வேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு

372 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 28, 2013, 6:40:32 PM12/28/13
to thiru thoazhamai

veatti08

பரம்பரை மரபைப் பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகளும்  ஊழியர்களும் ஒருநாள் வேட்டி அணிந்து வேட்டி நாள் கொண்டாடுமாறு  கூட்டு நெசவு (கோஆ டெக்சு) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாகக்  கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில்  உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடைப்  பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு.  பரம்பரையின்  பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டிதான். sakayam i.a.s.01

இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேட்டி அணிவது குறைந்து விட்டது.இப்போது,  வீறார்ந்த வேட்டியைக் காணமுடியவில்லை. வேட்டி என்பது வெறும் ஆடையின்  அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின் உயர்சிறப்பு. வேட்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும், வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும், “வேட்டி  நாள்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது .

veatti07வேட்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல்  திருநாளுக்கு  முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேட்டி  நாளாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேட்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும்,  கூட்டு நெசவு(கோஆப்டெக்சின்) விற்பனைக்கு உதவவும்கூடிய இத் திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் எனக்  கூட்டுநெசவு(கோஆப்.டெக்சு) இயக்குநர் சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் சுற்றறிக்கை ஆட்சியர்கள்,  அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ‘வேட்டி  நாள்’ கொண்டாடும் வகையில் அனைத்து வடிவங்கள், வண்ணங்களில் அனைத்து வகை நூலில் சிறிய, பெரிய கறையுடன் கூடிய வகைகளைக்   கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) உற்பத்தி செய்துள்ளது. உரூ. 130 முதல் உரூ. 500 வரையிலான வகைகள் உள்ளன. தேவையான வேட்டிகளை அந்தந்தப் பகுதியில் இயங்கும்  கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) மூலம் வழங்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”veatti02

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Innamburan S.Soundararajan

unread,
Dec 28, 2013, 6:47:04 PM12/28/13
to vall...@googlegroups.com
சகாயம் சகாயமாகத்தான் சொல்லியிருக்கிறார். 2014
புத்தாண்டு வாழ்த்துக்கள் 



2013/12/28 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

unread,
Dec 28, 2013, 11:15:22 PM12/28/13
to vall...@googlegroups.com
///தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல்  திருநாளுக்கு  முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேட்டி  நாளாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேட்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.////



வேலை செய்யும் இடத்தில் வேட்டி நாள்  கோரிக்கை????

இது ஒரு  வெட்டி வேலை.
நம் மக்கள் திருமணநாள் அன்றே வேட்டி கட்டத் தெரியாது என்று சலம்புவார்களே.
வேட்டி என் பெற்றோர் தலைமுறையுடன் போய்விட்டது.

வேட்டி கட்டும் விளம்பரத்திற்கும் கேரள நடிகர்களையே காட்ட வேண்டிய அவல சூழ்நிலை தமிழக வேட்டி விளம்பரங்களில்.

அரசியல்வாதிகளால் மதிப்பு குறைந்ததா வேட்டிக்கு, இல்லை ஆங்கிலமோகத்தால் மறைந்தா? என்ற பட்டி மன்றம் வேண்டுமானாலும் நடத்தலாம்.

இப்படித்தான்  இருக்க வேண்டும் ஆம்பிளே
இங்கிலீஷு படிச்சாலும் இன்பத் தமிழ்நாட்டிலே
இப்படித்தான்  இருக்க வேண்டும் ஆம்பிளே

என்று வேட்டி கட்டச்சொல்லி  பாட்டெழுத 50 ஆண்டுகளுக்கும் முன்னரே ஏனோத் தோன்றவில்லை எந்தக் கவிஞருக்கும்.

..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Dec 29, 2013, 4:19:50 AM12/29/13
to vall...@googlegroups.com
பட்டிமன்றத்தைத் துவக்கவும், அமுதமொழியாள்.
2013/12/29 தேமொழி <them...@yahoo.com>

--

Nagarajan Vadivel

unread,
Dec 29, 2013, 5:19:10 AM12/29/13
to vallamai
2013/12/29 தேமொழி <them...@yahoo.com>
வேட்டி கட்டும் விளம்பரத்திற்கும் கேரள நடிகர்களையே காட்ட வேண்டிய அவல சூழ்நிலை தமிழக வேட்டி விளம்பரங்களில்.
 
வேட்டி கேரளாவில் தவிர்க்கமுடியாத பாரம்பரியத்துடன் இணைந்தது. ஆனால் அங்கே வேட்டி சாதிப் பிரிவினையை அடையாளம்காட்டும் ஆடை.  கீழ் சாதியினர் உயர் சாதியினர்போல் தரையைத் தொடும் அளவுக்கு​​ கட்ட முடியாது.  மடித்துத் தான் கட்டவேண்டும்.  கேரளா போன்று சாதி அடையாளமாகத் தமிழகத்தில் வேட்டி இருந்ததில்லை

அரசியல்வாதிகளால் மதிப்பு குறைந்ததா வேட்டிக்கு, இல்லை ஆங்கிலமோகத்தால் மறைந்தா?

​திராவிட அரசியலில் புதிதாக அறிமுகமான வேட்டி உருவும் வித்தையால் வேட்டியைத் தவிர வேறெதுவும் கட்டத் தெரியாத அரசியல் வாதிகளும் தற்காப்புக்காக ஆங்கில உடை அணிந்தனர்.  

தெபா

வேந்தன் அரசு

unread,
Dec 29, 2013, 8:22:15 AM12/29/13
to vallamai
இந்த நெசவாளர்களை குழாய்ச்சட்டை நெய்ய சொல்லலாமே. தேவை இல்லாததை ஏன் நெய்யணும்?

உண்மையில் இரட்டை மடிப்பு வேட்டி அமெரிக்க குளிரை தாங்குது. மடிப்புக்கு இடையில் உள்ள காற்றுவெளி உடம்பு சூட்டை வெளயேறாமல் கவசிக்கும், மோட்டர் சைக்கிள் ஓட்டும்போதுதான் இன்னல். இவுளி மறவர்கள் எப்படி உடுத்தினார்கள்?


29 டிசம்பர், 2013 2:19 முற்பகல் அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Dec 29, 2013, 1:57:37 PM12/29/13
to vall...@googlegroups.com

///கீழ் சாதியினர் உயர் சாதியினர்போல் தரையைத் தொடும் அளவுக்கு​​ கட்ட முடியாது.  மடித்துத் தான் கட்டவேண்டும்.///

எதிலும் தங்களுடைய ஆணவத்தைக் காட்ட நம் நாட்டவரால் முடியும். 

நடை உடை பாவனை மொழி எதிலும் மற்றவரைவிட தாங்கள் ஏதோ ஒருவிதத்தில் உயர்வு என்று வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விருப்பம், இந்த வாக்கியம் இரு பாலருக்கும் பொதுவானத்து. 

நடை = ஒரே பாட்டில் பணக்காரராக ஆனால் ஏதோ ஒரு கார் கிடையாது, உடனே மெர்சிடீஸ் பென்ஸ் கார்தான். 

பாவனை = தப்புத்தப்பாய் தமிழ்  பேசுபரும், தடங்கலில்லாமல் ஆங்கிலம் பேசுவோரும் எந்த சூழலிலும் தப்பித்துக் கொள்வார்கள் என்றொரு வசனம் வந்ததாம் சமீபத்தியப் படமொன்றில். 


///திராவிட அரசியலில் புதிதாக அறிமுகமான வேட்டி உருவும் வித்தையால் வேட்டியைத் தவிர வேறெதுவும் கட்டத் தெரியாத அரசியல் வாதிகளும் தற்காப்புக்காக ஆங்கில உடை அணிந்தனர். ///

இந்த ஆடை உருவும்  பண்பாட்டை எப்படி பெருமையுடன் வெளியில் சொல்லிக்கொள்வது என்று தெரியவில்லை பேராசிரியரே. 

:(((

..... தேமொழி

தேமொழி

unread,
Dec 29, 2013, 2:15:09 PM12/29/13
to vall...@googlegroups.com

வேட்டி சேலைகளைப் பல்வேறு விதமாக  அணியும் வழக்கம்தான்  இருந்ததே வேந்தே.
என் அம்மா அப்பா காலத்தில்தான் அனைவருக்கும் ஒரே போன்று என்று அணியும் முறை வந்தது, கல்வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம் காரணமாக, அநேகமாக அறுபதுகளில்.  

ஆடை அணியும் விதத்தை வைத்தே ஒருவரது பின்னணியைக் கூறலாம்.  பஞ்ச கச்சம் ஆண்களுக்கு. பின் கொசுவம், மடிசார் எனப் பலப்பல அணியும் முறை.  இவ்வாறு அணிவது எப்படி என்ற கலையும் இப்பொழுது மறைந்திருக்கலாம்/மறந்திருக்கலாம் அல்லது விரைவில் மறைந்துவிடும்.

குதிரையேற்றதிற்கு ஆடை  அணியும் முறை, படங்களில் பார்ப்பதுதான்....


66 ஆண்டுகளுக்கு முன்னரே இதனை ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.

மாறுதலுக்குக் கட்டுப்பட்டவனே மனிதன்

நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில் - என்னையே மகா பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்? மாறுதலுக்கு வளைந்துகொடாத மனிதன் மாயவேண்டியதுதானே! இதுவரை மாறுதலை எதிர்த்து வெற்றிபெற்றவர்கள் கிடையாதே! நமது போக்குவரத்துச் சாதனங்கள், நமது வாத்தியங்கள், நமது உடைகள், நமது ஆபரணங்கள் இவையெல்லாம் இன்று எவ்வளவு மாறுபட்டுவிட்டன? 20 வருடத்திற்கு முன் எத்தனை பேர் கிராப் வைத்திருந்தார்கள் - இன்று எத்தனை பேர் குடுமி வைத்துள்ளார்கள்?

இப்பெரிய கூட்டத்தில் குடுமி வைத்தவர்கள் எத்தனை பேர் என்று சுலபத்தில் எண்ணிவிடலாமே! இயற்கை மாறுதலால் ஏற்பட்டதா இது? அல்லது சர்க்கார்தான் குடுமி வைத்திருக்கக்கூடாதென்று சட்டம் போட்டதா? இல்லையே! இன்று எத்தனை பேர் நெற்றியில் பூச்சுடன் காணப்படுகிறார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாமே! பூச்சுடன் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றா அரசு உத்தரவு போட்டுப் பூச்சுகள் மறையும்படி செய்யப்பட்டது? இல்லையே! காலம் மாறிவருகிறது; அம்மாறுதலுக்குக் கட்டுப்பட்ட மனிதனும் தானாக மாறுகிறான். பணக்காரர்களின் உயர்வெல்லாம் இன்று எங்கு போயின? அவர்களுடைய பிடிவாதம்தான் எங்கே போயிற்று?

முன்பெல்லாம் தாய்மார்கள் எத்தனை முழம் சேலை கட்டினார்கள்; இப்போது எத்தனை முழம் சேலை கட்டிக்கொள்கிறார்கள்? 18 முழத்துக்குக் குறையாது சேலை கட்டுவதுதான் பெருமை என்று கருதிய தாய்மார்கள், இன்று 6 கெஜத்துக்கு மேல் கட்ட கூச்சப்படவில்லையா? அன்று மட்டும் அவர்கள் தாமாகவா விரும்பினார்கள், 9 கெஜ சேலையை? சேலை சுற்றுக் குறைந்திருந்தால் எங்கே ஓடிவிடுவார்களோ என்று ஆண் பிள்ளைகள் செய்த தந்திரம் அது! அன்றிருந்த கட்டுப்பாடு அவ்வளவு! இன்று பெண்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு இல்லை.

எனவே, நைசான சேலை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். நகைகளில்தான் எவ்வளவு மாற்றம்! அன்று தங்கச் சங்கிலி எல்லாம் எருமைமாட்டுக் கழுத்து இரும்புச் சங்கிலிபோல் இருக்கும்; இன்று சங்கிலி கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத அளவுக்கு நைசாக இருக்கிறதே! சட்டம் போட்டா இம் மாறுதல் செய்யப்பட்டது? இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் உதாரணம் காட்டிக்கொண்டே போகலாமே!. (விடுதலை - 24.10.1948)

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Dec 29, 2013, 3:59:07 PM12/29/13
to vallamai
நன்றி தேமொழி

யாரேனும் ஒப்பனை கலைஞரிடம் வேட்டியை புட்டகம் ஆக கட்டிக்கொள்ள கற்றிடவேண்டும்.


29 டிசம்பர், 2013 11:15 முற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

தேமொழி

unread,
Dec 29, 2013, 5:20:28 PM12/29/13
to vall...@googlegroups.com

:)))


How to wear Dhoti


என்று யூடுயூபில் தேடினால் நிறைய பேர் வேட்டி கட்ட சொல்லித் தருகிறார்கள் வேந்தே.
http://www.youtube.com/watch?v=HbB1Z0CLXn0

எந்த ஆடையாக இருந்தாலும் சட்டென்று எடுத்து மாட்டிக் கொண்டு பட்டென்று கிளம்ப வசதியாக இருக்க வேண்டும்.
பாத்ரூம் உபயோகிக்க வசதியாக, நடக்க, ஓட, இயல்பாக உட்கார வசதியாக இருக்க வேண்டும். என் வாக்கு பேண்டுக்கே. இருபாலருக்கும்.
கொஞ்சம் வயதானால் இருவருமே பைஜாமா ஜிப்பா போடலாம். தொந்தியை மறைக்கவும் செய்யுமில்லையா :D

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Dec 29, 2013, 6:57:19 PM12/29/13
to vallamai
சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பஞ்சகச்சம் கட்டுவது எப்படி பின் கொசுவம் வைத்துக் கட்டுவது எப்படி என்று எழுதியுள்ளேன்

மறைந்துவரும் இன்னொரு ஆடை லுங்கி

சென்னைக்கு அருகாமையில் உள்ள புலிகட் என்ற பழையகட் லுங்கிகள் உலகப் புகழ் பெற்றவை கிழக்காசிய முழுவதும் அதன் தாக்கம் பரவியது. பர்மாவின் தேசிய ஆடையே லுங்கிதான்

இப்போது லுங்கி மறைந்து ட்ராக் சூட் கல்ச்சர் ஊள் பரத்துகிறது.  
ஆஃப்ரிக்காவில் கள்ளச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த ப்ளீடிங் மட்ராஸ் மீண்டும் பிறவி எடுத்து பிராண்டட் ஆடையாக விற்பனயாகிறது.  ஒரு சட்டையின் குறைந்தவிலை ரூ.3000

காதியில் புதுமை புகுந்து டங்கு டங்கென்று குத்தாட்டம் போடுகிறது.  பலவண்ணம் பல டிசைன்கள் புதிய காதித்துணி வந்தால் அங்கிருந்து அடியேனுக்க்த் தகவல் வரும்

கைத்தறி வேட்டிகள் அணிவது 1960-ல் திராவிடக் கட்சியினரின் சந்தைப்படுத்தலால் அதிகம் பழக்கத்தில் இருந்தது.  பின்னர் மில் வேட்டிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து கைத்தறி வேட்டிகள் மவுசு இழந்தது

தெபா


2013/12/30 தேமொழி <them...@yahoo.com>

வேந்தன் அரசு

unread,
Dec 29, 2013, 10:14:41 PM12/29/13
to vallamai



29 டிசம்பர், 2013 2:20 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:


:)))


How to wear Dhoti


என்று யூடுயூபில் தேடினால் நிறைய பேர் வேட்டி கட்ட சொல்லித் தருகிறார்கள் வேந்தே.
http://www.youtube.com/watch?v=HbB1Z0CLXn0

எந்த ஆடையாக இருந்தாலும் சட்டென்று எடுத்து மாட்டிக் கொண்டு பட்டென்று கிளம்ப வசதியாக இருக்க வேண்டும்.
பாத்ரூம் உபயோகிக்க வசதியாக, நடக்க, ஓட, இயல்பாக உட்கார வசதியாக இருக்க வேண்டும். என் வாக்கு பேண்டுக்கே. இருபாலருக்கும்.
கொஞ்சம் வயதானால் இருவருமே பைஜாமா ஜிப்பா போடலாம். தொந்தியை மறைக்கவும் செய்யுமில்லையா :D


தொந்தி  அப்படின்னா என்னங்க?
 

Anna Kannan

unread,
Dec 29, 2013, 10:30:21 PM12/29/13
to Vallamai

வேட்டியில் சில திருத்தங்கள்

http://annakannan.blogspot.in/2009/10/3.html?m=1

S NEELAKANTAN

unread,
Dec 30, 2013, 12:55:24 AM12/30/13
to vall...@googlegroups.com
வேட்டி கட்டுவதில் ஜாதியை  நுழைக்காதீர்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் வேட்டி கட்டுவதில் வித்தியாசம் இருக்கிறது.

கன்னியாகுமரி திருநெல்வேலி தமிழர்கள் வேட்டியின் கரை வலதுபுறமாக வருமாறு கட்டுவார்கள்  

மற்ற தமிழர்கள் இடதுபுறம் கரை வருமாறு கட்டுவார்கள் 

சில மாவட்டங்களில் அரை வேட்டி , முக்கா வேட்டி கட்டுவர்ர்கள் 

சில தமிழர்கள் வேட்டியின் இரண்டு கரையும் தைத்துவிட்டு கரை இரண்டும் நடுவில் வருமாறு கட்டுவார்கள்

இப்படி வித்தியாசங்கள் இருக்கும்போது வேட்டி கட்டியவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று ஒத்துக்கொள்வது தான் நியாயம் 

நம்ம வடிவேல் வேட்டி கட்டுவதை பார்த்தால்  சிரிப்பு வராமல் 
இருக்குமா  

வேட்டியின் கரைவத்து அவர் எந்த கட்சிக்காரர் என்று சொல்லமுடியும் . கரையே இல்லாத கச்சை வேட்டி கட்டுவோரும்   உண்டு 




On 30 December 2013 09:00, Anna Kannan <annak...@gmail.com> wrote:

வேட்டியில் சில திருத்தங்கள்

http://annakannan.blogspot.in/2009/10/3.html?m=1

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--



 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Dec 30, 2013, 1:36:50 AM12/30/13
to வல்லமை

2013/12/30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

கன்னியாகுமரி திருநெல்வேலி தமிழர்கள் வேட்டியின் கரை வலதுபுறமாக வருமாறு கட்டுவார்கள்  

மற்ற தமிழர்கள் இடதுபுறம் கரை வருமாறு கட்டுவார்கள் 

இது டதவறு.  எங்கள் வீட்டிலே நாங்கள் நான்கு சகோதரர்கள்.  இருவர் தலைப்பு வலது புறம் வருமாறும் இருவர் இடது புறம் வருமாறும் வேட்டி கட்டுவோம்.  நால்வருமே தமிழர்கள்தான்!  


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


S NEELAKANTAN

unread,
Dec 30, 2013, 1:49:56 AM12/30/13
to vall...@googlegroups.com
கல்பட்டு சார் 

எது சரி எது தவறு என்பதை வேட்டி கட்டுபவர்கள் தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர நமக்குள் சர்ச்சை செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம் 

இப்படி வித்தியாசங்கள் இருக்கும்போது வேட்டி கட்டியவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று ஒத்துக்கொள்வது தான் நியாயம் 

நான் ஒத்துக்கொள்கிறேன்  


2013/12/30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--



 

bhuvaneshwar.d

unread,
Dec 30, 2013, 2:09:39 AM12/30/13
to vall...@googlegroups.com, thiru thoazhamai
//ஆடை அணியும் விதத்தை வைத்தே ஒருவரது பின்னணியைக் கூறலாம்.//
இது சரி.

//பஞ்ச கச்சம் ஆண்களுக்கு. பின் கொசுவம், மடிசார் எனப் பலப்பல அணியும் முறை.  இவ்வாறு அணிவது எப்படி என்ற கலையும் இப்பொழுது மறைந்திருக்கலாம்/மறந்திருக்கலாம் அல்லது விரைவில் மறைந்துவிடும்.//

மடிசாரும் பஞ்சகச்சமும் மறைய வேண்டும் என்ற sinister எண்ணம் எதற்கு, தேமொழி? இந்த வரி கண்டிக்கத்தக்கது. 

யார் என்ன சொன்னாலும், இவற்றை அணியும் முறை மறக்கப் படப் போவதில்லை. தொன்றுதொட்டு வந்த கலாச்சாரமும் அழியப் போவதில்லை. வார்த்தைகளில் வெறுப்பை உமிழ்ந்து கக்கிக் காட்டும் "பெருங்குணம்" இல்லாததால், அன்புடன் அமைகிறேன்.

அவரவர் பாங்கு அவரவர்க்கு. 

இதில் ஜாதியை ஏன் நுழைக்க வேண்டும்?
 
வேஷ்டி (சுற்றி வேஷ்டிதமாக (சுற்றப்பட்டு) அணிவதால் வேஷ்டி என அழைக்கப் பட்டது. தமிழில் வேட்டி).  

புவனேஷ்வர் 

தேமொழி

unread,
Dec 30, 2013, 3:11:07 AM12/30/13
to vall...@googlegroups.com

/////பஞ்ச கச்சம் ஆண்களுக்கு. பின் கொசுவம், மடிசார் எனப் பலப்பல அணியும் முறை.  இவ்வாறு அணிவது எப்படி என்ற கலையும் இப்பொழுது மறைந்திருக்கலாம்/மறந்திருக்கலாம் அல்லது விரைவில் மறைந்துவிடும்.///

மடிசாரும் பஞ்சகச்சமும் மறைய வேண்டும் என்ற sinister எண்ணம் எதற்கு, தேமொழி? இந்த வரி கண்டிக்கத்தக்கது. ////




புவனேஷ்வர் உங்களுக்கு என்னிடம் ஏதோ எரிச்சல் என்று தெரிந்தாலும் அது ஏன் என்றும், உங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன் என்பதும் எனக்கு இதுவரை புரியவில்லை...நிற்க...

என்னமாகத் திரிக்கிறீர்கள் நான் சொன்னதை.

நான் குறிப்பிட்ட பின்கொசுவத்தை ஏன் விட்டீர்கள்? (இதிலிருந்தே  உங்கள் நோக்கம் புரிகிறது)




யாருப்பா இங்க...இந்தப்  படத்தில் உள்ள பெண்கள் போல பின்கொசுவம் வைத்து சேலைக் கட்டியப் பெண்மணிகளின் வழித் தோன்றல்கள்???
வாங்க எல்லாரும் வாங்க.... உங்கள் குலத்தையும் நான் ஒழிக என்று சொல்லியும் இப்படி  கம்முனு இருந்தால் எப்படி.? என்ன ஒரு கெட்ட புத்தி எனக்கு?

அட... எங்க பாட்டி கூட இதுபோல பின்கொசுவம் வைத்துதான் சேலை கட்டினார்கள், ஐயோ ..போச்சே ...போச்சே... எங்கள் குலம் அழியப் போவுதே. 



இந்த குழுமங்களில் ஒருசிலர்  இதுவரை மனித வரலாற்றில் நடந்ததை பொதுவாகப் பேசினாலே, ஏனோ இனக்கலவரக்காரர்  என்று பேசுபவர்களுக்கு பட்டம் கொடுக்கத் துடிக்கிறார்கள்.  இது அவர்களது மனப்பகுவமின்மையைத்தான் காண்பிக்கிறது.

பொதுவாக இதுபோன்ற மனப்பக்குவம் இல்லாதவர்களை  நான் விலக்கிவிடுவதோ, அல்லது சொல்பவர்க்குரியவர் இடமாக இருந்தால் அங்கிருந்தே  விலகிவிடுவது என்பது என்  கொள்கை.  அதனால்....
நான் இத்துடன் உங்களிடம் இருந்து விலகி விடுகிறேன்....எங்கிருந்தாலும் நீடூடி வாழ்க. 

..... தேமொழி



Bhuvan Vellore

unread,
Dec 30, 2013, 3:25:56 AM12/30/13
to vallamai
விலகுவதும் விலகாததும் அவரவர் விருப்பம்.

நாம்..... மனதில் பட்டதை சொல்லுவோம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பேதைமை அறியாப் பிள்ளை!

பின்கொசுவத்தை நான் விட்டது ஏனெனில், அதைப் பற்றி எனக்கு தெரியாது. எனக்குத் தெரிந்த விஷயத்தைப் பற்றித்தான் நான் பேச இயலும். தெரியாத விஷயத்தை நான் பேசப்போக, அது பிறர் மனத்தைப் புண் படுத்தி விடக் கூடும் என்ற அச்சம். 
இது எனது நோக்கம் என உங்களுக்கு புரிந்தது மகிழ்ச்சி.

அதென்ன "நீடூடி" வாழ்க? நீடு + ஊடி வாழ்க என சொல்கிறீர்களோ? அதாவது எப்போதும் ஊடலோடு வாழ்க என்ற பொருள் வருகிறதே?

இதை நான் திரிக்கவில்லை. தாங்கள் எழுதி இருப்பதே. 

ஒரு வேளை எழுத்துப் பிழையோ? அங்ஙனமாயின் அது பொறுக்கப்பட்டதுயெனக் கொள்க.   

விரிவாக விளக்கங்கள் அளிக்க இது "வகுப்பறை" அல்ல. :)))))))))))))))))))))))))))))))))))
தாங்களும் வாழ்க. :)

சொல்லுவதைச் சொல்லி, 
நாம் அமைதி கொள்கிறோம்.

புவனேஷ்வர் 

Best Regards,
Bhuvaneshwar Dharmalingam


2013/12/30 தேமொழி <them...@yahoo.com>

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/VEYxYiNyCxo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

S NEELAKANTAN

unread,
Dec 30, 2013, 3:41:43 AM12/30/13
to vall...@googlegroups.com
தேமொழி அம்மா கோபித்துக்கொள்ளாதீர்கள் 4 முழ வேட்டியை இரண்டு விதமாக தான் கட்டமுடியும் 8/9 முழ வேட்டிய பஞ்சகச்சமாக ஒரு விதமாக த்தான் கட்டமுடியும்  

அதே சமயம் 6 முழ /9 முழ புடவையை வித விதமாக பெண்களால் தான் கட்டமுடியும் கொசுவத்தை பின்னால் வைத்துத்தான் கட்டுவார்கள் கொசுவம் வைத்த பெண்களுக்கு கோபம் அதிகம் என்று யார் சொல்லியோ கேட்டிருக்கிறேன் 

இன்றைய கால கட்டத்தில் பஞ்சாபி ட்ரஸ்ஸில்  கூட பஞ்சகச்சம் வந்துவிட்டது தமிழ் தெலுங்கு, கன்னடம், மராத்தி, மார்வாடி, பஞ்சாபி, பெங்காளி போன்ற எல்லா மாகாணங்களிலும் கொசுவம் வைத்த (பின்கொசுவம்) வைத்து உடுத்துவார்கள் 

வேட்டியையும் / பஞ்சகச்சத்தையும் கொசுவ புடவையுடன் கம்பையர் பண்ணாதீர்கள் 


2013/12/30 Bhuvan Vellore <bhuvane...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--



 

தேமொழி

unread,
Dec 30, 2013, 4:11:51 AM12/30/13
to vall...@googlegroups.com

///வேட்டியையும் / பஞ்சகச்சத்தையும் கொசுவ புடவையுடன் கம்பையர் பண்ணாதீர்கள் ///


குதிரை ஏற்றத்திற்கு வசதியாக உடையை ஆண்களோ பெண்களோ எப்படி அக்காலத்தில் அணிந்திருந்தார்கள்  என்றுக் குறிப்பிட விரும்பி, ஆண்களும் பெண்களும் (வேட்டியையோ, புடவையையோ) உடுத்தும் பல முறைகளைக் குறிப்பிட்டது எப்படி ஜாதி என்ற வகையில் பார்க்க முடிகிறது என்பது முதலில் புரியவில்லை.  நான் எந்த ஜாதியின் பெயரையும் எங்கும் குறிப்பிடவே இல்லையே. 

அத்துடன் நான் புடவையையும் வேட்டியையும்  ஒப்பிடவும் இல்லை.  இழையை இடையில் படிப்பதால் ஏற்படும் குழப்பமோ?
உடை அணியும் முறை மாறிவருகிறது என்பதைத்தானே குறிப்பிட்டேன்.   இது யாவரும் அறிந்த உண்மைதானே. அத்துடன் நானும் யாரிடமும் கோபமும் கொள்ளவில்லையே. நீ சொல்வது சரியில்லை என்று சொன்னால், இல்லை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருகிறீர்கள் என்று மறுத்து சொன்னால் அது கோபம் கொள்வதில் அடங்குமா? அத்துடன் பொத்தாம் பொதுவில் பெண்கள் அனைவரையுமே கோபக்காரர்கள் என்று வேறு சாடுவதும் ஏன் எனத் தெரியவில்லை.

(மீதி விவாதத்தை நாளைப் பார்க்கலாம், மணி இரவு ஒன்று, நான் தூங்கப் போக வேண்டும்).
Reply all
Reply to author
Forward
0 new messages