அதென்னப்பா "பாலக்" கீரை?

1,525 views
Skip to first unread message

rajam

unread,
Oct 12, 2015, 8:12:07 PM10/12/15
to தமிழ் மன்றம், vallamai
நானுந்தான் மிகச் சின்ன வயதிலிருந்து அப்பாவின் நோய் காரணமாக இயற்கை மருத்துவத்தைக் கடைப்பிடித்த தாத்தாவின் வழிமுறையில் … பலவகைப் பூக்கள், காய்கள், பழங்கள், மூலிகைகள் பற்றிப் படித்துக்கொண்டே வளர்ந்தேன். 

அருகம்புல் தொடங்கி … அம்மான் பச்சரிசி, பிருங்கராஜம், தூதுவளை, சித்தரத்தை, … அது இது என்று பலவகைப் பயிர்களைத் தினந்தோறும் தேடி எடுத்துவந்து கல்லுரலில் இடித்துப் பச்சைச்சாற்றை அப்பாவுக்குக் கொடுப்பது வழக்கமாகிப்போனது.

நான் இந்தியாவில் இருந்தவரை (1975) “பாலக்” என்ற கீரையைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை!

இந்த “பாலக்” பற்றிச் சொல்லி எனக்கு அறிவுகொளுத்துவீர்களா நண்பர்களே?!

அன்புடன்,
ராஜம்

Tulsi Gopal

unread,
Oct 12, 2015, 8:15:22 PM10/12/15
to vall...@googlegroups.com
பசலைக்கீரைதான் இது!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
என்றும் அன்புடன்,
துளசி

coral shree

unread,
Oct 12, 2015, 8:50:27 PM10/12/15
to vallamai, தமிழ் மன்றம்
​ஆம் அம்மா, துளசி அவர்கள் கூறுவது போல  ​பசலைக்கீரையைத்தான் இன்று பாலக் கீரை என்கிறார்கள். இது கொடி வகை. நம்ம ஊர்ப்பக்கம் இதை பருப்புக் கீரை என்றும் சொல்கிறார்கள். வெகு எளிதாக தானாக, எங்கும் படரக்கூடிய வகை கீரை இது. 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tulsi Gopal

unread,
Oct 12, 2015, 8:57:41 PM10/12/15
to vall...@googlegroups.com
பவளா,  பருப்புக்கீரைன்னு வேறொன்னு இருக்குப்பா.  அது இலை கொஞ்சம் தடியாக இருக்கும்.  சின்ன இலைகள். ஒரு முக்கோணவடிவில்  இருக்கும்.  இந்த பாலக் என்னும் சொல் வட இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.  நம்மாட்களுக்குத்தான்  வட இந்திய சமாச்சாரங்கள்  ( உடை, நடிகை, மெஹந்தி, உணவு வகைகள் போன்றவை) ரொம்பப்பிடிக்குமே! அதனால் பெயரையும் எடுத்துக்கிட்டாங்க. 

rajam

unread,
Oct 12, 2015, 9:04:42 PM10/12/15
to வல்லமை
நன்றி'ப்பா, பவளஶ்ரீ & துளசி மேடம்.

பசலைக் கீரையில் இரண்டு வகை உண்டு -- பச்சை (தரையில் படர்வது இதன் பெயர் Basella alba; https://en.wikipedia.org/wiki/Basella_alba), கொடிப்பசலை (கருஞ்சிவப்புத்தண்டுடன் கொடியாகப் படர்வது, basella rubra. http://www.rareseeds.com/red-malabar-spinach/). 

இந்த நம் அழகான பெயர்களை (பசலைக்கீரையை) விட்டுவிட்டு நம் பிள்ளைகள் 'பாலக் போலக்' என்று பிற பெயர்களைப் பயன்படுத்துவது மொழிக்கு மட்டுமில்லை, பயன்பாட்டுக்கும் கேடு. இப்ப பாருங்க ... எனக்கு நீங்க சொல்லித்தான் 'பாலக்' என்றால் நம்ம பசலைக்கீரை என்பதே புரிந்தது! கடவுளே, தமிழைக் காப்பாத்து!

அன்புடன்,
ராஜம்'

coral shree

unread,
Oct 12, 2015, 9:07:08 PM10/12/15
to vallamai
ஹ..ஹா... துளசி  நீங்க சொல்வதும் சரிதான். விடுதிகளில் விதவிதமாக பாலக் பன்னீர், பாலக் கொஃப்தா, பாலக் கிரேவி என்று கவர்ச்சியாக பெயர் வைத்து அசத்துகிறார்களே... பின் ஏன் நம்மாட்கள் கவர்ந்திழுக்கப்பட மாட்டார்கள்....  ஆனா இப்பொழுதெல்லாம் இந்தக் கீரைதான் அதிகம் கிடைக்கிறது. அந்த சிறிய வகை கீரை ஏதோ ஒரு நேரத்தில் மட்டுமே கிடைப்பதால், இதையே பருப்புக்கீரையாகவும் எடுத்துக்கொண்டார்களோ..

Tulsi Gopal

unread,
Oct 12, 2015, 9:10:35 PM10/12/15
to vall...@googlegroups.com
பவளா,   சுக்காங்கீரைன்னு ஒன்னு இருக்கு.  லேசான புளிப்பு சுவை. இதைப் பருப்பில் சேர்த்து  சமைச்சால்  அப்படியே  ......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்   முழுங்கலாம். புளிகூட சேர்க்க வேணாம்!

அதிசயத்திலும் அதிசயமா  முந்தா நாள்  கற்பூரவல்லிச் செடி கிடைச்சது ஒரு கார்டன் சென்ட்டரில். என்ன பெயர் எழுதி வச்சுருந்தாங்கன்னா....  மதர் ஆஃப் ஹெர்ப்ஸ்!

rajam

unread,
Oct 12, 2015, 9:29:26 PM10/12/15
to vall...@googlegroups.com, ra...@earthlink.net
“சுக்காங்கீரை”யின் படம் எடுத்துப்போடுங்க துளசி மேடம், படம் எடுத்துப்போடுங்க. 

புளிச்ச கீரை, கற்பூரவல்லி, அது இது-னு எல்லாத்தையும் அனுபவிக்க ஆசை!

gongura தானே புளிச்ச கீர? 

purslane என்பது நம்ம பசலைக்குத் தொலைத்தூர உறவு மாதிரி இருக்கும், இல்லையா.

அன்புடன்,
ராஜம்


You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/X0hAwBcf4_w/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Oct 12, 2015, 9:36:24 PM10/12/15
to vall...@googlegroups.com
நான் இந்தியாவில் இருந்தவரை (1975) “பாலக்” என்ற கீரையைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை!

இந்த “பாலக்” பற்றிச் சொல்லி எனக்கு அறிவுகொளுத்துவீர்களா நண்பர்களே?!

இது வட நாட்டு கீரை.  அதனால் பெயரும் வடநாட்டு பெயர் தான். பார்பதற்கு பசலைக் கீரை போல்  இருக்கும் ஆனால் வழவழப்பாக இருக்காது. பசலைக் கீரை வழவழப்பாக இருக்கும். மலச்சிக்கல் போக்கும்.

அகலன்  

Tulsi Gopal

unread,
Oct 12, 2015, 9:37:28 PM10/12/15
to vall...@googlegroups.com
​அன்புள்ள ராஜம்,  

இங்கே ஏது சுக்காங்கீரை?  சென்னைக்குப் போகும்போது தேடறேன்​.  

சில சமயம் இங்கே புளிச்சக்கீரை கிடைக்கும்.  ஃபிஜியில் இருந்து வரணும். கீரை  வந்த நாளில் நாம் இண்டியன் கடைக்குப் போகணும்.  எல்லாத்துக்கும் மேலே  நமக்கு அதிர்ஷ்டம் இருக்கணும்  :-)

இன்றைக்கு நம்ம வீட்டில் பாலக் பனீர்தான்.  விசேஷம் என்னன்னா....  நம்ம வீட்டில் அறுவடை செய்த பாலக்.  

இங்கே விதைகள் விற்கும் கடையில் கீரை என்றாலே  Spinach தவிர வேறொன்றும் கிடைக்காது.  அதை வாங்கி விதைத்திருந்தேன். தமிழ்நாட்டில் 40 வகை கீரைகள் வாங்கலாம்.

இன்னுமொரு கோரிக்கை.  என்னை துளசி என்று சொல்லுங்கள்.  மேடம் வேணாமே ப்ளீஸ்.

rajam

unread,
Oct 12, 2015, 9:42:07 PM10/12/15
to vall...@googlegroups.com
நானும் ‘பாலக்’ பற்றி ஐயுற்றிருந்தேன். என் நெடுநாள் ஐயத்தைப் போக்கியமைக்கு மிக்க நன்றி!

தமிழ்நாட்டுப் பசலைக்கீரை இரண்டு வகைப்பட்டது, இதைச் சொல்லியிருந்தேன். 

இந்த “பாலக்” என்பது எனக்குப் புதிது.

விளக்கத்துக்கு மிக்க நன்றி!

அன்புடன்,
ராஜம்


coral shree

unread,
Oct 12, 2015, 10:12:46 PM10/12/15
to vallamai
ஆகா, ஆமாங்க துளசி, சுக்காங்கீரை சுவையோ சுவைதான்....   கற்பூரவல்லி செடி உண்மையில் ஒரு தாய்தான்.. இன்றும் நாங்கள் குழந்தைக்கு சளி பிடித்தால் உடனே கை வைத்தியமாக வீட்டில் இருக்கும் கற்பூரவல்லி இலையைப் பறித்து குறைந்தபட்சம் சுவாசிக்கவாவது செய்வதுண்டு..

coral shree

unread,
Oct 12, 2015, 10:15:31 PM10/12/15
to vallamai
அம்மா, விரைவில் சுக்காங்கீரை தேடிப்பிடித்து படம் போடுகிறேன். இங்கும் நாம் இன்று குறிப்பிட்ட கீரை வகைகளை தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளோம்.. அவ்வப்போது கிடைக்கும்..

அன்புடன்
பவளா

துரை.ந.உ

unread,
Oct 12, 2015, 11:34:33 PM10/12/15
to வல்லமை
தெக்கேல்லாம் இன்னும் பாலக் கீரை வரலேம்மா ....
பசலைக் கீரை கொடியிலல்லா இருக்கும் ... பாலக்க்கீரை செடியா இருக்கும் 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 13, 2015, 1:23:06 AM10/13/15
to வல்லமை
பாலக் வேறு.  பசலை, பருப்புக் கீரை இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள்.

பாலக் ஒரு குத்துச் செடி.  ஆங்கிலத்தில் ஸ்பினச் என்பார்களே அதுதான் இது.  இதன் தாவர இயல் பெயர் Spinacea oleracea என்பதாகும்.  முன் நாட்களில் இது வடி இந்தியாவில் மட்டுந்தான் கிடைத்துக் கொண்டிருந்தது.  இப்போது தென் இந்தியாவிலும் எங்கும் பயிரிடப்படுகிறது.

பசலை ஒரு கொடி.  இதில் பச்சை, சிவப்பு என இறு வகைகள் உண்டு.  பசலைக் கீரையில் உள்ள கஒழ கொழப்பு பாலக்கில் இருக்காது.  மிக ருசியான கீரை பாலக்.

பருப்புக் கீரை தரையில் படர்ந்திடும் ஒறு சிறிய செடி துளசி கோபால் சொல்வது போல'

பசலையில் மற்றொரு ரகம் உண்டு.  இதை ரங்கூன் பசலை என்பார்கள்.. இதுவும் ஒரு குத்துச் செடிதான்.இதன் தண்டு மளுக்கென்று முறிந்திடும் தன்மை கொண்டது.  தோட்டத்தில் இருக்கிறதா இது.  அறுவடை செய்வது மிகச் சுலபம்.

  ஒரு செடியை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கொண்டு வந்து வைத்திடுங்கள்.  அடுத்த இரு ஆண்டுகளுக்குள் உங்கல் தோட்டம் பூராவும் ரங்கூன் பசலை தான் நீங்கள் ஒரு முயற்சியும் எடுக்க வேண்டாம்..  காரணம் இதன் மிக நுண்ணிய விதைகள் காற்றில் பறந்து பரவிடும்.  இந்தக் கீரை பாலக்கின் ருசியும் பசலையிம் கொழகொழப்பும் கொண்டது.

Inline image 1

(காட்டுச் செடி போல எங்கள் தோட்டத்தி விளைந்த ரங்கூன் பசலை)

இணைப்பையும் பிரித்துப் பார்க்கவும்.





 

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


கீரை மின்சாரம்.pdf

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 13, 2015, 3:15:06 AM10/13/15
to tamilmanram kuzhu, vallamai, thiru thoazhamai
அம்மையீர், பசலைக்கீரையைத்தான் பாலக் என்கின்றனர்.   தமிழ்ப்பெயர்களை வேறு பெயர்களில் குறிக்கும் கொடுமையின் விளைவு இது.

2015-10-13 5:42 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Satish Kumar Dogra

unread,
Oct 13, 2015, 6:12:02 AM10/13/15
to vall...@googlegroups.com
தமிழ்நாட்டில் கிடைக்கும் கீரை வகைகளுக்கும் வட இந்தியாவில் கிடைக்கும் பாலக்க்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால்தான், சென்னையிலுள்ள காய்கள் கடைகளில் டில்லி பாலக் என்று சொன்னால்தான் வட இந்திய பாலக் கிடைக்கும். அதே போல ஒரு ஹோட்டலுக்கு போகும்போது பாலக் பண்ணீர் என்பதை வாங்கும்போது இது கீரையா பாலகா என்று கேட்டால் அவர்கள் சொல்வார்கள்.

வடநாட்டில்  பிரபலமான இன்னொரு கீரை வகை "ஸரஸோன் கா ஸாக்"

டோக்ரா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2015, 6:13:50 AM10/13/15
to vall...@googlegroups.com
அயல் நாடுகளில் இந்த பாலக் கீரையை  பினாச்சி  என்கிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     






Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 13, 2015, 6:15:36 AM10/13/15
to வல்லமை
சரசோங்கா சாக் என்பது கடுகுச் செடியின் கீரை.  இந்தக் கீரையில் சிறிதளவு காரம் உண்டு.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 13, 2015, 6:16:55 AM10/13/15
to வல்லமை
பினாச்சி அல்ல ஸ்பினாச்.

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2015, 6:26:54 AM10/13/15
to vall...@googlegroups.com
வழக்கு மொழியில் பினாச்சி என்கிறார்கள்

வித்யாசாகர்

unread,
Oct 13, 2015, 9:26:42 AM10/13/15
to வல்லமை
ல்பட்டு ஐயா சொல்வதும் சரி. இங்கு (குவைத்தில்) பாலக் மிக அதிகமாக எங்கும் கிடைக்கும். நம்மூர் கீரைகள் சில குறிப்பான தெரிந்த தமிழர் கடைகளில் மட்டுமே கிடைக்கும். சமைக்க வாங்கும்போது நாங்கள் நம்மூர் கீரைகளை வாங்கிக் கொள்வதுண்டு. உண்ண வேண்டி பிற உணவகம் செல்கையில், மற்றும் இதர காய்கறி கடைகளுக்குச் செல்கையில் பாலக் மட்டுமே கிடைக்கும். டால் பாலக் (அதாவது நம் பருப்பு கீரையைப் போல அதிகம் கடையாமல், பருப்போடு முழு பட்டை பட்டை இலைகளைப் போட்டு, லேசாக மஞ்சள்தூள் தூவி வேகவைத்து கடுகு காய்ந்த மிளகாய்ப் போட்டு தாளித்துவிடுவார்கள். ரொட்டியோடு உண்பதற்கு அது அத்தனைச் சுவையாக இருக்கும்.

என்றாலும், நம்மூர் பொன்னாங்கண்ணி, முருங்கை கீரை, மணத்தக்காளி, சிறுகீரைகளோடுச் சேர்த்து ரசஞ் சோறு; உருளைக்கிழங்கு மற்றும் பலாக்கொட்டை வறுவல் என்பதெல்லாம் வேறு..
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Tulsi Gopal

unread,
Oct 14, 2015, 1:03:51 AM10/14/15
to vall...@googlegroups.com
மூலிகைக் கலைக் களஞ்சியம்  (டாக்டர் என்.கே சண்முகம் )  என்ற சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு என்னிடம் உள்ளது.  அதில்  இந்தப் பசலைக்கீரையை  கொடிப்பசலை, குத்துப் பசலை என்ற ரெண்டு வகைகளைக் குறிப்பிட்டு இருக்காங்க.  குத்துப்பசலைதான் இந்த ஸ்பினாச் என்று நினைக்கிறேன்.. தாவர இயலில் இதன் பெயர்  Basella Cordifolia 
Basella-LB0707-2106.jpg

Tthamizth Tthenee

unread,
Oct 14, 2015, 2:04:07 AM10/14/15
to vall...@googlegroups.com
Dr.Mohanakrishnan M.D.(Alt.Med), Acupuncturist
Specialist in Diabetes, skin and all kinds of Chronic Diseases
Call: 9486151285, 9500722972, 0413-4208383
________________________________________________________________________
நோயும் உணவும்
வாயுக்கோளாறு
வாதம், பக்கவாதம், நரம்புதளர்ச்சி, சுளுக்கு, தசைபிடிப்பு உள்ளவர்கள்
அரைக் கீரை
அகத்திக் கீரை 
நச்சுக்கொட்டைக் கீரை 
கரிசிலாங்கன்னிக் கீரை  
சிறுகீரை 
குப்பைமேனி கீரை
முடக்கத்தான் கீரை 
முருங்கைக்கீரை
வல்லாரைக்கீரை 
புளிச்சக்கீரை
வெந்தயக் கீரை
கொத்தமல்லி கீரை 
புதினா
கறிவேப்பிலை
வாத நாராயணன் கீரை 
சுரைக்கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் வாதம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து குணம் பெறலாம்.


அல்சர், வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிற்றுவலி
அகத்திக் கீரை 
கரிசிலாங்கண்ணிக்கீரை  
காசினிக் கீரை 
மணத்தக்காளிக் கீரை
பசலைக்கீரை
பருப்புக் கீரை
முளைக் கீரை
வல்லாரைக்கீரை 
புளிச்சக்கீரை 
வெந்தயக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
கொத்தமல்லி கீரை 
கறிவேப்பிலை

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட அல்சர், வயிற்று வலி அனைத்தும் குணமாகும்.

 
மூளை சோர்வு அடைந்தவர், மந்த புத்தி உடையோர்
அகத்திக் கீரை 
பொன்னாங்கண்ணி கீரை
முளைக் கீரை 
அரைக் கீரை
கரிசிலாங்கண்ணி கீரை  
முடக்கத்தான் கீரை 
கொத்தமல்லி கீரை 
வல்லாரைக்கீரை 
புதினா 
கறிவேப்பிலை
தூதுவளைக் கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஞாபகச்சக்தி, மூளை சுறுசுறுப்பு அடையும்.
 
எலும்பு, நரம்பு, தசைவலி, உடம்பு வலி உள்ளவர்கள்.

   
அகத்திக் கீரை 
முளைக் கீரை 
அரைக் கீரை
நச்சுக்கொட்டைக் கீரை 
வெந்தயக் கீரை
முருங்கைக்கீரை
சிறுகீரை 
முடக்கத்தான் கீரை 
கொத்தமல்லி கீரை 
வல்லாரைக்கீரை 
புளிச்சக்கீரை 
புதினா 
கறிவேப்பிலை

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும். நரம்பு தளர்ச்சி வராது. உடல்வலி போன்ற தசைபிடிப்புகள் விலகும்.

முடி கொட்டுவதை தவிர்க்க 

அகத்திக் கீரை 
கரிசிலாங்கண்ணி கீரை 
பசலைக்கீரை  
முளைக் கீரை 
பொன்னாங்கண்ணி கீரை
பொடுதலை கீரை 
கறிவேப்பிலை

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தல், இளநரை நீங்கி, கருமையான, நீண்ட அழகிய கூந்தல் வளரும்.

இரத்தவிருத்தி – தாது கெட்டிபடுத்த, உடல் வலுப்பெற – உடல் அழகு பெற

பொன்னாங்கண்ணி கீரை
முளைக் கீரை 
அரைக் கீரை
அகத்திக் கீரை
பசலைக்கீரை
பருப்புக் கீரை
சிறுகீரை
முள்ளங்கிக் கீரை
முடக்கத்தான் கீரை 
முட்டைகோஸ் 
முருங்கைக்கீரை
வல்லாரைக்கீரை 
புளிச்சக்கீரை 
வெந்தயக் கீரை
கீழாநெல்லி
கொத்தமல்லி கீரை 
புதினா 
கறிவேப்பிலை
தூதுவளைக் கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வர உடல் வனப்பாக ரத்தம் சுத்தமடைந்து, உடல் வலுப்பெறும்.


உடல் எடை குறைக்க

அரைக் கீரை
காசினிக் கீரை 
மணத்தக்காளிக் கீரை
முடக்கத்தான் கீரை 
வல்லாரைக்கீரை 
வெந்தயக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
கொத்தமல்லி கீரை 
புதினா 
கறிவேப்பிலை
தூதுவளைக் கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உள்ளவர்கள்


   
கரிசிலாங்கண்ணிக்கீரை
பாகல் இலை காய்
முள்ளங்கிக் கீரை 
முட்டைகோஸ்
முருங்கைக்கீரை
வல்லாரைக்கீரை 
வெந்தயக் கீரை
கொத்தமல்லி கீரை 
புதினா 
கறிவேப்பிலை
தூதுவளைக் கீரை 
சிறுகுறிஞ்சான் கீரை 
ஆவாரம்பூ கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆஸ்த்மா, வீசிங்க், கபம், நாட்பட்ட சளி, இருமல் உள்ளவர்கள்


அரைக் கீரை
அகத்திக் கீரை 
கரிசிலாங்கண்ணிக்கீரை
சிறுகீரை 
முட்டைகோஸ்
முருங்கைக்கீரை
வெந்தயக் கீரை
கொத்தமல்லி கீரை 
புதினா 
கறிவேப்பிலை
தும்பைக் கீரை 
தூதுவளைக் கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வர ஆஸ்த்மா, வீசிங்க், கபம், நாட்பட்ட சளி, இருமல் போய் விடும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள்

வெந்தயக் கீரை
பாகல் இலை காய்
முருங்கைக்கீரை
முட்டைகோஸ்
சிறுகீரை 
பருப்புக் கீரை
கரிசிலாங்கண்ணி கீரை
அகத்திக் கீரை 
அரைக் கீரை

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வர பித்தம் குணமடையும்.



தோல் வியாதி – சொறி – சிரங்கு – ஆறாத புண் உடையவர்கள்

மணத்தக்காளிக் கீரை
அகத்திக் கீரை 
கரிசிலாங்கண்ணிக்கீரை
முளைக் கீரை 
முருங்கைக்கீரை
வல்லாரைக்கீரை 
வெந்தயக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
கோவைக் கீரை 
கீழாநெல்லி
கொத்தமல்லி கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆறாத புண்ணும் ஆறும்.

கண் குறைப்பாடு – வைட்டமின் ஏ குறை உள்ளவர்கள்

கரிசிலாங்கண்ணிக்கீரை
பருப்புக் கீரை
சிறுகீரை 
முளைக் கீரை 
முருங்கைக்கீரை
வல்லாரைக்கீரை 
புளிச்சக்கீரை 
வெந்தயக் கீரை
கொத்தமல்லி கீரை 
புதினா 
பொன்னாங்கண்ணி கீரை 
கறிவேப்பிலை
அகத்திக் கீரை 
பசலைக்கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வித கண்குறைபாடுகள் நீங்கி விடும்.



மூல வியாதி உடையவர்கள்

கரிசிலாங்கண்ணிக்கீரை
சிறுகீரை 
முடக்கத்தான் கீரை 
வெந்தயக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
துத்திக்கீரை 
மணத்தக்காளிக் கீரை

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வித மூல வியாதிகளும் நீங்கும்.

மலச்சிக்கல் உடையவர்கள்

முருங்கைக்கீரை
அரைக் கீரை
அகத்திக் கீரை 
பசலைக்கீரை
முடக்கத்தான் கீரை 
முட்டைகோஸ்
புதினா 
வாத நாராயணன் கீரை 
புளிச்சக்கீரை 

தினம் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.

முகம் அழகு பெற

1. செம்பருத்தி இலையை ஊற வைத்த நீரில் முகத்தை தினசரி கழுவி வரவும்.
2. உருளைக்கிழங்கு மிக்ஸியில் அரைத்து முகத்தில் பூசவும்.
3. கேரட் மிக்ஸியில் அரைத்து முகத்தில் பூசவும்.
4. எலுமிச்சைபழ சாறு முகத்தில் பூச பளபளப்பாகும்.
5. தேங்காய் பால்
6. ஆரஞ்சு பழ தோல்
7. தக்காளி பழம்
8. பன்னீர் ரோஜாப்பூக்களை தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு, கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
9. பிஞ்சு வெள்ளரிக்காய் மிக்ஸியில் அரைத்து முகத்தில் பூசவும்.
10. மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவி வாருங்கள். வரண்ட சருமம் புது பொலிவு தரும். 


முடி கொட்டுவதை தவிர்க்க

1. செம்பருத்தி இலை ஊற வைத்த நீரில் தலைமுடியை அலசவும்.

2. கறிவேப்பிலை ஊறவைத்த நீரில் தலைமுடியை அலசவும்.

3. வேப்பில்லை ஊறவைத்த நீரில் தலைமுடியை அலசவும்

4. சோத்துக்கத்தாழை ஷாம்பூ, சோப்பு போட்டு தலமுடியை அலசவும்

வித்யாசாகர்

unread,
Oct 14, 2015, 1:35:44 PM10/14/15
to வல்லமை
துளசிம்மா வணக்கம், 

அந்த பாலக் என்பது இப்படித்தான் இருக்கும். ஊரில் இருக்கையில் பசலை கீரை உண்டதில்லை என்பதாக நினைவு. இம்முறை ஊருக்கு வருகையில் வாங்கிப்பார்க்கவேண்டும்.. நன்றிங்கம்மா..

தமிழ்தேனி ஐயாவிற்கும் நன்றி..

வித்யாசாகர்

Anna Kannan

unread,
Oct 15, 2015, 1:44:34 AM10/15/15
to Vallamai
வெளிநாடுகளில் தமிழ்நாட்டுக் கீரைகளுக்கு ஒரு சந்தை இருக்கிறது போலும்; யாரேனும் களத்தில் இறங்கலாமே!
Dr.Annakannan
Localization Lead
Firstouch

rajam

unread,
Oct 15, 2015, 3:35:12 AM10/15/15
to vall...@googlegroups.com, ra...@earthlink.net
தமிழ்நாட்டுக் காய்கள், கீரைகள், பழங்களுக்கு இங்கே நல்ல வரவேற்பு. யார்வேண்டுமானாலும் களத்தில் இறங்கலாம்!

நானும் நார்த்தங்காய்க்காக ஏங்கிக்கிடக்கிறேன்.

அன்புள்ள துளசி, நானும் தேடித்தேடி malabar spinach என்ற பெயரில் கிடைத்த கொடிப்பசலை விதைகள் வாங்கினேன்.

துரை.ந.உ

unread,
Oct 15, 2015, 3:49:30 AM10/15/15
to வல்லமை, rajam ramamurti
2015-10-15 13:05 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
தமிழ்நாட்டுக் காய்கள், கீரைகள், பழங்களுக்கு இங்கே நல்ல வரவேற்பு. யார்வேண்டுமானாலும் களத்தில் இறங்கலாம்!

நானும் நார்த்தங்காய்க்காக ஏங்கிக்கிடக்கிறேன்.

​வூட்ல எனக்கு மூணுவேளைக்கும் தொட்டுக்க  ’நார்த்தையூறுகா’ தான் அம்மா :)))​
 

vidhyasagar1976

unread,
Oct 15, 2015, 4:08:25 AM10/15/15
to vall...@googlegroups.com, rajam ramamurti
அம்மாவுக்குத் தெரியும் எனக்கு ஒரு சின்னத் துண்டு (கிச்சிலிக்காய் ன்னு சொல்வாங்க சென்னைல நம்மவீட்டுப் பக்கம்) இந்த ஊறுகாய் இருந்தால் போதும். அதிலும் காரகுழம்பிற்கு அத்தனை பொருத்தமாயிருக்கும். 

அந்த கிச்சிலி மரம் இருந்த வீட்டைக் கூட நாங்க சிறுவயதில் கிச்சிலிமர அத்தைவீடுன்னே சொல்லிப் பழக்கம்.

இங்கு குவைத்தில் கிடைப்பதில்லை. ஊரிலிருந்து கொண்டுவருவோம். 

வித்யாசாகர்



Sent from my Samsung device

Tulsi Gopal

unread,
Oct 15, 2015, 4:59:48 AM10/15/15
to vall...@googlegroups.com
வணக்கம் வித்யாசாகர்.

ஊருக்குப்போய் சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க.  வெளிநாடுகளிலும் இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளின் மெனுவில் இது கட்டாயமாக இருக்குமே!

Tulsi Gopal

unread,
Oct 15, 2015, 5:02:54 AM10/15/15
to vall...@googlegroups.com
​எங்க ஊரில் இதுக்கு அனுமதியே இல்லை.  ஒரு விதையோ, பூவோ, காயோ, பழமோ, நீரோ எதுவுமே நாட்டுக்குள் நுழையமுடியாது.  பாவம் ஸ்ரீகிருஷ்ணன்.  எது போதுமுன்னு சொன்னானோ அதுக்கெல்லாம் இங்கேதடா  :-(

மனுசனை ஏமாத்தலாம்.  ஆனால் நாயை?  பையில் ஆப்பிள் வச்சுருந்த மணத்துக்கே வந்து புடிச்சுரும்!

Tulsi Gopal

unread,
Oct 15, 2015, 5:05:27 AM10/15/15
to vall...@googlegroups.com
உப்பிலிட்ட உலர்ந்த  நார்த்தங்காய் கூட இங்கே  அனுமதி மறுக்கப்பட்டுக் குப்பையில் என் கண் முன்னாலேயே கடாசப்பட்டது  :-(  மகளுக்கு உப்பு ஊறுகாய் (அவள் வச்ச பெயர்தான்) போதும் தயிர் சாதம் சாப்பிட. 

நாங்க ரொம்ப பாவம்!

rajam

unread,
Oct 15, 2015, 2:43:25 PM10/15/15
to vall...@googlegroups.com, ra...@earthlink.net
///
​வூட்ல எனக்கு மூணுவேளைக்கும் தொட்டுக்க  ’நார்த்தையூறுகா’ தான் அம்மா :)))​
 ///

ஆகா, அப்புடீங்களா?!!!

வம்பான வம்பல்லவோ — இது
தூத்துக்குடிக் குறும்பல்லவோ!

இனிமே … தூத்துக்குடியில் வயிறு வலித்தால் … அது அமெரிக்காவிலிருந்து வரும் பொறாமைவாயுவின் வலி என உணர்க!!!


vidhyasagar1976

unread,
Oct 15, 2015, 4:00:30 PM10/15/15
to vall...@googlegroups.com
இங்கெல்லாம் பாலக் எல்லா கடைகளிலும் கிடைக்கும்மா. அடிக்கடி வாங்கிச் செய்வோம். நம்மூர் சென்று பசலைக்கீரைன்னு வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கனும். 

இங்க நம்ம தமிழாள் கடைங்கள்ல கேட்டாலே பசலை வேறு, அது இங்கே கிடைக்காது, இது பாலக் கீரைன்னுதான் சொல்றாங்க.

வித்யாசாகர்



rajam

unread,
Oct 15, 2015, 10:16:53 PM10/15/15
to வல்லமை
ஆமாங்க! யாரையும் ஏமாத்த என்னெக்குமே நெனெச்சதில்லே. 

ஆனால், உள்ளூர் விதிகளால் 2 நார்த்தங்காயை உள்ளூருக்கில் கொண்டுவர முடியலே! 

அந்த 2 நார்த்தங்காய்கள் பாவம்! மதுரையிலிருந்து புறப்பட்டு இலண்டனில் சில மாதங்கள் குளிர்பதனத்தில் இருந்து, பிறகு மேற்கு நோக்கிப் பயணித்து ... சான்ஃபிரான்சிஸ்கோ ஆட்கள் பார்த்து ... "These stay here" என்று எடுத்துக்கொண்டுவிட்டார்கள்!!!

நான் யாரையும் 'இது கொண்டுபோ, அது கொண்டுவா' என்று கேட்பதில்லை. ஆனாலும் ... என் தோழி எனக்காகக் கொண்டுவந்த 2 நார்த்தங்காய்களை இழந்தது பெரும் இழப்பே. 

சுங்கத்தில் (customs) கேட்டார்கள் -- What do you carry? Curry leaf? Chukli? 

இல்லை இல்லை என்று நான் சொன்னதெல்லாம் ஒப்பேறவில்லை. நானே சொன்ன அந்த 2 நார்த்தங்காயும் எங்கே போச்சு என்று தெரியவில்லை.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 15, 2015, 10:39:34 PM10/15/15
to வல்லமை
ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் எனது மகளுக்கும், அவள் குடும்ப அங்கத்தினர்களுக்கும் மாவடு ரொம்பப் பிடிக்குமே என்று ஒரு கண்ணாடி போன்ற ப்ளாஸ்டிக் பேக்கெட்டுள் சீல் செய்து எடுத்துச் சென்றோம்.

நாய் முகர்ந்திட பெட்டியுள் இருந்து மாவடு பேக்கெட்டினை வெளியே எடுத்த சுங்க அதிகாரி கேட்டார், "வாட்ஸ் திஸ்?" என்று.  மாவடுக்கு ஆங்கிலத்தில் ஏதும் பெயர் கிடையாதே.  அதனால் நான், "தட்  ஈஸ் பேபி மேங்கொ பிக்கிள்ஸ்" என்றேன்.

அதிகார் விழுந்து விழுந்து சிரித்தார், "வாட்?  பேபி மேங்கோ பிக்கிள்ஸ்?  தட் ஈஸ் ஃபன்னி.  வாட் ஏஸ் தட்? என்றார்.

நான் அவருக்கு மாவடு போடும் விதத்தின விவரித்தேன்.  அவர் சிரித்துக் கொண்டே, "டேக் இட் டேக் இட்" என்று அந்த பேக்கெட்டை என்னிடம் கொடுத்தார்!. 

rajam

unread,
Oct 16, 2015, 1:27:02 PM10/16/15
to வல்லமை
கல்பட்டு ஐயாவின் அனுபவம் சுவையானது! அடுத்த முறை (எப்போது என்றுதான் தெரியவில்லை) இந்தியா போகும்போது அவர்கையால் ஆசி பெற்று 10 ஜாடி நார்த்தங்கா ஊறுகாய், 10 ஜாடி வேப்பிலைக்கட்டி, இன்ன பிற எடுத்து வரவேண்டும். ஆனால் அதற்குள் எனக்கு ரொம்பவே வயசாகிப்போகும், இப்போது-போல் எதையும் சுவைக்கும் ரசனை தங்கியிருக்குமா என்று தெரியவில்லை.

இந்த 40+ ஆண்டுகளில் எனக்கும் அமெரிக்கச் சுங்க அதிகாரிகளுக்கும் இடையே சிக்கல் இருந்ததில்லை. அவர்கள்தான் துளைத்தெடுப்பார்கள் -- அது கொண்டுவந்திருக்கியா இது கொண்டுவந்திருக்கியா என்று. இல்லை என்றால் நம்பமாட்டார்கள். சரி எல்லாப் பெட்டியும் உனக்காக ... திறந்து பார்த்துக்கொள் என்று விட்டுவிடுவேன். ஏனென்றால் தடைப்படுத்தப்பட்ட எதையும் கொண்டுவர என்றுமே முயன்றதில்லை. ஒரே ஒரு முறை மச்சினருக்காக மாமியார் அனுப்பிய தேங்குழல், வேப்பிலைக்கட்டி, கடலை உருண்டை கொண்டுவந்தேன். அந்த வேப்பிலைக்கட்டியை marijuana என்று சந்தேகித்தார்கள். வேணும்-னா நீங்களே எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டேன். அப்றம் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. இன்னொரு முறை சாம்பார்ப்பொடி கொண்டுவந்தேன். இதெல்லாம் 1974, 1995 போன்ற ஆண்டுகளில். 2009-இல் தான் இந்த நார்த்தங்காய் நிகழ்ச்சி நடந்தது! அய்யோ அய்யோ ... தோழி வீட்டில் மதுரையில் பழுத்த நார்த்தங்காய்கள் சான்ஃப்ரான்சிஸ்கோ சுங்கக்குப்பையில் ... . ஓர் உயிரின் பயணம் எப்படியெல்லாம் அமைகிறது என்று பாருங்களேன்! முருங்கைக்கீரை எப்படியோ இவர்களுக்குப் புரியும் அளவுக்கு மருத்துவத் தகுதி பெற்றுவிட்டது, அதனால் இங்கே வளர்க்கப்படுகிறது. கறிவேப்பிலையும் அப்படியே. ஆனால் ... நார்த்தங்காயின் மருத்துவ குணத்தை இவர்களுக்கு எடுத்துச்சொல்ல யாராவது பிறந்துதான் வரவேண்டும்-போல.

மாறாக, இந்தியச்சுங்க அதிகாரிகள்தான் தொல்லை கொடுப்பார்கள். ஊரிலிருந்து ஒரு பட்டியல் வரும் -- அது கொண்டுவா, இது கொண்டுவா என்று. அவர்களுக்காக on flight duty-free liquor + cigarettes கொண்டுபோவேன். பயணக்களைப்பில் இருக்கும் புடைவை கட்டிய என்னையும் அந்தப் பொருள்களையும் இணைத்துப் பார்த்துச் சுங்க அதிகாரிகளுக்குக் குழப்பம் வரும்-போல. 'சரி போ' என்று விட்டுவிடுவார்கள். ஒரு முறை மட்டும் நான் எடுத்துப்போன சிகரெட் பெட்டிகளில் இரண்டைத் தனியாக எடுத்து வைத்துக்கொண்டார்கள் -- ஒன்றும் சொல்லாமலேயே! வாதாட எனக்கு வக்கில்லை. ஊருக்குள்ளெ போனா ... ச்சே ... இந்த சிகரெட் ப்ரயோஜனமில்லெ, strong இல்லெ-னு நொரநாட்டியம் வேற!

Venkatachalam Dotthathri

unread,
Oct 18, 2015, 12:36:52 PM10/18/15
to vall...@googlegroups.com
ஓம்
இங்கு யாராவது ‘லச்சைகெட்ட கீரை’யைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா?  ஒருவேளை வேறு பெயர் அதற்கு உண்டோ என்பது தெரியவில்லை. வாதாம் மரம் போல் சிறிய மரமாக வளரும். இளம் பச்சை மஞ்சள். வண்ணத்தில் அழகிய இலைகள் கொண்டவை. வாதாம் இலைகளைப் போன்று இல்லாமல் அதைவிடச் சிறியனவாக இருக்கும். இதனைச் சமைத்து கடையும் போது புளி சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மலப்போக்கு ஏற்படும்
வெ.சுப்பிரமணியன் ஓம்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 18, 2015, 11:05:17 PM10/18/15
to வல்லமை
ஆந்திராவில் லஞ்ச முண்டாக் கூர (திருட்டுத் தேவடியாக் கீரை தமிழில் சொன்னால்).

தமிழ் நாட்டில் புளிச்சக் கீரை 

rajam

unread,
Oct 19, 2015, 2:10:48 PM10/19/15
to vall...@googlegroups.com, ra...@earthlink.net
ஓம் ஐயா சொல்லும் ‘லச்சைகெட்ட கீரை’ எனக்குத் தெரியும். மதுரையில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் பெரிதாக வளர்ந்திருந்த மரத்தின் இலைகள் வாதாம் இலைகளைப்போலவே இருந்தன. அவ்வப்போது அந்த வீட்டு அம்மா எங்களுக்கு அந்த இலைகளைக் கொண்டுவந்து தருவார்கள். இங்கே அமெரிக்காவில் பார்த்ததில்லை.

ஆனால், கல்பட்டு ஐயா சொல்லும் ‘புளிச்ச கீரை’ ஆந்திராவின் ‘கோங்கூரா’ அல்லவோ? 


On Oct 18, 2015, at 8:04 PM, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> wrote:

ஆந்திராவில் லஞ்ச முண்டாக் கூர (திருட்டுத் தேவடியாக் கீரை தமிழில் சொன்னால்).

தமிழ் நாட்டில் புளிச்சக் கீரை 

2015-10-18 22:06 GMT+05:30 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:
ஓம்
இங்கு யாராவது ‘லச்சைகெட்ட கீரை’யைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா?  ஒருவேளை வேறு பெயர் அதற்கு உண்டோ என்பது தெரியவில்லை. வாதாம் மரம் போல் சிறிய மரமாக வளரும். இளம் பச்சை மஞ்சள். வண்ணத்தில் அழகிய இலைகள் கொண்டவை. வாதாம் இலைகளைப் போன்று இல்லாமல் அதைவிடச் சிறியனவாக இருக்கும். இதனைச் சமைத்து கடையும் போது புளி சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மலப்போக்கு ஏற்படும்
வெ.சுப்பிரமணியன் ஓம்


<… deleted for space…>




You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு



எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி


வேறொன் றறியேன் பராபரமே



--

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 19, 2015, 8:35:28 PM10/19/15
to வல்லமை

2015-10-19 23:40 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
ஆனால், கல்பட்டு ஐயா சொல்லும் ‘புளிச்ச கீரை’ ஆந்திராவின் ‘கோங்கூரா’ அல்லவோ? 

​நீங்கள் சொல்வாதுதான் சரி.  தவறுக்கு மன்னிக்கவும்.  நாளுக்கு நாள் நிமிஷத்துக்கு நிமிஷம் எனது நினைவாற்றல் மங்கி வருவதின் வெளிப்பாடு இது.  இருந்தும் ஆசை விடுவதில்லை என்னை.  ஒரு கணம் நினைக்கிறேன்.  மறு கணம் மறந்திடுறேன் என்ன நினைத்தேன் என்பதை.  தவிக்கிறேன் தடுமாற்றத்தில்.​

இந்த லஞ்ச முண்டாக் கூரையிலுள் பருப்பு உசிலியை வைத்து மடித்து, இட்டிலிப் பாத்திரத்துள் வைத்து,'வேட்டு' வைத்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

rajam

unread,
Oct 19, 2015, 9:04:00 PM10/19/15
to vall...@googlegroups.com
அன்புள்ள கல்பட்டு ஐயா, 

ஈதெல்லாம் நம் உடலின் முதுமையின் வெளிப்பாடே.  எனக்கு infarcts in the brain என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, இருக்கிறதை வைத்துக்கொண்டு சமாளித்துக்கொண்டு போகவேண்டியதுதான்!

///இந்த லஞ்ச முண்டாக் கூரையிலுள் பருப்பு உசிலியை வைத்து மடித்து, இட்டிலிப் பாத்திரத்துள் வைத்து,'வேட்டு' வைத்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.///

ஆகா, ஆகா, ஆமாம் ஆமாம்! நான் இங்கே கிடைக்கும் இலைகளில் (apple, magnolia, lemon, …) பருப்பு உசிலியை வைத்து வேகவைத்துப் பார்த்தேன் … ஒரு பயனும் இல்லை, ஏமாந்துபோனேன். :-( 

பழைய சுவையை நம் போன்றவர்கள் மறக்கவேண்டியதுதான்-போல.

coral shree

unread,
Oct 19, 2015, 9:04:43 PM10/19/15
to vallamai
ஆம் அம்மா, ஆந்திராவின் கோங்குரா தான் நம் புளிச்ச கீரை. ஆனாலும் கல்பட்டு ஐயா சொல்கிற அந்த பெயர் அசூசை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள் என்று தெரியவிலை. 

அன்புடன்
பவளா

2015-10-19 23:40 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:



--

                                                               
                 

Take life as it comes.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 19, 2015, 9:34:52 PM10/19/15
to வல்லமை

2015-10-20 6:33 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
எனக்கு infarcts in the brain என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, இருக்கிறதை வைத்துக்கொண்டு சமாளித்துக்கொண்டு போகவேண்டியதுதான்!

​அன்பு பவளஸ்ரீ அவர்களே இந்த நிலையின் வெளிப்பாடு என்ன.

ஒரு முறை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனம் ஒன்றில் வேகமாக வந்த ஒரு இளைஞன் என்னை இடித்துத் தள்ளி விட்டான்.  உடனே வைத்தியரிடம் சென்றேன்.  அவர் "எக்ஸ் ரே பட்ம் எடுத்துக் கொண்டு வார்.  மண்டேலெ சின்ன கிரேக்கு இருக்கூன்னு நினைக்கிறேன்" என்றார்.

வீட்டுக்கு வந்து மனைவியிடம் சொன்னேன் விஷயத்தை.

"டாக்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.  ஏற்கெனவே தெரிஞ்ச விஷயம் தானே இது.  ஆனா அவரு சின்ன கிரேக்குந்னு சொன்னது தான் இடிக்கிறது'
" என்றாள் என் மனைவி.​

coral shree

unread,
Oct 19, 2015, 9:47:45 PM10/19/15
to vallamai
//டாக்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.  ஏற்கெனவே தெரிஞ்ச விஷயம் தானே இது.  ஆனா அவரு சின்ன கிரேக்குந்னு சொன்னது தான் இடிக்கிறது'
" என்றாள் என் மனைவி.​//


ஹ..ஹா..  ஐயா,  சாந்தா அம்மையாரின் நகைச்சுவை உணர்வு இரசிக்கச் செய்கிறது. ஆனால் இது அந்த நேரத்திற்கு சிலருக்கு சங்கடமான பதிலாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலையை இலகுவாக்குகிற அவருடைய சமயோசிதம் எனக்கு ரொம்ப பிடிக்கிறது. 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages