கழுகுமலை

2,033 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 22, 2017, 4:31:30 PM10/22/17
to மின்தமிழ், vallamai
2017-10-16 0:18 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கழுகு மலை என பெயரிடுவது எங்கும் பலஇட டத்தும் நிகழலாம் கழுகுகள் மனிதர் நடமாட்டம் இல்லாத நெடும் மலை குன்றுகளின் உச்சியில் கூட்டுக்கட்டி தன இனத்துடன் வாழும் என்பது பலரும் அறிந்தது 
வணக்கம் ஐயா 
கழுகுமலைக்கு அப்பெயர் வரக்காரணம் அம்மலை சமணர் கழகம் இருந்த மலை என்பதால் தான் .வெட்டுவான் கோயிலில்-அதாவது வேட்டுவன் கோயிலில்  உள்ள தீர்த்தங்கரர்களின் புடைப்புச்சிற்பங்கள் இதை உறுதி செய்கின்றன .
மக்கள் கழகம் என்ற சொல்லையும் பொருளையும் மறந்த காலத்தில் தமக்கு மிகவும் பரிச்சயமான கழுகின் பெயரை அம்மலைக்கு உரியதாக்கிவிட்டனர் .
தமிழகத்தில் இவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற மலைகள் பிறவும் இருக்கின்றன .சங்கஇலக்கியம் சுட்டும் ஏழில் மலை நம் முன்னோர் உச்சரிப்பில் எலிமலை ஆனதால் இன்று மூஷிகமலை என்று வழங்குகிறது .
இக்கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல .சில ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த நூலின் பெயரும் ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை.ஞாபகமறதிக்கு வருந்துகிறேன் .
கண்மணி 

அன்பார் திருமதி. கண்மணி அவர்களுக்கு,

வணக்கம்.

கழுகுமலை பற்றிய சில நூல்குறிப்புகள் பார்த்தேன். அவற்றில் இல்லாத செய்தி. அண்மைக்காலத்தில் யாராவது எழுதிய கருத்தாக இருக்கவேண்டும்.

சமணர்கள் “கழகம்” என்று பெயர் வைப்பார்களா?

நா. கணேசன்
 
மூன்று திருப்புகழ்கள் கழுகாசலத்திற்கு உள்ளன.
இரண்டில் கழுகுமலை என்றும், ஒன்றில் குருகுமலை என்றும் பாடியுள்ளார்



N. Ganesan

unread,
Oct 23, 2017, 8:41:11 AM10/23/17
to மின்தமிழ், vallamai


2017-10-23 2:27 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
NG> அண்மைக்காலத்தில் யாராவது எழுதிய கருத்தாக இருக்கவேண்டும்.


சமணர்கள் “கழகம்” என்று பெயர் வைப்பார்களா?>
அண்மைக்காலத்து நூலில் தான் வாசித்த நினைவு .சமணர்கள் கழகம் என்று பெயர்
வைப்பார்களா?மாட்டார்களா?என்பதற்கு என்னால் விளக்கம் சொல்ல
இயலவில்லை.

கழகம் எனச் சமணர்கள் வைக்க வாய்ப்பில்லை. விரிவாக, பின்னர்
எழுதுகிறேன். கி.பி. முதலாயிரத்தில் கழகம் என்ற சொல் ஏற்பட்ட வரலாறும்,
அதன் பொருளும் பார்த்தீர்களால் விளங்கும்.
 
ஆனால் அருணகிரிநாதர் காலத்திற்கு முன்னரே;அரும்பதவுரைகாரர்
காலத்திலேயே   பண்டைத் தமிழக ஊர்கள் பல தம் பெயர்க்காரணம்
மறக்கப்பட்டுவிட்டன.வடமொழிப்பெயர் பெற்றுவிட்டன .
1-ஏழில் மலை -எலிமலை >மூஷிகமலை
2-முதிர மலை -குதிரை மலை >குத்ரமூஹ

கர்நாடகாவில் குதிரைமுகம் உள்ளது. சிக்மகளூர் மாவட்டம்.
இது காரணப்பெயர். குதிரைமுகம் இங்கே பாருங்கள்,
இது அதிகமான்கள் ஆட்சியில் இருந்த பகுதி.

முதிரைமலை என்று குதிரை(முக)மலைக்குப் பெயரில்லை.
குமணன் ஆண்ட முதிரைமலை கோவைமாவட்டம்.
உடுமலை, மூணாறு மலைப்பகுதிகளின் வேள் அவன்.

பாரதியார் பாடலை முதலில் அச்சுப்போட்ட மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
உடுமலைப்பேட்டையில் தமிழாசிரியராய் இருந்தார்கள். அப்போது
குமணன் வரலாற்றை வசனத்தில் எழுதினார். அதில் இந்த முதிரமலை
பற்றிய செய்திகளைப் படித்த நினைவு இருக்கிறது. அதனைத் தாண்டி
பொதினி (பழனி) மலையிலே பேகன் என்னும் வேள் வாழ்ந்திருக்கிறான்.
 
3-பண்ணி மலை -பன்னி மலை (பன்றி மலை )>வராககிரி

பண்ணி மலை என்று ஒரு மலை இருந்ததா? எந்த இலக்கியம் (அ) கல்வெட்டு
என அறிய ஆவல்.

நா. கணேசன்
 
4-வெண்குன்று >தவளகிரி
தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றமாக இதை நான்
கருதுகிறேன் .இதனால் கழகமலை என்றபெயர் வழங்கியிருக்க வாய்ப்பு உண்டு.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 23, 2017, 9:24:53 AM10/23/17
to மின்தமிழ், vallamai, Geetha Sambasivam, Geetha Sambasivam
2017-10-20 3:17 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
நான் வசிக்கும் சிவகாசியிலிருந்து கழுகுமலை 30கி.மீ.தூரத்தில் உள்ளது.6ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தோடு ஒரு மாலை வேளையைக் கழிக்க அங்கு சென்று வந்தேன் .சிறிய குன்று .அடிவாரத்தில் ஒரு கோயில்.உள்ளே முருகப்பெருமானைப் பார்த்ததாக நினைவு .நான் ஆராய்ச்சி நோக்குடனோ ஆவணப்படுத்தும் நோக்குடனோ செல்லவில்லை .அதனால் இந்த கோபுரத்தைப் பற்றி என்னால் கருத்துரைக்க இயலவில்லை .மீண்டும் ஒருமுறை அங்கு சென்று இந்தப்படத்தைக்  கையோடு கொண்டுபோய்  ஒப்பிட்டால் தான் முடியும்.குன்றின் மேல் தான் சமண தீர்த்தங்கரர் புடைப்புச்சிற்பங்களும் ஒரு குடைவரைக் கோயிலும் உள்ளன.அந்தக் குடைவரைக்கோயில் ஒரு masterpiece.எனக்கு வேறு சொற்கள் கிடைக்கவில்லை .வேறு எங்கும் அப்படி ஒரு திறமையான கைவினையை  நான் கண்டதில்லை .மாமல்லபுரத்துக் குடைவரைக்கோயிலைகள் வேறு வகை .எங்கள் ஊரில் வெட்டுவான் கோயில் என்று தான் சொல்வோம் வேட்டுவன் கோயில் என்று இந்த இழையில் தான் முதல்முதலாகப் பார்க்கிறேன் .நான் தொல்லியல் துறை சார்ந்தவள் இல்லை .அதனால் எனக்கு அந்த அமைப்பை விளக்கத் தெரியவில்லை .நான் தமிழாசிரியை .மதுரை காமராசர் பல்கலைக்கழகப்  பொதுத் தமிழ் செய்யுள்தொகுப்பில் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடல் இடம்பெறும் .அது இந்த முருகன்மேல் பாடப்பட்டது என்பர் .


சென்னிகுளம் அண்ணாமலைரெட்டியார் காவடிச்சிந்து கழுகாசல முருகன்மீது தான் இயற்றப்பட்டது. பல பாடல்களில் குறிப்பிடுகிறார். எம்.எஸ். போன்றோர் ஒருபாடலாவது கச்சேரிகளில் பாடுவார்கள் அந்தக் காலத்தில். பாரதியாருக்கு சிந்துகள் பாட ரெட்டியாரின் அழகான பாட்டுகள் பாதைகாட்டின. நல்ல பதிப்புகள் பல வந்துவிட்டன. முன்னர் குஜிலிப்பதிப்புகள்தாம் இருந்தன பிழைகள் மலிந்து. கு. அழகிரிசாமி ஒரு பதிப்புப்போட்டார். அண்ணாமலைரெட்டியாரின் பாடல்கள் அனைத்துக்கும் ஆய்வுப்பதிப்பு திண்டுக்கல்லில் வாழ்ந்த அருட்கவிஞர் அரங்க. சீனிவாசன் மிக உழைத்துச் செய்தார். பின்னர் விற்காமல் கஷ்டப்பட்டார். அட்டைப்படத்தில் அண்ணாமலை ரெட்டியாரின் ஒளிப்படம் உண்டு. ஊற்றுமலை சமீந்தார் வாரிசுதாரர்களிடம் அந்த ஒளிப்படம் பெறப் பட்ட கஷ்டத்தை எழுதியுள்ளார். பின்னர் நா. மகாலிங்கம் உதவியால் கிட்டிற்று. மிகப்பழைய காமிராவால் எடுத்த முக்கியமான ஒளிப்படம் அது. அரங்க. சீனிவாசனார் நூலைப் பார்க்கவும். சிவகாசியில் கிடைக்கும். நூலகங்களிலாவது. 

---------

உங்களைப் போன்ற தமிழாசிரியர். நெல்லை எம்டிடி இந்துக்கல்லூரியில் 37 ஆண்டுகள் தமிழ் பயிற்றியவர், உவேசா மாணவர் பேரா. கு. அருணாசல கவுண்டர். அவரது நண்பர் ஏ.பி.சி. வீரபாகு. அவர் தூத்துக்குடியில் மகாலட்சுமி கல்லூரி தொடங்கியபோது தன் அரிய நூல் தொகுப்பு முழுதும் (1000+ புஸ்தகங்கள்) கல்லூரி நூலக தொடக்க தொகுப்பாக வழங்கிவிட்டார். ஏபிசி வீரபாகு அவர்களின் மணிவிழா மலரிலே மூதறிஞர் கு.அ. அப்பச்சி எழுதிய கட்டுரையை திருமதி கீதா சாமபசிவம் தட்டச்சி வழங்கியுள்ளார். கழுகுமலை பற்றிய நல்ல கட்டுரை. படிதத்ருள்க.

நா. கணேசன்


கழுகுமலை ஒரு கலைக்கருவூலம்
மூதறிஞர் கு, அருணாசலக் கவுண்டர்

கோயில்பட்டியிலிருந்து சங்கரன் கோயில் பாதையிலே பன்னிரண்டாவது மைல் கல்லில் கரிசல் காடும் கரம்பும் சூழ்ந்த புன்செய் பிரதேசத்திலே கழுகுமலையைக் காணலாம்.  மலை என்பது வெறும் பெயரளவிலே தான்.  சுமார் 300 அடி மொட்டைப்பாறையே அது.  அதன் உச்சியிலே தெரிவது பிள்ளையார் கோயிலும் தீபத்தம்பமுமே.  மலை மீதேறி அங்கே செல்வதற்குச் சரியான பாதை இல்லை.  சற்று சிரமத்துடன் தான் செல்லவேண்டும்.  வழியிலே ஒரு குகை தென்படுகிறது.

இது போன்ற மலைச்சரிவுகளிலே பாறைகளில் படுக்கைகள் போலவும் ஆசனங்கள் போலவும் செதுக்கப்பட்ட குகைகளிலே தான் தமிழ்நாட்டின் மிகப் பழமையான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன.  கி.மு. 3--ஆம் நூற்றான்டைச் சேர்ந்த இக்குகைகள் யாவும் சமண சமயத்தை வளர்த்த முனிவர்கள் தங்கியிருந்த இடங்களே.

இம்முனிவர்கள் வசித்திருந்த மற்றொரு மலைச்சரிவிலே கிஜ்ஜக்கூடம் ஒன்று.  கிஜ்ஜக்கூடம், அதாவது திரீதரகூடம் என்பதற்குக் கழுகுமலை என்பது பெயர்.  இம்மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் காணப்படுகின்றன.  ஆனால் பிராமி லிபிக் கல்வெட்டு இல்லை.

பெளத்தர்க்குச் சற்று முன்னோ பின்னோ இங்கே சமண முனிவர்களும் குடியேறி தொடர்ந்து வசித்திருக்கின்றனர்.  இங்கே காணப்படும் நூற்றுக்கு மேற்பட்ட சமண சிற்பங்களும் கல்வெட்டுக்களும் புலப்படுத்தும் தெளிவான செய்திகளால் இம்மலை சமணரது பல்கலைக் கழகமாக அகில இந்தியாவிலும் முன்னர் பிரசித்தி வாய்ந்திருந்ததை நாம் அறிகிறோம்.

சமண தீர்த்தங்கரர்கள்

மலைமீது சமணச் சிற்பங்களைக் காண்பதற்கு முன் அடிவாரத்திலே அமைந்துள்ள கழுகாசல மூர்த்தியின் கோயிலுக்குச் செல்கிறோம்.  எட்டயபுரத்து அரச மரபினர் கட்டி வைத்த விசாலமான மண்டபங்களைக் கடந்து செல்கிறோம்.  வழிபாடு செய்துவிட்டு நாமும் வெளியேறி மலையை வலம் வருகிறோம்.  அல்லிக்கேணியைக் கடந்து உருண்டமலை, திரண்டமலை ஒய்யாரக் கழுகுமலையைப் பார்த்த வண்ணம் அதன் வட பாரிசத்திலே அகண்டதாய்ப் பரந்து கிடக்கும் பாறை மீதேறிச் செல்கிறோம்.  கவனமாய்ப் பாதத்தை ஊன்றித்தான் நடக்கிறோம்.  பாதத்தை ஊன்றி வைக்கும் போதெல்லாம் பாதம் படும் சிற்சில இடங்களில் பாறையின்றும் சங்கீதத்துக்குரிய நாதங்கள் சப்த ராகங்கள் அல்லவா ஒலிக்கின்றன.  விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு இதை விட்டு விட்டு சற்று வடக்கு நோக்கி மேல் ஏறுகிறோம்.  தென்புறம் மலைச்சரிவின் நெடுகிலும் அறுபது அடி உயரத்தில் ஒன்றன்கீழ் ஒன்றாக மூன்று வரிசைகளில் ஒரே சீராய்த் தோன்றும் இச்சிற்பங்களைப் பாருங்கள்.  மழித்த தலையுடன் இளமை முறுக்கோடு இரு கரங்களும் மருங்கிலே தொங்க முக்குடையின் கீழ் ஞான ஜோதியில் தம்மை மறந்து அவ்வொளியை மெளனமாகவே பரப்பும் வகையில் தோன்றும் இச்சிற்பங்கள் சிற்பக் கலைக்கே பெருமை தரும் செல்வம் அல்லவா?  இவை யாவும் தீர்த்தங்கரர் உருவங்களே.  அன்பும் அருளும் கொண்டு அமைதியின் வடிவாய்த் தோன்றும் இவர்கள் யார்? சமண சமயத்தை வளர்த்தச் சான்றோர் இவர்கள்.  இவர்களைத் தீர்த்தங்கரர்கள் என்பர்.  இச்சொல்லுக்குப் பிறவிப் பெருங்கடலினின்று நம்மைக் கரை சேர்ப்பவர் என்பது பொருள்.  இவர்கள் திகம்பரர்களே.  அதாவது அம்மணமாகத் தோன்றுகின்றனர்.  மெய்ஞானியராய் வினைகளை வென்ற இவர்களுக்குக் கெளபீனமும் மிகைதான்.  பூரண வளர்ச்சி எய்திய இம்மானிடர்களையே கடவுளாகக் கொண்டு ஜைனமதம் வழிபடுகிறது. கண்காணாக் கடவுளை அது ஒப்புக் கொள்வதில்லை.

அம்பிகை

இதோ இந்த வரிசையின் இடது பால் மாடத்திலே பெண் உருவம் ஒன்று அசோக மரத்தின் கீழ் நின்ற கோலத்தில் தோன்றுகிறது அல்லவா?  மகுடம் தரித்துக் காதுகளில் தோடு அணிந்து வலது கரத்தை மருங்கிலே நிற்கும் சிறுமியின் சிரசிலே வைத்து இடது கரத்திலே எதையோ ஏந்தி திரிபங்க நிலையிலே ஒய்யாரமாய் நிற்கும் இவள் தான் அம்பிகை.  இவளை நேமிநாதரது யட்சி--சாசன தேவதை,  அதாவது சேவகி  என்பர்.  இவளது வாகனமாகிய சிங்கம் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நம்மையே பார்க்கிறது.  இதன் வால் மேல்நோக்கிச் சுருண்டிருக்கிறது.  இதன் அருகே அச்சம் இன்றிச் சிறுவர் இருவர் நிற்கின்றனர்.  இந்த அம்பிகை துர்க்கையுடன் ஒன்றி மறைந்தாள்.

மஹாவீரர்

அதோ வலது பால் சற்றுப் பெரியதாய்த் தோன்றும் அந்த கோஷ்டத்தைப் பாருங்கள்.  அதன் பிரபாவளியிலே பொறிக்கப்பட்டுள்ள அஷ்டமங்கலங்கள் அலங்காரச் சித்திரங்களின் சிற்றுளி நுணுக்க வேலைப்பாடுகளைச் சொல்லாமல் விவரிக்க முடியாது.  இம்மாடத்திலே முக்குடைக்கீழ் வீற்றிருக்கும் வர்த்தமான மஹாவீரர் சிற்பம் செய்நேர்த்தி வாய்ந்தது.  காற்று வீசாத இடத்திலே ஆடாமல் அசையாமல் புகைத்தலுமின்றி நேராக நின்று எரிந்து கொண்டிருக்கும் விளக்குச் சுடர் போல் அல்லவா அவர் தோன்றுகிறார்.  தியானமே உறைந்து இறுகிச் சிலையானதோ என்று எண்ணுகிறோம்.  கீழே தீர்த்தங்கரர் இருவர் அமர்ந்திருக்கின்றனர்.  முடி தரித்த மன்னன் ஒருவன் மண்டியிட்டு வணங்குவதைக் காண்கிறோம்.  இவன் பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் ஆகலாம்.

பத்மாவதி

கீழே தனிக்கோஷ்டத்திலே யட்சி ஒருத்தி பத்மாசனத்திலே அமர்ந்திருக்கிறாள்.  அவள் சிரசின் மீது பாம்பின் படம் கவிழ்ந்திருக்கிறது.  நான்கு கரம் வாய்ந்த இவள் வலது மேல்கையில் பாம்பு, கீழ்க்கையில் கனி, இடது மேல்கையில் அங்குசம் போன்ற ஒன்று தாங்கிக் கீழ்க்கையை மடியில் வைத்திருக்கின்றாள்.  இருமருங்கும் பணிப்பெண்கள் சாமரம் வீசி நிற்கின்றனர்.  இந்த யட்சி பார்சுவநாதரின் சேவகி பத்மாவதியாகலாம்.  சமணமதத் தெய்வங்களிடையே யட்சிக்குத் தனியிடம் இல்லை.  தனி அந்தஸ்து இல்லை.  தீர்த்தங்கரரின் சாசன தேவதையாய் சேவகியாகத் தான் தோன்றுவாள்/

யட்சி வழிபாடு

கழுகுமலைச் சிற்பங்களுக்குத் தீர்த்தங்கரரை விட ஒருபடி அதிகமாகவே முக்கியத்துவம் வழங்கப் பட்டிருப்பதைக் கருதும்போது யட்சி வழிபாடு தமிழகச் சமணத்தின் சிறப்பியல்பு என்பது புலனாகிறது.  "அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிற்கு"  பால் பாயசம் படைத்து மாதரி வழிபடுவதைச் சிலப்பதிகாரத்திலே காண்கிறோம்.  இதிலே இயக்கி என்பதும் நாம் இசக்கி என்பதும் யட்சியைத் தான் யட்சியைப் படாரியர் எனலாம்.  படாரி தான், பிடாரியானாள்.  இசக்கியும் , பிடாரியும் கிராமதேவதைகளாகவே பத்மாவதியுடன் ஒன்றினார்கள்.

பிங்கலந்தை நிகண்டு துர்க்கையின் பெயராகப் பகவதி பண்ணத்தி என்பன பயில்கின்றன.  திவாகர நிகண்டிலும் பகவதியின் எதிராகப் "பண்ணம் பண்ணத்தி" பயில்கிறது.  பண்ணத்தி என்பதற்குப் பாம்பின் படத்தைத் தரிப்பவள், நாகதேவதை பத்மாவதி என்பது பொருளாகிறது.  சமணரது பத்மாவதி பகவதி வழிபாட்டிலே கலந்து மறைந்தாள். என்று கருதலாம்.  மலைச்சரிவிலே 60 அடி உயரத்திற்கு மேல் அலை அலையாய்த் தோன்றும் இந்த ஆன்றோர்களைக் கீழ் நிற்கும் நாம் அண்ணாந்து பார்க்கும்போது அவர்கள் முன் நாம் எம்மாத்திரம்?  நாம் சிறுமையை அல்லவா உணருகிறோம்.  சர்வக்ஞர் அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் அவர்கள்.  இந்த மகான்களது வடிவத்தை உருவாக்கிய சிற்பி தன்னையே ஒரு சித்த புருஷனாக மாற்றிக் கொண்டு தனது தியானத்திலே கண்ட தெய்வீக உருவங்களைக் கல்லிலே வடித்திருக்கிறான்.

இந்த உருவங்களிலே உடற்கூறோ அவயப்பொருத்தமோ இல்லைதான்.  ஆனால் அந்தச் சிலைகளின் மூலம் சாந்த ரசத்தை அல்லவா அவன் அள்ளிப் பொழிந்திருக்கிறான்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 300 வருட கால இடைவெளியிலே முன்னும் பின்னுமாய் இவை சமைந்தனவேணும் வேறுபாடு எதுவுமின்றி ஒரே அச்சில் வார்த்தார்போலத் தோன்றும் இவற்றின் ஒருமையும் ஒருங்கிணைப்பும் வியப்புக்குரியன.

கல்வெட்டுக்கள் தரும் செய்தி

ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் வட்டெழுத்தில் வாசகம் உள்ளது ஒரு வாசகத்தால் கழுகுமலைக்குத் திருமலை என்ற பெயரும் அந்தக் கிராமம் நெச்சுர நாட்டுத் திருநெச்சுரம் என்று வழங்கப் பட்டதும் புலனாகிறது.  சமண சமயச் சித்தாந்தங்களை நாள் தோறும் விளக்கிக் கூறுவதற்காக "பதின்மர் வயிராக்கியர்க்கு" ஆகாரத்தானமாக நிலபுலங்கள் விட்ட செய்தி மற்றொரு கல்வெட்டால் புலனாகிறது.  ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதைச் செதுக்குவித்தவர் பெயரும் முகவரியும் பொறிக்கப்பட்டுள்ளன.  இதோ இந்தச் சிற்பத்தைச் செய்தது யார் தெரியுமா?  திருநறுங்கொண்டை பலதேவ குறவடிகள் மாணாக்கர் கனகவிசயை.  திருநறுங்கொண்டை தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது.  இதோ இந்தச் சிற்பத் தொகுதிகள் யாவும் திருசாரணத்துக் குறத்திகள் செய்வித்த திருமேனிகளாம்.

இங்கே காணப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கி.பி. 8,9, 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  இவை புலப்படுத்தும் செய்திகள் யாவை?  மிகப் பெரிய பல்கலைக் கழகம் ஒன்று பிரபலமான பேராசிரியர்களைக் கொண்டு முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடரந்து கழுகுமலையில் இயங்கி வந்திருக்கிறது.  தொலைதூரத்திலிருந்து வந்து, அங்கே கல்வி பயின்று வெளியேறிய ஆசிரியர்கள் பலர், முனிவர்கள் பலர், வணிகர்களும் உழவர்களும் பற்பலர்.  ஆண்களே அன்றிப் பெண்களும் அங்கு மாணவிகளாகவும் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கின்றனர்.  இவர்கள் அனைவருமே போட்டிபோட்டுக் கொண்டு கழுகுமலையைச் சிற்பங்களால் அலங்கரித்திருக்கின்றனர்.

சமணத் துறவிகளிடையே ஆண் பெண் பாலார் சேர்ந்து கல்வி பயில்வது என்ற கூட்டுக் கல்வி முறை இருந்ததா?  இருந்தது என்று சொல்வதற்கில்லை.  மடாலயங்களில் ஆண், பெண் துறவிகளுக்குத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.  எனினும் கல்வி பயிற்சியிலே ஓரளவு தேர்ச்சி எய்தியபின் நிபுணத்துவம், தனிப்பெரும் புலமை கருதி ஆண்களான குரவர்கள் ஆசாரியப் பெண்களைச் சீடராகக் கொள்வதிலோ, பெண்களான குரத்திகள் ஆண்களைச் சீடர்களாகக் கொள்வதிலோ தவறில்லை என்று கருதப் பட்டதைத் தான் கழுகுமலைக் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.

"பைந்தொடி மகளிராவார் பாவத்தால் பெரிய நீரார், பேடி, அலி, குருடு இவர்களைப் போன்றது தான் பெண் பிறவியும்.  துறவு பூண்டு, மனத்தையடக்கி, உடலை வருத்தித் துன்பம் பொறுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை.  எனவே அவர்கள் வீடுபேறு அடைதல் இல்லை"  என்பர் திகம்பர சமணர்.  தமிழகத்திலே திகமபர சமணம் தான் நிலவியது எனினும் கழுகுமலைக் குரத்திகளைக் கருதும்போது வைராக்கியத்துடன் முயன்றால் பெண்களும் விடுபேறு எய்துதல் கூடும் என்ற கொள்கையை மேற்கொண்டது தமிழகத் திகம்பர சமணத்தின் சிறப்பியல்பு ஆகிறது.

உதவிய நூல்

1.  திரு A.P.C.  வீரபாகு அவர்களின் மணிவிழா மலர்.
 

N. Ganesan

unread,
Oct 30, 2017, 10:06:14 PM10/30/17
to மின்தமிழ், vallamai


2017-10-30 10:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<பண்ணி மலை என்று ஒரு மலை இருந்ததா? எந்த இலக்கியம் (அ) கல்வெட்டு>
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வராககிரி என்றும் பெயர் உண்டு என்பர் .இப்பெயர்க்காரணம் பற்றி சிந்தித்த போது சங்ககாலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பண்ணி என புறநானூறு கூறுவது நல்ல ஆதாரமாக அமைந்தது.பண்ணி ஆண்ட மலை பண்ணிமலை .பொதுமக்கள் வாய்மொழியில் முயற்சிச் சுருக்கம்  காரணமாக பன்னி மலை என்று மருவியிருக்க வேண்டும் .பன்னிமலை ------>பன்றிமலை ------>வராககிரி ஆகியிருக்க வேண்டும் இது எனது சொந்தக் கருத்தாகும் .
கண்மணி 
.

அருமை. -ண்- > -ன்- மாறுபாட்டு உதாரணங்களில் ஆர்வம் உடையேன்.

வராக நதிக்கரை ஓரம்:

சையமலையில் மழைமறைவுப் பகுதி எனலாம்.

அரபிக் கடலில் உருவாகிவருவது தென்மேற்குப் பருவக்காற்று. கோடைகாலத்தில் பெய்வதால் கோடை மழை என்போம் கோவை மாவட்டத்தில்.

தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது
         சாரல் இன்பச் சாரல்
     தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று சிந்துதம்மா 
          தூரல் முத்துத் தூரல்

--------------------------------------

வடகிழக்குப் பருவக்காற்று கிழக்கே இருந்து வருவது டிசம்பர் - மார்ச். கிழக்கே இருந்து (காங்கயம், கரூர், ....)) இதனைக் கொங்கமழை என்போம்.
குணக்கு = கிழக்கு. எனவே, கொண்டல் = கிழக்குத் திசையில் இருந்து வரும் காற்று. இதனால் பெய்யும் மழை (North East Monsoon) = கொண்கமழை > கொங்கமழை.


கொண்டல் வீசும் பருவத்தில் பாண்டி நாட்டுத் தொண்டி துறைமுகத்துக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் நடந்த கடல் வாணிகம்:
சோழர் காலத்தில் ஐம்பொன் படிமங்கள் பெருமளவில் உருவாக வெள்ளீயம் (Tin) இறக்குமதி தொண்டி, நாகை, ... போன்ற பட்டினங்கள்
உதவியிருக்கும்.

அன்புடன்,
நா. கணேசன்

 

2017-10-30 22:42 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
<பண்ணி மலை என்று ஒரு மலை இருந்ததா? எந்த இலக்கியம் (அ) கல்வெட்டு
என அறிய ஆவல்>
வராககிரி 

2017-10-23 18:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 30, 2017, 10:12:43 PM10/30/17
to மின்தமிழ், vallamai
>>> பன்னிமலை ------>பன்றிமலை ------>வராககிரி ஆகியிருக்க வேண்டும் இது எனது சொந்தக் கருத்தாகும் .

உரைவேந்தர், சைவசித்தாந்த கலாநிதி ஔவை சு. துரைசாமிப்பிள்ளையும் கூறியிருக்கிறார்.

N. Ganesan

unread,
Nov 1, 2017, 10:29:58 AM11/1/17
to மின்தமிழ், vallamai


2017-11-01 5:21 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<கழகம் எனச் சமணர்கள் வைக்க வாய்ப்பில்லை>
சமணர்கள் அம்மலையில் பல்கலைக்கழகம் நடத்தியதாக சான்றுகள் இருக்கும்போது கழகமலை என்ற பெயரைத்தான் முறைப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் .
சமணர்கள் அல்லாதவர் அம்மலைக்கு கழகமலை என்று பெயரிட்டு அழைக்க பல்கலைக்கழகம் இல்லாமல் போன காலத்தில் பொருளும் வரலாறும் மறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த கழுகு கழகத்தின் பெயரைப் பிடித்திருக்கலாம் .
தமிழ்மக்கள்  சொற்பொருளை மறந்து இடப்பெயர்களை மாற்றி விடுவர் என்பதற்கு இன்னொரு சான்று கூறுகிறேன் . 
மதுரையைச் சுற்றி உள்ள குன்றுகளில் -நாகமலை,ஆனைமலை,பசுமலை ஆகிய மூன்றும் புராணத் தொடர்புடையவை .சமணர் ஏவியதாகக்  கதை உண்டு .  
நாகமலைபார்ப்பதற்கு நாகம் போலவே நீண்டு மேற்குமலைத்தொடருடன் சென்று சேர்கிறது .
  ஆனைமலை பார்ப்பதற்கு யானை படுத்திருப்பது போலவே தோன்றும் .
ஆனால் பசுமலை பார்ப்பதற்கு பசு போல இருக்காது .
சமணர் ஏவிய யானை,நாகம்,என்ற கதை அவ்விரு குன்றுகளின் தோற்றத்தை அடியொட்டிப் பிறந்தது .ஆனால் தோற்றம் ஒத்து வராமலேசமணர் ஏவிய பசு குன்றாக மாறியது என்ற கதை தோன்றக் காரணம் என்ன?மலையின் காரணப் பெயரை மறந்தது தான்.
நாகமலை கிட்டத்தட்ட மொட்டைப் பாறையாகத் தான் இருந்தது ;இருக்கிறது .ஆனைமலையும் அப்படியே .
ஆனால் பசுமலை எனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாக பசுமையாக இருந்தது;இருக்கிறது.
பசுமை +மலை =பசுமலை. பசுமை என்ற சொல்லையும் பசுமலை என்ற பெயர் உருவான முறையையும் மக்கள் மறந்தபோது பசு மலையாக மாறிவிட்டது என்ற கதை உருவாகி விட்டது  .
கண்மணி 


நன்றி. பசுமலை என்ற பெயர்க்காரணம் பற்றிச் சைவர்களிடம் வழங்கும் கதையை
திருவிளையாடற்புராணத்தில் பாடியுள்ளார் அப் புராணமுடையார்.

மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்.
“யானைமலை நாகமலையைப் பற்றிய கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டதைச் ‘சில புராணக் கதைகள்’ என்றும் தொடர்புரையில் காண்க.
இடபகிரி: இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. தண்டலைமைலை (தண்டலை = சோலை) என்று திருவிளையாடற் புராணங் கூறுகிறது. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. ‘‘ஓங்கிருங்குன்றம்’’, ‘‘சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்’’ என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானைமலையைப் போலவே வைணவத் திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூறுகின்றன. இதனை எபிகிராபி அறிக்கையில் காணலாம்.198

யானைமலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டதுபோலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர். பிறகு, இந்த மலைக்கும் ஒரு புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டனர். சமணர் தமது மந்திர சக்தியினால் மாயப்பசு ஒன்றை உண்டாக்கி அதை மதுரை நகரத்தை அழித்துவரும்படி அனுப்பினார்கள் என்றும் இதையறிந்த சொக்கநாதர் தமது இடபத்தை ஏவி அந்தப் பசுவைக்கொன்று விடச்செய்தார் என்றும், பிறகு இந்த ஞாபகார்த்தமாக இடபகிரியை உண்டாக்கினார் என்றும் இக்கதை கூறுகிறது.

பசுமலை: இதுவும் மதுரைக்கு அருகில் உள்ளது. சமணர்கள் ஏவிய மாயப்பசுவைச் சொக்கநாதருடைய இடபம் கொன்ற பிறகு, இறந்த அப்பசு மலையாகச் சமைந்துவிட்டது என்பது புராணக்கதை. இதிலும் பண்டைக் காலத்தில் சமணர்கள் இருந்தார்கள் என்று கருதப்படுகிறது.

இதுகாறுங் கூறப்பட்ட யானைமலை, நாகமலை இடபமலை, பசுமலை என்பவை மதுரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய எண்பெருங் குன்றுகளைச்சேர்ந்தவை. ஏனைய நான்குமலைகள் எவை என்பதை ஆராய்வாம்.”

NG

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 1, 2017, 11:24:36 AM11/1/17
to Santhavasantham, narumpu nathan

On Tuesday, October 24, 2017 at 5:43:50 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
வணக்கம் கணேசனாரே! 
என்னிடம் தமிழக் கடல் அரங்க,சீனிவாசன் எழுதிய ''காவடிச்சிந்தும் கவிஞன் வரலாறும் ''
என்ற நூல் உள்ளது.இப்போது,  நான் மஸ்கட்டில்  என் மூத்த மகன் வீட்டில் இருக்கிறேன். 
வெட்டுவான்  வரலாறு தனிச்சுவை கொண்டது. சிற்பிக்கும் அவர் மகனுக்கும் இடையே நடந்த 
சிற்பங்கலைப்  போட்டியில் மகன் வெட்டுப்பட்ட வரலாறு அது. 

நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

சுவையான கதை அது. கழுகுமலைக்காரர்கள், நாறும்பூநாதன் போன்றோரிடம் விசாரிக்கிறேன். நாறும்பூநாதனிடம் அவர் எழுதிய சூர சம்ஹாரம் சிறுகதையை வாசிக்கக் கேட்டுள்ளேன். சில நாட்களில் அனுப்புகிறேன் என்று சொல்லியுள்ளார்.   Writers' writer எனப்படும் வண்ணதாசன் போற்றிய சிறுகதையாம். [1]

சிற்பி, அவர் மகன், வெட்டுவான்கோயில் பற்றி யாராகிலும் - உ-ம்: கௌதம நீலாம்பரன் (குருக்களில் ஒருவர் எழுத்தாளராக இருந்தார் என்பது அதிசயம்) - போன்றோர் வரலாற்றுக்கதையாக எழுதியுள்ளனரா? கரிசல் காட்டு இலக்கியம், வட்டாரச் சொல்லகராதி, ... எனப் புதுப்பாதை படைத்த கி.ரா., ? விசாரிப்போம்.

கழுகுமலை = கிஜ்ஜகூடம், க்ருத்ரகூடம் (கிரிதரகூடம்) என சமணசமயத்தவர்கள் (ஜைநர், பௌத்தர்கள்) பெயரிட ஒரு காரணம் உண்டு. அவர்கள் சாக்கிய குலத்தவர்கள். சாக்கிய நாயனார், புத்தரை சாக்கிய முனி என்பர், சாக்கியர்களில் ஒருபிரிவினரான பார்சிகள் உடலை எரிக்காமல் மலையுச்சியில் போட்டு கழுகுகள் உண்ண விட்டுவார்கள். சாக்கியமுனி அறவுரை நிகழ்த்திய மலை கழுகுமலைதான். பீகாரில். அவ்வாறு சமணர்கள் பெயரிட்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். பல்கலைக்கழகம் போன்ற கழகம் என சமணர்கள் பெயரிட வாய்ப்பில்லை. ஏனெனில், கழகம் என்ற சொல்லை எப்படி கி.பி. முதலாயிரத்தில் (First Millennium) சமண இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்று பார்த்தால் இது புரியும். த்யூத என்னும் வடசொல் தமிழில் சூது என்றாகிறது. சூது ஆடுமிடம் கழகம். சூது என்ற பிராகிருதச் சொல்லை தமிழில் படைத்து, அதன் இடமாக கழகம் என்று செய்தவர்கள் சமணர்கள். எனவே, தங்கள் பள்ளிகள் அமைந்த இடம் “கழகம்” என்று அச் சமயிகள் பெயரிட மாட்டார்கள். பல சொற்கள் பொருள் மாறிவிட்டன. இப்போது கழகம் என்றால் நல்லபெயர். உ-ம்: தமிழரை 60+ ஆண்டுகளாக ஆண்டுவரும், இனி பல தேர்தல்களில் வெற்றிகொள்ளும் திராவிட கட்சிகள் யாவும் கழகங்கள் ஆக விளங்குவதை அறிவீர்கள். ஆத்தி சூடி என்பது தேவாரத்தில் சிவன் அணியும் மலராக இல்லை. ஆனால், ஆத்தி பார்சுவநாதரின் தீக்ஷாதரு என்பது சமணம். பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் கழுகுமலை போன்ற இடங்களில் ஏற்படுத்திய கி.பி. முதலாயிரத்தில் ஔவை என்னும் குரத்தியார் பாடியது ஆத்திசூடி. நாஞ்சில் நாட்டில் குரத்திமலை என்று ஔவையார் வாழ்ந்த மலை என்று ஒரு மலையைக் குறிப்பிடுகின்றனர்.

 
திருமிகு. ஏ.பி.சி. வீரபாகு தொடங்கிய கல்லூரியில் இலந்தையின் ஆசான் ‘நாணல்’ முதல்வராக இருந்தார். வீரபாகு மணிவிழா மலரில் கழுகுமலை பற்றிய கட்டுரை ஒன்று படிக்கலாம்.
சம்ஸ்கிருதம் தெரிந்த சந்தவசந்தத்தாருக்கு ஒரு கேள்வி. ”இம்முனிவர்கள் வசித்திருந்த மற்றொரு மலைச்சரிவிலே கிஜ்ஜக்கூடம் ஒன்று.  கிஜ்ஜக்கூடம், அதாவது திரீதரகூடம் என்பதற்குக் கழுகுமலை என்பது பெயர்.  இம்மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் காணப்படுகின்றன.  ஆனால் பிராமி லிபிக் கல்வெட்டு இல்லை.” கிஜ்ஜகூடம், திரீதரகூடம்” இதனை நாகரியிலோ, ஆங்கிலத்திலோ எப்படி எழுதுவர்? கழுகு என்ற பொருளாக இருக்கும். நன்றி.

நா. கணேசன்


[1] என் ஊர், நாறும்பூநாதன், விகடன்.


என் ஊர் : கழுகுமலை

சூரர்களுக்குள் புகுந்து பேயாட்டம் போட்டவர்கள்!

தான் பிறந்து வளர்ந்த அழகிய கிராமமான கழுகு மலை குறித்து தன்னுடைய நெஞ்சில் பசுமையாக இருக்கும் நினைவுகளை... நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்  எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்.

''தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது வரலாற்றுச் சிறப்பு மிக்க கழுகு மலை. அக்ரஹாரத்தின் மையத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிரே பிரமாண்டமாக உயர்ந்திருந்த மலை, பல அற்புதங்களை தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கும் கழுகாசலமூர்த்தி என்ற முருகன் கோயில் ரொம்பவும் பிரபலம். தேவரின் தயாரிப்பில் உருவான 'துணைவன்’ என்ற பக்திப் படத்தின் பாடல் காட்சியில், 'கழுகு மலையில் வாழும் வேலய்யா...’ என்று ஏவி.எம்.ராஜன் பாடும் வரியில் கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் கோயில் வந்துபோகும்.

இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம், ரொம்பவும் விசேஷமானது. ஆறு வகையான சூரர்களின் உருவச் சிலைகள் பார்க்கவே பிரமிப்பூட்டும். கனத்த சூரர்களைத் தூக்கி ஆடுவதற்கு என்றே பலசாலி வீரர்கள் பலர் உண்டு. பெரியண்ணத் தேவர் போன்றவர்களுக்கு மட்டுமே அந்தச் சூரர்களுக்குள் புகுந்து பேயாட்டம் போட்டு முருகக் கடவுளைச் சண்டைக்கு இழுக்கும் வல்லமை இருந்தது.

மலையின் பின்புறம் அமைந்து இருக்கும் ஆம்பூரணி (ஆம்பல் ஊரணி என்பது மருவி இப்படி ஆகிவிட்டது!) குளத்தில் இளம் வயதில் என்னுடைய இரு சகோதரிகளுடன் கரம்கோத்து நடந்து சென்றதும், ஆம்பூரணி குளத்தில் மீன்கள் காலைக் கவ்வ குளித்துக் கும்மாளமிட்டதும் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

குளித்து முடித்த பின்னர் வெட்டுவான் கோயில் பக்கம் போவோம். வெட்டுவான் கோயிலின் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தாமரைப் பூவைப் பார்க்கும்போது எல்லாம் என்னுடைய அண்ணன் குமரகுருபரனின் நினைவுவரும். அவர் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது இந்தத் தாமரைப் பூவில் அமர்ந்து லயித்துப் படித்து ஸ்டேட் ரேங்க் வாங்கினார். நானும் அதே போல முயற்சித்தேன். ம்ஹும்... படித்த பள்ளியில் மட்டுமே முதலாவதாக வர முடிந்தது!

கழுகு மலையின் மலை, பல தலைமுறை கடந்த பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டது. மலை உச்சிக்குச் செல்லும் வழியில் பஞ்சுப் பொதி அடுக்குப் பாறை, சோற்று உருண்டைப் பாறை என ஒவ்வொரு பாறைக்கும் கூட தனித் தனிக் கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. மேலே சமணர் பள்ளியறை ஒன்று உண்டு. சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் ஏராளமாக இங்கு இருக்கின்றன.

சமண மதத் துறவிகள் இந்த மலைப் பகுதியில் வசித்து இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மலை அடிவாரத்தில் வசித்த பொது மக்களின் குழந்தைகளை மலைப் பகுதிக்கு அழைத்துவந்து கல்வி அறிவு புகட்டி இருக்கிறார்கள்.

முருகன் கோயிலின் பக்கவாட்டில் இருக்கும் மிகப் பெரிய தெப்பக் குளம் வசீகரமானது. ஊர் மக்களின் தாகம் தீர்த்தது இது. மழைக் காலத்தில், வெளியில் இருந்து வரும் தண்ணீர், பசு சிலையின் வாயில் இருந்து தெப்பக் குளத்துக்குள் கொட்டுவதைப் பார்ப்பதே தனி அழகு. நிரம்பி வழியும் தெப்பக் குளத்தையும் பார்த்து இருக்கிறேன். குடி நீருக்கே வழி இல்லாமல் காய்ந்து வறண்ட குளத்தையும் பார்த்து இருக்கிறேன். ஒரு குடம் தண்ணீருக்காக வரிசையில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்து நின்ற கொடூரமான நாட்கள் அவை.

பன்னிரண்டு வருடங்கள் மட்டுமே நான் கழுகு மலையில் வசித்து இருந்தாலும் என்னுடைய படைப்புகளின் ஊற்றுக் கண் இங்கே இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு நடக்கும் சூரசம்ஹாரத்தை அடிப்படையாகக்கொண்டு நான் எழுதிய சிறுகதையைப் படித்துவிட்டு எழுத்தாளர் வண்ணதாசன் பாராட்டியபோது, ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அது என் ஊருக்கே கிடைத்த பெருமை!''

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன் 

 

N. Ganesan

unread,
Nov 2, 2017, 9:54:30 AM11/2/17
to மின்தமிழ், vallamai


2017-11-02 0:14 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<கழுகுமலை = கிஜ்ஜகூடம், க்ருத்ரகூடம் (கிரிதரகூடம்) என சமணசமயத்தவர்கள் (ஜைநர், பௌத்தர்கள்) பெயரிட ஒரு காரணம் உண்டு. அவர்கள் சாக்கிய குலத்தவர்கள். சாக்கிய நாயனார், புத்தரை சாக்கிய முனி என்பர், சாக்கியர்களில் ஒருபிரிவினரான பார்சிகள் உடலை எரிக்காமல் மலையுச்சியில் போட்டு கழுகுகள் உண்ண விட்டுவார்கள். சாக்கியமுனி அறவுரை நிகழ்த்திய மலை கழுகுமலைதான். பீகாரில். அவ்வாறு சமணர்கள் பெயரிட்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். பல்கலைக்கழகம் போன்ற கழகம் என சமணர்கள் பெயரிட வாய்ப்பில்லை. ஏனெனில், கழகம் என்ற சொல்லை எப்படி கி.பி. முதலாயிரத்தில் (First Millennium) சமண இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்று பார்த்தால் இது புரியும். த்யூத என்னும் வடசொல் தமிழில் சூது என்றாகிறது. சூது ஆடுமிடம் கழகம். சூது என்ற பிராகிருதச் சொல்லை தமிழில் படைத்து, அதன் இடமாக கழகம் என்று செய்தவர்கள் சமணர்கள். எனவே, தங்கள் பள்ளிகள் அமைந்த இடம் “கழகம்” என்று அச் சமயிகள் பெயரிட மாட்டார்கள். பல சொற்கள் பொருள் மாறிவிட்டன. இப்போது கழகம் என்றால் நல்லபெயர். உ-ம்: தமிழரை 60+ ஆண்டுகளாக ஆண்டுவரும், இனி பல தேர்தல்களில் வெற்றிகொள்ளும் திராவிட கட்சிகள் யாவும் கழகங்கள் ஆக விளங்குவதை அறிவீர்கள். ஆத்தி சூடி என்பது தேவாரத்தில் சிவன் அணியும் மலராக இல்லை. ஆனால், ஆத்தி பார்சுவநாதரின் தீக்ஷாதரு என்பது சமணம். பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில்  கழுகுமலை போன்ற இடங்களில் ஏற்படுத்திய கி.பி. முதலாயிரத்தில் ஔவை என்னும் குரத்தியார் பாடியது ஆத்திசூடி. >..   

 
இந்த விளக்கம் கழுகு மலை என்ற பெயர்க்காரணத்திற்கு பொருத்தமாக உள்ளது .ஏற்றுக்கொள்ளக்கூடியதே .தெளிவு படுத்தியமைக்கு நன்றியுடையேன் 
கண்மணி .

நன்றி. This is just a summary. கழகம் என்ற சொல்லின் வரலாற்றை எழுதியவர் பேரா. ச. வையாபுரிப்பிள்ளை. அதனைப் பல்லாண்டு முன்னர் படித்ததால்தான்
சமணர்கள் கி.பி. முதலாயிரத்தில் தாங்கள் நடத்திய பள்ளிகளுக்குக் கழகம் என வைக்க வாய்ப்பில்லை எனப் புரிந்துகொண்டேன். அதனை இன்னும்
விளக்கி எழுதவேண்டும்.

சாக்கிய வமிசத்தார் இந்தியாவில் வந்து உருவான மதங்கள் சிரமண மதங்கள்: பௌத்தம், ஜைநம் முதலியன. சாக்கியர் வருகை,
தமிழர்களின் தொடர்பு பற்றிய நல்ல கட்டுரை. இந்தியாவின் இரு இதிகாசங்களின் உருவாக்கம் (ராமாயணம், மகாபாரதம்):
ΠΔANΔAIH AND SĪTĀ:
ON THE HISTORICAL BACKGROUND OF THE SANSKRIT EPICS


ASKO PARPOLA
University Of Helsinki

Journal of the American Oriental Society
Vol. 122, No. 2, Indic and Iranian Studies in Honor of Stanley Insler on His Sixty-Fifth Birthday (Apr. - Jun., 2002), pp. 361-373
The Mahābhārata (MBh) and the Rāmāyaṇa (R) reflect the exploits of the "Pāṇḍavas" following the arrival and dispersal of the "Megalithic culture" c. 800-400 B.C. The Vedic (Yādava) trio of the two Aśvins and Uṣas, integrated with agricultural and pastoral deities, became the Vaiṣṇava trio.
அசோகன் பார்ப்போலாவிடம் இதில் விடுபட்ட செய்திகள் சிலவும் குறிப்பிட்டிருக்கிறேன் அப்போது.

ஏன் கழுகுமலை என சிரமண சமயிகள் போகும் இடமெல்லாம் வைத்தனர் என்பதும், கழகம் - in the First Millennium - பொருந்தாத சொல்
என்பதும் விரித்து பின்னாளில் எழுதுகிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages