"கட்..கட்..கட்"
_____________________________________
காமிரா ஓடிக்கொண்டிருக்கிறது.
"ஏம்மா! உனக்கு ஓம் புருசனை விட
அந்த நடிகரைத் தான்
புடிக்கும்கிறயே...
அவரையே கல்யாணம் பண்ணிக்கிறயா?
என்னது?
எடு செருப்ப.
வெளக்குமாறு பிஞ்சுரும்.
ஏய்யா!
கோடிக்கணக்கான பொண்ணுக
ராமனைப்புடிக்கும்
கிருஷ்ணனைப்புடிக்கும்
பிள்ளையாரைப்புடிக்கும்
சிவனை ரொம்ப ரொம்ப புடிக்கும்னு
உருகி உருகி கும்பிட்றாங்களே
அவங்கள்ட்ட
இந்த கேள்விய கேட்டுப்பாருய்யா..
அவ்ளதான்..
அப்புறம் இங்க எந்த கோயிலும்
இருக்காது.
எல்லாம் தூள் தூள்..தான்.
அது வேற வாய்..
இது நாற வாய்லாங்கெடயாது..
எல்லாம் ஒரே வாய்ஸ் தான்.
சரி..
இந்திரன்னு சொல்லிட்டு
வேதத்துல
சுலோகங்களா
சுருட்டித்தள்ளிருக்கீங்களே..
அவனப்பத்தி...கேக்ரியா?
சதி அனுசூயா கதையிலே
இன்னும்
படா படா சமாச்சாரம்லாம்
இருக்கு.
....................
இந்த சாக்கடைகளைத்தானே
பெத்துப்போட்டிருக்கிறேன்..
"பாரத் மதா கி ஜய்ய்ய்"
அவள் ஆவேசத்துடன்
சிலுப்பிக்கொண்டு நின்றாள்!
"கட்..கட்..கட்"
வியர்த்து விறு விறுத்து அலறுகிறார்.
இயக்குநர்
"பேக் அப்" என்றார்
_______________________________________
சொற்கீரன்.