கோள் பெயர் வேரியல்
கோள்களின் பெயர் தான் வாரத்தின் ஏழு நாளையும் குறிக்க இடப்பட்டுள்ளது. வெண்மைக் கருத்தில் இருந்து ஒளிக் கருத்து தோன்றுகிறது. அந்த ஒளிக் கருத்தில் இருந்து அறிவுக் கருத்தும் பின் அழகு, பொலிவு கருத்துக்களும் தோன்றும்.
ஞாயிறு > ஞால் + இறு = ஞாயிறு என்றால் உடலை தைக்கும் ஒளி.
ஞாலல் - மின்மினி பூச்சி. இறு - வீழ்தல், எறிதல், தைத்தல். யா > ஞா > நா என்று திரியும்; வெண்மை, ஒண்மை கருத்துகளை தரும் சொல்லைத் தரும் .யாசுசிதறாணி - கற்பூரம் (வெண்மையானது). எனவே ஆய் < யாய் என்பதற்கு வெண்மை கருத்து உண்டு காண்க.
திங்கள் > திய் + கள். தியதி > தேதி - ஒளிரும் நாள். திய் என்றால் ஒளி. கள் என்றால் கவர்தல். திங்கள் என்றால் பிழம்பாக ஒளிரும் வெண்மைக் கவர்ச்சி.
கள் < கல் - வெள்ளொளி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே நோக்குக. இதன் பொருள் பகல் தோன்றி இரவு தோன்றாத இடைப்பட்ட காலத்தில் என பொருள்.
செவ்வாய் - செ + ஆய். செ என்றால் சிவந்த. ஆய் என்றால் ஒளி. சிவந்த ஒளி என்று பொருள்.
புதன் - புல் + து = புது + அன். புல் என்றால் வெளிச்சம், ஒளி. அறி என்றால் ஒளி. இதாவது, வெளிச்சத்தில் அறிவதே அறிவு என்ற பொருள் தரும். எனவே அறிவன் என்றொரு சொல் ஒளிக் கருத்தில் இன்னொரு பெயராக வழங்குகிறது.
வியாழன் - விய் + ஆழன். விய் என்றால் அகன்ற. ஆழம் என்றால் பெருமிதம். இதாவது அகன்று விரிந்த என்ற பொருளது.
வெள்ளி - வெள் + இய். வெள் என்பது வெண்மை. இய் என்பது ஒளி. இதாவது, வெள்ளொளி என்பதே அதன் பொருள்.
சனி - மஞ்சள் நிறக் கோள். சனி தமிழ் அல்ல என்பர் தமிழறிஞர். சன் வேர் கொண்ட சொற்கள் மஞ்சள் நிற கருத்தை குறிப்பதை காண்க. சனை - மஞ்சள் நிற ஓமம், சனாம்பா - சந்தன மரம், சன்னியம் - மரமஞ்சள். ஏனினும் கருப்பு என்ற பொருளில் காரி என்ற சொல்லும் வழங்குகிறது.
நாளுக்கு வழங்கும் மேற்சொன்ன அத்தனை பெயர்களும் தமிழே. சமற்கிருதம் ஏதும் இல்லை.