நா.முத்துக்குமார்

12 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Aug 18, 2025, 1:21:02 AMAug 18
to வல்லமை

நா.முத்துக்குமார்
______________________________

எத்தனை தடவை உன்னைப் பற்றி
எழுதினாலும்
எழுத்துக்களின் தாகம் தணிவதில்லை.
அந்த தாகமெடுத்த காக்கை
பருக்கைக்கற்களைதேடி ஓடுவது போல்
நானும்
தமிழ் வானத்துக்குள்
சிறகு நுழையாத முடுக்குகளுக்குள்ளும்
கிளறிக்கொண்டிருக்கிறேன்.
நீ
ஒரு கவிஞனுக்கும் மேலான‌
ஒரு கவிஞன்.
ஊர்க்குருவிகள்
மேலும் கீழுமாய் உன்னிடம்
கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருந்த போதும்
சிதறுகின்ற‌
ஒலிப்பிஞ்சுகளிலெல்லாம்
உன் சொற்க‌ளின்
அழகும் நுட்பமும் இன்னுமொரு
மேகக்கூட்டத்தையும்
பிரளய மின்னல் இனிப்புகளையும்
பொழிந்து கொண்டுதான் இருக்கும்.
பொழிந்து கொண்டே இரு.
இந்த நூற்றாண்டுகள் எல்லாம்
தன் அழுக்கு போக‌
குளித்துக்கொண்டிருக்கட்டும்.
_____________________________________________
சொற்கீரன்.
Reply all
Reply to author
Forward
0 new messages