மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர், 1956
-----------------------------------
பாலவநத்தம் கிழார் பொ. பாண்டித்துரைத் தேவரும், இராமநாதம் சேதுபதி மன்னரும் ஆதரவு நல்கி, மதுரைத் தமி
ழ்ச் சங்கம் 1901-ல் தொடங்கியது. பல தமிழ் இலக்கியங்கள் முதன்முதலாக அச்சுவாகனம் ஏறின. செந்தமிழ் என்னும் அரிய ஆய்விதழில் நல்ல கட்டுரைகள். புலவர் தேர்வு முறையாக நடந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பல பெரும்புலவர்கள். மகாவித்துவான் ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் தலைமை வகித்தனர். இருவரும் எழுதிய இரு நூல்களில் தான் கரூர் சேர நாட்டின் தலைநகராக விளங்கியமை வெளிப்பட்டது. சங்க காலத்தில் வஞ்சி மாநகர் எனக் கரூர் அழைக்கப்பட்டது. அரண்மனை இருந்த பகுதி கருவூர். இப்போது “Downtown" என அமெரிக்க நகரங்களில் இருப்பது போன்றதாகும். பின்னாளில், தொல்லியல்துறையினர் சங்க கால வஞ்சி கரூர் என அகழாய்வுகள், நாணயவியல் கொண்டு நிறுவினர் என்பது 20-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு வரலாறு. ஆக, மதுரை, உறந்தை, வஞ்சி மூவேந்தர் தலைநகரங்கள் தமிழ் இன்றும் உள்ள தமிழ்நாட்டின் பெருநகரங்கள். வஞ்சிக்காண்டம் என்று தன் தலைநகர் அரண்மனையில் வாழ்ந்து சிலப்பதிகாரத்தின் இறுதிக்காண்டத்தை அமைத்துள்ளார் இளங்கோவடிகள். குலசேகர ஆழ்வார் காலத்திற்குப் பின் கேரளா பக்கம் சேரர்கள் தலைநகரம் மாறியது.
தற்போது மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சிகள், அதில் நடந்த சம்பவம் பற்றி, பத்திரிகளில் செய்திகள் அடிபடுகின்றன.
மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர் 1956-ல் அச்சாகியது. தமிழவேள் பி. டி. இராசன் பதிப்பாசிரியர். 11 பேராசிரியர் கட்டுரைகள். தொகுப்புக்குப் பேரா. அ. கி. பரந்தாமனார் உதவியிருக்கிறார். மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர் (1956) வாசித்தருள வேண்டுகிறேன்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0015792_மதுரைத்_தமிழ்ச்_சங்க_மலர்.pdfதெரிவு:
நா. கணேசன்
https://nganesan.blogspot.com