குந்து விளக்கம்

6 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 25, 2022, 4:45:36 AM11/25/22
to வல்லமை, hiru thoazhamai
குந்து விளக்கம்

 
நான் பையனாக இருக்கும் போது கட்டிட வேலைக்கு வரும் பெண்கள் "ரவ குந்துமே" - சிறிது உட்கார்  என்று அடுத்த பெண்ணை பார்த்து சொல்லுவர். உடனே அப்பெண் பால்கறப்பது போல உட்காருவாள். இப்படி தான் எனக்கு குந்து என்ற சொல் அறிமுகமானது.  அவர்கள் உட்கார் என்ற சொல்லை பயன்படுத்தியதே  இல்லை.

நாம் கூட பேளுவதற்கு அப்படித்தான் உட்காருவோம்.

இனி குந்து என்ற சொல்லின் தோற்றத்தை பார்ப்போம், குறு என்றால் உடல் நீட்டத்தை குறுக்குவது.  தமிழில் றகரம் தகரமாக திரியும். குறு > குது > குத்து > குந்து என ஆனது. உட்காருவதற்கு கன்னடத்தில் இன்றும் குத்கொள்ளி என்றே கூறுகின்றனர். நெடிய உடலின் இடுப்பு முதல் முட்டி வரையான பகுதியை மடித்தால் உடலானது  தலை முதல் இடுப்பு - இடுப்பு முதல் முட்டி - முட்டி முதல் பாதம் என மூன்று மடிப்பாக குறுகுகிறது. இதை தான் நாம் குந்து என்கிறோம்.    


image.png
Reply all
Reply to author
Forward
0 new messages