இந்த வார வல்லமையாளர்!

240 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 6, 2014, 8:30:11 PM4/6/14
to vall...@googlegroups.com

இந்த வார வல்லமையாளர்!   -   ஏப்ரல் 7 , 2014

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 7 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்    -   வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்

**************************************************************************************

M.Rishan Shareef

எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.

இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.

எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.

இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.

ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….

நுழைதல்
http://www.vallamai.com/?p=43635

எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல
உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்

விலகல்
http://www.vallamai.com/?p=43769

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்
நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.

இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்  தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் - http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

Anna Kannan

unread,
Apr 7, 2014, 4:47:06 AM4/7/14
to Vallamai
தொடர்ச்சியான படைப்பியக்கமும் புதிய தேடலும் நவீன இலக்கிய வாசிப்பும் கொண்ட ரிஷான், இந்த வார வல்லமையாளர் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி. அவரது திறனும் புகழும் மேன்மேலும் வளர, எனது நல்வாழ்த்துகள்.

Ranjani Narayanan

unread,
Apr 7, 2014, 5:31:19 AM4/7/14
to vall...@googlegroups.com
இந்த வார வல்லமையாளர் திரு ரிஷான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

அன்புடன்,
ரஞ்சனி 

2014-04-07 14:17 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
தொடர்ச்சியான படைப்பியக்கமும் புதிய தேடலும் நவீன இலக்கிய வாசிப்பும் கொண்ட ரிஷான், இந்த வார வல்லமையாளர் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி. அவரது திறனும் புகழும் மேன்மேலும் வளர, எனது நல்வாழ்த்துகள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Tulsi Gopal

unread,
Apr 7, 2014, 5:34:02 AM4/7/14
to vall...@googlegroups.com
வாவ்!  இனிய வாழ்த்து(க்)கள்  ரிஷான்.
என்றும் அன்புடன்,
துளசி

jayasree shanker

unread,
Apr 7, 2014, 7:55:35 AM4/7/14
to vall...@googlegroups.com
அன்பின் தம்பி ரிஷான் அவர்களுக்கு,

மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல சிறப்புகள் அடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.

7 ஏப்ரல், 2014 3:04 பிற்பகல் அன்று, Tulsi Gopal <gopal...@gmail.com> எழுதியது:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Apr 7, 2014, 8:00:09 AM4/7/14
to வல்லமை, மின்தமிழ்
திரு. ரிஷான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-04-07 17:25 GMT+05:30 jayasree shanker <jayashr...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Apr 7, 2014, 11:34:10 AM4/7/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
நண்பர்  திரு ரிஷான் ஷெரீஃப் அவர்களுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Megala Ramamourty

unread,
Apr 7, 2014, 2:35:41 PM4/7/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம் என்று பல்துறைத் திறமைகளும் வாய்க்கப்பெற்ற திரு. ரிஷான் ஷெரீஃப் இவ்வார வல்லமையாளராய்த் தேர்வாகியிருப்பது வெகு பொருத்தமே! அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

சிறந்த திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஆர்வத்தோடு தேடிக் கண்டெடுத்து கௌரவிக்கும் தோழி தேமொழிக்கும் என் சிறப்பான பாராட்டுதல்கள்!

அன்புடன்,
மேகலா

2014-04-07 12:45 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:

2014-04-07 9:03 GMT+02:00 Dhivakar <venkdh...@gmail.com>:

//இவ்வார வல்லமையாளர் சிரப்பு பெறும் ரிஷானுக்கு என் நல்வாழ்த்துக்கள்.//

சுபா போலவே நானும் வாழ்த்துகிறேன், ஆனால் சிறப்பு வாழ்த்துகள்..

ஆஹா பவளா.. புரிந்தது.:-)
நான் சொன்னதும் அதே சிறப்பு வாழ்த்து தான் .. ற     ர .. வாகி விட்டதே..

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 13, 2014, 9:13:41 PM4/13/14
to vall...@googlegroups.com
இந்த வார வல்லமையாளர்!   -   ஏப்ரல்14 , 2014

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 14 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்கள்

**************************************************************************************

vinay3முத்துச்சிவிகை; முத்துக்கள் இழைத்து அலங்கரித்த பல்லக்கு. இதனை ஒருவரை பெருமை படுத்த வழங்கியதாக தமிழ் இலக்கியங்கள் அறிவிக்கின்றன. செங்குந்தர் குலத்தைப் போற்றி ‘தக்கயாகப் பரணி’ இலக்கியம் படைத்த ஒட்டக்கூத்தருக்கு செங்குந்தர்கள் மனம் மகிழ்ந்து முத்துச்சிவிகை அளித்து அவரைப் பெருமைப் படுத்தினார்கள் என்பது வரலாறு.

பெண்ணாடகம் சென்று வழிபட்ட பின்னர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்க திருவுள்ளம் கொண்டார் திருஞானசம்பந்தர். செல்லும் வழியில், மாலைப்  பொழுதாகிவிட, களைப்பு மேலிட திருமாறன்பாடியில் இரவு தங்கினார். அவ்வூர்வாசிகளின் கனவில் தோன்றிய சிவன், “எனது பக்தன் சம்பந்தன் களைப்பு மேலிட சத்திரத்தில் உறங்குகின்றான். அவனுக்காக எமது கோயிலில் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை அவனுக்கு வழங்கி என்னிடம் அழைத்து வருக,” என ஆணையிட்டார். விழித்தெழுந்த அவ்வூர் மக்கள் கனவில் தோன்றிய சிவன் உரைத்தபடியே கோயிலில் முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவை இருக்கக் கண்டு வியந்து, அவற்றுடன் சென்று சம்பந்தரை வரவேற்றதாக திருமாறன்பாடி தலவரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த திருமாறன்பாடி நகரில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது இந்த வார வல்லமையாளர் திரு. சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு.

vinay2காரைக்குடியைச் சேர்ந்த திரு. வினைதீர்த்தான் அவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர். பணி ஓய்விற்குப் பிறகு, தனது பொழுதை பயனுள்ள வகையில் பல தன்னார்வப் பணிகளில் செலவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டது போல பள்ளி மாணவர்களுக்கு தன் முன்னேற்றப் பயிலரங்கங்கள் நடத்துவதும் ஆகும். இம்முறை இப்பள்ளியில் பயிலரங்கம் நடத்திய பொழுது மாணவச் செல்வங்களின் மனதில் பதியும் வண்ணம் அவ்வூர் தல வரலாற்றையும், முத்துச் சிவிகையையும் தொடர்பு படுத்தி உரையாடி இருப்பது அவர் வல்லமையில் பகிர்ந்து கொண்ட அவரது கட்டுரை [http://www.vallamai.com/?p=44002] அறியத் தருகிறது. அதில், முத்துச்சிவிகையை அடைவதை குறிக்கோளை அடைவதுடன் ஒப்பிட்டுள்ளார். இதன் பிறகு அவ்வூரில் பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் எக்காலமும் இப்பயிலரங்கம் குறிப்பிட்டதை மறக்க வழியுண்டா? இனி இப்பயிற்சிகளைப் பற்றி அவரே விவரித்ததை வழங்குவதே பொருத்தமாக இருக்கும். அக்கட்டுரையில் இருந்து சில வரிகள் கீழே…..

“பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாறைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கியான வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணி அயராது முயல வேண்டுமென்றேன்.

அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலை எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1.ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புக்கள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது.

S W O T – பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.”

ஓய்வு பெற்றாகிவிட்டது, இனி சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, தினசரிகள் சில படித்து, அரட்டைகள் பல அடித்து பொழுதைக் கழிக்கலாம் என்று இயல்பாகத்  தோன்றும் எண்ணத்தைத் தவிர்த்து, ஓய்வு காலத்தை பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்து வரும், தனது செயலின் வழியாக பிற பேரிள மக்களுக்கு முன்மாதிரியாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலாற்றி வரும் சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

Sk Natarajan

unread,
Apr 13, 2014, 11:06:25 PM4/13/14
to mintamil, வல்லமை
சொ.வினைதீர்த்தான் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Hari Krishnan

unread,
Apr 13, 2014, 11:10:09 PM4/13/14
to vallamai

2014-04-14 6:43 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 14 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்கள்

மிகப் பொருத்தமான தேர்வு.  இந்த விருதை கௌரவிக்கும் திரு வினைதீர்த்தான் அவர்களை மனங்கனிந்து வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Apr 13, 2014, 11:40:14 PM4/13/14
to vallamai
விருது  அடைந்தது சிறப்பு!   திருவினைதீர்த்தான் ஐயாவிற்கு இனிய  வாழ்த்துகள்! 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்
ஷைலஜா

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 13, 2014, 11:45:20 PM4/13/14
to வல்லமை
மாணவர்களின் வினைகள் தீர்த்திடவும், அவர்கள் வினாக்களுக்கு பதில் அளித்திடவும் பிறந்த வினைதீர்த்தான் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Anna Kannan

unread,
Apr 14, 2014, 12:51:24 AM4/14/14
to Vallamai

மெய்யன்பர், நன்னெஞ்சர், வினைத்திறம் மிகுந்த வினைதீர்த்தான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 14, 2014, 8:40:27 AM4/14/14
to vallamai
வல்லமையாளராக என்னைத் தேர்ந்தெடுத்த குழு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருமையாகப் பதிவிட்டுத் தேர்ந்தெடுத்துள்ள நண்பர் திருமிகு தேமொழி அவர்களுக்கும், என்னை எழுதுமாறு தனி மடல் மூலம் பல முறை ஊக்குவித்த திருமிகு பவளசங்கரி அவர்களுக்கும் திரு அண்ணாகண்ணன் அவர்களுக்கும் என் நன்றி.

வல்லமை மடலாடுதலில் அதிகமாகப் பங்கெடுத்துக்கொண்ட நான் வல்லமை மின்னிதழில் பங்கெடுத்ததில்லை. அண்மைக் காலங்களில் இதழ்களைப் பார்க்கும்போது அதில் பங்களிக்கும் அறிஞர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர், ஆர்வலர்கள் படைப்புக்களைப் படித்து வியந்துள்ளேன். இத் திறமையாளர்களிடையே என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி வல்லமைக் குழு வல்லமையாளாராகத் தேர்ந்தெடுத்துள்ளமையைப் புத்தாண்டுப் பரிசாகவே ஏற்றுக்கொள்கிறேன்.

இனிய சொற்கள் கூறி ஊக்குவித்துள்ள அன்பிற்கினிய நண்பர்கள் திரு ஹரிகி, திரு எஸ்.கே.நடராசன், திருமிகு ஷைலஜா, திரு கல்பட்டார், திரு அண்ணா கண்ணன் அவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.

வரும் கல்வியாண்டில் அதிகமான கல்விநிலையங்களில் தன் முன்னேற்றப் பயிலரங்குகள் நடத்த விருப்பம். இறையருளாலும், நண்பர்களான உங்கள் வாழ்த்தாலும் என் விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன்.
வல்லமையிலும் என்னால் இயன்ற பங்களிப்பைத் தொடர்கிறேன். மீண்டும் நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2014-04-14 6:43 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:

N. Ganesan

unread,
Apr 14, 2014, 8:48:45 AM4/14/14
to vall...@googlegroups.com

On Sunday, April 13, 2014 8:45:20 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
மாணவர்களின் வினைகள் தீர்த்திடவும், அவர்கள் வினாக்களுக்கு பதில் அளித்திடவும் பிறந்த வினைதீர்த்தான் அவர்களுக்கு வாழ்த்துகள்!

வினைதீர்த்தான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நா. கணேசன் 

துரை.ந.உ

unread,
Apr 14, 2014, 8:52:19 AM4/14/14
to Groups, வல்லமை
Inline image 1
வாழ்த்துகள் ஐயா 
Inline image 2

2014-04-14 12:25 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
வினைதீர்த்தான் அவர்களுக்குக்கிடைத்த புத்தாண்டுப் பரிசுக்கு வாழ்த்துகள். அவருடைய இந்த இழை மின் தமிழில் வந்திருக்கானு பார்க்கணும்.  

2014-04-14 6:45 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:
இந்த வார வல்லமையாளர்!   -   ஏப்ரல்14 , 2014

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 14 , 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்கள்

**************************************************************************************

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Megala Ramamourty

unread,
Apr 14, 2014, 10:42:10 AM4/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//ஓய்வு பெற்றாகிவிட்டது, இனி சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, தினசரிகள் சில படித்து, அரட்டைகள் பல அடித்து பொழுதைக் கழிக்கலாம் என்று...//

உண்மை.... இப்படி இருப்போர்தான் அதிகம். அவர்களினின்று முற்றிலும் மாறுபட்டவர் நம் வினைதீர்த்தான் ஐயா. மிகுபுலமை வாய்ந்தவர்; இளைய சமுதாயத்தினரை ஊக்குவிப்பவர்; குற்றம் கண்டவிடத்து ’நமக்கென்ன’ என்றிராமல் இடித்துரைக்கும் வீரம் பொருந்தியவர்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அவரின் திறமைகளை!

சிறந்த வல்லமையாளர் ஒருவரைச் சரியாக இனங்கண்டு விருது வழங்கியிருக்கிறீர்கள் தேமொழி! வல்லமையாளர் வினைதீர்த்தான் ஐயாவுக்குக் கிடைத்த புத்தாண்டுப் பரிசு இது. அவரை வாழ்த்தி வணங்குகிறேன். வாழிய பல்லாண்டு நற்பணிகள் பல ஆற்றி!

அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Ranjani Narayanan

unread,
Apr 14, 2014, 11:52:24 AM4/14/14
to vall...@googlegroups.com
இந்த வார வல்லமையாளர், திரு வினைதீர்த்தான் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதுவருடத்தின் முதல் வல்லமையாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் கூடவே வருகின்றன.

அன்புடன்,
ரஞ்சனி 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Apr 14, 2014, 12:34:30 PM4/14/14
to வல்லமை
திரு.வினைதீர்த்தான் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. புத்தாண்டு, வெற்றிகள் நிறைந்த ஆண்டாக மலர்ந்துள்ளது தங்களுக்கு என்று தோன்றுகிறது!..

அருமையான தேர்வுக்காக, தேமொழிக்கும் பாராட்டுக்கள்!.. மிக உன்னிப்பாகக் கவனித்து தேர்வு செய்து வருகிறீர்கள்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-04-14 21:22 GMT+05:30 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
 
சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 14, 2014, 11:08:59 PM4/14/14
to vallamai
2014-04-14 22:04 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
திரு.வினைதீர்த்தான் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. புத்தாண்டு, வெற்றிகள் நிறைந்த ஆண்டாக மலர்ந்துள்ளது தங்களுக்கு என்று தோன்றுகிறது!..

அருமையான தேர்வுக்காக, தேமொழிக்கும் பாராட்டுக்கள்!.. மிக உன்னிப்பாகக் கவனித்து தேர்வு செய்து வருகிறீர்கள்!.

மிக்க நன்றி திருமிகு பார்வதி.
இனிய சொற்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் பெருமைமிகு நண்பர்கள் திரு கணேசன், திரு  துரை, திருமிகு ரஞ்சனி, திருமிகு மேகலா அனைவருக்கும் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.
இனிய ஜய ஆண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Kaviri Maindhan

unread,
Apr 14, 2014, 11:52:21 PM4/14/14
to vall...@googlegroups.com
நல்லோர் உள்ளமெல்லாம் நாம் விளங்க வேண்டுமென்றால் 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தால் போதும் என்பார்...

தன்னால் முடிந்த தூய பணியைத் தான் தளராமல் ஆற்றிவரும் 

சொ.வினைதீர்த்தானை எண்ணி நாம் பெருமை கொள்வோம்!!

ஏதோ செயலில் ஈடுபட்டு தான் வாழ்ந்தால் போதுமெனும் 

மாந்தர்களின் மத்தியில் பலரும் பயுனுறுவதற்காய் 

தினமும் பாடுபடும் அன்னாரைப் போற்றுவதால் -

வல்லமையே உள்ளபடி பெருமையுறுகிறது!!

மனம் நிறைந்த வாழ்த்துகள்..  

காவிரிமைந்தன் 

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 15, 2014, 1:08:56 AM4/15/14
to mintamil, vallamai

2014-04-14 21:19 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

ஜெய வருடத்தின் முதல் வார வல்லமையாளர் ஐயா வினைதீர்த்தான் அவர்களுக்குப் பாராட்டுகள்.

தங்களது பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
தாங்கள் பள்ளிகளில் ஆற்றிய உரைகளை மட்டுமே இணைய நண்பர்கள் அறிவர்.
தாங்கள் காரைக்குடியில் தமிழ்முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை யன்று நடைபெறும் கூட்டத்தில் பேசிய உரைகளையும் நான் கேட்டுள்ளேன்.
தங்களது அந்த உரைகளையும் இணைய நண்பர்கள் கேட்கச் செய்வது இன்னும் சிறப்பாக அமைந்திடும். 
 
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திரு காளைராசன். சிறு உரைகள் காணொளியாகப் பதிவிட முயல்வோம். 
 
வரும் 26ஆம் நாள் கோவிலூர் மடத்தில் தாங்கள் எறிபத்தநாயானார் பற்றி ஆற்றவுள்ள உரையையையும் கேட்கவிரும்புகிறேன்.

தங்கள் வருகையை அவசியம் எதிர்நோக்குகிறேன். இலை மலிந்த வேல் நம்பி எறிபத்த நாயனார் அன்பர் பணி செய்யத் தன்னை ஆளாக்கிக் கொண்டவர். சிவ அன்பு செய்தோர்க்கு இடையூறொன்று வந்துற்றபோது சிங்கமென எதிர்த்து நீக்கி நின்ற ஆண்மையாளர்.
தெய்வத் தமிழால் சேக்கிழார் மூன்று அடியார்களை இவ்வரலாற்றில் போற்றியுள்ளார். எறிபத்தர் ஒருவர். அடுத்தவர் நாளும் நியம நிட்டை தவறாது வைகறையில் பூக்கொய்து கருவூர் ஆநிலையப்பரின் பூசனைக்குத் தொண்டு செய்த காதலன்பர் சிவகாமியாண்டார். மூன்றாமவர் புகழ்ச் சோழ மன்னன். 
சோழனின் பட்டத்து யானை சிவகாமியாண்டான் கொய்துவந்த மலர்களைப் பறித்துப் புழுதியில் வீசிவிடுகிறது. வெகுண்ட எறிபத்தர் யானையையும் பாகர்களையும் தன் கை மழுவால் வெட்டிச்சாய்க்கிறார். சிவத்தொண்டுக்குத் தன் உடைமையான யானையால், தடுக்காத பாகரால் நிகழ்ந்த இடையூறை அறிந்த சோழமன்னனான புகழ்ச் சோழன் தன் உடைவாளை எறிபத்தரிடம் ஈந்து தன்னையே வெட்டச் சொல்கிறான். உடைவாளை வாங்காவிட்டால் மன்னன் வாளால் வெட்டிக்கொண்டுவிடுவானோ என்று அஞ்சி அதனைப் பெற்றுக்கொண்டார் எறிபத்தர். ஆனால்
 
  வன்பெறு களிறு பாகர் மடியவும் உடைவாளைத் தந்து
 ‘என்பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும்’என்னும்
 அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்றுகொண்டு
 ‘முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு’ என்றெண்ணி  

எறிபத்தர் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறார். தொண்டர்களின் அளப்பரிய பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் கருணையால் வான் ஒலி எழுந்து அவர் செய்கையைத் தடுக்கக் களிறும் பாகரும் உயிர்பெறப் பூமாரி பொழிகிறது.

மேன்மையான வரலாறு. கோவிலூர் மடாலயம் சுவாமிகள், நண்பர்களால் பெரிய புராணத் தொடர் சொற்பொழிவு மாதாந்திரக் கூட்டத்தில் 26.04.2014 மாலை பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளதற்கு மகிழ்கிறேன்.
தங்களுக்கும் நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 15, 2014, 2:32:09 AM4/15/14
to vallamai
மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் அருமையான இனிய சொற்களுக்கும் மிக்க நன்றி திரு காவேரிமைந்தன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

meenavan2

unread,
Apr 16, 2014, 2:45:29 AM4/16/14
to mint...@googlegroups.com, vallamai
வல்லமையாளர் தம்பி வினைதீர்த்தான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவச் செல்வங்களுக்குப் பயிற்சியும் இணையத்தில் பங்களிப்பும் வினைதீர்த்தான் நல்கவும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நா.மீனவன்.
 
தேமொழி

unread,
Apr 20, 2014, 10:39:54 PM4/20/14
to vall...@googlegroups.com
இந்த வார வல்லமையாளர்!   -   ஏப்ரல் 21 , 2014

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. எம்.மணிகண்டன் அவர்கள்

**************************************************************************************

வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் மதுரையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., சமுதாயப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுனராக (a demonstrator at TVS Educational Research and Development Centre’s Community College) இருக்கும் திரு. எம். மணிகண்டன் ஆவார். மணிகண்டன், கோவில்பட்டியை அடுத்த, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர். சென்ற திங்களன்று (ஏப்ரல் 14, 2014) திருநெல்வேலி, சங்கரன்கோவில் அருகில் குத்தாலப்பேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்ஷன் என்ற மூன்று வயதுச் சிறுவனை மீட்டதில் இவருக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இவர் வடிவமைத்த, இவரது கண்டுபிடிப்பான ஆழ்துளைக் கிணற்றுக் கருவியுடன் (‘Bore-well Robot’), இவரும் இவரது மீட்புப் பணிக் குழுவினரும் விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்கள். இவருடன் காவல்துறை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்புப் படையினர், ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியாளர் வரை தளத்தில் இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றியதில் சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டிருக்கிறான். அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மீட்புப் பணியை வெற்றி பெறச் செய்ததில் மணிகண்டனுக்கும் அவரது கண்டுபிடிப்புக்கும் பெரும் பங்கு உண்டு.

மீட்புப்பணிக் காணொளி: http://youtu.be/WAwRcJoKUpU

இந்தியாவில் குழந்தைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்வதில் இந்த நூற்றாண்டில் பற்பல புதுமையான நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று சில குழந்தைகள் நிகழ்த்தும் சாகச நிகழ்ச்சியான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து எழுவதும் ஒன்றாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. அக்காலம் போல பிள்ளைத்தமிழ் பாடும் வழக்கம் இருந்திருந்தால் பத்து பருவங்களையும் இற்றைப்படுத்தும் பட்டியலில் குழந்தைகளின் இந்த வீர விளையாட்டையும் ஒன்றாகச் சேர்க்கலாம் போலிருக்கிறது.

விவசயாத்திற்கு நீர் பற்றாக்குறையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல விவசாயிகளை ஆழ்துளைக் கிணறு தோண்டச் செய்கிறது. அவ்வாறு தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளில் நீரில்லாவிட்டால் அதனைக் கையோடு மூட வேண்டியதும் தோண்டிய நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது பொது அறிவுக்கு உட்பட்டது. அதைச் செய்யாத நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்படும் என்பதைச் சட்டம் போட்டு நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை. சிறு குழந்தைகளும் வழக்கம் போல் கண் மூடி கண் திறப்பதற்குள் அங்குமிங்கும் ஓடி எளிதில் விபத்துகளைச் சந்திப்பார்கள்.

இவ்வாறு நேரும் விபத்துகளில் ஏறத்தாழ ஒன்றரை அடி விட்டமுள்ள இதுபோன்று திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து விடுவதும் ஒன்றாகிப் போய் விட்டது. உடனே அவசர நடவடிக்கைகள் துவங்கி, சில நேரங்களில் இராணுவத்தையும் உதவிக்கு அழைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்திகளும், நேரடி ஒளிபரப்புகளும் வாடிக்கையாகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நல்லதொரு முடிவாக அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்படுவதுமில்லை என்பதைக்  கீழ் வரும் படங்களில் சில காண்பிக்கும்.

borewell accidents

பத்தாண்டுகளுக்கு முன்னர் மணிகண்டனின் மகன் சிறுவனாக இருந்தபொழுது இது போன்ற விபத்து ஒன்று நடக்க இருந்து, தடுத்துக் காப்பாற்றிய மணிகண்டனுக்கு இது போன்ற கருவி ஒன்றினை வடிவமைக்க எண்ணம் எழுந்ததாகவும், தனது சொந்த செலவில் வடிமைத்த பிறகு அதனை மேலும் செம்மைப்படுத்த இவர் பணியாற்றும் டி.வி.எஸ். கல்வி ஆராய்ச்சி மையம் உதவியதாகவும் கூறுகிறார் திரு. மணிகண்டன்.

இனி மணிகண்டனது ஆழ்துளைக் கிணற்றுக் கருவி வேலை செய்யம் விதத்தை அவரே விளக்குவது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

manikandans borewell robotஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பாக தீயணைப்பு நிலையங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

இக்கருவியை யார் வேண்டு மானாலும இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும்.

இது ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி

அரியதொரு கண்டுபிடிப்பால் உயிர்காக்க உதவிய எம்.மணிகண்டன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

செய்திகள் வழங்கிய ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி [http://tamil.thehindu.com/tamilnadu/article5913951.ece]

Anna Kannan

unread,
Apr 21, 2014, 5:15:13 AM4/21/14
to Vallamai
அருமையான தேர்வு; பயனுள்ள கண்டுபிடிப்பால் உயிர் காக்க உதவும் மணிகண்டன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

வேந்தன் அரசு

unread,
Apr 21, 2014, 9:50:13 AM4/21/14
to vallamai
மணீகண்டன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
இந்த புறக்கணிக்கப்பட்ட கினறுகள்ளின் உரிமையாளர்களைப்போல் கொடியவர்கள் எவரும் இல்லை., அரசு சட்டம் இயற்றி  உயிரிழப்புக்கு காரணமான இவர்களை தண்டிக்க வேண்டும்.

20 ஏப்ரல், 2014 10:39 பிற்பகல் அன்று, தேமொழி <them...@cs.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சி. ஜெயபாரதன்

unread,
Apr 21, 2014, 10:52:18 AM4/21/14
to vallamai
சி. ஜெயபாரதன் wrote on 21 April, 2014, 20:19

மெய் சிலிர்க்க வைக்கும் சிசு நேய மீட்புப் பணி நிகழ்ச்சி, தேமொழி.  இதைப் படக்காட்சியுடன் படைத்து வெளியிட்டதற்கு முதலில் உங்களுக்குப் பாராட்டு.

அடுத்த பாராட்டு அந்த அரிய மீட்புச் சாதனத்தை ஆக்கிய நிபுணர் மணிகண்டன் அவர்களுக்கு.

மூன்றாம் பாராட்டு அந்த சாதனத்தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திச் சரியான தருணத்தில் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றிய முழுவினருக்கு.

சி. ஜெயபாரதன்

2014-04-06 20:30 GMT-04:00 தேமொழி <them...@yahoo.com>:

இந்த வார வல்லமையாளர்!   -   ஏப்ரல் 7 , 2014

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 7 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்    -   வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்

**************************************************************************************

M.Rishan Shareef

எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.

இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.

எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.

இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.

ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….

நுழைதல்
http://www.vallamai.com/?p=43635

எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல
உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்

விலகல்
http://www.vallamai.com/?p=43769

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்
நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.

இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்  தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் - http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

சி. ஜெயபாரதன்

unread,
Apr 21, 2014, 11:23:15 AM4/21/14
to vallamai

மெய் சிலிர்க்க வைக்கும் சிசு நேய மீட்புப் பணி நிகழ்ச்சி, தேமொழி.  இதைப் படக்காட்சியுடன் படைத்து வெளியிட்டதற்கு முதலில் உங்களுக்குப் பாராட்டு.

அடுத்த பாராட்டு அந்த அரிய மீட்புச் சாதனத்தை ஆக்கிய நிபுணர் மணிகண்டன் அவர்களுக்கு.

மூன்றாம் பாராட்டு அந்த சாதனத்தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திச் சரியான தருணத்தில் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றிய முழுவினருக்கு.

சி. ஜெயபாரதன்

sharadha subramanian

unread,
Apr 21, 2014, 11:43:07 AM4/21/14
to vall...@googlegroups.com
உயிரைக்காப்பாற்றிய உயர்திரு மணிக்கண்டன் அவர்கட்டு எந்த விருது கொடுத்தாலும் தகும் வாழ்த்துக்கள்

தேமொழி

unread,
Apr 27, 2014, 9:10:17 PM4/27/14
to vall...@googlegroups.com

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 28 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்

**************************************************************************************

pichinikkadu elango

வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ (https://www.facebook.com/pichinikkadu.elango.9) அவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தத் தமிழகக் கவிஞர் வல்லமை இதழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமானவர், இன்றுடன் இரண்டு ஆண்டுகளாக (April 27, 2012 இல் இவரது முதல் வல்லமை பதிவு) வல்லமையின் வாசகர்களை தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வரும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர்  பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

கவிஞனாகிறேன்  என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.

இதை இதை
எழுதவேண்டுமென்று
எண்ணியதில்லை
எண்ணுவதுமில்லை

அது அது
வந்து நச்சரிப்பதால்தான்
எனது எழுதுகோல்
உச்சரிக்கிறது …..

இதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இவாரத்தில் வல்லமை இதழில் வெளிவந்த இவரதுகர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்ற கவிதையும் ஒருவகையில் நெடுங்கவிதையே.

இவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார்.

இம்முறை இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக்  கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன? அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார்.

துவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனை தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன்.  இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை.

கௌரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக்  கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது.

அக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
[முழுக் கவிதையின் சுட்டி: http://www.vallamai.com/?p=44441]

எல்லாரும்
எல்லா இடத்திலும்
கர்ணனையே வியக்கிறார்கள்
நான் வேறுபடுகிறேன்

உலகத்தோடு
நான்
ஒத்துப்போக விரும்பவில்லை
எல்லாரையும்போல
ஓபோட
விரும்பவில்லை

கொடை
கொடுக்கும் இடத்திலும்
குலம்கேட்ட இடத்திலும்
நான்
கர்ணன்பக்கம்தான்

திறன்காட்டவிடாமல்
குலம்கேட்டது கொடுமைதான்
அதற்குமேல்
அவன்மேல்
மரியாதையில்லை
நான்
அவன்பக்கமில்லை

செஞ்சோற்றுக்கடன்
தீர்த்ததிலும் பெருமையில்லை

பாண்டவர் கெளரவர்
மற்றும் வேடிக்கை
பார்ப்பவர்
நிறைந்த அவையில்
பாஞ்சாலிக்காக
யார்பேசினார்கள் நேர்மையாய்?

பெண்ணெனப்
பார்த்தவர் அதிகம்
பெண்ணென்று
பரிவுகாட்டியவர் யார்?

சுதந்தரம் இழந்தவன்
என்னை இழக்க
என் சுதந்தரத்தை இழக்க
என்ன உரிமையுண்டு?

பாஞ்சாலி கேள்விக்கு
அவை ஆண்மையற்று
அன்று ஆமைபோல் இருந்தது

பாஞ்சாலி பேசுவது
சரியென்று குரல்கொடுத்த
விகர்ணனைக்
கண்டித்த கர்ணனைக்
கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
ஏற்புடையதல்ல எனக்கு

விகர்ணன்
அவையில் சின்னவன்
பெண்ணுக்காய்ப்பேசிய
பெரியவன் அவன்தான்

துச்சாதனனைத்
துகிலுரியத் தூண்டியதே
கர்வக்காரன் கர்ணன்தான்

இனி எப்போதும்
நான் விகர்ணன் பக்கம்

இராமயணம் என்றால்
நான்
கும்பகர்ணன் பக்கம்

காரணம்
விகர்ணன்
நியாத்தின் பக்கம்

அவன்
கெளரவர்களுக்கு
கெளரவம் தந்தவன்

அவன்
நூற்றில் ஒருவனல்ல
ஆயிரத்தில் ஒருவன்

சிறப்பு மிக்க கவிதை ஒன்றை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ வழங்கிய திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

தேமொழி

unread,
May 4, 2014, 10:37:22 PM5/4/14
to vall...@googlegroups.com

இந்த வார வல்லமையாளர்!

மே 5, 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்

**************************************************************************************

வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்.

இலண்டனைச் சேர்ந்த 33 வயதான திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா என்பவர் பெரும்பான்மையான இந்திய இளைஞர்களில் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாநிலமான ஐதராபாத்திலிருந்து இலண்டன் சென்று அங்குள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்காகப் பணியாற்றுபவர். சமீபத்தில் (ஏப்ரல் 30, 2014 ) ஆந்திராவில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யும் பொருட்டு இந்தியா வந்திருப்பவர். உள்ளூரில் இருந்து கொண்டே தாய்நாட்டு நலனில் அக்கறையின்றி வாக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருக்கும் சிலருடன் ஒப்பிடும்போது இவர் வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த மண்ணிற்கு வந்திருப்பது பாராட்டிற்குரியது.

ராஜா கார்த்திக் கண்ட்டா இதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்குச் சிறப்புச் சலுகையை எதிர்பார்த்து, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்காமல் அனைவரையும் முந்த நினைத்த மத்திய அமைச்சரும், அரசியல் தலைவரும், நடிகருமான திரு. சிரஞ்சீவியின் செயலுக்கு வெளிப்படையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இவரது எதிர்ப்பினால் வேறு வழியின்றி ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்த மற்றவர்கள் போலன்றி, அவர் மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவியில் இருப்பவராயினும் அவரும் பொது மக்களைப் போலவே வரிசையில் நின்றுதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று துணிச்சலாக அவரைத் தட்டிக் கேட்டு, ஒரு சிறந்த குடிமகனாகத் தன் கடமையைச் சரிவர நிறைவேற்றிய இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது. இவரது இந்த செயலை ஆதரித்து வரிசையில் காத்திருந்த மற்றவர்களும் கரவொலி எழுப்பித் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் காணொளி சுட்டி இங்கே: http://youtu.be/LPyL5X8oThw

Chiranjeevi got disciplined

இது குறித்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜா கார்த்திக், “நான் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியன், எனது வாக்குரிமையை நிறைவேற்றவே இந்தியா வந்தேன். சிரஞ்சீவி முதியவரோ, மாற்றுத்திறனாளியோ அல்ல, அதனால்தான் நான் அவரிடம் உங்களுக்குச் சிறப்புச் சலுகை வேண்டுமா எனக் கேட்டு அவரை வரிசையில் நிற்கச் சொன்னேன், சிரஞ்சீவியை நான் மதித்தாலும் அவர் விதிமுறைகளை மீறுவதை அனுமதிக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். இது போன்று அதிகாரத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் இந்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்கப் பலர் முன் வர வேண்டும்.

சிறப்பு மிக்க நடத்தையால், இந்திய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய திரு. ராஜா கார்த்திக் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

செய்திகள் பல செய்தித் தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.
படம் உதவி: www.ndtv.com

Granny Visalam

unread,
May 5, 2014, 2:24:30 AM5/5/14
to vall...@googlegroups.com
இது போல் தைரியமாக பேசவும் எல்லோரும் ஒன்று என்ற கொள்கையை பெரிய புள்ளியான திரு சிரஞ்சீவிக்கும் எடுத்துச்சொன்னதும் கடமைத்தவறாது ஓட்டுப்போட வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததும் . நியமத்தைச்சரியாக அனுசரிக்காவிட்டால் மந்திரியையும் எதிர்த்துக்கேட்கும் துணிச்சல் கொண்டவரையும்  நான் மனதார பாராட்டுகிறேன் . இவர் வல்லமையாளர் ஆனதில் எனக்கும் மிகப்பெருமை . தேமொழி சரியான தேர்வை செய்திருக்கிறார். திரு ராஜா கார்த்திகிடமிருந்து  பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .
வாழ்த்துகள்

--

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 5, 2014, 3:21:11 AM5/5/14
to vall...@googlegroups.com

அன்பு நண்பர் திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு

தாங்கள் வல்லமையாளர் விருது பெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
மனங்கனிந்த பாராட்டுகள்.வாழ்த்துக்கள்.
(இன்று தான் (04.05.2014) தாங்கள் விருது பெற்றது அறிந்தேன்.)

தேரெழுந்தூர் கம்பன் உங்கள்
ஊரெழுந்து நகரெழுந்து தமிழ்
உயிரெழுத்துள்ளும் இன்னும்
ஊடி ஊடி கோடி கோடி
உயிரெழுத்தாய் உயர்த்திய‌
திறம் கண்டு வியந்து நின்றோம்.
காரைக்குடி நாடி நரம்புக்குள்
கம்பன் ஒலித்த ராமாயணம்
உங்கள் எழுத்துக்குள்ளும்
வில் முறித்து சொல் முறித்து
கரும்புச்சுவை காட்டியது
கண்டேன் கண்டேன் கண்டேன்
களிமிகக் கொண்டேன்.
வாழ்த்துக்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ருத்ரா

Em domingo, 6 de abril de 2014 17h30min11s UTC-7, தேமொழி escreveu:

இந்த வார வல்லமையாளர்!   -   ஏப்ரல் 7 , 2014

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 7 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்    -   வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்

இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்  தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் - http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

Ranjani Narayanan

unread,
May 5, 2014, 3:38:03 AM5/5/14
to vall...@googlegroups.com
இந்த வார வல்லமையாளர் திரு ராஜா கார்த்திக் மற்ற இந்தியக் குடிமக்களுக்கும் ஒரு உதாரணமாக திகழ்கிறார். அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
அன்புடன்,
ரஞ்சனி 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
May 5, 2014, 3:39:56 AM5/5/14
to vall...@googlegroups.com
திரு ராஜா கார்த்திக்கை வாழ்த்துகிறேன்.

--

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Anna Kannan

unread,
May 5, 2014, 4:02:23 AM5/5/14
to Vallamai
நேர்மையாகவும் துணிந்தும் கேள்வி எழுப்பி, சிரஞ்சீவி மட்டுமின்றி அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்பிய ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்களுக்கு வாழ்த்துகள்.

தேமொழி

unread,
May 11, 2014, 10:08:43 PM5/11/14
to vall...@googlegroups.com

இந்த வார வல்லமையாளர்!

மே 12, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள்

Untitleda

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு.

இலங்கை, இந்தியா, மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாகப் மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணைய தமிழ் மின்னிதழ் தளங்களிலும் இவரது கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

சென்றவாரம் இவர் வல்லமை வாசகர்களுடன் அவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற சிறந்த கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார்.

அக்கட்டுரையில் கருத்தைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளாக வெளிவந்த இக்கட்டுரையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2

……பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.

பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
பாடியவர் : வெள்ளெருக்கிலையார்

“பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”

என்று செல்கின்றது அந்தப்பாடல்.

‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.

மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்……..

தமிழர்களின் பரவலுக்கு சான்றாக அமையக்கூடிய கருத்துக்களை தனது கட்டுரையின் வழியாகப் பகிர்ந்து கொண்ட திரு. கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

Anbu Jaya

unread,
May 12, 2014, 4:12:00 AM5/12/14
to vallamai
இவ்வார வல்லமையாளர் சுதாகர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

அன்புடன்,
அன்பு ஜெயா

துரை.ந.உ

unread,
May 12, 2014, 4:20:01 AM5/12/14
to வல்லமை, Groups

தேமொழி

unread,
May 17, 2014, 10:25:38 PM5/17/14
to vall...@googlegroups.com
மே 18, 2014

இந்த வார வல்லமையாளர்!   அறிவிப்பை வழங்கும்  சிறப்புபொறுப்பை வகித்தவர் அன்பிற்குரிய திரு. துரை அவர்கள்.

இந்த வார வல்லமையாளர்!

மே 18, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. ஜெய.சந்திரசேகரன் அவர்கள்

PP Chandra copy

‘மரபூர்’ ஜெய.சந்திரசேகரன் அவர்கள் ‘ரீச்’ சந்திரா’ என்ற பெயராலும் அறியப்படுபவர். ப்ளாஸ்டிக் மற்றும் தொழில்கள் உற்பத்தி ஆலோசகர் பணியில் இருப்பவர். அத்துடன் புராதனக் கோவில்களில் உழவாரப்பணியைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவர். புராதனச் சின்னங்களின் புனரமைப்பு இவரின் விருப்பப் பணிகள். இவரின் தற்போதைய தீவிர முழக்கம்: எல்லோர்க்கும் வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் தூய குடிநீர்.

தண்ணீர் …இன்றைய சூழலில் கீழ்த்தட்டு மக்கள் தாகம் தீர்க்க , ஒரு குடம் தண்ணீருக்கே தெருத்தெருவாய் கிணறு, குளமென அலையும் நிலை. அதுவும் அதள பாதாளத்திலிருந்துதான் எடுக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் நீரும் சுத்தப் படுத்தப்படாமல் வடிகட்டாமல் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை. உடல் நலத்தைக் கெடுக்கும் காரணிகள் பல இதில் கலந்திருப்பதைப் பெரும்பான்மையானோர் அறியாமலே உட்கொள்வதால்  கிராமப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் பலவகையான உடல் ஊனங்கள், சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

  • இதை எப்படி சரி செய்ய முடியும் ? மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்?

அம்மக்களிடம் சென்று விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த வேண்டும் .

  • இது நடைமுறையில் சாத்தியமா? 

சத்தியமாய் இல்லை.

  • பின் என்னதான் செய்ய முடியும்? 

அவர்களுக்குப் புரியும் வகையில் எளிய தொழில் நுட்பமுள்ள, அவர்களது பொருளாதார நிலை ஏற்கக் கூடிய ஒரு நீர்வடிகட்டி(water filter) வழங்கினால் முடியும்.

  • அட..இரண்டும் எப்படி முடியும் ? 

முடியும் என சாதித்திருக்கிறார் இந்தத் தமிழர்…

ஆம்..  புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார். ஆறாயிரம், பத்தாயிரம் என்றிருக்கும் சந்தை நிலவரத்தில், ஒரு நாள் சம்பள விலையில் ஒரு குடிநீர் வடி கட்டி.. ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத் தேவையில்லாத குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி … என்பதை இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது.

PP Chandra copy2

இதுமட்டும் உலக எளிய மக்களைச் சென்றடைந்தால் ஒரு தமிழனின் தொண்டுள்ளம் இனம் காணப்படும்.. நாம் தமிழனாய்த் தலை நிமிர்ந்திடுவோம் .. தமிழினம் பெருமை கொள்ளும்.. அவரது பலவருட அயராத உழைப்பும் , தன்னலமில்லாச் செயல்பாடுகளும் இப்பொழுதுதான் உலக ஊடகங்களின் பார்வையின் முன் வந்திருக்கிறது . ஆம் … ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் அரை இறுதிச் சுற்று வரையிலும் அவர் வந்துள்ளார்.

அவர் இறுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறவும், சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரமான வாழ்வும் அனைவரையும் சென்றடையவும் அவருக்கு நமது வாக்குகள் தேவை. இங்கு நமது ஒவ்வொரு வாக்கும் மிகமிக முக்கியமானது. இது உலகச் சுகாதாரம் சார்ந்தது.

திரு. சந்திரசேகரன் வெற்றிபெற கீழ் காணும் சுட்டிக்குச் சென்று வாக்களிக்கலாம், வாக்களிக்க இறுதி நாள் 19ஆம் தேதி மாலை 6 மணி.

வாக்களிக்கும் முறை:
1.http://socialventurechallenge.asia/vote/#top சுட்டியில் உள்ள WATER FOR ALL (SANITATION) எனும் வீடியோவைக் கிளிக்கவும்

2. பக்கத்தின் கீழ் பாகத்தில் சென்ற இ-மெயில் அல்லது முகநூல் (Facebook) கணக்கை வைத்து உள்நுழையவும்.

3. கமெண்ட்ஸ் அருகே தெரியும் vote buttonஐ (இரட்டை இலை சின்னம் காண்பிப்பதுபோல் தெரியும் விரல்கள்) கிளிக் செய்யவும்.

[ஆரஞ்சு நிறத்தில் ஓட் பட்டன் தெரிந்தால் ஓட்டு விழவில்லை என்று அர்த்தம். அதுவே சாம்பல் நிறத்துக்கு மாறிவிட்டால் உங்கள் ஓட்டு விழுந்துவிட்டது என்று அர்த்தம். (An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)]

4. இறுதி நாளுக்குள் திரு.சந்திரசேகரன் அவர்களது WATER FOR ALL (SANITATION) வீடியோவிற்கு அதிக ஓட்டுகள் வரவேண்டும். எனவே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இதை வெற்றிபெறச் செய்து ஏழை மக்களின் குடிநீர் வடிகட்டியை மேலும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கரத்தை வலுப்படுத்துங்கள்.

உலகச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை வடிவமைத்து அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற ஜெய.சந்திரசேகரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

Chandrasekaran

unread,
May 18, 2014, 7:10:44 AM5/18/14
to vallamai
அறிஞர்களுக்கு தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம். என்ன சொல்வதென்றே  தெரியவில்லை. என்னை உலகிற்கு வரவைத்தவன் எனக்கு வைத்த பணி எத்தனையோ, அறியேன். செய்த பணியும் அவன் பணி. செய்யப்போவதும் அவன் பணி. வல்லமையாளர் - நீங்கள் எல்லாரும்தான். கோயில் கதைகள் வல்லமையில் எழுத முற்பட்டு, பவளா அக்கா உற்சாகப்படுத்தினார். இந்த குடிநீர் வடிகட்டி செய்யும் முயற்சியில் 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அதோடு ரீச் பவுண்டேஷன் பணிகள். திவ்ய தேசமான திருவெள்ளியங்குடி புனரமைப்பு, காட்டுபுத்தூரில் சங்க கால எச்சங்களை கண்டறிய அகழ்வாராய்வு, நடுவில்  ஒருசில கோயில் புனரமைப்புகளுக்கான ஆயத்த பணிகள், கல்வெட்டு வகுப்புகள் என்று காலம் நம்மை சரியாக பயன்படுத்துகிறது. இந்த குடிநீர் வடிகட்டியை ஏழை   மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் என்னோடு தொடர்பு கொள்ளலாம். கிராமங்களுக்கும், நடுத்தர வர்க்கம் மக்களுக்கும், பட்ஜெட் குடும்பங்களுக்கும் இவற்றை கொண்டு சேர்ப்பதே  என் பணி.

இதற்கு இவ்வளவு பெரிய  தந்த வல்லமை குழுவிற்கு நன்றி. என் பணிச்சுமை இதனால் கூடுகிறது. ஆனால் .சுகமான சுமை!
வணக்கத்துடன்
சந்திரா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

J. Chandrasekaran

Give the world clean water & Sanitation

Visit www.terafilwater.in to provide clean drinking water to Rural India

Visit www.toiletforall.org to provide clean toilets for all Indians!

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

Chandrasekaran

unread,
May 18, 2014, 7:15:19 AM5/18/14
to minTamil digest சந்தாதாரர்கள், vallamai editor, vallamai
இத்தனை நன்பர்கள், நல்லுள்ளங்கள் உள்ளனர் என்பதே நான் சம்பாதித்த சொத்து. வல்லமைக்கும் மின் தமிழுக்கும் நன்றி. துரை அண்ணன் என்னை வல்லமையாளராக முன்மொழிந்து என்னை அதிகம் உழைக்கக் கட்டளை இட்டுள்ளார். நன்றி அண்ணா!
சந்திரா

2014-05-18 16:04 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

வேதியல் வல்லுநர்,
கோயில்களைப் பழமை மாறாமல் புனர்நிர்மாணம் செய்யும் வல்லவர்,
குடிநீர் மேலாண்மையில் வல்லவர்,
வீட்டிக்கழிவு மேலாண்மையில் வல்லவர்,
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 25, 2014, 9:16:07 PM5/25/14
to vall...@googlegroups.com

இந்த வார வல்லமையாளர்!

மே 26, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. பூவை. பி. தயாபரன் அவர்கள்

தயாபரன்2

சென்றவாரம் திரு. தயாபரன் அவர்களின் தொண்டைப் பற்றி இந்து நாளிதழின் “மனதுக்கு இல்லை வயது” பகுதியில் வெளியான செய்திக் குறிப்பைப் படித்து, மனம் நெகிழ்ந்து, “இதோ வல்லமையாளருக்காக ஒரு சிபாரிசு … திரு தயாபரனின் தயாள குணத்தைப் பாராட்டுவதா அல்லது திருவள்ளுவச் செல்வம் எப்படியெல்லாம் பரப்பப்படுகின்றது என்பதை நினைத்து மகிழ்வதா…” என்று அவரை இவ்வார வல்லமையாளராகப் பரிந்துரைத்தவர் நண்பர் திரு. திவாகர் அவர்கள்.

திருக்குறள், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்குமான ஒரு பொது மறை, இதை வழங்கியிருப்பது நம் தமிழ் மொழி மட்டுமே என்பதில் நம் அனைவருக்குமே பெருமை உண்டு. இந்தப் பெருமித எண்ணத்தினால் ஓர் அறக்கட்டளையும் அமைத்து, திருக்குறளின் பெருமையை அடுத்த தலைமுறையினரும் போற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னார்வத் தொண்டு செய்பவர் பூவை. பி. தயாபரன் அவர்கள்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. தயாபரன் அவர்கள். இவர் தனது தமிழ்ப் பற்றுக் காரணமாக இன்றும் மாலை வேளையில் மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை இலவசமாக கற்பித்து வருகிறார். அத்துடனின்றி, திருக்குறளுடன் அவரது மகன் திருமூலநாதன் பெயரையும் இணைத்து “திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை” என்ற அமைப்பை 1997-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இவரது மகன் திருமூலநாதனும் தனது நான்கு வயதிலேயே திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து 1996 இல் லிம்கா சாதனையாளர் நூலில் இடம் பெற்றவர்.

தனது ஓய்வூதியத்தை அந்த அறக்கட்டளைக்கு நிதியாக்கி, அந்த நிதியில் கடந்த 17 ஆண்டுகளாக திருக்குறள் திருவிழா நடத்தி வருகிறார். அந்த விழாவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கி இளைய தலைமுறையினரை திருக்குறள் கற்க ஊக்குவிக்கிறார்.

1330 திருக்குறள்களையும் சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500ம் அத்துடன் விருதும் வழங்கப்படுகிறது. வயதில் சிறியோர்களின் சிரமத்தைக் குறைக்க தவணைமுறையிலும், அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசும் , பிறகு அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.830 பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளனர்.

பரிசு பெறுவோருக்கு “திருக்குறள் செல்வன் அல்லது “திருக்குறள் செல்வி” என்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரம் இப்போட்டி நடத்தப்பெறும். இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து இடைநின்றோரும் பங்கேற்கலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தமது பெயர் மற்றும் தன்விவரக் குறிப்பை “பூவை பி.தயாபரன், 25, திருக்குறள் தெரு, புள்ளம்பாடி, 621 711′ என்ற முகவரிக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 97865 86992. இணையத்தள முகவரி: https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai

தான் ஓர் எளிய வாழ்கை முறையினைப் பின்பற்றி வாழ்ந்தாலும், பிறரிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறாது, திருக்குறளையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பூவை. பி. தயாபரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

Tthamizth Tthenee

unread,
May 25, 2014, 11:33:47 PM5/25/14
to vall...@googlegroups.com
திரு பூவை   பி தயாபரன் அவர்களுக்கு  மனமார்ந்த  வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
May 25, 2014, 11:49:51 PM5/25/14
to vallamai, mintamil
மிகச் சிறந்த நற்பணி. வல்லமையாளர் திரு தயாபரன் அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Chandrasekaran

unread,
May 27, 2014, 1:27:57 PM5/27/14
to minTamil digest சந்தாதாரர்கள், vallamai
வல்லமையாளர் திரு தயாபரன் அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்
சந்திரசேகரன்

2014-05-26 12:51 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
சிறந்த தேர்வு.
திரு.தயாபரன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

சுபா

2014-05-26 3:15 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இந்த வார வல்லமையாளர்!

மே 26, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. பூவை. பி. தயாபரன் அவர்கள்

தயாபரன்2

சென்றவாரம் திரு. தயாபரன் அவர்களின் தொண்டைப் பற்றி இந்து நாளிதழின் “மனதுக்கு இல்லை வயது” பகுதியில் வெளியான செய்திக் குறிப்பைப் படித்து, மனம் நெகிழ்ந்து, “இதோ வல்லமையாளருக்காக ஒரு சிபாரிசு … திரு தயாபரனின் தயாள குணத்தைப் பாராட்டுவதா அல்லது திருவள்ளுவச் செல்வம் எப்படியெல்லாம் பரப்பப்படுகின்றது என்பதை நினைத்து மகிழ்வதா…” என்று அவரை இவ்வார வல்லமையாளராகப் பரிந்துரைத்தவர் நண்பர் திரு. திவாகர் அவர்கள்.

திருக்குறள், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்குமான ஒரு பொது மறை, இதை வழங்கியிருப்பது நம் தமிழ் மொழி மட்டுமே என்பதில் நம் அனைவருக்குமே பெருமை உண்டு. இந்தப் பெருமித எண்ணத்தினால் ஓர் அறக்கட்டளையும் அமைத்து, திருக்குறளின் பெருமையை அடுத்த தலைமுறையினரும் போற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னார்வத் தொண்டு செய்பவர் பூவை. பி. தயாபரன் அவர்கள்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. தயாபரன் அவர்கள். இவர் தனது தமிழ்ப் பற்றுக் காரணமாக இன்றும் மாலை வேளையில் மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை இலவசமாக கற்பித்து வருகிறார். அத்துடனின்றி, திருக்குறளுடன் அவரது மகன் திருமூலநாதன் பெயரையும் இணைத்து “திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை” என்ற அமைப்பை 1997-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இவரது மகன் திருமூலநாதனும் தனது நான்கு வயதிலேயே திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து 1996 இல் லிம்கா சாதனையாளர் நூலில் இடம் பெற்றவர்.

தனது ஓய்வூதியத்தை அந்த அறக்கட்டளைக்கு நிதியாக்கி, அந்த நிதியில் கடந்த 17 ஆண்டுகளாக திருக்குறள் திருவிழா நடத்தி வருகிறார். அந்த விழாவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கி இளைய தலைமுறையினரை திருக்குறள் கற்க ஊக்குவிக்கிறார்.

1330 திருக்குறள்களையும் சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500ம் அத்துடன் விருதும் வழங்கப்படுகிறது. வயதில் சிறியோர்களின் சிரமத்தைக் குறைக்க தவணைமுறையிலும், அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசும் , பிறகு அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.830 பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளனர்.

பரிசு பெறுவோருக்கு “திருக்குறள் செல்வன் அல்லது “திருக்குறள் செல்வி” என்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரம் இப்போட்டி நடத்தப்பெறும். இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து இடைநின்றோரும் பங்கேற்கலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தமது பெயர் மற்றும் தன்விவரக் குறிப்பை “பூவை பி.தயாபரன், 25, திருக்குறள் தெரு, புள்ளம்பாடி, 621 711′ என்ற முகவரிக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 97865 86992. இணையத்தள முகவரி: https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai

தான் ஓர் எளிய வாழ்கை முறையினைப் பின்பற்றி வாழ்ந்தாலும், பிறரிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறாது, திருக்குறளையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பூவை. பி. தயாபரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 1, 2014, 8:58:42 PM6/1/14
to vall...@googlegroups.com

ஜூன் 2, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. கேசவ் வெங்கட்ராகவன் அவர்கள்

keshav-0

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கையான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் துணையாசிரியராகவும், கால்நூற்றாண்டிற்கும் மேலாக அந்த நாளிதழில் கருத்துப்படம் வரைபவராகவும் பணியாற்றிவரும் திரு. கேசவ் அவர்கள் இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சென்ற வாரம், இந்தியாவின் புதிய தலைமை அமைச்சராகப் பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு விழாவினை ஒட்டிய கருத்துப் படங்களுக்காக இவர் இவ்விருதினைப் பெறுகிறார்.

தன்னைப்பற்றிக் கூறுகையில் “Cartooning is my profession. Painting is my passion” என்றும் விவரிக்கின்றார் கேசவ். கேசவ் அவர்களும், அவரது வண்ண ஓவியங்களும் வல்லமை வாசகர்களுக்கு புதியதல்ல. இவரது நண்பரும், வல்லமை இதழில் ‘தினம் ஒரு திருமால் திருப்புகழ்’ எழுதும் கவிஞர், பலகலைகளிலும் திறமைபெற்ற திரு. கிரேசி மோகன் அவர்களின் பாடல்களுக்குச் சுவை சேர்த்து வருபவை கேசவ்வின் வண்ண ஓவியங்கள். இதிகாசங்கள், புராணக் கதைகளின் நிகழ்வுகளை நீர் மற்றும் எண்ணை வண்ண ஓவியங்களாக வரைவதில் மிக்க ஆர்வமும் திறமையும் கொண்டவர் இவர்.

keshav-5

தனது “அம்பாள் பஞ்சகம்” பதிவில் கேசவ் வரைந்த அழகிய “கற்பகாம்பாள்” கோட்டோவியத்தைப் பகிர்ந்து கொண்ட கிரேசி மோகன், “கல்லூரி நாட்களில்…இந்த ஓவியம் வந்தவுடன் என் அறைதான் கர்பக்கிருகம்….இந்த ஓவியம்தான் மூலவர் என்றாகிவிட்டது” என்று கூறுகின்றார்.

இவரது 80 க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்கள் வல்லமை இதழில் வெளியாகியுள்ளன. இவையாவும்வல்லமையின் முகநூல் பகுதியிலும் தொகுக்கப் பட்டுள்ளன [https://www.facebook.com/media/set/?set=oa.810805988930871&type=1]. கண்ணனை இவர் பற்பல கோணங்களில் வரைந்துள்ளார், ஒரே கோட்டில் துவக்கி முடித்த கண்ணனின் ஓவியங்கள் புதுமையாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்தவை.

அத்துடன் ஒருவரின் குணநலன்களை மிகைப்படுத்தி விவரிக்கும் பகடிப் படங்களும் (caricature) இவருக்குக் கை வந்த கலை. பற்பல இசைக்கலைஞர்களின் படங்களையும் இவர் வரைந்துள்ளார். அப்படங்களை Keshavcaricatureshttp://keshavcaricatures.blogspot.com என்ற தளத்தில் காணலாம். இங்கு மாதிரிக்காக கே. ஜே. ஜேசுதாசின் படம் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது

மேலும் இவரது படங்கள் கீழுள்ள வலைதளங்களிலும் …
Kamadenu: http://kamadenu.blogspot.in/
Srimadbhagavatham: http://bhagavatham.blogspot.com/?view=flipcard
Keshav cartoons: http://keshavcartoons.blogspot.com/
Keshav caricatures: http://keshavcaricatures.blogspot.com
Keshav illustrations: http://keshavsketches.blogspot.com/

சமூக வலைதளங்களிலும் …
Twitter: https://twitter.com/keshav61/media
Facebook: http://facebook.com/keshav.keshav
Google Plus: https://plus.google.com/112286640734369272376/posts
Pinterest: http://www.pinterest.com/keshav61/my-drawings/
WordPress: http://keshavgallery.wordpress.com/

இவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு பலவகைப்பட்ட ஓவிய பாணிகளில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், தொழில்முறையில் இவர் இந்து நாளிதழில் கருத்துப்படம் வரைந்து வருபவர். கடந்த மே 26 ஆம் தேதி, இந்தியாவின் 15 ஆவது தலைமை அமைச்சராக பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு பற்றிய கீழ் காணும் கருத்துப் படங்களை இவர் வரைந்துள்ளார்.

Another swearing-in:- https://pbs.twimg.com/media/Bom5vjXIEAAFcIv.jpg

Modi and the half-empty glass:- https://pbs.twimg.com/media/BoScJOPCMAIgIux.jpg

The cabinet cube:- https://pbs.twimg.com/media/BoNJsVnCcAA3xpW.jpg

Namo, Nomy, Economy:- https://pbs.twimg.com/media/BosACNbCUAAauQ1.jpg

இந்திய மக்களின் மத்தியில் பெரிதும் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு நிகழ்வை, திரு. மோதி அவர்களின் பதவியேற்பு விழாவில் வரவேற்கப்பட்ட தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்பை தனது கருத்துப் படம் மூலம் பிரதிபலித்ததற்காக கேசவ் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

coral shree

unread,
Jun 1, 2014, 9:13:24 PM6/1/14
to vallamai
திரு கேஷவ்ஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அற்புதமான அவருடைய கலைப்பணி மென்மேலும் சிறக்க பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

தேமொழி

unread,
Jun 8, 2014, 11:05:30 PM6/8/14
to vall...@googlegroups.com

ஜூன் 9, 2014 

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்

geetha mathivaanan

சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர்.  மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய  நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்;  அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html).  பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும்  எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?“  என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.

வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை  வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து  வருகிறார்.  கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.  வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு,  பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல்  கட்டுரைப் போட்டிக்கான  பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான  பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள்.  இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….

அந்தக் கவிதை வரிகள் இங்கே…

உன்னைப் போலவே…

(http://www.vallamai.com/?p=46228)

ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!
உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது!
உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது!

உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது!
உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

Tulsi Gopal

unread,
Jun 8, 2014, 11:15:28 PM6/8/14
to vall...@googlegroups.com
ஆஹா....  நம்ம கீத மஞ்சரி!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
என்றும் அன்புடன்,
துளசி

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 8, 2014, 11:44:47 PM6/8/14
to vallamai
சிறந்த தேர்வு. திருமிகு கீதாமதிவாணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து அவர் சிறப்பன் பஙளிப்புக்கள் நல்க வேண்டுகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-06-09 15:05 GMT+12:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்

 உருவாகி

தேமொழி

unread,
Jun 15, 2014, 11:37:15 PM6/15/14
to vall...@googlegroups.com

ஜூன் 16, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  பெனோ செபீன்  அவர்கள்

BENO
இவ்வார வல்லமையாளர் விருதிற்காக ஐவரிடம் (விருது அறிவிப்பாளராகிய என்னையும் சேர்த்து) இருந்து  ஐந்து சாதனையாளர்களின் பெயர் முகநூல், மின்னஞ்சல்கள் வழியாகப்  பரிந்துரைக்கப்பட்டது.  அந்த சாதனையாளர்களில், வல்லமை இதழின்  வாசகர் திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான  ‘பெனோ செபீன்’ (Beno Zephine) அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மழ்கிழ்சி அடைகிறோம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)  நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில்,   அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர்.  இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ  செபீனும் ஒருவர்.  ஐ.ஏ.எஸ். படிக்க  வேண்டும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனை படைத்துள்ளார்.

Beno Zephine3

ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும்  இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ  நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில்  பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்),  லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர்.  தகுதிநிர்ணயநிலையில் தற்போது இவர்  திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார்.

இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்கு கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதை கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.  சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல்  கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள்.

Beno Zephine2
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாக பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல  போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில்  பரிசு பெற்றவர் பெனோ.  இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருகிறது.   துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றி கூற அவரும் பெனோவின் இல்லத்திற்கு தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

Beno Zephine
மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை  வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்று  பரிசீலனை செய்து அரசாணையும்  பிறப்பித்துள்ளார்.  பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருகிறது.

Beno Zephine5

இவரது கல்லூரி நாட்களில், 2008  ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ,  மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து  லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப  உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளார்.  பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Beno Zephine6

இதனை அவரே விவரிப்பதை இந்தக் கானொளியில் காணலாம்:       http://youtu.be/aGq9d9q2YBs

சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட  பெனோ,

“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”

என்று நமக்கு அறிவுரையும்  கூறுகிறார்.

தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணி துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படம், தகவல்கள்  செய்தித்தாள்கள் மற்றும் இணையத்திலிருந்து.

சி. ஜெயபாரதன்

unread,
Jun 16, 2014, 12:01:49 AM6/16/14
to mintamil, vallamai
​வார வல்லமையாளர் மதிப்பைப் பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என்னினிய வாழ்த்துகள், பாராட்டுகள்.

சி. ஜெயபாரதன் ​

2014-06-08 23:27 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ஜூன் 9, 2014 

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்

geetha mathivaanan

சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர்.  மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய  நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்;  அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html).  பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும்  எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?“  என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.

வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை  வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து  வருகிறார்.  கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.  வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு,  பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல்  கட்டுரைப் போட்டிக்கான  பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான  பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள்.  இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….

அந்தக் கவிதை வரிகள் இங்கே…

உன்னைப் போலவே…

(http://www.vallamai.com/?p=46228)

ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி

உயிர்க்குடத்தில் கருவானது!
உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது!
உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது!

உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது!
உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Jun 16, 2014, 12:12:30 AM6/16/14
to வல்லமை, mintamil
Inline image 1
வல்லமைமிகுதிரு. கேசவ் வெங்கட்ராகவன் அவர்கள்
Inline image 3
வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்
Inline image 4
வல்லமைமிகு  பெனோ செபீன்  அவர்கள்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2014, 1:00:29 AM6/16/14
to vall...@googlegroups.com, mintamil
இந்த வார  வல்லமையாளர்  பெனோ செபீன் அவர்களுக்கு   மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Kaviri Maindhan

unread,
Jun 16, 2014, 2:06:49 AM6/16/14
to Groups, vallamai
முழுமை பெற்ற மாந்தரிலே மூடர் பலர் இருக்கையிலே...

புலன்குறைவாயிருந்தாலும் புரட்சிதான் புரிகிறாரே...

இதை இவரால் செய்துவிட முடியுமா என்னும் கேள்விக்கு 

கதை முடித்து முதல் நபராய் வெற்றி பெற்று திகழ்கிறாரே!!

இவர்தம் வளர்ச்சிக்காய் இதயங்கள் இரண்டிணைந்து இயங்குவதை..

ஈரமுள்ள விழிமலரால் காணத்தான் முடிகிறதே...

திறமைக்கு கண்ணில்லை..  முயற்சிதான் முக்கியம் என்பதை 

அருமையாய் உணர்த்திட்ட பெனோ செபீன் வாழியவே...

வல்லமையில் இவர்புகழை அறியத்தான் வைத்ததற்கு....

உள்ளமெலாம் மகிழ்ந்தபடி நன்றிசொல்ல விரும்புகிறேன்...

எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்

என்பது இவர் செய்தியாக.. நம் இதயத்தில் பதியட்டும்!!

அன்புடன்...

காவிரிமைந்தன் 

www.thamizhnadhi.com

2014-06-16 7:31 GMT+04:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ஜூன் 16, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  பெனோ செபீன்  அவர்கள்

BENO
இவ்வார வல்லமையாளர் விருதிற்காக ஐவரிடம் (விருது அறிவிப்பாளராகிய என்னையும் சேர்த்து) இருந்து  ஐந்து சாதனையாளர்களின் பெயர் முகநூல், மின்னஞ்சல்கள் வழியாகப்  பரிந்துரைக்கப்பட்டது.  அந்த சாதனையாளர்களில், வல்லமை இதழின்  வாசகர் திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான  ‘பெனோ செபீன்’ (Beno Zephine) அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மழ்கிழ்சி அடைகிறோம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)  நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில்,   அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர்.  இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ  செபீனும் ஒருவர்.  ஐ.ஏ.எஸ். படிக்க  வேண்டும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனை படைத்துள்ளார்.

Beno Zephine3

ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும்  இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ  நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில்  பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்),  லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர்.  தகுதிநிர்ணயநிலையில் தற்போது இவர்  திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார்.

இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்கு கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதை கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.  சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல்  கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள்.

Beno Zephine2
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாக பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல  போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில்  பரிசு பெற்றவர் பெனோ.  இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருகிறது.   துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றி கூற அவரும் பெனோவின் இல்லத்திற்கு தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

Beno Zephine
மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை  வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்று  பரிசீலனை செய்து அரசாணையும்  பிறப்பித்துள்ளார்.  பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருகிறது.

Beno Zephine5

இவரது கல்லூரி நாட்களில், 2008  ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ,  மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து  லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப  உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளார்.  பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Beno Zephine6

இதனை அவரே விவரிப்பதை இந்தக் கானொளியில் காணலாம்:       http://youtu.be/aGq9d9q2YBs

சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட  பெனோ,

“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”

என்று நமக்கு அறிவுரையும்  கூறுகிறார்.

தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணி துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படம், தகவல்கள்  செய்தித்தாள்கள் மற்றும் இணையத்திலிருந்து.

--

தேமொழி

unread,
Jun 22, 2014, 11:41:35 PM6/22/14
to vall...@googlegroups.com

ஜூன் 23, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு  செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  பேராசிரியர் வாசு ரெங்கநாதன்  அவர்கள்

Vasu Renganathan
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும்  வாசு ரெங்கநாதன் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) அவர்கள்.

இவரைப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர், முனைவர் நா. கணேசன் அவர்கள்.   பேரா. வாசு ரெங்கநாதன் அவர்கள் அமெரிக்க கல்விக் கழகம் நிதி உதவியில்,  கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நிர்மானித்து பராமரித்து வரும் தமிழ் பயிற்சி வலைத்தளத்தில்  (வலைதளத்தின் முகவரி: http://www.thetamillanguage.com/),  பண்டைய தமிழ் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு உதவக்கூடிய  முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களை.  எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில், கணினித் திரையில் தோன்றும் ஒவ்வொரு சொற்களையும் கணினித் திரையில் சுட்டினாலே அகராதியில் இருந்து அந்த சொல்லின் பொருள் திரையில் தோன்றும் வகையில் அகராதியுடன் இணைத்துள்ளார்.

உதாரணமாக நற்றிணைப் பாடல்களை இந்த பக்கத்தில் காணலாம் : http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0296.html

“நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே”
என்று தலைவி தோழியிடம் சொல்வதில், ‘பிரிபு’ என்றால் எதைக்குறிக்கிறது என்று எண்ணி திரையில் அச்சொல்லைச் சுட்டினால், உடனே  அகராதியில் இருந்து பொருள் விளக்கம் காட்டப்படுகிறது.

இவ்வாறாக சங்கப்பாடல்களைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எளிதில் பொருள் தேடி அறிய இணைய அகராதியுடன் பாடல்களின் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இது போல மதுரைத்திட்டம் வழங்கும் இணைய இலக்கியங்கள் யாவற்றையும்  (http://www.projectmadurai.org/pmworks.html) இவ்வாறு படிக்க இயலும்.

காட்டாக:
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=
என்ற சுட்டியின் பின்னர் ‘மதுரை திட்டம்’ வழங்கும்  கொன்றை வேந்தன் பாடல்களைப் படிக்க விரும்புபவர், அந்த இலக்கியத்திற்கான இணையதள சுட்டியான http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்பதை http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url= க்குப்பிறகு  இணைத்து
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்ற இணையதள முகவரியாக மாற்றிய பின்னர் இணையத்தேடல் பொறியில் வெட்டி ஒட்டி சொடுக்கினால் போதும்.

http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html
பொருள் விளக்கம் அறியும் வகையில் கொன்றைவேந்தன் உங்கள் விரல்நுனிகளில் கிடைக்கும்.

பள்ளி வகுப்புகளுடன் தமிழிலக்கியம் படிப்பது தடைபட்டு, பின்நாளில் சொந்த முயற்சியில் படிக்க விரும்புபவர்களுக்கு தமிழிலக்கிய நூல்களும், அவற்றின் பொருளை  விளக்கும் உரைநூல்களும்  கிடைப்பது இனி அரிதான ஒன்றே அல்ல.

இந்த எளிய முறையை சென்றவாரம் தமிழுலகிற்கு உருவாக்கித் தந்த  பேராசிரியர் வாசு ரெங்கநாதன்  அவர்களை வல்லமையாளர் விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் கணேசன்,   அவரைப்பற்றி பற்றி கீழ் வருமாறு அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.

பேரா. வாசு ரெங்கநாதன் தமிழ் மொழியியலில் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். ஆய்வியல் அறிஞர் செ. வை. சண்முகம் அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலையிலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலையில் ஹெரால்ட் ஷிப்மனிடமும் பயின்ற வாசு ரெங்கநாதன் இப்பொழுது ‘பென் மொழிகள் மையம்’ (Penn Language Center) என்னும் அமைப்பில் பணிபுரிகிறார். தமிழ்க் கல்லூரி ஆசிரியர்கள் கணினிப் பக்கமே போகாத நிலை இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்நிலை மாற வழிவகுப்போரில் முனைவர் வாசு முக்கியமானவர். வாசு ரெங்கநாதன் கணினியின் மூலமாக தமிழைக் கற்பிக்கும் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் தட்டச்சு விசைப்பலகையை முதலில் கணினிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்ததால் இலங்கையில் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’ என்று அறியப்படுகிறது. அமெரிக்காவில் தமிழரல்லா பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகளில் அனுபவமும் திறமையும் மிக்க இவர் இணையத்தில் தமிழ் போதிக்க வலைத்தளங்கள் அமைத்துள்ளார். அமெரிக்க தமிழ் அகாதமி என்ற புதிய அமைப்பு பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்ற பாடமாகத் தமிழை அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்கன் தமிழ் அகாதமிக்கு ஆலோசகராக நல்ல பல ஊக்கங்களை அளித்துவருகிறார்.

உத்தமம் என்ற பல்நாட்டுத் தமிழ்க் கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாநாடுகளை நடத்தப் பெரும்பங்கு ஆற்றும் வாசு இந்த ஆண்டு உத்தமம் அமைப்பின் தலைவர். புதுச்சேரியில் நடக்கும் 13–ஆம் ஆண்டு கருத்தரங்கம் பல அரசியல் தலைவர்களியும், உத்தமத்தினரையும், கல்லூரி ஆய்வாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அண்மையில் ஒரு வலைப்பக்கத்தைக் கொடுத்தால் அதைத் தமிழாகப் படிக்கும் தானியங்கி மென்கலனை உருவாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். இன்று தந்துள்ள சேவையின் மூலம், பழைய சங்கப் பாடல்களைப் பொருள் புரிந்துகொள்ள எளிதாகிறது. ஒரு சொல்லியின் மீது கணியெலிச் சுட்டியை வைத்தால் அச் சொல்லின் பொருளைக் காட்டுகிறது.

இயற்கை மொழி கணியாய்வில் (Natural Language Processing) தனது கணினி திறனையும், தமிழார்வத்தையும் இணைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதில் படித்திட வகை செய்த பேராசிரியர் வாசு ரெங்கநாதன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படங்கள்  மற்றும்  தகவல்கள் இணையத்திலிருந்து.

தேமொழி

unread,
Jun 29, 2014, 10:06:57 PM6/29/14
to vall...@googlegroups.com

ஜூன் 30, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்கள்

L.Kanaga Subramani
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரியும் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்கள்.   கனக சுப்பிரமணியின் தமிழ்ப் பற்று பற்றியும், சமுதாதய அக்கறை பற்றியும் பேஸ்புக் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவலைப் படித்து வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப்  பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் அண்ணாகண்ணன். அவரது பரிந்துரையை வழிமொழிந்தவர் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான திரு. சொ.வினைதீர்த்தான் அவர்கள்.   

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு திருக்குறளுக்கு பொருள்விளக்கம் படித்த பின்னரே தனது நாளைத் துவக்குபவர் கனக சுப்பிரமணி.  மேட்டுப்பாளையம்  உதகை வழித்தடத்தில் பேருந்து நடத்துனராக பணிக்குச் செல்லும்பொழுது தன்னுடன் சில தமிழ் நூல்களையும் கொண்டு செல்கிறார்.  வழியில் கல்லாரில் காலை 7:15க்கு பேருந்து நிற்கும்பொழுது, பயணிகளின் கவனத்தை ஓர் இரு நிமிடங்களுக்கு தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து போக்குவரத்து பாதுகாப்பைக் கடைபிடிக்கவும், சுற்றுப்புறச் சூழிலின் தூய்மை அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறார்.  “ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், மரங்களை நட முடியாவிட்டாலும் சரி, அவற்றை அழிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள், குருதிக் கொடை அளியுங்கள்” போன்ற அறிவுரைகளைக் கூறுகிறார்.

அத்துடன் தினம் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் விளக்கமும் அளிக்கிறார்.  அன்று பயணிகளில் யாருக்காவது பிறந்தநாளாகவோ, திருமணநாளாகவோ இருந்தால் வாழ்த்துகளுடன் தன்னுடன் எடுத்துச் சென்ற திருக்குறள் நூல்களை பரிசாக அளிக்கிறார்.  யாருக்கும் அன்றைய நாள் அவ்வாறான  சிறப்பு நாள்களில் ஒன்றாக அமையாவிட்டால், அந்த நூல்களை பயணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர்  யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அளிக்கிறார். பயணிகள் யாரேனும் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தவும் செய்கிறார். பேருந்தில் எழுதியிருக்கும் குறளை சுட்டிக் காட்டிய பயணி ஒருவர், இக்குறளின் பொருள் என்னவென்று நடத்துனருக்கோ ஓட்டுனருக்கோ தெரியுமா என்று ஒருமுறை கேட்ட பொழுது தினம் ஒரு குறள் என்ற கொள்கையைத் துவக்கி இருக்கிறார் இவர்.

தினசரி வாழ்க்கையில் பலவித மக்களை எதிர்கொண்டு சேவை செய்யும் முன்னணி பணியாளர்களுக்கு அது மிகவும் மனஅழுத்தம் தரும் பணியாகவே இருக்கும்.  நடத்துனர் பணியிலும்  அவ்வாறே பலவித உணர்வுகள்  கொண்ட மக்களை எதிர் கொள்ளும்பொழுது இன்முகத்துடன் பணியாற்றுவது என்பது  ஒரு சவாலாக அமைந்துவிடும்.  இந்தச் சூழ்நிலையிலும்  சமுதாயப்பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் ஓர் இரண்டு நிமிட நேரத்தை ஒதுக்கி பயணிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார் கனக சுப்பிரமணி. இதனை தினமும் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் செய்து வருகிறார் எனபது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. கனக சுப்பிரமணியைப் பொறுத்தவரை பேருந்துப் பயணமாக இருந்தாலும் அதன் வழியே பயணிகள் கல்வி, தகவல் ஆகியவற்றைப் பெற்று அவர்களுக்கு அது  வசதியான பயணமாக அமைய வேண்டும். கனக சுப்பிரமணிக்கு  அவரது பயணிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் போல.

கோவை மத்தியச் சிறைச்சாலை கைதிகளுக்காக “செந்தமிழ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஓய்வு நேரங்களில் கைதிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான  வழிகளில் பணியாற்றுகிறார்.  இசை வகுப்புகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி பரிசு வழங்குதலை  தனது அறக்கட்டளை வழியாகச் செய்கிறார். இதுபோன்ற சமுதாயச் சேவைகள் செய்வதற்கு தனது ஆசிரியர் அற்புதராஜும், மக்கள் திலகமும் முன்னோடிகள் என இவர் கூறுகிறார்.   இளமைக்காலத்தில், சிரமமான காலங்களில் இவரது  ஆசிரியர் அற்புதராஜ்  அவர்கள் இவருக்கு  உணவும் உடையும் அளித்து  பராமரித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.   உற்சாகமூட்டும் உரைகள் வழங்குவதையும் ஊக்கமூட்டும் செயல்கள் செய்வதையும் தனது கடமையாகக் கருதி வரும் கனக சுப்பிரமணி எம்.ஜி.ஆர் அவர்களை தனது சிறந்த வழிகாட்டியாகக் கருதுகிறார். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இவருக்குப் பிடித்த பாட்டு “தாயில்லாமல் நானில்லை”. இதனைக் கைதிகளுக்காக இவர் பாடுவதும் உண்டு.   எம்.ஜி.ஆர்  பாடல்களில் ஒன்றினை எப்பொழுதும் தனது உரைகளில் ஒரு பகுதியாக்கிக் கொள்கிறார்.

தனது தமிழார்வத்தையும், சமுதாய அக்கறையையும் இணைத்து தனது தினசரி வாழ்வில் ஒரு சிலர் வாழ்விலாவது மாற்றம் கொண்டுவர விரும்பி தொடர்ந்து ஆர்வமுடன் செயலாற்றும்  கனக சுப்பிரமணி  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
(இவரைப் பாராட்ட விரும்புவோர் கவனத்திற்கு,  இவரது தொலைபேசி எண்:  96009-87811)

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படம்  மற்றும்  தகவல்கள் இந்து நாளிதழில் இருந்து பெறப்பட்டது. நன்றி இந்து.
http://www.thehindu.com/features/metroplus/from-tickets-to-the-thirukkural/article2896247.ece

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=47431

Innamburan S.Soundararajan

unread,
Jun 29, 2014, 10:17:52 PM6/29/14
to vall...@googlegroups.com
வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர் ஒரு கர்மவீரர் என்பது தெளிவு.

அவர் நீடுழி வாழ்ந்து பணியை தொடரவேண்டும், வருங்கால தலை முறைகளுக்கு.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Jun 29, 2014, 11:45:38 PM6/29/14
to vall...@googlegroups.com
நடத்துனர்  எல் கனகசுப்ரமணி  அவர்கள் மக்களுக்கு நல்ல  வழிகாட்டியாகவும்   விளங்குவது   மிகவும் மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும்  உரிய செய்தி

இவர்   வல்லமையாளர்  விருதுக்கு  மிகவும் தகுதி வாயந்தவர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 30, 2014, 1:05:05 AM6/30/14
to vallamai
திரு எல்.கனகசுப்பிரமணி பற்றிய விவரங்களையெல்லாம் சிறப்பாகத் தொகுத்து வல்லமையாளராக அறிவுத்துள்ளமைக்குத் திருமிகு தேமொழிக்கும் வல்லமை குழுவினருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

1.சாமானியமான மனிதர் சமுதாயத்திற்கு இயன்ற அளவில் ஆற்றக் கூடிய பணிக்கு மற்றவர்க்கு ஒரு காட்டு 
திரு கனக சுப்பிரமணி.
2.வரையறுக்கப்பட்ட அலுவலகப் பணியில் மனிதநேயம் வால்யூ அடிசனாகச் சேர்கிறபோது பயனாளர்கள் அடைகிற பரவசமும் பணியாளர் அடைகிற மனநிறைவும் சொல்லில் அடங்காதவை.
3.இது போன்று செயலாற்றுபவர் சார்ந்திருக்கிற நிறுவனத்திற்கு மிகப் பெரும் சொத்து. நல்லெண்ணத் தூதுவர்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 30, 2014, 9:27:54 AM6/30/14
to vallamai
திரு கனக சுப்பிரமணி அவர்களுடன் தொலைபேசியில் இன்று பகல் தொடர்புகொண்டேன். மிக அன்புடன் பேசினார். அவர் பணியைப் பாராட்டி நிர்வாகம் பொள்ளாச்சி நகரில் உள்ள போக்குவரத்துத் துறையின் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுனராகப் பணியாற்ற வாய்ப்பு அளித்துள்ளதாக மகிழ்வுடன் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்துனர், ஓட்டுனர், அலுவலக ஊழியர், அலுவலர்கள் இடையே வாடிக்கையாளர் மகிழ்வு, பாதுகாப்பு, மனித உறவுகள் பற்றிப் பயிற்சிகள் நடத்துவதாகக் குறிப்பிட்டார். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

நானும் அரசு சார்ந்த மாபெரும் நிறுவனத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றியது அறிய மகிழ்ந்தார். பொள்ளாச்சிக்கு வரும்போது பயிற்சிக் கல்லூரிக்கு வரும்படி வேண்டினார்.

வல்லமையாளர் தேர்வு பற்றி அவரிடம் தெரிவித்து அவரைப் பாராட்டி அவர் பணியைப் போற்றி விடைபெற்றேன். அவருக்குக் கணினிப் பயிற்சியில்லாததால் நம் தேர்வு குறித்த செய்தியின் அச்சு நகல் அனுப்புவதாகக் கூறியுள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

shylaja

unread,
Jun 30, 2014, 11:50:04 AM6/30/14
to vallamai
வல்லமையாளர்  தேர்வு அற்புதம்  மனம் நிறைந்த  பாராட்டுக்கள் .

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்
ஷைலஜா.

நீலக்கடலரை மாமணி நிகழக்
கிடந்தது போல் அரவணை
வேலைத்தலைக் கிடந்த மழைமுகில்.....

ஆழவார் பாசுரம்

தேமொழி

unread,
Jul 6, 2014, 9:46:04 PM7/6/14
to vall...@googlegroups.com
ஜூலை 7, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  திரு. செண்பக ஜெகதீசன்  அவர்கள்

Shenbaga Jagatheesan
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  சுசீந்திரத்தில் உள்ள  காசித்திருமடம், ஆச்சிரமத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் திரு. செண்பக ஜெகதீசன்.  சென்றவாரம் வல்லமை வாசகர்களுடன் இவர் பகிரிந்து கொண்ட  “தடை தகர்த்து…”  என்ற தன்னம்பிக்கையூட்டும் கவிதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்பொழுது நிர்வகிக்கும் காசித்திருமடப் பணிக்கும் முன்னர் நெல்லையப்பர் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,  “இரைதேடுவதுடன் இறையும் தேடும் அரசுப்பணி”யாற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.  இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் சற்றேறக்குறைய எட்டு ஆண்டுகளாகப் பற்பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  அவற்றில் சில:  வல்லமை, வார்ப்பு, பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, நந்தலாலா.

இவர் கவிதைகளின் கருப்பொருளாகக் கொண்டவை; இயற்கை, தத்துவம், எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை போன்றவையாகும்.   கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வல்லமை வாசகர்களுடன் தனது கவிதைகளை பகிர்ந்து வருகிறார் இக்கவிஞர்.  இவருடைய இவ்வாரக் கவிதை, வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவளுதல் கூடாது, அவற்றை எதிர் கொண்டாலே அவை வழங்கும் படிப்பினை மூலம் திறமை  மிக்கவராக மாறலாம் என்ற தன்னம்பிக்கையூட்டும் கருத்தினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

தடை தகர்த்து…

சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    
     சிறந்த மாலுமி உருவாக்கும்,
       மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை           
     மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
     காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
     ஏற்றம் என்றும் பெறுவாரே…!

இவர் எழுதி வல்லமையில் வெளிவந்த மேலும் சில கவிதைகள் கீழே…..

கிடக்கட்டும் குப்பைகள்…

குறைசொல்ல ஒரு
கூட்டம் உள்ளவரை,
நிறைய வருகின்றன
நீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்..

உறங்கவிடமாட்டார்கள்
உன்னை,
உறங்கிடவும் மாட்டார்கள்-
உன்மீது
பொறாமை கொண்டவர்கள்..

உரிய சமயமிது,
உணர்ந்துகொள்
உழைத்திடு
உயர்ந்திடு..

உதாசீனப்படுத்திடு
குறைசொல்லும் அந்தக்
குப்பைகளை…!

__________________________________________

கலங்காதே…

கலங்குவதில்லை மலர்,
காய்ந்து
கீழே விழுவதற்கு…

காரணம் இதுதான்-
அதன்
கனி உதிர்க்கும்
விதை முளைத்து
மீண்டும்
மரமாகும் நம்பிக்கை…!

கலங்கி நிற்கிறாயே
மனிதா,
மரணத்தைத் தினம்
மனதில் எண்ணி…!

__________________________________________

ரேகை

போடும் ஒரு நெல்லுக்காக
கிளி எடுத்த
பொய்யான சீட்டை வைத்துப்
புளுகுவதை நம்பாமல்,
கைரேகைக்
கதைகளையும் நம்பாமல்,
கைரேகை தேயக்
கடும் உழைப்பு உழைத்தால்
உன்ரேகை (அடையாளம்) தெரியும்
உயர்வாக…!

__________________________________________

இக்கவிதைகளுக்கும் மேலாக செண்பக ஜெகதீசன் கையெடுக்கும் மற்றொரு கவிதை முயற்சியை இதுவரை பிறர் கையாண்டு பார்த்ததில்லை.  இம்முயற்சி கவிதைகள் வடிப்பதில் முற்றிலும் ஒரு புதிய முயற்சி.  வியக்க வைக்கும் கோணமென்றும் கூறலாம்.

இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணிலடங்கா விளக்க உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளது.  செண்பக ஜெகதீசன் தனது “குறளின் கதிர்களாய்…” கவிததைத் தொடர் வரிசையில்  திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதன் விளக்கத்தை பல்வேறு கவிதை பாணிகளில் வடிப்பது  இவர் கவிபுனையும் திறமையைக் காட்டுகிறது.  எடுத்துக்காட்டாக, “பீலிபெய் சாகாடும் ” என்ற குறளை இவர் புதுக்கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, புதுப்பா, கிராமிய பாணி என பல்வேறு கவிதை பாணிகளில் வழங்குவதை கீழே காணலாம்….

குறளின் கதிர்களாய்…

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்…!
-திருக்குறள்-475(வலியறிதல்)

புதுக்கவிதையில்…

 மலரினும் மெல்லிதென்று
மயிலிறகைச் சேர்த்து
வண்டியில்
மனம்போல ஏற்றிவைத்தால்,
முறிந்துவிடும் அச்சாணி..
மிஞ்சாது எதுவும்
அளவை
மீறினால் எதிலும்…!

குறும்பாவாய்…

குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
கூடினால் மயிலிறகும்..
கதையிதுதான் வாழ்க்கை…!

மரபுக் கவிதையில்…

வண்டியில் ஏற்றும் பாரமது
வலிமை யில்லா மென்பொருளாம்
கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
கோல மயிலின் இறகெனிலும்,
உண்டே யதற்கும் அளவதுவும்,
உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
கண்டிடு வாழ்வில் கதையிதுவே
கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

புதுப்பாவில்…

மெல்லிய பொருள்தான்
மயிலிறகு,
மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
அதுவும் உடைந்து
மிஞ்சுவதில்லை எதுவுமே..

நல்லதுக்கு
எதிர்மறைப் பலன்தான்
எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

கிராமிய பாணியில்…

ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா..
அளவாப் பாரம் ஐலசா
அளந்து ஏத்து ஐலசா..
மயிலுப் பீலி ஆனாலும்
மிஞ்சா வண்டி ஒடையுமே..
மனுசங் கதயும் இதுதானே
மனசில கொள்ளு இதத்தானே..
ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா…!

சிந்தனையைக் கவரும் கவிதைகளை வழங்கி, கவிதை இலக்கிய மரபில் புதுமை புரிந்து வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   செண்பக ஜெகதீசன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

முகநூலில் செண்பக ஜெகதீசன்: https://www.facebook.com/jagatheesa.perumal.3?ref=tn_tnmn

தேமொழி

unread,
Jul 13, 2014, 8:45:34 PM7/13/14
to vall...@googlegroups.com
ஜூலை 14, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  திரு. கிரேசி மோகன்  அவர்கள்

கிரேசி மோகன்

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து, ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்கள் நன்கறிந்த நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள்.  வல்லமையில் “தாம்புக் கட்டு”  என்ற தலைப்பில் அவர் சென்ற வாரம் எழுதிய கதைக்காகவும், வெப்துனியா செய்தித்தளத்தில் அவர் எழுதிய திரைப்பட விமர்சனத்திற்காகவும் வல்லமையாளராகத் தெரிவு செய்யப்படுகிறார்.  வல்லமையாளர் விருதிற்கு அவரைப் பரிந்துரைத்து தேர்வுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் வாசகர் திரு. சு. ரவி அவர்கள்.

“தாம்புக் கட்டு”  கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த  நிகழ்வுகளையும், பின்நாளில்   அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம்.  ஆனாலும் கிரேசி மோகன் வழங்கிய கோணம் முற்றிலும் புதுமையானது.

“தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன்  தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும், சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது.  எட்டவதாகப்  பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய  வாசு மாமாவும்  (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை  அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார்.  அவருக்கு உதவி செய்கிறாள்  ஆயர்பாடியில் வசிக்கும்  சிறுமி ஒருத்தி.

கண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்ற உதவிய அந்தச் சிறுமி யார்?  இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம்  பெற்ற பின்னர் உதவி செய்தாள்? அவள் விருப்பம் என்ன? யாரவள்?  இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு.  இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்த சுட்டி வழி சென்று  காண்க.  படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித்  தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

“பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…”  

“கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…”

கதையில் வரும் இந்த வர்ணனைகள்  கிரேசி மோகனின் “டச்”.  இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று.  இது போன்ற மற்றொரு   வியக்கவைக்கும் கற்பனையை  மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற  கவிதைத் தொகுப்பிலும் காணலாம் …

அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… முழுக்கவிதையும் இந்த சுட்டியில் கிடைக்கும்..

கன்னிகாதானம்
——————

தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
சேக்கிழார் சாமி சபைக்கு…

பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
அள்ளிவந்தார் சேலை அலைந்து…

கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
முடிந்தான் அரன்முடிச்சு மூன்று…

கிரேசி மோகன் அவருக்கு  கைவந்த கலையான “குப்பாச்சுலு VS கோடபட்ரி” என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றையும் , அத்துடன் மற்றொரு கைவந்த கலையான ஓவியங்களையும் வல்லமை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.  ஆம்… கிரேசி மோகன் ஒரு சிறந்த ஓவியரும் கூட, வல்லமையில் வெளியான அவரது ஓவியங்கள் ஒரு சில இங்கே  இங்கே உங்கள் பார்வைக்கு…

சென்ற வார இறுதியில் (2014 ஜூலை 11 அன்று) வெளிவந்த இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களின்  ராமானுஜன் திரைப்படத்திற்கு   கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது …

எனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….!

‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்….

‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது….

பெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டு தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்….

படம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது….

அமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் வினாயகத்தின் இசையும் சூப்பர்….

‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் ….

தயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100….

அத்துடன் முத்தாய்ப்பாக,  படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களைப் பாராட்டி,  அவர் இசை அமைத்த   “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்றுவாழ்த்துறைத்து  ஒரு  வெண்பாவும்   பாடியுள்ளார் ….

“புனிதமே தையும், கணிதமே தையும்,
மனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக,
கேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன்,
காட்ல மழைவினாய கம்”

திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில்  தினமும் வெண்பாக்கள்  புனைந்து வரும் கிரேசி மோகன், இதுவரை அந்த வெண்பாக்களை (இதுவரை 140  வெண்பா பதிவுகள்) வல்லமை மின்னிதழ் வாசகர்களுடனும், வல்லமை கூகிள் குழுவிலும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பாபாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா …ஆதலால்…

“வெண்பா வடித்து வெகுமதியாய்  நாளுமொரு
பண்பாடும் பாவல, நீவிர் திரையுலக  
எல்லை  கடந்திங்கு என்றும் புகழ்காணும்
வல்லமை யாளர்தாம்  இன்று”  

என்று வெண்பா சொல்லிப்  பாராட்டி …

சிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த   நாடகம் மற்றும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   கிரேசி மோகன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 13, 2014, 8:58:10 PM7/13/14
to vallamai
திரு கிரேசி மோகன் வெகு வல்லமையாளர் என்பதைத் நாடகத் துறை, சினிமாத்துறை, கதை, வசனகர்த்தா என்ற வகையில் அனைவரும் அறிவோம். அவர் வெண்பா, கவிதை நறுக்கு எழுதல், ஓவியம் வரைதல் வகையிலும் ஆர்வமிகு வல்லமையாளர் என்பதை அறியத்தந்த வல்லமை இதழுக்கும் குழுவிற்கும் நன்றி.
திரு கிரேசி மோகன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்! 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Ravi Subramanian

unread,
Jul 13, 2014, 9:25:18 PM7/13/14
to vallamai

Thanks for recognizing Crazy Mohan.
Congrats dear Mohan

Su.Ra

Innamburan S.Soundararajan

unread,
Jul 13, 2014, 9:30:26 PM7/13/14
to vall...@googlegroups.com
திரு. க்ரேஸி மோஹன் அவர்கள் கிருஷ்ண கைங்கர்யத்தில் திளைப்பது பற்றி நேற்று எழுதினேன்.

இன்றைய செய்தி சர்வ வல்லமை திரு. க்ரேஸி மோஹன் அவர்களுக்கு கிருஷ்ண பாக்கியம்.

வாழ்த்துக்கள்.

இன்ன்ம்புரான்

Tulsi Gopal

unread,
Jul 13, 2014, 9:38:08 PM7/13/14
to vall...@googlegroups.com
இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 

Granny Visalam

unread,
Jul 14, 2014, 1:12:20 AM7/14/14
to vall...@googlegroups.com
அன்பு கிரேசி மோகன் . நீங்கள் எழுதும் ஒவ்வொன்றையும் மிக விரும்பி படிப்பேன்   நாடகங்களும் கண்டு ரசித்திருக்கிறேன் .பம்பாய் சாணக்கியா என் மிக நெருங்கின உறவினர் . எனக்கும் நாடகம் என்றால் உயிர் . நீங்கள் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறீர்கள் .  எப்போதோ நீங்கள் வல்லமையாளர் ஆகிவிட்டீர்கள் . என் நல்லாசிகளுடன் என் இனிய வாழ்த்துகள்.  

Anna Kannan

unread,
Jul 14, 2014, 1:24:55 AM7/14/14
to Vallamai

சிறந்த தேர்வு.

வல்லமையாளர் கிரேசி மோகன் திறனாளர் என்பது ஒரு புறம் இருக்க, அவர் இன்றும் புதிதாகக் கற்க விரும்புபவராகவும் எளிமையுடனும் அன்புடனும் பழகுபவராகவும் இருப்பது, இக்காலத்தில் அரிது.

வெண்பா, சந்தப் பாடல்கள், கதை, கட்டுரை என ஒவ்வொரு வடிவத்திலும் தம் படைப்பாற்றலைப் புதிது புதிதாக ரசித்து ரசித்து முயன்று பார்க்கும் அவரது வேகமும் துருதுருப்பும் மிக அழகு.

கிரேசி மோகன் அவர்களின் திறனும் புகழும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

தேமொழி,

/ எல்லை  கடந்திங்கு என்றும்/

என்பது

எல்லை  கடந்திங்கே என்றும்

என இருக்கலாம்.

Tthamizth Tthenee

unread,
Jul 14, 2014, 1:40:11 AM7/14/14
to vall...@googlegroups.com
​நண்பர்   திரு கிரேசி மோகன் அவர்களுக்கு  மனமுவந்த பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--

crazy mohan

unread,
Jul 14, 2014, 7:16:29 AM7/14/14
to to: crazy.mohan, cc: cc: cc: to: to: to: Ravi Subramanian, keshav keshav, Krishna Keshav, ram keshav, eramurukan ramasami, Murugan Ramasami, bcc: Ramanan Isaikkavi, RAMANATHAN R.K., J.Raghunathan, Mohan Ramiah, J R Subramaniam, Rajamani Ramasamy, Rangam Balaji, Sheela Rangarajan, Ramaswamy Rajamani, G RANGARAJAN, isaikkav...@googlegroups.com, Sundararajan Srinivasan, Thiruppur Krishnan, Thirumalai V, threey...@yahoo.co.in, team ramesh, G Kameshwar, Guhan Sreenivasan, gnana sambandan, Narayanan Gopala Sundaram, meera balaji, Ramanathan T.R., mahalingam krishnan, mangay...@kalkiweekly.com, Maheswari Sarguru, ara magic, MarabinMaindan Muthiah, Balakrishna chandra mouli, Padmanabhan Mohan, Mohan Baker, Khanthan S.B., Sakethasri v, Dr vallioor Subramanian, சுந்தர்ஜி ப்ரகாஷ், Suchithra Balasubramanian, Nithya Mahesh, klik ravichandran, lalith...@hotmail.com, editora...@yahoo.co.in, Prabhuram Sharma, vasanthi srini, vallamai, Ramesh Vinayakam, RAVI K

பாராட்டியவர்களுக்கும், சீராட்டிய வல்லமைக்கும், தேரோட்டிய திவ்ய தேசத்தோனுக்கும் நன்றி….முக்கியமாக அடியேனுக்கு தமிழ் நீரூற்றிய தோழன் பூனேவில் வசிக்கும் சு.ரவிக்கு நன்றி சொன்னால் கோபிப்பான்…எனவே ….’’நன்றி நவிலும் வெண்பா’’

‘’வல்லமை யாளன், விருதுக்குக் காரணம்-
சொல்லமைத்துத் தந்த சுரவியே, -புல்லெமை,
ஆயிரங் காலத்(து) , அறுவடை நெல்லாக,
வாயுரம் தந்ததவன்(ரவி) வாக்கு’’….கிரேசி மோகன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Jul 14, 2014, 7:27:32 AM7/14/14
to வல்லமை
​மோகனனும் வந்து மனமுருகி நின்றிடுவான்
மோகனிவன் வெண்பாவின் முன்பு ​

வாழ்க க்ரேசி.மோகன் ஐயா 

Aathira Mullai

unread,
Jul 14, 2014, 8:02:27 AM7/14/14
to vall...@googlegroups.com
சகல வல்லமையாளர் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு வல்லமையாளர் விருது. ஆதிரா முல்லையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கிரேசி மோகன் சார் அவர்களுக்கு
அன்புடன்
முனைவர். ப. பானுமதி
 (ஆதிரா முல்லை)

N. Ganesan

unread,
Jul 14, 2014, 8:05:05 AM7/14/14
to vall...@googlegroups.com

On Monday, July 14, 2014 5:02:27 AM UTC-7, ஆதிரா முல்லை wrote:
சகல வல்லமையாளர் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு வல்லமையாளர் விருது. ஆதிரா முல்லையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கிரேசி மோகன் சார் அவர்களுக்கு

எனது பாராட்டுகளும்!

அன்புடன்
நா. கணேசன்

தேமொழி

unread,
Jul 20, 2014, 11:05:44 PM7/20/14
to vall...@googlegroups.com

இந்த வார வல்லமையாளர்!
ஜூலை 21, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள்

seetha natarajan
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திருமிகு. சீதா நடராஜன்அவர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிறுவனத்தின், ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (J.Krishnamurti Foundation – Rishi Valley School) யில் சமூகவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  தனது சமூகவியல் வகுப்பில்  செயல்முறைக் கல்விமுறையில்  மாணவர்களுக்கு பாடத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக  இவர் பாராட்டப்படுகிறார்.

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் பரிந்துரையில் சமூகவியல் பாடங்களை பெரும் முயற்சியுடன் செயல்முறை பாடங்களாக அறிமுகப்படுத்தும் திருமிகு. சீதா நடராஜன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம். இவருடைய இணையதளம் :

வண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சீதா நடராஜன் சமூகப் பாடங்களுடன்  ஆங்கிலம், சுற்றுச் சூழல் பாடங்களும் கற்பிக்கிறார். கற்றல் திறன் குறைந்த, சிறப்பு பயிற்சி தேவையான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பயிற்சியையும் சீதா நடராஜன் பெற்றுள்ளார். நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றிலும் ஆர்வம்  உள்ளவர் இவர்.

உலக மற்றும் வாழ்வியல் பார்வையை விரிவாக்கும் சமூகவியல் பாடங்கள் கல்விக்கூடங்களில் அதற்குரிய மதிப்பினைப் பெறுவதில்லை.  பலநாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிவதன் மூலமும், நமது நாட்டின் பண்டைய  மக்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும்  அறிவதன் மூலமும், தொடரும் இந்தக் காலவெளியில், தொடர்ச்சியாக வாழ்ந்து வரும்  மனிதஇனத்தின் அருமையை நாம் உணர்ந்து பாராட்ட முடியும். மனித இனத்தின்  சிறப்பினை அறிவதன் மூலமாக  இக்காலகட்டத்தில் வாழும் நாமும் நம் பங்கை செம்மையாகச் செய்யவேண்டிய பொறுப்பும் நமக்கு விளங்கும்.   ஆனால் இப்பாடம் அதிக சிரத்தையின்றிதான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  மாணவர்களும்  ஆர்வமின்றிக் கடனே என்றுதான்  மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே  முன்னிறுத்தி பயில்கிறார்கள். பிறகு  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல வாழ்க்கைக்கும் உதவாத கல்விப் பயிற்சியாக இது  பயனற்று முற்றுப் பெற்றுவிடுகிறது.

சிறந்த ஆசிரியர்களாக இருந்தாலும் பலர் மாணவர்களைக் கவரும் கோணத்தில் பாடங்களை வழங்க முயலுவதில்லை. இந்தப் போக்கினை மாற்றி, செயல்முறை அடிப்படையில் பாடத்தை அமைத்து, களப்பணிகள் பகுதியை உள்ளடக்கிய பாடங்களை கற்றுத் தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சீதா நடராஜன்.

சைனா, எகிப்து, கிரேக்க நாடுகளையும், அவர்களது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றுடன், தற்கால வாழ்வியலையும் கற்கும் பாடமாக இருந்தால்,
1. அந்த நாட்டு நூல்களையும், படங்களையும், பொருட்களையும் சேகரித்து காட்சிக்கு வைத்து விளக்குதல்
2. அந்த நாடுகளின் இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
3. சிறு நாடகங்களை எழுதி நடித்தல், நாட்டியங்களை ஆடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும்

உள்ளடக்கி பாடமுறையை வடிவமைக்கிறார்  சீதா நடராஜன்.

இவ்வாறு மாணவர்கள் பாடங்களை அறிவதன் மூலம் அவர்கள் ஆர்வம் தூண்டப்படுவதால், அதைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக பிறநாடுகளின் கலாச்சார நிகழ்வுகளுடன் நம் நாட்டு கலாசாரத்தை  ஒப்பிட மாணவர்களும் ஆர்வம் கொண்டு தானே முன்வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சைனாவைப் பற்றிய பாடத்தில் அங்குள்ள மக்கள், இடங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, பள்ளியில்  ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார் சீதா நடராஜன்.  மாமன்னர்  சின் ஹுயாங்க்டி பற்றிய அறிமுகத்தில், மன்னரின் கல்லறைக்கருகில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உயிருள்ள மனிதர்களின் அளவில் வடிக்கப்பட்டிருந்த சுட்டகளிமண் பொம்மைகளான வீரர்கள் குதிரைகள் போன்ற பொம்மைகளை குயவர்களின் உதவியுடன் களிமண்ணில் உருவாகியிருக்கிறார். சைனாவின் புகழ்பெற்ற டிராகன் நடனம் மாணவர்களால் சைனா மக்களின் உடையலங்காரத்துடன் நடத்திக்காட்டப்பட்டிருக்கிறது. சீன மக்களின் மத நம்பிக்கைகைகள், இறப்பிற்கு பின்னர் ஆவி, வாழ்வு சடங்குகள் போன்ற நம்பிக்கைகள் விவாதிக்கப்பட்ட பொழுது , மாணவர்களே விவாதத்தை முன்னெடுத்து இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் அவற்றை ஒப்பிட்டு அறிய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

அத்துடன் இந்த ஒப்புநோக்கும் ஆய்வு பிறமத சடங்குகள், நம்பிக்கைகள் எனவும் விரிவாக்கப்படிருக்கிறது. பிறகு இவையாவும் இக்காலத்திற்கு பொருத்தமானவையா, இவற்றின் குறை நிறைகள் என்ன? என்ற கோணத்திலும் மாணவர்கள் தங்கள் கற்றலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.  மன்னராட்சி, அரசபரம்பரை அவர்களது  அரசாளும் உரிமையைப்  பெறும் நிலை, இக்கால அரசாங்க அமைப்புகள் என்றும் பாடம் தொடர்ந்திருக்கிறது. கன்பூஷியஸ் வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் பள்ளியைத் தோற்றுவித்த   சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டிருக்கிறது.

சைனா  போன்றே மற்ற பிறநாடுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  எகிப்தின் புராதனம்,  கிராக்க நாட்டின் மக்களாட்சி முறையின் ஆரம்பம், புராணக்கதைகள், தத்துவ மேதைகள், போர் நிகழ்சிகள் என பாடங்கள் செயல்முறை வடிவெடுத்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வெறுமே நூலில் தொடர்புகள் புரியாது பாடங்கள் படிப்பது, தேர்வுக்கு பிறகு படித்ததை மறப்பது என்ற வகையிலிருந்து இது மாறுபட்ட வகையில் நினைவில் நிறுத்தப்பட்டது என்பதை மாணவர்களின் நினைவுகூர்தல் மூலம்  அறியும் வாய்ப்பும் சீதா நடராஜனுக்கு கிடைத்திருக்கிறது.

இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: nat...@yahoo.com

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=48194

Anna Kannan

unread,
Jul 21, 2014, 1:28:56 AM7/21/14
to Vallamai

கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமை நிகழ்த்தும் சீதா நடராஜன் அவர்களுக்குப் பாராட்டுகள். அவரது திறனும் புகழும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 21, 2014, 1:58:43 AM7/21/14
to வல்லமை
ஆசிரியை சீதா நடராஜன் அவர்களுக்கு ஆசிகள் பல!

2014-07-21 10:58 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமை நிகழ்த்தும் சீதா நடராஜன் அவர்களுக்குப் பாராட்டுகள். அவரது திறனும் புகழும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Anbu Jaya

unread,
Jul 21, 2014, 4:18:57 AM7/21/14
to vallamai
வல்மையாளருக்குப் பாராட்டுக்கள்.

அன்புடன்,
அன்பு ஜெயா

--

crazy mohan

unread,
Jul 21, 2014, 9:39:35 AM7/21/14
to vallamai
ஆசிரியை சீதா நடராஜன் வல்மையாளருக்குப் பாராட்டுக்கள்.....ஜானகி டீச்சரால் பேரும் புகழும் வாங்கிக் கொண்டிருக்கும் கிரேசி மோகன்....

தேமொழி

unread,
Jul 27, 2014, 10:02:39 PM7/27/14
to vall...@googlegroups.com

ஜூலை 28, 2014

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்கள்
Kutti Revathy

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவுக் குரலை எழுப்பி வருபவர்.  இவர் தனது சமுதாய அக்கறை கொண்ட இடைவிடாத தொடர்முயற்சியின் ஓர் அங்கமாக இந்த மாதம் குறிப்பிடத்தக்க இரு செயல்களை ஆற்றி மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளார். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய உரைக்காகவும், இம்மாத கணையாழி இதழில் இவர்  எழுதிய கட்டுரைக்காகவும்  இவர் பாராட்டப்படுகிறார். கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் இயற்பெயர் ரேவதி சுயம்புலிங்கம்.  சென்னையில் வசிக்கும் சித்த மருத்துவரான இவர்தம் முற்போக்கு சிந்தனைகளைத்  தொடர்ந்து தனது எழுத்துக்களின் மூலம்  வெளிப்படுத்துவதில் முனைப்பு மிகக் கொண்டவர். தற்கால பெண்ணெழுத்தாளர்களில் பெண்ணிய எண்ணம் நிறைந்த குட்டி ரேவதி “பனிக்குடம்” என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இப்பதிப்பகம் வெளியிடும்  பனிக்குடம் என்ற  தமிழ் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருக்கிறார். “பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வது என்பது  இந்தக் காலாண்டிதழின் நோக்கம்.

அத்துடன் பனிக்குடம் பதிப்பகம்   பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளை மட்டுமே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதே இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர் குட்டி ரேவதி. சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருகிறார்.

ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் பங்காற்றியுள்ள  குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000), முலைகள் (2002), தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003), உடலின் கதவு (2006) ஆகிய கவிதை நூல்களையும், காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார்.

இந்த மாதம் (2014 ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில்) அமெரிக்க செயின்ட் லூயி, மிசௌரி நகரில் நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று இவ்வாண்டில் தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கியுள்ளார்.   மேலும் விழாவில்  “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமையேற்று  இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற, தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு ஊடகக் கல்விக்கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

“பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை” என்ற தலைப்பில் இந்த மாதம் ஜூலை 2014 இல்  வெளியான “கணையாழி” இதழில் இவர் எழுதிய கட்டுரையில், தமிழ் பெண்எழுத்தாளர்களின் மீது  தமிழ்ச் சமுதாயம் கொண்டிருக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டத்தைக் கண்டித்து எழுதியுள்ளார்.  தமிழ் இந்துவில் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் இலக்கியவாதிகளை அவர்கள் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருப்பதாக* எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக அவருக்கு பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் விடுத்த கண்டன அறிக்கையின் எதிரொலிகளில்  ஒன்றாக இக்கட்டுரையைக் கணையாழி இதழில் குட்டி ரேவதி எழுதியிருந்தார். கட்டுரை  முழுவதையும் இச்சுட்டிவழி சென்று படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு, கட்டுரையின் முக்கியக் கருத்துகள் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை

kutty raevathi 2

இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது………….

பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அதுவரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான்………….

இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் “பாதுகாப்பின்மை உணர்வு” ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது………….

அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது………….

தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி ‘ஊடகப்பிம்பங்களாக’ ஆகிவிட முடிவது இல்லை. ‘உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!’ என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்………….

இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அல்லது புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காததுதான். மனித இனமாகப் போற்றியதுதான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண் படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்…………

ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அறிந்திராத  அல்லது அவர்களால் இயலாத சூழ்நிலையில் குட்டி ரேவதி போன்ற சமூகப் பொறுப்புள்ளவர் செய்யும் சேவையை சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பாக அங்கீகரித்துப் போற்ற வேண்டியது நமது கடமை.

இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: kuttir...@gmail.com

இவரைப் பற்றி மேலும் தகவல்களை கீழ்காணும் சுட்டிகளின் வழி அறியலாம்:
Facebook.com: https://www.facebook.com/pages/Kutti-Revathi/191482800885454
Twitter.com: https://twitter.com/kuttirevathi
Blogspot: http://www.kuttyrevathy.blogspot.com
Wiki: https://ta.wikipedia.org/s/cqa

சான்றுகளும் குறிப்புகளும்:

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் – தி இந்து         http://tamil.thehindu.com/general/literature/article6136159.ece

எழுத்தாளர் ஜெயமோகன் மீது பெண் எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் தாக்கு! – தி இந்து            http://tamil.thehindu.com/tamilnadu/article6132852.ece

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை           http://kuttyrevathy.blogspot.com/2014/07/blog-post.html

* தனது இணையதளத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை  ஜெயமோகன் மறுத்துள்ளார்

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

Tthamizth Tthenee

unread,
Jul 27, 2014, 11:56:20 PM7/27/14
to vall...@googlegroups.com
குட்டி ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--

Innamburan S.Soundararajan

unread,
Jul 28, 2014, 12:56:21 AM7/28/14
to vall...@googlegroups.com
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு என் கனிவான வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

2014-07-28 9:25 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> குட்டி ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
> அவனை விடவா உயர்ந்தது ஜாதி?
>
> மனிதமும்,உலகமும் காப்போம்,
> மௌனம் உணர்த்தாத பொருளை
> சொற்கள் உணர்த்தாது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
> http://thamizthenee.blogspot.com
> rkc...@gmail.com
> http://www.peopleofindia.net
>
>
>
>
>
> 2014-07-28 7:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>
>> ஜூலை 28, 2014
>>
>>
>>
>> இவ்வார வல்லமையாளர்
>> வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்கள்
>>

Granny Visalam

unread,
Jul 28, 2014, 1:22:25 AM7/28/14
to vall...@googlegroups.com
கவிஞர் குட்டி ரேவதிக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

Anna Kannan

unread,
Jul 28, 2014, 10:25:34 AM7/28/14
to Vallamai
வல்லமையாளர் குட்டி ரேவதிக்கு என் வாழ்த்துகள்.

கவிதாயினி குட்டி ரேவதியின் படைப்புகள் குறித்து, நான் 2005ஆம் ஆண்டு அமுதசுரபியில் எழுதிய கட்டுரை, இங்கே உள்ளது - http://annakannan.blogspot.in/2005/04/blog-post.html 
Dr.Annakannan
Chennai
Reply all
Reply to author
Forward
0 new messages