Re: [MinTamil] Re: மணிமேகலைப் பாத்திரங்களும் கீதை அறங்களும்

7 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 4, 2019, 1:19:07 PM9/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

http://www.virtualvinodh.com/wp/aksharamukha/ 

அக்‌ஷரமுகம் அருமையான லிபிமாற்றி. இதனை எழுதியவர் வினோத் ராஜன். 2009-ல்
பி.இ. கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர். இப்போது கணி நுட்ப முனைவர்.
அக்‌ஷரமுகம் பற்றி எழுதி, இப்படி ஒரு மென்கலன் வேண்டும் என வேண்டினேன்.
அதை அருமையாகச் செய்தார். அவரது வலைப்பக்கத்தில் எனக்கும் பிறருக்கும்
நன்றி நவின்றுள்ளார்.

இந்திய மொழிகள் எழுதப்படும் பிரதேச எழுத்துகள் அரசியல், சினிமா, சங்கீதம், 
... போன்றன பற்றிப் பேசுபவை. எந்த இந்திய பாஷையிலும் நவீன விஞ்ஞான,
தொழில்நுட்ப ஆய்வுகள் நிகழ்வதில்லை. கல்லூரிகளிலும் உயர் மருத்துவம்,
விஞ்ஞானம், எஞ்சினீரிங், ஐடி உயர்கல்வி இல்லை. பாரத நாட்டு மக்கள்
உறவாடல் வளர்ச்சிக்கு பிரதேச இலிபிகளுடன், அதற்கு இணையான
ஆங்கில/ரோமன் எழுத்துக்களும் பயன்படுத்தல் வேண்டும். உதாரணம்:
மத்திய சர்க்கார் ஆபீஸ்கள், ரயில்கள், போஸ்ட்,, ஹிந்தி லிபியுடன்
ஆங்கில(ரோமன்) லிபி ஐஎஸ்ஓ 15919 எழுத்துப்பெயர்ப்பும் வேண்டும்.
सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।  
ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।

அக்‌ஷரமுகத்தால், ரோமன் எழுத்தில்:

sukha du:khē samē kr̥tvā lābhālābhau jayājayau . 
tatō yuddhāya yōjyasya naivaṁ pāpamavāpsyasi ..  

அனைவரும் படிக்க எளிதாகும்.

இன்னும் இந்தியாவில் ட்ரான்ஸ்லிட்டரேஷன், பிராமியில் இருந்து தோன்றும்
எல்லா இந்திய எழுத்துகளின் உறவுகள் கருத்தாடலில் பொது எழுத்தின் பங்கு
பலர் அறியாமல் உள்ளனர். செயற்கையான சுவர்கள் இந்த ரீஜனல் எழுத்துகளால்
கட்டப்படுகின்றன. லோக்கல் அரசியல் பொழுதுபோக்குகளுக்கு தனித்தனி
லிபிகள் சிறந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக
இந்தியா வல்லரசு ஆக, ஆங்கில லிபியும் முக்கியப் பங்காற்ற வல்லமை கொண்டது.

நன்றி,
நா. கணேசன்


 

On Mon, Sep 2, 2019 at 4:04 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, September 2, 2019 at 12:39:44 PM UTC-7, kanmanitamilskc wrote:

மணிமேகலைப் பாத்திரங்களும் கீதை அறங்களும்

 

(திருச்செந்தூர் தமிழாய்வு மன்றம் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 1998ல் நடத்திய முதல் கருத்தரங்கில் வாசித்தளித்த இவ் ஆய்வுக்கட்டுரை ஆய்வுப்பொழில் என்னும் கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.)


0.0 முன்னுரை 


சமயம் சார்ந்த அறநூல்களுள் ஒன்று பகவத்கீதை; 18 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஸாங்க்ய யோகம் என்ற தலைப்பில் உள்ள 2ம்  அத்தியாயக் கருத்துக்களுக்கு மணிமேகலைக் காப்பியப் பாத்திரங்கள் விளக்க மாதிரிகளாக அமையும் பாங்கைக் காணலாம். 


1.0 உதயகுமரன்

 

மணிமேகலைக் காப்பியத் தலைவன் உதயகுமரன். காப்பியத்தின் இடையிலேயே உயிரை இழக்கும் இப்பாத்திரம் தொடக்கத்திலிருந்தே வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. பாத்திரம் அறிமுகமாகும் போது காட்டப்படும் மேன்மை நிலையையும், தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகள் வீழ்ச்சிப் போக்கு உடையனவாக இருத்தலையும் காணலாம். 


1.1 பாத்திர அறிமுகம்- மேன்மை நிலை 

 

காப்பியத்தின் தொடக்கத்தில் வெறி கொண்டு ஓடிய பட்டத்து யானையின் சினத்தை அடக்கி வருபவனாகவே சாத்தனார் உதயகுமரனைக் காட்டுகிறார். (பளிக்கறை புக்க காதை- அடி.- 27-50) மன்னன் மகனாகிய அவன் தன் அரசியல் பொறுப்பிற்கேற்ப மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறான். கடமையில் இருந்து தவறாத அவன் பண்பு அவனை முதலில் ஏற்றமிகு தலைவனாகவே காட்டுகிறது.


 सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।  

ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।

"இன்பத்தையும் துன்பத்தையும் பேற்றையும் இழப்பையும் வெற்றி 

தோல்விகளையும் சமமாகக் கருதி மனஅமைதியுடன் இப்போரினை 

மேற்கொள்ள ஆயத்தப்படு. நீ பாவத்தை அடைய மாட்டாய்"



கண்மணி, தேவநாகரி எழுத்துக்களை அறிந்தோர் மட்டுமே அந்த எழுத்தில் உள்ளதைப் படிக்க இயலும்.


सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।  

ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।


என்பதை


ஸுக து:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ. 

ததோ யுத்தாய யோஜ்யஸ்ய நைவம் பாபமவாப்ஸ்யஸி ..


"இன்பத்தையும் துன்பத்தையும் பேற்றையும் இழப்பையும் வெற்றி 

தோல்விகளையும் சமமாகக் கருதி மனஅமைதியுடன் இப்போரினை 

மேற்கொள்ள ஆயத்தப்படு. நீ பாவத்தை அடைய மாட்டாய்"


என்று எழுதினால் புழக்கத்தில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை அடையாளம் கண்டு படிப்பவர் அறிய முடியும்; அதனை மனனம் செய்ய விரும்புபவருக்கும் உதவும்.


உங்களுக்கு விருப்பமிருந்தால் இவ்வாறு மாற்ற உதவக்கூடிய தளம்


அக்ஷரமுகா இணைப்பு 

http://www.virtualvinodh.com/wp/aksharamukha/


இதனை எனக்கு எனது தோழி பார்வதி ராமச்சந்திரன் சொல்லித் தந்தார்.



 

 (ஸ்லோ.- 38) என்று அர்ச்சுனனுக்குக் கண்ணன் கூறும் உபதேச மொழிகளுக்கு  

ஏற்ப உதயகுமரன் தனக்கு நேரும் இன்பதுன்பத்தைப் பற்றியும், புகழ் அல்லது இழப்பைப் பற்றியும், வெற்றி தோல்வியைப் பற்றியும் நின்று சிந்திக்கவில்லை. ஆனால் தன் நாட்டிற்குத் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறான். 


1.2.0 உதயகுமரன் வீழ்ச்சி- குறைபாடு 

 

1.2.1 புலனடக்கமின்மை

 

களிறடக்கி வரும் உதயகுமரன் எட்டிகுமரனிடம் முதலில் பேசும் உரையாடலில் காப்பியத் தலைவி மணிமேகலை இடம் பெறுகிறாள். அவள் பெயரைக் கேட்டவுடன் உதயகுமரனுக்கு அவள் அழகு நினைவில் எழ; அவளை அடையத் துடிக்கும் ஆசையும் மிகுதியாகிறது. (மேற். -அடி. -46-77)


ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषू पजायते। 

सङ्गात संजायते कामः कामातक्रोधो भिजायते।।

"பொறிகளின் இன்பத்திற்காக ஒரு மனிதன் வாழ்கின்ற போது அவற்றிற்காக அவனுள் கவர்ச்சி- பற்றுதல் எழுகிறது. கவர்ச்சியினின்று அவா- உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் இச்சை எழுகிறது."(மேற்.- 62)


என்ற கீதை வாசகத்திற்கேற்ப உதயகுமரன் புலனடக்கமின்மையால் மணிமேகலையின் மேல் ஆசைப்பட்டு; அவள் தோழி சுதமதியிடம் தகாத வார்த்தைகளைப் பேசுகிறான். (மேற்.- அடி.- 61-104) அவள் கூறும் அறிவுரைகளும் அவன் மனதை மாற்றவில்லை. ‘சித்திராபதி மூலமாக அவளை அடைவேன்’ என்னும் வெறி மிகுவதைக் காண்கிறோம். (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை- அடி.- 81-82)

 

1.2.2 புலனடக்கமின்மையின் விளைவு:


इन्द्रियाणां हि चरतां यन्मनो  नुविधीयते

तदस्य हरति प्रज्ञां वायुनार्वमिवां मसि ll     

"அலையும் இந்திரியங்களின் ஓர் ஏக்க வெறியினுக்கு மனம் 

தள்ளப்பட்டுப் போயிருக்கும் போது; கடலலை மேல் காற்று ஒரு 

தோணியை அடித்துச் செல்வதைப் போல; இந்த ஏக்கவெறி 

மனிதஅறிவை அடித்துக் கொண்டு போய் விடுகிறது."(மேற்.- 67)


என்று கீதை புலனடக்கமின்மை பற்றிப் பேசுகிறது. இக்கூற்று உதயகுமரன் வாழ்வில் அப்படியே நிகழ்வதைக் கதைப்போக்கில் காண்கிறோம். தான் கண்ட கனவின் விளைவாக மணிமேகலையைத் தொல்லை செய்யாமல் இருந்த உதயகுமரனை; சித்திராபதி வந்து தூண்டியவுடன்; மீண்டும் அவளை நாடிச் செல்கிறான். புலனடக்கமின்மை காரணமாக அவன் மனம் அலைபாய்ந்தமையே இதற்குக் காரணமாகும். சித்திராபதியின் சொற்களாகிய காற்று அவன் மனத் தோணியைத் தன் போக்கில் இழுத்துச் சென்று விடுகிறது. (உதயகுமரன் அம்பலம் புக்க காதை-அடி.- 55-112) இதன் விளைவாக உலக அறவிக்கு அவளைத் தொடர்ந்து செல்கிறான். காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையிடம் அவள் உருமாறியிருந்த செய்தியை ஊகித்துச் சென்று பேசியபோது; அங்கு வந்த விஞ்சையன் பிறழ உணர்ந்து வாளால் வீழ்த்துகிறான். (காதை- 18,19,20) இவ்வாறாகப் புலனடக்கமின்மை காரணமாக ஆசை மிகுந்து; அது வெறியாகித் தன் கட்டுக்குள் அடங்காமல் அறிவினை இழந்த நிலையில் தன் முடிவை எய்துகிறான் உதயகுமரன்.

 

2.0 மணிமேகலை


காப்பியத்தலைவி மணிமேகலை அறிமுகத்திலிருந்து இறுதிவரை படிப்படியாக உயர்ந்து உன்னதநிலை அடைகிறாள்.

 

2.1 அறிமுகநிலையும்; புலனடக்கத்தால் வளர்ச்சியும்

 

தாயின் வாய்மொழியாகத் தன் தந்தைக்கு நேர்ந்த முடிவு கேட்டு மனம் கலங்கிக் கண்ணீர் வடிப்பவளாகவே முதலில் அவளை அறிமுகம் செய்கிறார் சாத்தனார். (மலர்வனம் புக்க காதை- அடி.- 1-15) ஆனால் இதையடுத்து நிகழ்வன அனைத்தும் படிப்படியாக அவள் பண்பட்டவளாக மாறும் வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகின்றன.

"கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்

வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டி என்று 

இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது 

புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்   

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 

இதுவே யாயின் கெடுக அதன்திறம்" (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை- அடி. - 66-71)

என்று தன் மனத்தைத் தானே அடக்குபவளாக மணிமேகலை காட்சியளிக்கிறாள்.


यदा संहरते चायं कूर्मो ङ्गानीव सर्वश 

नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ll   

"ஆமை தனது எல்லா அவயவங்களையும் உள்ளிழுத்துக் கொள்வது 

போல் மனதில் மறைந்திருக்கும் ஆசை எண்ணங்கள் திரும்பவும் நினைவுபடுத்தப்படும் பொழுது பொறிகளின் இன்பங்களுக்குரிய கவர்ச்சிகளினின்றும் தனது பொறிகளை உள்ளடக்கிக் கொள்வோன் எவனோ அவனது அறிவே உறுதியான அறிவாகும்." (மேற். -58) என்று


 அர்ச்சுனனுக்காகக் கண்ணன் கூறும் வாக்கியத்திற்கேற்ப மணிமேகலை தன் மனதைக் கட்டுப்படுத்தி உதயகுமரன் மேலுள்ள காதலை முளையிலேயே கிள்ளி எறிகிறாள். இதன் விளைவாக ஒரு நிலைப்பட்ட அறிவுடையவளாக வளர்வதை நாம் காப்பியப் போக்கில் காண்கிறோம்.


2.2 புலனடக்கத்தின் விளைவு நிலைப்பட்ட அறிவு 


  य:सर्वत्रानभिस्नेहस तत्त त्प्राप्य शुभाशुभम l 

नामिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ll 

(தொடரும்)

சக


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/108d0323-1fc6-41a9-8006-7835b41ba800%40googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 4, 2019, 2:46:28 PM9/4/19
to mintamil, vallamai
.
///ஆங்கில(ரோமன்) லிபி ஐஎஸ்ஓ 15919 எழுத்துப்பெயர்ப்பும் வேண்டும்
सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।  
ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।
அக்‌ஷரமுகத்தால், ரோமன் எழுத்தில்:
sukha du:khē samē kr̥tvā lābhālābhau jayājayau . 
tatō yuddhāya yōjyasya naivaṁ pāpamavāpsyasi ..  ///

இந்த ISO15919 பற்றி ஏற்கெனவே ஒருமுறை இன்னொரு இழையில் சொல்லி இருந்தீர்கள்.
நான் அப்போது சொன்னதையே இப்போதும் சொல்கிறேன்.
இங்கே ஒலிபெயர்த்து எழுதியிருப்பது phonetic script தான்.
நீங்கள் எதோ ஒரு குழுவில் சேர்ந்திருந்து ISO எழுத்துப் பெயர்ப்புக்கு நிர்ணயித்த குறியீடுகள் 30ம் (12உயிர் &18 மெய்) நாங்கள் 1976ல் முனைவர் முத்துச்சண்முகனார் புத்தகத்தில் படித்த ஒலியியல் குறியீடுகளே.
நாங்கள் படிப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னரே அவர் தன் மொழியியல் புத்தகத்தை எழுதி விட்டார்.
அவர் புத்தகம் எழுதும் முன்னரே மொழியியல் & ஒலியியல் குறியீடுகள் வல்லுநர்களால் நிர்ணயிக்கப்பட்டு உலக வழக்கத்திற்கு வந்து விட்டன. மாணவர் உலகம் அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி விட்டன; இன்றும் பயன்படுத்துகின்றன.
அப்படி இருக்கும் போது எதற்காக இந்த ISO ------ எல்லாம்? புரியவில்லை.

இங்கே நீங்கள் ஒலிபெயர்த்து எழுதி இருக்கும் ஸ்லோகத்தில் naivam என்ற பதத்தில் /m / ஒலியியல் குறியீட்டிற்கு மேல் புள்ளி வைத்துள்ளீர்கள்.
அது தேவை அற்றது. नैवं என்ற பதத்தில் மேலே உள்ள புள்ளிக்கு /ம் / என்று ஒலிப்பு உண்டு, m போட்டு மேலே புள்ளி வைக்க வேண்டிய தேவை இல்லை.
நாங்கள் வகுப்பில் அமர்ந்து எங்கள் ஆசிரியர் கற்றுக் கொடுத்த phonetic script ஐ நீங்கள் பயன்படுத்திக் கொண்டதில் தவறில்லை.
ஆனால் phonetic script என்ற பெயரை விட்டுவிட்டு புதிதாக அதற்கு அதிகார பூர்வமாக வேறு பெயரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
phonetic script ஏற்கெனவே வாசித்துப் பழகியவருக்கு இந்த ஒலிபெயர்ப்பை வாசிப்பது எளிது தான்.
சக 

On Wed, Sep 4, 2019 at 11:45 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

கீழ்க்காணும் இக்கருத்துகளில்  உள்ள முரண் வியக்க வைக்கிறது!!!

////
எந்த இந்திய பாஷையிலும் நவீன விஞ்ஞான,
தொழில்நுட்ப ஆய்வுகள் நிகழ்வதில்லை. கல்லூரிகளிலும் உயர் மருத்துவம்,
விஞ்ஞானம், எஞ்சினீரிங்ஐடி உயர்கல்வி இல்லை. 
////

///
ஒட்டுமொத்தமாக
இந்தியா வல்லரசு ஆக, ஆங்கில லிபியும் முக்கியப் பங்காற்ற வல்லமை கொண்டது.
///


இக்கால அறிவியல், மருத்துவம், பொறியியல்  இன்னபிற என எதுவும் இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்பதுதான் பட்டாங்கு என்றால் 
அனைத்து மொழிகளிலும் உள்ள எவற்றை ஆங்கில எழுத்துருவில் மாற்றிப் படித்து இந்தியா வல்லரசு ஆக வேண்டும்?

kanmani tamil

unread,
Sep 4, 2019, 2:53:23 PM9/4/19
to mintamil, vallamai
///இந்தியா வல்லரசு ஆக, ஆங்கில லிபியும் முக்கியப் பங்காற்ற வல்லமை கொண்டது /// 

அந்த எழுத்துக்கள் ஒலியியல் குறியீடுகள். ஆங்கில எழுத்துக்கள் என்று சொல்வதே தவறு.
Your way of expression is wrong.
Those symbols are there in the phonetic script which is common for all the languages in the world.
மேலுள்ள இரண்டு வரிகளிலும் இருப்பவை ஆங்கில எழுத்துக்கள்.
Sk

N. Ganesan

unread,
Sep 4, 2019, 4:27:27 PM9/4/19
to மின்தமிழ், vallamai
On Wed, Sep 4, 2019 at 1:53 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///இந்தியா வல்லரசு ஆக, ஆங்கில லிபியும் முக்கியப் பங்காற்ற வல்லமை கொண்டது /// 

அந்த எழுத்துக்கள் ஒலியியல் குறியீடுகள். ஆங்கில எழுத்துக்கள் என்று சொல்வதே தவறு.
Your way of expression is wrong.
Those symbols are there in the phonetic script which is common for all the languages in the world.
மேலுள்ள இரண்டு வரிகளிலும் இருப்பவை ஆங்கில எழுத்துக்கள்.
Sk

நன்கறிவேன். ஆங்கில எழுத்துக்கள் என்பதை விட ரோமானிய எழுத்துக்கள் என்பதே சரி.
எளிதில் புரிய “ஆங்கில” எழுத்து என்றேன். அவ்வளவுதான்.

முன்பும் சொல்லியுள்ளேன் என நினைவு.
நீங்கள் குறிப்பிடுவது: IPA  https://en.wikipedia.org/wiki/International_Phonetic_Alphabet
எல்லோரும் IPA  பய்ன்படுத்த மாட்டார்கள்.

சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ... இவற்றின் இலக்கியங்களை
எழுதப்பயன்படுவது Transliteration. சுமார் 200+ ஆண்டுகளாய்.
///ஆங்கில(ரோமன்) லிபி ஐஎஸ்ஓ 15919 எழுத்துப்பெயர்ப்பும் வேண்டும்
सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।  
ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।
அக்‌ஷரமுகத்தால், ரோமன் எழுத்தில்:
sukha du:khē samē kr̥tvā lābhālābhau jayājayau | 
tatō yuddhāya yōjyasya naivaṁ pāpamavāpsyasi || ///

ṁ  - இது அனுஸ்வாரம்.

பிரதேச எழுத்துகள், அவற்றை இணைக்கும் பாலமாக ISO 15919 கற்பிக்கப்பட்டு
உபயாகத்திற்கு வந்தால் விளங்கும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Sep 4, 2019, 4:54:00 PM9/4/19
to மின்தமிழ், vallamai
இன்று ஐ.டி போன்ற துறைகளால் 170 பில்லியன் $ வருமானத்தை இந்தியா ஈட்டுகிறது. காரணம், இந்தியாவில் ஆங்கிலம் நிலைநிறுத்தப்பட்டது. இதற்குத் தமிழ்நாட்டின் பங்கு தலையானது. அதே போல, பிரதேச எழுத்துகள் மற்ற மொழிபேசுவோரிடம் தேவையில்லை. அனைர்க்கும் பொதுவான ரோமன் எழுத்தைப் பயன்படுத்தினால்
மாநிலங்களுக்கிடையே  உறவுகள் வலுப்படும். உ-ம்: தென்னிந்திய மாநிலங்கள் நான்கும் என்ன எழுதப்பட்டுள்ளது
என அறிய “ஆங்கில” (ரோமன்) எழுத்து பெரிதும் பயன்படும். இது 2 நூற்றாண்டாய் மேலைநாடுகளில் பயன் ஆகும் முறை. இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டால் நன்று.

----

sukha du:khē samē kr̥tvā lābhālābhau jayājayau |
tatō yuddhāya yōjyasya naivaṁ pāpamavāpsyasi ||

"இன்பத்தையும் துன்பத்தையும் பேற்றையும் இழப்பையும் வெற்றி
தோல்விகளையும் சமமாகக் கருதி மனஅமைதியுடன் இப்போரினை
மேற்கொள்ள ஆயத்தப்படு. நீ பாவத்தை அடைய மாட்டாய்"

indriyāṇāṁ hi caratāṁ yanmanō nuvidhīyatē |
tadasya harati prajñāṁ vāyunārvamivāṁ masi ll


"அலையும் இந்திரியங்களின் ஓர் ஏக்க வெறியினுக்கு மனம்
தள்ளப்பட்டுப் போயிருக்கும் போது; கடலலை மேல் காற்று ஒரு
தோணியை அடித்துச் செல்வதைப் போல; இந்த ஏக்கவெறி
மனிதஅறிவை அடித்துக் கொண்டு போய் விடுகிறது."(மேற்.- 67)

yadā saṁharatē cāyaṁ kūrmō ṅgānīva sarvaśa |
nābhinandati na dvēṣṭi tasya prajñā pratiṣṭhitā ll


"ஆமை தனது எல்லா அவயவங்களையும் உள்ளிழுத்துக் கொள்வது
போல் மனதில் மறைந்திருக்கும் ஆசை எண்ணங்கள் திரும்பவும் நினைவுபடுத்தப்படும் பொழுது பொறிகளின் இன்பங்களுக்குரிய கவர்ச்சிகளினின்றும் தனது பொறிகளை உள்ளடக்கிக் கொள்வோன் எவனோ அவனது அறிவே உறுதியான அறிவாகும்." (மேற். -58)

ya:sarvatrānabhisnēhasa tatta tprāpya śubhāśubhama l
nāminandati na dvēṣṭi tasya prajñā pratiṣṭhitā ll
"எங்கும் எல்லாத் தளைகளினின்றும் விடுதலை பெற்றவன்; அதிர்ஷ்டவசத்தால் நன்மை வரும்போது மகிழ்ந்து கூத்தாடாதவன்; துரதிர்ஷ்ட வசத்தால் துன்பம் வரும்போது வருந்தி அழாதவன் இவனது அறிவே உறுதியான ஒரு நிலையானது." (மேற். -57)

karmaṇyē vādhikārastē mām̐ phalēṣu kadācana |
mā karmaphalahēturbhūrmā tē saṅgō stvakarmaṇi ||

yōgasthaḥ kuru karmāṇi saṅga tyaktavā dhanañjaya |
siddhayasiddhayō samō bhūtvā samatvaṁ yōga ucyatē ||

"உனது இதயத்தை உனது கடமையில் நிலைநாட்டு; ஆனால் ஒருபோதும் அதனின்று வரும் பலனுக்காக அல்ல. ஒரு பலனைக் கருதிப் பணி செய்யாதே; ஆயினும் நினது பணியைச் செய்யாமல் ஒருபோதும் இராதே.தன்னலமிக்க ஆசைகளினின்று விடுபட்டு; வெற்றி தோல்விகளில் அசைக்கப்படாதவனாய் எப்பொழுதும் ஒன்று போல் உள்ள சமன் செய்யப்பட்ட மனநிலையுடன் உன் தொழிலைச் செய்." (மேற்.- 47& 48)

du: khēṣavanudvignamanā: sukhēṣu vigata spr̥ha: |
vītarāgabhayakrōdha: sthitadhīra muni rucyatē ||

"துன்பங்களால் துன்பப்படாத மனத்தினனாய் இன்பங்களுக்காக
விருப்பமேதும் இல்லாதவன்; பற்று வெறிகளைக் கடந்து அச்சமும் கோபமும் நீங்கியவனே- கலக்கமில்லாத உறுதியான மனம் படைத்த முனிவன்." (மேற்.- 56) என்கிறான் கண்ணன்.  

N. Ganesan

unread,
Sep 6, 2019, 7:03:55 AM9/6/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai


இந்த ISO15919 பற்றி ஏற்கெனவே ஒருமுறை இன்னொரு இழையில் சொல்லி இருந்தீர்கள்.
நான் அப்போது சொன்னதையே இப்போதும் சொல்கிறேன்.
இங்கே ஒலிபெயர்த்து எழுதியிருப்பது phonetic script தான்.
நீங்கள் எதோ ஒரு குழுவில் சேர்ந்திருந்து ISO எழுத்துப் பெயர்ப்புக்கு நிர்ணயித்த குறியீடுகள் 30ம் (12உயிர் &18 மெய்) நாங்கள் 1976ல் முனைவர் முத்துச்சண்முகனார் புத்தகத்தில் படித்த ஒலியியல் குறியீடுகளே.
நாங்கள் படிப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னரே அவர் தன் மொழியியல் புத்தகத்தை எழுதி விட்டார்.
அவர் புத்தகம் எழுதும் முன்னரே மொழியியல் & ஒலியியல் குறியீடுகள் வல்லுநர்களால் நிர்ணயிக்கப்பட்டு உலக வழக்கத்திற்கு வந்து விட்டன. மாணவர் உலகம் அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி விட்டன; இன்றும் பயன்படுத்துகின்றன.
அப்படி இருக்கும் போது எதற்காக இந்த ISO ------ எல்லாம்? புரியவில்லை.

இங்கே நீங்கள் ஒலிபெயர்த்து எழுதி இருக்கும் ஸ்லோகத்தில் naivam என்ற பதத்தில் /m / ஒலியியல் குறியீட்டிற்கு மேல் புள்ளி வைத்துள்ளீர்கள்.
அது தேவை அற்றது. नैवं என்ற பதத்தில் மேலே உள்ள புள்ளிக்கு /ம் / என்று ஒலிப்பு உண்டு, m போட்டு மேலே புள்ளி வைக்க வேண்டிய தேவை இல்லை.
நாங்கள் வகுப்பில் அமர்ந்து எங்கள் ஆசிரியர் கற்றுக் கொடுத்த phonetic script ஐ நீங்கள் பயன்படுத்திக் கொண்டதில் தவறில்லை.
ஆனால் phonetic script என்ற பெயரை விட்டுவிட்டு புதிதாக அதற்கு அதிகார பூர்வமாக வேறு பெயரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
phonetic script ஏற்கெனவே வாசித்துப் பழகியவருக்கு இந்த ஒலிபெயர்ப்பை வாசிப்பது எளிது தான்.
சக 


இன்று ஐ.டி போன்ற துறைகளால் 170 பில்லியன் $ வருமானத்தை இந்தியா ஈட்டுகிறது. காரணம், இந்தியாவில் ஆங்கிலம் நிலைநிறுத்தப்பட்டது. இதற்குத் தமிழ்நாட்டின் பங்கு தலையானது. அதே போல, பிரதேச எழுத்துகள் மற்ற மொழிபேசுவோரிடம் தேவையில்லை. அனைர்க்கும் பொதுவான ரோமன் எழுத்தைப் பயன்படுத்தினால்
மாநிலங்களுக்கிடையே  உறவுகள் வலுப்படும். உ-ம்: தென்னிந்திய மாநிலங்கள் நான்கும் என்ன எழுதப்பட்டுள்ளது
என அறிய “ஆங்கில” (ரோமன்) எழுத்து பெரிதும் பயன்படும். இது 2 நூற்றாண்டாய் மேலைநாடுகளில் பயன் ஆகும் முறை. இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டால் நன்று.

பேரா. முத்துச் சண்முகனை சிலமுறை பார்த்ததுண்டு. கடைசிக் காலத்தில் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில்
சில ஆண்டுகள் இருந்தார். அவர் குறுந்தொகை (டேவிட் லுட்டனுடன்), பரிபாடல் நூல்களைப் பாருங்கள்.
ஐஎஸ்ஓ 15919 எழுத்துப்பெயர்ப்பில் தான் தமிழை எழுதியுள்ளார். IPA-வில் இல்லை.

நேற்று ஒரு கடினமான மொழியியல் கட்டுரை மேலோட்டமாகப் படித்தேன். இந்தோ-ஆர்ய மொழிகள்
இந்தோ-ஐரோப்பிய மொழியில் இருந்து விலகுவதைப் பற்றிச் சொல்லியுள்ளார் ஆசிரியர். இதுபற்றி
ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நூலும் அண்மையில் எழுதியுள்ளார். அதைப் படித்தால் ஓரளவு புரியும் 
என நினைக்கிறேன். 
ஐரோப்பிய மொழிகளில் preposition-களாக இருக்கும் தன்மை மாறி, இந்தியாவில் ஆரிய மொழிகள்  postpositions
ஆகிவிடுகின்றன. இவர் குறிப்பிடுவது: ஹிந்தியில் கோ என்னும் வேற்றுமை கக்‌ஷே (<கக்‌ஷ) என்னும்
ஆரியச்சொல் என்கிறார். ஆனால், உதாரணங்களை (முக்கியமாக நான்காம் வேற்றுமை) பார்க்கும்போது
கு (திராவிடம்) தான் மாறி கோ என ஹிந்தியில் வழங்குகிறது எனத் தோன்றுகிறது. இதுபற்றி, எமனோ
போன்றோர் எழுதியுள்ளனர். கக்‌ஷ > கக்கம், கக்‌ஷே, கச்சம். இவர்றுக்கும் “கோ” என்னும் ஹிந்தி வேற்றுமை உருபுக்கும்
தொடர்பில்லை எனக் கருதுகிறேன். தமிழ் மொழியியலார் தமிழிலோ, ஆங்கிலத்திலோ இதுபற்றி எழுதியுளரா.என
அறிய ஆவல். தனி இழையில் கேட்கிறேன்.

கக்‌ஷ- என்னும் வடசொல்லில் இருந்து கக்‌ஷி தென்னாட்டின் 4 மொழிகளிலும் நன்குபயன்படுகிறது. அதுபற்றி
விரிவாக ஆதாரங்களுடன் எழுதியுமிருக்கிறேன். ஆனால், கக்‌ஷ வேறு, கோ என்னும் இந்தி வேற்றுமை வேறு
என்பது என் புரிதல். கக்‌ஷ- >> கோ பற்றி கெல்லாக் 1893-ல் ஹிந்தி இலக்கண நூலில் எழுதியிருப்பதைப் பார்ப்போம்.
அது ஏற்கும்படியாக இல்லை.

--------------

லிபிபெயர்ப்பு (அ) எழுத்துப்பெயர்ப்புக்கு வருவோம். ஆங்கில பாஷையை நிலைநிறுத்தியது போல,
ரோமன் எழுத்துப்பெயர்ப்பைப் பரவலாக்குவது இந்தியாவில் தமிழ்நாடு முன்னிற்க வேண்டும். இந்தி
எழுத்தில் எழுதுவதன் கீழே ரோமன் எழுத்திலும் அவ்வாசகங்கள் காட்டப்பெறல் வேண்டும். 
அமெரிக்கா 22 ட்ரில்லியன் $, சீனா 16 ட்ரில்லியன் $, இந்தியா 2.8 ட்ரில்லியன் $ - இந்தியாவின்
பொருளாதாரம் மேம்பட இந்திய மொழிகள் ரோமன் எழுத்திலும் எழுதுதல் உதவும். பிராமியில்
இருந்து தோன்றிய எழுத்துகள் செயற்கையான சுவர்களை எழுப்புகின்ற்ன. உ-ம்:
யேசுதாஸ் பாடிய பாடலைப் படித்துப் புர்ந்துகொள்ள “ஆங்கில” எழுத்து உதவுகிறது.
இதேபோல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ..... எல்லாவற்றுக்கும் ரோமன் எழுத்தும் வேண்டும்.

யேசுதாஸ் பாடல் ஒன்றில் (1992) கக்ஷிகள் இந்திய மாநிலங்களில் கூடி வருவதைப் பாடியுள்ளார்.
ஐ.டி. தொழில் வேலைவாய்ப்பு நலிவுக்குப் பொருந்தும் பாடல். மலையாள லிபியில்
எழுத்துக்கூட்டிப் படிப்பதை விட இந்த “ஆங்கில” எழுத்து படிக்க எளிது.
எல்லோருக்கும் சம தூரமான மொழி ஆங்கிலம் இந்தியாவுக்கு வேண்டும் என்றார் அண்ணா.
அதேபோல, இந்தியர் எல்லோருக்கும் சம ட்தூரமாக இருப்பதும், இந்தியாவில்
வேகமாக வளர்ந்து வரும் ஆங்கிலக் கல்வியாலும், எழுத்துப்பெயர்ப்பு முறை
இந்திய மாநிலங்களுக்கு இடையே சம நிலை உருவாக்கும். இல்லையேல், இந்தி எழுத்துத்
திணிப்பு தான் மிஞ்சும். அதற்கு நல்ல மருந்துதான் இந்த எழுதுமுறை. அனைவர்க்கும்
பொதுவானது. 

nō vēkkansi nō vēkkansi nō vēkkansi
bīyēkkāranuṁ nō vēkkansi
bi es sikkāranuṁ nō vēkkansi
eṁ e kkāranuṁ nō vēkkansi
eṁ es sikkāranuṁ nō vēkkansi

bīyēkkāranuṁ bi es si kkāranuṁ
eṁ e kkāranuṁ eṁ es sikkāranuṁ
onnāṁ klāssu vāṅṅiyōnuṁ nō vēkkansi nō vēkkansi
onnāṁ ṟāṅkil pāssāyōnuṁ nō vēkkansi nō vēkkansi
(bīyēkkāranuṁ..)

kuṭṭikaḷ dinaṁ perukunnu nāṭṭil
kakṣi tan eṇṇaṁ kūṭunnu nāṭṭil
vaṇṭikaḷ tiṅṅi oḻukunnu ṟōḍil
vañcana ennuṁ vaḷarunnu eṅkil (kuṭṭikaḷ..)
(bīyēkkāranuṁ..)

nanmakaḷ kattiyeriyunnu maṇṇil
dharmmamāṁ pakṣi karayunnu viṇṇil
daivamē ninṟe pēril mataṅṅaḷ
nityavuṁ raktaṁ coriyunnu tammil
(bīyēkkāranuṁ..)  

நா. கணேசன்

വരികള്‍

Added by ജിജാ സുബ്രഹ്മണ്യൻ on November 4, 2010

നോ വേക്കൻസി നോ വേക്കൻസി നോ വേക്കൻസി
ബീയേക്കാരനും നോ വേക്കൻസി
ബി എസ് സിക്കാരനും നോ വേക്കൻസി
എം എ ക്കാരനും നോ വേക്കൻസി
എം എസ് സിക്കാരനും നോ വേക്കൻസി

ബീയേക്കാരനും ബി എസ് സി ക്കാരനും
എം എ ക്കാരനും എം എസ് സിക്കാരനും
ഒന്നാം ക്ലാസ്സു വാങ്ങിയോനും നോ വേക്കൻസി നോ വേക്കൻസി
ഒന്നാം റാങ്കിൽ പാസ്സായോനും നോ വേക്കൻസി നോ വേക്കൻസി
(ബീയേക്കാരനും..)

കുട്ടികൾ ദിനം പെരുകുന്നു നാട്ടിൽ
കക്ഷി തൻ എണ്ണം കൂടുന്നു നാട്ടിൽ
വണ്ടികൾ തിങ്ങി ഒഴുകുന്നു റോഡിൽ
വഞ്ചന എന്നും വളരുന്നു എങ്കിൽ (കുട്ടികൾ..)
(ബീയേക്കാരനും..)

നന്മകൾ കത്തിയെരിയുന്നു മണ്ണിൽ
ധർമ്മമാം പക്ഷി കരയുന്നു വിണ്ണിൽ
ദൈവമേ നിന്റെ പേരിൽ മതങ്ങൾ
നിത്യവും രക്തം ചൊരിയുന്നു തമ്മിൽ
(ബീയേക്കാരനും..)
Reply all
Reply to author
Forward
0 new messages