிங்கம் நடத்திய விழாக்களில்
ஊரன் அடிகள் தலைமையில் பங்கேற்றிருக்கிறார்.

தமிழில் சங்க இலக்கியம், தாவரங்களின் பழந்தமிழ்ப் பெயர்கள் போன்றவற்றில்
ஈடுபாடு கொண்டவர்களுக்கு (உ-ம்: திரு. பாண்டியராஜா, காளைராசன், மு. இளங்கோவன், ...)
மிக உதவும் நூல் எழுதியுள்ளார் பேரா. கு. சீனிவாசன். பெருநூல் அது. 822 பக்கங்கள்.
பேரா. வ. ஐ. சுப்பிரமணியன் வரவழைத்து தமிழ்ப் பல்கலையில் வைத்துக்கொண்டார்.
புலவர் ராசு, ப. வெ. நாகராசன், கா. ராஜன், கு. சீனிவாசன், சு. ராஜவேல், ..... எனப் பலர் அங்கே.


மௌவல் என்பதை எவ்வாறு Jasminum Sessiliflorum என நிறுவுகிறார் என்றறிய
பக். 473 - 476 பார்க்கவும். விக்கிகாரர்கள் (உ-ம்: செங்கை பொதுவனடிகள்) 
பயன்படுத்திக்கொள்ள அரிய நூல்.

மௌவல்: அடவிமல்லி
Wild Jasmine is a small climbing shrub. Stem is smooth but branchlets minutely pubescent. Oppositely arranged, simple leaves are very variable even on the same plant. Leaves are 1-3 cm long, 7-20 mm broad, elliptic-ovate. The smooth leaves are acute, base obtuse or almost rounded. One inch across white, star-like flowers are exquisitely fragrant. The flowers are either solitary or more usually in threes. Petals 7 or 8, but can be more in number. Petals are linear, obtuse, very acute. Carpels two usually well developed. Flowering: June–August.

Jasminum angustifolium var. sessiliflorum (Vahl) P.S.Green
  • Kew Bull. 40: 227 (1985) 



நா. கணேசன்

சுவர் ஒன்றில் மௌவல் மனைமல்லி/அடவிமல்லி: 

Jasminum angustifolium var. sessiliflorum (Vahl) P.S.Green

N. Ganesan

unread,
Aug 29, 2015, 12:40:00 AM8/29/15
to மின்தமிழ், vallamai


On Thursday, August 27, 2015 at 11:44:08 PM UTC-7, shylaja wrote:
தேடுபுலி இருக்கக்கவலை இல்லை..நன்றி தேமொழி.  ஆமாம் இதே மரம்தான்  பெங்களூர்வந்ததுமுதல்  அக்ஷயமல்லி என்றே சொல்லிபழக்கமாகிவிட்டது:)  மௌவல் இதுதானா? பாசுரம் ஒன்றில் வரும் மறந்துவிட்டது இப்போ..

மரமல்லிகை பெரிய மரம். இது மௌவல் அல்ல. தமிழ் விக்கி கூறுவது பிழை. திருத்தப்படவேண்டிய செய்தி.

மௌவல் கொடிவகை. பல பாடல்களில்மௌவல் புதர், சுவர், மரம் எல்லாவற்றிலும் ஏறுதலைப் 
பார்க்கலாம். எனவே மௌவல் மரமல்லிகை அல்லவே அல்ல.

செம்மல் - சிவப்புநிறம் கொஞ்சம் கொண்ட சாதிமுல்லை. இக் கொடியும் மௌவல் அல்ல, ஏனெனில்
மௌவலும் சிவப்பு நிறமும் எங்கும் பேசப்படவில்லை. குறிஞ்சிப்பாட்டில் கபிலர்
செம்மல், மௌவல் தனித்தனியாகச் சொல்கிறார். சேக்கிழார் சாதி, மௌவல் தனியே சொல்கிறார்.

எனவே, கு. சீனிவாசன் சொல்லும் மௌவல் = Jasminum Sessiliflorum'/ ‘Jasminum angustifolium
சரியானது எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 29, 2015, 5:44:41 PM8/29/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

பெங்களூரில் எஸ். கார்த்திகேயன் இயற்கையாளர்,
50 மரங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
மிக மிக அருமையான அரிய தொகுப்பு.

இவற்றின் தமிழ்ப் பெயர்கள் இருந்தால் பேசுவோமே.
பிடிஎப் பக்க எண், தாவரவியல் பெயர் தருதல் வேண்டும்,
தெரிந்துகொள்வோம். கு. சீனிவாசன், தமிழ்ப் பல்கலை
நூல், தமிழ் லெக்சிகன், .... போன்றன உதவும். நன்றி.

நா. கணேசன்

Flowering trees:


About Karthik,

Reply all
Reply to author
Forward
0 new messages