Fwd: பயத்தை உண்டாக்கு

12 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Nov 28, 2022, 11:30:17 AM11/28/22
to tamilmantram, vallamai, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, nandhitha kaapiyan, நா. கணேசன், C.R. Selvakumar, baskaran





image.png

பயத்தை உண்டாக்கு

சி. ஜெயபாரதன், கனடா

உனது
ஆயுள் உறுதி இல்லை. 
யும் தொழில்
வேலை
கிடைக்கும் கூலி
நிரந்தரம் இல்லை.
கட்டிய மனை, மாளிகை
பட்டமாய் போகலாம்
புயல் அடித்து.
உயரத்தில் பறக்கும்
விமான எஞ்சின் 
பழுதாகி கடலில் வீழலாம்
கார் டயர் வெடித்து
விபத்து 
நேர்ந்து மாந்தர் சாகலாம்.
சுற்றுலாவில்
தொற்று நோய் பற்றி
மருத்துவ மனையில் மனைவி
பலநாள்
படுத்துக் கிடக்கலாம்.
அணு உலைகள் வெடித்து
கதிரியக்கம் 
காசினியில் பரவலாம்.
பூகம்பம், காட்டுத் தீ
சூறாவளி,
சுனாமி, 
ஹரிக்கேன் அடித்து மக்கள்
எல்லாம் இழக்கலாம்.
இப்படி
பயம் காட்டியே பிழைத்து வரும்
இன்சூரன்ஸ்
பண முதலைகள் !
மிஞ்சும் சம்பாதிப்பில் நீ
எத்தனை சதவீதம் 
கப்பம்
கட்டுவாய் 
ஆண்டாண்டு தோறும்?


image.png





Reply all
Reply to author
Forward
0 new messages