வல்லமைத் தொடர்: என்ன தான் இருக்கிறது வேதத்தில்?

795 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 19, 2014, 5:05:59 AM5/19/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

என்ன தான் இருக்கிறது வேதத்தில்? -1

பாமரனின் சந்தேகம்

வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது வேதத்தில் என்று அறிந்து கொள்ள விரும்பினான் பாமரன் ஒருவன். பல வகையான ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டான். அவனுக்குத் தெளிவுக்குப் பதிலாகக் குழப்பமே ஏற்பட்டது. குழப்பம் ஏற்படக் காரணம் என்ன? கேட்ட செய்திகளுக்கிடையே முரண்பாடு இருந்தது தான்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு புறம் வேதாந்தக்காரர்கள் கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் நடைமுறையில் உருவ வழிபாடு தான் வேத மந்திரங்களுடன் நடைபெற்றுவருகிறது. இரண்டுமே வேதத்திற்கு உகப்பானது தானா அல்லது இரண்டில் ஒன்று தான் வேத சம்மதமானதா?

 நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோநாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்று உருவ வழிபாட்டைக் கடுமையாகச் சாடிய சித்தர்களையும் நாம் வேத விரோதிகள் என்று இகழ்வதில்லை. மாறாக, அவர்களுக்கும் சிலை வைத்துக் கோயில் கட்டி வேத மந்திரங்கள் மூலம் பூசை செய்கிறோம்.

முத்தி என்பது எது?

வேதாந்தக்காரர்களிடையேயும் ஒற்றுமை இல்லை. காண்பதெல்லாம் கடவுள் அன்றி வேறு இல்லை, நீயும் கடவுள், நானும் கடவுள், அதை உணர்ந்து நம்மிடமுள்ள பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலப்பது தான் முக்தி, அதை உயிருள்ள போதே அடையலாம் என்கின்றனர் அத்வைதிகள்.

பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் சாத்தியமில்லை என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகளும், த்வைதிகளும். இறைவனின் கருணைக்குப் பாத்திரமான உயிர், உடலை விட்டு நீங்கிய பின் நாராயணனின் அருகாமைக்குச் சென்று அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெறும். இதுவே முக்தி, இதுவே மனிதன் அடையக் கூடிய மிகப் பெரும் பேறு என்கின்றனர்.

எல்லோருமே வேதத்தைத் தான் பிரமாணமாகக் காட்டுகிறார்கள்.

 முழு முதல் கடவுள் எது?

இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுகிறோம். எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே கடவுளையே சென்றடையும் என்று சில சொற்பொழிவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு சில உபந்யாசகர்கள் பேசுவது வேறு வகையாக இருக்கிறது.

ஒருவர், “விஷ்ணுவே மேலான தெய்வம். சிவன் என்பவர் அவருடைய பேரன் மாதிரி. அவருக்கு சுய சக்தி கிடையாது. அவருடைய சக்தியெல்லாம் விஷ்ணுவிடமிருந்து வருவது தான்” என்றார். அதற்கு ஆதாரமாக “நாராயண பரம் ப்ரம்ம” என்ற வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினார்.

மற்றொரு உபந்யாசகர், “சிவன் தான் முதன்மையான தெய்வம்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்ற சொல் தொடரைக் காட்டினார்.

            சிவனே மேலான தெய்வம் எனக் கூறிய ஒரு சைவ சித்தாந்தக்காரரோ, “விஷ்ணு என்பவர் காத்தல் தொழிலைக் கவனிப்பதற்காகச் சிவனால் நியமிக்கப்பட்டவர். அவர் சிவனடியார்களில் முதன்மையானவர்” என்றார்.

            ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்ற பாமர வசனம் இந்த வேத விற்பன்னர்களின் பேச்சுப் போட்டியில் எடுபடாமல் போயிற்று.

வழிபடுமுறை

பல வகையான வழிபாட்டு முறைகள் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. வேத மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்தால் எல்லா நலன்களை அடையலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னின்ன கோயிலில் சென்று அபிஷேகம், அர்ச்சனை, பிரதக்ஷிணம் முதலானவை செய்தால் தீராத வினைகள் தீரும் என்பர் சிலர். யாக யக்ஞம் செய்ய வேண்டாம், நாம ஜபம் ஒன்றே போதும் என்பர் சிலர். இன்னின்ன விரதங்களை அனுஷ்டித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பர் சிலர். இவை எல்லாமே வேத சம்மதமானவை தானா?

 இறப்புக்குப் பின் என்ன?

இறப்புக்குப் பின் உயிர் என்ன ஆகிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான் நசிகேதன். அது தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்றான் யமன். அவன் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றும், யமன் பிரம்மத்தைப் பற்றி விவரமாக விளக்கி அதை அடையும் வழியைச் சொன்னானே தவிர, கடைசி வரை தன் வாயால் நசிகேதன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மறு பிறப்பு உண்டு என்பதை மட்டும் குறிப்பால் உணர்த்துகிறான்.

மறு பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. “உடலை விட்டு நீங்கிய உயிர் பத்து நாட்கள் பயணம் செய்து வைதரணி நதியைக் கடந்து பித்ரு லோகத்துக்குப் போய்ச் சேருகிறது. இறந்தவரின் பிள்ளையோ மற்றவரோ செய்யும் அபரக் கிரியைகள் தான் வைதரணி நதியைத் தாண்ட உதவுகின்றன. அவ்வாறு கர்மா இல்லாமல் செத்துப் போனவர்கள் பிசாசுகளாகவே அலைந்து கொண்டிருப்பர்” என்று சில சொற்பொழிவாளர்கள் சொல்கிறார்கள்.

வேறு சிலர், “இறந்த அந்தக் கணத்திலேயே, உயிரானது தான் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு ஜன்மா எடுத்து பாப புண்ணியங்களின் பலனை அனுபவிக்கும்” என்கின்றனர்.

            இன்னும் சிலர், “ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையில் சொர்க்கம் நரகம் என்ற நிலை உண்டு. பாப புண்ணியங்களின் பலனை சொர்க்கத்திலோ நரகத்திலோ அனுபவித்து விட்டு அது முடிந்தவுடன் உயிர் வேறு பிறவி எடுக்கிறது” என்கின்றனர்.

பித்ருக்களுக்கு சிராத்தம் செய்வது எல்லாம் வேதத்தில் சொல்லப்படவில்லை என்கிறது ஸத்யார்த்த ப்ரகாசம் என்ற புத்தகம். இதை எழுதியவர் பிற மதக்காரரோ அல்லது நாஸ்திகரோ அல்ல. வேதத்தை தெய்வ வாக்காக நம்பிக் கொண்டாடியவரும், அதை நன்கு ஆராய்ந்து, வேதத்தில் இல்லாத பொருள் இல்லை, அது எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நூல் என்று உறுதிபடக் கூறி “மீண்டும் வேத காலத்துக்குப் போவோம்” என்று முழங்கியவருமான ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த ஸரஸ்வதி  தான் அவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம்.

வேதத்தின் பெயரால் அவரவர் தத்தம் சொந்தக் கருத்துகளைக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது பற்றி அவன் படித்திருக்கிறான். உதாரணமாக, ‘கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது வேதத்தில் விதிக்கப்பட்ட ஒரு  கடமை’ என்று ஒரு சாரார் வாதிட்ட காலத்தில் ராம் மோகன் ராய் என்ற வங்காளப் பிராமணர், ‘வேதத்தில் உடன்கட்டை பற்றி எங்கே இருக்கிறது, காட்டுங்கள்’ என்று கேட்டவுடன் கூட்டம் வாய் மூடிக் கொண்டது.

காந்தி தீண்டாமையை எதிர்த்தபோது சில சனாதனிகள் அவர் வேத விரோதமாகப் பேசுவதாக எதிர்த்தனர். காந்தி, ‘வேதத்தில் தீண்டாமையை அனுமதிக்கும் பகுதியை எடுத்துக் கூறுங்கள்’ எனக் கேட்டபோது அவருக்குப் பதில் சொல்வார் இல்லை.

இந்த உபந்யாசகர் உண்மையில் வேதத்தில் உள்ளதைத் தான் கூறுகிறாரா அல்லது தன் கருத்தைச் சொல்லி விட்டு வேதம் என்ற பெயரால் பூச்சாண்டி காட்டுகிறாரா என்பது புரிவதில்லை.

எனவே, உண்மையில் வேதம் என்ன தான் கூறுகிறது என்று அதையே நேரடியாகப் பார்த்து விட வேண்டும் என்று பாமரன் விரும்பினான். அதன் விளைவு தான் வாரம் தோறும் வெளிவர இருக்கும் இந்தத் தொடர்.

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

வேந்தன் அரசு

unread,
May 19, 2014, 7:27:28 AM5/19/14
to vallamai, மின்தமிழ்
சங்க பாடல்களில் ”வேத முதல்வன் என்ப” என்பார்கள். அதனால் அந்த பாடல் ஆசிரியர் தானாக வேதத்தில் படிக்கலை சொல்லுவார்கள் என்று பாடிவிட்டார். அதே மரபுதான் எல்லாரும் கடைப்பிடிக்கிறார்கள்.

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
        வளைநரல் பௌவம் உடுக்கையாக
        விசும்பு மெயயாகத் திசை கையாகப்
        பசங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
        இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
        வேத முதல்வன் என்ப
        தீதற விளங்கிய திகிரி யோனே

>இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம்.

நாத்திகர்களை குறை சொல்லுமுன் நம்பிக்கையாளர்கள் கடவுளைப்பற்றிய கருத்து ஒற்றுமை காணனும்.

>மறு பிறப்பு உண்டு என்பதை மட்டும் குறிப்பால் உணர்த்துகிறான்

இருக்கும் இருக்கும்.
உயிர் என்பது ஆணினத்தின் விதைப்பையில் உருவாகிறது. அது உடலுக்கு வெளியில் வைத்தது யாக்கை இழந்த உயிர்கள் மீண்டும் விதைப்பைக்குள் நுழைய வசதியாக இருக்கும்னு கடவுள் செய்தாரோ?

 ஒரு முட்டையை சினைப்படுத்த ஒரு மில்லியன் உயிருள்ள தலைப்பிரட்டைகள் போட்டி போட்டி ஒன்று மட்டுமே வெற்றி காணுது. மற்ற உயிர்கள் எல்லாம் பாவம். அடுத்த விதைப்பையை நாடி ஓடணும்.

சமணர்கள் அம்மணர்களாகி புலனடக்கி விந்தை அடக்கணும் என்றது உயிர்க்கொலை தவிர்க்கத்தானோ?

19 மே, 2014 5:05 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 19, 2014, 8:12:58 AM5/19/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, May 19, 2014 4:27:28 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
சங்க பாடல்களில் ”வேத முதல்வன் என்ப” என்பார்கள்.

இது சங்கப் பாடல் இல்லை ஐயா. நற்றிணையின் கடவுள் வாழ்த்து.
நற்றிணை தொகுத்தவர் வைத்த பாடல். தொகை நூல்களில்
முதல் பாடல் காலத்தால் பிற்பட்டது. 8-ஆம் நூற்றாண்டு கூட
இருக்கலாம்.

நா. கணேசன்

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 19, 2014, 2:05:27 PM5/19/14
to vall...@googlegroups.com
அன்புள்ள வேந்தன் அரசு அவர்களே

வேத முதல்வன் என்ப
 
என்று அவர் காட்டிய சிந்தனை வடிவம் எல்லாம் வேதத்திற்கே முந்தியன என்று தானே சொல்கிறார்?(

.அதனால் சிந்துத்தமிழ் சிந்தனைகளே தேவநாகரி எனும் (தமிழ் திரிந்த மொழி)வரிவடிவ்ங்களில் வலம் வருகிறது.இன்னும் பாரதம் பாடிய நமது பெருந்தேவன் தான் அந்த கிருஷ்ண த்வைபாயன்.அவனை நாம் வியாழ முனிவன் என்றும் அழைப்போம்.(ழ ஒலிப்பு ஸ ஆவது மரபு)அறிவு அகன்றவன் (அகற்றியன்)அகத்தியன் ஆனான்.நம் கபிலன் அந்த கபிலனாய் எத்தனை சிந்தனை வடிவங்களை (சாங்க்யா..)தந்திருக்கிறான்.
நவில்தல் என்றால் உரைத்தல்.கவில்தல் என்றால் அழகுபட ..நயம்பட உரைத்தல்.அவர்களே கவிகள் ஆயினர்.கவிலனே இங்கு கபிலன்.(கவி என்றால் குரங்குக்கு ஏன் அந்த பேர் வைத்தார்கள் என்று கேட்பீர்களே?
கவை என்றால் மரக்கிளை.அதில் வாழுவதால் கவையினமாகி கவி இனம் ஆகியிருக்கலாம்)மேலும் தமிழ் திரிந்த அந்த சங்கத மொழியில் கபிலம் என்றால் பழுப்பு நிறம் என்று ஒரு பொருள் வருகிறது. வெள்ளை நிறத்தவர்கள் (அறிவு ஜீவித்தமிழர்கள் அவர்களை ஆரியர்கள் என்றும் அழைக்கலாம்)
வெயிலில் கறுத்தவர்களை த்ராவிட என்று அழைக்கிறார்கள்.பழுப்பு நிறத்தவர்கள் கபிலர்கள் ஆனார்கள்.இவர்கள் படைக்குலம் ஆக இருக்கலாம்.
த்ராவிட என்பது திரைவிடங்களில் (அலைவீசும் கடற்கரை வாழ்பவர்கள் அல்லது திரைகடல் ஏறி திரைவியஙகள் தேடி) வாழ்பவர்களைக்குறிக்கும்.
தமிழர்கள் மூவேந்தர்களாக இருந்தது ஆரிய திராவிடர் ஆனதற்கு இடையே 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்று இடைவெளி இருக்கிறது.கிரேக்க நாகரிகம் அத்தீனியர்கள் (ஏதென்ஸ் நகரத்தவர்) மற்றும் ஸ்பார்ட்டா மக்கள் என பிரிவு பட்டது போல் தான் இதுவும்.இரானில் அசுர சுர என இரு பிரிவினர்
(பங்காளிகள்)சேர்ந்தும் வாழ்ந்தார்கள்.அப்புறம் ஆவேசமாக சண்டையிட்டும் வாழந்தார்கள்.அவர்களின் அவெஸ்தா மொழி ஓசை வடிவங்களே இங்கு பாரசீக இனங்களாய் வந்த ஆரியர்களின் ரிக் வேதம் ஆயிற்று.எனவே இந்தியா என்பது தமிழ் இந்தியா தான். 

சிந்துத்தமிழர்கள் கடவழி சென்று எகிப்து கிரேக்கம் சுமேரிய அசீரிய லத்தீன் ரோம மொழிகளோடு உறவு கொண்டார்கள்.இந்த மேலை நாட்டு ஒலிக்குறிப்புகளின் கலவைக்குள் மூடிக்கிடப்பதே தேவ நாகரிகம் எனும் சங்கதம் 
ஆகும்.தேவ நாகரிக என்ற சொல்லே தூய தமிழ்ச்சொல் ஆகும்.எனவே சமஸ்கிருதம் வட தமிழ் ஆகும்.

சரி அதையெல்லாம் விடுங்கள்.வேய் என்றால் மூங்கில் அல்லது புல்லாங்குழல்.தமிழர்களின் பண் இந்த வேய்ங்குழல் வழியே வரும் இசை வடிவங்கள்.எவையே இங்கு "வேய்தம்" ஆகி வேதம் ஆனது.

அன்புடன் ருத்ரா

சொ. வினைதீர்த்தான்

unread,
May 19, 2014, 2:20:54 PM5/19/14
to vallamai, mintamil
பகிர்வுக்கு நன்றி திருமிகு தேமொழி.
அடுத்த பதிவுகளும் காண ஆவல்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
May 19, 2014, 7:08:59 PM5/19/14
to mint...@googlegroups.com, vallamai

ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு பதிவாக இதுவரை ஆறு பதிவுகள் வெளிவந்துள்ளன சொ . வி. ஐயா.

அனைவருக்கும் படிக்க நேரம் கிடைக்கும் வகையில் வாரம் மூன்று  பதிவுகளாக வெளியிட்டு அத்தொடரின் வரிசையை எட்டிப் பிடித்துவிடுவோம்.   

விரும்பினால் வல்லமையிலும் சென்று படிக்கலாம் ஐயா.  

என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 1         http://www.vallamai.com/?p=44066
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 2         http://www.vallamai.com/?p=44246
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 3         http://www.vallamai.com/?p=44535
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 4         http://www.vallamai.com/?p=44780
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 5         http://www.vallamai.com/?p=45037
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 6         http://www.vallamai.com/?p=45280

..... தேமொழி

Banukumar Rajendran

unread,
May 20, 2014, 4:22:30 AM5/20/14
to மின்தமிழ், vallamai
அன்பின் அம்மையீர் (தேமொழி),

அருமையான கட்டுரைகளை பகிர்ந்துள்ளீர்கள். இங்கு விவாதிக்கப்பட்டு வரும் பல இழைகளுக்கு இக்கட்டுரைகள் போதுமான சாட்சியங்களாகத்
திகழ்கின்றன.

குறிப்பாக இந்தக் குறளின் பொருளறிய மேலே வரும் கட்டுரை மிக பயனுள்ளதாக இருக்கிறது.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

//திருமால்

வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

//

:-)

இரா.பானுகுமார்,
சென்னை

////

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 21, 2014, 9:49:18 PM5/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 2

வேதக் கடல்

வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.

ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே”  என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த  விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.

untitled 2

            உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். மகாகவி பாரதி

எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

            சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.

            அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.) இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.

காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

untitled 1

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,

अप्स्वन्तरमृतप्सु  भेषजमपामुत  प्रशस्तये । देवा  भवत  वाजिन:  ரிக் ஸம். 1.23.19

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.

இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.

अप्स्वन्तरमृतमप्सु  भेषजमपामुत  प्रशस्तिष्वश्वा  भवथ  वाजिन:  தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே,வலிமை பெறுங்கள்.

தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது.   இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.

            யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான்.  அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.

          யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்………. 

            எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

 படங்களுக்கு நன்றி:

http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html

நன்றி: வல்லமை - http://www.vallamai.com/?p=44246

செல்வன்

unread,
May 21, 2014, 10:58:56 PM5/21/14
to vallamai, மின்தமிழ்

2014-05-20 3:22 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

ரிக் வேதத்தில் வரும் விஷ்ணு சூக்தத்தில் உள்ள விஷ்ணு திருமால் தான். இனி வேதத்துக்கும் இதான் பொருள் என புதுவிளக்கம் கொடுக்கபடும் என தெரிகிறது. ரைட்டு :-)

--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

coral shree

unread,
May 21, 2014, 11:16:18 PM5/21/14
to kothand...@yahoo.co.in, மின்தமிழ், vallamai
அன்பின் திரு கோதண்டராமன்,

ஆக்கப்பூர்வமான இந்த உரையாடலில் தாங்களும் பங்கு பெற்றால் பயனுள்ளதாக இருக்கும். தங்களையும் வரவேற்கிறோம்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Banukumar Rajendran

unread,
May 22, 2014, 4:03:40 AM5/22/14
to vallamai, மின்தமிழ்
2014-05-19 14:35 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

என்ன தான் இருக்கிறது வேதத்தில்? -1

பாமரனின் சந்தேகம்

வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது வேதத்தில் என்று அறிந்து கொள்ள விரும்பினான் பாமரன் ஒருவன். பல வகையான ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டான். அவனுக்குத் தெளிவுக்குப் பதிலாகக் குழப்பமே ஏற்பட்டது. குழப்பம் ஏற்படக் காரணம் என்ன? கேட்ட செய்திகளுக்கிடையே முரண்பாடு இருந்தது தான்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு புறம் வேதாந்தக்காரர்கள் கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் நடைமுறையில் உருவ வழிபாடு தான் வேத மந்திரங்களுடன் நடைபெற்றுவருகிறது. இரண்டுமே வேதத்திற்கு உகப்பானது தானா அல்லது இரண்டில் ஒன்று தான் வேத சம்மதமானதா?

 நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோநாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்று உருவ வழிபாட்டைக் கடுமையாகச் சாடிய சித்தர்களையும் நாம் வேத விரோதிகள் என்று இகழ்வதில்லை. மாறாக, அவர்களுக்கும் சிலை வைத்துக் கோயில் கட்டி வேத மந்திரங்கள் மூலம் பூசை செய்கிறோம்.

முத்தி என்பது எது?

வேதாந்தக்காரர்களிடையேயும் ஒற்றுமை இல்லை. காண்பதெல்லாம் கடவுள் அன்றி வேறு இல்லை, நீயும் கடவுள், நானும் கடவுள், அதை உணர்ந்து நம்மிடமுள்ள பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலப்பது தான் முக்தி, அதை உயிருள்ள போதே அடையலாம் என்கின்றனர் அத்வைதிகள்.

பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் சாத்தியமில்லை என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகளும், த்வைதிகளும். இறைவனின் கருணைக்குப் பாத்திரமான உயிர், உடலை விட்டு நீங்கிய பின் நாராயணனின் அருகாமைக்குச் சென்று அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெறும். இதுவே முக்தி, இதுவே மனிதன் அடையக் கூடிய மிகப் பெரும் பேறு என்கின்றனர்.

எல்லோருமே வேதத்தைத் தான் பிரமாணமாகக் காட்டுகிறார்கள்.

 முழு முதல் கடவுள் எது?

இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுகிறோம். எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே கடவுளையே சென்றடையும் என்று சில சொற்பொழிவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு சில உபந்யாசகர்கள் பேசுவது வேறு வகையாக இருக்கிறது.

ஒருவர், “விஷ்ணுவே மேலான தெய்வம். சிவன் என்பவர் அவருடைய பேரன் மாதிரி. அவருக்கு சுய சக்தி கிடையாது. அவருடைய சக்தியெல்லாம் விஷ்ணுவிடமிருந்து வருவது தான்” என்றார். அதற்கு ஆதாரமாக “நாராயண பரம் ப்ரம்ம” என்ற வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினார்.

மற்றொரு உபந்யாசகர், “சிவன் தான் முதன்மையான தெய்வம்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்ற சொல் தொடரைக் காட்டினார்.

            சிவனே மேலான தெய்வம் எனக் கூறிய ஒரு சைவ சித்தாந்தக்காரரோ, “விஷ்ணு என்பவர் காத்தல் தொழிலைக் கவனிப்பதற்காகச் சிவனால் நியமிக்கப்பட்டவர். அவர் சிவனடியார்களில் முதன்மையானவர்” என்றார்.

நீலகேசி, வேதவாத சருக்க உரையில் இருந்து..

இரா.பானுகுமார்,
சென்னை

            ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்ற பாமர வசனம் இந்த வேத விற்பன்னர்களின் பேச்சுப் போட்டியில் எடுபடாமல் போயிற்று.

வழிபடுமுறை

பல வகையான வழிபாட்டு முறைகள் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. வேத மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்தால் எல்லா நலன்களை அடையலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னின்ன கோயிலில் சென்று அபிஷேகம், அர்ச்சனை, பிரதக்ஷிணம் முதலானவை செய்தால் தீராத வினைகள் தீரும் என்பர் சிலர். யாக யக்ஞம் செய்ய வேண்டாம், நாம ஜபம் ஒன்றே போதும் என்பர் சிலர். இன்னின்ன விரதங்களை அனுஷ்டித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பர் சிலர். இவை எல்லாமே வேத சம்மதமானவை தானா?

 இறப்புக்குப் பின் என்ன?

இறப்புக்குப் பின் உயிர் என்ன ஆகிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான் நசிகேதன். அது தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்றான் யமன். அவன் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றும், யமன் பிரம்மத்தைப் பற்றி விவரமாக விளக்கி அதை அடையும் வழியைச் சொன்னானே தவிர, கடைசி வரை தன் வாயால் நசிகேதன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மறு பிறப்பு உண்டு என்பதை மட்டும் குறிப்பால் உணர்த்துகிறான்.

மறு பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. “உடலை விட்டு நீங்கிய உயிர் பத்து நாட்கள் பயணம் செய்து வைதரணி நதியைக் கடந்து பித்ரு லோகத்துக்குப் போய்ச் சேருகிறது. இறந்தவரின் பிள்ளையோ மற்றவரோ செய்யும் அபரக் கிரியைகள் தான் வைதரணி நதியைத் தாண்ட உதவுகின்றன. அவ்வாறு கர்மா இல்லாமல் செத்துப் போனவர்கள் பிசாசுகளாகவே அலைந்து கொண்டிருப்பர்” என்று சில சொற்பொழிவாளர்கள் சொல்கிறார்கள்.

வேறு சிலர், “இறந்த அந்தக் கணத்திலேயே, உயிரானது தான் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு ஜன்மா எடுத்து பாப புண்ணியங்களின் பலனை அனுபவிக்கும்” என்கின்றனர்.

            இன்னும் சிலர், “ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையில் சொர்க்கம் நரகம் என்ற நிலை உண்டு. பாப புண்ணியங்களின் பலனை சொர்க்கத்திலோ நரகத்திலோ அனுபவித்து விட்டு அது முடிந்தவுடன் உயிர் வேறு பிறவி எடுக்கிறது” என்கின்றனர்.

பித்ருக்களுக்கு சிராத்தம் செய்வது எல்லாம் வேதத்தில் சொல்லப்படவில்லை என்கிறது ஸத்யார்த்த ப்ரகாசம் என்ற புத்தகம். இதை எழுதியவர் பிற மதக்காரரோ அல்லது நாஸ்திகரோ அல்ல. வேதத்தை தெய்வ வாக்காக நம்பிக் கொண்டாடியவரும், அதை நன்கு ஆராய்ந்து, வேதத்தில் இல்லாத பொருள் இல்லை, அது எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நூல் என்று உறுதிபடக் கூறி “மீண்டும் வேத காலத்துக்குப் போவோம்” என்று முழங்கியவருமான ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த ஸரஸ்வதி  தான் அவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம்.

வேதத்தின் பெயரால் அவரவர் தத்தம் சொந்தக் கருத்துகளைக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது பற்றி அவன் படித்திருக்கிறான். உதாரணமாக, ‘கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது வேதத்தில் விதிக்கப்பட்ட ஒரு  கடமை’ என்று ஒரு சாரார் வாதிட்ட காலத்தில் ராம் மோகன் ராய் என்ற வங்காளப் பிராமணர், ‘வேதத்தில் உடன்கட்டை பற்றி எங்கே இருக்கிறது, காட்டுங்கள்’ என்று கேட்டவுடன் கூட்டம் வாய் மூடிக் கொண்டது.

காந்தி தீண்டாமையை எதிர்த்தபோது சில சனாதனிகள் அவர் வேத விரோதமாகப் பேசுவதாக எதிர்த்தனர். காந்தி, ‘வேதத்தில் தீண்டாமையை அனுமதிக்கும் பகுதியை எடுத்துக் கூறுங்கள்’ எனக் கேட்டபோது அவருக்குப் பதில் சொல்வார் இல்லை.

இந்த உபந்யாசகர் உண்மையில் வேதத்தில் உள்ளதைத் தான் கூறுகிறாரா அல்லது தன் கருத்தைச் சொல்லி விட்டு வேதம் என்ற பெயரால் பூச்சாண்டி காட்டுகிறாரா என்பது புரிவதில்லை.

எனவே, உண்மையில் வேதம் என்ன தான் கூறுகிறது என்று அதையே நேரடியாகப் பார்த்து விட வேண்டும் என்று பாமரன் விரும்பினான். அதன் விளைவு தான் வாரம் தோறும் வெளிவர இருக்கும் இந்தத் தொடர்.

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

--

Banukumar Rajendran

unread,
May 22, 2014, 4:10:40 AM5/22/14
to மின்தமிழ், vallamai
2014-05-22 7:19 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 2

வேதக் கடல்

வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.

ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே”  என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த  விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.

untitled 2

            உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். மகாகவி பாரதி

எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

            சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.

            அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.)

இக்கருத்து சுவையான ஒரு உரையாடலுக்கு அழைத்துச் செல்லும்..

1. சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் நான்மறை என்பதை வைதிக வேதங்கள் என்று பொருள் கொண்டால்,  மூன்று வைதிக வேதங்கள் நான்காக
மாறியக் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டன வென்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது,

2. நான்மறை என்பது வைதிக வேதங்களை குறிக்காது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது

3. நச்சினார்க்கினியர் கூற்றுபடி, தமிழ்நாட்டில்ஏற்கனவேயிருந்த நான்மறைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இன்னும் நிறைய லாமாக்கள் வரும்...!

இரா.பானுகுமார்,
சென்னை

இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.

காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

untitled 1

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,

अप्स्वन्तरमृतप्सु  भेषजमपामुत  प्रशस्तये । देवा  भवत  वाजिन:  ரிக் ஸம். 1.23.19

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.

இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.

अप्स्वन्तरमृतमप्सु  भेषजमपामुत  प्रशस्तिष्वश्वा  भवथ  वाजिन:  தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே,வலிமை பெறுங்கள்.

தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது.   இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.

            யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான்.  அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.

          யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்………. 

            எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

 படங்களுக்கு நன்றி:

http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html

நன்றி: வல்லமை - http://www.vallamai.com/?p=44246

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
May 22, 2014, 8:40:20 PM5/22/14
to vallamai, மின்தமிழ்

2014-05-22 3:10 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
1. சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் நான்மறை என்பதை வைதிக வேதங்கள் என்று பொருள் கொண்டால்,  மூன்று வைதிக வேதங்கள் நான்காக
மாறியக் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டன வென்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது,

2. நான்மறை என்பது வைதிக வேதங்களை குறிக்காது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது

3. நச்சினார்க்கினியர் கூற்றுபடி, தமிழ்நாட்டில்ஏற்கனவேயிருந்த நான்மறைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

வேதங்கள் மூன்றுதான் என இலக்கியங்களில் உள்ளதன் ஆதாரத்தையும் கொடுத்து இருக்கலாம்.

சமண தமிழ் இலக்கியங்களில் சமண நூல்களை நான்மறை என குறிப்பிடும் பாடல்கள் உண்டா?

மறை எனும் சொல்லே வடமொழி வேதங்களை மட்டுமே குறிக்கும் சொல். இந்து மதம் அன்றி வேறு எம்மத நூலுக்கும் மறை எனும் சொல் பொருந்தவே பொருந்தாது. வேதம் அந்தணர்க்கு மட்டுமே ஓதுதற்கு உரியது என கருதபட்டதால் அது "மறை" எனப்பட்டது. தொல்காப்பியர் கூட வேதநூலை "அந்தணர் மறைத்தே" என்கிறார்.

ஆக மறை எனும் தமிழ் சொல் உருவானதே வடமொழி வேதங்களை குறிக்கவே என்பது தெளிவு. ஆக தமிழில் மறை எனும் சொல் பிறந்ததே வடமொழி வேதங்களை குறிக்கவே. இப்படி இருக்கையில் நான்மறை என்பது மற்ற மொழி வேதங்களை குறிப்பிடும் சொல் என்பது எப்படி பொருந்தும்>?

K. Loganathan

unread,
May 23, 2014, 2:47:56 AM5/23/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராமன் அவர்களே

 தாங்கள் தரும் 'மறை' எனும் சொல்லின் பொருளோடு நான் உடன்படுகின்றேன்

//மறை எனப்பட்டது அது அந்தணர்க்கு மட்டுமே உரியது என்பதால் அல்ல. அதைப் படித்து நேரடியாகப் பொருள் புரிந்து கொள்ள முடியாது என்பதால். //

இதனை ' mystical literature'  எனும் ஆங்கிலச் சொல்லோடு பொருத்திப் பார்த்தால் பொருள் விளங்கும் என நினைக்கின்றேன்.

மேலும் இப்பொழுது நான் திருமூலரின் உட்சமயம் தொடர்பான பாடல்களைப் படித்துப் பொருள் எழுதி வருகின்றேன். அது பொழுது ஓர் கருத்து என் மனதில் பட்டது.

நெடுங்காலமாக வேதங்கள் வேதியர்கக்ட்கே என்று ஒதுக்க்ப்பட்டது வடநாட்டில் தான் போலும். தமிழ் நாட்டில் அப்படியே இருந்தாலும் திருஞான சம்பருக்குப் பிறகு அது இல்லாது போய் வேதங்கள் அனைவருக்கும் உரியதாய் விளங்கத் தொடங்கின என்று தெரிகின்றது.

திருமூலர் வேதியர் அல்லர். ஆனால் வேதங்களை நனறாக அறிந்தவராக தென்படுகின்றார்.

காரைக்கால் அம்மையார் வேதங்களைப்ப் பற்றி அதிகம் பாடவில்லை, ஆனால் அப்பர்-திருஞான சமபந்தர் ஆகியோர் வேதங்களையும் ஆகமங்களையும் இணைத்து வேதாகம நெறியைப் பாடுகின்றார்கள்.

சம்பந்தர் தொடங்கி வேதங்கள் அனைவருக்கும் உரியதாய் ஆகிவிட்டது என்றும் கோயில்களில் யாகம் வளர்த்தபோது வேதியர்கள்  அனைவரும் கேட்டு மகிழ வேதங்களை ஓதினர் என்றும்  காணக் கிடக்கின்றது.

இவ்வாறு நான் நினைப்பது சரியா? இல்லை பிழையா?

உலகன்

2014-05-23 14:27 GMT+08:00 கோதண்டராமன் <ekam...@gmail.com>:

மின் தமிழிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய பெயருடன் மீண்டும் வருகிறேன். மறையைப் பற்றி எழுதும்போது விக்ரமன் என்ற பழைய பெயரில் மறைந்து இருக்க வேண்டாம் என்பதால்.

அனைவர்க்கும் வணக்கம்.

விவாதப் பொருளுக்கு வருகிறேன்.

மறை எனப்பட்டது அது அந்தணர்க்கு மட்டுமே உரியது என்பதால் அல்ல. அதைப் படித்து நேரடியாகப் பொருள் புரிந்து கொள்ள முடியாது என்பதால். இதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் மூன்றாவது தலைப்பான வேத மொழி என்பதில் கொடுத்திருக்கிறேன். அது போன்ற விடுகதைகள் ஆயிரத்துக்கு மேல் உள்ளன ரிக் வேதத்தில்.

தைத்திரியம், தலவகாரம், பௌடிகம், சாமம் என்ற பெயரில் ஒரு தொகுப்பு முறை முற்காலத்தில் வழங்கி வந்தது நச்சினார்க்கினியார் உரையிலிருந்து அறிய முடிகிறது. பின்னர் அவை வேறு நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுத் தற்போது நடைமுறையில் உள்ளன. வேதங்களை நான்காகப் பிரித்தவர் வியாசர் என்று நம்பப்படுகிறது. சாமம் தவிர்த்த மற்ற பழைய பெயர்கள் தற்போது சாகைகளின் பெயர்களாக அறியப்படுகின்றன.

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அனுமனைப் பற்றிச் சொல்லும்போது இவன் மூன்று வேதங்களிலும் வல்லவன் என்கிறார். வால்மீகிக்குப் பிந்தியவரா வியாசர்?

வடமொழியிலும் பல இடங்களில் த்ரயீ வித்யா (மூவகை வேதம்) என்ற பெயர் வேதத்துக்கு வழங்கப்படுகிறது. எனவே நாலாவது வேதம் அதர்வணம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது தெரிகிறது. வால்மீகி, வியாசர் இவர்களுடைய காலம் பற்றிய ஒரு தெளிவு கிடைக்காதவரை இது பற்றி ஒரு முடிவான கருத்து சொல்ல முடியாது. .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

Dhivakar

unread,
May 23, 2014, 2:49:17 AM5/23/14
to மின்தமிழ், vallamai
வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அனுமனைப் பற்றிச் சொல்லும்போது இவன் மூன்று வேதங்களிலும் வல்லவன் என்கிறார். வால்மீகிக்குப் பிந்தியவரா வியாசர்?

இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வியாசர் பற்றிய பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், வேதமதத்தில் மாற்றங்கள், த்ரிவேதி, நான்காம் வேதமான அதர்வணத்தின் ஆரம்பமும் தொகுப்பும் இவையெல்லாவற்றையும் பற்றிய ஒரு புத்தகமாக தன் ‘கிருஷ்ணா’ சீரிஸ் வரிசையில் வேதவியாசர் பற்றியதாக ஒரு புத்தகமாகவே ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் மறைந்த கே.எம். முன்ஷி.. கதை போல சொல்லப்பட்டிருந்தாலும் நிறைய தெளிவுகள் உண்டாகும் என்பது மட்டும் நிச்சயம். திரு கே.எம்.முன்ஷியைப் பொறுத்தவரை மகாபாரத காலக்கட்டத்தினைச் சேர்ந்தவர் வியாசர் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளக்கூடியதே.

அன்புடன்
திவாகர்

2014-05-23 11:57 GMT+05:30 கோதண்டராமன் <ekam...@gmail.com>:

மின் தமிழிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய பெயருடன் மீண்டும் வருகிறேன். மறையைப் பற்றி எழுதும்போது விக்ரமன் என்ற பழைய பெயரில் மறைந்து இருக்க வேண்டாம் என்பதால்.

அனைவர்க்கும் வணக்கம்.

விவாதப் பொருளுக்கு வருகிறேன்.

மறை எனப்பட்டது அது அந்தணர்க்கு மட்டுமே உரியது என்பதால் அல்ல. அதைப் படித்து நேரடியாகப் பொருள் புரிந்து கொள்ள முடியாது என்பதால். இதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் மூன்றாவது தலைப்பான வேத மொழி என்பதில் கொடுத்திருக்கிறேன். அது போன்ற விடுகதைகள் ஆயிரத்துக்கு மேல் உள்ளன ரிக் வேதத்தில்.

தைத்திரியம், தலவகாரம், பௌடிகம், சாமம் என்ற பெயரில் ஒரு தொகுப்பு முறை முற்காலத்தில் வழங்கி வந்தது நச்சினார்க்கினியார் உரையிலிருந்து அறிய முடிகிறது. பின்னர் அவை வேறு நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுத் தற்போது நடைமுறையில் உள்ளன. வேதங்களை நான்காகப் பிரித்தவர் வியாசர் என்று நம்பப்படுகிறது. சாமம் தவிர்த்த மற்ற பழைய பெயர்கள் தற்போது சாகைகளின் பெயர்களாக அறியப்படுகின்றன.

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அனுமனைப் பற்றிச் சொல்லும்போது இவன் மூன்று வேதங்களிலும் வல்லவன் என்கிறார். வால்மீகிக்குப் பிந்தியவரா வியாசர்?

வடமொழியிலும் பல இடங்களில் த்ரயீ வித்யா (மூவகை வேதம்) என்ற பெயர் வேதத்துக்கு வழங்கப்படுகிறது. எனவே நாலாவது வேதம் அதர்வணம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது தெரிகிறது. வால்மீகி, வியாசர் இவர்களுடைய காலம் பற்றிய ஒரு தெளிவு கிடைக்காதவரை இது பற்றி ஒரு முடிவான கருத்து சொல்ல முடியாது. .

On Monday, 19 May 2014 14:35:59 UTC+5:30, தேமொழி wrote:

--

coral shree

unread,
May 23, 2014, 7:32:42 AM5/23/14
to vallamai
அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஐயா. சாதி, வர்ணப் பிரிவினையெல்லாம் பிற்காலங்களில் நுழைந்திருகிறது போலுள்ளது. நல்லதொரு ஆக்கப்பூர்வமான தொடருக்கு நன்றி பல.

அன்புடன்
பவளா

2014-05-23 12:46 GMT+05:30 கோதண்டராமன் <ekam...@gmail.com>:
வைதிக சமயம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டபின்னும் வேததோடு அதன் தொடர்பு குன்றாது உள்ளது. அதற்குக் காரணமான அடிப்படை என்ன என்பதில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன். இருப்பினும் தங்கள் கேள்விக்கு இயன்ற வரை பதில் கூறுவேன்.
ஆதி வேதத்தைப் பொறுத்தவரை அதில் வர்ண வேறுபாடுகள் இல்லை. இல்லை. இல்லை. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் நான்கு வர்ணங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. அது பிற்காலச் சேர்க்கை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நிறுவி உள்ளனர்.
ரிக் வேதத்தில் ப்ரஹ்ம என்ற சொல் பிரார்த்தனை என்ற பொருளில் தான் வருகிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மண என்றும் ப்ராஹ்மண என்றும் கூறப்பட்டுள்ளார். இதில் ஜாதி வர்ணம் பற்றிய பிரச்சினையே வரவில்லை. க்ஷத்ர என்ற சொல் வலிமை என்ற பொருளில் தான் வருகிறது. க்ஷத்ரியர் என்ற குழுவை அங்கே காண முடியவில்லை. ஸந்தனு என்ற அரசன் வேள்வி செய்ததாகவும் அவனுடைய சகோதரன் தேவாபி என்பவன் தலைமைப் புரோகிதராக இருந்து அதை நடத்தி வைத்ததாகவும் பத்தாவது மண்டலத்தில் ஒரு குறிப்பு வருகிறது. எனவே பத்தாவது மண்டலக் காலத்தில் கூட வர்ணப் பிரிவினை  முழுமை பெறவில்லை என்பது தெரிகிறது. 
 காரைக்கால் அம்மையார் இறைவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்திரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருப்பதை மறவாமல் குறிப்பிடுகிறார் அம்மையார்.

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

கில்லேன மாஎன்றான் கீழ்.        (தி-8)

On Monday, 19 May 2014 14:35:59 UTC+5:30, தேமொழி wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
May 23, 2014, 7:40:31 AM5/23/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு கோதண்டராமன் அவர்களே

தங்கள் கருத்து

//ஆதி வேதத்தைப் பொறுத்தவரை அதில் வர்ண வேறுபாடுகள் இல்லை. இல்லை. இல்லை. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் நான்கு வர்ணங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. அது பிற்காலச் சேர்க்கை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நிறுவி உள்ளனர். ??

இங்கு தாங்கள் ஆதி வேதம் என்று குறிப்பிடுவது இருக்கு வேதம் என்று நினைக்கின்றேன். மேலும் அதே வேதத்தில் 10 வது மண்டலத்தில் தாங்கள் குறிப்பிடுவது புருஷ சுக்தம் என்றும் நினைக்கின்றேன்

புருஷ சுக்தத்தில் வர்ண தர்னன் இல்லை என்றே யானும் கருதுகின்றேன். ஆயினும் இது ஓர் இடைச் செருகலா என்று தெரியவில்லை, இருக்க்லாம். ஆனால் இந்த சுக்தம் சுமேருத் தமிழ்  sei-r ma-al , Enlil  போன்ற தெய்வங்களோடு ஒத்து வருகின்றது, சுக்த புருஷன் சுமேரியத் திருமாலே என்று   தெரிகின்றது.

தங்கள் சிந்தனைக்கு கீழே ஓர் சிறிய குறிப்பு

உலகன்

>>>

Om/ Sahasra-sirsa purusah/ sahasraaksah sahasrapaat/ sa bhuumin visvato urtvaa/ atyatisthad dasaangulam//

ஓம் சஹஸ்ர-சீர்ச புருஷ:/ சஹஸ்ராக்ச: சஹஸ்ரபாத்/ சா பூமின் விஸ்வதோ ஊர்த்வா/  அதியஸ்திதட் தசாங்குலம்//

The Purusa (or the Primeval Being) has a thousand heads, a thousand eyes and a thousand feet. He has enveloped this world from all sides and has (even) transcended it by ten angulas or inches.

The recovered Tamil Base is:

Om sar-gesra  siir-sa burusa(g) sar-gesra ig-si sar-gesra paat/ saa buumi-ne ba-es-ba-too uurttuva-a/ ati-astitatu tasa- aGkulam 

ஓம் சர்கெஸ்ர சீர்-சா(ன்) புரு-சா(ன்) / சர்-கெஸ்ர இக்-சிய சர்-கெஸ்ர பாத/ சா(ன்) பூமினே பிஸ்-பதோ ஊர்த்துவ-அது/ அதி அஸ்தித தச அங்குலம் .

The Meaning is :

Om. The Purusha is of thousands of heads , eyes and feet. It is He who has brought forth the whole world above into open Himself remaining ten inhes above always.

The Sumnerian Origins:

This is clearly a cosmological insight that first emerged among the Sumerians and in relation to their understanding of En-Lil also known as Se-ir-ma-al, the Tirumaal (VishNu) of the Tamils . This  becomes quite clear  if  we look at the following lines, the full text of which is available at :

http://arutkural.tripod.com/sumstudies/tirumaldrav.html

>>>>>>>>>> 

The following lines are enormously important in connection with tracing the genesis of BEING as Vishnu (Ta, viNNavan)
 
113. mu-ul-lil me-ri-mu-ta me-ri sa-a nu-ma-al

Enlil, a foot equal to your foot does not exist

( Ak. be-li-ku it-ti se-pe-ia sa is-sa-an-nu-na ul i-ba-as-si )

Ta. moo uLLil mitimoottu miti caa caana naa maal

193. a) (d) mu-ul-lil am! zi-ga an-na nam-us

Enlil is the rising Wild Ox, he reached up the sky

Ta. moo uLLil amaa! ciika vaannee   nam u(ra)cu

    b) (d) mu-ul-lil zi-ga-ni an-ne nam-us

Enlil, the Wild Ox , his rising reached up to the sky

Ta. moo uLLil ciikanee vaannee nam u(ra)cu

199 a) umun su asa-ni an-e nu-il-e

The Lord , his unique hand the sky cannot bear

Ta. oorman(an) cuur acaanee vaannee naa iyalee

Ak. sa be-lu t-ri-is qa-ti-su samu-u ul ina-as-su-u

The Lord , stretching of his hand the sky cannot bear.

    b) e-lum-e su-ni tab-ba-bi an-ne nam-us

The Dignitary , the grasp of his hands reached up to the sky

Ta. vizummee cuurni tappapi vaanee nam u(ra)cu

200 a) (d) mu-ul-lil me-ri asa-ni ki nu-il-e

Enlil , his unique foot ( var. planted foot) the earth cannot bear

Ak. ti-ri-is se-pe-su KI-tim ul ina-as-si

Enlil , the stretching (var putting ) of his foot the earth cannot bear 
 
    b) (d) mu-ul-lil-le me-ri gub-ba-bi ki-e nam-us

Enlil, the treading of his foot abutted the earth

>>>>>>>>> 

We can see here and without requiring great elucidations that Enlil is being metaphorically understood as a person (or ox) who reaches the limits of the sky and whose head feet and hands the cosmos as a whole cannot bear. This means that Enlil is the cosmos as well as  the one ABOVE it paralleling here Purusha who stands permeating the whole cosmos with thousands of heads faces and feet but who remains nevertheless 10 inches ( or one inch : Su dis: one, dis> tas?)

The main point is that while Enlil /Purusha remains present as the cosmos He is not exhausted by it, He remains ABOVE and hence as an independent  and SURPLUS reality unaffected by what transpires in the cosmos - He will be there indestructible even if the whole cosmos is withdrawn.

The Elements of Hermeneutic Science

Now is this cosmological understanding a mere imagination,  a fiction, a conceptual construction by way of picturing the cosmos that pleases one self? Or is it simply the projection of an aberrant mind where the social understanding of a person (or bull) is projected onto the Cosmos by way of Adhyasa or Arobitam of Sankara, seeing a rope as a snake etc?

Certainly not  but a hermeneutic understanding of cosmos where the presence of INTELLIGENCE is sought to be accommodated without reducing it to an epi-phenomena of physical processes as the ancient Lokayatas did and the present largely Western naturalists do.

Now once you note the presence of intelligence at the phenomenal level, how can we UNDERSTAND this fact without reduction to physical process?

Here emerges the Hermeneutic dimensions of the ancient SumeroTamils and its presence even in  PS.

Hermeneutic Sciences  begin with  taking everything SEEN as TEXTS with DUALITY of Structure - the Surface Structure(SS) and Deep Structure(DS) and through a process of interpretive movements of the mind or anumana that I call ontopretive movements,  reaching  the DS that accounts for features observed in the SS.  The presence of intelligence in the world requires Enlil/ Purusha in the DS or the Deepest DS  that is also intelligent but in cosmic sense and which is communicated by seeing Him as present everywhere with thousands of heads feet eyes and so forth

This is the initial and one of the most profound metaphysical insights of the ancient SumeroTamils that has sustained their culture to this day.

Now we should note here that while the later day Buddhist’s distinctions between Vyavakarika and Paramaarttika world can be accommodated within this TEXT understanding of the ancient Tamils, but NOT the dismissal of the Paramaarttika by some Buddhists and the  Viyavakaarika by the Advaitins. Both are REAL but only one is SS and other is DS and that there is no way of accessing the DS without the SS.

2014-05-23 15:16 GMT+08:00 கோதண்டராமன் <ekam...@gmail.com>:
வைதிக சமயம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டபின்னும் வேததோடு அதன் தொடர்பு குன்றாது உள்ளது. அதற்குக் காரணமான அடிப்படை என்ன என்பதில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன். இருப்பினும் தங்கள் கேள்விக்கு இயன்ற வரை பதில் கூறுவேன்.
ஆதி வேதத்தைப் பொறுத்தவரை அதில் வர்ண வேறுபாடுகள் இல்லை. இல்லை. இல்லை. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் நான்கு வர்ணங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. அது பிற்காலச் சேர்க்கை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நிறுவி உள்ளனர்.
ரிக் வேதத்தில் ப்ரஹ்ம என்ற சொல் பிரார்த்தனை என்ற பொருளில் தான் வருகிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மண என்றும் ப்ராஹ்மண என்றும் கூறப்பட்டுள்ளார். இதில் ஜாதி வர்ணம் பற்றிய பிரச்சினையே வரவில்லை. க்ஷத்ர என்ற சொல் வலிமை என்ற பொருளில் தான் வருகிறது. க்ஷத்ரியர் என்ற குழுவை அங்கே காண முடியவில்லை. ஸந்தனு என்ற அரசன் வேள்வி செய்ததாகவும் அவனுடைய சகோதரன் தேவாபி என்பவன் தலைமைப் புரோகிதராக இருந்து அதை நடத்தி வைத்ததாகவும் பத்தாவது மண்டலத்தில் ஒரு குறிப்பு வருகிறது. எனவே பத்தாவது மண்டலக் காலத்தில் கூட வர்ணப் பிரிவினை  முழுமை பெறவில்லை என்பது தெரிகிறது. 
 காரைக்கால் அம்மையார் இறைவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்திரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருப்பதை மறவாமல் குறிப்பிடுகிறார் அம்மையார்.

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

கில்லேன மாஎன்றான் கீழ்.        (தி-8)

On Monday, 19 May 2014 14:35:59 UTC+5:30, தேமொழி wrote:

--

Tthamizth Tthenee

unread,
May 23, 2014, 9:17:06 AM5/23/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

திரு கோதண்டராமன் அவர்களுக்கு நல் வரவு

நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாக

வராஹம் எழுப்பும் சப்தம் சாமவேதமாகவும்
தந்தம் யூபஸ்தம்பமாகவும்
நாவே வேள்வித் தீயாகவும்
ரோமங்கள் தர்பைப் புல்லாகவும்
உமிழ் நீரானது நெய்யாகவும்
மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாகவும்
பிராணன் அந்தராத்மாவாகவும்
இதயம் தக்‌ஷணையாகவும்
தலை பிரும்மனாகவும்
குடல் உத்காதாவாகவும்
குறி ஹோதாவாகவும்
சரீரம் யக்ய சாலையாகவும்
நடை ஹவ்யகவ்யம் என்றும்
ஸ்மிருதிகளும் புராணங்களும்  செவிகளாகவும்
சூரிய சந்திரர்கள் இரு கண்களாகவும்
நாகராஜன் வாலாகவும்
யாகங்கள் கோரைப் பற்களாகவும்
அனைத்து மந்திரங்களும் தேக அவயவங்களாகவும்
கட்டை விரல் அளவுள்ள வராக மூர்த்தியாக வடிவெடுத்து
பிரும்மாண்ட வளர்ச்சி பெற்று  சமுத்திரத்தில் மூழ்கி
பூமாதேவியை மீட்டெடுத்த  ஶ்ரீமன் நாராயணன்
ஶ்ரீ வராக ஷேத்திரமாகிய ஶ்ரீமுஷ்ணத்தில் ஓய்வெடுத்தார்

என்று வாயு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
May 23, 2014, 2:05:36 PM5/23/14
to vallamai, mint...@googlegroups.com
வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.

தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.

ஜைன பௌத்த சம்பந்தமே முக்கியமாக உள்ள ஐம்பெரும் காப்பியங்களில்கூட, பல இடங்களில் வேதத்தை, வைதிக தர்மத்தை ரொம்பவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் எங்கே பார்த்தாலும் வர்ணாச்ரம தர்மங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறது;'அந்தணர் ஒம்பலை' விசேஷித்துச் சொல்லியிருக்கிறது; வேத சப்தம், யக்ஞம் ( ஆரண ஒதையும் செந்தீ வேட்டலும் ) இவற்றைக் கொண்டாடியிருக்கிறது என்று புலவர்கள் சொல்லுகிறார்கள். வைச்யனான கோவலன் அநேக வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ணினதற்கு அதிலே குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.

நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.

'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது.

மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ¢நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன. எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்கூடாதது'என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள்.

ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!

இப்போது எந்த மதக் காரியமானாலும் 'சடங்கு' என்றுதானே தமிழில் சொல்கிறோம்?இது நான் இனி மேலே சொல்லப் போகும் "ஷடகங்கள்" என்கிற வேதத்தின் ஆறு அங்கங்களை வைத்தே ஏற்பட்ட பேர்தான்.

பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம் இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதென்று இப்போது தான் தெரிந்தது. வேத ஸ்வரங்களைத் தூக்கியும், தாழ்த்தியும், ஸமனாகவும், ஸ்வரபேதமில்லாமலும் சொல்வதை உதாத்ம், அநுதாத்தம், ஸ்வரிதம், பிரசயம் என்று சொல்கிறார்கள். அந்த சூட்சுமங்களை எல்லாம்கூடத் தெரிந்து கொண்டு தொல்காப்பியத்தில் சொல்லியிருக்கிறது.

தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, "இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றி இந்த தொல்காப்பியத்தில் நான் சொல்லப் போவதில்லை. இங்கே சாதாரண மனிதர்களின் காதுக்கு எட்டும் வைகரி சப்தங்களை மட்டுந்தான் விவரிக்கப் போகிறேன். மற்றது, உள் விஷயம், மந்திராக்ஷரம், 'அந்தணர் மறைத்தே'என்று எழுத்ததிகாரத்தில் (102ம் சூத்திரம்) 

நன்றி: காஞ்சி பரமாச்சாரியார்

K. Loganathan

unread,
May 23, 2014, 10:31:33 PM5/23/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 செல்வன்

இதுவெல்லாம் சரிதான். ஆனால் இந்த வேதங்களும் வேதமொழியும் சுமேருத் தமிழ் பண்பாட்டிலிருந்து கிளைத்த்வை என்றும் வேதமொழியே  முதற்சங்கத்  தமிழாகியய சுமேருத் தமிழின் திரிபு என்றும் இந்த காஞ்சி பரமாச்சாரியார் சொல்லவில்லையே?

அது அவருக்குத் தெரியவில்லை போலும்.

உலகன்

K. Loganathan

unread,
May 24, 2014, 4:20:25 AM5/24/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராமன் அவர்களே

இன்னும் சில கேள்விகள் கேட்பதற்கு மன்னிக்கவும். நான் வேதங்களை முறைப்படிக் கற்றவன் அல்ல. ஆனால பல ஆண்டுகளாக வேண்டிய அளவிற்குக் கற்று சுமேருத் தமிழிற்கும் வேதங்கட்குமிடையே ஓர் வரலாற்றுத் தொடர்பு இருப்பதைக் கண்டுள்ளேன்

இத்தொடர்பு தாங்கள் கூறுவதுபோல ஓர் பொதுவான தொடர்பு அல்ல,

//பரம்பொருள் பல தோற்றம் அளிப்பதும், எங்கும் பரவி இருப்பதும் எல்லாக் காலத்திலும் எல்லா சமயக்காரர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. இதில் சுமேரிய மக்களும் அடக்கம். 
//

இங்கு தாங்கள் கூறுவது  C.G Jung   கூறும்  Universal Archetype  போன்றது. காட்டாக அமமை வழிபாடு. ஆனால் ஆதி வேதம் என்று தாங்கள் கருதும் இருக்குவேதம் முதல் 9 மண்டலங்களின் மொழியும்  சுமேருத் தமிழோடு நெருங்கியத் தொடர்பு கொண்டிருக்கின்றது.

 காட்டாக கீழே இருக்கு வேதத்தின் முதல் சூத்திரம் மொழியும் கருத்தும்

 இப்படிப்பட்ட மொழித் தொடர்புகள் கருத்துத் தொடர்புகள் எப்படி வந்துள்ளது? தற்செயலா  இருவேறு மக்கள இருவேறு இடங்களில் இருந்துகொண்டு இவ்வாறு பாடினார்களா?

உலகன்

முழு ஆய்வு கீழ் வரும் சுட்டியில்:

Hymn 1:1

Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam

We worship the adorable God, the high priest of cosmic activities, the divine , the one who works through the eternal laws, and who feeds and sustains all that is divine and luminous.

அக்நிம் ஈலே புரோஹிதம் யாஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்/ ஹோதாரம் ரத்னதாதமம்

(வட எழுத்துக்கள் முற்றிலும் தமிழில் இயலாத நிலையில் தமிழில் தந்துள்ளது பல குறைபாடுகள் உள்ள ஓர் எழுத்துப் பெயர்ப்பே. இந்த குறைகளை மனதில் கொண்டே இந்த ஆய்வு செல்கின்றது)

தரப்பட்டுள்ள பொருள்கள்

agnim: the foremost leader, makes everything part of himself, drying agent; (Day) : Supreme Lord who is venerable adorable , is available everywhere etc. Also master of tejas, brilliance etc.; (aro)  fiery light , mystic fire; God-will

iile : to worship,  to adore, to love, to embrace, to praise , and even to desire and yearn for

சுமேருத் தமிழில் வரும் ஒத்த சொற்கள்

உக்நிம்:  போர் வீரர்கள் (கொல்பவர்கள், அழிப்பவர்கள்)

தமிழ்: உக்கு, அக்கு: கொல்தல் அழித்தல். உக்ரம்: கொடூரம்

Sirbiyam

99. sir-ku-ga-ke-es i-ug-ge-de-es ( At( the sound of ) my sacred song they are ready to die

* Ta. ciir kokakee-isu ii ukkidu-isu ( ")

சீர் கோகக்கேயிசு ஈ உக்கிடுயிசு

46. ugnim-bi ni-bi-a ma-ra- ab-si-il-e ( It disbands its regiments before you of its own accord)

* Ta. ukkunam-bi niibiya  maa(nRa) ab  cillee  ( The band of warriors disband themselves on your behave on their own accord)

உக்நிம்பி நீபிய மா(ன்)ற அவ் சில்லே

Sk iilee தமிழ்: எல், எல்லு

‘எல்லே இலக்கம்’ என்பார் தொல்காப்பியர். இச்சொல் அக்ககாடிய மொழியில் ‘எல்லு”(ellu)  என்றும் சுமேரிய ‘கோ’ (<சூ) என்ற சொல்லிற்கு ஈடாக கொடுக்கப்படும் ஓர் சொல்லாகும். ஆனால் இதுவும் சுமேரிய ‘எரி, ரி” (நெருப்பு) என்ற சொல்லின் திரிபு என்றேத் தெரிகின்றது. காண்க

சூருப்பாக்கின் நெறி(நரி) (கி.மு 3000)

1.    [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)

 எரிய  சூத்திர எரிய

uu eriya uu cuuttira eriya

இங்கு ரி> எரி என்றாகி பின் ‘எல்லு’ என்றாகி இருக்க வேண்டும். இங்கு ‘சூத்திர’ என்பது ‘தொலைவு’ ‘தூரம்’ என்றெல்லாம் பொருள் படும். ‘தொல்’ என்றும் பொருந்தி வரும்.

ஆக சுமேருவின் ‘உக்நிம் எல்லே” அதாவது கொல்கின்ற அக்குகின்ற நெருப்பு என்ற பொருள் உடையதாக விளங்க அதன் திரிபே ‘அக்நிம் ஈலே” என்று தெரிகின்றது. பிற்காலத்தில் ‘எல்லு’ மறைய ‘அக்நிம்’ என்ற சொல்லே அக்நி என்றாகி தமிழில் அங்கி என்றும் ஆகி இருக்கலாம்.

2014-05-24 15:42 GMT+08:00 கோதண்டராமன் <ekam...@gmail.com>:
//இங்கு தாங்கள் ஆதி வேதம் என்று குறிப்பிடுவது இருக்கு வேதம் என்று நினைக்கின்றேன். மேலும் அதே வேதத்தில் 10 வது மண்டலத்தில் தாங்கள் குறிப்பிடுவது புருஷ சுக்தம் என்றும் நினைக்கின்றேன்

புருஷ சுக்தத்தில் வர்ண தர்னன் இல்லை என்றே யானும் கருதுகின்றேன். ஆயினும் இது ஓர் இடைச் செருகலா என்று தெரியவில்லை, இருக்க்லாம். ஆனால் இந்த சுக்தம் சுமேருத் தமிழ்  sei-r ma-al , Enlil  போன்ற தெய்வங்களோடு ஒத்து வருகின்றது, சுக்த புருஷன் சுமேரியத் திருமாலே என்று   தெரிகின்றது.//

ரிக் வேதத்தின் 2 முதல் 9வரையிலான மண்டலங்கள் பல வேறு காலங்களில் தோன்றியவை தான் என்றாலும் அவற்றினூடே ஒரு கருத்து ஒற்றுமை காணப்படுகிறது. முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் எல்லாவகையிலும் மாறுபட்டுள்ளன. என்னென்ன வகையில் என்பதை விரிவாகப் பின்னர் ஒரு முறை கூறுவேன். 
தற்போது ஆதி வேதம் என நான் கருதுவது ரிக் வேதத்தின் 2 முதல் 9 வரையிலான மண்டலங்களை மட்டுமே. 

புருஷ சூக்தம் திருமால் வழிபாட்டில் இன்று ஒரு முக்கியமான தோத்திரமாக உள்ளது. அதில் எங்கேனும் விஷ்ணு, நாராயணன் என்ற திருமாலின் பெயர்கள் வருகின்றனவா?
அதுபோல விஷ்ணு சூக்தம் என்பதில் நாராயணன் என்ற பெயர் காணப்படுவதில்லை. 
நாராயண சூகத்ததில் விஷ்ணு என்ற பெயர் காணப்படுவதில்லை. 
பிற்காலத்தில் இவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டவை என்று நான் கருதுகிறேன். 

பரம்பொருள் பல தோற்றம் அளிப்பதும், எங்கும் பரவி இருப்பதும் எல்லாக் காலத்திலும் எல்லா சமயக்காரர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. இதில் சுமேரிய மக்களும் அடக்கம். 
கோதண்டராமன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 24, 2014, 6:16:20 AM5/24/14
to vallamai

19 மே, 2014 2:05 பிற்பகல் அன்று, ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com> எழுதியது:

அன்புள்ள வேந்தன் அரசு அவர்களே

வேத முதல்வன் என்ப
 
என்று அவர் காட்டிய சிந்தனை வடிவம் எல்லாம் வேதத்திற்கே முந்தியன என்று தானே சொல்கிறார்?(

.அதனால் சிந்துத்தமிழ் சிந்தனைகளே தேவநாகரி எனும் (தமிழ் திரிந்த மொழி)வரிவடிவ்ங்களில் வலம் வருகிறது.இன்னும் பாரதம் பாடிய நமது பெருந்தேவன் தான் அந்த கிருஷ்ண த்வைபாயன்.அவனை நாம் வியாழ முனிவன் என்றும் அழைப்போம்.(ழ ஒலிப்பு ஸ ஆவது மரபு)அறிவு அகன்றவன் (அகற்றியன்)அகத்தியன் ஆனான்.நம் கபிலன் அந்த கபிலனாய் எத்தனை சிந்தனை வடிவங்களை (சாங்க்யா..)தந்திருக்கிறான்.
நவில்தல் என்றால் உரைத்தல்.கவில்தல் என்றால் அழகுபட ..நயம்பட உரைத்தல்.அவர்களே கவிகள் ஆயினர்.கவிலனே இங்கு கபிலன்.(கவி என்றால் குரங்குக்கு ஏன் அந்த பேர் வைத்தார்கள் என்று கேட்பீர்களே?
கவை என்றால் மரக்கிளை.அதில் வாழுவதால் கவையினமாகி கவி இனம் ஆகியிருக்கலாம்)மேலும் தமிழ் திரிந்த அந்த சங்கத மொழியில் கபிலம் என்றால் பழுப்பு நிறம் என்று ஒரு பொருள் வருகிறது. வெள்ளை நிறத்தவர்கள் (அறிவு ஜீவித்தமிழர்கள் அவர்களை ஆரியர்கள் என்றும் அழைக்கலாம்)
வெயிலில் கறுத்தவர்களை த்ராவிட என்று அழைக்கிறார்கள்.பழுப்பு நிறத்தவர்கள் கபிலர்கள் ஆனார்கள்.இவர்கள் படைக்குலம் ஆக இருக்கலாம்.
த்ராவிட என்பது திரைவிடங்களில் (அலைவீசும் கடற்கரை வாழ்பவர்கள் அல்லது திரைகடல் ஏறி திரைவியஙகள் தேடி) வாழ்பவர்களைக்குறிக்கும்.
தமிழர்கள் மூவேந்தர்களாக இருந்தது ஆரிய திராவிடர் ஆனதற்கு இடையே 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்று இடைவெளி இருக்கிறது.கிரேக்க நாகரிகம் அத்தீனியர்கள் (ஏதென்ஸ் நகரத்தவர்) மற்றும் ஸ்பார்ட்டா மக்கள் என பிரிவு பட்டது போல் தான் இதுவும்.இரானில் அசுர சுர என இரு பிரிவினர்
(பங்காளிகள்)சேர்ந்தும் வாழ்ந்தார்கள்.அப்புறம் ஆவேசமாக சண்டையிட்டும் வாழந்தார்கள்.அவர்களின் அவெஸ்தா மொழி ஓசை வடிவங்களே இங்கு பாரசீக இனங்களாய் வந்த ஆரியர்களின் ரிக் வேதம் ஆயிற்று.எனவே இந்தியா என்பது தமிழ் இந்தியா தான். 

சிந்துத்தமிழர்கள் கடவழி சென்று எகிப்து கிரேக்கம் சுமேரிய அசீரிய லத்தீன் ரோம மொழிகளோடு உறவு கொண்டார்கள்.இந்த மேலை நாட்டு ஒலிக்குறிப்புகளின் கலவைக்குள் மூடிக்கிடப்பதே தேவ நாகரிகம் எனும் சங்கதம் 
ஆகும்.தேவ நாகரிக என்ற சொல்லே தூய தமிழ்ச்சொல் ஆகும்.எனவே சமஸ்கிருதம் வட தமிழ் ஆகும்.

சரி அதையெல்லாம் விடுங்கள்.வேய் என்றால் மூங்கில் அல்லது புல்லாங்குழல்.தமிழர்களின் பண் இந்த வேய்ங்குழல் வழியே வரும் இசை வடிவங்கள்.எவையே இங்கு "வேய்தம்" ஆகி வேதம் ஆனது.

உங்க வாதம் ஏற்கும்படி இல்லை. வேய் என்பதற்கு வடசொல் வேணு.வேணுவை விட்டுட்டு வேய், வெதிர் என்ற சொற்களை நாட என்ன தேவை.
 
வேந்தன் அரசு

unread,
May 24, 2014, 6:32:20 AM5/24/14
to vallamai, மின்தமிழ்

23 மே, 2014 2:49 முற்பகல் அன்று, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அனுமனைப் பற்றிச் சொல்லும்போது இவன் மூன்று வேதங்களிலும் வல்லவன் என்கிறார். வால்மீகிக்குப் பிந்தியவரா வியாசர்?

ஆசியாவில் இருந்து ஆரியர் வருகை உண்மை என்றால் பாஞ்சாலத்தில் நடந்த பாரதகதை அயோத்தியில் நடந்த ராமர்கதைக்கு முந்தியதாக இருக்கலாம். 

வேந்தன் அரசு

unread,
May 24, 2014, 6:40:19 AM5/24/14
to vallamai, mint...@googlegroups.com

23 மே, 2014 2:05 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.

பிற ஊர்களில் கோழி கூவி துயில் எழ மதுரை மக்கள் மட்டும் மறை முழக்கத்தால் எழுகிறார்கள் என்பதாலேயே வேத மரபு புதிதாக வந்துள்ளது என்றும் அறியலாமே,

செல்வன்

unread,
May 24, 2014, 6:54:14 PM5/24/14
to vallamai, mint...@googlegroups.com

2014-05-24 5:40 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பிற ஊர்களில் கோழி கூவி துயில் எழ மதுரை மக்கள் மட்டும் மறை முழக்கத்தால் எழுகிறார்கள் என்பதாலேயே வேத மரபு புதிதாக வந்துள்ளது என்றும் அறியலாமே,

கல்தோன்றி மந்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்பது தான் முதுமொழியே ஒழிய‌
"கல்தோன்றி மண்தோன்றா காலத்து வேள்விபுகையோடும், மறையொடும் முன் தோன்றி மூத்த குடி" என்பது அல்ல முதுமொழி

ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ்சமூகத்தில் வேள்வியும், வேதமும் பரவி இருக்கவேண்டும். வேதம் தமிழ்நாட்டில் தோன்றியது கிடையாது. வடக்கே இருந்து தான் வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு தெய்வங்களான சிவனையும், திருமாலையும், முருகனையும் வடவர் சுவிகாரம் எடுத்துகொண்டார்கள். வடவர்களின் வேள்வியையும், மறைநூலையும், சடங்குகளையும் தமிழர்கள் சுவிகாரம் எடுத்துகொண்டார்கள். இந்து மதம் பிறக்கிறது.

அப்படி மறையும், வேள்வியும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன் தமிழர்களுக்கு புனித நூல் எனும் கான்சபெடே கிடையாது.  அதனால் தான் வேதங்களை குறிக்கும் தமிழ்சொல்கள் அனைத்தும் மறை, எழுதாகிளவி என வடமொழி வேதங்களை குறிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

தொல்காப்பியரே இதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

முதலில் கல்யாணம் என்ற கான்சப்டே தமிழ்நாட்டில் கிடையாது. லிவிங் டுகெதர் தான். அதில் பொய்யும், ஏமாற்றுதலும் தோன்றியபின் ஐயர்கள் சடங்குகளை (திருமணம்) ஏற்படுத்தினர்.

இதில் வரும் ஐயர் என்பது பார்ப்பனர் அல்லர், தலைவர் எனலாம். ஆனால் முதல் மூன்று வருணங்களில் மட்டும் பரவிய திருமனநெறி பின்பு நாலாவது வருணத்துக்கும் பரவியதை தொல்கபபியம் தெளிவாக குறிப்பிடுகிறது

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.”

ஆக தமிழர்க்கு திருமனமுறையை உன்டாக்கியதே பார்ப்பனர்தான். இது நான் கூறுவது அல்ல. பெரியாரே கூறுகிறார்.

"...இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது..." (பெரியார்)

ஆக இது அத்தனையும் நிகழ்ந்து தமிழ் கடவுளரால் வடவர் நாகரிகம் தழைத்து, வடவர் சடங்குகளால் தமிழினமும் தழைத்தது. தமிழினத்தின் முதல் திருமணம் வேத மந்திரங்கள் முழங்க, மாமுது பார்ப்பன் வழிகாட்டிட சாஸ்திர, சம்பிரதாயநெறிப்படி நடந்த வைதீக திருமணமாக தான் இருந்திருக்கும்.

இந்துமதம் இப்படி இந்தியா முழுவதையும் நெறிப்படுத்தியபின்னர் சமணமும், பவுத்தமும் வடக்கே தோன்றுகின்றன. அவை தமிழ்நாட்டுக்கு வருகின்றன. ஆனால் அவர்கள் நூலை தமிழர்கள் மறைநூல் என அழைக்கவில்லை. மறை என்பது வடமொழி வேதஙக்ளையே குறிக்கும். அதைதவிர வேறு எம்மதநூலுக்கும் அப்பெர்யர் பொருந்தாது.

அதனால் சமன நூல்களை நான்மறை என தமிழர்கள் அழைத்தார்கள் என கூறுவது ஆதாரம் அற்ற கூற்று. நான்மறை என்பது ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களையே குறிக்கும். இம்மதங்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்துமதத்துக்கு மிக, மிக பிந்தியவை

K. Loganathan

unread,
May 24, 2014, 8:16:31 PM5/24/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 செல்வன் 

 தாங்கள் வேத்ங்களைப்  பற்றி தமிழர்களின் திருமண சடங்குகள் பற்றி கூறுவதெல்லாம் ஆதாரமற்ற கற்பனைகள். சுமேரியத் தொடர்புகளை அறியாதிருப்பதால் வரும் வரலாற்றுப் பிழைகள்

தமிழர்களின் 'எழுதாக் கிளவி" யாண்டும் எழுதவே முடியாத மறை நூல், வேதங்கள் அல்ல

 எழுத்தைக் கண்டவர்கள் தாம் 'எழுதாம் மறை' பற்ரி பேச முடியும்

இதனைப் பற்றி எனது 'சிவஞான கற்பம்' எனும் நூலில் விளக்கி உள்ளேன். இதுதான் தமிழர்களின் மறை. எல்லா மறைகளின் மூலம்

காண்க:;

சூத்திரம் 8-2

தூரநூல் தொகுப்பே தோன்றாநல் வேதம்
ஆரசிந்திப் பாரனைவர்க்கும் பொது

: அனைவர் அகத்திலேயும் அழியாது நின்று சிவஞானத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும் இதுவே மெய்யான எழுதாக் கிளவியும் , பண்டைய மறையும்  யாண்டும் அழியாது இலங்குகின்ற ஞால் (நால்) வேதமுமாகும். இங்கு ‘ஞால்' எனபது சிவஞானம் சுடர்கின்ற என்ற பொருளது, திரிந்து ‘நால்' என்றும் விளங்குகின்றது.  மேலும் ‘வேதம்' என்பதும் தூய தமிழ் சொல்லாகும். சுமேருத் தமிழ் ‘சித்' என்பது ‘வித்' ஆகி, வித்தையாகிய ஞானத்தைக் கொண்டது ‘வேதம்' என்றாயிற்று. சிவஞானந்தான் ஆணவ வல்லிருளைப் போக்க வல்லது,  யாது இந்த சிவஞானத்தை விரிக்கின்றதோ அதுவே ‘வேதம்' ஆயிற்று. இத்தகைய வேதம் அனைவருக்கும் பொதுவாக அனைவர் அகத்தேயும் அகலாது நிற்கின்றது

Sutra 8-2

Tuuranuul tokuppee toonRaanal veetam
Aaracintipaa ranaivarkkum potu.

A collection of such Distant Texts is in fact  the true  Vedas- the scriptures that do not allow being written down in any language. The original ‘njaal veetam' has been distorted into “naal veetam' which can also mean the Four Vedas where as a matter of fact the original meaning was' That which radiates the Njaanam” where the Njaanam is the Civanjaanam-  that which dispels the aaNava Malam. Such a Veetam exists as available to all and in their mind itself.

இந்த எழுதாமறை. ஈறில் உரை என்பதால், மொழியாக்கப்பட்டு  வடமொழியிலும் தமிழிலும் உலகத்துப் பிற மொழிகளிலும் இலங்கும் மறைநூற்கள் எல்லாம் இந்த மூல நூலின் பெயர்ப்புக்களாம் என்றது. ஆகவே அவை அனைத்தும் அழிந்து போகவல்ல இந்த யாண்டும் அழியாத மூல எழுதா மறையின் , தூரநூறகளின் ஓர் சில உணமைகளை தெரிப்பவையே யாகும். இவை முற்றாக ஞானத்தை உணர்த்தாது என்பதின் இவற்றை கடந்து செல்லவே தான் ஆன்மா இந்த தூர்நூற்களில் அழுந்தி சிவஞானம் மகிழும் என்றவாறு.

உலகன்

Nagarajan Vadivel

unread,
May 24, 2014, 9:33:02 PM5/24/14
to vallamai

2014-05-25 4:23 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ

​சாத்திரங்கள் தொகுக்கப்பட்டதன் நோக்கம் அதுவன்று.  மறை என்று மறைக்கப்பட்டதன் நோக்கம் அதன் வடிவும் வளமும் வாய்மொழி வழக்கில் வழங்கும்போது பரவும்போது சிதைவடையாமல் இருக்கவே

சூத்திரர்கள் என்பார் சூஸ்திரர்கள் ​பொறிஞர்கள் செவை செய்பவர்கள் குறிப்பாக வேளளர்கள்.   

தமிழகத்தில் பழங்குடிகள் அமைப்பு முறையில் இருந்தது இரண்டு பிரிவுகள் அரசனும் குடிகளும் மட்டுமே

வசியர்கள் இல்லாத குறையை நாகர்களும்யவணர்களும் சோனகர்களும் அந்தணர்கள் இல்லாத குறையை வடபுலத்தில் இருந்து வந்த வேதியர்களும் பாசன வேளாண்மைக்கு வேளாளர்களும் தமிழகத்துக்கு வந்தனர் என்பது ஒரு கோணம்

சவடால்

செல்வன்

unread,
May 25, 2014, 12:56:35 PM5/25/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

2014-05-24 19:16 GMT-05:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
தாங்கள் வேத்ங்களைப்  பற்றி தமிழர்களின் திருமண சடங்குகள் பற்றி கூறுவதெல்லாம் ஆதாரமற்ற கற்பனைகள். சுமேரியத் தொடர்புகளை அறியாதிருப்பதால் வரும் வரலாற்றுப் பிழைகள்

தமிழர்களின் 'எழுதாக் கிளவி" யாண்டும் எழுதவே முடியாத மறை நூல், வேதங்கள் அல்ல

 எழுத்தைக் கண்டவர்கள் தாம் 'எழுதாம் மறை' பற்ரி பேச முடியும்

ஐயா

சுமேரியர் தமிழருக்கிடையே தொடர்பு ஆய்வு செய்து முடிவுகள் வெளிவந்தால் மேலும் தகவல் கிடைக்கலாம்.

மற்ரபடி கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும் சுமேரிய மன்னன் -ஹமுராபியின் கொடூரமான சட்டங்கள் தமிழரிடையேயும் வழக்கத்தில் இருந்துள்ளதா?

K. Loganathan

unread,
May 25, 2014, 8:37:37 PM5/25/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 செல்வன்

 அம்முரபி சுமேரியத் தமிழ் மன்னன் அல்ல. சுமேரியத் தமிழை அழித்த ஓர் செமிட்டிய மன்னன். ஆனால் அவன் எழுதிய சட்ட திட்டங்கள் (  The Code of Hammurabi)  சுமேருத் தமிழில் தான். அதற்கு முன்பே சுமேரிய மன்னர்கள இவ்வாறான பல சட்ட திட்டங்களை இயற்றி உள்ளனர்.

 காண்க:

  இப்படிப்ப்ட்ட நெறிகள் தோன்றுவதற்கு மூல காரணமே சூருப்பாக்கு என்ற பெரியவர் எழுதிய உலக்திலேயே மிகத் தொனமையான இலக்கியமான 'நெறி'  (nari)  எனும் நூலாகும்( கி,மு 3000)

இதே பெயர் இருக்கு வேதத்திலும் இருக்கின்றது

அங்கு இளைஞர்கள் எப்படி திருமணம் செய்வது யாரை மணப்பது என்பதை பற்றி எல்லாம்  பல கூறுகின்றார். அக்காலத்தில்  திருமணம் செய்துகொள்ளல் 'தம்.தொகு" என்றே கூறப்படுகின்றது. இங்கு வரும் 'தம்' , என்ற சொல் இன்றும் வழங்கும் 'தம்.பதி" என்ற சொல்லில் வழங்கும் அதே சொல்தான்

'பதி' என்ற சொல்லும்  pate.si"  என்று பயில்கின்றது.

நகர நாகரீகத்தையே கண்ட சுமேருத் தமிழர்கள் திருமணத்தையும் முறைபடுத்தாமல் இருப்பார்களா?

ஆம் தாங்கள் கூறுவது போல ஆய்வுகள் பலகினால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும். தமிழும் வடமொழியும் சுமேருத் தமிழின் இரண்டு தொன்மயான கிளைகள் என்றும் தெரியவரும்

உலகன்

Banukumar Rajendran

unread,
May 26, 2014, 8:34:04 AM5/26/14
to vallamai, mint...@googlegroups.com
2014-05-23 23:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - இதற்கு ஓலைச்சுவடியில் சான்றில்லை. பாடப்பட்டோராகக் குடுமி என்ற பெயரைத் தவிர
ஒலைச்சுவடியில் யாதுக் குறிப்புமில்லை. மற்ற பாடல்களிலும் (6,9,12,15,64) அதே நிலைதான்.

இரா.பானுகுமார்,
சென்னை

அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.

Banukumar Rajendran

unread,
May 26, 2014, 8:40:27 AM5/26/14
to மின்தமிழ், vallamai
2014-05-23 6:10 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2014-05-22 3:10 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

1. சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் நான்மறை என்பதை வைதிக வேதங்கள் என்று பொருள் கொண்டால்,  மூன்று வைதிக வேதங்கள் நான்காக
மாறியக் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டன வென்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது,

2. நான்மறை என்பது வைதிக வேதங்களை குறிக்காது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது

3. நச்சினார்க்கினியர் கூற்றுபடி, தமிழ்நாட்டில்ஏற்கனவேயிருந்த நான்மறைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

வேதங்கள் மூன்றுதான் என இலக்கியங்களில் உள்ளதன் ஆதாரத்தையும் கொடுத்து இருக்கலாம்.

சமண தமிழ் இலக்கியங்களில் சமண நூல்களை நான்மறை என குறிப்பிடும் பாடல்கள் உண்டா?

மறை எனும் சொல்லே வடமொழி வேதங்களை மட்டுமே குறிக்கும் சொல். இந்து மதம் அன்றி வேறு எம்மத நூலுக்கும் மறை எனும் சொல் பொருந்தவே பொருந்தாது. வேதம் அந்தணர்க்கு மட்டுமே ஓதுதற்கு உரியது என கருதபட்டதால் அது "மறை" எனப்பட்டது.

கோதண்டராமர் ஐயா இவ்வாறு எழுதினார். படிக்கவில்லையா?

//மறை எனப்பட்டது அது அந்தணர்க்கு மட்டுமே உரியது என்பதால் அல்ல. அதைப் படித்து நேரடியாகப் பொருள் புரிந்து கொள்ள முடியாது என்பதால்.//

இரா.பானுகுமார்.
சென்னை

தொல்காப்பியர் கூட வேதநூலை "அந்தணர் மறைத்தே" என்கிறார்.

ஆக மறை எனும் தமிழ் சொல் உருவானதே வடமொழி வேதங்களை குறிக்கவே என்பது தெளிவு. ஆக தமிழில் மறை எனும் சொல் பிறந்ததே வடமொழி வேதங்களை குறிக்கவே. இப்படி இருக்கையில் நான்மறை என்பது மற்ற மொழி வேதங்களை குறிப்பிடும் சொல் என்பது எப்படி பொருந்தும்>?

--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

K. Loganathan

unread,
May 26, 2014, 8:46:35 AM5/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராமன் அவர்களே

 மிக்க நன்றி. ஆம் நான் ஓர் ப்திய மொழியியல் கோணத்டிலிருந்து இருக்கிர்தத்தை ஆய்கின்றேன். இது ஐரோப்பியர்கள் முன்மொழியும்  PIE  என்ர மொழியியல் கோட்பாட்டிற்கு வேறானது. ஆயினும் தொல்காப்பிய மொழியலோடு ஒத்டு வருவது.

சுமேருத் தம்ழிற்கும் இருக்கிருததற்கும் உள்ள தொடர்பை 

 நான் உரி மொழிய்யியல் அடிப்படையில் ஆய்கின்றேன். ( Uri Linguistics)  இதன் பொருளாவது: இருக்குவேதக் கிளவிகளி உரித்து அவற்ரின் மூல உருவைக் கண்டால் அந்த மூல உரு சுமேருத் தமிழாக இருக்கும் என்பதுதான்.

காட்டாக 

 இருக்கிருத மூல உரு

Hymn 1:1

Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam

We worship the adorable God, the high priest of cosmic activities, the divine , the one who works through the eternal laws, and who feeds and sustains all that is divine and luminous.

அக்நிம் ஈலே புரோஹிதம் யாஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்/ ஹோதாரம் ரத்னதாதமம்

(வட எழுத்துக்கள் முற்றிலும் தமிழில் இயலாத நிலையில் தமிழில் தந்துள்ளது பல குறைபாடுகள் உள்ள ஓர் எழுத்துப் பெயர்ப்பே. இந்த குறைகளை மனதில் கொண்டே இந்த ஆய்வு செல்கின்றது)

இதன் மூல உரு(  the base structure)

சுமேருத் தமிழ் மூலம்:

உக்நிம் எல்லே புர்-ஊ-கி-தம் எஜென்அஸ்-ய தேவர் (எ)ரித்துபீஜியம்/ ஊதாரம் ரத்தின தாது தர்மம்

இதன் பொருள்

அழிக்கும் கடுந்திறல் உக்னிம் எல்லு எனும் ஊழித் தீ, தொல்லிருளை கிழித்து ஒளி பரப்புவதோடு, யாகத்தீயில் வெளிப்படும் தெய்வமாகவும், உலகில் நெருப்பு தோன்றுதற்கு மூலமாகவும், உணவு தரும் செடிகட்கு ஆதாரமாகவும் மேலும் இரத்தினம் போன்ற அரிய கற்களைத் தருவதாகவும் விளங்குகின்றது.

இங்கு நாம் இரண்டையும் ஆராயும்போது, சில அடிப்படை உண்மைகள் தெளிவாகின்றன,

1.

இந்த சுலோகத்தின் ஒவ்வொறு சொல்லும் சுமேருத் தமிழ் வேர்களைக் கொண்டதாகவே இருக்கின்றது. இந்த தொல்தமிழ் வேர்கள் இல்லையென்றால், இந்த இருக்கு வேத சுலோகமே இல்லை, இது இன்னும் பல சுலோகங்கட்கும் பொருந்தும் என்பதால், தமிழின் வேரின்றி வடமொழி இயங்காது என்றும் தெரிகின்றது

2.

இனி இச்சுலோகத்தின் பொருளை நோக்க, தொல்தமிழ் மூலத்தை நாம் கொண்டு வந்த முறையில் சில பிழைகள் இருந்தாலும், பொருள் கொள்ளல் ஓர் ஊகிப்புத் தன்மையில் பெறப்படுவதல்ல. வேர்ச் சொற்களை அடையாளங் கண்டு அதன் வழி உண்மையான பொருள் விளக்கம் தரப்படுகின்றது.

3.

இந்த சுலோகம் இவ்வாறு சுமேருத் தமிழ் மூலத்தைக் கண்டு பொருள் காணும்போது, அற்புதமான அறிவியல் கருத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதையும் காணலாம்.

இவ்வாறே இன்னும் பல சுலோகங்களையும் காணவிருக்கின்றோம்

 இங்கு உக்னிம் என்ற சுமேருச் சொல், அக்நிம் என்று ஆகி இருப்பதாக நான் நினைக்கின்றேன். இது தாங்கள் கூறும் <<முன்நின்று வழி நடத்திச் செல்வதால் அக்னி எனப் பெயர் >. என்பதொடு ஒருவாறு பொருந்துகின்றது. போர்வீரர்கள் கொல்பவர் என்போர் போரில் தலமை ஏற்றுச் செல்பவர்களாக இருக்கலாம் அல்லவா.

மேலும் 'ஈலே" என்ற சொல் தமிழ் 'எல்லு" என்பதின் திரிபு என்பது உண்மையாகத் தோன்றுகின்றது. இது சுமேருத் தமிழ் எரி> எல்> எல்லு என்ற சொல்லின் திரிபுதானே. "எல்லே இலக்க்ம' என்கின்றது தொல்காப்பியம் 

'எரி' எனும் சொல் அதே கருத்தில் சுமேருத் தமிழில் உண்டு

இவ்வாறு தாங்கள ஆதிவேதம் என்ப்படும் முதல் 9 மண்டலங்களில் பல சுலோங்கட்கு சுமேருத் தமிழ் மூலங்களைக் காட்டியுள்ளேன் .

இது ஓர் புதிய முயற்சி. ஐரோப்பியர்கள் யாரும் செய்யாதது. அநேகமாக செய்யவும் மாட்டார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் வடமொழியை இந்தோஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றாக காட்ட வேண்டும் என்பதே. ஆயினும் இருக்கிரிதம் சுமேருத் தமிழின் திரிபு என்றால், சுமேருத் தமிழ் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மொழி என்றால் இருக்கிருதமும் ஆகவே செங்கிருதமும் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த மொழியே என்றாகும்.

ஏன் இருக்ககூடாது?

17ஆம் நூற்றண்டு சுப்ரமனிய தீட்சிதர் தமது பிரயோக விவேகம் எனும் நூலில் தமிழிற்கு வடமொழிக்கும் பேதங்கள் மிக குறைவு ஒற்றுமைகளே அதிகம் என்கின்றார்.

இந்த ஒப்பியல் ஆய்வு கால்டுவெல் வருவதற்கு முன்பே நடந்த ஒன்று.

உலகன்

2014-05-26 19:23 GMT+08:00 கோதண்டராமன் <ekam...@gmail.com>:
//இன்னும் சில கேள்விகள் கேட்பதற்கு மன்னிக்கவும். நான் வேதங்களை முறைப்படிக் கற்றவன் அல்ல. ஆனால பல ஆண்டுகளாக வேண்டிய அளவிற்குக் கற்று சுமேருத் தமிழிற்கும் வேதங்கட்குமிடையே ஓர் வரலாற்றுத் தொடர்பு இருப்பதைக் கண்டுள்ளேன்//

உலகநாதன் அவர்களே,
வேதம் பற்றி நூறு கோணங்களில் ஆராயலாம். நாம் இருவரும் வெவ்வேறு தலைப்பில் ஆய்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நம்மிடையே கருத்து வேற்றுமைக்கு வாய்ப்பு இல்லை. 

தாங்கள் சுட்டிய உரலியில் சென்று பார்த்தேன். மொழியியல் அறிவு சூன்யமான எனக்கு அவற்றில் பல புரியவில்லை. தயவு செய்து விளக்கக் கோருகிறேன்.
1சுமேருத் தமிழின் உக்னிம் தான் வடமொழியில் அக்னி ஆகி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது போல உகரம் அகரமாக மாறுவது வழக்கமான ஒன்றா, இது போன்ற வேறு எடுத்துக் காட்டுகள் உண்டா?

2 உக்னிம் என்பதற்கு போர் வீரர்கள் என்று பொருள் கூறுகிறீர்கள். அக்னிக்கு அதே பொருள் உள்ளதா?

3 அக்னிக்கு ஒரு விளக்கம் கூறுவார்கள். अग्रे नयति इति अग्निः முன்நின்று வழி நடத்திச் செல்வதால் அக்னி எனப் பெயர் வந்தது என்று. உக்னிக்கு அந்த மாதிரியான பொருள் உண்டா?

இந்த விளக்கத்தை விநோதமானது எனக் கருதினால் மோனியர் வில்லியம்ஸின் அகராதி கூறுவதைக் கீழே தருகிறேன்.

4 அக்னி என்பது அக் என்ற வினையிலிருந்து வந்ததாக மோனியர் வில்லியம்ஸ் அகராதி  கூறுகிறது. அக் என்பதற்குவளைந்து நெளிந்து செல்தல் என்று பொருள். தீ நேர்ப்பாதையில் செல்லாமல் தீனி கிடைத்த இடமெல்லாம் பரவி நகர்ந்து செல்வதால் இப் பெயர் ஏற்பட்டதாக ஆகிறது. அக்னி என்ற சொல் லத்தீனின் இக்னிஸ் என்பதுடனும், லித்துவேனிய மொழியின் உக்னிஸ்ஸுடனும் ஸ்லாவ் மொழியின் ஒக்னியுடனும் ஒலி ஒற்றுமை கொண்டிருப்பதோடு பொருள் ஒற்றுமையும் கொண்டுள்ளது. நீங்கள் சொல்லும் உக்னிம் என்பதில் ஒலி ஒற்றுமை மட்டுமே காணப்படுகிறது.  உக்னிம் என்பது போர்வீரர், எதிரிகளை அழிப்பவர், தீயும் எதிரிகளை அழிப்பது அதனால் உக்னிம் என்பதும் அக்னி என்பதும் தொடர்புடைய சொற்கள் என்று பொருள் ஒற்றுமையைச் சுற்றி வளைத்துக் கொண்டு வந்துள்ளீர்கள்.
1 agni  
m. ( %{ag} Un2.) fire , sacrificial fire (of three kinds , Ga1rhapatya , A1havani1ya , and Dakshin2a) ; the number three Su1ryas. ; the god of fire , the fire of the stomach , digestive faculty , gastric fluid ; bile L. ; gold L. ; N. of various plants Semicarpus Anacardium Sus3r. , Plumbago Zeylanica and Rosea , Citrus Acida ; mystical substitute for the letter %{r} ; in the Ka1tantra grammar N. of noun-stems ending in %{i} and %{u} [cf. Lat. {igni-s} ; Lith. {ugni-s} ; Slav. {ognj}].
1 ag 
cl. 1. P. %{agati} , to move tortuously , wind L.: Caus. %{agayati} L. ; cf. %{aGg}.
.
5 அக்னிம் என்பது இரண்டாம் வேற்றுமை. அக்னியை என்று பொருள். ஈடே என்பது தான் உண்மையான எழுத்து வடிவம். தமிழ்நாட்டிலும் இன்னும் சில இடங்களிலும் உச்சரிக்கும்போது மட்டும் ட என்பது ள வாக மாறுவது வழக்கம். ஈளே என்று உச்சரிக்கப்படுகிறது. ஈடே என்பதற்கு வணங்குகிறேன் என்பது பொருள். ஆக அக்னிம் ஈளே என்பது தீயை வணங்குகிறேன் என்பது பொருள். உக்னிம் என்பதற்கு நீங்கள் தந்திருக்கும் பொருள் போர்வீரர்கள் என்பது முதல் வேற்றுமையாகத் தெரிகிறது. ஒரு மொழியின் முதல் வேற்றுமைச் சொல் இன்னொரு மொழியில் அதே பொருளில் இரண்டாம் வேற்றுமையாக வருமா?

மேலும் பல ஐயங்கள் உண்டு. பின்னர் பேசுவோம்.

Nagarajan Vadivel

unread,
May 26, 2014, 9:11:06 AM5/26/14
to vallamai
​வேதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா?

திராவிட வேதம் என அழைப்பது இடம் காரணமாகப் பெயர் பெற்றதா?

வேதம் தமிழகத்தில் கிரந்தம் வழியாகக் கற்றுக்கொடுக்கப்பட்டதா?

சவடால்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
May 26, 2014, 6:29:34 PM5/26/14
to vallamai, mint...@googlegroups.com

2014-05-26 7:34 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - இதற்கு ஓலைச்சுவடியில் சான்றில்லை. பாடப்பட்டோராகக் குடுமி என்ற பெயரைத் தவிர
ஒலைச்சுவடியில் யாதுக் குறிப்புமில்லை. மற்ற பாடல்களிலும் (6,9,12,15,64) அதே நிலைதான்.

டுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான்.கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால்முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடுமி என்பது குடுமியான்மலை. இவ்வூரில் இவன் யூபம் நட்டு வேள்வி செய்தான். எனக் கொள்வது வரலாற்று நெறி.

வேள்விக்குடிச் செப்பேட்டில்.

"கொல்யானை பலஓட்டிக்

கூடாமன்னர் குழாந்தவிர்த்த

பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்

"பல்சாலை முதுகுடுமித்

தொல்ஆணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால்

சிறப்பின்"

—(759,61,62)

இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)

காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்

"தண்டா ஈகைத் தகைமாண் குடுமி

தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும்,

மன்னிய பெரும! நீ நிலமிசையானே!"

—(புறம்-6)

நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்

"எம்கோ வாழிய குடுமி-தம்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த

முந்நீர் விழவின் நெடியோன்!"

—(புறம்-9)

மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.

நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார்நெடும்பல்லியத்தனார்முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.

இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:

"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என"

"அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,

முந்நீர் விழவின், நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF

செல்வன்

unread,
May 26, 2014, 6:46:08 PM5/26/14
to vallamai, மின்தமிழ்

2014-05-26 7:40 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
கோதண்டராமர் ஐயா இவ்வாறு எழுதினார். படிக்கவில்லையா?

//மறை எனப்பட்டது அது அந்தணர்க்கு மட்டுமே உரியது என்பதால் அல்ல. அதைப் படித்து நேரடியாகப் பொருள் புரிந்து கொள்ள முடியாது என்பதால்.//

ஆமாம். அதனால் தான் அந்தணரிடம் அது மறைந்து இருக்கவேண்டும். அவர் மற்றவர்க்கு பொருள் உரைக்க வேண்டும் (அந்தணர் மறைத்தே- தொல்காப்பியம்). 

சங்க இலக்கியங்களில் கணக்கற்ற இடங்களில் நான்கு வேதங்களை நான்மறை என குறிப்பிட்டுள்ளது. அதுபோல் சங்க இலக்கியம், எதிலாவது சமணநூல் எதையாவது மறை என குறிப்பிட்டதை நிருபிக்க முடியுமா?

ஒரு சில உதாரணங்கள்:

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

அன்பின் ஐந்திணைக் களவென்பது படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தர்வ வழக்கம் எனமனார் புலவர் (தொல்காப்பியம்)

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
(கலித்தொகை கடவுள் வாழ்த்து)

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை 
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;  (இதிலும் பாடபடுபவர் சிவன்)

ஆக தெளீவாக சங்க இலக்கியங்களில் மறை என்பதும், நான்மறை என்பதும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்ஜளையே குறிப்பிடுகிறது என்பது தெளிவு. சமண நூல்களை மறை, நான்மறை என சங்க இலக்கியங்களில் கூறூம் பாடல்கள் இருந்தால் கொடுக்கவும். 

தேமொழி

unread,
May 26, 2014, 9:08:55 PM5/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 3

வேத மொழி

வியாசர்

பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே,ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் ஸாயணரென்ற வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது. – பாரதி

 ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன. ஆனால்,இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. – பாரதி

          ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரம் கொண்டுவந்தனர்.  பாரதி.

ரிக் வேத மொழி பாணினியின் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபடுகிறது. எனவே ஸம்ஸ்கிருதம் மட்டும் கற்றால் வேதத்தைப் படித்துவிட முடியாது. பிற்கால ஸம்ஸ்கிருத இலக்கிய வழக்கில் இல்லாத சொற்கள் வேதத்தில் பல உண்டு. சில சொற்களுக்கு வேதத்தில் பொருள் வேறு, பிற்கால இலக்கியத்தில் வேறு பொருள். இலக்கண விதிகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.

இத்தனைக்கும் மேல் பெரும் இடர்ப்பாடு என்னவென்றால் வேத ரிஷிகள் சில இடங்களில் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம்.

மிகுந்த வலிமையுடைய இந்திரனுக்கு பிரார்த்தனைகளை அனுப்புங்கள். பசுக்கள். இந்திரனுக்கு நிறைய தோத்திரங்களைச் செய்யுங்கள்.1

இந்த மந்திரத்தில் பசுக்கள் என்பது எந்த வாக்கியத்தோடும் ஒட்டாமல் நிற்கிறது. நம்முடைய பசுக்கள் செழிப்பதற்காக என்று சாயணர் விளக்கம் தருகிறார். பசுக்கள் தரும் பாலைக் கொண்டு என்றோ பசுக்களைப் பலியிட்டு என்றோ கூட விளக்க முடியும். மூன்றுமே ரிக் வேதத்தின் பிற பகுதிகளில் சொல்லப்பட்ட கருத்துடன் ஒத்துப் போகின்றன. ரிஷியின் மனதில் இருந்த கருத்து எது என்பதை அறிய முடியவில்லை.

ரிஷிகள் கவிதை எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டு உட்கார்ந்து எழுதிய கவிதைகள் அல்ல இவை. அருள் நிலையில் அவர்கள் மனதில் தோன்றியவை. அதனால் அதில் இலக்கணத்தை எதிர்பார்க்க முடியாது.

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன்

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா,

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா அந்தக்

கிறுகிறுப்பில் உளறு மொழி பொறுப்பாயடா

என்று கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை பாடினார். தெய்வ ஆவேசத்தின் கிறுகிறுப்பில் பாடிய வேத ரிஷிகளின் மொழி, இலக்கணம் பற்றிக் கவலைப்படாத மொழியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இன்னொரு காரணமும் இருக்கலாம். காலப் போக்கில் மனப்பாடம் செய்தோரின் கவனக்குறைவு காரணமாக ஓரொரு எழுத்து மாறியிருக்கலாம். அது இலக்கணப் பிழையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

இது ரிஷியின் இலக்கணப் பிழையா, அல்லது ஏடெழுதியவரின் கைப் பிழையா அல்லது மனப்பாடம் செய்தவரின் நினைவுப் பிழையா என்பது பற்றிக் கவலைப் படாமல் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாடத்தில் முடிந்த வரை பொருள் அறிய முயல்வோம்.

வேதத்தில் சில பாடல்கள் மிகச் சாதாரணமானவை. உதாரணமாக, ரிக் 5.27 என்ற சூக்தம் அக்னியைக் குறித்துப் பாடப்பட்டதாக அனுக்ரமணிகா (அட்டவணை) சொல்கிறது. பொருளைப் பார்த்தால்-த்ரயருணன் என்ற அரசன் எனக்கு ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் நூறு பொற்காசுகளும் இரண்டு குதிரைகளும் கொடுத்துள்ளான். ஏ அக்னியே, அவனுக்கு மகிழ்ச்சி கொடு என்று இவ்வாறு செல்கிறது.

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அரசனிடம் பரிசு பெற்றுப் புகழ்ந்து பாடியதாக அறிகிறோம். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இந்து சமயத்தின் ஆணி வேர் என்று சொல்லக் கூடிய ஆன்மிகக் கருத்து இதில் என்ன இருக்கிறது? புரவலரைப் போற்றும் இந்தப் பாடலுக்கு வேதம் என்ற பெரிய மரியாதை எதற்கு? என்று தோன்றுகிறது.

இலக்கணப் பிரச்சினைகள் இல்லாமல் எல்லாச் சொற்களும் பொருள் தெரிந்த சொற்களாக இருக்கும்போது கூட பல இடங்களில் சொற்களின் பொருளைத் தொகுத்துக் கூறும்போது இடர்ப்பாடுகள் வருகின்றன. பல பாடல்கள் விடுகதை போல உள்ளன. ஒரு உதாரணம் பார்ப்போம்.

          காலில்லாதவள் காலுள்ளவர்களுக்கு முன்னதாகப் போகிறாள். தலையை அசைய வைத்து,நாக்கைப் பேச வைத்து முப்பது அடிகள் பயணிக்கிறாள்.2  

இதற்கு சாயணர் அளிக்கும் விளக்கம்- சுயமான அசைவு இல்லாமல் சூரியனால் தள்ளப்பட்டு வருவதால் காலில்லாதவள் உஷா (வைகறைப் பொழுது). கால் உள்ள பிராணிகள் எழுந்து சஞ்சரிக்கும் முன்னர் அவள் புறப்பட்டு விடுகிறாள். சத்தமி்ல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிப் பேச வைக்கிறாள்.

இது பொருத்தமாகத் தோன்றுகிறது என்றாலும் இது தான் ரிஷியின் மனதில் இருந்த எண்ணமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அசுவினி தேவர்களைக் குறித்துப் பாடப்பட்ட ரிக் இது.

          இந்தப் பிரார்த்தனை உசத்யனின் மகனாகிய என்னைக் காப்பாற்றட்டும். இந்த இரண்டு பறவைகளும் என்னைக் கறக்காமல் இருக்கட்டும். பத்துப் பத்தாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த விறகுகள் என்னை எரிக்காமல் இருக்கட்டும். உங்கள் இருவருடனும் கட்டப்பட்ட இது தானாகவே பூமியைத் தின்கிறது.3

அந்தப் பறவைகள் என்பது இரவும் பகலும். அவை ரிஷியின் சக்தியை வலுக்கட்டாயமாக உறிஞ்சிவிடுகின்றன. வயதான காலத்தில் ரிஷியின் குனிந்து நடக்கும் உடல் பூமியைத் தின்பதாக சாயணர் குறிப்பிடுகிறார். சாயணர் உரை இல்லாவிட்டால் விடுகதை போன்ற இத்தகைய பாடல்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதில் வரும் விறகு எதைக் குறிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மற்றொரு மந்திரத்தின் மொழிபெயர்ப்பு இது.

          இன்றும் இல்லை, நாளையும் இல்லை, யாரறிவார் இந்த அற்புதத்தை? அடுத்தவர் மனமோ அலை பாய்கிறது. கற்றது யாவும் மறந்து போயின.4

இந்திரன் தனக்கு ஹவிர் பாகம் கிடைக்கவில்லை என்று வருந்தும் போது அகஸ்தியரிடம் இதைச் சொல்வதாகச் சாயணர் கூறுகிறார். இதற்கு முன் பின் உள்ள மந்திரங்களின் துணை கொண்டு பார்த்தாலும் இதற்கு என்ன பொருள் என்பது விளங்கவில்லை.

இது போன்ற ஆயிரக் கணக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் அளிக்கின்றன. அதனால் வேதத்தின் உண்மையான கருத்து என்ன என்பதே அறிய முடியாமல் அது மறையாகவே இருக்கிறது.

இத்தகைய விடுகதை போன்ற மந்திரங்களை நீக்கிவிட்டு மற்ற மந்திரங்களைக் கொண்டு ரிக் வேதத்தின் சாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.

குறிப்புகள்

இரண்டாவது பத்தியில் கொடுக்கப்பட்ட எண்கள் முறையே ரிக் வேதம் மண்டலம்சூக்தம்,மந்திரத்தைக் குறிக்கும்.

1                      8.96.10. (back)

2                      6.59.6   (back)

3                      1.158.4 (back)

4                      1.170.1 (back)

படத்திற்கு நன்றி : http://anmeegam.blogspot.in/2012/07/blog-post.html

நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=44535

கோதண்டராமன்

unread,
May 26, 2014, 10:14:02 PM5/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//இன்னும் சில கேள்விகள் கேட்பதற்கு மன்னிக்கவும். நான் வேதங்களை முறைப்படிக் கற்றவன் அல்ல. ஆனால பல ஆண்டுகளாக வேண்டிய அளவிற்குக் கற்று சுமேருத் தமிழிற்கும் வேதங்கட்குமிடையே ஓர் வரலாற்றுத் தொடர்பு இருப்பதைக் கண்டுள்ளேன்//

உலகநாதன் அவர்களே,
வேதம் பற்றி நூறு கோணங்களில் ஆராயலாம். நாம் இருவரும் வெவ்வேறு தலைப்பில் ஆய்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நம்மிடையே கருத்து வேற்றுமைக்கு வாய்ப்பு இல்லை. 

தாங்கள் சுட்டிய உரலியில் சென்று பார்த்தேன். மொழியியல் அறிவு சூன்யமான எனக்கு அவற்றில் பல புரியவில்லை. தயவு செய்து விளக்கக் கோருகிறேன்.
1சுமேருத் தமிழின் உக்னிம் தான் வடமொழியில் அக்னி ஆகி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது போல உகரம் அகரமாக மாறுவது வழக்கமான ஒன்றா, இது போன்ற வேறு எடுத்துக் காட்டுகள் உண்டா?

2 உக்னிம் என்பதற்கு போர் வீரர்கள் என்று பொருள் கூறுகிறீர்கள். அக்னிக்கு அதே பொருள் உள்ளதா?

3 அக்னிக்கு ஒரு விளக்கம் கூறுவார்கள். अग्रे नयति इति अग्निः முன்நின்று வழி நடத்திச் செல்வதால் அக்னி எனப் பெயர் வந்தது என்று. உக்னிக்கு அந்த மாதிரியான பொருள் உண்டா?

இந்த விளக்கத்தை விநோதமானது எனக் கருதினால் மோனியர் வில்லியம்ஸின் அகராதி கூறுவதைக் கீழே தருகிறேன்.

4 அக்னி என்பது அக் என்ற வினையிலிருந்து வந்ததாக மோனியர் வில்லியம்ஸ் அகராதி  கூறுகிறது. அக் என்பதற்குவளைந்து நெளிந்து செல்தல் என்று பொருள். தீ நேர்ப்பாதையில் செல்லாமல் தீனி கிடைத்த இடமெல்லாம் பரவி நகர்ந்து செல்வதால் இப் பெயர் ஏற்பட்டதாக ஆகிறது. அக்னி என்ற சொல் லத்தீனின் இக்னிஸ் என்பதுடனும், லித்துவேனிய மொழியின் உக்னிஸ்ஸுடனும் ஸ்லாவ் மொழியின் ஒக்னியுடனும் ஒலி ஒற்றுமை கொண்டிருப்பதோடு பொருள் ஒற்றுமையும் கொண்டுள்ளது. நீங்கள் சொல்லும் உக்னிம் என்பதில் ஒலி ஒற்றுமை மட்டுமே காணப்படுகிறது.  உக்னிம் என்பது போர்வீரர், எதிரிகளை அழிப்பவர், தீயும் எதிரிகளை அழிப்பது அதனால் உக்னிம் என்பதும் அக்னி என்பதும் தொடர்புடைய சொற்கள் என்று பொருள் ஒற்றுமையைச் சுற்றி வளைத்துக் கொண்டு வந்துள்ளீர்கள்.
1 agni  
m. ( %{ag} Un2.) fire , sacrificial fire (of three kinds , Ga1rhapatya , A1havani1ya , and Dakshin2a) ; the number three Su1ryas. ; the god of fire , the fire of the stomach , digestive faculty , gastric fluid ; bile L. ; gold L. ; N. of various plants Semicarpus Anacardium Sus3r. , Plumbago Zeylanica and Rosea , Citrus Acida ; mystical substitute for the letter %{r} ; in the Ka1tantra grammar N. of noun-stems ending in %{i} and %{u} [cf. Lat. {igni-s} ; Lith. {ugni-s} ; Slav. {ognj}].
1 ag 
cl. 1. P. %{agati} , to move tortuously , wind L.: Caus. %{agayati} L. ; cf. %{aGg}.
.
5 அக்னிம் என்பது இரண்டாம் வேற்றுமை. அக்னியை என்று பொருள். ஈடே என்பது தான் உண்மையான எழுத்து வடிவம். தமிழ்நாட்டிலும் இன்னும் சில இடங்களிலும் உச்சரிக்கும்போது மட்டும் ட என்பது ள வாக மாறுவது வழக்கம். ஈளே என்று உச்சரிக்கப்படுகிறது. ஈடே என்பதற்கு வணங்குகிறேன் என்பது பொருள். ஆக அக்னிம் ஈளே என்பது தீயை வணங்குகிறேன் என்பது பொருள். உக்னிம் என்பதற்கு நீங்கள் தந்திருக்கும் பொருள் போர்வீரர்கள் என்பது முதல் வேற்றுமையாகத் தெரிகிறது. ஒரு மொழியின் முதல் வேற்றுமைச் சொல் இன்னொரு மொழியில் அதே பொருளில் இரண்டாம் வேற்றுமையாக வருமா?

மேலும் பல ஐயங்கள் உண்டு. பின்னர் பேசுவோம்.

கோதண்டராமன்

unread,
May 27, 2014, 3:51:04 AM5/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

திரு உலகநாதன்,

சுமேரிய மொழியின் எந்த இலக்கியத்தில் நீங்கள் தந்துள்ள, கீழே காட்டப்பட்ட பாடல் வருகிறது?

//உக்நிம் எல்லே புர்-ஊ-கி-தம் எஜென்அஸ்-ய தேவர் (எ)ரித்துபீஜியம்/ ஊதாரம் ரத்தின தாது தர்மம்//

K. Loganathan

unread,
May 27, 2014, 4:21:11 AM5/27/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராமன் அவர்களே

 தாங்கள் இன்னும் எனது முயற்சிகளை சரியாகப் புரிந்துகொள்லவில்லை என்று நினைக்கின்றேன்.

இந்த  Base Structure  என்பவை மீட்டெப்புக்கள். இருக்குவேத சுலோககங்கள் சொல்லிற்குச் சொல் ஒப்பிட்டு அவற்றோடு தொடர்புடைய சுமேருத் தம்ழி சொற்களை அடையாளங் காட்டி அதன் வழி உருவாக்க்பட்டவை.

காட்டாக  ஒன்று

இந்த முதல் சுலோகத்தில் வரும்  'யாஜ்நஸ்ய தேவம்' என்பது பற்றி.

இதேப்  போன்ற சொற்றொடரை நான் காணவில்லை, ஆயினும் தொடர்புடைய 'ஏஜென்' 'அஸ்ய"  திவர்" என்பன போன்ற மூலங்களைத்  தேடிபிடித்துத் தந்துள்ளேன்

ஆக சொற்கள் இலக்கணக் கூறுகள் என்பவற்றை ஆய்ந்து இருக்குவேதத்தின் விளங்குமவை எவ்வாறு சுமேருத் தமிழின் திரிபாக விளங்குகின்றன என்பதையே நான் விளக்கியுள்ளேன் இருக்கு வேத சுலோகங்கள முழுமையாக அங்கே இருக்கின்றது என்று நான் கூறவில்லை,

இவ்வாறே சங்கத் தமிழிற்கும் செய்துள்ளேன்

உலகன்

 >>

இனி அடுத்ததாக வரும் தொடர் பல சுவையான இலக்கணக் கூறுகளைக் கொண்ட தொடர் :

yajjnasya devam யாஜ்நஸ்ய தேவம்

என்பதாகும். இதன் தொல்தமிழ் உரு என்ன? எனும் போது அது ‘ஏஜெனஸ்ய தேவர்’ என்றவாறு காணலாம் இதற்குரிய சான்றுகளை கீழே தருகின்றேன்

Su. ejen, ezen: fire festival iji, eji: fire

Temple Hymn 4

4( 43)

itu za-mu ezen-gal-la-za u-di tag-ga  ( In the month of New Year's Day, on which the feast is celebrated, (you are wonderously adorned)

Ta. intu saalmu vizenkaLLajaa udai taGka ( During  the festival celebrated on Full Moon Day, your attire is golden)

இந்து சால்மு விழன்கள்ளஜிய உடை தங்கம்

இங்கு ezen என்பதை ‘விழன்’ என்று கொண்டுள்ளேன் இது மிகவும் பிற்கால வழக்காகும், ஆயினும் ezen என்ற சொல்லே  yajna என்றாகி பின் தமிழில் ‘யாகம்’ என்றாகி இருப்பதைக் காண்முடிகின்றது.

‘ezen, ejen’  என்ற தொல்தமிழே பிறகாலத் தமிழின் ‘விழன், யாகம்’ என்ற சொற்களின் மூலமாக இருக்கலாம். தொடர்ந்து ஆராயப்பட வேண்டிய ஓர் விசயமாக இதனை இங்கு முன்மொழிகின்றேன்.

‘asya’ Su as-a

இது ‘as’ எனும் சாரியையோடு வரும் ‘-a’ எனும் கிழமை வேற்றுமை உருபு ஆகும், இது கடைச் சங்கத் தமிழில் ‘அத்து’ எனும் சாரியையோடு ‘அத்திய’ என்று வரும். சுமேருத் தமிழில் கீழ் வரும் கிளவியில் காணக் கிடக்கின்றது,.

 Sir 2.

mi-zi me-lam gur-ru ki-aga -an -uras-a (  Righteous woman, beloved of Heaven and Earth).

Ta, mai jii meeLam kuuru kaangka vaan uurasya (“)

மை ஜீ மேளம் கூரு காங்க(காம) வானூரஸ்ய

இங்கு an-uras-a  என்பது ‘வான் ஊரஸ்ய’ தான், இங்கு ‘ஊர்’ என்றால் ‘உலகு’ என்றும் பொருள். காங்க> காமம்: விருப்பம், காதல்.

Devam தெய்வம், தேவம்

இச்சொல் சுமேருவில் dingir என்று பெரும்பாளும் விளங்க அக்காடிய மொழியில்  dimmer>diwer  என்று திரிந்துள்ளது, இதிலிருந்தே ‘devam’ என்ற சொல்லும் தமிழின் ‘தெய்வம்’ என்ற சொல்லும் வந்திருக்கலாம். மேலும் dingir> திங்கள் என்றும் ஆகி இருக்கலாம்.

ஆக ‘yajnasya devam’ தொல்தமிழில் ‘எஜெனஸ்ய தேவம்’ என்று இருந்திருக்கலாம்.

--

கோதண்டராமன்

unread,
May 27, 2014, 4:52:28 AM5/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
திரு. உலகநாதன்,
//சொற்கள் இலக்கணக் கூறுகள் என்பவற்றை ஆய்ந்து இருக்குவேதத்தின் விளங்குமவை எவ்வாறு சுமேருத் தமிழின் திரிபாக விளங்குகின்றன என்பதையே நான் விளக்கியுள்ளேன்//

அப்படி ஆயின் 1 வேதச் சொல், 2 அதன் பொருள், 3 அதோடு ஒலி ஒற்றுமை கொண்ட சுமேருச் சொல், 4 அதன் பொருள் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகக் கொடுத்தால் என்னைப் போன்று மொழியியல் அறியாதவர்க்கு ஏற்றதாக இருக்கும். 

K. Loganathan

unread,
May 27, 2014, 8:49:11 PM5/27/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராம் அவர்களே

 மிக்க நன்றி. நல்ல ஆலோசனையும் கூட. என்னால் இயன்றவரை செய்கின்றேன். ஆயினும் எனக்கு வயதாகிவிட்டது. மொழியியலில் முன்பிருந்த ஆர்வமெல்லாம் இப்போது இல்லை,

சிவனே என்றிர்ந்தவாறு சிவஞானச் சிந்தயிலேயே கிடக்க விரும்புகின்றேன்.

எனினும் சுமேரு-வடமொழி தொடர்பான என் ஆய்வுகளை எல்லாம் சுட்டப்பட்ட வலைப் பக்கங்களில் சேர்த்துள்ளேன். ஓர் இளைஞர்  ப்ட்டாளம் இதில் ஈடு பட்டு ஆய்ந்தால் பேருதவியாக இருக்கும்.

மேலும் இதுவரை நான் ஆப்பெழுத்து (  cuneiform studies)  செய்ததில்லை அதுவும் பெருங்குறையே.

நான் கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கின்றது சுமேருத்தமிழின் திரிபே இருக்கிருதம்(வடமொழி) என்று அரிஞர்கள் கருதி  இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டால் பெரிதும் மகிழ்வேன்

உலகன் 

--

கோதண்டராமன்

unread,
May 28, 2014, 2:07:09 AM5/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

//Swami Satya Prakash Saraswati et al, give the meaning as follows: 

As fire priests with fingers produce fire from two sticks by the motion of their hands, in the same way with the co-ordinated efforts of their deep thinking and noble actions, wise men manifest an extend the glory of effulgent lord, who is excellent, and to be realized at depths with subtle eyes, ever vigilant sovereign Lord of creation //

திரு உலகநாதன்,
சுமேருத் தமிழ் என்ற சொல்லையே நான் இப்பொழுது தான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன் கட்த ஐந்தாண்டுகளாக, வெளி உலகத் தொடர்பே இல்லாமல் என்னுடைய ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருந்ததும் ஒரு காரணம். எனவே இது தொடர்பாக எனக்கு பல ஐயங்கள் ஏற்படுகின்றன. அலுப்போ கோபமோ அடையாமல் என் வினாக்களுக்கு விடையளித்துத் தெளிவு ஏற்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

சுமேரியா என்பது இன்றைய இராக், இடைக்காலப் பாரசீகம் தானே?
சுமேரிய மொழி இன்று வழக்கில் இருக்கிறதா?அல்லது ஸம்ஸ்கிருதம் போல பேச்சு வழக்கொழிந்து இலக்கியவாதிகளிடம் மட்டும் இருக்கிறதா?
நீங்கள் கொடுக்கும் வார்த்தைகள் எந்த இலக்கியத்திலிருந்து (நூல்களிலிரு்ந்து எடுக்கப்பட்டவை?
பாரசீக ஜெண்ட் அவஸ்தாவும் ரிக் வேதமும் வரிக்கு வரி ஒத்துப் போகிறதென்று மேலை நாட்டவர் ஆராயச்சி செய்து சொல்கிறார்களே, நீங்கள் சொல்வது அதற்கு உடன்பாடானதா அல்லது புதுமையாக ஏதேனும் சொல்கிறீர்களா?

மேலே மேற்கோள் காட்டிய ரிக்வேத மந்திர மொழிபெயர்ப்பின் ஆசிரியர் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவரா?தயானந்தரும் அவரது சீடர்களும் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தங்கள் சொந்தக் கருத்தைத் திணித்துள்ளார்கள் என்பதை, வேத உரைகள் என்ற தலைப்பில் ஒரு எடுத்துக்காட்டுடன் காட்டியுள்ளேன். அதைப் படித்தீர்களா?

எடுத்துக்காட்டாக, நீங்கள் தீதி என்ற சொல்லை மிகவும் சார்ந்து உள்ளீர்கள். அது தீயோடு தொடர்பு உடையது என நிறுவுகிறீர்கள். धीति என்ற சொல்லுக்கு பிரார்த்தனை, எண்ணம்,அறிவு என்ற மூன்று பொருள்கள் தான் உண்டு என மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார். ரிக் வேதத்தில் அச்சொல் வரும் எல்லா இடங்களையும் பார்த்தவன் என்ற முறையில் இந்தப் பொருளில் எனக்கு உடன்பாடு உண்டு. 

நீங்கள் ஸம்ஸ்கிருதமும் அறிநதவராக இருப்தால் இந்த மொழிபெயர்ப்பு மிகத் தாராளமான விளக்கமாக உள்ளதேஅன்றி மொழிபெயர்ப்பாக இல்லை என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். 

ஸத்யப்பிரகாசர் உரையில் விரல்களால் குச்சிகளைக் கொண்டு தீ மூட்டுகிறார்கள் என்பது விளக்கமே அன்றி மொழிபெயர்ப்பு அல்ல. இதை மொழிபெயர்ப்பு என்று கொண்டு நீங்கள் ஆராயச்சியில் தொடர்வது உங்களைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என அஞ்சுகிறேன். 
என் ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 

K. Loganathan

unread,
May 28, 2014, 4:12:51 AM5/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராமன்

 தங்கள் கேள்விகட்கு மிக்க நன்றி. இயன்றவரை விளக்கம் தர முயல்கின்றேன். சுமேருத் தமிழோடு ஒத்திட்டு வடமொழியும் தெந்தமிழும் ஆராயப் பட்டால் பல வரலாற்று உண்மைகள் வெளியாகும் என்று நினைக்கின்றேன். ஐரோப்பியர்கள் அவசர குடுக்கைகள். ஒரு சில சொல்லொற்றுமைகளை வைத்துக்கொண்டு வடமொழி இந்தோ ஆரிய மொழி குடும்பத்தச்  சேர்ந்தது என்று கதைகட்டி இந்தியர்களை பெருங் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.

எனது ஆய்வுகளில் பல குறைகள் இருக்கலாம். இருக்கின்றன என்று எனக்கும் தெரியும். ஆயினும் உண்மையும் இருக்கின்றது என்று நம்புகின்றேன். இந்த வகையில் வேதங்களை வடமொழியை தக்கார் ஆராய்வேண்டும் என்றும் விரும்புகின்றேன்

எனக்கு வடமொழி அதிகம் தெரியாது. தேவநகரி எழுத்தும் அவ்வளவு பழக்கம் இல்லை, ஆயினும்  ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் தமிழ் மொழியாக்கங்கள் பெயர்ப்புக்கள் போன்றவற்ரை கொண்டே நடத்தியுள்ளேன்

கீழே தங்கள் கேள்விகட்கு எனது விளக்கங்கள்- நீல வண்ணத்தில்

//Swami Satya Prakash Saraswati et al, give the meaning as follows: 

As fire priests with fingers produce fire from two sticks by the motion of their hands, in the same way with the co-ordinated efforts of their deep thinking and noble actions, wise men manifest an extend the glory of effulgent lord, who is excellent, and to be realized at depths with subtle eyes, ever vigilant sovereign Lord of creation //

திரு உலகநாதன்,
சுமேருத் தமிழ் என்ற சொல்லையே நான் இப்பொழுது தான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன் கட்த ஐந்தாண்டுகளாக, வெளி உலகத் தொடர்பே இல்லாமல் என்னுடைய ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருந்ததும் ஒரு காரணம். எனவே இது தொடர்பாக எனக்கு பல ஐயங்கள் ஏற்படுகின்றன. அலுப்போ கோபமோ அடையாமல் என் வினாக்களுக்கு விடையளித்துத் தெளிவு ஏற்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

சுமேரியா என்பது இன்றைய இராக், இடைக்காலப் பாரசீகம் தானே?

சுமேரிய என்பது இன்றைய ஈராக் . இந்த சொல்லும் ஊருக்(ஊரு.கோ) என்பதிலிருந்து வந்ததாக இருக்கலாம். இடைக்கால பாராசீகம் வேறு. ஆனால் அங்கு 'ஏலாம்" மக்கள் ஓர் திராவிட மொழி பேசியவர்களே வாழ்ந்திருந்தார்கள், அவர்களும் சுமேரிய ஆப்பு எழுத்தில் பிறகாலத்தில் எழுதத் தொடங்கினார்கள்.  அதற்கு முந்திய அவர்களது மூல எழுத்தும்( protoforms)   சுமேரிய மூல எழுத்தும் சிந்து நாகாரிக எழுத்தும் பல ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டிருக்க மூவரும் ஒரே இனமாகவும் ஒரே இடத்திலிருந்து வந்தவர்களாகவும் கருத இடம் உண்டு.

சுமேரிய மொழி இன்று வழக்கில் இருக்கிறதா?அல்லது ஸம்ஸ்கிருதம் போல பேச்சு வழக்கொழிந்து இலக்கியவாதிகளிடம் மட்டும் இருக்கிறதா?

என்னைப் பொருத்த வரையில் சுமேரிய மொழியே இன்றையத் தமிழாக வளர்ந்துள்ளது எவ்வாறு கடைச் சங்கத் தமிழ் பத்தித் தமிழாக பிறகு இன்றையத் தமிழாக கூர்ந்துள்ளதோ அதேப் போலத்தான் சுமேருத் தமிழ் தெந்தமிழாக கூரந்துள்ளது. கி,மு, 2000 வாக்லில் சுமேரியா அழிய சுமேருத் தமிழர்கள் பல நாடுகட்குச்  சிதற பெரும்பாலான்வர்கள் தென்னகம் வந்து தமது வாழ்க்கையை இங்கு தொடர்ந்தார்கள் என்று நினைக்கின்றேன்.

இதே மொழி தான் தரை மார்க்கமாக வந்தவர்கள் பாரசீகம் கடந்து அங்கு வாழ்ந்த மக்களோடு கலந்து அவேஸ்தா போன்ற இலக்கியங்கள படைத்து இந்தியா வந்து சேர்ந்தார்கள் என்றும் நினைக்கின்றேன். சுமேருத் தமிழ் தென் தமிழோடு நெருங்கிய உறவினைக் கொண்டிருக்க, வடமொழி இடையே பல திரிபுகளை கொண்டிருக்க இப்படி நான் கூறுகின்றேன்.  இங்கு ஓர் பண்பாட்டுத் தொடர்பு உண்டு: சுமேரிய சிவன் கோயில்களில் விளங்கிய எரி வழிபாட்டு பாராசிகத்திலும் வளர்ந்து இருக்கு வேதத்திலும் சிறந்துள்ளது.

எரி வழிபாடு பல சுமேருக் கோயில்களில் உண்டு.

நீங்கள் கொடுக்கும் வார்த்தைகள் எந்த இலக்கியத்திலிருந்து (நூல்களிலிரு்ந்து எடுக்கப்பட்டவை?

எனது ஆரய்ச்சிக் கட்டுரைகளில் நான் எந்த சுமேரு இலக்கியத்தைச் சான்றாக காட்டியுள்ளேன் என்று தவறாது குறித்துள்ளேன். அவை ஈனன்னா சீர்பியம் (  Exaltations of In-Anna)  முதரீபியம்(  Sulgi hymn B)  சுருப்பாக்கின் நெறி(  nari)  போன்றவை.  இவ்வாறு இன்னும் பல. இவை எல்லாம் நான் இலண்டனில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சேகரித்த நூற்கள் ஆகும்

பாரசீக ஜெண்ட் அவஸ்தாவும் ரிக் வேதமும் வரிக்கு வரி ஒத்துப் போகிறதென்று மேலை நாட்டவர் ஆராயச்சி செய்து சொல்கிறார்களே, நீங்கள் சொல்வது அதற்கு உடன்பாடானதா அல்லது புதுமையாக ஏதேனும் சொல்கிறீர்களா?

 நான் அவஸ்தாவை ஆரயவில்லை, ஆனால் சுமேரியர்கள் தரை மார்க்கமாக இந்தியாவிற்கு வந்த பொழுது இடையே அங்கு  அவெஸ்தா மொழிபோன்ற ஒன்றை அவர்கள் பேசியிருக்கலாம். அல்லது அவர்களில் ஓர் கிளையினர் இவ்வாறு செய்திருக்கலாம். பொதுவாக நம்பகூடியதே.  ஆனால் 'ஆரியர்' என்ற சொல் சுமேருத் தமிழ் சொல்.  தங்களை சுமேருத் தமிழர் என்று குறிக்கவே இவ்வாறு தங்களை கூறி இருக்க்லாலம்

மேலே மேற்கோள் காட்டிய ரிக்வேத மந்திர மொழிபெயர்ப்பின் ஆசிரியர் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவரா?தயானந்தரும் அவரது சீடர்களும் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தங்கள் சொந்தக் கருத்தைத் திணித்துள்ளார்கள் என்பதை, வேத உரைகள் என்ற தலைப்பில் ஒரு எடுத்துக்காட்டுடன் காட்டியுள்ளேன். அதைப் படித்தீர்களா?

படித்தேன். இருக்க்லாம். அவர்களது பின்புலம் எனக்குத் தெரியாது. ஆயினும் அவர்களது உரை உண்மைல் உரையே அல்ல. ஊகத்தின் பேரில் அவர்கள் கூறும் கருத்துக்களே. அதனால் நான் அவற்றைப் பெரிதாக கருதவில்லை, ஆனால் மூலமும் உரையும் ஆங்கில எழுத்தில் இருக்க எனக்கு படிக்க எளிதாயிற்று. ஆயினும் நான் ஒவ்வொரு மூல இருக்கு வேத சொல்லிற்கும் சுமேரு மூலங் கண்டு அவ்வாறும் பொருள் வார்தைக்கு வார்த்தை கிளவிக்குக் கிளவி சொல்லி இருக்கின்றேன்

எடுத்துக்காட்டாக, நீங்கள் தீதி என்ற சொல்லை மிகவும் சார்ந்து உள்ளீர்கள். அது தீயோடு தொடர்பு உடையது என நிறுவுகிறீர்கள். धीति என்ற சொல்லுக்கு பிரார்த்தனை, எண்ணம்,அறிவு என்ற மூன்று பொருள்கள் தான் உண்டு என மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார். ரிக் வேதத்தில் அச்சொல் வரும் எல்லா இடங்களையும் பார்த்தவன் என்ற முறையில் இந்தப் பொருளில் எனக்கு உடன்பாடு உண்டு. 

இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை, சுமேரு மொழியில் தீ(  de) 
 நெருப்பும் இருக்கின்றது, தி. தில்( til, dil)  என்ற சொல்லும் இருக்கின்றது. இருப்பது, வாழ்வது என்ற பொருள் உடையது. தமிழில் 'திதி" ஆகி வடமொழியில் ஸ்திதி என்றும் மேலும் அஸ்தி. நா-அஸ்தி' என்றெல்லாம் ஆகியும் இருக்கின்றது. 'ந, நா" என்னும் எதிரமறை முன்னொட்டு சுமேருத் தமிழில் அப்படியே உண்டு. 

நீங்கள் ஸம்ஸ்கிருதமும் அறிநதவராக இருப்தால் இந்த மொழிபெயர்ப்பு மிகத் தாராளமான விளக்கமாக உள்ளதேஅன்றி மொழிபெயர்ப்பாக இல்லை என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். 

ஸத்யப்பிரகாசர் உரையில் விரல்களால் குச்சிகளைக் கொண்டு தீ மூட்டுகிறார்கள் என்பது விளக்கமே அன்றி மொழிபெயர்ப்பு அல்ல. இதை மொழிபெயர்ப்பு என்று கொண்டு நீங்கள் ஆராயச்சியில் தொடர்வது உங்களைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என அஞ்சுகிறேன். 
என் ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

முடிவாக ஒன்று. இதுவரை யாரும் வடமொழியையும் தெந்தமிழையும் சுமேருத் தமிழோடு ஒப்பிட்டு பார்த்ததில்லை, தமிழ் அறிஞர்கள் குமரிகண்ட கனவிலேயே இருக்கின்றனர். வடமொழிவாணர்களாகத்  தங்களை நினைக்கும் பிராமனர்கள் ஐரோப்பியகள் கட்டிவிட்ட ஆரியக் கதையிலேயெ மயங்கிக் கிடப்பதாக எனக்குப் படுகின்றது

யான் செய்துள்ளது பல குறைகள் உள்ள ஆய்வுகள் தான் மறுப்பதற்கில்லை ஆனால் அதில் உணமை இருக்கின்றது.  யான் செய்துள்ளது ஆய்விற்குரிய ஒன்றே எனறு நினைத்து இளஞர்கள் தொடர்ந்து ஆய்வதற்கு இறங்கினால் பல நல்ல வரலாற்று உண்மைஅள் புரிய வரும் என்றே நினைக்கின்றேன்

உலகன் 
 
--

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
May 28, 2014, 5:04:29 AM5/28/14
to vall...@googlegroups.com
On Saturday, May 24, 2014 3:46:20 PM UTC+5:30, வேந்தன் அரசு wrote:
உங்க வாதம் ஏற்கும்படி இல்லை. வேய் என்பதற்கு வடசொல் வேணு.வேணுவை விட்டுட்டு வேய், வெதிர் என்ற சொற்களை நாட என்ன தேவை.

இன்னும் ஒரு நூறாண்டுக்கு இந்த அக்கப்போர் ஓயாது. :)

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
May 28, 2014, 5:15:39 AM5/28/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Friday, May 23, 2014 12:19:17 PM UTC+5:30, Dhivakar wrote:
வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அனுமனைப் பற்றிச் சொல்லும்போது இவன் மூன்று வேதங்களிலும் வல்லவன் என்கிறார். வால்மீகிக்குப் பிந்தியவரா வியாசர்?

அப்போ த்ரிவேதின்னு பொருள். :)
பாருங்க வானரத்துக்கு கூட வேதம் தெரிஞ்சிருக்கு. :)
வியாசர் சிரஞ்சீவி. எங்கிருந்தோ இதை பார்த்து படிச்சுக்கிட்டிருக்கார் :)
அவர் போன கலியுகத்துக்கும் முதல் யுகத்துக்கும் முதல் யுகம்.

ekamsath

unread,
May 28, 2014, 7:33:00 AM5/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
திரு உலகநாதன்,

//எனக்கு வடமொழி அதிகம் தெரியாது. தேவநகரி எழுத்தும் அவ்வளவு பழக்கம் இல்லை, ஆயினும்  ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் தமிழ் மொழியாக்கங்கள் பெயர்ப்புக்கள் போன்றவற்ரை கொண்டே நடத்தியுள்ளேன்//

நீங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு வடமொழி அறிவு மிகவும் அவசியம். வெறும் சொல்லின் ஒலியை மட்டும் வைத்துக் கொண்டு அதே ஒலி உடைய சொல் சுமேருத் தமிழிலும் இருக்கிறது என்பதை விட ஒலிப் பொருத்தம் பொருள் பொருத்தம் இரண்டையும் காட்டினால் தான் படிப்பவர்க்கு உஙகளைப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். 

ஆர்ய சமாஜ உரையை விட கிரிபித் என்பவரின் உரை நன்றாக இருக்கிறது. இதுவும் குறை உடையதே என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தருவதில் ஸத்யாலங்கார ஸரஸ்வதியை விட இவரிடத்தில் நேர்மை அதிகம் காணப்படுகிறது.  ்தை நீங்கள் பயன்படுத்தினால் அதிக நலம் பயப்பதாக இருக்கும்.
Rig Veda translation by Griffith- available in internet.

K. Loganathan

unread,
May 28, 2014, 7:55:06 AM5/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு கோதண்டராமன் அவர்களே

   சாயண்ணா உரையின் அடிப்படையில் எழுதப்பட்ட  Griffith  அவர்களின் உரையும் என்னிடம் உண்டு. அதனையும் படித்துப் பார்த்திருக்கின்றேன். அங்கும் என் கண்களுக்கு இதே சிக்கல்தான் தென்பட்டது.

பழங்கால்த்திலேயே வேதியர்கள் வேதங்களை மனப்பாடம் செய்து ஓதியுள்ளார்களேத்  தவிற அவற்றின் பொருளை பிழையின்றி காத்திருப்பதாகத் தெரியவில்லை, தமிழை மறந்த நிலையில் பெரும்பாலான பொருண்மைகள் ஊகங்களாகவே இருந்திருக்கின்றன என்று நினைக்கின்றேன்

அத்னால நான் வேதச் சொற்கள்  கிளவிகளின் இலக்கணக் கூறுகள் போன்றவற்றை சுமேருத் தமிழில் தேடி மூலப் பொருள் அங்கே இருக்க அதன் அடிப்படியில் பொருள் கூறி இருக்கேன்

வேத ஆய்வில் இது ஓர் புதுமைதான்.

முதல் சுலோகத்து 'யஜ்னஸ்ய தேவம்'  சுமேருத் தமிழின் 'எஜெனஸ்ய திவர்" என்று இருப்பது பிழையாக இருக்காது. இவ்வாறு 30-40 சுலோகங்கட்கு தொடர்புகள் கண்டுள்ளேன்.  அனைத்தும் பிழையாக இருக்கும் என்று ஏன் ஒதுக்க வேண்டும்?

வேத ஆராய்ச்சி இப்படியும் செல்லலாமே?

ஆயினும் தாங்கள் பரிந்துரைப்பது ஏற்றுக் கொளளக் கூடியதுதான்.

சுமேருத் தமிழோடு இருக்கிர்தம் ஒப்பிட்டு ஆயவு செய்தல் தொடங்கினால் போதும். அதுவே எனது நோக்கம்

உலகன்

--

K. Loganathan

unread,
May 28, 2014, 8:05:13 AM5/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பரே 

சொல்ல மறந்துவிட்டேன்.  நான் இருக்குவேத சுலோகங்களை சுமேருத் தமிழோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஒலி ஒற்றுமையோடு பொருள் ஒற்றுமையும் காண்கின்றேன்.  காட்டாக எஜ்நம்- எஜென்: தீ திருவிழா.  எரி ஓம்பல் . அஸ்ய > அஸ்.அ: ஆறாம் வேற்றுமை உருபு, கிழமை பொருள்; தேவம்: திவர்: தெய்வம். 

இப்படித்தான் ஏறக்குறைய ஆயந்த எல்லா சுலோகங்கட்கும் இந்த ஒலி ஒற்றுமை பொருள் ஒற்றுமை இலக்கண ஒற்றுமை போன்றவையே நான் வடமொழி சுமேருத் தம்ழின் திரிபு என்று கூற வைத்தது.

உலகன்

ekamsath

unread,
May 29, 2014, 2:26:32 AM5/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
நன்றி திரு உலகநாதன்.
எனக்கும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட ஆசை. ஆனால் தற்போது எடுத்துக் கொண்டிருக்கும்  வேலையைச் செய்து முடிக்கவே எனக்கு ஆயுள் போதாதோ என்று அஞ்சுகிறேன். இறையருள் கூட்டுவித்தால் நான் அதில் பங்கு கொள்கிறேன்.

Banukumar Rajendran

unread,
May 29, 2014, 4:43:53 AM5/29/14
to vallamai, mint...@googlegroups.com
செல்வன், ஓலைச்சுவடி நல்லா பெரிசாத்தான் இருக்கு. :-)

யான் சொன்னது மூல சுவடிகளில்!

இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar Rajendran

unread,
May 29, 2014, 4:51:43 AM5/29/14
to vallamai, மின்தமிழ்
2014-05-27 6:38 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 3

வேத மொழி

வியாசர்

பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே,ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் ஸாயணரென்ற வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது. – பாரதி

 ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன. ஆனால்,இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. – பாரதி

          ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரம் கொண்டுவந்தனர்.  பாரதி.

ரிக் வேத மொழி பாணினியின் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபடுகிறது. எனவே ஸம்ஸ்கிருதம் மட்டும் கற்றால் வேதத்தைப் படித்துவிட முடியாது. பிற்கால ஸம்ஸ்கிருத இலக்கிய வழக்கில் இல்லாத சொற்கள் வேதத்தில் பல உண்டு. சில சொற்களுக்கு வேதத்தில் பொருள் வேறு, பிற்கால இலக்கியத்தில் வேறு பொருள். இலக்கண விதிகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.

இது மிக முக்கியமான கருத்து.

மொழியியல் வல்லுனர்களுக்கு பயனப்படும் கருத்துக்கள்.

சங்கதம்தான் எல்லா மொழிகளுக்கும் மூலம் என்று கருதுபவர்கள் சிந்திக்கவேண்டியக் கருத்து. :-))

இரா.பானுகுமார்,
சென்னை

வேந்தன் அரசு

unread,
May 29, 2014, 6:50:28 AM5/29/14
to vallamai, மின்தமிழ்
>ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது,
 ஸம்ஹிதை மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது

உலகன் ஐயா அவர்கள் வாசிப்பது போல் வாசிக்கலாம். அது சுமேருதமிழாக இருக்கலாம்.

29 மே, 2014 4:51 முற்பகல் அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 29, 2014, 10:45:55 AM5/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கோதண்டராமன் ஐயா,

இந்த ரிக்வேதப் பாடல் சுமேரியனில் இல்லை.

நா. கணேசன் 

கோதண்டராமன்

unread,
May 30, 2014, 12:23:49 AM5/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வேதமொழி தனி பாஷையாக உள்ளது என்று பாரதி சொன்னாலும் வேத மொழியும் ஸம்ஸ்கிருதமும் முற்றிலும் வேறுபட்ட மொழிகள் அல்ல. சங்கத் தமிழும் கம்பராமாயணத் தமிழும் போல என்று கொள்ளலாம். வேதத்தில் வழங்கிய சில சொற்கள் ஸம்ஸ்கிருதத்தில் வழக்கொழிந்து போனவை உண்டு..

சில இலக்கண விதிகள் மாறுபடுகின்றன. எடுத்துகாட்டாக, 
ப்ர, வி போன்ற முன்னொட்டுகள் வினைச் சொல்லுடன் பொருள் தொடர்பு கொண்டிருந்த போதிலும், இடத்தால் தொலைவில் அமைவது வேதத்தில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. கீழ்க்கண்டதில் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டவை, பாணினி இலக்கணப்படி, அருகருகில் இருக்க வேண்டியவை, இடையில் மூன்று சொற்களால் பிரிபட்டு நிற்கின்றன.
यत् | चित् | हि | ते | विश: | यथा | प्र | देव | वरुण | व्रतम् | मिनीमसि | द्यवि-द्यवि  RV_1,25.1 

ஸம்ஸ்கிருதத்தில் இறந்தகால வினைகளில் லங், லுங், லிட் என மூன்று வகை உண்டு. வேதத்தில் இவற்றுடன் கூட, லேட் என்று ஒரு வகையும் காணப்படுகிறது. 

இது போன்ற சிறு வேறுபாடுகளைத் தவிர மற்றபடி ஸம்ஸ்கிருதமும் வேத மொழியும் ஒன்றே.

K. Loganathan

unread,
May 30, 2014, 3:00:15 AM5/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு கோதண்டராமன் அவர்களே

இருக்கிருதத்திற்கும் செங்கிருதத்திற்கும் இன்னொரு வேற்றுமை இருப்பதாக் எனக்குப் படுகின்றது.

இருக்கிருதத்தில் உயர்திணை பன்மை உருபாகிய  bhir ( பிர்) என்பது சுமேருத் தமிழின் 'பாயிரே'  
என்பதின் திriபு. கீழே அதன் விளக்கம்.  இருக்கிருதம் இவ்வாறு சுமெருத் தமிழைப் போல இருக்க, 
செங்கிருதம் அவ்வாறு இல்லை என்றே நினைக்கின்றேன். மேலும் இருக்கிருதத்thiலேயே 
அம்மொழி சுமேருத் தமிழில் தோன்றத் தொடங்கிய 'கள்' எனும் அஃறினைப் பன்மை விகுதியை
இழந்துவிட்டது என்றும் நினைக்கின்றேன். என்னால காண முடியவிலை,

இங்கு நான் பிழையாகத் தான் கூறுகின்றேனா?

நான் கூறுவது உண்மை என்றால் இது எவ்வாறு யாண்டு இருக்கிருதம் சுமேருத் தமிழிலிருந்து 
பிரிந்தது என்று காட்டும்

உலகன்

Hymn 1:1.2

I shall now consider the second sloka in the first hymn that contains words that show that Sanskrit is later because less archaic than SumeroTamil.

agnih puurvebhir rishibhir idyo nuutanair uta/ sa devam eha vakshati

May the adorable God, eternally adorned by the seers of times, past and present, be a source of inspiration to wise men of all ages.

இங்கு சுலோகத்தின் பொருள் சொல்லுக்குச் சொல் ஒத்துவருமாறு இல்லை என்பதொடு ஓர் ஊகமாகவே இருகின்றது. ஆக சொற்களைத் தனித் தனியாக ஆய்ந்து மூலப் பொருளைத் தெளியவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம்

இங்கு மேலே முதல் சுலோகத்தில் வந்துவிட்ட ‘agnih’ ‘devam’ ‘pur’ போன்ற சொற்களை விட்டு விடுவோம்.

முதலில் நாம் ஆயவிருப்பது ஓர் இலக்கணக் கூறு- உயர்திணைப் பண்மைச் சுட்டும் பெயர்சொற்களுக்கு ஈற்றில் ஓர் பின்னொட்டாக வரும் ‘bhir’ ‘nair’ போன்ற உருபுகளை ஆராய்வோம்

இங்கு ‘bhir’ என்பது இப்பொழுது தமிழில் விளங்கும் ‘பேர்’ என்ற சொல்தான்.’மூன்றுபேர், நான்குபேர்’ என்றெல்லாம் இன்று இச்சொல் வழங்குகின்றது.  உள்ளபடியே இதன் மூலம் சுமேருத் தமிழ் ‘ba-e-re’ என்றும் தெரிகின்றது. காண்க

Sir

21.  ni-me-lam u-lu-da nam-lu-u-lu  ( When mankind comes before you)

22. ni-me -gar-hus-bi u-mu-re-gin  (In fear and trembling at (your ) tempestuous radiance)

23. me-ta me-hus-bi   su ba-e-re-ti  (They receive from you their just deserts)

* Ta. nii meLLam  vizuta uLuuLunam

நீ மெள்ளம் உலகிட நம்.உளு.உளு

* Ta. nooy mey kaal ush(Na)bi uu maar kan(al)

நோய் மெய் கால் உஷ்(ண)பி ஊ மார். ஏகின்

·       Ta. meyttu mey ush(Na)bi  cuur ba-yiree ti(ti)

மெய்த்து மெய் உஷ்(ண)பி சூர் பாயிரே தி(தி)

இங்கு ‘ba-e-re’ என்பது , ‘ba’ ‘e-re’ என்ற இரண்டு சொற்களின் ஒட்டாகும். இங்கு ‘ப, பா’ என்பது உயர்திணை சுட்டுபோல் தெரிகின்றது. தொல்காப்பிய காலத்தில் ‘ப’ எனும் தனிச் சொல்லே ‘ உயர்திணைப் பன்மை’ காட்டும் விகுதியாக வழங்குகின்றது. ‘என்ப’ ‘சொல்ப’ என்றெல்லாம் வினைச் சொற்கள் பயில்வதைக் காண்க

e-re> இரே, ஈரே என்பது ‘பலர்’ என்ற கருத்தின் பன்மைச் சுட்டு. இது சுமேருத் தமிழின் ‘e-ne> இனம் என்ற சொல்லின் ஓர் திர்பு ஆகும். (e-ne> இன(ம்) என்பது குலம் குழு என்பன போன்ற சொற்களில் ஒன்று, ஓர் மக்கள் தொகுதியைக் குறிப்பது. இப்பொழுது இது ‘ஆர், அர் ஓர்’ என்றெல்லாம் திரிந்து திகழ்கின்றது

e-ne > இனம்

இச்சொல் வெகுவாகப் பயிலும் ஓர் சொல்லாகும். காட்டாக இங்கு ஓர் கிளவி

Sulgi Hymn B

141. inim-dingir-re-e-ne nig kal-kal-la-am     The word (will) of the gods is then most precious ...

எனெம் திங்கிர்-இனே நிக கல்கல்.ஆம் (“)

இங்கு ‘இனே’ என்ற சொல் இனம் என்ற பொருளில் தெய்வங்களின் பன்மையைச் சுட்டி நிற்பதைக் காண்க. இந்த ‘இனே’ தான் திரிந்து ‘இரே’ ஆகி பின் இப்பொழுது பயிலும் உயர்திணைப் பன்மை சுட்டும் உருபாக ‘அர், ஆர்’ என்றெல்லாம் ஆகி இருக்கின்றது போலும்.

ஆக ba-e-ne என்ற சொல்லே சுமேருத் தமிழில் ‘ba-e-re’ ஆகி பின் இருக்கு வேத காலத்தில் ‘bhir’ ஆகி பின் தமிழில் இன்னும் திரிந்து ‘பேர்’ ஆகிவிட்டது போலும்

இங்கு ஓர் கால நியதியைக் காண்கின்றோம்

Ba-e-ne> ba-e-re > Sk bhir> Ta peer

இந்த நியதி அல்லது வரலாற்றுப் போக்கு எதைக் காட்டுகின்றது?  சுமேருத் தமிழ் இருக்கிருததிற்கு வடமொழிக்கு முற்பட்ட ஒன்று என்பதை நலமேக் காட்டுகின்றது என்று நினைக்கின்றேன்

--

தேமொழி

unread,
May 30, 2014, 3:06:25 AM5/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

என்ன தான் இருக்கிறது வேதத்தில் ? – 4

வேத உரைகள்

சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் ஸாயண பாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது. 

          எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்து விட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது,யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள் கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள். -பாரதி 

சாயணாசாரியார் உரை

வேத ரிஷிகளின் அருள் மொழிகள் யாகங்களையே கருப்பொருளாக உடையன என்னும் கருத்து பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே தோன்றிவிட்டது. பிராமணங்கள் வெவ்வேறு வகையான யாகங்களைக் குறிப்பிடுகின்றன. வேதத்தில் கூறப்பட்ட சொற்களுக்கு அவை அளிக்கும் விளக்கம் யாகச் சார்புடையனவாகவே  இருக்கின்றன. இந்தப் போக்கை அப்பொழுதே சிலர் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களால் தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. எந்த விதமான யாகமும் வேண்டாம், பிரம்மத்தைப் பற்றிச் சிந்திப்பது தான் கடைத்தேறும் வழி என்றன உபநிடதங்கள்.

            ஆனால் உபநிடதக்காரர்கள் ஸம்ஹிதைகளை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கண்டு பிடித்து விளக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. வேதத்தின் பொதுவான கருத்து உருவமற்ற குணமற்ற பிரமம் தான் என்று விளக்குவதில் அவர்கள் ஈடுபட்டனர்.

            சாயணர், பிராமணங்களைப் பின்பற்றி, எல்லாவற்றையும் யாகக் கண் கொண்டே பார்க்கிறார். பொருள் தெளிவாகத் தெரியும் இடத்தில் கூடத் தேவை இல்லாமல் யாகக் கருத்தைப் புகுத்துகிறார். உதாரணமாக, 8.66.4 இல் “புதைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை இந்திரன் தன் பக்தர்களுக்குத் தருகிறான்” என்று வருகிறது. ‘யக்ஞத்தால் போற்றப்பட்டவுடன்’ என்று சாயணர் சேர்க்கிறார்.  அதே போல, 8.63.8 இல் “நீ என் ரதத்தின் சக்கரம் செல்லும் பாதையைக் காப்பாற்று” என்று வருகிறது. ‘நான் யக்ஞத்துக்குச் செல்லும்போது’ என்ற தொடரைச் சாயணர் சேர்க்கிறார்.

            சாயணருக்கு முன் ஸ்கந்த ஸ்வாமி, நாராயணர், உத்கீதர், மாதவ பட்டர், வேங்கட மாதவர், தானுஷ்க யஜ்வா, ஆனந்த தீர்த்தர் என்ற மத்வாசார்யர், ஆத்மானந்தர் ஆகியோர் ரிக் வேதத்துக்கு உரை எழுதியுள்ளனர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் ஒரே முழுமையான உரை சாயணருடையது தான். அவரது உரையை அடிப்படையாகக் கொண்டு தான் மேலை நாட்டவரும் தற்போதைய இந்திய வேத இயல் அறிஞர்களும் வேத ஆராய்ச்சியைத் துவக்கி புதிய பொருள் காண முயன்று வருகின்றனர். ஸாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் ஸாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார் என்று பாரதி கூறுவது கவனிக்கத்தக்கது.

மாக்ஸ்முல்லர்

            மேலை நாட்டு வேத ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தக்கவர் மாக்ஸ்முல்லர். அவர் இந்தியாவிற்கு வந்ததில்லை.220px-Max_Muller ஆனால் அவருக்கு முன் பல ஜெர்மானியர்கள் எழுதிய, பதிப்பித்த புத்தகங்கள் மற்றும் இந்தியாவில் அவரது நண்பர்கள் மூலம் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து ரிக் வேதத்திற்கு ஒரு முழுமையான உரை எழுதினார். சாயணர் உரை எழுதிய ஏட்டுச் சுவடிகள் அவருக்குக் கிடைத்தவை 12. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன. (சாயணர் உரையிலேயே பல இடைச் செருகல்கள் புகுந்துள்ளன என்பது தெரிகிறது.) சிறு வேறுபாடுகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வகைப்படுத்தியதில் அவை மூன்று பிரிவுகளில் அடங்கின. ஒன்றுக்கொன்று பெருத்த வேறுபாடு உடைய அவற்றில் எது உண்மையான பொருள் என்று கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமான வேலை. அதனால் அவருக்கு இந்த வேலையை முடிக்க 45 ஆண்டுகள் ஆயின.

வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த ஆராய்ச்சியிலேயே அவர் செலவழித்த பின்னரும் அவரால் வேதத்தின் மேலெழுந்தவாரியான பொருளைத் தான் அறிய முடிந்தது. எனவே அவர் வேதம் என்பது பல வகையான பழங்கால நம்பிக்கைகள் கொண்டதும் பல வேறு தெய்வங்களைப் போற்றுவதுமான நாகரிகமற்ற கூட்டத்தினரின் ஒரு நூல் என்று தான் கருதினார். மேலும், இந்தியாவில் புதிதாகக் குடியேறிய ஒரு கூட்டம் மாறுபட்ட சமய நம்பிக்கைகள் கொண்ட பழங்குடியினரின் எதிர்ப்பை எதிர் கொண்ட நிலையை அது குறிப்பிடுவதாகவே அவர் முடிவு கட்டினார். 

அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்த பிற்கால ஆராய்ச்சியாளர்கள் வேதத்தினுள் ஆழமாகச் செல்ல முடிந்தது. அவர்கள் வேதத்தின் உண்மையான கருத்தை அறிய  முயன்று வருகின்றனர். மாக்ஸ்முல்லரின் இனப் போராட்டக் கருத்தைப் பலரும் மறுத்துள்ளனர். ஆனாலும் இன்று வரை பாடப் புத்தகங்களில் மாக்ஸ்முல்லரின் கருத்தே நிலைபெற்றுள்ளது.

ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி

Dayanand_Swamiஇதற்கு எதிர் வினையாகக் கிளம்பியவர் ஆர்ய ஸமாஜ நிறுவனர் ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி. இந்தியரின் பல தெய்வக் கொள்கை, உருவ வழிபாடு, ஜாதி முறை இவற்றைக் கிருத்துவர்களும் இஸ்லாமியரும் குறை கூறியது அவருக்கு உகப்பாக இல்லை. இந்து சமயம் பல வேறு காலங்களில் பல வேறு தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

“வேதம் அநாதியானது, இறைவனின் வாக்கு அது. அதில் இல்லாதது இல்லை. இன்று புதிதாக வந்திருக்கும் ஆகாய விமானம், தொலைபேசி, ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்பட எல்லாமே வேதத்தில் உண்டு. அஹிம்சைக் கொள்கை புத்த மதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல. அது இங்கிருந்து தான் புத்த மதத்திற்குப் போயிற்று. வேதத்தில் ஒரு தெய்வக் கொள்கை தான் இருக்கிறது, உருவ வழிபாடு இல்லை, ஜாதி முறைகள் இல்லை” என்று நிரூபிக்க விரும்பின அவர் வேதத்துக்குப் புதிய பொருள் கண்டார். வேதச் சொற்களின் வேரை ஆராய்ந்து சாயணரும் மாக்ஸ்முல்லரும் சொல்லாத புதிய பொருள் உரைத்தார். சில இடங்களில் அவர் சொல்வது பொருத்தமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அவர் வலிந்து பொருள் கொள்வது நன்கு வெளிப்படுகிறது.

உதாரணமாக, ரிக் 1.162 சூக்தம் முழுவதும் யாகத்தில் குதிரையைப் பலி இடுவது பற்றியது. பலியிடப்பட்ட குதிரை தேவ லோகம் செல்லும்போது, அதன் உடலின் எல்லாப் பகுதிகளும், பலியிடுவதற்கு முன் அதன் வாயில் வைக்கப்பட்ட புல் உள்பட, எல்லாம் கூடவே போகட்டும் என்று வேண்டப்படுகிறது. அதில் 9வது மந்திரத்தின் சாயணர் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

            குதிரையின் மாமிசத்தில் ஈக்கள் சாப்பிட்டது, வெட்டும் கத்தியிலும் தடவும் குச்சியிலும் ஒட்டிக் கொண்டிருப்பது, மாமிசத்தை எரிப்பவருடைய கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பது இவை எல்லாம், தேவர்களிடத்தில் நீ போய்ச் சேரும்போது, உன்னுடன் இருக்கட்டும்.

இதே மந்திரத்துக்கு தயானந்தர் அளிக்கும் விளக்கம் துளிக்கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. எந்த அகராதியிலும் இல்லாத புது அர்த்தத்தை எந்த நியாயமும் இன்றி அவர் ஏற்படுத்தியிருப்பதைக் கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

            வேலைக்காரர்கள் குதிரையை துர்க்கந்தம் இல்லாததாக, ஈ இல்லாததாக வைத்திருக்க வேண்டும். தன் கையினாலும் கயிற்றினாலும் உயர்ந்த நியமத்துடன் தன் விருப்பம் போல் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் குதிரை நன்றாக வேலை செய்யும். 

க்ரவிஷ என்ற சொல்லுக்கு மாமிசம் என்பது தான் பொருள். அப்படித் தான் எல்லா இடங்களிலும் பொருள் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. தயானந்தர் அதற்கு விரைவாகச் செல்லும் என்று பொருள் தருகிறார். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் க்ர என்றால் செல்வது என்று பொருள். அதிலிருந்து வருவதால் க்ரவிஷ என்பது விரைவாகச் செல்கின்ற எனப் பொருள்படும் என்று விளக்குகிறார். இத்தகைய சுற்றி வளைத்துப் பொருள் கொள்ளும் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

மேலை நாட்டவர் இந்து சமயத்தைப் பற்றிக் குறையாகக் கூறியவற்றை மறுப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார் தயானந்தர்.  புலால் உண்ணாமைக் கொள்கையை இந்து சமயம் சமண புத்த சமயங்களிலிருந்து பெற்றது என்பதை ஒப்புக் கொள்ள அவர் விரும்பவில்லை.

எந்த சமயமும் தான் நிறுவப்பட்ட காலத்தில் இருந்தது போலவே இல்லாமல் காலப்போக்கில் தன்னைத் தானே திருத்திக் கொள்வது தான் வளர்ச்சியாகும். அது அந்த சமயத்தை வலுவாக்கும். தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளாத சமயம் அழி்ந்து விடும். வேதத்தில் கூறப்படாத எத்தனையோ விஷயங்கள் இன்றைய இந்து சமயத்தில் உள்ளன. அவை காலப் போக்கில் தேவைக்கேற்பச் செய்து கொள்ளப்பட்ட மாற்றங்கள். அவற்றை நீக்கி விட்டு வேத காலத்தில் இருந்த நிலைமைக்கே திரும்பிப் போக வேண்டும் என்று கூறுவது பிற்போக்கானது.

தயானந்தரால் ஏற்பட்ட ஒரு நன்மை, வேதத்திற்கு அர்த்தம் பார்க்கக் கூடாது என்ற பயம் நீங்கி அதை ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது தான்.

படங்களுக்கு நன்றி:

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

வேந்தன் அரசு

unread,
May 30, 2014, 7:01:19 AM5/30/14
to vallamai, மின்தமிழ்
>
இத்தகைய சுற்றி வளைத்துப் பொருள் கொள்ளும் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

உலகன் ஐயாவின் பாணி போல்.

30 மே, 2014 3:06 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

கோதண்டராமன்

unread,
May 31, 2014, 4:53:43 AM5/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
திரு உலகநாதன்,
பிர் என்று ஒரு வேற்றுமை உருபு இல்லை. பிஸ் भिस्  என்ற மூல வடிவம் கொண்ட ஒன்று இருக்கிறது. அது மூன்றாம் வேற்றுமைப் பன்மை உருபு. சொல்லில் இணையும்போது பி:  भिः என்று வரும். (கடைசியில் உள்ள இரு புள்ளிகள் விஸர்க்கம் எனப்படும். அது முன் வரும் உயிர் ஒலிக்கேற்ப  மாறுபடும். இங்கு அது பிஹி என உச்சரிக்கப்படும்.) இந்த உருபு கொண்ட சொல் வேறு சில (அவை விரிக்கிற் பெருகும்) முதல் எழுத்துக்களைக் கொண்ட சொற்களோடு இணையும்போது மட்டும் பிர் என ஆகும். எல்லா இடங்களிலும் அல்ல. தற்கால ஸம்ஸ்கிருதத்திலும் அந்த பிஹி கொண்ட சொற்கள் இருக்கின்றன. எ.கா. - கவிபிஹி- கவிஞர்களால்,

ஸம்ஸ்கிருதம் தெரியாது, நாகரி எழுத்தும் சரிவரத் தெரியாது என்று நீங்களே ஒப்புக் கொள்ளும் நிலையில் சுமேருத் தமிழிலிருந்து தான் இருக்கிருதம் வந்தது என்று நிரூபிக்கக் கச்சை கட்டிக் கொண்டு நீங்கள் இறங்கியிருப்பது அரங்கின்றி வட்டாடியதற்கு ஒப்பாகத் தோன்றுகிறது. (உவமை கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்.). 

நான் இந்தப் பயனற்ற உரையாடலை மேலும் தொடர விரும்பவில்லை.

நான் எழுதியதில் ஏதேனும் தவறு இருந்தால்  சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்வேன்.
இதற்கு மாறுபாடாக, நீங்கள் வேறு எங்கேனும் படித்திருந்தால் தெரிவியுங்கள், விளக்கம் சொல்கிறேன். நன்றி
கோதண்டராமன்.

K. Loganathan

unread,
May 31, 2014, 8:00:50 AM5/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 த்ரிஉ கோதன்றாமன் அவர்களே

 மிக்க ந்னறி. ஆயினும் உடன்பாடு இல்லை, நான் தன் அடக்கத்திற்கும் பிழை இருக்க்லாம் என்ற எணணத்திலும் என்னிடம் தேவநகரி எழுத்து அறிவு அதிகம் இல்லை என்றெல்லாம் கூறினேன். அதனை ஓர் குறையாக எடுத்துக்கொளளக் கூடாது.

தங்க்ஜளுக்கு சுமேருத் தமிழைப் பற்ரி ஒன்றுமே தெரியாது.  இவை எல்லாம் புதிய விசயனக்கள். திரந்த மனத்தோடுதான் அணுக வேண்டும்.

 bhir  என்ற பன்மை உயர்திணை சுட்டு இருக்கிருததில் பல இடங்களில் இருக்கின்றது. நான் சுட்டியது ஓர் சில இடங்களில் வெகுவாக ஆராய்ந்தப் பிறகே இதனை கூறுகின்றேன்.

 காண்க. இதனைப் போன்று எத்தனையோ இடங்கள்

agnih puurvebhir rishibhir idyo nuutanair uta/ sa devam eha vakshati

May the adorable God, eternally adorned by the seers of times, past and present, be a source of inspiration to wise men of all ages.

இங்கு  -ir  என்னும் ஈறு சுமேரியன்  e-re  என்பதின் திரிபு  என்பதொடு பன்மை சுட்டுவதும் மறுக்க முடியாத ஒன்று. இரண்டு பனமை உயர்திணை சுட்டும் உருபுகள்தாம்

ஆயினும் நானும் இதனோடு விடுகின்றேன். இன்னும் எத்தனையோ சொற்கூறுகள் இலக்கணக் கூறுகள் எல்லாம் இருக்கின்றன. இருக்கிருதம் சுமேருத் தம்ழின் திரிபு என்பதை மறுப்பதற்கு இல்லை,

சுமேருத் தமிழ் அறிவு பரவ நான் கூறுவதின் உண்மையும் வெளியாகும்

உலகன்

--

கோதண்டராமன்

unread,
May 31, 2014, 11:59:08 PM5/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//agnih puurvebhir rishibhir idyo nuutanair uta/ sa devam eha vakshati

May the adorable God, eternally adorned by the seers of times, past and present, be a source of inspiration to wise men of all ages.//

திரு உலகநாதன் அவர்களே,

சுமேருத் தமிழ் என்ற சொல்லையே இப்போது தான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன் என்பதை முன்னரே கூறிவிட்டேன். ஆகையால்

சுமேரிய மொழியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பது வெளிப்படை.

நீங்கள் காட்டிய எடுத்துக்காட்டில் வரும் பிர் சந்தியினால் வருவது. பிஹி என்பது அடுத்து வரும் எழுத்துகளைப் பொறுத்து பிர் என மாறும் என

என் சென்ற கடிதத்தில் கூறியிருந்தேன் அல்லவா, அந்த சில இடங்களில் இதுவும் ஒன்று.

மீண்டும் கூறுகிறேன். பிர் என்பது மூல வடிவம் அல்ல, பிஹி சில சந்திகளில் போட்டுக் கொள்ளும் வேடம். இது இன்றைய

ஸம்ஸ்கிருதத்திலும் உண்டு.

இதே ரிஷிபிஹி என்ற சொல்லுக்குப் பிறகு கரோதி வந்தால் அது ரிஷிபிஹி கரோதி என்று வரும்.. சலதி  வந்தால் ரிஷிபிஹி

சலதி என்று  வரும்.  தனோதி வந்தால் ரிஷிபிஹி தனோதி என்று வரும். பஞ்ச  வந்தால் ரிஷிபிஹி பஞ்ச என்று வரும். சிவ 

வந்தால் ரிஷிபிஹி சிவ என்று வரும். ஸர்ப்ப  வந்தால் ரிஷிபிஹி ஸர்ப்ப என்று வரும். .

கோதண்டராமன்

K. Loganathan

unread,
Jun 1, 2014, 12:20:38 AM6/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு கோதண்டராமன் அவர்க்ளே

 இதுவோர் புதியத் துறை. சுமேருத் தமிழும்ம் வடமொழியும் தெந்தமிழும் நலமே தெரிந்தவர்கள் செய்யக் கூடிய ஆய்வுகள்,

இப்படிப்ப்ட்ட அறிஞர்கள் இனிமேல் தான் தோன்ற வேண்டும் எனது முயற்ச்கள் எல்லாம் இத்தகைய அறிஞர்களை பலகலைக் கழகங்கள் உருவாக்க வேண்டும் என்பதே.

தாங்கள் முடிந்தால் சுமேருத் தமிழை கற்றுக் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால தக்காரிடம் விட்டு விடுங்கள்,

யான் இருக்குவேத்தில் பல இடங்களில் தேடியும் சுமேருத் தமிழின் 'கள்' எனும் அஃறிணை பன்மை விகுதியைக் காண முடியாது  bhir  போன்ற பனமை சுட்டும் ஈறுகளில் -ir'  எனும் விகுதியைக் கண்டுள்ளேன். இது சுமேரிய  e-re  என்பதின்  திரிபு என்பதே எனது கருத்து. இதுவவே தெந்தமிழில் 'அர், ஆர்" விகுதிகளாக இருக்கின்றது என்பது தெளிவு. 

தாங்கள் கூறுவது சந்தி விகாரங்களால் 'ஹி' என்று ஆகிவிட்டதா என்று தெரியவில்லை, இது மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாக இருக்கலாம்

மேலும் இந்த சுமேரிய இ-ரே யும்  e-ne (   இனம்) என்ற தனிச் சொல்லின் திரிபு.

மீண்டும் உடன் ஓர் அவசர முடிவிற்கு வராது,    தக்க முறையில் ஓர் ஆய்விற்குரிய விசயமாக இதனை எடுத்துக்கொள்வதே சிற்ப்பு என்று விட்டு விடுவதே நலம்

மீண்டும் கூறுகின்றேன்

என் ஆய்வில் குறைகள் இருந்தாலும் பொதுவாக இருக்கு வேதம் புருஷ சுக்தம் பக்வத் கீதை போன்ற பல தரப்பட்ட வடமொழி இலக்கியங்களை ஆய்ந்தே நான் வடமொழி சுமேருத் தமழின் திரிபு என்கின்றேன்

பகவத் கீதை போன்ற பல வடமொழி இலக்கியங்கள் தமிழ் எழுத்திலும் உண்டு.

வடமொழியோடு சுமேருத் தமிழும் கற்க கூடியவர்களின் முடிவிற்கு விட்டு விடுவோம்

உலகன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jun 1, 2014, 7:38:23 AM6/1/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

1 ஜூன், 2014 12:20 முற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

தமிழில் இல்லாமல் வடமொழிகளில் உள்ள ஒலிகள் கொண்டதால் சுமேரு கிருதம் என சொல்லலாமே

தனி இழையில் சுருக்கமாக சொல்லுங்க. 

சுமேருகிருதமா? சுமேருதமிழா.?

தேமொழி

unread,
Jun 3, 2014, 1:47:49 AM6/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

என்ன தான் இருக்கிறது வேதத்தில் ? – 5

அரவிந்தர் எழுதிய வேதத்தின் ரகசியம்

அரவிந்தர், வேதத்தின் ரகசியம் என்ற நூலில் வேதம் முழுவதும் மனவியல் குறியீடுகளைக் கொண்டது என்று சொல்லி அதற்கேற்ப சில மந்திரங்களை மொழி பெயர்த்துக் காட்டினார். அக்னி என்பது ஞான சக்தி, தெய்விகமான அறிவுத் துணிவு (illuminated divine will). இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி (pure illuminated intelligence). பசு என்பது ஞான ஒளி என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார். அவரது சீடர்கள் அவர் வழி நின்று ரிக் வேதம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். ஓரிரு மந்திரங்களில் அவரது குறியீடுகள் பொருத்தமாக உள்ளன என்பது உண்மை என்றாலும் எல்லா இடங்களிலும் அக் குறியீடுகள் பொருந்த வில்லை. மேலும் ஞான சக்தி, விஞ்ஞான சக்தி என்பவை பாமரர்களுக்குப் புரிவதில்லை.

சொற்களுக்குப் பொருள் காண்பதில் அபிதா (நேர்ப் பொருள்), லக்ஷணா (உருவகப் பொருள்) என இரு வகை உண்டு. ஒரு உதாரணம் பார்ப்போம்.

எங்கள் வீட்டு நாய் குரைப்பதே இல்லை. யாரேனும் வந்தால் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும். இந்த வாக்கியத்தில் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்த அந்த நாலு கால் பிராணியைத் தான் குறிக்கும். இது அபிதா-நேர்ப்பொருள்.

ஐயா, நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன். என்றும் உங்கள் காலடியில் நாயாக இருப்பேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு நேர்ப் பொருள் பொருந்தாது. இங்கு அதற்கு நன்றி உடையவன் என்பது பொருள். இது லக்ஷணா எனப்படும்.

லக்ஷணாவில் ஒரு சொல்லுக்கு ஒரு உருவகப் பொருள் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்.

ஊரைச் சுற்றி வெள்ளம். வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நூறு பேர் ஒரு மேடான இடத்தில் கூடி நின்றனர். எல்லோருக்கும் பசி. உணவுக்கு வழி இல்லை. அப்பொழுது ஒரு ஹெலிகாப்டர் வந்தது. இருபது உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவு தான். மனிதர்கள் நாய்கள் ஆயினர். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு தந்நலமே பெரிதாகக் கருதிச் சண்டை போடுபவர் என்று பொருள்.

வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையாக வெளியில் போய்விட்டார்கள். நான் தான் இங்கு நாயாக காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு காவல் காப்பவர் என்று பொருள்.

வேலை தேடி நாயாக அலைகிறான். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்குப் பயனின்றி அலைபவர் என்பது பொருள்.

இப்படி வேதத்திலும் ஒரு சொல்லுக்குப் பல உருவகப் பொருள்கள் உள்ளன. அரவிந்தரின் சீடர்களின் உரை இந்த வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும், அபிதாவாக வரும் இடங்களில் கூட, ஒரே உருவகப் பொருளைக் கூறுகிறது.

பசு என்பதற்கு ஒளிக் கிரணம் என்பது ஒரு உருவகப் பொருள். இந்த அரசன் எனக்கு 100 பசுக்களைக் கொடுத்தான் என்று வரும் இடத்தில் 100 ஒளிக் கிரணங்களைக் கொடுத்தான் என்று பொருள் சொல்வது எவ்வளவு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும்.

மேலும், லக்ஷணாவில் சொல்லுக்கும் உருவகப் பொருளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும். அரவிந்தர் பசுவை ஞான ஒளி என்றும், நெய்யை அறிவுத் தெளிவு என்றும் பொருள் கொள்கிறார். எப்படித் தொடர்பு படுத்துகிறார் என்பது விளக்கப்படவில்லை.

******** ************************************ ******************************** *********

VedicAstrology

வேத மொழியோ வழக்கிழந்தது. இலக்கணமும் மாறுபடுகிறது. இடைச் செருகல்களும் பல உள்ளன. மந்திரங்களில் பல விடை தெரியாத புதிர்களாக உள்ளன. நமக்குக் கிடைக்கும் பழமையான ஒரே உரையோ ஒரு சார்பு உடையது. பிற்கால உரைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. இவ்வாறு, வேதத்திற்குப் பொருள் பார்க்க முனையும் போது சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. இத்தனை காலம் இத்தனை பேர் முயன்று பார்த்து இயலாத காரியம் என்று கை விட்டு மூலத்தை மட்டும் அதன் ஒலி வடிவில் காப்பாற்றி வந்தால் போதும் என்று முடிவு கட்டி விட்ட நிலையில் பாமரன் மட்டும் என்ன சாதிக்க முடியும்?

எல்லா உரைகளும் ஒவ்வொரு சார்பு உடையது என்றாலும் இருப்பவற்றுள் சாயணர் உரை தான் பழமையானதும் முழுமையானதும் ஆன உரை என்பதால் அதைப் பிரதானமாகக் கொண்டு, அதனுடைய குறைகளைக் கூடியவரை களைந்து பொருள் காண முயன்றான் பாமரன்.

வேதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்று பிரதானமானதாக இருக்கும், மிகுதியாகப் பயன்படுத்தப்படும். சில இடங்களில் பொருள் மாறுபடும். பிரதானமான பொருளை விட்டு ஓரிடத்தில் சிறப்பான பொருள் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வழக்கமான பொருள் இந்த இடத்தில் பொருந்துமா? பொருந்தாது என்றால் வேறு எந்தப் பொருள் பொருந்தும்? அந்தப் புதுப் பொருளைப் பயன்படுத்த வேதத்தில் முன் உதாரணங்கள் உண்டா? என்பனவற்றை ஆராய வேண்டும். வேதச் சொல்லின் பல விதமான பொருள்கள் கூடியவரை வேதத்திலேயே தேடப்பட வேண்டும். பிற்கால நூல்களில் வழங்கும் பொருளை வேதத்தில் நுழைப்பது தவறு. இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான வழிமுறையே இந்நூலில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, அசுரர் என்ற சொல்லுக்குப் பல வகையான பொருள்கள் சாயணரால் தரப்பட்டுள்ளன. அவற்றில் வலிமையானவர் என்ற பொருள் பிரதானமானதாக இருக்கிறது. சாயணர் சில இடங்களில் ராட்சசர் என்றும் யாகங்களை அழிப்பவர் என்றும், சில இடங்களில் நேர் மாறாக, அசுரர்களை அழிப்பவர் என்றும் பொருள் கூறுகிறார். அந்த இடங்களிலும் வலிமையானவர் என்ற பொருளே பொருத்தமாக இருக்கும் போது புதிய பொருள் காண அவசியமே இல்லை. தேவை இல்லாமல் யாகச் சார்பு திணிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அசுரர் பற்றி எழுதப்பட்டுள்ள அத்தியாயத்தில் இதைக் காணலாம்.

இதுவரையில் நாம் பார்த்தது முன்னுரை தான். இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியம் தானா?

வேதத்தின் பேரளவையும், அதைப் படிப்பதில் உள்ள சங்கடங்களையும் எடுத்துக் காட்டி, இத்தனைக்கும் நடுவில், ஒருவன் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது மிக மிகச் சொற்பமானது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு வேதத்தில் இருப்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டக் கூடாது என்பதற்குத் தான் இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியமாயிற்று. வேதத்தில் என்ன இருக்கிறது என்ற விவரம் இனி வர இருக்கிறது. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்வோம்.

படம் உதவி: www.hinduhistory.infohttp://www.skjainastro.com/VedicAstrology.JPG

நன்றி: வல்லமை http://www.vallamai.com/?p=45037

தேமொழி

unread,
Jun 5, 2014, 10:44:49 PM6/5/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 6

வேதத்தில் என்ன இல்லை?

vedas

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந்தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி

வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.

அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை என்ன என்பதை ஆராய முடியும்.

விநாயகர்

முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.

அது எப்படி இல்லாமல் போகும்?

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம் 
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத 
ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.

இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.

கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)

சிவன்

வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.

ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார் [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4]. இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.

யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.

கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.

இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் ‘பழுப்பு நிறத்தவர்’ என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார் [யஜுர் 1.8.6.6].

தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன (உதாரணம் – யஜுர் 1.1.11.16).

இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

திருமால்

வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.

இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.

பிற தெய்வங்கள்

இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.

அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.

பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல.

இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.

இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?
பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.

மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள். இவற்றின் விளக்கத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.

படம் உதவி:

http://www.allabouthinduism.info/tag/rig-veda/

http://www.allabouthinduism.info/wp-content/uploads/2013/07/veda.jpg

 நன்றி: வல்லமை http://www.vallamai.com/?p=45280

வேந்தன் அரசு

unread,
Jun 6, 2014, 6:31:17 AM6/6/14
to vallamai, மின்தமிழ்
>
சிவ என்ற சொல் இருக்கிறது. 

நான் தேடிய போது அகப்படலை.  ஆங்கில மொழி பெயர்ப்பில் பார்த்தேன்.

5 ஜூன், 2014 10:44 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Jun 6, 2014, 7:36:19 AM6/6/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு வேந்தன் அரசு அவர்களே

''சிவம்' என்ற சொல் வேதத்திலும் இருக்கின்றது சுமேருத் தமிழிலும் இருக்கின்றது. எனக்கு கிடைத்த யஜுர் வேத 'ஸ்ரீ ருத்ரம்' என்ற நூலிலிருந்து கீழே ஓர் ஆய்வு.  'ருத்ரா"( உருத்திரன்) என்ற சொல்லும் சுமெருத் தமிழ் உருது(செம்பு) என்ற சொல்லிருந்து வந்துளளது. தீ வண்ணன் என்று பொருள் தரும்

சுட்டி:

1.2

யாத  இஷு சிவதமா சிவம் பபூவ தே தனு:/

சிவா சரவ்ய யா தவ தயா நோ ருத்ர ம்ருபய .. //

(ருத்ர) ருத்ரரே! (தே) உம்முடைய (யா) எந்த (இஷு )பாணம் (சிவதமா) சிறந்த மங்களமுடையதாக (பபூவ) உளதோ , (தே) உம்முடைய (தனு)எந்த வில் (சிவம்) மங்களமுடையதாக ( பபூவ) உளதோ, (தவ) உம்முடைய (யா) எந்த (சரவ்யா) அம்பறாத்தூணி (சிவா) மங்களமுடையதாக உளதோ (தயா) அவற்றால் (ந ) எங்களை (ம்ருபய) இன்புறச் செய்யும்

1.2

yaata ishu civatamaa civam bapuuva tee thanu:/

civaa caravya yaa tava tayaa n_oo ruthra mrupaya:/

O Rudra!  With your arrows that are full of divine qualities, your bow which also divine and your arrow-h9older also the same, grant us happiness and joy

Yaata : which Ta. yaa, yaatu : which Su, a, aa as a-ba: who, a-na: which, what

Civatamaa Civam  : civa-tum-ma civam : the Civam  which brings forth happiness ( or sense safety and security)

Su, sib, si-pa : the shepherd or the power that provides safety and security.

Sulgi Hymn B 73&74

Sipa ildum-ma-bi su-bi hu-mu-dug

u-me-da u-ul-li-a-se

Ta.  cipa ezutummabi suurbi emma tuukku ( I raise my hands towards Civa who has brought forth all)

 UNmeyyodu uu uuziya see ( truly to the end of the universe)

tum-ma < Su. dum-ma , dim-me  < dib-be etc : bring into light, create etc

bapuuva : Ta, ba, baa: to give. Puu: Ta. to blossom, emerge etc.  bapuuva: that which cause the blossoming, emerging nad hence the Creative Power

See.

Sulgi 92 :

Anse-edin-na-se gis-es AD la-ba-gaz-en x la-ba-ba-al-e  ( With javelin I did not kill or or dismember  the horses of the plains)

The VP ba-gaz ( bakazi) and ba-baal-e  ( bapali)  carry the prefix ‘ba” in the sense of ;give; ‘bring about” etc. In Classical  Tamil this prefix has become a suffix ‘bu' etc.

Note: gis-es > eshu > ishu : Ta, iddi : javelin. Here it is interpreted as ‘arrow”

Thanu: bow Ta. taru: tree taru> tanu> thanu: that which is produced from tree branches.

civaa caravya : that which oozes safety and security

caravya : Ta. cori, cura : to ooze out . Su, sur-ra; to ooze out. cura-bi-a > curviya> carviya

yaa tava tayaa : that which is a great in kindness

tava: Ta, tava: great, large  Su. dagal-la : su dagal-la : with broad hands

tayaa= taa-yaa : that which gives. Su. tar,Ta. taa, taru: to give . tayaa kuNam ; generosity, immense kindness

n_oo  mrupaya < naa mari.paya : no fear of death

mru> Ta. mari : to die, death

paya; fear Ta. payam: fear. Su, bu-eh : shudder with fear.

Thus the recovered form of

yaata ishu civatamaa civam bapuuva tee thanu:/

civaa caravya yaa tava tayaa n_oo ruthra mrupaya:/

is

yaatu iishu civa.tarma Civam baapuuva tee tanu/

civaa curabiya yaa tava tayaa naa ruthra maripyam//

The meaning is :

That which are the arrows and bows of brings forth the blessings of safelty and secuty of Civam, who blesses happiness thus very generously and on account of it . O Rudra there is no fear of death

யாது ஈஷு சிவ.தர்ம சிவம் பாபூவ தே தனு/

சிவா சுரபிய யா தவ தயா நா உருத்ரா மரி.பயம்//

ekamsath

unread,
Jun 7, 2014, 3:17:59 AM6/7/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
//நான் தேடிய போது அகப்படலை.  ஆங்கில மொழி பெயர்ப்பில் பார்த்தேன்.//

கீழ்க்கண்ட 20 இடங்களில் சிவ என்ற சொல் ரிக்வேதத்தில் காணப்படுகிறது. (புள்ளி விவரம் கணினியால் கொடுக்கப்பட்டது. ஒரு சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு).

1,31.1

1,187.3

2,20.3

4,11.6

5,1.8

5,5.9

5,24.1

6,15.9

6,45.17

7,9.3

7,19.10

7,34.15

8,4.18

8,39.3

8,63.4

8,93.3

10,25.9

10,92.9

10,124.2

10,165.2

ஆங்கிலத்தில்  auspicious என்று கொடுத்திருப்பார்கள். வேறு சில சொற்களுக்கும்  இதே auspicious என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
கோதண்டராமன்

N. Ganesan

unread,
Jun 7, 2014, 10:23:42 AM6/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
செம்மை, செவப்பு/சிவப்பு என்ற பொருளிலே இருக்குவேதத்தில்  ஶிவ எனுஞ்சொல் வருகிறது.
அப்போது சிவன் தோன்றாத காலம். முதல் மண்டலத்திலே வருணனுக்கு
உள்ள பண்புகள் பிற்காலத்தில் (500-600 ஆண்டுகள் கழிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக)
சிவனுக்கு ஏறுகிறது. தொல்காப்பியத்திலும் திணைக்குக் கடவுளாக சிவன் இல்லை.
வருணன் இருக்கிறான். சங்க காலச் சேரர், பாண்டியர் நாணயங்கள், திருப்பரங்குன்றம்
தமிழ் ப்ராமிக் கல்வெட்டு - இவற்றிலும் விடங்கர் (தை திங்கள் பெயர் காட்டும் வருணன்)
வழிபாடு இருக்கிறது.

வருணனுக்கு மனைவி கொற்றவை என்பது அக் காலம்:

ஶிவ என்பது போல், விஷ்ணு என்றசொல்லும்.பெருமாள் என்ற பொருளில் இல்லை.
சூரியக் கதிர்கள், விண்வெளி என்ற பொருளிலே இருக்குவேதத்தில் பயில்கிறது.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jun 7, 2014, 10:39:38 AM6/7/14
to vallamai, மின்தமிழ்

7 ஜூன், 2014 3:17 முற்பகல் அன்று, ekamsath <ekam...@gmail.com> எழுதியது:

//நான் தேடிய போது அகப்படலை.  ஆங்கில மொழி பெயர்ப்பில் பார்த்தேன்.//

கீழ்க்கண்ட 20 இடங்களில் சிவ என்ற சொல் ரிக்வேதத்தில் காணப்படுகிறது.

எதில் தேடினீர்கள்

நான் http://www.sacred-texts.com/hin/rigveda/ தேடினேன்

N. Ganesan

unread,
Jun 7, 2014, 10:47:23 AM6/7/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Saturday, June 7, 2014 7:39:38 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

7 ஜூன், 2014 3:17 முற்பகல் அன்று, ekamsath <ekam...@gmail.com> எழுதியது:
//நான் தேடிய போது அகப்படலை.  ஆங்கில மொழி பெயர்ப்பில் பார்த்தேன்.//

கீழ்க்கண்ட 20 இடங்களில் சிவ என்ற சொல் ரிக்வேதத்தில் காணப்படுகிறது.

எதில் தேடினீர்கள்

நான் http://www.sacred-texts.com/hin/rigveda/ தேடினேன்

டெக்ஸாஸ் பல்கலை வலைத்தளத்தில் இருக்குவேதம் இருக்கிறது.
தேடலுக்கு மிக உதவும்:

நா. கணேசன்

Dhivakar

unread,
Jun 7, 2014, 12:56:53 PM6/7/14
to vall...@googlegroups.com
மாலும் நான்முகனும் காணா நஞ்சிவனை
 நல்வேதமூலம் நாடிக்கண்டுகொண்டீர் 
நானுமவனைத் தேடித் தேடி அலுத்தேனே 
எனக்குமொரு முறை காணபியுங்கள்
கேள்விகள் பல இருக்குகேட்பதற்கு

Dhivakar, Sent from my iPad 
--

தேமொழி

unread,
Jun 7, 2014, 4:00:59 PM6/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

வேதங்கள் சமஸ்கிரதத்தில் இருந்து நேரடியாகத் தமிழில் எப்பொழுது முதலில் மொழி பெயர்க்கப்பட்டது?

இராமாயண இதிகாசத்தை கம்பர் தமிழில் தந்தது போல யாரேனும் எழுதியுள்ளார்களா?

அக்காலத்தில் யாரேனும் வரிக்கு வரிபொருள் மாறுபடாமல், இடைசெருகல்கள் இன்றி, சுருக்காமல் விரிக்காமல்  தமிழர் படிக்கும் வண்ணம் மொழி பெயர்த்துள்ளனரா?

முதன் முதலில் அவ்வாறு கிடைக்கும் நூல் எந்தக் காலாத்தைச் சேர்ந்தது?

இரு மொழிகளுமே செம்மொழி தகுதி பெற்ற பண்டைய மொழிகளாக  இருப்பதால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே யாரேனும் முயன்றிருப்பர் என்பது எனது எதிர்பார்ப்பு.

தேடிய பொழுது எனக்கு இணையத்தில் கிடைத்த தகவல் >>> http://www.noolulagam.com/2011/03/17/954/    இது மட்டுமே.

இந்து மதத்தினைப் பின்பற்றும் தமிழருக்கு வேதத்தில் என்னதான் இருக்கிறது என்ரு அறியும்  ஆர்வமே இருந்ததில்லையா?

ஒவ்வொரு தங்கும் விடுதிக்கு சென்றாலும், படுக்கைக்குப்  பக்கதில்  தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட விவிலியம் வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.   பல இடங்களில் அவை விலையின்றியும்  வழங்கப்படுவதையும் பார்த்திருக்கலாம்.

என்னுடைய எதிர்பார்ப்பு www.tamilhindu.com போன்று இந்து மதத்திற்கென தமிழில் அமைக்கப்பட்ட தளங்களிலோ, மதுரை  திட்டம் போன்ற தளங்களிலோ இந்நேரம் ஆர்வமுள்ள தமிழ் இந்துக்களுக்காக வேதங்கள் தமிழில் கிடைத்திருக்க  வேண்டும்.

கைபேசி செயலிகளிலும் 
தமிழ் விவிலியம் (https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible), 
தமிழ் குர்ரான் (https://play.google.com/store/apps/details?id=com.hashbits.tamilquran) எனப் 
பிற மத வேதங்கள் தமிழில் கிடைக்கும் பொழுது, இந்து மத வேதங்கள் அவ்வாறு பரவ ஏன் வாய்ப்பில்லை?

போன்றவையும் ...
பொதுமறை திருக்குறளும் கிடைக்கும் பொழுது வேதங்கள் அவ்வாறு கிடைக்க என்ன தடை?

இரு மொழிகளும் நன்கு தெரிந்தவர்கள் இதற்கு முயற்சி எடுப்பார்களா?

வேதத்தில் என்னதான் இருக்கிறது எனத் தெரியாமல்தான் இவ்வளவு நாட்களும் தமிழர்கள் இந்து மதத்தினைப் பின்பற்றி நடக்கிறார்களா?

இல்லை அணைத்து மொழி இந்து மக்களும் இதே போன்ற நிலையில்தான் இருக்கிறார்களா?

ஒரு மதத்தின் நன்னெறிகள் என்னவென்றே தெரியாமல் எதை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் இன்றுவரை...

என்னதான் இருக்கிறது வேதத்தில் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ஏன்தான் தமிழ் இந்துக்களின் மதஆர்வம் இப்படி இருக்கிறது என்ற கேள்வியே பூதாகரமாக நிற்கிறது என் முன்னால்.

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Jun 7, 2014, 5:09:29 PM6/7/14
to vallamai, மின்தமிழ்

7 ஜூன், 2014 4:00 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

இந்து மதத்தினைப் பின்பற்றும் தமிழருக்கு வேதத்தில் என்னதான் இருக்கிறது என்ரு அறியும்  ஆர்வமே இருந்ததில்லையா?

வேதம் படித்தால்தான் இந்துவா?

கிடாய் வெட்டி பொங்கல்வச்சு கல்லை சாமியா கும்பிட்டாலும் இந்துதான். 

தேமொழி

unread,
Jun 7, 2014, 7:33:00 PM6/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///வேதம் படித்தால்தான் இந்துவா?////

இல்லவே இல்லைதான் வேந்தே.  நான் வேதம் படித்ததில்லை, பலரும் என்னைப் போலத்தான் என்றும் இப்பொழுது  புரிகிறது. 

ஆனாலும் வேதத்தில் என்னதான் இருக்கிறது என்று இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.  

சிவன், திருமால் என அடிப்படையில் இந்துமதம் குறிப்பிடும் கடவுள்களையே வேதம் குறிப்பிடவில்லை என்றால், பிறகு அது என்னதான் குறிப்பிடுகிறது என்று அதை மக்கள் பின்பற்றுகிறார்கள் என அசந்து போக வேண்டியிருகிறது.

பிறகு ஆளாளுக்கு இந்து மதம் அப்படி சொல்கிறது, இப்படி சொல்கிறது என்று சொல்லும் பொழுது இந்துவாக வளர்ந்த நான் ஐடென்டிடி கிரைசிசில் மாட்டிக் கொண்டது போல உணர்கிறேன். எதை எதையெல்லாம் வேதம் சொல்வது இல்லை என்று தெரிந்து கொள்வதும் முக்கியம் எனத் தோன்றுகிறது. 

இல்லாவிட்டால் பிறர் அறியாமையைப் பயன்படுத்தி தனக்கு தோன்றியதெல்லாம் அதில் இருக்கிறது என சொல்பவர்கள் மக்களை ஏமாற்ற முற்படவும், அதை உண்மை என நம்பி சாதாரண மக்கள் ஏமாறவும் வழி  ஏற்பட்டுவிடாதா?

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Jun 7, 2014, 9:04:57 PM6/7/14
to vallamai, மின்தமிழ்

7 ஜூன், 2014 7:32 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

///வேதம் படித்தால்தான் இந்துவா?////

இல்லவே இல்லைதான் வேந்தே.  நான் வேதம் படித்ததில்லை, பலரும் என்னைப் போலத்தான் என்றும் இப்பொழுது  புரிகிறது. 

ஆனாலும் வேதத்தில் என்னதான் இருக்கிறது என்று இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.  

சிவன், திருமால் என அடிப்படையில் இந்துமதம் குறிப்பிடும் கடவுள்களையே வேதம் குறிப்பிடவில்லை என்றால், பிறகு அது என்னதான் குறிப்பிடுகிறது என்று அதை மக்கள் பின்பற்றுகிறார்கள் என அசந்து போக வேண்டியிருகிறது.

பிறகு ஆளாளுக்கு இந்து மதம் அப்படி சொல்கிறது, இப்படி சொல்கிறது என்று சொல்லும் பொழுது இந்துவாக வளர்ந்த நான் ஐடென்டிடி கிரைசிசில் மாட்டிக் கொண்டது போல உணர்கிறேன். எதை எதையெல்லாம் வேதம் சொல்வது இல்லை என்று தெரிந்து கொள்வதும் முக்கியம் எனத் தோன்றுகிறது. 

இல்லாவிட்டால் பிறர் அறியாமையைப் பயன்படுத்தி தனக்கு தோன்றியதெல்லாம் அதில் இருக்கிறது என சொல்பவர்கள் மக்களை ஏமாற்ற முற்படவும், அதை உண்மை என நம்பி சாதாரண மக்கள் ஏமாறவும் வழி  ஏற்பட்டுவிடாதா?

வேதங்கள் படிக்காமல் இருப்பதே நல்லது

” ஏண்டா படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலாடா?” 
”படிச்சதனால்தான் இடிக்கணுமுனு தோணுச்சுங்க ஐயா ”

கோதண்டராமன்

unread,
Jun 8, 2014, 1:59:44 AM6/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//செம்மை, செவப்பு/சிவப்பு என்ற பொருளிலே இருக்குவேதத்தில்  ஶிவ எனுஞ்சொல் வருகிறது.//
இல்லை. சிவ என்னும் சொல் நிறத்தோடு சம்பந்தப்பட்டதல்ல, ரிக் வேதத்தில்.

//அப்போது சிவன் தோன்றாத காலம். முதல் மண்டலத்திலே வருணனுக்கு
உள்ள பண்புகள் பிற்காலத்தில் (500-600 ஆண்டுகள் கழிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக)
சிவனுக்கு ஏறுகிறது.//
எல்லாத் தேவர்களும் ஒன்றே என்ற கட்டுரையைப் படிக்கவும்.

//தொல்காப்பியத்திலும் திணைக்குக் கடவுளாக சிவன் இல்லை.
வருணன் இருக்கிறான். சங்க காலச் சேரர், பாண்டியர் நாணயங்கள், திருப்பரங்குன்றம்
தமிழ் ப்ராமிக் கல்வெட்டு - இவற்றிலும் விடங்கர் (தை திங்கள் பெயர் காட்டும் வருணன்)
வழிபாடு இருக்கிறது.
வேதம் புதுப் புதுக் கடவுளர்கள் தோன்றுவதற்கு வழி செய்துள்ளது என்பதையும் மேற்காட்டப்பட்ட கட்டுரையிலிருந்து அறியலாம்.

கோதண்டராமன்

unread,
Jun 8, 2014, 2:19:26 AM6/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//எதில் தேடினீர்கள்

நான் http://www.sacred-texts.com/hin/rigveda/ தேடினேன்//

இணையத்தில் ரிக் வேத பதபாடம் என ஒன்று ரோமன் லிபியில் கிடைக்கிறது. வேத மந்திரங்களைப் பதம் பதமாகப் பிரித்து அமைக்கப்பட்டது.  இணைய தளம் பெயர் மறந்துவிட்டேன். நான் தரவிறக்கி வைத்திருக்கிறேன்.வேண்டுமானால் அனுப்பிவைக்கிறேன். இதில் சில பிழைகள் உள்ளன.

நான் இதை நாகரி லிபியில் மாற்றிப் பிழைகளைத் திருத்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துகிறேன்.
என் மகன் இதை எக்சல் வடிவில் அமைத்து எந்தச் சொல்லையும் தனியாகவோ, இரண்டு  தனிச்சொற்களாகவோ, மூன்று தனிச் சொற்களாகவோ தேடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்.
எடுத்துக் காட்டாக, இந்த்ர, அம்ருத, யக்ஞ இந்த மூன்று சொற்களும் அடங்கிய மந்திரம் எது என்று கேட்டால் அத்தகைய  மந்திரங்களின் பட்டியல் பைவட் டேபிளாக வந்துவிடும்படி அமைக்கப்பட்டது.

இதில் என்ன குறை என்றால் சிவ என்பதைத் தேடும் போது சிவ என்ற எழுத்துகள் இடையில் அமைந்த கசிவன் போன்ற வேறு சொற்களும் வந்துவிடும். அதனால் தான் ஓரிரு பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு எனக் கூறியிருந்தேன்.
கோதண்டராமன்

கோதண்டராமன்

unread,
Jun 8, 2014, 2:52:50 AM6/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//வேதங்கள் சமஸ்கிரதத்தில் இருந்து நேரடியாகத் தமிழில் எப்பொழுது முதலில் மொழி பெயர்க்கப்பட்டது?//
மா.ரா. ஜம்புநாதன் என்பார் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரிக் தவிர மற்ற வேதங்களை மொழிபெயர்த்திருந்தார். அவர் 1974 இல் இறந்தபோது அவரால் மொழிபெயர்க்கப்பட்ட ரிக் வேதம் கையெழுத்துப் பிரதியாக இருந்தது. 1991 இல் அது வெளியாயிற்று. தற்போது இணையத்திலும் கிடைக்கிறது.
ஆனால், தேவார திருவாசகங்கள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலிய தமிழ்நூல்கள் வேதக் கருத்தைத் தான் சொல்கின்றன என்ற கருத்து இங்கே நிலவி வருகிறது. எழுத்துக்கு எழுத்து நேர் மொழிபெயர்ப்பாகச் சொல்லாவிட்டாலும் வேதத்தின் திரண்ட கருத்தே இவை என்பது என் ஆராய்சசியில் தெரிய வருகிறது.
தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனிவாக்கும் கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகமென்றுணர்
என்ற பாடல் இதை உணர்த்தும்.
.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையு்ம்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்ற குறள் பாவின் கருத்து அடுத்து வெளியாக இருக்கும் மனிதன் எனபவன் தெய்வமாகலாம் என்ற கட்டுரையில் வருகிறது.

தேமொழி

unread,
Jun 8, 2014, 3:03:46 AM6/8/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

தகவலுக்கு மிக்க நன்றி திரு கோதண்டராமன்.

..... தேமொழி 

ekamsath k

unread,
Jun 8, 2014, 3:38:43 AM6/8/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

//பிற மத வேதங்கள் தமிழில் கிடைக்கும் பொழுது, இந்து மத வேதங்கள் அவ்வாறு பரவ ஏன் வாய்ப்பில்லை?//

பைபிளைப் பாமரனும் புரிந்து கொள்ளலாம். பேரபிள் என்னும் கதைகள் மூலமாகவே அதன் கருத்துகள் எளியோரையும் சென்றடையும்.

குர் ஆனும் அக்கால நிகழ்வுகளைக் காட்டி இன்னின்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவது. இதை எளியோரும் படிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

வேதம் முழுவதும் உருவகங்கள் நிறைந்தது. எந்த இடத்தில் நேர்ப்பொருள், எங்கு உருவகம் என்பது தெரியமல் குழப்பும் இடங்களும் உண்டு. அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருந்தால் அன்றி வேதத்தைப் படிக்க முடியாது. முன்னுரையில் கூறியபடி விடுகதை போன்ற 1000 மந்திரங்கள் உள்ளன. எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய மந்திரங்களை மட்டுமே நான் இத் தொடரில் கூறி வருகிறேன். இவை புதிர்களை விடுவிக்க ஒரு வழிகாட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

//வேதத்தில் என்னதான் இருக்கிறது எனத் தெரியாமல்தான் இவ்வளவு நாட்களும் தமிழர்கள் இந்து மதத்தினைப் பின்பற்றி நடக்கிறார்களா?

இல்லை அணைத்து மொழி இந்து மக்களும் இதே போன்ற நிலையில்தான் இருக்கிறார்களா?//

வேதசமயம் என்பது மற்ற சமயங்களைப் போன்று ஒரு சமயம் அல்ல. இது ஒரு வாழ்வியல் முறை. இங்கு பாமர மக்களின் அன்றாட வாழ்வில் வேதக் கருத்துகள் புழங்குவதைக் காணலாம். முன்னுரையில் கூறிய, அரியும் சிவனும் ஒண்ணு என்ற பாமர வசனம் வேதக் கருத்தே என்பதைக் கடைசியாக வெளியான கட்டுரை தெளிவுபடுத்தி இருக்கும் என நம்புகிறேன்.

வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த

மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்.

என்ற பாரதி சொல் மெய்யே.

சு.கோதண்டராமன்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/WQZ5dIzO9ls/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Jun 8, 2014, 6:56:56 AM6/8/14
to vallamai
நாலாயிர திவ்யப்பிரபந்தம் திராவிட வேதம் என்றழைக்கக் காரணம் அது இறைக்கருத்துக்கள் பற்றிய ஒரு தொகுப்பே என்பது அடிப்படைக்காரணம்.  வடபுல வேதங்கள் குரு-சிஷ்ய பரம்பரையில் நூற்றுக்கணக்கான ரிஷிகள் (பெண்களும் அடக்கம்) வாய்மொழியாக வழங்கியதன் தொகுப்பு என்பதுபோல் தென்னகத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு என்று குறிக்க வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.  ஆழ்வார்கள் பல்லவ சோழ பாண்டிய சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அது திராவிட வேதம் என அழைக்கப்பட்டது.  அசல் வேஎதத்தைன் மறுபதிப்பு திராவிட வேதம் என்று கருதி திராவிட வேதம் என்றழைக்கப்படவில்லை

சவடால் வைத்தி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jun 8, 2014, 8:33:56 AM6/8/14
to vallamai, மின்தமிழ்

8 ஜூன், 2014 3:38 முற்பகல் அன்று, ekamsath k <ekam...@gmail.com> எழுதியது:

//பிற மத வேதங்கள் தமிழில் கிடைக்கும் பொழுது, இந்து மத வேதங்கள் அவ்வாறு பரவ ஏன் வாய்ப்பில்லை?//

பைபிளைப் பாமரனும் புரிந்து கொள்ளலாம். பேரபிள் என்னும் கதைகள் மூலமாகவே அதன் கருத்துகள் எளியோரையும் சென்றடையும்.

குர் ஆனும் அக்கால நிகழ்வுகளைக் காட்டி இன்னின்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவது. இதை எளியோரும் படிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

வேதம் முழுவதும் உருவகங்கள் நிறைந்தது. எந்த இடத்தில் நேர்ப்பொருள், எங்கு உருவகம் என்பது தெரியமல் குழப்பும் இடங்களும் உண்டு. 

உருவகம் எல்லா கிடையாது. ரொம்ப பழம்கால பாடல் என்பதால் இன்றைக்கு பொருள் விளங்கலை. பிக்காசோவின் ஓவியங்களை விளக்குவது போல் அவன் அவன் பார்வைக்கு தக விளக்கம் சொல்லவேண்டியத்துதான்.
 
தேமொழி

unread,
Jun 11, 2014, 12:46:07 AM6/11/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 7

தேவர்கள் யார்?

தேவ என்ற சொல் ஒளி விடுதல் என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து வந்தது. அதிலிருந்து தோன்றிய சொற்கள் பல உண்டு. தேவ என்ற சொல்லும், ஆகாயம் எனப் பொருள்படும் த்யௌ, தெய்வீகமான என்று பொருள் படும் திவ்ய முதலான அதன் பிற வடிவங்களும் ரிக் வேதத்தில் சுமார் 3000 தடவைகள் வருகின்றன. வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. எனவே தேவர்கள் தாம் ரிக் வேதத்தின் முக்கியப் பொருள் என்று கொள்ளலாம்.

ரிக் வேதம் முழுவதும் தேவர்களைப் போற்றும் துதிப் பாடல்கள் தாம். இந்திரன், அக்னி, வாயு, ஸவிதா, வருணன், மித்ரன், அர்யமான், மருத்துகள், அசுவினி தேவர் எனப்படும் இரட்டையர், பூமி, ஆகாயம், பிரஹஸ்பதி, பிரம்மணஸ்பதி, ருத்ரன் எனத் தேவர்கள் பலராவர்.

தேவர்கள்

தேவர்கள் என்றால் இமையாத கண்களும், கீழே நிலத்தில் படாத கால்களும் உடையவர்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். அதை எல்லாம் சற்று நேரம் மறந்து விட்டு ரிக் வேதத்தின் படி தேவர்கள் என்போர் யார், அவர்களின் இயல்பு என்ன என்பதைக் கவனிப்போம்.

ரிக் வேதத்தின்படி தேவர்கள் என்போர் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.

தங்கம்
தேவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கத்துடனான ஏதாவது தொடர்பு கூறப்படுகிறது. மருத்துகள் ருக்மவக்ஷஸ் (தங்க ஆபரணம் அணிந்தவர்), தங்கரதத்தில் பயணிப்பவர் என்று கூறப்படுகிறது. சவிதா ஹிரண்யபாணி (தங்கக் கையர்) எனப்படுகிறார். சந்தியா வந்தனத்தில் வரும் ஹிரண்யயேன சவிதா ரதேன ஆ தேவோ யாதி என்ற ரிக் மந்திரம், சவிதாவும் தங்க ரதத்தில் பயணிப்பவர் என்று காட்டுகிறது. பூஷன், இந்திரன் இருவரும் தங்க ஆயுதம் கொண்டவர்கள். இந்திரனின் வஜ்ராயுதம் தங்கத்தால் ஆனது. வருணனின் கவசம் தங்கத்தால் ஆனது (ஹிரண்யத்ராபி). இந்திரனே தங்க மயமானவர் என வர்ணிக்கப்படுகிறார். அவர் தன் பக்தர்களுக்கு தங்க ரதம் பரிசளிக்கிறார். ருத்ரன் தங்கம் போலப் பிரகாசிப்பவர் எனப்படுகிறார். அக்னியின் கேசமும், கொம்புகளும் தங்கமயமானவை (ஹிரண்யகேசி, ஹிரண்யச்ருங்க). மித்ரனும் வருணனும், பூமியும் ஆகாயமும் பொன் மேனி கொண்டவர்கள். மின்னல் தங்க ரதத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

இவை எதையும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேவர்கள் ஒளி வடிவமானவர்கள் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது.

தேவர்களுக்குள்ளே சவிதா எனப்படும் சூரியன் சிறப்பிடம் பெறுகிறார். சவிதா என்ற பெயர் வரும்பொழுதெல்லாம் தேவ என்ற அடைமொழி பெரும்பாலான இடங்களில், அதாவது 60 சதவீதம் இடங்களில், வருகிறது. இதற்கு மாறாக, இந்திரனுக்கு இந்த அடைமொழி 12 சதவீத இடங்களிலும், உஷஸுக்கு 23 சதவீத இடங்களிலும், அக்னிக்கு 30 சதவீத இடங்களிலுமே கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்குக் காயத்ரி மந்திரத்தையும் அதற்கு அடுத்த இரண்டு மந்திரங்களையும் பாருங்கள்.

தத் ஸவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத். 3.62.10
தேவஸ்ய ஸவிது: வயம் வாஜயந்த: புரந்த்யா பாகஸ்ய ராதிம் ஈமஹே 3.62.11
தேவம் நரஸவிதாரம் விப்ரா: யக்ஞை: ஸுவ்ருக்திபி: நமஸ்யந்தி தியா இஷிதா 3.62.12

யஜுர்வேதத்தின் முதல் மந்திரத்திலும் சவிதா தேவ என்ற அடைமொழியுடன் கூடவே வருகிறது.

தேவ: வ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே

சூரியனின் ஒளியைக் கருதியே இந்த அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒளி கொண்ட சூரியன் தான் முதல் தேவன் என்பது ரிக் வேதத்தின் கருத்து எனலாம். சூரியனுக்கு அடுத்தபடியாக ஒளியுள்ள பொருளாகிய அக்னியும் தேவ என்ற சொல்லின் நேர்ப் பொருளுக்கு உரியதாக உள்ளது.

தேவிகள்
தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். உஷஸ், அதிதி, பூமி, நதி, நீர் ஆகியவை பெண் தெய்வங்களாகும். த்யௌஸ் எனப்படும் ஆகாயம் பொதுவாக ஆண்பாலாகக் கருதப்பட்டாலும், ஆகாயம் பூமி இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் சொல்லான ரோதஸீ என்பது இரு பெண்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவபத்னி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. ஆனால் தேவர்களின் இந்த மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை.

உறவு முறைகள்
தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை. ருத்ரனின் மகன்கள் மருத்துகள் என்றும், சூரியனின் மகள் உஷஸ் என்றும் நீரின் மகன் அக்னி என்றும் கூறப்பட்டாலும், இவற்றை நாம் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டு உதாரணங்களைப் பார்ப்பதன் மூலம் அதற்கான காரணம் தெரியும். அக்னியை இரண்டு தாய்மார்களின் மகன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் என்பதை நேரடியாகப் பொருள் கொள்ள முடியாது. இரண்டு அரணிக் குச்சிகளைச் சேர்த்துக் கடைந்தால் அக்னி தோன்றுகிறது என்பதைத் தான் இப்படிக் கூறுகிறது வேதம்.

உஷா சூரியனின் மகளாகவும் கூறப்பட்டிருக்கிறாள். அவளை சூரியனின் மனைவியாகவும் வேதம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால், சூரியனைப் போலவே பிரகாசமாக, ஆனால் உருவத்தில் சிறியதாக இருப்பதால் உஷா சூரியனின் மகளாகக் கூறப்படுகிறாள். தினம் தோறும் சூரியனுக்கு முன் எழுந்து விடுவதால், சூரியனிடமிருந்து இணை பிரியாமல் இருப்பதால் மனைவியாகக் கூறப்படுகிறாள்.

கருத்தை விளக்குவதற்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் இந்த உறவு முறைச் சொற்களை நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தேவர்களிடையே உறவு முறைகள் இல்லை.

வசிக்குமிடம்
தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். அதனால் அவர்களுக்கு திவக்ஷஸ், த்யுக்ஷஸ் என்ற பெயர் உண்டு. நதிகள் முதலான பூமியிலேயே வாழும் சில தேவர்களும் உண்டு. ஆகாயம், நீர், நிலம் என மூன்று இடங்களில் வாழ்பவர் அக்னி.

உணவு
தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர் ஹவிஸ். அதை அவர்கள் நேரடியாக நம் கையிலிருந்து பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அக்னியை நாக்காக உடையவர்கள் (அக்னி ஜிஹ்வா) என்று பெயர் உண்டு. ஹவிஸ்ஸை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் யக்ஞ பூமிக்கு வருவார்கள். நாம் போட்டு வைத்திருக்கிற பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோமபானத்தைக் குடிப்பார்கள்.

சோமபானம்
எல்லாத் தேவர்களும் சோமபானத்தில் விருப்பமுள்ளவர்கள் என்றாலும் இது இந்திரனுக்கு மிக விருப்பமானதாகக் கூறப்பட்டிருக்கிறது. சோமத்தினால் உற்சாகம் அடைந்த இந்திரன் பல வலிமையான செயல்களைச் சாதிக்கிறான் என்கிறது வேதம். சோம பானத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பல நலன்களைக் கொடுப்பார்கள் எனவும் கூறுகிறது.

தேவர்கள் நாம் அளிக்கும் உணவை உண்டாலும் அவர்களுக்கு உணவு அவசியம் இல்லை. நாம் உணவு அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. நம்முடைய பணிவின் அடையாளமாகத் தான் அவர்கள் அதைக் கருதி ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போல சோமத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதையும் அவர்கள் நம்முடைய பக்தியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறார்களே அன்றி சோமம் இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ முடியும்.

அமரர்கள்
தேவர்கள் அமர்த்யர்கள் எனப்படுகிறார்கள். அதாவது சாகா நிலை பெற்றவர்கள். மனிதனைப் போலவோ மற்ற பிராணிகளைப் போலவோ அவர்கள் இறந்து போவதில்லை. எனவே அவர்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களைப் பார்த்திருக்கிறார்கள். இனி வரவிருக்கும் பல தலைமுறைகளைப் பார்க்கப் போகிறார்கள்.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: (பிறந்தவர் இறப்பது உறுதி) என்ற கீதை உரை தேவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பிறந்தவர்கள். ஒரு முறை அல்ல, இருமுறை பிறந்தவர்கள் என்று ரிக் 6.50.2 கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இறப்பு இல்லை.

பரஸ்பர சார்பு
தேவர்கள் எல்லோருமே வலிமை, அறிவு, செல்வம் மிக்கவர்களாகக் கூறப்படுகிறார்கள். தேவர்களில் உடல் குறையோ, குணக் குறையோ, அறிவுக் குறையோ கொண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் மனிதர்க்கு வலிமையின் ஊற்றாக விளங்குகிறார்கள். கூப்பிட்டால் உடனே வந்து காப்பாற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்து சோம பானம் கொடுத்துவிட்டால் அவர்கள் மகிழ்ந்து பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், தங்கம், ரயி எனப்படும் செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் என எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் கொடையாளிகள், ஸுதானு, தானுனஸ்பதி என்று சிறப்பிக்கப் பெறுகிறார்கள். அவர்கள் நாம் செய்யும் பிரார்த்தனையால் வலிமை பெறுகிறார்கள். இவ்வாறு தேவர்களும் மனிதரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள்.

பேச்சு
தேவர்கள் செயல் வீரர்கள். பொதுவாக அவர்கள் பேசுவதில்லை. இந்திரன் பேசுவதாக சில சூக்தங்கள் இருந்தாலும் அவை இயற்றிய ரிஷிகளின் கருத்தே, நாடக பாணியில் சொல்லப்பட்டனவாக அறிகிறோம். தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஒற்றுமை
தேவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வருணன், மித்ரன், அர்யமான் மூவரும் சேர்த்தே போற்றப்படுகிறார்கள். இந்திரனுக்கு மருத்துகள் உதவி புரிகிறார்கள். சில சமயங்களில் இரண்டிரண்டு தேவர்கள் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். – அக்னி விஷ்ணு, அக்னி சோமன், அக்னி மருத்துகள், இந்திரன் அக்னி, இந்திரன் பிரஹஸ்பதி, இந்திரன் பூஷன்.

பகை
மனிதர்கள் தங்கள் பகைவர்களாகிய தஸ்யுக்களையும் ராட்சசர்களையும் வெல்வதற்கு தேவர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்களுடன் மனிதர் சார்பாகத் தேவர்கள் போரிடுகிறார்கள். எல்லாத் தேவர்களுக்கும் ஆயுதங்களும் ரதங்களும் உண்டு. தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் இடைவெளியிலும் பயணிக்கிறார்கள். கடல்களோ மலைகளோ அவர்களது ரதங்களைத் தடுப்பதில்லை.
இவ்வாறு தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்பொழுதேனும் ராட்சசர்களுடன் நடக்கும் போரில் தேவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

படம் உதவி: விக்கிபீடியா, http://ta.wikipedia.org/s/33z9

நன்றி: வல்லமை http://www.vallamai.com/?p=45632

வேந்தன் அரசு

unread,
Jun 11, 2014, 8:20:04 PM6/11/14
to vallamai, மின்தமிழ்
>தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். 

பெண்பால் பெயர்கள் இகரத்தில் முடிவது திராவிட மரபை ஒத்துள்ளது

11 ஜூன், 2014 12:46 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Jun 11, 2014, 9:25:26 PM6/11/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பர்களே

 தேவ(ர்) என்றே சொல்லே சும்மெருத் தமிழ் வேரினைக் கொண்டது. 
காண்க

ePSD

diĝir 
diĝir [DEITY] wr. diĝirdim3-me-erdim3-me8-erdim3-mi-irdi-me2-er "deity, god, goddess" Akk. iltuilu

diĝir'ama 
diĝir'ama [MOTHER] wr. diĝir-ama "divine mother"

diĝirdumu 
diĝirdumu [SON] wr. diĝir-dumu "divine son"

 di-me-er> Ak diwer  என்றாகி தேவர் ஆகியுள்ளது. சுமேரு காலத்தில் பெண்பாலை இகர ஈற்றின் வழி காட்டுவது இல்லை. 'அம்மா" என்ற சொல்லின் வழியாக்வே உணர்த்தப் பட்டுள்ளது. 

இந்த திங்கிர் அநேகமாக் இப்பொழுது 'திங்கள்' என்றும் வழக்கில் இருக்க்லாம். ஆனால் குஜராத்தி  போன்ற வடநாட்டு மொழிகளில் இச் சொல் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அறிந்தவர்கள் தெரிவிததால்ல் மகிழ்வேன் 

உலகன்

வேந்தன் அரசு

unread,
Jun 12, 2014, 5:52:30 AM6/12/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

11 ஜூன், 2014 9:25 பிற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

அன்பர்களே

 தேவ(ர்) என்றே சொல்லே சும்மெருத் தமிழ் வேரினைக் கொண்டத

தமிழில் da'கரம், gaகரம் இல்லை என்பதால் சுமேருகிருதம்தான்

தேமொழி

unread,
Jun 17, 2014, 12:33:36 AM6/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 8
வசு ருத்ரர் ஆதித்யர்

வசு ருத்ரர் ஆதித்யர் என்ற மூன்று தேவக் கூட்டத்தாரையும் சேர்த்துச் சொல்லும் ரிக் மந்திரங்கள் பல உண்டு. இவை தனித் தனிக் குழுக்கள் என்று அறியப்படுகிறது. இவற்றில் ஆதித்யர் என்ற குழுவில் வருபவர் யார் என்பது மட்டும் தெரிகிறது. வசுக்கள் யார் யார், ருத்ரர்கள் யார் யார் என்பதற்கான விளக்கம் ரிக் வேதத்தில் கிடைக்கவில்லை.

ellora shiva

வசு
வசு என்பதற்கு செல்வம் என்றும் வீடு என்றும் பொருள் உண்டு. ரிஷிகள் தேவர்களிடமிருந்து யாசிக்கும் பொருள்களில் வசுவும் ஒன்று. சாயணர் வசு என்ற அடைமொழிக்கு வீடுகள் கொடுப்பவர் என்று பொருள் தருகிறார். பொதுவாகப் பார்க்குமிடத்து, வசு என்ற சொல் செல்வம் என்ற பொருளிலும், செல்வம் தருபவர் என்ற பொருளிலும் வருவதைக் காண முடிகிறது. ரிக் வேதம் இந்திரனையும் அக்னியையும் மட்டும் வசு என்றும் வசுபதி என்றும் குறிப்பிடுகிறது. புராணங்களில் 8 வசுக்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

ருத்ரர்
புராணங்களில் 11 ருத்ரர்கள் கூறப்படுகிறார்கள். ரிக் வேதத்தில் ஒரு ருத்ரன் தான் கூறப்படுகிறார். அவரும் இந்திரன், அக்னி, மித்ரன், வருணன் அளவுக்குச் சிறப்பிடம் பெறவில்லை. ருத்ரன் மருத்துகளின் தந்தையாகக் கூறப்படுகிறார். சில இடங்களில் மருத்துகளே ருத்ரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் அக்னி தன் சிவந்த நிறத்தின் காரணமாகவும் வலிமையின் காரணமாகவும் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறார். அச்வின்களும் ருத்ரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

யஜுர் வேதம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஆயிரக் கணக்கான ருத்ரர்களைப் பற்றிப் பேசுகிறது. யஜுர் வேதத்திற்குப் பிந்திய காலத்தில் ருத்ரன் சிவனாக உருமாற்றம் பெறுகிறார், முழு முதல் கடவுளாக வளர்ச்சி பெறுகிறார்.

சமீபத்தில் இறந்த மனிதர்கள் வசுவாகவும், முந்திய தலைமுறைப் பிதிரர்கள் ருத்ரராகவும், அதற்கும் முந்திய தலைமுறையினர் ஆதித்யராகவும் கருதப்படும் வழக்கம் தற்போது உள்ளது. ரிக் வேதத்தில் அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை.

ஆதித்யர்
சில தேவர்களுக்கு ஆதித்யர்கள் என்ற பெயர் உண்டு. அதிதியின் பிள்ளைகள் என்று பொருள். கச்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு மனைவியர் உண்டு. திதியின் மக்கள் தைத்யர் அல்லது ராட்சசர்கள். அதிதியின் மக்கள் ஆதித்யர்கள் என்ற தேவர்கள் என்பது புராணக் கதை. திதி, தைத்யர் என்ற சொற்களோ கச்யபர் பற்றிய குறிப்போ ரிக் வேதத்தில் இல்லை.

ஆதித்யர்கள் 12 பேர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் ரிக் வேதத்தில் ஆதித்யர்கள் 5 பேர் தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மித்ரன், வருணன், அர்யமான், பகன், அம்சன் ஆவர். அவர்களின் தாயாக அதிதி என்னும் பெண் தெய்வம் சொல்லப்பட்டிருக்கிறது. அதிதி என்ற சொல் பிரபஞ்சத்தைக் குறிப்பதாக 1.89.10 இல் சாயணர் கூறுகிறார். இந்தப் பொருள் எல்லா இடங்களிலும் பொருந்தக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் சாயணர் பிற இடங்களில் இது பூமியைக் குறிப்பதாகவும் தேவர்களின் தாயைக் குறிப்பதாகவும் பலவாறு கூறுகிறார்.

அதிதி என்பது எல்லையற்ற தன்மை என்று பொருள்படும். இந்த உலகம் பெரியது. இங்கிருந்து நம் கண்ணில் தெரியும் விண்வெளியில் எத்தனையோ சூரியன்கள் நட்சத்திர வடிவில் உள்ளன. நம் கண்ணுக்குத் தென்படாமல் கருவிகளால் மட்டும் அறியப் பட்டவையோ கோடி கோடி. கண்டுபிடிக்கப் படாதவையோ மனதால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. எண்ணில் அடங்காது, எல்லையற்றது. இந்த எல்லையற்ற தன்மையில் தேவர்கள் தோன்றுவதற்கு எல்லையற்ற வழிகளும் உள்ளன, எத்தனையோ தேவர்கள் நமக்கு முன்னே தோன்றியுள்ளனர். இனியும் எத்தனையோ தேவர்கள் தோன்றுவார்கள் என்பதை அறிவுறுத்தவே அவர்களை எல்லையற்ற தன்மையின் மக்களாகக் கூறப்பட்டிருக்கிறது.

 நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=45969

படம் உதவி: http://www.sacred-texts.com/hin/iml/img/02600.jpg

தேமொழி

unread,
Jun 21, 2014, 4:13:07 AM6/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 9
எல்லாத் தேவர்களும் ஒன்றே

நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே   
-பாரதி

vaedam

ரிக் வேதத்தில் ஒவ்வொரு தேவருக்கும் தனித் தனி அடையாளங்கள், சாதனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் இந்தத் தனித் தன்மை மறைந்து விடுகிறது.

பூமியை நிலைநாட்டியது, ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது, சூரியனை உலாவ விட்டது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது முதலான சாதனைகளைச் செய்தவர்களாக வருணன், இந்திரன் இருவரும் போற்றப்படுகிறார்கள். பூமியை நிலை நிறுத்தின சிறப்பு ப்ருஹஸ்பதி, ரிபுக்கள் மற்றும் அக்னியின் பெயராலும் பேசப்படுகிறது.

விருத்திரனைக் கொன்றது இந்திரன் என்று பல இடங்களில் பேசப்பட்டாலும், விஷ்ணுவுக்கும் அதில் பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அக்னி விருத்திரனைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

வலனைக் கொன்று பசுக்களை விடுவித்தார் என்ற சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது, இந்திரனுக்கும் சொல்லப்படுகிறது. அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது.

வாயுவின் குதிரைகளின் பெயர் நியுத். ஆனால் மருத்துகளுடைய குதிரைகளும், அக்னியின் குதிரைகளும், அஸ்வின்களின் குதிரைகளும் இந்திரனுடைய குதிரைகளும் நியுத்கள் என்று சில இடங்களில் கூறப்படுகின்றன.

வருணன் இந்திரனுக்குரிய அத்ரிவ (இடியை ஆயுதமாகக் கொண்டவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸஸ் ஸூனு (வலிமையின் மைந்தன்) என்ற பெயர் அக்னிக்கு உரியது. ஆனால் இரு இடங்களில் இந்திரனுக்கும் இது வழங்கப்படுகிறது.

ப்ரம்மணஸ்பதியைக் குறிப்பிடும் ப்ரம்மண: ராஜா (ஸ்தோத்திரங்களின் ராஜா) என்ற சொல்லால் இந்திரன் புகழப்படுகிறார். அது போல, அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

அக்னியும் சூரியனும் தனித் தனி தேவர்களாகப் பேசப்பட்டாலும் அக்னியைப் பற்றிப் பேசும்போது சூரியன் என்ற பெயரையும், சூரியனைப் பற்றிப் பேசும்போது அக்னி என்ற பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.

காலை நேரச் சூரியனின் பெயர் தான் ஸவிதா என்றாலும் இருவரும் தனித்தனியாகக் காட்டப்படுகிறார்கள். சூரியன் ஸவிதாவுக்கு சக்தி தருகிறார் என்கிறது ஒரு மந்திரம். [1]

அக்னியைப் போற்றும்போது, நீயே இந்திரன், நீயே வருணன் என்கிறார்கள். உலகத்தைப் படைத்துக் காப்பவன் என்ற முழு முதல் கடவுள் தகுதியும் அவருக்குக் கொடுக்கப் படுகிறது.  இதே போல, இந்திரனைப் போற்றும்போது, நீயே விஷ்ணு, நீயே அக்னி என்று பேசுகின்றனர். இவ்வாறு தேவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மறைகின்றன. 9.5 இல்  ஒரு சூக்தம் முழுவதும் இந்திரன், அக்னி, பாரதி, இலா, ஸரஸ்வதி முதலான பல தெய்வங்களுடன் சோமன் ஒன்றுபடுத்தப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்று கூறுகின்றனர். எனவே பெயர்கள் என்பது பெயரளவுக்குத் தான். இதை தெளிவாகவே சொல்கிறது கீழ்க் கண்ட மந்திரம்.

இந்திரன், மித்ரன், வருணன், அக்னி என்று அறிஞர்கள் பல விதமாக அழைக்கிறார்கள். உள்ளது ஒன்று தான். [2]

தேவர்களுக்கெல்லாம் மேலான ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதைக் கீழே வரும் மந்திரங்கள் காட்டுகின்றன.

விண்ணையும் மண்ணையும் பரப்பியிருப்பதும், இரவு பகலை உண்டாக்குவதும், அசையும் பொருளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உறங்கச் செய்வதும், நதிகளைப் பாயச்செய்வதும், சூரியனை உதிக்கச் செய்வதுமான ஸத்யமான வார்த்தை என்னைக் காப்பாற்றட்டும். [3]

தேவர்கள் எந்த மூலப் பொருளைக் கொண்டு இந்த மண்ணையும் விண்ணையும் படைத்தார்கள்? இவை உறுதியாகவும் முதுமை அடையாததாகவும் உள்ளன. இவை பல காலை நேரங்களைப் பார்த்துள்ளன. [4]

அல்ல, அல்ல. இந்தத் தேவர்களுக்கெல்லாம் மேலான ஒன்று உள்ளது. அவனே மண்ணையும் விண்ணையும் தாங்குகிறான். [5]

நமது தந்தையும் பாதுகாவலனும் அனைத்தையும் படைத்தவனும் எல்லா இடங்களையும் உயிர்களையும் அறிபவனும் தேவர்களுக்குப் பெயர் சூட்டியவனும் ஒருவனே உண்டு. எல்லா உயிர்களும் அறிந்துகொள்ள அவனிடமே செல்கின்றன. [6]      

ரிஷிகளின் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சில சாதாரண நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மற்றவை பேரருள் நிலையில் பாடப்பட்டவை. ரிஷிகள் காணும் பொருளை எல்லாம் தேவனாகக் காணும்போது அருள் நிலையில் உள்ளனர். அதிலேயே தோய்ந்து பேரருள் நிலைக்குச் செல்லும் போது  அவர்கள் அந்தத் தெய்வத்தையே முழு முதல் கடவுளாகக் காண்கிறார்கள். அதனால் எந்தத் தெய்வத்தைப் பாடினாலும் ‘அவர் பிறக்கும்போதே முதல்வர். இவரே உலகின் மறு உரு’ என்று போற்றுகின்றனர்.

அக்னியே, நான் எந்தத் தெய்வத்தை அழைத்தாலும், நீயே அனைத்துத் தேவர்களின் தன்மையையும் அடைகிறாய் என்ற ரிக் 1.69.6,  யார் என்னை எப்படி வழிபட்டாலும் நான் அவர்களுக்கு அவ்விதமே அருள் செய்கிறேன் என்ற பகவத் கீதை 4.11இன் அடிப்படையாக உள்ளது.

பரம்பொருளின் தன்மைகள் யாவை?

ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
1 கடந்த காலம் வருங்காலம் யாவற்றிலும் வியாபித்துக் காலம் கடந்து நிற்றல்,
2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

இந்தக் கடைசி வலிமைக்கு எடுத்துக் காட்டாக, முதியவன் இருக்க  இளைஞன் சாகிறான், நேற்று இருந்தார் இன்று இல்லை என்று ரிஷி கூறுகிறார்.  பரம்பொருளை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இந்தக் கருத்தைப் பூதக் கண்ணாடியால் பார்த்த நம் முன்னோர்கள் அதில் விநாயகன், சிவன், வேலன், பார்வதி, திருமால் என்ற பெயர்களைக் கண்டனர். பாரதி இன்னும் பெரிய பூதக் கண்ணாடியால் பார்க்கிறார். அங்கு அவருக்கு காளி, சாத்தன், மாடன், அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

பாரதியின் சொல்லும் வேதம் அன்றோ!

குறிப்புகள்:
1    7.45.2.
2    1.164.46
3    10.37.2.
4    10.31.7
5    10.31.8
6    10.82.3

படம் உதவி: http://srismartha.org/aboutUs.html, http://srismartha.org/images/s1.jpg

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=46334

வேந்தன் அரசு

unread,
Jun 21, 2014, 7:05:57 AM6/21/14
to vallamai, மின்தமிழ்
தேமொழிஆர், எல்லா இடுகைக்கு பின் சுருக்க உரை ஒன்னு கொடுங்க

வேதத்தில் என்ன தான் சொல்லுறாங்கனு புரியலே.

சங்கத்தமிழில் எந்த புலவன் எந்த மன்னன் காலத்தவன் என உணர இயலா குழப்பம் போல் வேதமும் குழப்புது.

21 ஜூன், 2014 4:13 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 21, 2014, 12:56:29 PM6/21/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஆகா.... வேந்தே  நாம் இருவரும் ஒரே போல, ஒரே அலை வரிசையில்  சிந்திப்பவர்கள் என மீண்டும் மீண்டும் உறுதியாகிறதே.... 
இன்னொருவரும் இருக்கிறார்....... நம்மைப் போலவே  சிந்தித்து இதே போல (தத்து பித்தென்று) பேசிக்கொண்டு.

புறநானூறு படித்த பொழுது, நீங்கள் சொல்வது போலவே குழம்பிப்போனேன்...

எனக்கு தெரியவேண்டியதேல்லாம்  .....

எந்த மன்னர் காலத்தில்  எந்தப் புலவர் வாழ்ந்தார், அதே புலவரும் மன்னரும் வாழ்ந்த காலத்தில் இருத்த மற்ற புலவர்களும் மன்னர்களும் யார் யார் அவர்கள் யாரோ. .

என்ன ஒரு எளிய, குழப்பமற்ற கேள்வி...முதலில் புறநானூறில் தொடங்குவோம் எனத் தொடங்கினேன்...

இதனைத் தெரிந்து கொள்ள தாளில் அங்கும் இங்கும் கட்டங்கள் போட்டு, புலவருக்கு ஒரு வண்ணம், புரவலர்க்கு ஒரு வண்ணம்.  
சேர, சோழ, பாண்டிய, குறுநில மன்னர்களுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட  வண்ணம் என்று போட்டு 
இவரையும் அவரையும் இணைத்து, பிறகு அவரை இவருடனும், இவரை மற்றவருடனும் இணைத்து அம்புக்குறிகளாகப் போட்டதில், அந்தப் படம் 'ஜாக்சன் போலக்' (Jackson Pollock) வரைந்த படம் போலவே ஆகிவிட்டது. மேலும் குழம்பி, தாளிலும் இடம் இல்லாது போனதால், இனிமேல் சுவரில் வரையலாம் என முடிவெடுத்தேன்.

சுவரில் கிறுக்கினால் வீட்டுக்காரருக்கு கோபம் வருமே என்று ஒரு எக்ஸ்செல் டேட்டா பேஸ் ஒன்றும் உருவாக்கி, அதில் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கி ஒரு 70பாடல்கள் போலக் குறித்தேன்.

பிறகு இதற்கு நிறைய நேரம் ஆனதால் குறிப்புகளை பிறகு செய்யலாம் (என்றாவது ஒரு நாள் செய்வேன்) படிப்போம் பாடல்களை முதலில் என்று படிக்கத் தொடங்கினேன்.

நான் குறித்து முடித்த பின்னர் அதை உங்களுடனும் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வேதத்தில் என்ன இருக்கிறது, அல்லது என்னென்ன இல்லை என்பதையும் அனைத்து பதிவுகளையும் படித்து முடித்த பின்னர் சுருக்கமாக குறிப்பெடுத்துக் கொள்ளும் எண்ணமும் தோன்றியது, உங்களுக்கும் அதே எண்ணம் இருப்பது இப்பொழுது வியப்பாகவே இல்லை.

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Jun 21, 2014, 1:47:48 PM6/21/14
to vallamai, மின்தமிழ்

21 ஜூன், 2014 12:56 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

நான் குறித்து முடித்த பின்னர் அதை உங்களுடனும் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி மிக மிக நன்றி.  

ஒரு புலவர் குறிப்பிடும் மன்னர்கள் தலைவர்கள் அவர் சமகாலத்தவர் என்று கொள்ளாமல் அவருக்கு முந்திய காலத்த்வர் என கொள்ளலாம்

உதியன் சேரலாதன் பெரும்சோறு கொடுத்தது பாரதபோரா அல்லது பிண்டசோறா எனாவும் குழப்பம்.

வேதத்தில் என்ன இருக்கிறது, அல்லது என்னென்ன இல்லை என்பதையும் அனைத்து பதிவுகளையும் படித்து முடித்த பின்னர் சுருக்கமாக குறிப்பெடுத்துக் கொள்ளும் எண்ணமும் தோன்றியது, உங்களுக்கும் அதே எண்ணம் இருப்பது இப்பொழுது வியப்பாகவே இல்லை.

இந்த தொடர்களின் ஆசிரியர் திரு கோதண்டராமரே இட்டால் மிகவும் நன்று. .

கோதண்டராமன்

unread,
Jun 22, 2014, 3:42:56 AM6/22/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

இது வரை வல்லமையில் வெளியான 11 கட்டுரைகளின் சுருக்கமும் கீழே தரப்பட்டுள்ளது. சிவப்பு எழுத்துகள் பாரதியின் மேற்கோள்கள்.

1 வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம். இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது வேதத்தில் என்று அறிந்து கொள்ள விரும்பி அதையே நேரடியாகப் பார்த்து விட வேண்டும் என்று விரும்பினான். வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான். 

2 வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது. ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

3 வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. இலக்கணப் பிரச்சினைகள் இல்லாமல் எல்லாச் சொற்களும் பொருள் தெரிந்த சொற்களாக இருக்கும்போது கூட பல இடங்களில் சொற்களின் பொருளைத் தொகுத்துக் கூறும்போது இடர்ப்பாடுகள் வருகின்றன. பல பாடல்கள் விடுகதை போல உள்ளன. இவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் அளிக்கின்றன. அதனால் வேதத்தின் உண்மையான கருத்து என்ன என்பதே அறிய முடியாமல் அது மறையாகவே இருக்கிறது.

இத்தகைய விடுகதை போன்ற மந்திரங்களை நீக்கிவிட்டு மற்ற மந்திரங்களைக் கொண்டு ரிக் வேதத்தின் சாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.

4 சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் ஸாயண பாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது. 

5 எல்லா உரைகளும் ஒவ்வொரு சார்பு உடையது என்றாலும் இருப்பவற்றுள் சாயணர் உரை தான் பழமையானதும் முழுமையானதும் ஆன உரை என்பதால் அதைப் பிரதானமாகக் கொண்டு, அதனுடைய குறைகளைக் கூடியவரை களைந்து பொருள் காண முயன்றான் பாமரன்.

6 விநாயகர், சிவன், விஷ்ணு, முருகன், லட்சுமி, மாரியம்மன், ஐயனார் முதலான தெய்வங்கள், கோயில்கள், விக்கிரக ஆராதனை, ஓங்காரம், அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள், பஞ்ச பூதக் கோட்பாடு, அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி, பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள், பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் ஆகிய எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான் பாமரன்.

எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள்.

7 தேவர்கள் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.

தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை.  தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் பூமிக்கு வருவார்கள். சோமபானத்தைக் குடிப்பார்கள்.

தேவர்கள் மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் இவற்றைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்கள்.

8 வசு ருத்ரர் ஆதித்யர் என்ற மூன்று தேவக் கூட்டத்தார் குறிப்பிடப்படுகின்றனர். இவை தனித் தனிக் குழுக்கள் என்பது தவிர வேறு தகவல் அறிய முடியவில்லை.

9 ரிக் வேதத்தில் ஒவ்வொரு தேவருக்கும் தனித் தனி அடையாளங்கள், சாதனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் இந்தத் தனித் தன்மை மறைந்து விடுகிறது.

ஒரு கட்டத்தில் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்று கூறுகின்றனர். இந்திரன், மித்ரன், வருணன், அக்னி என்று அறிஞர்கள் பல விதமாக அழைக்கிறார்கள். உள்ளது ஒன்று தான். 2

பரம்பொருளை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இந்தக் கருத்தைப் பூதக் கண்ணாடியால் பார்த்த நம் முன்னோர்கள் அதில் விநாயகன், சிவன், வேலன், பார்வதி, திருமால் என்ற பெயர்களைக் கண்டனர். பாரதி இன்னும் பெரிய பூதக் கண்ணாடியால் பார்க்கிறார். அங்கு அவருக்கு காளி, சாத்தன், மாடன், அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.

10 தேவர்கள் எல்லோருமே மனிதனாக இருந்து தெய்வ நிலை பெற்றவர்கள் தாம். எல்லா மனிதரும் முயற்சியின் மூலம் தேவ நிலையை அடைவது தான் மனித வாழ்வின் லட்சியம் என்பது உணர்த்தப்படுகிறது.

பிறர் நலனுக்காக அருஞ் செயல்கள் செய்தோரே தேவராக உயர்ந்துள்ளனர். அருஞ் செயல்கள் மூலம் தேவ நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்று வேதம் வழி காட்டியதனால் இந்து சமயத்தில் தெய்வங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதிப்பட்டு வருகிறது.

உண்மையில் இன்று நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் கிராமத் தெய்வங்களில் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, மாசாணி அம்மன், திரௌபதி அம்மன், ரேணுகா தேவி முதலான பலர்  வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மானிடர்களே. ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகிய மானிடர்கள் இன்று கோவில்களில் சிலை வடிவில் வணங்கப்படும் தெய்வ நிலையை அடைந்துள்ளனர்.

11 மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து. இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.     

            அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகிறது.

வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம். இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.

இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது. இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.

            மூன்றாவது வகை- புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று  வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

வேந்தன் அரசு

unread,
Jun 22, 2014, 8:10:07 AM6/22/14
to vallamai, மின்தமிழ்

22 ஜூன், 2014 3:42 முற்பகல் அன்று, கோதண்டராமன் <ekam...@gmail.com> எழுதியது:

இதற்குதான் ஆசைப்பட்டான் பால குமாரன். ஆசிரியருக்கு மிக்க நன்றி.

தேமொழி

unread,
Jun 28, 2014, 2:47:38 AM6/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 10

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

GANDHI

“…….the central idea of the Vedic Rishis was the transition of the human soul from a state of death to a state of immortality…..”
Aurobindo –The secret of the Vedas.

மனிதன் தேவன் ஆக முடியுமா? சாகா நிலை பெற முடியுமா? முடியும் என்கிறது வேதம். தேவர்களிலே சிலர் அந்தப் பெயருக்கு இயற்கையிலேயே தகுதி உடையவர்கள், அதாவது ஒளி உடையவர்கள். சூரியனும் அக்னியும் உஷஸும் மிக அதிகமான முறை தேவப் பட்டம் கொடுத்து அழைக்கப்படுவதை முன்னர் கண்டோம். மற்ற தேவர்கள் மனிதராக இருந்து தங்கள் செயலால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (ஒளியுடல் பெற்றவர்கள்) என்று கருத இடம் இருக்கிறது.

வேதத்தில் தேவர்கள் த்விஜன்மா (இரு பிறப்பாளர்) என்று சொல்லப்படுகிறார்கள்.[1] மனிதனாகப் பிறந்தது ஒரு முறை. தேவ நிலையை அடைவது இரண்டாவது பிறப்பு. இந்திரன் நர (மனிதன்/ தலைவன்), ந்ருதம (மனிதர்/தலைவர் களுக்குள் சிறந்தவன்) என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்படுகிறார். நர என்ற சொல்லுக்கு எல்லா இடங்களிலும் மனிதன் என்று பொருள் தரும் சாயணர், தேவர்களை நர என்று வேதம் குறிப்பிடும்போது, அதற்கு யாகத்தின் தலைவன் என்று குறிப்பிடுகிறார். அக்னியைப் பொறுத்தவரை இது பொருந்துகிறது. ஆனால் நர என்ற சொல்லை மற்ற தேவர்களுக்குப் பயன்படுத்தும்போது யாகத்தோடு தொடர்பு படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

அசுவினி தேவர்களும் மருத்துக்களும் நர என்ற சொல்லால் அடிக்கடி சுட்டப் படுகிறார்கள். மித்ரன் வருணனும் அவ்வாறே. இதிலிருந்து இவர்கள் எல்லோருமே மனிதனாக இருந்து தெய்வ நிலை பெற்றவர்கள் தாம் என்பது தெரிகிறது. இதற்கு மாறாக, ஸவிதாவுக்கு (சூரியனுக்கு) நர என்ற அடைமொழி கொடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தெய்வம் என்றால் எங்கோ ஆகாயத்தில் தோன்றியவர்கள் அல்லர். அவர்களும் மனிதராக இருந்தவர்கள் தாம் என்பதை நினைவூட்டி எல்லா மனிதரும் அந்த நிலையை அடைய முடியும் என்று உணர்த்துவதற்காகத் தான் வேதம் அவர்களை நரர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

த்ரஸதஸ்யு என்பவர் வேத ரிஷிகளில் ஒருவர். அவர் தன்னை அர்த தேவன் (பாதி தேவன்) என்று சொல்லிக் கொள்கிறார். தேவ நிலையை அடைவதற்கு அவர் முயற்சித்துக் கொண்டு இருந்ததை இது குறிப்பிடுகிறது.[2]

மற்றொரு ரிஷியான ஔலானர் என்பவர் தேவநிலையை அடையும் பாதையை அறிந்தவராக இருப்பதால் அவரை தேவர்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு அக்னி வேண்டப்படுகிறார்.[3]

மருத்துக்கள் மனிதர்களாக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்றால் அவர்களை வழிபடுபவர்களும் போற்றுதலுக்குரிய தெய்வமாகி இறவா நிலை அடையலாம் என்கிறது ஒரு ரிக்.[4]

பூஷனைப் பற்றிச் சொல்லும்போது அவர் மனிதர்களை விட மேலானவர், புகழில் தேவர்களுக்குச் சமமானவர் என்று சொல்லப்படுகிறார்.[5] அவரும் மனிதனாக இருந்து தேவ நிலையை அடைந்தவர் என்பதை அறிகிறோம்.

அங்கிரஸ் ரிஷியின் வம்சத்தவர் யக்ஞத்தாலும் கொடையாலும் அமரத்துவம் அடைந்த செய்தியை 10.62.1 குறிப்பிடுகிறது.

இதிலிருந்து எல்லா மனிதரும் முயற்சியின் மூலம் தேவ நிலையை அடைந்து அமரத்துவம் அல்லது சாகாநிலை அடைய முடியும் என்று வேதம் காட்டுகிறது. அவ்வாறு தேவ நிலையை அடைவது தான் மனித வாழ்வின் லட்சியம் என்பது உணர்த்தப்படுகிறது. மற்றவர் நலனுக்காகச் செயற்கரிய செய்து, புகழ் பெற்று, தேவர்களுக்குச் சமமாக ஹவிர் பாகம் பெறும் தகுதி பெற்ற ரிபு சகோதரர்களின் வரலாறு மூலம் உண்மையான தேவ நிலையை அடைவது எப்படி என்பதை வேதம் காட்டுகிறது.

ரிபு என்பவரும் அவரது இரு தம்பிகளும் சில அருஞ் சாதனைகள் செய்தனர். தேவர்களது ஒரு கிண்ணத்தை நான்கு கிண்ணங்களாக மாற்றித் தந்தது, இந்திரனுக்கு இரு குதிரைகளை உருவாக்கிக் கொடுத்தது, குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய ஒரு மூன்று சக்கர ரதத்தை அசுவினி தேவர்களுக்காகத் தங்கள் மனத் திறமையால் உருவாக்கியது, ஒரு தோலிலிருந்து ஒரு பசுவை உருவாக்கியது, தங்கள் பெற்றோர்களை மீண்டும் இளைஞர்களாக்கியது ஆகிய செயல்களுக்காக சவிதாவால் (சூரியனால்) அமரத்துவம் அளிக்கப்பட்டனர்.

இந்தக் கதைகளின் உண்மை என்னவாக இருக்கக் கூடும்? முன்னைவிட மெல்லிய, ஆனால் உறுதியான மண் கிண்ணம் செய்யும் முறையைக் கண்டு பிடித்த பொறியியல் வல்லுநர்கள் ரிபுக்கள். இவ்வாறு ஊகிக்க வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

ரிபுக்களில் ஒருவர் சொன்னார், “இந்த ஒரு கிண்ணத்தைக் கொண்டு (ஒரு கிண்ணம் செய்யும் மண்ணைக் கொண்டு) இரு கிண்ணங்கள் உருவாக்கலாம்.” அடுத்தவர் சொன்னார், “மூன்று உருவாக்கலாம்.” இன்னொருவர் சொன்னார், “நான்கு உருவாக்கலாம்.”[6]

ஒருவர் சொன்னார், “அக்னி நல்லது” என்று. இரண்டாமவர் சொன்னார், “மண் நல்லது” என்று. மூன்றாமவர் சொன்னார், “நீர் நல்லது” என்று.[7]

இதிலிருந்து நாம் ஊகிப்பது, வழமையிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய வகை மண்ணைப் புதிய விகிதத்தில் நீருடன் கலந்து மாறுபட்ட வெப்ப நிலையில் அதைச் சுடுவதன் மூலம் மெல்லியதாக இருப்பினும் உறுதியாகச் செய்ய முடியும் என்பதை அவர்கள் செய்து காண்பித்தனர்.

குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய மூன்று சக்கர ரதம் என்பது தற்காலத்திய ஆட்டோ போன்ற ஒன்றாக இருக்கலாம். அவர்கள் பொறியியலில் மட்டும் வல்லுநராக இல்லாமல் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கி இருக்கக் கூடும். தங்கள் திறமையால் தமது பெற்றோரை இளைஞராக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசுவை உயிர்ப்பித்து அதை முன்பு போல ஆக்கினர். இது போலவே மற்ற அருஞ்செயல்களும் இருக்கக் கூடும்.

தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் என்கிறது வேதம்.[8]

அமரத்துவம், மற்றவர் நலனுக்காக அவர்கள் உழைத்ததற்குக் கிடைத்த பரிசு.

அச்வின்களும் மனிதராக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்பது அவர்களைக் குறித்த ஒரு பிரார்த்தனையிலிருந்து தெரிகிறது. “கவிகளே, அழகிய பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் தேவர்களானதும் இந்திரனிடத்தில் இருப்பதும் பெரிய விஷயம். ரிபுக்களுடன் சேர்ந்து எங்கள் பிரார்த்தனையைச் செம்மை செய்து கொடுங்கள்.”[9] (அச்வின்கள் செய்த அருஞ்செயல்கள் பற்றி அச்வின்கள் என்ற தலைப்பில் காணலாம்.)

எனவே பிறர் நலனுக்காக அருஞ் செயல்கள் செய்தோரே தேவராக உயர்ந்துள்ளனர். இந்திரன் முதலானோர் செய்த அருஞ் செயல்கள் பற்றி வேதம் கூறுகிறது. அவர்கள் தேவர்களாக இருப்பதால் அருஞ் செயல்கள் செய்யவில்லை. அருஞ் செயல்கள் செய்ததால் தான் அவர்கள் தேவ நிலைக்கு உயர்ந்தார்கள். மதுரை வீரன் முதலானோரும், நாயன்மார் முதலானோரும் இந்த வழியிலேயே சென்று தெய்வ நிலையை அடைந்துள்ளனர்.

அருஞ்செயல்களால் அன்றி தேவநிலைக்கு உயர வேறு குறுக்கு வழிகள் இல்லை என்பதைக் கீழ்க்கண்ட மந்திரங்கள் விளக்குகின்றன.

“இது தான் பழமையான வழி. இந்த வழியாகத் தான் எல்லாத் தேவர்களும் பிறந்திருக்கிறார்கள். எவ்வளவு பலசாலியானாலும் இதன் மூலம் தான் ஒருவன் பிறக்க முடியும். ஆகவே அவன் வேறு வழியில் வர வேண்டாம். தாயைத் துன்புறுத்த வேண்டாம்.” [10]

“நான் இந்த வழியே வர மாட்டேன். இது கடினமாக உள்ளது. நான் பக்கவாட்டு வழியில் வருவேன். நான் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. ஒருவனுடன் போரிட வேண்டியிருக்கிறது, மற்றொருவனிடம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.” [11]

மந்திரத்தின் நேர்ப் பொருள் இது தான். இதை விளக்க சாயணர் எங்கிருந்தோ ஒரு கதையைக் கொண்டு வருகிறார். வாமதேவர் என்ற ரிஷி தன் தாய் வயிற்றில் இருக்கும்போது வழக்கமான வழியில் பிறக்காமல் பக்கவாட்டு வழியின் மூலமாகப் பிறக்க விரும்பினார். அது தான் இரண்டாவது மந்திரம். அவ்வாறு செய்வதால் தாய்க்குத் துன்பம் ஏற்படும் என்று இந்திரன் அவருக்கு அறிவுறுத்துவது தான் முதல் மந்திரம் என்று கூறுகிறது அக் கதை.

இந்தக் கதைக்கான ஆதாரம் ரிக் வேதத்தில் இல்லை. இது பிற்காலத்தில் ஏற்பட்டது. அந்தக் கதைக்கு ஏற்ப, மந்திரத்தின் பொருள் திரிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிகிறது. கதையை நீக்கிவிட்டு மந்திரத்தை மட்டும் ஆராய்ந்தால் அதனுடைய உண்மைப் பொருள் விளங்கும். மனிதனாகப் பிறந்தவன் அருஞ் செயல்கள் மூலம் தான் இரண்டாவது பிறப்பாகிய தேவ நிலையை அடைய முடியும் என்பது வாம தேவருக்குக் கஷ்டமாக உள்ளது. அவர் வேறு எளிய வழியில் தேவனாகப் பிறக்க விரும்புகிறார். அது இயற்கைக்கு மாறானது. இயற்கை அன்னைக்குத் துன்பம் தருவது என்று இந்திரன் அறிவுறுத்துகிறார்.

தேவ நிலையை அடைவது எளிதல்ல என்ற இக்கருத்தை அதே சூக்தத்தின் பின் பகுதியும், இந்திரன் போல ஒருவர் அரிதாகத் தான், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறக்கிறார் என்று விளக்குகிறது. இந்திரன் அமரத் தன்மையுள்ள வலிமையால் மனிதப் பிறப்பைக் கடந்து விட்டான். தேவன் ஆகி விட்டான். மனிதர்களுக்குள் சிறந்தவனாக வலிமை செல்வம் புகழோடு விளங்குகிறான்.[12]

இவ்வாறு அருஞ் செயல்கள் மூலம் தேவ நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்று வேதம் வழி காட்டியதனால் தான் இந்து சமயத்தில் தெய்வங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதிப்பட்டு வருகிறது. வேதத்தில் இல்லாத சிவன், திருமால், கணபதி, முருகன், ஐயப்பன், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஏற்பட்டது இவ் வகையில் தான். இனியும் புதிய தெய்வங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இவை வேதத்தில் குறிப்பிடப் படாவிட்டாலும் வேதத்தின் அடிப்படைக்கு ஏற்புடையவையே. அதனால் தான் இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது.

உண்மையில் இன்று நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் கிராமத் தெய்வங்களில் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, மாசாணி அம்மன், திரௌபதி அம்மன், ரேணுகா தேவி முதலான பலர் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மானிடர்களே. ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகிய மானிடர்கள் இன்று கோவில்களில் சிலை வடிவில் வணங்கப்படும் தெய்வ நிலையை அடைந்துள்ளனர். காந்தியடிகளை மக்கள் மாந்தருக்குள் ஒரு தெய்வம் எனப் போற்றினார்கள். நாடெங்கிலும் அவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வாழ்ந்து மறைந்த காஞ்சி மாமுனிவர் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்பட்டார். அவரது உருவப் படங்களும் சிலைகளும் இன்று சில இடங்களில் வணங்கப்படுகின்றன. காலப்போக்கில் காந்தியடிகளும் காஞ்சி முனிவரும் சிறு தெய்வங்களாக வணங்கப்பட்டுப் பின்னர் பெருந் தெய்வங்களாக உயரக் கூடும்.

குறிப்புகள்:

1 6.50.2
2 4.42.8, 4.42.9
3 10.98.11
4 1.38.4
5 6.48.19
6 4.33.5
7 1.161.9
8 4-33-11
9 3.54.17
10 4.18.1
11 4.18.2
12 6.18.7

நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=46723

படம் உதவிக்கு நன்றி: http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=151543

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 7:16:12 AM6/29/14
to vallamai, மின்தமிழ்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

28 ஜூன், 2014 2:47 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 10

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

தேமொழி

unread,
Jul 2, 2014, 2:24:05 AM7/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 11
மனிதன் சாகாமலிருக்கலாம்

4x5 original“சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.” – பாரதி

பிறந்தவர்கள் சாகாமல் இருக்க முடியுமா? நாம் அறிந்தவரை அது சாத்தியம் இல்லை. சில சித்தர்கள் அவ்வாறு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. கண்டவர் இல்லை. நான் சாகாதிருப்பேன் காணீர் என்று மார் தட்டிய பாரதிச் சித்தரும் செத்துத் தான் போனார்.

மனிதனுக்குத் தான் சாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. சாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பின்னும் சாகா நிலையை வேறு வகையில் அடைய முடியுமா என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் வேதத்தில் காணப்படும் அமரத்வம் பற்றிய சிந்தனை.

தானம் செய்வதும் ஹோமம் செய்வதும் அம்ருதத்தைக் குறித்தே.[1]

அமரத்துவம் என்பதை எந்தப் பொருளில் வேதம் பயன்படுத்துகிறது என்பதை அறிய மீண்டும் ஆழ்ந்து நோக்குவோம்.

மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து.[2]

இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.

ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம்.

நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக.[3]
வருணா, எங்களுக்கு மழையையும் அமரத்துவத்தையும் தருக.[4]

வேதத்தைப் பெரிதும் மதித்த பாரதியும், விநாயகர் நான்மணி மாலை என்ற நூலில், ஒரு பாடலில் “நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்” என்றும், மற்றொரு பாடலில், “நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க” என்றும் வேண்டுகிறார்.

அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; பாரதி கூறும் அமரத் தன்மையும், மதுரை வீரன் போன்றோர் நாட்டார் தெய்வங்களாக ஆனதும் உடல் அழிவின்மையைக் குறிப்பிடாமல் புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகின்றன.

வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம்.

அக்னியே, வம்சத் தொடர் அறுந்து போகாமல் எனக்கு அமரத்துவம் தருக.[5]
“ஆத்மா வை புத்ர நாமா அஸி” என்று சதபத பிராமணமும்[6] கூறுகிறது.

ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதாவது மகன் பிறந்தால், தந்தை புத்துயிர் பெற்று வாழ்வதாகக் கருதப்படுகிறது. இதனால் அமரத்வம் என்பது சந்ததி அறுபடாமல் இருப்பதைக் குறிப்பது புலப்படுகிறது. ஒரு குழந்தையினிடத்தில் அதன் பெற்றோர்களின் குணங்கள் மட்டுமல்ல, அவர்களது மூதாதையர்களின் குணங்களும் திறமைகளும் அடங்கியிருக்கின்றன என்பதால் இக்கருத்து தோன்றியது. மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று சந்ததி நீடிக்க நீடிக்க அவன் தொடர்ந்து வாழ்வதாக, அமரத்துவம் அடைவதாகக் கருதப்படுகிறது.

இது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய அமரத்துவத்தில் சிறப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில், அந்த மனிதன் இறந்த பிறகு சில காலம் அவனது சந்ததியினர் அவனை நினைத்துக் கொண்டிருப்பர், வழிபாடு செய்வர். ஆனால் இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.

இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது.

நாங்கள் சோமனைக் குடித்து அமரத்துவம் அடைந்து விட்டோம், எங்களை எதிரிகள் என்ன செய்ய முடியும்?[ 7]

சோமக் கொடியின் சாறு சோம பானம் எனப்படுகிறது. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கப் போகிறோம்.) இது மனதை விசாலப்படுத்தும் தன்மை உடையது. மனதில் அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியது. இந்த ஆனந்தம் அனுபவிப்பவருக்கு காலம் என்னும் உணர்வு அற்றுப் போவதால் இது ஒரு வகையான அமரத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை சோம பானம் இல்லாமல் யோகப் பயிற்சியின் மூலமும் அடைய முடியும். பானத்தின் அல்லது யோகத்தின் விளைவு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் இருக்கும். இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.

இனி மூன்றாவது வகையான புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம்.

அவர்கள் புகழ் என்னும் உடையணிந்து அமரத்துவம் அடைகின்றனர்.[8]

வணங்கப்படும் தேவ நிலைக்கு உயர்த்தும் அமரத்வம் என்பது புகழால் மட்டுமே ஏற்படும். புகழ் எப்பொழுது வரும்? செயற்கரிய செய்தால் தான் வரும். அதுவும் பிறர் நலனுக்காகச் செய்தால் தான் வரும். 100 மணி நேரம் ஒற்றைக் காலில் நிற்பது செயற்கரிய செயல் தான். அதனால் பிறர்க்கு நன்மை விளையுமானால் தான் அது உண்மையான புகழுக்கும் அமரத்வத்துக்கும் காரணமாகும். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். ஸவிதாவால் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். தேவர்களுக்குச் சமானமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையையும் அமரத்துவத்தையும் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அம்ருதம் உண்டாயிற்று. அதைக் குடித்ததால் தான் தேவர்கள் சாகாநிலை பெற்றார்கள் என்பது புராணம். அம்ருதம் பற்றி ரிக் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.

இது ஒரு பிரபலமான மந்திரம். ரிக் 7.59.12 இல் உள்ளது. யஜுர் 3.60 இலும் உள்ளது.

நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக.

ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்று சொல்லப்படும் இதை லட்சக் கணக்கான முறை ஜபித்தோரும் ஹோமம் செய்தவரும் இறுதியில் ஒரு நாள் மரணத்தை அடைந்து தானே தீருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உடல் அழியாமல் வாழும் வரம் அவர்கள் கேட்கவில்லை. அது யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது அவர்கள் அறியாதது அல்ல. உடல் அழிந்த பின்னும், ரிபு சகோதரர்களைப் போல தேவ நிலை அடைந்து இறவாப் புகழுடன் விளங்க வேண்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள். எல்லோரும் ரிபுக்களைப் போல புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆக முடியுமா? படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

குறிப்புகள்:

1 –  8.31.9, 10.62.1
2 -  1,164.20, 1,164.30
3 -  2,33.2
4 -  5,63.2
5 -  5.4.10
6 -  சதபத பிராமணம்14.6.4.8.16
7 -  8,48.3
8 -  9,94.4

படம் உதவி: http://commons.wikimedia.org/wiki/File:Amitayus,_the_Buddha_of_Eternal_Life_ca_1625_LACMA.jpg

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=47101

தேமொழி

unread,
Jul 4, 2014, 12:13:42 AM7/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 12
மரணத்திலிருந்து அம்ருதத்தை நோக்கி

vedic pic

சாதாரண மனிதனாக இருப்பவன் வேள்வி செய்யும் நரன் ஆக உயர்கிறான். மேலும் உயர்ந்து பிரார்த்தனைப் பாடல் இயற்றும் ரிஷி ஆகிறான். அடுத்த நிலையில் தன் அருட்செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்கும் மகோனன் ஆகிறான். கடைசியாக சூரி எனப்படும் நிலையை அடைந்து மக்களுக்கு வழிகாட்டுகிறான். இதற்கு அடுத்த நிலையில் அவன் தேவன் ஆகிறான். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து மனிதன் தேவன் ஆகிறான்.   

வேதத்தில் ஐந்து வகை மனிதர் என்று பொருள்படும் பஞ்சஜநா:, பஞ்சக்ஷிதய:, பஞ்சக்ருஷ்டய: என்ற சொற்கள் அடிக்கடி காணப்படுகின்றன. (पञ्चजनाः, पञ्चकृष्टयः, पञ्चक्षितयः). இவை பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்ர சண்டாளர்களைக் குறிக்கும் என்று சாயணர் கூறுகிறார். இது ஏற்கக் கூடியதல்ல. ஏனெனில், ரிக் வேதத்தில் நான்கு வர்ணங்களைப் பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் பத்தாவது மண்டலத்தில் புருஷ சூக்தத்தில் ஆதி புருஷன் யாகம் செய்வதை வர்ணிக்கும் இடத்தில் விராட் புருஷனின் முகத்திலிருந்து பிராமணன் தோன்றியது முதலான விவரம் வருகிறது. ரிக் வேதம் முழுவதும் வேறு எங்கும் இது பற்றிய மேல் விவரம் கிடைக்கவில்லை. பத்தாவது மண்டலம் காலத்தால் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வர்ண முறை ஏற்பட்ட பிறகு இயற்றப்பட்டு இடைச்செருகலாகப் புகுத்தப்பட்ட பகுதி இது. அதனால் இதை ரிக் வேதத்தின் ஆதாரக் கருத்தாகக் கொள்வதற்கில்லை.

இதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு, மேலும் ஒரு சான்று தரப்படுகிறது. சாயணர் குறிப்பிடும் சண்டாளர் என்ற சொல் ரிக் வேதம் முழுவதும் இல்லவே இல்லை.
ராட்சசர்/ தஸ்யு என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டவர்களே பிற்காலத்தில் சண்டாளர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்லக் கூடும். இதுவும் தவறு. ஏனெனில் ரிக் வேதம் ஐவகை மனிதர்களும் நன்றாக வாழ வேண்டுமென்று எல்லா இடங்களிலும் பிரார்த்திக்கிறது. ராட்சசர்களையும் தஸ்யுக்களையும் அழிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆக ராட்சசர்கள்/ தஸ்யுக்கள் இந்த ஐவகை மனிதர்களில் அடங்கியவர்கள் அல்லர்.

ப்ரம்ம என்ற சொல் எல்லா இடங்களிலும் மந்திரம் என்ற சொல்லில் தான் வருகிறது. ப்ராம்மண என்ற சொல்லும் மந்திரம் சொல்பவர் என்ற பொருளில் தான் வருகிறது.  க்ஷத்ர என்ற சொல் வீரம் என்ற பொருளில் வருகிறதே தவிர க்ஷத்ரிய ஜாதி அல்லது வர்ணம் என்ற கருத்தைக் காண முடியவில்லை. அரசரைக் குறிக்க ராஜன்ய என்று தான் கூறப்படுகிறது. வைசிய சூத்ரர்களைப் பற்றிய குறிப்பு இல்லவே இல்லை.

ரிக் வேதம் முழுவதும் ஆழ்ந்து கற்கும்போது ஆங்காங்கு கிடைக்கின்ற குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்ததில், மனிதன் தேவ நிலையை அடையும் வழியில் உள்ள படி நிலைகளே இந்த ஐவகை மனிதர் என்று கருத இடம் உள்ளது. அவர்கள் 1 மர்த்யர், 2 நரர், 3 ரிஷி, 4 மகோனர், 5 ஸூரி. அந்த ஐவகை மனிதர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1 – மர்த்யர்கள்
இதன் நேர்ப் பொருள் இறக்கக் கூடியவர் என்பது. எல்லா மனிதரும் சாகத்தானே போகிறார்கள். இதற்கு ஏன் சில மனிதரை மட்டும் சாகக் கூடியவர் என்று கூற வேண்டும்? இவர்கள் வாழ்க்கையின் உயரிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இவர்கள் ராட்சசர்களைப் போல நாத்திகரோ, யக்ஞங்களுக்கு இடையூறு செய்பவரோ அல்லர். இவர்கள் கடவுளை வணங்குகிறார்கள், யாகமும் செய்கிறார்கள்.

யக்ஞம் என்பது மேலோரைப் போற்றலும், கீழோரைக் காத்தலும் ஆகும் என்பதை வரவிருக்கும் தலைப்பு ஒன்றில்  விரிவாகப் பார்க்க இருக்கிறோம். மர்த்யர்கள் யக்ஞம் என்பதன் முழுப் பொருளையும் உணராமல் (மேலோரைப் போற்றுவதையும் கீழோரைக் காப்பதையும் செய்யாமல்) தன் சொந்த நலனுக்காக மட்டும் வேள்வி செய்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.

உண்பதிலும், உணவிற்காக உழைப்பதிலும், சின்னஞ் சிறு இன்பங்களை அனுபவிப்பதிலும், பிறருக்குத் துன்பம் தருவதிலும்[1], போரிடுவதிலும்[2] அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இன்றி ஒரு நாள் இறந்து போகிறார்கள். இவர்கள் இறப்பதற்கே பிறந்தவர்கள். அதனால் மர்த்யர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் பாரதியாரின் பின் வரும் பாடலில் குறிப்பிடப்படும் வேடிக்கை மனிதன் போலவே இருக்கிறார்கள்.
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதர் ……………….

 2 -  நரர்
நரர் என்ற சொல்லுக்குத் தலைவர் என்றும் மனிதர்  என்றும் பொருள். மர்த்யர்களை விட மேம்பட்ட இவர்கள் விழிப்புப் பெற்ற மனிதர்கள். மிருகங்களைப் போல, புழு பூச்சிகளைப் போல, சாவதற்கென்று பிறந்தவர்கள் அல்ல நாம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர்கள். இந்தப் படியைக் கடந்து தான் ஒருவன் மேல் நிலைக்குப் போக முடியும்.

இந்த நரர்கள் விழிப்புப் பெற்றார்களே அன்றி என்ன செய்தால் தேவ நிலையை அடையலாம் என்று அறியாதவர்கள். அதனால் தமக்கு மேல் நிலையில் உள்ள ரிஷிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னபடி யக்ஞம், பிரார்த்தனை, சோமம் வடித்தல் முதலானவை செய்கிறார்கள். இவர்களுக்கு காரு, வஹ்னி, வாகத, ஸபாத, ஆயு என்ற வேறு பெயர்களும் உண்டு.

3 – ரிஷி
இவர்கள் யாகம் செய்யும் நிலையிலிருந்து மேலே உயர்ந்தவர்கள். இவர்கள் தேவர்களைக் குறித்த பிரார்த்தனைப் பாடல்களை அறிந்தவர்கள். முன்னோர்களின் பாடல்கள் மட்டுமன்றி, புதிய பாடல்களையும் இயற்றுவார்கள். இவர்களுக்கு விப்ர, விப, கவி, வித்வான் என்ற வேறு பெயர்களும் உண்டு. “வஹ்னிகள் ருதத்தின் மகனை (அக்னியை) (ஹவிஸ் முதலான) காணிக்கைகளால் நிரப்பும்போது, விப்ரர்கள் ருதத்தைப் பிரார்த்தனைகளால் நிரப்புகிறார்கள்[3] என்பதிலிருந்து விப்ரர் எனப்பட்ட ரிஷிகள், வஹ்னி என்ற நரர் போல் வேள்வி செய்வதில்லை என்றும் அவர்கள் தோத்திரங்களைப் பாடி தேவர்களைத் துதிக்கிறார்கள் என்றும் அறிகிறோம். வேத மந்திரம் முழுவதும் இத்தகைய ரிஷிகள் இயற்றியவை தாம். தன்னை விடக் கீழ் நிலையில் உள்ள மர்த்யர், நரர் ஆகியோருக்காகவும், மேல் நிலையில் உள்ள மகோனர், சூரி ஆகியோருக்காகவும் சேர்த்து இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

4 – மகோனர்
இந்தச் சொல்லுக்கு செல்வம் மிக்கவர்கள் என்று பொருள். இவர்கள் அதை மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அந்தச் செல்வம் எத்தகையது என்பதை பின்னால் வரும் ஒரு பகுதியில் காணலாம். ஓரிடத்தில் மட்டும் இந்திரா, பிறருக்குக் கொடுக்காத மகோனரால் உனக்குத் துன்பம் நேராதிருப்பதாக[4] என்று வருகிறது. எனவே, வாரி வழங்காத மகோனரும் அபூர்வமாக ஓரிருவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இவர்கள் ரிஷியாக இருந்து உயர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தனக்காகப் பிரார்த்தனை செய்வதில்லை. ஓரிரு இடங்களில் “மகோனராகிய எங்களுக்கு செல்வம் அருள்க” என்று பொருள் கொள்ளக் கூடிய மந்திரங்கள் உள்ளன. மற்ற இடங்களில், பிரார்த்தனை செய்யும் ரிஷிகள், “எங்களுக்கும் எங்கள் மகோனர்களுக்கும் உணவு, இருப்பிடம், மக்கட் பேறு, செல்வம், புகழ், பாதுகாப்பு, எதிரிகளை வெல்ல வலிமை முதலானவை கிடைக்க வேண்டுமென்று” தேவர்களை வேண்டுகிறார்கள். இவர்கள் ரிஷிகளால் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள்.

மகோனர்களைப் பற்றிய ஒரு மந்திரத்தில், இவர்கள் பல விதமான எண்ணங்களை உடையவர்கள். வாயிலே எப்பொழுதும் துதிகளைக் காக்கிறார்கள். ஒளியின் முன்னே தர்ப்பைகளைப் பரத்துகிறார்கள். தானே புகழ் அணிந்து கொள்கிறார்கள். மக்களுக்கு நிறைய தானம் செய்கிறார்கள். இவர்களுடைய தேர் தடைபடாமல் செல்லட்டும் என்று ரிஷி வேண்டுகிறார்.[5]

5 – ஸூரி
இவர்கள் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாதவர்கள். தன்னிடமுள்ள செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்குபவர்கள். முற்றிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியவர்கள். இவர்களுக்கு செல்வம், உணவு மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்று ரிஷிகள் தான் வேண்ட வேண்டியிருக்கிறது. இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முந்திய படியில் உள்ளவர்கள். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு அக்னி மகிழ்ச்சி அளிப்பதாக வேதம் கூறுகிறது.[6] இவர்களும் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள். பிரார்த்தனை செய்வோருக்கு செல்வத்தையும் புகழையும் கொடு,  சூரிகளுக்கு வஸுத்வனத்தையும் அம்ருதத்தையும் கொடு என்று ரிஷி வேண்டுகிறார்.[7] இதிலிருந்து சூரி நிலைக்கு அடுத்த நிலை வஸு என்ற தேவநிலை என்று தெரிகிறது.

இவர்கள் யக்ஞம் செய்வதாகக் கூறப்படவில்லை. ஆனால் யக்ஞத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறார்கள்.[8] இவர்கள் யந்தார (வழிகாட்டிகள்) என்று கூறப்படுவதால், இவர்கள் மற்ற மக்களுக்கு தேவர்களின் அருளைப் பெறுவதற்கான வழியாக வேள்வி முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும் என அறிகிறோம். தேவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து அபகரித்த செல்வத்தை இவர்களுக்கு வழங்குகிறார்கள். அதை இவர்கள் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். பிறருக்குக் கொடுக்காத சூரி எவரும் இல்லை.

இவர்கள் மகோனர்களை விட மேல் நிலையில் உள்ளவர்கள் என்பது எதனால் தெரிகிறது என்றால், எல்லா மந்திரங்களிலும் எங்கள் சூரிகளுக்கு செல்வம், புகழ், நீண்ட ஆயுள், நல்ல இருப்பிடம், மக்கட்பேறு, துன்பம் இல்லாத வாழ்வு முதலியவை கிடைக்க வேண்டுமென்று ரிஷிகள் வேண்டுகிறார்கள். சூரிகள் தங்களுக்காக எதையும் வேண்டுவதாக எந்த மந்திரமும் கூறவில்லை.

ருதத்தின் (தர்மத்தின்) படி நடந்து இவர்கள் மற்ற மக்களையும் நன்னெறிப் படுத்தும் வேலை இவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

மனிதன் எப்படி தேவ நிலையை அடைகிறான் என்பதை ஒரு மந்திரம் விளக்குகிறது. ருதத்தைத் (தர்மத்தைத்) தாங்கிக் கொண்டு அதைப் போற்றுவதையே செல்வமாகக் கருதி, பல இடங்களிலும் தேடிக் கொண்டு, வேறு எதிலும் ஆசை வைக்காமல், தங்கள் வேலையைச் செய்துகொண்டு, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டு, தேவப் பிறப்பை நோக்கிச் செல்கிறார்கள். [9]

மர்த்யனாக இருப்பவன் இப்படி படிப்படியாக உயர்ந்து தேவ நிலையை அடையலாம். அப்பொழுது அவனுடைய உடல் மடிந்தாலும் அவனுடைய புகழ் மறையாது. அவன் தேவர்களோடு தேவர்களாகச் சேர்ந்து விடுவான். விண்ணில் ஒளியுள்ள உடல் பெற்று அமரனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

இந்த ஐந்தில் நரர், கவி, மகோனர், சூரி ஆகிய அடைமொழிகள் இந்திரன், மருத்துகள், அக்னி, அச்வின்கள், வருணன், சோமன், ரிபுக்கள் ஆகிய எல்லாத் தேவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேவர்கள் எல்லாரும் இந்த நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.

குறிப்புகள்:

1    1.27.3
2    1.27.7
3    8.6.2
4.    6.44.12
5     5.18.3-5
6     1.31.7
7     8.13.12
8     10.66.2
9    1.71.3

படம் உதவிக்கு நன்றி: http://swamiindology.blogspot.com/2013/10/mysterious-atharva-veda-part-2.html

http://cdn2-b.examiner.com/sites/default/files/styles/image_content_width/hash/7e/c6/7ec6f4beb41676c18c52e0c2c5e5ea62.jpg?itok=QP4ZC2sk

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

One Comment on “என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 12”

  • k.ravi wrote on 28 June, 2014, 9:35 

    Excellent. Research-oriented. Elevating and thoughtful Enjoyed reading. K Ravi

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=47351

தேமொழி

unread,
Jul 7, 2014, 10:34:57 PM7/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 13

கற்பனை ரதம்

fire1

இந்தத் தொடர் சற்றேறக்குறைய 50 வாரங்களுக்கு வரும். சலிப்பைத் தவிர்ப்பதற்காக, இந்த வாரம் ஆராய்ச்சியிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கொஞ்சம் கற்பனையில் திளைப்போம். நம்முடைய கற்பனை ரதத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்று மனித நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்து வருவோம்.

இங்கே மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையிலிருந்து சற்றும் வேறுபடாமல் இருக்கிறது. கல்லை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது தான் மனித நாகரிக வளர்ச்சியின் முதல் படி. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-

வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

fire2அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதருக்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. கிய்யா முய்யா என்று குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. வேத விருட்சத்தின் முதல் விதை அங்கே தூவப்பட்டது.

fire3காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான். (மின் வசதி ஏற்படாத காலத்தில் கிராமங்களில் ஒரு தென்னை மட்டையைச் சுருட்டிக் கட்டிக் கொளுத்திக் கொண்டு இரவில் பயணம் செய்வர். இதற்கு சுளுந்து என்று பெயர். இதை நான் கடைசியாகப் பார்த்தது 1960 இல்.) சருகுகளினிடையே கற்களை மோதித் தீ மூட்டுவது எளிதாக இல்லை. பல முயற்சிகளுக்குப் பின் தான் அதில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மூட்டிய தீயை அணையாமல் பாதுகாப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.

பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

தீ மூட்டத் தேவையான பெரிய காய்ந்த மரங்களைத் தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வர பிற மனிதரின் உதவி தேவைப்பட்டது. அது வரை பால் உறவுக்காக மட்டுமே மற்றவரை நாடியவன் இன்று அதற்கு அப்பால் சென்று பல மனிதரிடமும் இணக்கமாக வாழத் தலைப்பட்டான். ஓரிடத்தில் தீ மூட்டி பல மனிதரும் பாதுகாப்பு கருதி அதற்குப் பின்னே சேர்ந்து இருக்கத் தொடங்கியதில் சமூக வாழ்க்கை துவங்கியது.

தங்குமிடத்தில் தங்களுக்கு முன்னே தீ வளர்த்தார்கள், எனவே ‘முன்னால் வைக்கப்படுபவன்’ என்ற பொருளில் அக்னிக்குப் ‘புரோ-ஹிதன்’ என்றும் பெயரிட்டார்கள். கூட்டத்தைச் சார்ந்தவர் வெளியில் சென்றிருந்தால் அவருக்குக் கூட்டம் இருக்குமிடத்தைத் தெரிவித்து அழைக்க நெருப்பைப் பயன்படுத்தினர். எனவே ‘அழைப்பவன்’   என்ற பொருளில் தீக்கு ‘ஹோதா’ என்றும்  பெயரிட்டார்கள்.

ஆபத்து வரும்போது ஒன்று கூடுவதும் அது நீங்கியபின் அடித்துக் கொள்வதும் மனித இயல்பு அல்லவா? அவ்வாறு நேரும்போது, மீண்டும் ஆபத்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தவறு செய்தவரைத் தண்டித்துத் திருத்த ஒரு தலைவன் ஏற்பட்டான். மனிதனின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.

தீயின் உதவியால் தனக்கு வசதியான இடத்தில் காட்டை அழித்து விவசாயம் செய்தான். உலோகங்களை உருக்கி கருவிகளும் ஆயுதங்களும் அணிகலன்களும் செய்தான். பொருளாதாரம் என்றொரு புதிய அத்தியாயம் அவன் வாழ்வில் ஏற்பட்டது.

தத்தம் கூட்டத்திற்குள் அந்தந்தத் தலைவர்கள் அமைதி ஏற்படு்த்தினாலும் கூட்டங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. வலுத்தவன் வென்றான், தன் ஆட்சிப் பரப்பைப் பெரிதாக்கிக் கொண்டான். தன் வலிமைக்கும் அறிவுக்கும் செல்வத்துக்கும் அக்னியே காரணம் என்று கருதி அதை நன்றியுடன் வழிபட்டான்.

விண்ணில் தோன்றும் சூரியனைப் பார்க்கிறான். வெப்பம், வெளிச்சம், வலிமை இவற்றில் அது தீயைப் போலவே உள்ளது. இதுவும் தீ தானோ?

மின்னல் மின்னுகிறது. கண நேரமே ஆனாலும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது, மரங்களைத் தீப்பற்றி எரிய வைக்கிறது. இதுவும் அக்னி தானோ?

கடலிலிருந்து அவ்வப்போது தீச்சுவாலைகள் கிளம்புகின்றன. நீருக்குள்ளும் அக்னி மறைந்து வாழ்கிறானோ?

மரங்கள் உரசுவதால் காட்டுத் தீ உண்டாகிறது. மரங்களினூடேயும் அவன் மறைந்து வாழ்கிறானோ?

தீயை மூட்டிவிட்டுக் கொஞ்சம் அசந்தால் அது அணைந்து விடலாம், வேறு எங்கேனும் பற்றிக் கொண்டு ஆபத்து விளைவிக்கலாம், தீ மேல் வைக்கப்பட்ட உணவு கருகிவிடலாம். தீ விஷயத்தில் மனிதன் எப்பொழுதும் விழிப்புடனும் செயல் துடிப்புடனும் இருப்பது அவசியமாகிறது. எனவே அக்னியை ‘செயலுக்குத் தூண்டுபவன்’ என்று பெயரிட்டான்.

வெளி உலகில் பல வகையான அக்னிகளைப் பார்த்த அவன் தன் உடலுக்குள்ளே உற்று நோக்குகிறான். பசி எப்படி எரிக்கிறது? எப்படி செயலுக்குத் தூண்டுகிறது? பசி இல்லாவிட்டால் செயல்களே நின்று விடுமே? இதுவும் அக்னி தானோ?

உயிருள்ள உடல்களில் எப்போதும் சூடு இருந்து கொண்டே இருக்கிறது. செத்த உடல் சில்லிட்டுப் போகிறது. குகைக்குள்ளே திருடன் போல உடலுக்குள்ளேயும் அக்னி ஒளிந்து வாழ்கிறானோ?

இனப் பெருக்க வேட்கை தோன்றிவிட்டால் அது எப்படி உடலையும் உள்ளத்தையும் எரிக்கிறது? ஆக, அதுவும் அக்னி தானோ?

ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தாகம் எப்படி எல்லாம் மனிதனை நிலை கொள்ள விடாமல் இயக்கி வைக்கிறது? அதுவும் அக்னி தான்.

இப்படியாக, மனிதனின் நாகரிக வளர்ச்சியின் வேகத்தை முடுக்கிவிட்ட அக்னியைப் புகழ்ந்து வேத ரிஷிகள் பாடிய பாடல்களைப் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் காண்போம்.

படங்கள் உதவிக்கு நன்றி:
www.smashinglists.com/top-ten-technology-advances-in-history/
www.youtube.com/watch?v=i1YmKImHZl8

http://www.dailymail.co.uk/news/article-2465933/Mans-greatest-invention-wheel-taming-twig-toothbrush-gave-longer-lives-invent-evolve.html

நன்றி வல்லமை :   http://www.vallamai.com/?p=47600

தேமொழி

unread,
Jul 14, 2014, 12:27:22 AM7/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 14

வேத ரிஷிகளின் கவிதைச் சிறப்பு 

அரவிந்த கோஷ் சொல்வதாகப் பாரதி கூறுகிறார், “வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் இந்த அக்னி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கின்றது. ஸூக்ஷ்மப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக்கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும், அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

vedas_puranas

வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. சாதாரணமாக நாம் பார்ப்பது போல அல்லாமல், அவர்கள் ஒரு குழந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறார்கள். எதையும் வியப்புடன் நோக்கும் குழந்தைப் பண்பை இழக்காமல் அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருள்களை உற்றுநோக்கினர்.

தம் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் குழந்தையாக இல்லாமல் கற்பனை வளம் மிக்க, தேர்ந்த புலவனின் திறமையைக் காட்டுகிறார்கள். குழந்தைத் தனத்தையும் புலமையையும் இணைத்து, எதையும் மறைபொருளாகவே தெரிவிக்கும் வேத மொழிநடைச் சிறப்பை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரிக் வேதத்தில் அக்னி பற்றிப் பல இடங்களில் காணப்படும் புகழ் மொழிகளில் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

எரிபொருள் இருக்குமிடத்தில் அடுத்த அடுத்த இடங்களுக்கு அக்னி பரவிக்கொண்டே இருப்பதையும் எளிதில் நகர்ந்து, நெடுந்தூரம் செல்வதையும் “அவர் சுகமான ரதம் கொண்டவர்” (சுக தம ரத:)  என வர்ணிக்கின்றனர்.

மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் நாம் விளக்கேற்றுகிறோம். இருள் நீங்குகிறது. இது நமக்குச் சர்வ சாதாரணமான விஷயம். ஆனால் ரிஷி இதைக் கவித்துவக் கண்ணால் பார்க்கிறார். “வலிமையான குதிரைகளுடன் உன் ஒளி வலையை வீசிக் கொண்டு இருளாகிய கரு நிறப் போர்வையைக் கிழித்துக் கொண்டு நீ முன்னேறுகிறாய். அந்த இருளை, மறையும் சூரியனின் கிரணங்கள் நீரில் ஆழ்த்துகின்றன” என்கிறார்.[1]

அக்னிக்கென்று நாம் ஹோம குண்டம், அடுப்பு போன்ற இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். நாம் அமைக்காத இடங்களில் தீ பரவ நாம் விடுவதில்லை அல்லவா? இதனால் “தன் இருப்பிடத்திலேயே வளர்பவர் ” (ஸ்வே தமே வர்தமான: ) என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.

காற்று வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசும். நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். அது போல, அக்னி நகர்வதற்குக் குறிப்பிட்ட திசை உண்டா? இல்லை அல்லவா? இதை, “அவரது முகம் எல்லா திசைகளிலும் பார்க்கிறது, அவர் நான்கு கண் உடையவர்” (விச்வதோமுக:, சதுரக்ஷ: ) என்கிறார் ரிஷி.

தீ எரியும் அழகைக் கவி ரசிக்கிறார். ஜ்வாலைகள் நாக்குகளைப் போல் உள்ளன. அதனால் அக்னி ஸப்த ஜிஹ்வா – ஏழு நாக்குகள் உள்ளவர் – என்று கூறப்படுகிறார். அவை அவருடைய கேசம் போல் உள்ளன. அதனால் அக்னி ஒளியுள்ள கேசம் உடையவர் (சோசிஷ்கேச) என்று கூறப்படுகிறார். பார்ப்பதற்கு அழகானவர் (தர்சத) என்றும் புகழப்படுகிறார். நெய்யினால் அக்னி வளர்வதை நெய்யினால் மகிழ்பவர் என்று குறிப்பிடுகிறார். அவர் நெய் முதுகு உடையவர் (க்ருதப்ருஷ்ட) என்றும் சொல்லப்படுகிறார்.

“அக்னி பிறக்கும் போது வெள்ளையாகவும் வலுத்த பின்னர் சிவப்பாகவும் ஆகிறார்” (ச்வேதம் ஜஞானம், அருஷம் மஹித்வா) என்றும் “சிவப்புக் குதிரை கொண்டவர்” (ரோஹிதாச்வ) என்றும் ரசித்துப் போற்றுகிறார் ரிஷி.

அக்னி உள்ள இடத்தில் புகை இருக்கும். எனவே அவர் புகைக் கொடியார் (தூமகேது) எனப்படுகிறார். தீக்குச்சியை உராய்வதால் உண்டாகும் அக்னி குச்சியையே அழித்து விடுகிறது. ரிஷி பேசுகிறார்,“விண்ணே, மண்ணே, இந்த அதிசயமான இயற்கை நியதியைக் கேளுங்கள், பிறந்ததும் பெற்றோரை விழுங்குகிறான் இந்த சிசு.”[2]

அக்னியை பகலில் ஹோமம், சமையல் முதலானவற்றிற்காகவும் இரவில் வெளிச்சம் தருவதற்காகவும் மூட்டும் நிகழ்ச்சியைக் கவித்துவத்துடன் ரிஷி வர்ணிக்கிறார்,

“இந்த அக்னிக் குழந்தைக்கு இரவு என்னும் பெண்ணும் பகல் என்னும் பெண்ணும் மாறி மாறிப் பாலூட்டினர்.”[3]

பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதால் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

மூட்டப்பட்டவுடன் தீயைக் காற்று அணைக்காமல் விரல்களால் மூடிக் காப்பாற்றும் நிகழ்ச்சியை முனிவர் வர்ணிக்கும் முறை அழகானது. “மணமாகாத பத்து சகோதரிகள் சேர்ந்து புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையைப் பற்றுகிறார்கள்.” என்கின்றனர்.[4]

அதே நிகழ்ச்சிக்கு இதோ இன்னொரு உவமை. வனத்தில் உள்ள இரு திருடர்கள் பல கயிறுகளால் வழிப்போக்கனைக் கட்டி நகர விடாமல் செய்வது போல இரு கைகளும் பத்து விரல்களால் தீயை அணையாமல் காக்கின்றன. [5]

குறிப்புகள்:

1    4.13.4.
2    10.79.4.
3    1,96.5.
4    3,29.13.
5    10.4.6.

படம் உதவிக்கு நன்றி: http://www.hinduismnet.com/hinduism-vedas.htm

 நன்றி வல்லமை :   http://www.vallamai.com/?p=47786

தேமொழி

unread,
Jul 19, 2014, 12:33:43 AM7/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 15

அக்னியின் சிறப்புகள்

agni

விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

அக்னியின் தோற்றம்
அக்னி எப்பொழுது தோன்றியவர்? யாருக்குத் தெரியும்? அவர் மிகப் பழமையானவர் என்பது மட்டும் தான் ரிஷிகளுக்குத் தெரிகிறது. அவர் எவ்வாறு தோன்றினார் என்பதை ஊகித்து உணர்த்துகிறார்கள். இது பல வகை அக்னிக்கும் பொருத்தமாக அமைகிறது.

“முதலில் அக்னி விண்ணிலிருந்தும், இரண்டாவதாக நம்மிடமிருந்தும், மூன்றாவதாக நீரிலிருந்தும் அக்னி தோன்றினார்”[1] எனப் பேசுகின்றனர்.

விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். எனவே விண்ணும் மண்ணும் அவருடைய பெற்றோர்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, விண்ணைத் தந்தையாகவும் மண்ணைத் தாயாகவும் சொல்வது வேத வழக்கம். இதற்கு மாறாக, இரண்டையும் சேர்த்து ரோதஸீ என்ற பெயரில் சொல்லும்போது இரு பெண்கள் என்று சொல்வதும் வேதத்தில் உண்டு. எனவே அக்னி இரண்டு தாய்களின் மகன் என்று சொல்லப்படுகிறார்.

இன்னொரு வகையிலும் அவருக்கு இந்தப் பெயர் பொருந்துகிறது. இரண்டு அரணிக் குச்சிகளால் அவர் உருவாக்கப்படுவதாலும் இரு தாய்மார்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

மேலும், பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதாலும் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

பண்புச் சிறப்புகள்
அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், கட்டுப்பாடானவர், புனிதமானவர். நம் வாழ்வின் ஊற்று. தவறே செய்யாதவர்.

மாயா எனப்படும் அதிசய சக்தி, ஆச்சரியமான செயல் திறன், துணிச்சல், வேகம், வலிமை கொண்டவர். வ்ருஷபர் (காளை) என்றும் வலிமையின் மகன் எனப் பொருள் தரும் ஸஹஸஸ் ஸூனு, ஊர்ஜோ நபாத் ஆகிய அடைமொழிகளாலும் போற்றப்படுகிறார். போர்க்களங்களில் முதலில் நிற்பவர், விருத்திரனையும் 99 நகரங்களையும் அழித்தவர். ராட்சசர்களையும் பகைவர்களையும் அழிப்பவர், போட்டி இல்லாதவர்.

குழப்பமில்லாத தெளிந்த அறிவைச் செல்வமாகக் கொண்டவர், பிறக்கும்போதே எல்லாம் அறிந்தவர், உலகில் பிறந்துள்ள அனைத்தையும் அறிந்தவர் (ஜாதவேதஸ்), வருங்காலம் உணர்ந்தவர் (கவி), வித்வான், விப்ர (ரிஷி), கவிக்ரது, க்ரதுவித் (உலகைத் தூண்டுபவர்), அறிவைத் தூண்டுபவர் என்று போற்றப்படுகிறார். புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். இவருடைய திறமையால் கவிகள் பெருஞ் செயல்களைத் தனித்து நின்று செய்ய முடிகிறது.

மக்களின் தொண்டர்
பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அவரே தலைவர். குறிப்பாக, தேவர்களைப் போற்றும் இல்லங்களின் தலைவர். மக்களை ஒளியுள்ளவர்களாகவும் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களாகவும் ஆக்குகிறார்.

மக்கள் இனத்துக்கு விளக்காக மனு அவரை நிலைநாட்டினார், மனிதர்க்கு ஏற்படும் துன்பங்களை, அது தேவர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும், மனிதரால் ஏற்பட்டதாக இருந்தாலும், போக்க வல்லவர். வணங்கினோரைக்  காப்பவர். தாமதமின்றி வரம் அருள்பவர். சுபங்களின் நாயகர். நிகழ் காலத்துக்கும் வருங்காலத்துக்கும் நாயகர்.

வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உணவு, ஆரோக்யம், புஷ்டி, வெல்ல முடியாத வலிமை, மகிழ்ச்சி, புத்திரர்கள், புகழ், அமரத்தன்மை, வருணன் தரும் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, போரில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை அவர் தரும் கொடைகள். வீட்டின் செல்வத்தைக் காக்கிறார்.

தலைமை
ரயி, வஸு ஆகிய உயர் செல்வத்திற்கும் அவரே அதிபதி. மானிடர் வாழும் நாட்டின் அரசர். மலைகளுக்கும் நீர் நிலைகளுக்கும், செடி கொடிகளுக்கும் அரசர். ஸம்ராட் (பேரரசன்) என்றும் அழைக்கப்படுகிறார். பல வீரர்களைப் பெற்றிருப்பவர். தேவர்களும் மனிதரும் அவர் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர். அவரே விதிப்பவர்.

எளிமை
இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், காட்சிக்கு இனியர், மகிழ்ச்சியுடன் இருப்பவர், எல்லோராலும் விரும்பப்படுபவர். ரிஷி அக்னியிடம் உரிமையோடு கொஞ்சுகிறார், பாருங்கள்.

நான் உன் இடத்தில்- அக்னியாக- இருந்தால் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். செல்வத்தில் திளைக்கிறாயே, உன் அருளில் நாங்களும் பங்கு கொள்கிறோமே[2].

பிதிரரும் தீயும்
உயிர் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. இறந்தவர்களுக்கும் உதவுபவர் அக்னி. பிரேதங்களை அவரிடம் ஒப்படைக்கிறோம். பெற்ற தாய் தந்தையரை அக்னியில் இடும்போது ரிஷியின் மனம் கஷ்டப்படுகிறது. “அக்னியே, இந்த உடலை எரிக்காதே, பக்குவப்படுத்தி பித்ருக்களுடன் சேர்த்து விடு. உன் பங்குக்கான ஆட்டை எரித்து உண்க”[3] என்று வேண்டுகிறார். அவர் நமது பித்ருக்களைக் காப்பாற்றுவதாகவும், பித்ருக்களின் உதவிக்கு வருவதாகவும் போற்றுகிறார்.

அக்னியும் யக்ஞமும்
இவரே யாகத்தின் தலைவர். ஹோதா, அத்வர்யு முதலான 8 வகை யக்ஞ வேலைகளையும் செய்கிறார். குறிப்பாக, தேவர்களை அழைக்கும் ஹோதா என்ற பணியை மிகுதியாகச் செய்கிறார். ஹவிஸ்ஸாலும் ஸ்தோத்திரங்களாலும் செய்யப்படும் யக்ஞத்தால் வளர்பவர் அக்னி. மேதஸ் (கொழுப்பு), நெய் இவற்றால் மகிழ்கிறார். தேவர்களையும் மனிதர்களையும் தூண்டி புத்தியினால் யக்ஞத்தை நடத்தச் செய்கிறார். புரோகிதர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரே யக்ஞத்தின் கேது (அடையாளம்), யக்ஞஸ்ய வித்வான் (வேள்வியை நன்கு அறிந்தவர்).

அக்னியும் தேவர்களும்    
அக்னி இயற்கையிலேயே தேவன், அதாவது ஒளியுடன் கூடியவர். தேவர்களுக்குப் போரில் ஆறுதல் கூறுகிறார். தேவர்களின் எதிரியான சம்பரனைக் கிழித்து, அவனது அரண்களை உடைத்தவர். வருணன், மித்ரன், அர்யமான் ஆகியோர் இவரால் வலிமையூட்டப்படுகின்றனர். தேவர்களின் நண்பன், தேவர்களின் தந்தை, தேவர்களின் மகன், தேவர்களின் கொடி.

அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். முப்பத்து மூன்று தேவர்களையும் வேள்விக்கு அழைத்து வருகிறார். தேவர்களோடு தர்ப்பையில் அமர்கிறார். வாயில் நெய்க் கரண்டி கொண்டவர் என்றும் தேவர்களின் நாக்கு என்றும் போற்றப்படுகிறார். நெய்யும் தேனும் உண்பதால் இனிய நாக்கு உடையவர். தேவர்கள் அமரத்வம் அடைந்தது அக்னியால் தான்[4].

மக்களுக்காக, தேவர்களைப் பூஜிக்கிறார். தேவர்களிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். மூரதேவர் எனப்பட்ட போலிக் கடவுளரின் பக்தர்களை அழிக்கிறார். தன் பக்தரைக் காக்கிறார். தேவரை வணங்காதாரைத் தன் கொம்புகளால் கிழிக்கிறார்.

அக்னி ஸ்வர்த்ருச (ஸ்வர்க்கத்தைப் பார்ப்பவர்), திவ: கேது (ஸ்வர்க்கத்தின் அடையாளம்) என்று போற்றப்படுகிறார். விண்ணின் தலையில் இருப்பவர் (திவ: மூர்தா). உலகம் முழுமையும் பார்ப்பவர் விச்வசர்ஷணி. மர்த்யனாகப் பிறக்கும் மனிதன் நரன், ரிஷி, மகோனன் என்று படிப்படியாக உயர்ந்து சூரி ஆவதை முன்பு பார்த்தோம். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

சூரி நிலையிலிருந்து தேவ நிலைக்கு அழைத்துச் செல்வது அக்னி தான். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு மகிழ்ச்சி அளிக்கிறாய் என்கிறது ஒரு மந்திரம்[5].

ருதத்தின் நாயகன்
ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் உள்ள ஒரு தனி நியதி ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை, ருதத்தில் தோன்றியவர், ருதத்தின் மடியில் கிடப்பவர், அதிலிருந்து என்றும் தவறாதவர் என்று போற்றுகிறார்கள் ரிஷிகள். “ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலை பெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்” என்கிறது ஒரு மந்திரம். அக்னியின் குதிரைகள் ருதத்தின் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறது மற்றொன்று.

ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறார் அக்னி. தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறார். ருதப்படி (நியதிப்படி) ருதுக்களைக் (பருவகாலங்களை) காப்பார். ருதத்தைக் காக்க வரும்போது அவரே வருணனாகிறார். இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறார். அவர் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.

நற்பண்புகள் பல கொண்டு, மக்களுக்குப் பல வகையிலும் உதவி புரிவதால் வழிபடத் தகுந்தவர். வழிபாட்டின் போது கூறப்படும் தோத்திரங்களை அக்னி விரும்பி ரசிக்கிறார். புகழுரைகள் அவரை வளர்க்கின்றன.

குறிப்புகள்:

1     10.45.1.
2    8.44.23, 8.44.24
3    10.16.1,4
4     5.3.4.
5     1.31.7.

படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=48106

It is loading more messages.
0 new messages