புலவர் செ. இராசு அவர்களின் தமிழ் வாழ்க்கை

65 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 9, 2023, 1:08:03 AM8/9/23
to Santhavasantham
புலவர் செ. இராசு அவர்களின் தமிழ் வாழ்க்கை

புலவர் செ. இராசு அவர்கள் 02.01.1938 இல் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு
(பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர்
ந.சென்னியப்பன், நல்லம்மாள். இவர்தம் மனைவியார் பெயர் கெளரி அம்மாள்.
மூன்று ஆண்மக்கள் இவருக்கு வாய்த்தனர். கணிப்பொறித் துறையில் இவர்கள்
பணிபுரிகின்றனர்.

தொடக்கக் கல்வியை(1-5) திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல்,
வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம், இலண்டன் மிசன் பள்ளி(ஈரோடு)
செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க்
கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவு செய்தவர் (1955-59). சென்னைப்
பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை
காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும்
தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி(1959), 1980-82 இல் தமிழ்நாடு
அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு, தொல்லியல்
துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை
மேற்கொண்டிருந்தார்.

இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள்
இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள்
கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல்,
திருப்பணிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.

இவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை (4 முறை) நாடுகளுக்குக் கல்விப்
பயணமாகச் சென்று வந்தவர்.

1959 இல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக்
கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான
ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம்
சுவடிப்பயிற்சி, பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப்
பயிற்சி, தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா. நாகசாமியிடம்
தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன்
பட்டறிவை வளர்த்துக்கொண்டவர்.

இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப்
பிழையின்றி, பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர். கல்வெட்டு,
செப்பேடு, சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு
செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளி உலகிற்கு
வழங்குவதில் வல்லவர். இவ்வகையில் இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல்
அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன. செய்திகள் 100 மேல்
வந்துள்ளன.

பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம்
நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும்
செயல்பட்டவர். ஆவணம் என்ற இதழ் கொண்டுவரக் காரணமானவர். பல்வேறு
அமைப்புகளில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிபவர்.ஆசிரியப்பணி
புரிந்த பொழுது மாணவர்களை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு
அழைத்துச் சென்று அவர்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டியவர்.

பல கல்லூரிகளில் இவரின் முயற்சியால் தொல்லியல் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டுள்ளது. இவர்தம் கண்டுபிடிப்புகளுள் பல இவரின் பெருமையை
என்றும் நினைவுகூரும். அவற்றுள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர்
இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்.
இந்தியாவில் இதுவே முதலாவது இசைக் கல்வெட்டாகும்.

சங்க காலத்தில் கொடுமணம்(இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து அகழாய்வு
செய்து உரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம்
வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த
பணியாகும். தென்னிந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல்
கண்டறிந்தமையும் குறிப்பிடத் தகுந்த பணியேயாகும்.

சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து
அறிவித்த இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து பூனா
செல்லவிருந்த தஞ்சை மராட்டியர்களின் மோடி (மோடி என்பது மராட்டிய மொழியின்
சுருக்கெழுத்தாகும்) ஆவணங்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு
வந்த முயற்சியும் இவருடையது ஆகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவருடைய நூல் வெளியிடப்பட்டது.
ஆய்வாளர்கள் நிகழ்கால வரலாற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற
எண்ணத்தில் கண்ணகி கோட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும்
வெளியிட்டுள்ளார். இவர் தம் உழைப்பில் கொங்கு, சுவடி, ஆவணம், தேனோலை,
கொங்குமலர் உள்ளிட்ட இதழ்கள் பொலிவு பெற்றன.
http://muelangovan.blogspot.com/2023/08/blog-post_9.html

N. Ganesan

unread,
Aug 10, 2023, 10:23:09 AM8/10/23
to
இந்தியாவில் செய்யுள் உள்ள ஒரே நடுகல் கல்வெட்டு:
 பழமங்கலம் பாடற் கல்வெட்டு

புலவர் செ. இராசு என் 35 ஆண்டுக்கால நண்பர். பொள்ளாச்சி வீட்டில் பலமுறை தங்கியுள்ளார். பேராசிரியர். முனைவர் பட்ட ஆய்வேடு “கொங்குநாட்டில் சமணம்”, மதுரைப் பல்கலை. நான் அச்சிட்டுதவினேன். இப்பொழுது நான்காம் பதிப்பு. NCBH வெளியீடு. திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை கொங்குநாட்டு வரலாற்று நூல். பல ஆண்டுகளாக அச்சிடாமல் இருந்தது. அதுவும், பழனித் திருத்தல ஆவணங்களும் வெளிவர உதவியுள்ளேன். அவரது பிரதம மாணாக்கர்களில் பேரா. கா. ராஜன் தலைசிறந்த தொல்லியலர். 11-ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகத்திலேயே முதன்முறையாக இரும்பு நுட்பமும், முக்கியமாக எஃகும் தமிழர் 4000 ஆண்டு முன்பாகக் கண்டறிந்தனர் என்பதை விஞ்ஞானபூர்வமாகக் கணித்து அறிவித்தார். புலவர் செ. ராசு கண்ட முக்கிய தொல்லியல் களமாக, கொடுமணலை ஆண்டுதொறும் தோண்டி அகழாய்வு நிகழ்த்தியவர் முனைவர் கா. ராஜன். தமிழகத்திலே பானையோடுகளில் கிடைக்கும் தமிழ் பிராமியில் அனேகம் கொடுமணத்தில் தான் கிடைக்கின்றன. 11-ம் ஆராய்ச்சி மாநாட்டில், கொங்குநாட்டில் சமணம் 15 பிரதி வாங்கி, தமிழன்பர்கட்கு வழங்கினேன். இவ்வளவு விரைவாக அதன் ஆசிரியர் மறைவார்கள் என நினைக்கவில்லை. தம்பிகள் ஜெயப்பிரகாஷ், செந்தில்குமார், ஜெயமோகன் மூவருக்கும் ஆழ்ந்த அநுதாபங்கள்.

பல இடங்களுக்குச் சென்று நேரில் பார்த்துள்ளோம். கல்வெட்டைப் படித்து விளக்குவார். எங்கள் பெரியப்பா அரண்மனை - ஊற்றுக்குழி காலிங்கராயர்கள், அவர்கள் 700 ஆண்டு முன் காலிங்கராயன் கால்வாய் வெட்டிய செய்தி கொண்ட கல்வெட்டு (அகத்தூர் அம்மன் ஆலயம்) படித்துக்காட்டுவார். நீதிபதி ரா. செங்கோட்டுவேலன், நான், புலவர் ராசு அழைக்க, மேல்கரைப்பூந்துறை நாட்டுப் பழமங்கலம் என்ற ஊரின் நத்தக்காட்டில் உள்ள 10-ம் நூற்றாண்டு நடுகல்லை ஆய்வு செய்து காட்டினார். நானாதேசித் திசை ஆயிரத்து ஐநூற்றுவருக்கு இங்கு நானாதேசி அடைக்கலம் ஒன்று இருந்துள்ளது . புலவர் ராசு கண்டறிந்த கல்வெட்டு அது. பல நடுகற்கள் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் உண்டு. கொங்குநாட்டிலே தான் நடுகல்லைக் கோயிலாக வணங்கும் மரபு இன்னமும் இருக்கிறது. கிடைத்த நடுகற்கள் எல்லாவற்றிலும், பழமங்கலம் கல்வெட்டில் தான் பாடல் கல்வெட்டு உள்ளது. நடுகற்கள் எல்லாவற்றிலும் வெண்பா வடிவில் உள்ள கல்வெட்டு இஃதொன்றே. சோழ மகாராசாவுக்கோ, இன்னொரு அரசனுக்கோ படைவீரனாக, வாள்சண்டையில் வலியவனாக இருந்தவன் “கரையகுலச் சொக்கன்”. உறையில் இருந்து எஃகு வாளை உருவிய நிலையில் உள்ளான். அவன் இறந்தபோது, குடும்பத்தாரோ, பங்காளிகளோ வெண்பா வடித்து நடுகல் எடுத்து வழிபட்டுள்ளனர். இன்றும் வழிபாட்டில் உள்ள நினைவுச்சின்னம்-ஊர்க்கோயில் இது. புலவர் செ. ராசு அவர்கள் வாசித்துக் காட்டியவாறு தருகிறேன். பொதுவாக, பல அச்சு நூல்களில் இவ்வெண்பாவின் ஈற்றடியைப் பிழையுடன் அச்சிட்டிருப்பார்கள். உ-ம்: நடன. காசிநாதன், கல்வெட்டியல், தொல்லியல் துறை வெளியீடு. etc., ஈரோடு வட்டத்தில் உள்ளது இந்த நடுகல் பாடற் கல்வெட்டு.
 
 பழமங்கலம் நடுகல் கல்வெட்டு (வேடர்சாமி சிறுகோயில்)
 --------------------------------------------
 
    வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
    சாய்த்தமருள் வென்ற சயம்பெருக - சீர்த்தபுகழ்
    நிக்குவணம் கற்பொறிக்கப் பட்டான் கரையகுலச்
    சொக்கனெந் தய்வுலகில் தான்.

    இக்கற்பொறி இரக்ஷிப்பான் ஶ்ரீபாதம் எந்தலைமேலே
   
   விளக்கம்: புகழ்வாய்ந்த பழமங்கலத்தில் போர் நடைபெற்றது. எதிரிகளை வாட்போரில் எதிர்த்தான் சொக்கன். உலகிலே கரைய குலத்தானாகிய சொக்கனின் புகழ் என்றும் நின்று நிலவும்படி நடுகல்லில் அவன் வீரவுருவைப் பொறித்தனம். அவன் எம் தந்தை (எந்தை/முன்னோன்). 

எந்தை “எந்தய்” என எழுதப்பட்டுள்ளமை காண்க.

பிற பின்,
நா. கணேசன்

seshadri sridharan

unread,
Aug 10, 2023, 10:50:02 PM8/10/23
to வல்லமை

ன் குறிப்பு: வாழ்ந்த புகழ்மங்கலத்தில் படையெடுத்து வந்த பகைவரை வீழ்த்திய போரில் (அமர்) வெற்றி பெருக வென்று அவன் புகழ் நிலைக்கும் வண்ணம் அவன் வீரம் கல்லில் பொறிக்கப்பட்டது. அவன் கரைய குலத்தில் பிறந்த சொக்கன் எனப்பட்ட என் தந்தையாவான். இக்கல்லை காப்பவன் பாதம் என் தலைமேல் வைக்கப்படுவதாக. என் அவன் பிள்ளை இக்கல்லை நாட்டினான்.  

    இக்கற்பொறி இரக்ஷிப்பான் ஶ்ரீபாதம் எந்தலைமேலே
   
   விளக்கம்: புகழ்வாய்ந்த பழமங்கலத்தில் போர் நடைபெற்றது. எதிரிகளை வாட்போரில் எதிர்த்தான் சொக்கன். உலகிலே கரைய குலத்தானாகிய சொக்கனின் புகழ் என்றும் நின்று நிலவும்படி நடுகல்லில் அவன் வீரவுருவைப் பொறித்தனம். அவன் எம் தந்தை (எந்தை/முன்னோன்). 

எந்தை “எந்தய்” என எழுதப்பட்டுள்ளமை காண்க.

பிற பின்,
நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdUo8%2BJW9a1O9C1y9YzfrpmHGi-jC7ysgg64oUF5iKiKw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages