குழுமத்தார் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
சக
ஒரு புலனப் பகிர்வு
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
*இன்றைய ஆன்மீக பதிவில் சித்திரை மாதத்தின் சிறப்புகளை படித்து தெரிந்து கொள்ளலாம்...*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*
*சித்திரை மாதத்தின் சிறப்புகள்:-*
*Chithirai Month Special*
தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தை வைத்தே வருடம் கணக்கிடப்பட்டது. அப்படி உள்ள ஆன்மீகத்தில் சித்திரையை முதல் மாதமாகவும், பங்குனியை கடை மாதம் என்றும் கூறுவார்கள்...
🐘🐘🐄🐄🦚🦜🦚🐄🐄🐘🐘
உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில் தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.
ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒரு மாதம் தொடங்கும். அந்த வகையில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் சித்திரை மாதமாகும்.
♦️♦️♦️▫️▪️🔷▪️▫️♦️♦️♦️
*சித்திரை மாத சிறப்புகள்:-*
சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம்முடைய முன்னோர்கள் இந்த தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம்.
இந்த வேப்பம் பூவுடன் வெல்லம், புளி போன்றவை சேர்த்து செய்யப்படும் இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும்.
✳️🔱✳️🔱✳️🔱✳️🔱✳️🔱✳️
சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.
சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.
💛💛🧡🧡💚💜💚🧡🧡💛💛
*சித்திரை மாத திருவிழாக்கள்:-*
சித்திரை மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் முதலில் நம் நினைவிற்கு வரும்.
அதிலும் குறிப்பாக சித்திரை திருவிழா என்றாலே உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தான்.
இந்த திருவிழா கிட்டத்தட்ட 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
🌏🌝✨🌟❄️🌟✨🌝🌍
*சித்திரை பௌர்ணமி:-*
சித்திரை மாதத்தில் வரக்கூடிய ‘சித்ரா பெளர்ணமி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும்,
அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
🍎🍏🫐🍑🥭🍒🥥🍍🥭🍉🍇
*அட்சய திருதியை:-*
எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது பல மடங்கு பலன் தரக்கூடிய நாளாக விளங்குவது அட்சய திருதியை.
இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் தான் வருகிறது.
இந்த தினத்தில் உணவு தானியங்கள், அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.
சித்திரை மாதம் பிறந்தவர்களின் பொதுவான குணம்:-
சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் அனைவராலும் விரும்பக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
ஒரு செயலை தொடங்கினால் அதில் வெற்றி பெறுவதற்கு முழு முயற்சியினை செய்வார்கள்.
🌳🌳🌴🌴🎋🪸🎋🌴🌴🌳🌳
*சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்:-*
சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் காவல் துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
எதிலும் எதிர்த்து போராட கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை வேலை வாங்கும் ஆற்றலையும் கொண்டிருப்பார்கள்.
எந்த காரியத்தையும் ஒதுக்கும் குணம் இவர்களிடம் இருக்காது.
🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥
சில நேரத்தில் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், கோபம் கொண்ட நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் டென்சன், நரம்புதளர்ச்சி உடையவர்களாக இருப்பார்கள்.
சூரியனை போன்று எப்போதும் பிரகாசமாக இருக்கக்கூடியவர்கள்.
சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் தன்னை அழகாக காட்டிக்கொள்வதற்கு தன்னுடைய நடை, உடை, பாவனையில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்...
அனைத்து துறையும் சிறந்து முதலிடம் விளங்குவார்கள்...
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
*தெய்வீக மாதம் சித்திரை:-*
சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.
சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.
சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.
🏡🏠🏘️🏕️🏕️🏕️🏕️🏘️🏠🏡
சித்திரை முதல் நாளன்று கிராமப்புறங்களில் இன்றும் வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மெழுகி மாக்கோலம் விடுவார்கள் மற்றும் நகர்புறங்களில் ஒரு நாள் முன்பு வீடு சுத்தம் செய்து அவரவர் வசதிக்கேற்ப மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க மக்கள் தயாராகின்றனர்.
💰💰💰💰🪔🪔🪔💰💰💰💰
பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.
சித்திரை மாதம் பிறப்பதற்கு முதல் நாள் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.
🪙🪙🪙💶💴💵💷🪙🪙🪙
மறுநாள் அதிகாலையில் எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் மனம் மகிழ்ச்சியும் என்று நம்பப்படுகிறது...
*இது போன்று மேலும் பல ஆன்மிக தகவல்கள் தொடரும்...*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*
*ஓம் நமச்சிவாய வாழ்க*
*நாதன் தாள் வாழ்க*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*என்றும் இறைபணியில்...*
*மு.சண்முக ஐயப்பன்.மும்பை*
🟪🟦🟩🟧🟨🟨🟧🟩🟦🟪