1.2.2 வடமொழியில் காப்பிய வகை
வடமொழியில் காப்பியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.
1) இதிகாசம்
2) மகாகாவியம்
3) காவியம்
4) புராண காவியம்
5) உத்பாத்தியம்
6) சம்பு காவியம்
7) சந்தேச காவியம்
8) கண்ட காவியம்
இதிகாசம் என்ற சொல்லுக்கு ‘இவ்வாறு முன் இருந்தது’ என்று பொருள். இதிகாசங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாறாக
(Pre-historic Period) நம்பப்படுவன. வால்மீகி ராமாயணமும், வியாச பாரதமும் இவ்வகைப் படைப்புகளே.
வடமொழியின் மகாகாவியம் என்பது இதிகாசக் கதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாகப் பேசுவது.
இதில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருள் இடம் பெறும். கற்பனை வளமும் வருணனைத் திறனும் பெற்றிருக்கும்.
மகா காவியத்திலிருந்து அளவால் குறைந்தது காவியம். நாற்பொருளும் இதில் இடம் பெறாது. ஒரு சில குறைந்து அமையும்.
உயரிய நோக்கமும் கற்பனை வளமும் குறைவாகவே காணப்படும்.
கடவுளர் பற்றிய புராண வரலாறாக அமைவது புராண காவியம்.
இதிகாசத்திலோ, புராணங்களிலோ இடம் பெறாத, புதிய கதையை மையமாகக் கொண்டு படைக்கப் பெறுவன உத்பாத்தியம் என்னும்
காப்பிய வகையாகும்.
சம்பு காவியம் என்பது உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுளாகும்.
சந்தேச காவியம் என்பது தூது இலக்கிய வகையாகும்.
கண்ட காவியம் என்பது பழைய இதிகாச - காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு ஏற்ப மாற்றங்களையும்,
புதுமைகளையும் சேர்த்துப் படைக்கப் பெறுவது.
தமிழில் பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம், சாலை இளந்திரையனின்
சிலம்பின் சிறுநகை போன்றவை இக்கண்ட காவிய வகையைச் சார்ந்தவை.
கண்ட -
khanDa
खण्ड [p= 336,1] [L=61078] mn. a piece , part , fragment , portion
துண்டு துண்டாக வெட்டுவதற்குத் தமிழில் கண்ட துண்டமாக வெட்டுதல் என்பர்;
சலுகை என்பது கவிஞர்கள் அவர்களாகவே எடுத்துக் கொள்வதுதான் :))
தேவ்