கம்பனில் ஒரு கேள்வி - கிரவுஞ்சம்

239 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 27, 2016, 3:29:08 PM6/27/16
to மின்தமிழ், vallamai

வால்மீகி இராமாயணத்தில் கிரவுஞ்ச வதம் முக்கியமாந்து:

கம்பர் அந்த நிகழ்ச்சியைப் பாடியுள்ளாரா? இல்லையா?

------------------

வால்மீகி ராமாயணத்தில் தொடக்கம் ஒரு சுலோகத்தில் இருக்கிறது. க்ரௌஞ்ச பட்சிகளில் ஒன்றை வேடன் அம்பெய்தி வீழ்த்திவிடுகிறான்.

இந்த சுலோகமோ, கதையோ கம்பன் சொல்கிறாரா? அப்படியென்றால், எந்த இடத்தில் - பால காண்டத்திலா?
ஒரு பாட்டா? பல பாட்டா? குருகு (அ) அன்றில் (அ) கிரவுஞ்சம் - எந்த வார்த்தையைப் பய்ன்படுத்துகிறார் கம்பர்?

கிரவுஞ்சம் என்னும் பறவையை அன்றில் என்று காட்டி மொழிபெயர்க்கிறார் கம்பர்.
க்ரௌஞ்ச த்வீபம் என்பதை அன்றில் தீவு எனச் சொல்கிறார்:

        அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
        என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக் 
        குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர்
        சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர்.

”அன்றில் தீவு - அன்றில்    பறவைகள்   நிறைந்த தீவாகலின்
இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். ”

நா. கணேசன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 27, 2016, 10:16:40 PM6/27/16
to வல்லமை
கிரௌஞ்ச பட்சி பற்றிய எனது படைப்பு கீழே இணைப்பில்:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (05) க்ரௌன்ச பக்ஷி.doc

N. Ganesan

unread,
Jun 27, 2016, 11:29:44 PM6/27/16
to வல்லமை, மின்தமிழ்


On Monday, June 27, 2016 at 7:16:40 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
கிரௌஞ்ச பட்சி பற்றிய எனது படைப்பு கீழே இணைப்பில்:

க்ரௌஞ்ச பட்சி என்று சாருஸ் நாரையை எழுதியுள்ளார்கள். இது ஜூலியா லெஸ்லி கட்டுரை வழியில்
ஆங்கிலத்தில் பறவையாளர் எழுதுவது.

ஆனால், க்ரௌஞ்சம் அன்றில் பறவை என 2000 ஆண்டுகளாய் தமிழ் இலக்கியம் பாடுகிறது.
எனவே, க்ரௌஞ்சம் = Indian black ibis.
Red-naped Ibis (Pseudibis papillosa)

அன்றில் என்று இன்னும் ஐபிஸ் பறவைகளை தமிழ் மக்கள் அழைப்பது வழக்கத்தில் இருப்பதாகவும்,
1966-ல் முதலில் கிராமத்தார்களிடம் கேட்டதாகவும் தியடோர் பாஸ்கரன் தெரிவித்தார்.

அன்றில் = க்ரௌஞ்சம்:

நா. கணேசன்

மின்மினி பற்றிய உங்கள் கேள்விக்கு: அது சரியான பெயரே. சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் பார்த்தேன்.

N. Ganesan

unread,
Jun 27, 2016, 11:30:52 PM6/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, June 27, 2016 at 7:08:09 PM UTC-7, Jataayu B wrote:

இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை. 

கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.

நன்றி. நானும் பால காண்டம் முழுதும் தேடினேன். இந்த நிகழ்ச்சியை அவர் பாடவில்லை.
 

வால்மீகி ராமாயணம்,  ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு  ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல்,  வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில்  சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல்,  பிறகு  குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்)  இனிமையாகப் பாடி அதை  நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன.  அதன் பிறகு  அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம்  பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.

கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -

முற்குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக்கடல்  ஆடுதல் நன்று அரோ.

நடையின் நின்று உயர் நாயகன் தான்தரு 
இடைநிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை

இந்த வரிகளில் ராமனின் கல்யாண குணங்களே இந்தக் காவியத்தின் ஊற்றுமுகம் என்பதைச் சொல்லி விடுகிறார்.

பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெறிக்கவே


என்பதில் வால்மீகி மகரிஷியின் பெருமையையும் அவரது கவிதை தெய்வத் தன்மை கொண்டது என்பதையும் கூறுகிறார்.

N. Ganesan

unread,
Jun 28, 2016, 12:25:02 AM6/28/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, June 27, 2016 at 7:08:09 PM UTC-7, Jataayu B wrote:

இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை. 

கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.



வால்மீகி ராமாயணம்,  ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு  ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல்,  வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில்  சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல்,  பிறகு  குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்)  இனிமையாகப் பாடி அதை  நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன.  அதன் பிறகு  அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம்  பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.

கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -

முற்குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக்கடல்  ஆடுதல் நன்று அரோ.

நடையின் நின்று உயர் நாயகன் தான்தரு 
இடைநிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை

இந்த வரிகளில் ராமனின் கல்யாண குணங்களே இந்தக் காவியத்தின் ஊற்றுமுகம் என்பதைச் சொல்லி விடுகிறார்.

பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெறிக்கவே


என்பதில் வால்மீகி மகரிஷியின் பெருமையையும் அவரது கவிதை தெய்வத் தன்மை கொண்டது என்பதையும் கூறுகிறார்.

On Tuesday, June 28, 2016 at 12:59:07 AM UTC+5:30, N. Ganesan wrote:

seshadri sridharan

unread,
Jun 28, 2016, 12:52:39 AM6/28/16
to vall...@googlegroups.com
வேடுவனான ரத்நாகரன் பாடிய முதல் வரி "மா நிஷாத" எனத் தொடங்குவதாக உள்ளது. மா என்றால் வாழமாட்டாய், நிஷாத என்றால் வேடுவனே என்று பொருள். இதாவது, தன் எதிரே ஒரு வேடுவன் குலாவிக்கொண்டிருந்த அன்றில் சோடியில்  ஒன்றினை வீழ்த்திவிடுகிறான். இது பெறாமலேயே இன்னொரு வேடுவனான ரத்நாகரன் உள்ளம் பதைத்து   அவனை  சாவிக்கிறான்.

புங்கன் 

2016-06-28 0:59 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Hari Krishnan

unread,
Jun 28, 2016, 1:39:04 AM6/28/16
to mintamil, vallamai
2016-06-28 7:38 GMT+05:30 Jataayu B <jata...@gmail.com>:
இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை. 

கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.

வால்மீகி ராமாயணம்,  ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு  ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல்,  வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில்  சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல்,  பிறகு  குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்)  இனிமையாகப் பாடி அதை  நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன.  அதன் பிறகு  அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம்  பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.

கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -

கிரெளஞ்ச வதம் என்பது கந்தபுராணத்து நிகழ்வு.  

பரசுராமர் கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி அம்புவிட்டுத் துளைத்தார்.  முருகன் கிரெளஞ்ச மலையை வேலால் தூளடித்தான்.

பரசுராமர் கிரெளஞ்ச மலையைத் துளைத்தது பற்றிய கம்பன் பாடல்:

கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;
பால காண்டம், பரசுராமப் படலம்.


இந்த சிமையக் கிரிதான் கிரெளஞ்ச பர்வதம்.  முற்றோதல் சமயத்தில் இந்தப் பாடலி உள்ள உரைவேற்றுமை குறித்து விவாதித்தது நினைவிருக்கலாம்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Jun 28, 2016, 8:08:39 AM6/28/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, June 27, 2016 at 10:39:06 PM UTC-7, Hari wrote:

2016-06-28 7:38 GMT+05:30 Jataayu B <jata...@gmail.com>:
இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை. 

கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.

வால்மீகி ராமாயணம்,  ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு  ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல்,  வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில்  சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல்,  பிறகு  குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்)  இனிமையாகப் பாடி அதை  நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன.  அதன் பிறகு  அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம்  பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.

கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -

கிரெளஞ்ச வதம் என்பது கந்தபுராணத்து நிகழ்வு.  

பரசுராமர் கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி அம்புவிட்டுத் துளைத்தார்.  முருகன் கிரெளஞ்ச மலையை வேலால் தூளடித்தான்.

பரசுராமர் கிரெளஞ்ச மலையைத் துளைத்தது பற்றிய கம்பன் பாடல்:

கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;
பால காண்டம், பரசுராமப் படலம்.



அருமை. நன்றி.

நா. கண்

N. Ganesan

unread,
Jun 28, 2016, 8:29:10 AM6/28/16
to வல்லமை, மின்தமிழ்


On Monday, June 27, 2016 at 9:52:39 PM UTC-7, புங்கன் wrote:
வேடுவனான ரத்நாகரன் பாடிய முதல் வரி "மா நிஷாத" எனத் தொடங்குவதாக உள்ளது. மா என்றால் வாழமாட்டாய், நிஷாத என்றால் வேடுவனே என்று பொருள். இதாவது, தன் எதிரே ஒரு வேடுவன் குலாவிக்கொண்டிருந்த அன்றில் சோடியில்  ஒன்றினை வீழ்த்திவிடுகிறான். இது பெறாமலேயே இன்னொரு வேடுவனான ரத்நாகரன் உள்ளம் பதைத்து   அவனை  சாவிக்கிறான்.

புங்கன் 

ஆமாம், சேசாத்திரி. 

ஜூலியா லெஸ்லி சம்ஸ்கிருத அகராதிகளில் “க்ரௌஞ்சம்” என்பதர்குக் கொடுக்கப்படும் curlew, snipes எல்லாம் பார்க்கிறார். ராமாயணம் மொழிபெயர்ப்போர் சொல்லும் heron, storks, ... எல்லா இனமும் பார்த்துவிட்டு, sarus crane என சொல்கிறார். ஆனால் தமிழ் கிராமங்களில் இன்றும் “அன்றில்” என அழைக்கப்படும் (மா. கிருஷ்ணன், தியோ பாஸ்கரன், ...) ஐபிஸ் பறவைகளைப் பற்றி அறியவில்லை.
மேலும் அன்றில் = க்ரௌஞ்சம் என்னும் 2000 வருஷ தமிழ் மரபையும் அறிந்தாரில்லை ஜூலியா.

பம்பை ஆறு ஓடும் (ஹம்பி - விஜயநகர தலைநகர்) வர்ணனையில் க்ரௌஞ்சம் (அன்றில்) என சொல்கிறார் வால்மீகி. சாருஸ் நாரை தென்னிந்தியா வருவதில்லை. ராமாயண சுலோகத்தில் உள்ள
’செஞ்சூட்டு அன்றில்’ red crested ibis - க்ரௌஞ்சம். இந்தியா முழுதும் இருக்கும் Indian black ibis வான்மீகத்தில் பொருந்தும் - தமிழ்க் கவிஞர்கள் தான் 2000 வருஷமாக க்ரௌஞ்ச பக்ஷியை அடையாளம்
காட்டியிருப்பவர்கள். இதனை சம்ஸ்கிருத பேரா. ஜூலியா லெஸ்லி போன்றோர் அறியவில்லை. 

பம்பையில் அன்றில் (=கிரவுஞ்சம்) - வாலிம்மிக் ராமாயணத்தில்:
In Kautilya’s Arthashastra in book 14 “Secret Means” there is a line which reads:
“When birds such as a hamsakraunchamay�ra and other large swimming birds are let to fly at night…”
Therefore we can see a Krauncha is (1) LARGE and a (2) SWIMMING BIRD

In the Valmiki Ramayana, we find Kabandha extolling to Rama the features of the Pampa Lake, in which he states “you will trek to an auspicious lotus Lake called Pampa … red and blue lotuses beautify that Pampa Lake. There the dwellers of the Lake’s waters will be letting out peeps in tuneful voice, the Krauncha..”

Therefore we can see a Krauncha (3) DWELLS ON A LAKE and specifically also on the PAMPA LAKE
NOTE: Pampa Lake - "Pampa Sarovar is a lake in Koppal district near Hampi in Karnataka. To the south of the Tungabhadra River, it is considered sacred by Hindus and is one of the five sacred sarovars, or lakes in India. In Hindu mythology Pampa Sarovar is regarded as the place where Pampa, a form of Shiva's consort Parvati, performed penance to show her devotion to Shiva"
(see Map with Tungabhadra River below)
(This also finally misses out the ibises!)
 

2016-06-28 0:59 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

வால்மீகி இராமாயணத்தில் கிரவுஞ்ச வதம் முக்கியமானது:

கம்பர் அந்த நிகழ்ச்சியைப் பாடியுள்ளாரா? இல்லையா?

------------------

N. Ganesan

unread,
Jun 28, 2016, 9:23:38 AM6/28/16
to வல்லமை, minT...@googlegroups.com
ஏன் பம்பையில் கிரவுஞ்சம் வாழ்வதை வால்மீகி வர்ணிக்கின்றார்? அன்றில் (=கிரவுஞ்சம்) வாழும் தென்னிந்தியா ஆனதாலும், அந்த பம்பையாறு
கிரவுஞ்சகிரி வழியே பாய்வதாலும் ஆகும். சண்டூர் - முருகன் கிரவுஞ்ச கிரியை வடிவேலால் தூள் தூளாகப் பொடிசெய்த இடம் சண்டூர் (பெல்லாரி மாவட்டம்),
அதன் அருகே ஹம்பி நகரம் உள்ளது. சசசு, சச்சு, சண்டிசு - to pound, to hit, ... என்கிறது கிட்டல் கன்னட அகராதி. வடிவேலால் சண்டு செய்தது போல
gorges அதிகமாக இயற்கையாகவே உள்ள இடம் சண்டூர். கிரவுஞ்சகிரி குமாரஸ்வாமி கோவில் உள்ள இடம். இந்த மலைத்தொடர்களை
ஸ்வாமிமலை என்று கன்னடியர் அழைக்கின்றனர். தென்னிந்தியாவின் முதல் முருகன் கோவில் இதுதான் என்கின்றனர்.அன்றிலங்கிரியுடன்
சண்டை செய்த ஊர் சண்டூர். இந்த புராணத்துடன் பம்பையில் க்ரௌஞ்சம் (அன்றில்) வாழ்வதை வால்மீகி குறிப்பதும் ஒப்பிடத்தக்கது.

கிரவுஞ்ச பக்ஷி
செஞ்சூட்டு அன்றில் - இந்தியா முழுதும் இருக்கும் பறவை. இந்தியாவில் மட்டும் வாழும் பறவை அன்றில்/க்ரௌஞ்சம்
Pseudibis papillosa map.svg

சாருஸ் நாரைகளுக்கு செஞ்சூடும் இல்லை, தென்னிந்தியாவிலும் இல்லை (குளிர்தேச பறவை ஸாருஸ் நாரை).

N. Ganesan

unread,
Jun 29, 2016, 12:38:08 AM6/29/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Theodore Baskaran


On Monday, June 27, 2016 at 10:39:06 PM UTC-7, Hari wrote:

பரசுராமர் கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி அம்புவிட்டுத் துளைத்தார்.  முருகன் கிரெளஞ்ச மலையை வேலால் தூளடித்தான்.

பரசுராமர் கிரெளஞ்ச மலையைத் துளைத்தது பற்றிய கம்பன் பாடல்:

கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;
பால காண்டம், பரசுராமப் படலம்.


இந்த சிமையக் கிரிதான் கிரெளஞ்ச பர்வதம்.  முற்றோதல் சமயத்தில் இந்தப் பாடலி உள்ள உரைவேற்றுமை குறித்து விவாதித்தது நினைவிருக்கலாம்.



நன்றி. இரண்டு கிரவுஞ்ச மலைகளை இந்தியாவில் குறிப்பிடுகின்றனர்.

(1) ஸ்வாமிமலை என்று குறிப்பிடும் கிரவுஞ்சகிரி கர்னாடகாவில் ஹம்பி அருகே பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சண்டூர்.
சண்டூரில் குமாரஸ்வாமி கோவில். கிரவுஞ்சம் என்னும் அன்றில் குருகின் பேரால் அமைந்த மலையை தூள் ஆக்கியதை
இயற்கை அமைப்பில் இன்றும்காணலாம். கன்னடியர் க்ரௌஞ்சகிரி குமாரஸ்வாமி கோவில்தான் தெக்கணத்தில்
ஏற்பட்ட முதல் முருகன் கோவில் என்கின்றனர். சச்சு/சசசு = சண்டுசு ‘to pound, to hit, to crack open'; இதனால் சண்டூர் என்ற பெயராம்.
வேலால் சுப்பிரமணியசாமி தூளாக்கிய ஸ்தலம்.

(2) சிமையக் கிரி என்று கம்பன் குறிப்பிடுவது இமைய மலையை. மான சரோவர் ஏரி அருகே நிதி கணவாய் (Niti pass) இது
என்றும், பரசுராமர் அம்பு (அ) மழு கொண்டு உருவாகியது என்றும் வடமொழி இலக்கியங்கள் புகல்கின்றன.
மகாபாரதம், காளிதாசரின் மேகதூதம், வாயு புராணம், விஷ்ணு புராணம். 

சிமையம் என்பது இங்கே இமையம் என்பதற்கு சங்க இலக்கியம் பெரும்பாணாற்றுப்படையைக் காட்டலாம்.
இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை, வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப், பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கை”

சிமையத் திமையமும் (சிலப். 6, 28).

சிமையம் ஓங்கிய இமைய மால் வரை - மணி 26/87,88

பரசுராமன் கிரௌஞ்ச கிரியைத் துளைத்து.   பறவைகட்கு  வழியமைத்த
அரிய செய்தி முதல் நூலாம் வான் மீகத்தில் இல்லை என்பர்.

காளிதாசர், புராணங்களில் அன்னப்பறவை ஆண்டுதோறும் 2 முறை இமையம் (< சிமையம் [1]) தாண்டி வலசை வந்துபோக ஏதுவாக
பரசிராமன் செய்த இமையக்கணவாய் பற்றிக் கம்பர் குறித்தது அருமை. உயர்பறவை = உயர்ந்த இமையத்தை தாண்டும்
அன்னப்பறவை. இதனை ஸூப்பர் பறவை என்கின்றனர் பறவையியலாளர், இதன் இதயம் எப்படி அந்த நெடிய, உயர்ந்த
பயணத்தை 2500 மைல்கள் தாண்டுகிறது என்று ஆய்கின்றனர் மருத்துவவியலார். உயர்பறவை = bar headed geese, அன்னம்/ஹம்சம்.
செங்கால் அன்னம் = graylag geese. இன்றைய எலெக்ட்ரானிக் கருவிகள் அன்னத்தின் காலில் வளையம் மாட்டிக் கவனிக்கும் 
வாய்ப்பு இல்லாக் காலத்திலேயே குமரிக்கும், சிமையத்திற்கும் அன்னங்கள் வந்துபோவதும், முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது
இமையத்தில்தான், தமிழகத்தில் அன்னம் குஞ்சு பொரிப்பதோ, கூடு கட்டுவதோ இல்லையென்றும் சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பது
விந்தை தான். அதே சங்க இலக்கியம் சம்ஸ்கிருத பேராசிரியர்கள் க்ரௌஞ்சம் என்பது சாருஸ் பெருங்கொக்கு என எழுதுவது
தவறு என்று காட்டவும் பயன்படுகிறது. அன்றில் என்றால் சாருஸ் பெருங்கொக்கு அல்ல, அது கருநிற ஐபிஸ் என எழுதிவிட்டனர்
மா. கிருஷ்ணன், சு. தி. பாஸ்கரன் போன்றோர்.. 2000 வருச தமிழ் இலக்கிய மரபை வைத்து அன்றில் = கிரவுஞ்சம் என்றும் விளக்க இயல்கிறது.


”கைலாசத்தில் உள்ள மானஸசரோவருக்கு அன்னங்கள் பறந்து செல்வதற்கு நுழைவாயிலாகப் பரசுராமரால் அமைக்கப்பட்ட ஹம்ஸத்துவாரம் இன்றும் அன்னப்றவைகளின் இடம்பெயர் வழியாக உள்ளது. இந்த நுழைவாயிலும் அதன் வழிச்செல்லும் அன்னப்பறவைகளும் கூட மாமல்லபுரத்து அர்ச்சுனன் தபசு சிற்பத்திலே செதுக்கப்பட்டுள்ளன.

சுவர் போன்ற இமயமலைத் தொடர்கள் பறவைகள் புலம் பெயர்வதற்குப் பெரும் தடையாக உள்ளன. ஆனால் வரித்தலை அன்னங்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறனை இயற்கையாகவே கொண்டுள்ளன. அவை இந்தியா மற்றும் நேபாளப் பகுதிகளில் இருந்து மார்ச்சு ஏப்பிரல் மாதங்களில் இமய மலையை அகன்ற தாழ்மலைப்பகுதியால் கடந்து திபெத்திய பீடபூமிக்குச் சென்று அங்கு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இனப்பெருக்க காலம் முடிந்து குஞ்சுகள் பறக்கும் அளவுக்கு வளர்ந்தபின் அவற்றுடன் மீண்டும் தமது இருப்பிடத்துக்கு திரும்புகின்றன. இந்த தகவல்கள் பறவை இடப்பெயர்வு ஆய்வாளர்களாலும், செய்மதித் தகவல்களாலும் உறுத்திப்படுத்தப்பட்டவை. இந்த பறவைகள் இடம் பெயர்வது பரசுராமர் அமைத்த ஹம்ஸதுவாரத்தினூடாகவும், முருகன் அமைத்த கிரௌஞ்சமலைத் துவாரத்தின் ஊடாகவும் என்று மகாபாரதமும், புராணங்களும் கூறுகின்றன.

வடமொழிப் புலவரான காளிதாசர் தான் பாடிய மேகஸந்தேச என்ற காவியத்தில்  " மேகமே! இமய மலையின் சிகரத்தைச் சூழ்ந்துள்ள இடங்களில் பார்கத்தக்க பலவற்றையும் கண்டு அவற்றையெல்லாம் கடந்து மானஸரோவர் செல்லும் அன்னப்பறவைகளுக்கு நுழைவாயிலாக இருக்கும் பரசுராமரால் துளைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையின் குஹைவரைப்பாதை வழியாக உன் உடலை நுழைத்துக்கொண்டு வடக்கு நோக்கிச் செல்" என்று பாடியுள்ளார்.” http://www.knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1623%3A2012-05-08-16-29-52&catid=265&Itemid=43 (கனடா மர். லம்போதரன், சண்டூர் பற்றி தெரிவிக்கணும்)

வடமொழி நூல்களில் கம்பன் சொல்லும் சிமைய (> இமைய) பரசுராமன் துளைத்த செய்தி:



[1] Origin of Skt. words like Hima 'snow', Himalaya 'Abode of snow', Himavan, ...

சிமிழ்த்தல் > இமிழ்த்தல் (விரைந்து மூடுதல் - பறவைக் கண்ணியை
மூடுதலை சிமிழ்த்தல் என்கிறார் வள்ளுவர்)
சிமையம் > இமையம் (பனி மூடிய இமைய மலை. சிமையம் - மலையுச்சி)
hima (= snow in Sanskrit) is most likely from sima in Dravidian, as snow in Iranian is a totally different word. Cf. Sindu > Hindu, Sarasvati > Haraixvati.
Similarly, sima "snow, snow-clad" > hima by Iranian languages such as Pashto.
சிமை > இமை ‘eye lid' (cf. cimital/cimizttal = "to close the eye lids")

சீந்து  > ஈந்து (ஈங்கு/ஈஞ்சு - ஈச்ச மரம்)
சுவணம் (சுபர்ண) > உவணம்
சேண்- > ஏணி (ச்ரேணி)
சிறை > இறை
சிறகு > இறகு
சுலவு > உலவு
சுருள் > உருள்
சுழல் > உழல்
சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)
சமை > அமை
சுளுக்கு > உளுக்கு
சிப்பி > இப்பி
சமணர் > அமணர்
சமர் > அமர்
சேமம் > ஏமம்

N. Ganesan

N. Ganesan

unread,
Jun 29, 2016, 1:00:04 AM6/29/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, theodore...@gmail.com

In Iranian languages, the word for snow is quite different than Sanskrit's "hima" (< sima- in Dravidian meaning 'peak', 'lofty mountain')

BARF “snow” (from OIr. *vafra- “snow,” root vap- “to toss in the air, to pile up”; cf. OInd. vápati “to disperse, to scatter,” vapra- “heap, mound”; Pokorny, I, p. 1149; Mayrhofer, Etymological Sanskrit Dictionary III, pp. 144-45). This word and forms derived from it designate the snow in all western and most eastern Iranian languages and dialects; some East Iranian languages, Khotanese, Sogdian, Pashto, and Yidgha­-Munji, have feminine forms derived from *vafrā-, possibly an old collective plural (see Bailey, Dictionary of Khotan Saka, pp. 305-06). Other words for snow are found in Wakhi, which has zəm (cf. Av. zyam- “winter”), Shughni, which has `inij(cf. Av. snaēža- < OIr. *snaija-), and Ossete, which has a loanword, Digor met and Iron mit.

N. Ganesan

unread,
Jun 30, 2016, 7:27:25 AM6/30/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நன்றி, தேமொழி. 

In Iranian languages, the word for snow is quite different than Sanskrit's "hima" (< sima- in Dravidian meaning 'peak', 'lofty mountain')

BARF “snow” (from OIr. *vafra- “snow,” root vap- “to toss in the air, to pile up”; cf. OInd. vápati “to disperse, to scatter,” vapra- “heap, mound”; Pokorny, I, p. 1149; Mayrhofer, Etymological Sanskrit Dictionary III, pp. 144-45). This word and forms derived from it designate the snow in all western and most eastern Iranian languages and dialects; some East Iranian languages, Khotanese, Sogdian, Pashto, and Yidgha­-Munji, have feminine forms derived from *vafrā-, possibly an old collective plural (see Bailey, Dictionary of Khotan Saka, pp. 305-06). Other words for snow are found in Wakhi, which has zəm (cf. Av. zyam- “winter”), Shughni, which has `inij(cf. Av. snaēža- < OIr. *snaija-), and Ossete, which has a loanword, Digor met and Iron mit.

சம்ஸ்கிருதம், பாரசீக மொழிகள் போல் அல்லாது, Snow-வுக்கு ஹிமம் (< சிமையம்) என்னும் த்ராவிடச் சொல்லை
எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிந்து < சிந்து, ஸரஸ்வதி < ஹைரக்ஸ்வதி, ... போல, ஹிம- < சிமை(ய).
இதற்கு சங்க இலக்கியமும் (பெரும்பாண்.), கம்பரும் பரசிராமன் சிமையகிரியை (= ஹிமகிரி) துளைத்து அன்னப்
பறவைகளுக்கு தென்னிந்தியா வலசை வரக் கணவாய் உண்டாக்கின தீரச்செயல் குறிப்பிடும் பாட்டும் ஹிமம்
என்னும் வடசொல் தமிழின் சிமையம் (=இமையம்)  எனக் காட்டுவது அரிய சான்று. ஹிமவான் = சிமைய/இமையகிரி ராசன்.
ஹிமவான் தனயை ஆனதால் ஹைமவதி என்று பார்வதிக்கு ஓர் பெயர். இமவான் பெற்ற கோமளமே! - அபிராமி அந்தாதி.

அன்னப் பறவைகள் என்பது திபெத்திய பீடபூமியிலிருந்து தென்னிந்தியாவும், இலங்கையும் ஆண்டுதோறும்
வலசை வந்துபோகும் Anser Indicus ( https://en.wikipedia.org/wiki/Bar-headed_goose ) என நிறுவின நூலில் சம்ஸ்கிருத பேராசிரியர்
J. Ph. Vogel பல்லவர் சிற்பங்களையும் குறிப்பிட்டுள்ளார். மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசில் இருகைகளாலும்
கட்டமிட்டு சூரிய நமஸ்காரம் செய்யும் யோகியைப் பார்த்தீர்களா? அன்னம்/ஹம்ச ஜோடிக்கு இடப்புறமாக 
ஸூர்யநமஸ்காரம் செய்யும் யோகி. ~NG


On Thursday, June 30, 2016 at 2:08:57 AM UTC-7, தேமொழி wrote:


”கைலாசத்தில் உள்ள மானஸசரோவருக்கு அன்னங்கள் பறந்து செல்வதற்கு நுழைவாயிலாகப் பரசுராமரால் அமைக்கப்பட்ட ஹம்ஸத்துவாரம் இன்றும் அன்னப்றவைகளின் இடம்பெயர் வழியாக உள்ளது. இந்த நுழைவாயிலும் அதன் வழிச்செல்லும் அன்னப்பறவைகளும் கூட மாமல்லபுரத்து அர்ச்சுனன் தபசு சிற்பத்திலே செதுக்கப்பட்டுள்ளன.


 


Now we will see few important events depicted in this magnificent relief. We will start first at the upper part of the panel, middle fissure and two sides. Central theme of Shivaand the standing ascetic is already discussed in details above. The very obvious thing which come to a viewers mind is the movement of various figures towards the middle cleft. The two blue circles shows a couple and two geese which are moving towards the cleft, with their back to Shiva and the ascetic. As discussed above, if Pashupataweapon scene is the central theme then these should be moving in opposite direction. 


..... themozhi

N. Ganesan

unread,
Jun 30, 2016, 8:14:52 AM6/30/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Theodore Baskaran


On Tuesday, June 28, 2016 at 10:25:45 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
இணைப்பறவைகளாகிய அன்றில்களில் ஒன்றை வான்மீகி வேடன் கொன்றான்!
அதனால் அவனை நாரதர் ராம நாமம் கூறச்சொன்னார்! அதனைக் கம்பர் எழுத வேண்டிய 
தேவை இல்லை! வான்மீகியின் பாடலைக் கம்பர் அறிவார்! 

''முன் இணை   யாகிய  அன்றிலின்  
மோகம்கொள்  ஆணினைக் கொன்றனை 
மன் நெடு   நாள் இனி  வாழ்கலை 
வாழ்கலை  வாழ்கலை  வேடனே !''
 
என்ற பாடல் காண்டேகரின் கிரௌஞ்ச வாதம் 
புதினத்தின் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழி பெயர்ப்பில் படித்துள்ளேன்!

கிரௌஞ்சம் பறவையைக் குறிக்கும்! கிரௌஞ்சம் போல் பழங்காலத்தில் 
இறக்கையுடன் பறந்து வந்த மலை ''க்ரௌஞ்ச மலை'' ஆகி இருக்கலாம்!

கம்பர் இராமாயணம் எழுதும் போது வான்மீகியின் வரலாற்றை எழுதியிருந்தால் 
அன்றில் பறவை பற்றி எழுதியிருக்கலாம்  அந்த வாய்ப்பே இல்லை!
நன்றி அன்புடன் புலவர் இரா.இராமமூர்த்தி.  


ஆம். சுலோகம் என்னும் யாப்பு முதன்முதலில் சம்ஸ்கிருதத்தில் தோன்றுவதன் வரலாற்றை
விவரிக்கும் பகுதியை வால்மீகி சிலேடையாகச் சொல்லி இராமாயணத்தை தொடங்குகிறார்.
சுலோகம் தமிழின் யாப்பு இல்லையே! அதனாற்போலும், கிரவுஞ்சவதையை கம்பர் 
பாடித் தன் ராமாயணத்தைத் தொடங்கவில்லை.

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

- பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்
நிஷாத  - வேடா!  
க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில்
காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த                         
ஏகம் – ஒன்றை                                                  
அவதீ: - கொன்றாய்                                                   
தத் ஸ்வே – அதனால் நீ                                       
ஷாஸ்வதீ: - நீடித்த                                                           
சமா -ஆண்டுகளில்                                         
ப்ரதிஷ்டாம் – இருப்பை                                             
மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II 
- பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத  - ஸ்ரீனிவாஸ!                                             
க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில்                        
காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட                         
ஏகம் – ஒருவனை                                                  
அவதீ: - கொன்றீர்;                                                  
யத் ஸ்வே – அதனால் நீர்                                       
ஷாஸ்வதீ: - நீடித்த                                                           
சமா -ஆண்டுகளில்                                         
ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை                                             
மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது! சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

----------------------------------------------------

சம்ஸ்கிருத பேராசிரியர்கள் (உ-ம்: ஜூலியா லெஸ்லி) தமிழ் இலக்கியமும் பார்த்திருந்தால்
அவர்களுக்கு கிரவுஞ்சம் என்றால் அன்றில் (Indian black ibis)  என உள்ளங்கை நெல்லிக்கனியாய் (கரதல ஆமலகம்)
துலங்கியிருக்கும். இந்தியாவின் செம்மொழிகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்காததால் நேர்ந்த
பிழை: ஜூலியா க்ரௌஞ்சம் = சாருஸ் பெருங்கொக்கு என்றது.

மா. கிருஷ்ணன் இதுமாதிரி ஒரு பிழையை சரிசெய்தார். அன்றில் என்றால் ஸாருஸ் பெருங்கொக்கு
எனவும் எழுதிக்கொண்டிருந்தனர். இல்லை அன்றில் என மக்கள் இன்றும் சொல்வது ஐபிஸ் பறவை எனப்
பல கட்டுரைகளால் விளக்கினார்: https://en.wikipedia.org/wiki/Red-naped_ibis இதுதான் செஞ்சூட்டு அன்றில் (அருணகிரிநாதர் திருப்புகழில் க்ரௌஞ்சகிரி வர்ணனை).

In culture[edit]

An adult in flight

The Tamil Sangam literature mentions a bird named the "anril" which was described as having a curved bill and calls from atop palmyra palms (Borassus sp.). Madhaviah Krishnan identified the bird positively as the black ibis and ruled out suggestions that this might be a sarus crane, an alternate interpretation. He mentions a line that talks about how at dusk the anrils arrive at palmyra palms and call. He also pointed out ibises to locals and asked them for the name and noted that a few did refer to it as "anril". The Sangam poetry mentions that the birds mated for life and always walked about in pairs.[24][25]


ஜூலியா லெஸ்லி கட்டுரையின் விளைவு  ஆங்கில நூலில் தியடோர் பாஸ்கரன், தமிழிலும் கல்பட்டு நடராஜன் போன்றோர்
ஸாருஸ் பெருங்கொக்கு க்ரௌஞ்சம் என எழுதலாயினர். ஆனால், தமிழ் இலக்கிய மரபு 2000 வருஷமாகப்
பாருங்கள், அன்றில் என்னும் கிரவுஞ்சம் இந்தியப் பறவையான ஐபிஸ்-க்குத்தான் பொருந்தும் என்கிறது
செம்மொழி இலக்கியங்கள். கோவிந்தராஜரின் ராமாயண உரையை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் ஜூலியா
என விளக்கி உரைத்துள்ளேன். இதுபற்றி தொகுத்து J. of Tamil Studies (or) IJDL, Trivandrum கட்டுரை எழுதித் தரவுள்ளேன்.





--------------------------



இத்தனை வேண்டுவ தன்றந்தோ. அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நுஞ்சே வலும்கரைந் தேங்குதிர்,
வித்தகன் கோவிந்தன் மெய்ய னல்ல னொருவர்க்கும்,
அத்தனை யாமினி யென்னு யிரவன் கையதே


அன்றில் என்பது ஒரு பறவை;  குரரீ என்று வடமொழியிற் கூறப்படும்;  க்ரௌஞ்ச மென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும். அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணை பிரியாது நிற்கும்;  கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டு பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறுக்க கில்லாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்று தரம் கத்திக் கூவி, அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற் பறவை இணை பிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று லாயலசைக் கோத்துக் கொண்டு உறங்கும் பொழுது அவ்வுறகத்தில் வாயவகு தன்னில் நெகிழ்ந்த வளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாக மிக இரங்கத்தக்க சிறு குரல் செய்து விரஹிஜனங்களின் செவியில் விழுந்தால், பொறுக்க முடியாத துன்பமாகும்.  பெரிய திருமடலில், "பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும், என்னுடைய நஞ்சுக்கோ ரீர்வாளா மென் செய்கேன்!" என்றதுங் காண்க. பெரிய திருமொழியிலும் "காவார் மடற் பெண்ணை யன்றிலரி குரலும், ஏவாயினூடியங்கு மெஃகில் கொடிதாலோ" என்றாற் போன்ற பாசுரங்கள் பலகால் வருவது காண்க.

----------------------------------------

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jun 30, 2016, 8:38:51 AM6/30/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Theodore Baskaran


On Monday, June 27, 2016 at 8:10:46 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:

You can see makamtril bird in  my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.

On Jun 27, 2016 8:06 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:

அன்றில் சங்கஇலக்கியத்தில் மகன்றில் எனப்பட்டது. Love birds போன்றது. புலவர் இராமமூர்த்தி.


நன்றி, புலவரையா.

கிரவுஞ்சம் = அன்றில் என்பன பழைய இலக்கியங்கள்.

சங்க இலக்கியங்கள், மணிமேகலை,  ஆழ்வார்கள்,  கம்பன், திருப்புகழ், .... சான்றுகளாக அமைகின்றன.

கம்பர் க்ரௌஞ்ச (< கரிஞ்சம், ஐபிஸ்) த்வீபம் என்பதை அன்றில் தீவு என மொழிபெயர்க்கிறார்.

”இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப் புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்; நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார்; உலவைக் காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார். 12

'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேருக் குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர் சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர்”

அறப்பளீசுர சதகம் - க்ரௌஞ்சதீவு - அன்றிலந் த்வீபம்

மணிமேகலை:
குருகு-அன்றில்; கிரவுஞ்சம்;


நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் - குறுந்தொகை:
செந்தலையென்றது செஞ்சூட்டை: தலை: ஆகுபெயர்; “பூந்தலை யன்றில்” (ஐந். ஐம். 41)என்பதற்குப் பழைய உரையாசிரியர், ‘செம்பூப் போலுஞ் சூட்டினையுடைய பெடை யன்றில்’ என்றெழுதியது காண்க. 

முத்தலைச் செஞ்சூட்டு ... மூன்று பிரிவுகளோடு சிவந்த கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான
அன்றிலங் கிரி ... அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்டமலையை
இரு பிளவாக ... இரண்டு கூறாகப் பிளக்குமாறு
ஒரு வேல் விடுத்தனை ... ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.”

இதனைத் தான் ராமாயண ஸ்லோகத்திற்கு கோவிந்தராஜர் உரையில் சொல்லியுள்ளார்.
முனைவர் ஜூலியா லெஸ்லி தவறாகப் புரிந்துகொண்டு ஸாருஸ் நாரை = க்ரௌஞ்சம் என எழுதிவிட்டார்.
ஆனால், க்ரௌஞ்சம் = அன்றில் என தெளிவாக தமிழ் புலவர்கள் 2000 ஆண்டுகளாய் கூறிவருகின்றனர்.

”பரம சாதுவாகிய பறவை அன்றில். அதற்கு கிரவுஞ்சம் என்று மற்றொரு பேரும் உண்டு. அந்த கிரவுஞ்சப் பறவை உருவில் ...”

“முத்தலைச் செஞ்சூட்டு அன்றில்” = க்ரௌஞ்சம்.
சாருஸ் நாரைக்கு தலை உச்சியில் செஞ்சூடு இல்லை. வழுக்கையாய், அதன் உடல் போல 
சாம்பல் நிறத்தில் சாருஸ் பறவை இருக்கும்.













































































எனவே, கோவிந்தராஜர் ராமாயணத்தின் முதல் சுலோக பாஷ்யத்தில் க்ரௌஞ்சம் (அன்றில்)
பற்றி விவரணை ஸாருஸ் நாரை அல்ல என்பது தெளிவு. அருணகிரிநாதர் அன்றிலங்கிரி என
க்ரௌஞ்சம்  முருகப்பிரான் பிளத்தலைச் சொல்வதற்கான வருணனை கோவிந்தராஜரொடு
ஒத்துப் போகிறது.

ஆழ்வார் - பெரிய திருமொழியில் அன்றில் = க்ரௌஞ்சம்:

கிரவுஞ்சப் பறவை (= Indian Black Ibis) - வால்மீகிராமாயணத்தில் சம்ஸ்கிருதமொழியின் முதல் சுலோகம்
 
தமிழ் இலக்கியங்கள் படித்தால் தான் ராமாயணந்த்தில் வால்மீகி முனிவர் கூறும்
கிரவுஞ்ச வதம் என்பதில் உள்ள பறவை செஞ்சூட்டு அன்றில் என்று புரியும்.
அது ஸாருஸ் நாரை அல்ல என்றும் தெரியும்.


அன்றில் குருகினம். அன்றிலைக் குருகு என்கிறது பண்டை இலக்கியங்கள். 
பழைய இலக்கியங்களில் பார்க்கவும்.

க்ரௌஞ்சம் = ஒரு குருகு, அதனால் தான் க்ரௌஞ்ச பக்ஷியை அன்றில் என்றார் கம்பர். 

கரிஞ்சம் (> க்ரௌஞ்சம், வடமொழியில்) ஒரு குருகு இனப் பறவை. அதனால்,
அன்றில், (= க்ரௌஞ்சம்) குருகு என்றே அழைக்கப்படும் இடங்கள் தமிழில் ஏராளம். 2000 ஆண்டுகளாய்.

சிலம்பு:
சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே
 ;     (9)

வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே - வளரும் மலையினைச் சூழ வரும் அசுரனுடைய நெஞ்சு பிளக்கக் கிரவுஞ்ச மலையினை அழித்த நெடிய வேல், 

 குருகு பெயர்க்குன்றம் - கிரவுஞ்சமலை ; 1"குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து" என்பதுங் காண்க.

---------------
மணிமேகலை:
குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்


குருகு பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி- கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை யொத்த நினது இளமை யழகினை,

குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; 2 "குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க. 
-------------------------

பிணிமுகமூர்ந்து கடலின்கண் பார் துகள்படப் புக்கு முதல் 
தடிந்து அவுணர் மருங்கு அமருழக்கித் தபுத்த வேலாலே வரை 
உடைத்து ஆற்றுப்படுத்த கயந்தலை என இயைக்க. 

      நாவலந் தண் பொழில் - நாவலந்தீவு. குருகு - அன்றில்; 
அதற்கு வடமொழியில் கிரௌஞ்சம் என்று பெயராகலின் 
அப் பறவையின் பெயர் பெற்ற வரை என்றார் 'கிரௌஞ்சகிரி' 
என்றவாறு 
ஆற்றுப்படுத்தல் மலையினூடே வழியுண்டாக்கி 
அதன்வழிச் செலுத்துதல். 


அன்றில் என்பது ஒரு பறவை. அஃது எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாக இணைபிரியாது நிற்கும். இரவில் கணப்பொழுது ஒன்றைவிட்டு ஒன்று பிரிய நேர்ந்தக்கால் அத்துன்பந் தாழாது இரண்டு மூன்று முறை கத்திக் கூவியும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்து படும் என்பது கவி மரபு. அன்றில் வடமொழியிற் கிரௌஞ்சம் என்றும், தமிழில் குருகு என்றும் வழங்கப்பெறும். ஆண் அன்றிற் பறவை 'அகன்றில்' என வழங்கும். இணை - இரண்டு. பிரிய - பிரிதலால் என்பது பிரிய எனத்திரிந்தது.



 

On Jun 27, 2016 7:05 AM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
வால்மீகி ராமாயணத்தில் தொடக்கம் ஒரு சுலோகத்தில் இருக்கிறது. க்ரௌஞ்ச பட்சிகளில் ஒன்றை வேடன் அம்பெய்தி வீழ்த்திவிடுகிறான்.

இந்த சுலோகமோ, கதையோ கம்பன் சொல்கிறாரா? அப்படியென்றால், எந்த இடத்தில் - பால காண்டத்திலா?
ஒரு பாட்டா? பல பாட்டா? குருகு (அ) அன்றில் (அ) கிரவுஞ்சம் - எந்த வார்த்தையைப் பய்ன்படுத்துகிறார் கம்பர்?

கிரவுஞ்சம் என்னும் பறவையை அன்றில் என்று காட்டி மொழிபெயர்க்கிறார் கம்பர்.
க்ரௌஞ்ச த்வீபம் என்பதை அன்றில் தீவு எனச் சொல்கிறார்:

        அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
        என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக் 
        குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர்
        சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர்.

”அன்றில் தீவு - அன்றில்    பறவைகள்   நிறைந்த தீவாகலின்
இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். ”

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 1, 2016, 10:39:31 PM7/1/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
உலகத்திலேயே பழமையான மிக நீண்ட புடைப்புச் சிற்பம் மாமல்லபுரத்தில் தான். Largest monolithic bas-relief sculpture in the World.
அதனில் சிமைய (> ஹிமாலய) பர்வதத்தின் கணவாய் அருகே காட்டப்படுவது மூன்று முக்கிய பறவைகள்.
உயர்பறவை என கம்பன் பாடும் அன்னம் (BH geese) உயரத்தில் பறக்கிறது, யோகி, சிவனார் அருகே.


வலப்புறத்தில் அன்றில் பறவைகள் (க்ரௌஞ்ச பக்ஷிகள், = Indian black ibis). அருணகிரிநாதர் சொல்லும் தலைமீது செஞ்சூடு உள்ளதைக்
குறிக்க சூடு செய்துள்ளார் பல்லவ பெருந்தச்சன். அதற்கும் வலப்புறமும், கிராதார்ஜுனீய பெருன்க்சிற்பத்தில் பல
இடங்களிலும் கின்னர பறவைகள். கின்னரப் பறவைகளை குருகு (water bird) பட்டியலில் கம்பர் பாடுகிறார்.

சரி, கின்னர பக்ஷிகள் என்று கம்பர் பாடும் குருகுகள் யாவை? தெரிகிறதா? கின்னரி என்று யாழை ஏன் இந்திய
செம்மொழி இலக்கியங்கள் கூறுகின்றன? மகரம் என்னும் விடங்கர் (முதலை) சிவலிங்கம் ஆதற்கு மூலகாரணம்
என சிந்து சமவெளி கலையால் காட்டியுள்ளேன். கின்னரம் என்னு பக்ஷி உண்மையில் எந்தக் குருகு? ஏன் தெரிந்தெடுத்தனர்
கின்னரமாய் என பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 2, 2016, 4:33:35 PM7/2/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
கம்பர் அழகாக அடுக்கிக் குருகுகளைப் (water birds) பட்டியல் இடுகிறார்:

உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்
அன்னம், கோழி , வண்டானங்கள், ஆழிப்புள்
கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்
சென்னம், காகம், குணாலம் சிலம்புமே

As you can see,commentators gloss over the Kuruku names
which are not that common. உதாரணமாக, உன்னம், புதா,
கின்னரம், கிலுக்கம், சென்னம், குணாலம் குறிப்பிடலாம்.
ஒவ்வொன்றுக்கும் இன்றைய விஞ்ஞானப் பெயரும் பின்னர்
குறிப்பிடுகிறேன்.

கின்னரம் என்று சங்க இலக்கியமும், கம்பரும் சுட்டும் குருகு எது?
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் - பெரும்பாண். 494

இமைய மலையை சிமையம் என பெரும்பாண்., கம்பரும் கூறுதலால்
வெளிச்சமடையும் ஹிம- ‘snow' < சிமை- வடசொல்:


On Friday, July 1, 2016 at 9:39:31 PM UTC-5, N. Ganesan wrote:
உலகத்திலேயே பழமையான மிக நீண்ட புடைப்புச் சிற்பம் மாமல்லபுரத்தில் தான். Largest monolithic bas-relief sculpture in the World.
அதனில் சிமைய (> ஹிமாலய) பர்வதத்தின் கணவாய் அருகே காட்டப்படுவது மூன்று முக்கிய பறவைகள்.
உயர்பறவை என கம்பன் பாடும் அன்னம் (BH geese) உயரத்தில் பறக்கிறது, யோகி, சிவனார் அருகே.


வலப்புறத்தில் அன்றில் பறவைகள் (க்ரௌஞ்ச பக்ஷிகள், = Indian black ibis). அருணகிரிநாதர் சொல்லும் தலைமீது செஞ்சூடு உள்ளதைக்
குறிக்க சூடு செய்துள்ளார் பல்லவ பெருந்தச்சன். அதற்கும் வலப்புறமும், கிராதார்ஜுனீய பெருஞ்சிற்பத்தில் பல

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 22, 2016, 3:22:22 AM8/22/16
to mintamil, vallamai

வணக்கம்.

தகவலுக்காக....


திருப்பூவணப் புராணத்தில் உள்ள

முருகக் கடவுள் வாழ்த்தில் கிரவுஞ்சகிரி இடம் பெற்றுள்ளது.


தலம்புகழ்வச்சிரத்தடக்கையிந்திரன்றந்தருள்பாவைதன்னேர்வள்ளி

நலம்புகழ்செவ்வேளரற்குஞானவுபதேசமருண்ஞானமைந்தன்

றுலங்குகிரவுஞ்சகிரிதுளைபடவெஞ்சூரனுரங்கிழியவேலை

கலங்கவயில்வேல்விடுத்தகந்தனைப்பந்தனையகற்றிக்கருத்துள்வைப்பாம்


N. Ganesan

unread,
Aug 22, 2016, 7:22:15 AM8/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, kalair...@gmail.com


On Monday, August 22, 2016 at 12:22:23 AM UTC-7, kalai wrote:

வணக்கம்.

தகவலுக்காக....


சிலப்பதிகாரத்திலும் முருகன் கிரவுஞ்சகிரியை தொளைத்த புராணம் உண்டு.

சண்டூர் கிரவுஞ்சகிரி என்பது பழைய மரபு. அங்கே உள்ள முருகன் (குமாரஸ்வாமி) கோவில் புராதனமானது.
பச்சைக் காவடி சாமிகளுடன் சென்று வாருங்கள். இன்னும் விரிவாக அவ்வூர் பற்றி எழுதித் தருகிறேன்.
பச்சைக் காவடி சுவாமிகளுக்கு பிரிண்ட் எடுத்துக் கொடுக்கவும்.

தமிழில், இன்றும் நாட்டுப்புறத்தில் வழங்கும் அன்றில் என்பது கிரவுஞ்சப் பறவை. 
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்று ஒரு சினிமாப்பாட்டு போல,
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை இந்தியர்கள் அன்றிலைப் பார்த்துக் கற்றனர். எனவே தான்
ஆதி காவியத்தை வான்மீக முனிவர் க்ரௌஞ்சவதம் எனத் துவங்குகிறார்.

பறவைகளில் பல ஜாதிகளும் ஒருதுணை கொண்டவை என்கிறது இன்றைய விஞ்ஞானம்..
அன்றிலும் சக்ரவாகமும் இந்தியர்களிடையே இதற்குப் புகழ்பெற்றவை. பாரதி
அன்றில் (அதாவது, க்ரௌஞ்சம் பற்றி) பாடியிருப்பதைப் பாருங்கள்.
குயில்பாட்டில் பாரதியார் அன்றிற் பறவையின் அருங்குணத்தைப் பேசுகிறார்:
”அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது,
ஞாயிறுதான் வெம்மைசெயில்,நாண்மலர்க்கு வாழ்வுளதோ?
தாயிருந்து கொன்றால்,சரண்மதலைக் கொன்றுளதோ?
தேவர் சினந்துவிட்டால்,சிற்றுயிர்கள் என்னாகும்?
ஆவற் பொருளே!  அரசே! என் ஆரியரே! “

அன்றில் (கிரவுஞ்சம்) பற்றிச் சிலது சொல்லியுள்ளேன், பார்த்தருள்க.


On Sunday, August 21, 2016 at 8:04:52 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


20 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 2:54 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

இதைத்தான் "சேற்றில் இறங்குவதல்ல சமத்துவம்" என குறிப்பிட்டேன் வேந்தே.

உலகில் எந்த நாட்டில் பெண்கள் பலதாரமணம் செய்து விடுதலை அடைந்திருக்கிறார்கள்? எத்தனை ஆண்கள் தன் மனைவிக்கு இரண்டாம் கல்யாணம் செய்து சக்களத்தனாக வாழ முன்வருவார்கள்???????


வரமாட்டார்கள். ஆண் இன்னும் விலன்ஹ்குநிலையிலேயே இருக்கீறான்.

புல் உண்ணும் ஆண்விலங்குகள் பெட்டைகளுக்காக சண்டையிடும்
புலால் உண்ணும் விலங்குகள் பெட்டைக்காகவும் பேட்டைக்காகவும் சண்டை யிடும். 
இன்னொரு ஆணின் குட்டிகளைக்கொன்றும் விடும்

ம்னித இனத்தின், ஒராண்மணம் என்பது விலங்கில் இருந்து நாம் பெற்ற பண்பாடு.


பறவைகளிடம் இருந்து. உ-ம்: அன்றில் (= க்ரௌஞ்சம்), சக்கரவாகம் (< செக்கரவாகம்).
ராமாயணமே அன்றிலின் மோனோகமியில் தொடக்கம்.  இன்னும் 200 வருஷமாப் பார்த்தும்
ஐபிஸ் = அன்றில் (கிராமங்களில் இன்றும் அழைக்கும் பெயர்) = க்ரௌஞ்சம் எனப் புரிந்தார் இல்லை.
க்ரௌஞ்சம் = சாருஸ் நாரை அல்ல என்பது சங்கத்தமிழால் விளங்கும்.

விஞ்ஞானத்திலும் மோனோகமி (monogamy) பறவைகளிமிருந்து எனப் பேசப்படுகிறது. குரங்குகளிடம் மோனோகமி இல்லை.

நா. கணேசன்



 


N. Ganesan

unread,
Jun 19, 2018, 10:00:44 PM6/19/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

வால்மீகி ராமாயண சுலோகத்தில் கிரௌஞ்ச பறவைகள் இரண்டு மரக்கிளை ஒன்றில் இருந்ததாக
வி. ச. காண்டேகர் எழுதியுள்ளார். 1942, கிரௌஞ்சவதம் என்னும் புதினத்தில்.

வால்மீகி வேடனுக்குக் கொடுத்த சாபம்:

  முன்இணை யாகிய அன்றிலின்
    மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
  மன் நெடு நாள் இனி வாழ்கலை;
    வாழ்கலை! வாழ்கலை! வேடனே!’’

“Once upon a time, a couple of herons was engrossed in lovemaking Suddenly, a hunter came over there and with his bow and arrow killed one of the herons The bird which was killed instantly collapesed from the tree Upon seeing this, the partner of the bird gave out a loud out cry It started wailing in grief So loud and true was the sorrow that Saint Valmiki was touched by the it The pain he experienced started flowing out in the form of shlokas.A true poetry takes birth in exactly the same manner V S Khandekar has written this novel based on the shlokas so formed Even today the innocent couples of herons are killed every now and then,”

தமிழில் கிரௌஞ்சவதம் (மொழிபெயர்ப்பு: காஸ்ரீஸ்ரீ) நாவலில் மரக்கிளையில் அன்றில் பறவைகள் இருப்பதைக் குறிப்பிடும் வரிகள் இருந்தால் தாருங்கள்.

------------------------

இந்தியில் மொழிபெயர்ப்பு:
(எந்தப் பக்கங்களில் வால்மீகி சுலோகம் பேசப்பட்டுள்ளது?)

--------------------------

The Vālmīki-Rāmāyaṇa, Critical edition, Baroda, 1960-1975 gives the following verses of the episode in Book 1, Chapter 2:
sa śiṣya-hastād ādāya   valkalaṃ niyata_indriyaḥ                                                            
vicacāra ha paśyaṃs tat   sarvato vipulaṃ vanam    /8/ 

tasya_abʰyāśe tu mitʰunaṃ   carantam anapāyinam                                                    
dadarśa bʰagavāṃs tatra   krauñcayoś cāru-niḥsvanam    /9/ 

tasmāt tu mitʰunād ekaṃ   pumāṃsaṃ pāpa-niścayaḥ                                                          
jagʰāna vaira-nilayo   niṣādas tasya paśyataḥ     /10/ 

taṃ śoṇita-parīta_aṅgaṃ   veṣṭamānaṃ mahī-tale                                                   
bʰāryā tu nihataṃ dr̥ṣṭvā   rurāva karuṇāṃ giram    /11/ 

tatʰā tu taṃ dvijaṃ dr̥ṣṭvā   niṣādena nipātitam    
r̥ṣer dʰarma_ātmanas tasya   kāruṇyaṃ samapadyata     /12/ 

tataḥ karuṇa-veditvād   adʰarmo_ayam iti dvijaḥ                                                  
niśāmya rudatīṃ krauñcīm   idaṃ vacanam abravīt     /13/ 

mā niṣāda pratiṣṭʰāṃ tvam   agamaḥ śāśvatīṃ samāḥ       
yat krauñca-mitʰunād ekam   avadʰīḥ kāma-mohitam    /14/ 

இதில், வைர-நிலயோ என்பதை “enemy of the foresters" என்றெல்லாம் மொழிபெயர்ப்பர்.
ஆனால், ஆதிகவி வால்மீகி “வயிர- நிலைய” என்று தமிழ்ச் சொற்களை ஆள்கிறார் என்பது என் புரிதல்.
நில்- என்னும் வினைச்சொல். நிலை, நிலம், நிலயம். வயிர் என்பது மரக்கிளை எனலாம்.
மரக்கிளையில் இருந்து செய்யும் குழலிசைக் கருவி “வயிர்”, இது இன்றும் கேரளாவில் குறுங்குழல்
என்று வழங்குதலைக் கேட்கலாம். பின்னர் சோழர்களின் பெரிய காவேரி டெல்ட்டா மாவட்டக்
கோவில்களில் வயிர் நாதஸ்வரம் என வளர்ச்சி அடைந்துள்ளது. வயிரியர் - இசைக்கலைஞர்களுக்கான
சங்கப் பெயர். வகு- “to split, to branch off"... > வயிர். (cf. (n)ukir > ucir > uyir, ...)
 வயிர் என்பதற்குக் கோடு, கொம்பு என உரைகாரர் பொருள்தருவர். கோடு, கொம்பு : மரக்கிளை என்பது முதற்பொருளில் ஒன்று.

இரண்டு அன்மொழித் உதாரணங்கள் என எழுதியுள்ளேன்:
(1) ஹிந்து பிரபஞ்சவியலில், 7 தீவுகள்: கிரவுஞ்ச த்வீபம் (அன்றில் தீவு). இது பனைமரத் தீவு.
ஏனெனில் மற்ற தீவுகள் எல்லாம் மரப் பெயரால் அமைந்தவை. 
(2) மூல நக்‌ஷத்திரம் : கிரவுஞ்சம், அன்றில் என்ற பெயர் பெறும். இதுவும் அந்த நட்சத்திரம் பனையை
ஒத்திருத்தலாம் வரும் பெயர்.

நன்றி,
நா. கணேசன்

Ka.Sri.Sri who made an indelible mark as a translator

அ.ச.ஞானசம்பந்தன் போலக் கடைசியில் வி.ச. காண்டேகர் கண்ணிழந்தார்.
ஜெயபாரதன் கதை ஒன்றில் காண்டேகர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்:
[முன் வாரத் தொடர்ச்சி]
“காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா.

“ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா.

“பாவம்! கடைசிக் காலத்தில் மராட்டியக் காவிய மேதை காண்டேகரின் கண்கள் ஒளியிழந்து குருடாகிப் போயின”

“ஆங்கிலக் கவி மேதை ஜான் மில்டன் போல” என்றாள் புனிதா.
“உயர்ந்த மேதைகளுக்கு ஒன்று ஆயுள் குறுகிப் போவுது! அல்லது கண்கள் குருடாகிப் போவுது!”


ராமாயணத்தின் தோற்றுவாய் கூறும் சிறையிருந்தவள் ஏற்றம்:

ஒருநாள்  தமஸா நதிக்கரையில், சிஷ்யர் பரத்வாஜருடன் மகரிஷி வால்மீகி சென்றார். அப்பொழுது ஒருவேடன், பனைமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் ஜோடியில் ஆண்பறவையை அம்பெய்திக் கொன்றான். ஆண்பறவையின் உடலின்மிது விழுந்து பெண்பறவையானது பிரிவால் கதறித் துடித்தது. பறவைகளின்மீது இரக்கமும், அவற்றின்மீது பகைகொண்ட வேடன்மீது கோபமும்கொண்டு, பொறுக்காமல் மகரிஷி, வேடனை

மா நிஷாத பிரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீ ஸமா |

யத் கிரௌஞ்ச மிதுனாத் ஏகம் அவதீ காம மோஹிதம் ||

-“ஏ வேடனே! காமத்தில் விளையாடிக்கொண்டிருந்த  அன்றில் பறவைகளில் ஒன்றினை கொன்ற நீ, பலகாலம் நிம்மதியின்றி அலைவாய்(உனக்கு அமங்கலம் உண்டாகுக)” என்று சபித்தார்.

அவர் வெகுண்டு சொன்ன அவ்வார்த்தைகள், மேற்கூறிய சுலோகமாக அனுஷ்டுப் சந்தஸில், வீணையில் இசையமைத்து பாடத்தக்கவகையில் அமைந்து, மஹரிஷி வாயில் சாபமாக, அவரையும் அறியாமல் வெளிப்பட்டது.

------------

150 காலமாக இந்தியாவின் முதல் இதிகாசம் தோன்றக் காரணமாக இருந்த கிரவுஞ்ச விருத்தாந்தம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வடமொழிப் பேராசிரியன்மார் இயற்றிக்கொண்டுளர். ஆனால், கிரவுஞ்சம் என்பது என்ன பறவை என்று அவர்களுக்குத் தெரியவில்லை: Curlew, Paddy Heron and Sarus Crane are their leading candidates for Krauncha bird ID. But if they take a quic look at 2000 years of Tamil, they can easily identify that the Krauncha bird of Valmiki's Book1, Chapter 2 episode is really the Indian black ibis. 17-ஆம் உலக சம்ஸ்கிருத மாநாட்டில் இதனைத் தெளிவுபடுத்திக் கட்டுரை தருகிறேன்.

Krauñca Bird of the Rāmāyaṇa: Its Identification from Sanskrit and Tamil sources

 

                 Dr. Nagamanickam Ganesan (naa.ganesan@gmail.com)

                                Houston, Texas, USA

 

Abstract: There have been many efforts to identify the Krauñca bird mentioned in Sanskrit texts. In the paper, 'A Bird Bereaved: Identity and Significance of Vālmīki’s krauñca' (JIP, 1998), Dr. Julia Leslie focusses on ornithological data, and on an important verse in the Rāmāyaṇa’s Southern Recension and concludes that Krauñca is Indian Sarus crane. First suggested by K. N. Dave in his book on birds in Sanskrit literature, this sarus crane idea as Krauñca is developed by J. Leslie and then by Niels Hammer. However, my paper brings in new data for the Krauñca bird identification through the comparison between Sanskrit and Dravidian classical texts and the writings of the ornithologists. The Krauñca bird has a Dravidian name, aṉṟil in Sangam Tamil texts such as Akanāṉūṟu, Naṟṟiṇai and Kuṟuntokai. In the Tamil version of the Skandapurana mythology, Skanda-Murukan splits open the asura who stood in the form of Krauñca mountain which is called “aṉṟil kuṉṟu" in the Bhakti period literature. Ornithologists like Dr. M. Krishnan and S. T. Baskaran have recorded that the ibises are still called aṉṟil in the villages of Tamil Nadu. Julia Leslie did a detailed analysis of seven common bird names: snipes, curlews, egrets, herons, storks, flamingos, and cranes. However, she misses taking into account another important family of waterbirds. Among the wading birds of India, three species of Ibis are extant. The epithet tāmraśīrṣa referred to in the description of Krauñca bird refers to the Indian Black ibis (Pseudibis papillosa) with a red head. While the head of the sarus crane is not red on top, and its range does not extend to South India, Indian epics describe Krauñca birds in Hampi, Karnataka. Ibises are a major class of waders, and the red-headed Ibis is identified as the Krauñca bird showing its identity from 2000 years of Tamil literature. Also, in Dakshina Karnataka district, there is a place called Kariñja and also one near Bombay. In addition to Aryan etymologies for Krauñca, a Dravidian etymology with the meaning, 'black bird' is suggested by using these toponyms and old Tamil texts. The relationship of Krauncha bird with Palmyrah palm trees and the name of the island in Hindu cosmology and nineteenth lunar mansion in Indian archaeo-astronomy is discussed.





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 24, 2018, 11:14:32 AM6/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஹிந்தி பாஷையில் காண்டேகரின் கிரௌஞ்ச வதம். வாமன பாவே மொழிபெயர்ப்பில்.

நண்பர் ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியரின் மறுமொழி (இன்னும் பலர்):

On Sat, Jun 23, 2018 at 7:28 AM, Radhakrishna Warrier <radwarrier@hotmail.com> wrote:
Tree is mentioned at two places, after Valmiki's shloka:

Page 44, para 3:  वाल्मीकी के दुःख का कारण क्या था ? क्या किसी चक्रवर्ति राजा की मृत्यु ? अथवा प्रकृति सहज उत्पात ?  नहीं । एक क्रौंचयुगल सुखासक्त हो कर एक पेड़ पर प्रणयक्रीडा का अनुभव ले रहा था ।  निषाद का बाण उनमें से एक को आ लगा । ...


Page 49-50, last para of page 49 and first para of page 50: प्रोफेसरसाहब ने आँखें बंद करलीं । उनके अंतश्चक्षु के सामने वही श्लोक दिखाई पड़ा । मेघ जिस तरह देखते देखते तरह तरह के स्वरूप धारण कर लेता है उसी तरह श्लोक भी आकृतियां में परिणत हो गया । -- क्या वह पेड़ पर का क्रौंचदंपति है ?

I have marked the word पेड़ (pE.D = tree) in red.  

Meaning of first excerpt:  What was the reason for Valmiki's sorrow (दुःख duHkh = sorrow)? Was it any emperor's death? Or was it some natural disturbance (उत्पात utpaat = disturbance)? No. A krauncha couple was enjoying lovemaking on a tree. The arrow of the nishaada hit one of them. ...

Meaning of second excerpt:  Professor closed his eyes.  He saw the same shloka through his internal eyes (अंतश्चक्षु antazcakSu).  Just as clouds change shape as we keep looking at them, the shloka was also taking various shapes.  Is that the krauncha couple on the tree?...

Maybe, our Narayan Prasad would be able to give a better translation.

2018-06-23 6:38 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sat, Jun 23, 2018 at 6:18 AM, Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


On 23 June 2018 at 18:34, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Namaskaram. I read Khandekar's Kraunhca Vadha novel (1942) in Tamil.
Translation by Kaa. Sri.Sri (1953).

There are three places in which Valmik's famous shloka,
as quoted by Bhavabhuti verbatim, occurs at the beginning.
In the second and third instances, Khandekar says the
Krauncha bird pair is sitting on a branch of a tree.

Three places where "maa nishaada" shloka is used by V. S. Khandekar:
pg. 34:

pg. 43:

pg. 49:

Can you please read & tell me the statement where Krauncha birds
are infatuated with love (kAma-mOhitam) on a branch of a tree?



तस्य अभ्याशे तु मिथुनम् चरन्तम् अनपायिनम् |
ददर्श भगवान् तत्र क्रौङ्चयोः चारु निस्वनम् || १-२-९ 

There godly sage Valmiki saw a couple of lovely krouncha birds, in the vicinity of that river's foreshore, flying there about in togetherness, [and of course, fearless of any calamity,] and calling charmingly [1-2-9] 

http://www.valmikiramayan.net/utf8/baala/sarga2/bala_2_frame.htm

நீங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்து கேட்பதாக எண்ணுகிறேன்.


விரிவான கட்டுரை எழுதியுள்ளேன். அனுப்புகிறேன். 17-ஆம் உலக ஸம்ஸ்கிருத மாநாட்டில் படிக்கும் கட்டுரை.
நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருத அறிஞர்களை இந்திய அரசாங்கம் அனுப்புகிறது: வான்கூவர், கனடாவுக்கு.
அவர்கள் முன்னிலையில்.

சோகம் > ச்லோகம் ஆன வரலாற்றைச் சொல்லும் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், இரண்டாம் சர்க்க வரலாறு.
சீதைப் பிராட்டி தான் வால்மீகியின் பிரியமானவள். அவள் அவரது ஆசிரமத்தில் குச, லவர்களை ஈன்றெடுத்தாள்.
குயிலுவர் > குசீலவர் (பாணர்கள்). யாழ் வாசிப்போர். இவ்வார்த்தை உடைக்கப்பட்டு குச, லவர் என்று சீதையின்
புத்திரர் பெயர்.

அன்றில் பறவைகள் இரவில் சோக கீதம் (விளரிப்பாலை = தோடி அராகம்) பாடும் - பிரிவால்.
இது நெய்தல் திணைத் தலைவி தலைவன் மீண்டுவர இசைக்கும் பண். வேத இலக்கியத்தில் இதற்கு கிரௌஞ்சப் பண் எனப் பெயர்.

கம்போடியாவில் 7-ஆம் நூற்றாண்டில் வால்மீகி, யாழ்ப் பாணன், வேடன், கிரவுஞ்சம் சிற்பம் உள்ளது.
துரதிஷ்டவசமாக - இந்தியாவில் சிலைகள் உடைப்பு, திருட்டு, கடத்தல் போல - வால்மீகியின் முகம்
சிதைக்கப்பட்டுவிட்டது. கல்வெட்டும் உண்டு.

-----------

உங்கள் மறுமொழிக்கு வருகிறேன்:
ராமாயணத்தின் புகழ்மிக்க சுலோகம் “மா நிஷாத” இதை அப்படியே பவபூதி உத்தரராமசரிதத்தில் கூறுகிறார்.
ஷெல்லி பாலக்கின் (கொலம்பியா பல்கலை) மொழிபெயர்ப்புக் கொடுத்திருந்தேன். அதில் பார்க்கலாம்.

இதனை மூன்று முறை காண்டேகர் சுலோகத்தைப் பயன்படுத்துகிறார். இரண்டாம், மூன்றாம் முறை சுலோகத்தை
தொடர்கையில் கிரவுஞ்சம் மரக்கிளையில் இருப்பது இருக்கும். என்ன வாசகம் ஹிந்தியில் என அறிந்துகொள்ள விருப்பம்.

ராவணன் மனைவியர் அரற்றுதலை கரு அன்றில் பேடைகள் என்பான் கம்பன். ஸாருஸ் கிரேன் எப்பது கறுப்பு நிறம் ஆகும்?? :-)
ஸாரஸ் க்ரேன் மரத்தில் அமராது. அங்கே வான்மீகி கூறும் காம மோஹிதமான புணர்ச்சியும் அதற்கு இல்லை.
அன்றில்/கிரௌஞ்சத்தின் தலை “செந்தலை அன்றில்” என்கிறார் அருணகிரிநாதர். இதனை மகாபலிபுரம்
கிராதார்ஜுனீயம்/அருச்சுனந்தபசு புடைச்சிறபத்திலும் காண்க.

வால்மீகி சிலை அருகே உள்ள கிரௌஞ்சம் பாருங்கள். ஸாரஸ நாரைக்கு கழுத்து மிக நீளம். அப்படி இல்லாமல்,
அன்றில் கிரௌஞ்சம் இருக்கிறது. கிரவுஞ்சம் கோழியின் அளவுள்ள பறவை என்கிறது பிங்கலம்.
Bin chicken என்பர் ஆஸ்திரேலியாவில். 
 


Three places where "maa nishaada" shloka is used by V. S. Khandekar:
pg. 34:

pg. 43:

pg. 49:

Can you please read & tell me the statement where Krauncha birds
are infatuated with love (kAma-mOhitam) on a branch of a tree?

It should be there around/after pg. 43 & pg. 49.

அன்புடன்,
நா. கணேசன்


-- 
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

-- 

N. Ganesan

unread,
Jul 7, 2018, 2:48:46 AM7/7/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வருகிற வாரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை, வான்கூவர் நகரில் 17-ஆம் உலக ஸம்ஸ்கிருத மாநாடு. 500 கட்டுரைகள்! ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா எனப் பல அறிஞர்கள் வருகிறார்கள். கிரவுஞ்சம் என்னும் அன்றில் பறவை - வால்மீகியின் இதிகாசத்தில் என்னும் என் கட்டுரை செவ்வாய்க்கிழமை அன்று.

அடுத்த ஆண்டு ஜூலை நான்காம் தேதியில் சிக்காகோ தமிழ் மன்றம் + பெட்னா உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முதன்முறையாக அமெரிக்காவில் நடாத்துகிறது. 2500 $ அதன் செலவுகளுக்கு நன்கொடை அளித்துள்ளேன். மிகப் பரந்துபட்ட புலனத்தில் ஆய்வுக்கட்டுரைகள் வடமொழிக்குப் படைக்கப்பெறுதலைப் பாருங்கள். அதே போல, தமிழ் அறிஞர்கள் சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியருள வேண்டுகிறோம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கிய தனிநாயக அடிகளும், பேரா. வ. ஐ. சுப்பிரமணியம் போன்றவர்களும் மனமகிழ்ந்து வானில் இருந்து வாழ்த்துவர். 1968-ல் அண்ணா சென்னையில் நடத்திப் புகழடைந்தார். அவ்வரலாறு மீண்டும் படைக்கப்பெற வேண்டும்.

நா. கணேசன்

---------- Forwarded message ----------
From: WSC2018 Secretariat <wsc...@ubcsanskrit.ca>
Date: Sun, Jun 24, 2018 at 5:21 PM
Subject: 17th World Sanskrit Conference Programme & Schedule of Papers
To: WSC2018 Secretariat <wsc...@ubcsanskrit.ca>


Dear Colleagues:

With two weeks left until the start of the 17th World Sanskrit Conference, we are pleased to release the Conference Programme and Schedule of Papers. 

You may download the Schedule of Papers HERE (6MB, 46 pages): https://tinyurl.com/y9btwlkp

Or download the complete 100-page full Conference Programme HERE (25 MB, 100 pages): https://tinyurl.com/ycsnta58

A Printed version of the complete programme (including the Schedule of Papers) is under production and will be provided to all registered participants in your conference bag when you check in at the WSC2018 registration desk.

The enthusiastic students in our WSC2018 Production Team have also put together a guide to local restaurants, pubs, and places to see, called कालक्षेपः, which will also be included  in your conference bag. The guide is also available for download HERE (4MB, 28 pages): https://tinyurl.com/yc9dnpwy

Here are some highlights of the WSC2018 Programme:

  • The 17th WSC features more than 500 papers in 24 distinct topical sections, as well as 20 special panels, workshops, and roundtables. 
  • Three distinguished speakers are confirmed to deliver lectures during the plenary session in the morning of Monday July 9 at the Chan Centre for the Performing Arts: 
    • George Cardona (Pennsylvania), "Philology, Text History and History of Ideas”
    • Dipti Tripathi (Delhi, NMM), "Reflections on Manuscriptology: Forays into Indian Paradigms of Knowledge Management”
    • Arvind Sharma (McGill), "The Surprising Modernity of Bhavabhūti’s Uttararāmacarita”
  • Other featured/keynote speakers:
    • Mahāmahopādhyāya Bhadreshdas Swami, "Akṣara-Puruṣottama Darśana: Introduction & Book Launch” (Monday, July 9, 12-12.30PM)
    • Alexis Sanderson (Oxford), "The Śākta Transformation of Śaivism,” (Tuesday, July 10, 10.30AM-12.30PM)
    • Kaushal Panwar (Delhi) and Ananya Vajpeyi (CSDS, Delhi), with Mandakranta Bose (UBC): “The Story of Our Sanskrit, A Public Forum on Gender & Caste in Sanskrit Studies” (Tuesday, July 10, 8-10PM)
    • Lyne Bansat-Boudon (EPHE), "Registres de la théâtralité indienne : le théâtre comme pratique religieuse” (Keynote French Lecture) (Wednesday, July 11, 4.30-6PM)
    • Vikram Chandra, “The Poetry of Amazement” (Thursday, July 12, 6.30-7.30PM) [Indian Summer Festival Event]
    • James Mallinson, "Yoga: To Mortify or Cultivate the Body?” (Thursday, July 12, 8-9.30PM)
  • WSC Cultural Events open to the Public:
    • Monday, July 9, 7-11PM: “Living Legends: A Rare Performance of Kūṭiyāṭṭam Sanskrit Theatre” - Featuring the Nepathya Troupe performing Bālivadham (Chan Centre for the Performing Arts, UBC)
    • Tuesday, July 10, 8-9.30PM: “Śivo’ham: Śiva through Indian Classical Music & Dance” - Presented by the Naad Foundation and Sudnya Dance Academy (Frederic Wood Theatre, UBC)
    • Wednesday, July 11, 7.30-10PM: “Dakṣiṇāpatha: The Classical Music & Dance of South India” - Featuring Padma Sugavanam (Chennai/New Jersey, USA) and Mandala Arts & Culture (Vancouver), with guest dancer Naren Ganesan (Sanskriti, Edmonton) (Frederic Wood Theatre, UBC)
  • All-Conference Banquet for registered WSC participants, with a talk by Gary Tubb (Chicago) on Friday, July 13, 6-9PM (Vegetarian catering by Dhaliwal Caterers, Surrey) (Great Hall at the UBC Student Nest)
  • Sessions conducted in Sanskrit:
    • Akṣarapuruṣottama Darśana Vidvadgoṣṭhī, moderated by Deven Patel (Pennsylvania), Tuesday, July 10, 4.30-6PM
    • Śāstracarcāsadas (Legal Debate) & Kavisamavāya (Poets’ Forum), Friday, July 13, 8AM-12.30PM
  • Workshops on Digital Sanskrit Studies - Computational Linguistics & Digital Humanities: Wednesday, July 11, 10.30AM-4PM
  • Sessions on Kūṭiyāṭṭam Performance: Thursday, July 12, 2-6PM
  • Featured Section on Yoga and Āyurveda - Wednesday & Thursday, all day
  • Confirmed Exhibitors: Biblia Impex/Aditya Prakashan, Brill Publishers, Dev Publishers, DK Agencies, Radhika Devi, Saṃskṛtabhāratī, Svadhyaya Publications, Vyoma Linguistic Labs + others! 

If you are a registered participant who will be coming to present your paper at the WSC, but *don’t* to see your paper in the schedule of papers, or should happen to notice other errors in scheduling, please let us know at once and we will look into the situation. If you have not yet downloaded and read the Fourth Circular, we urge you to do so, by going to the WSC website - wsc.ubcsanskrit.ca. You will also find the latest information on Housing, Meal plans, and Excursion bookings, if you still need to complete these formalities. 

We look forward to welcoming you all to Vancouver, Canada, in two short weeks! 


Secretariat, 17th World Sanskrit Conference, Vancouver, Canada • July 9-13, 2018




wsc2018-schedule-web.pdf

Satish Kumar Dogra

unread,
Jul 7, 2018, 3:07:21 AM7/7/18
to vall...@googlegroups.com
அணுசரிக்க வேண்டிய குருவாக இருக்கிறீர்.  நவீன யுக புலவர்.

நீங்கள் குறிப்பிடும் சலோகத்தில் கிளராஞ்ச என்ற பறவை காக்கா என்று தான் நினைத்து வந்தேன். உங்கள் கட்டுரையைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். 

============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Jul 7, 2018, 4:02:45 AM7/7/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
வாழ்த்துகள் ஐயா!

இரா.பா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 9, 2018, 7:45:59 AM7/9/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நன்றி, LS.

Got an invitation to attend a dinner hosted by a minister of the Govt. of India:



2018-07-07 22:02 GMT-07:00 LNS <lns2...@gmail.com>:

வாழ்த்துக்கள், Dr கணேசன்!! வடமொழியாளர்களின் மூக்கு நுனிக்கு அப்பால் ஒரு பெரிய உலகமே இருப்பதையும் அதற்கு பெயர் தமிழ் என்பதையும் உங்கள் ஆய்வுக் கட்டுரை எடுத்தோதும் என்று நம்புகிறேன். வெற்றியுடன் வருக!!


ஒரு முறை நீங்கள் அன்றில் தீவைப் பற்றி கேட்டிருந்தீர்கள். வேலையில் ஈடுபட்டிருந்ததால் அப்போது சொல்ல முடியவில்லை. க்ரௌஞ்ச த்வீபம் (அன்றில் தீவு) என்பது விஷ்ணு புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது


जम्बूप्लक्षाह्वयौ द्वीपौ शाल्मलश्चापरो द्विज। 

कुशः क्रौञ्चस्तथा शाकः पुष्करश्चैव सप्तमः ।। 2.2.5 ।।

एते द्वीपाः समुद्रैस्तु सप्त सप्तभिरावृताः ॥

लवणेक्षुसुरासर्पिर्दाधिदुग्धजलैः समम् ॥ 2.2.6 ।।


விஷ்ணு புராணத்திற்கு எங்களாள்வான் என்ற ஆசாரியர் அருளிய 'விஷ்ணுசித்தீயம்' என்கிற சம்ஸ்கிருத வியாக்கியானம் உண்டு. காஞ்சி சுவாமிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்  பதிப்பித்தது. இதனுக்கு ஒரு தமிழாக்க நூல் உண்டு என்றும் கேள்விநான் பார்த்ததில்லை. 


சுலோகங்களின் பொருள்:


இவ்விடம் பராசரர் மைத்திரேயருக்கு எடுத்துக் கூறுகிறார்:


இந்த பூமண்டலம் என்பது ஜம்பூ (நாவல்), ப்லக் (அரசு), ஶால்மலி (இலவு), குஶ (தருப்பை),  க்ரௌஞ்ச (அன்றில்), ஶாக (தேக்கு), புஷ்கர (?) என்ற ஏழு தீவுகளின் சமூஹம். இத்தீவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடலினால் சூழ்ந்திருப்பனவாம். இவை முறையே உப்பு, கரும்புச் சாறு, சுரா பானம், நெய், தயிர், பால் மற்றும் தூய நீர் கடல்களாம்


இவ்விடம் கூறிய அன்றில் தீவு என்பது அன்றில் மலையைக் குறிக்கும் என்றும் சொல்வார்கள். 


அன்புடன்,


LNS

To: WSC2018 Secretariat <wsc...@ubcsanskrit.ca>


N. Ganesan

unread,
Jul 10, 2018, 7:54:15 AM7/10/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sat, Jul 7, 2018 at 1:02 AM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:
வாழ்த்துகள் ஐயா!

இரா.பா


On Monday, July 2, 2018 at 2:39:44 PM UTC-7, சௌந்தர் wrote:
"மா நிஷாத"-->சிலேடை விளக்கம் 

நன்றி.

இவ்விழையில் 2016 மடலொன்று:

வால்மீகி முனி திருவாய் மலர்ந்தருளிய முதல் ஸ்லோகம் என்று கொண்டாடப்படுகின்ற இந்த ஸ்லோகத்தின் விஷேத்தினை கவிதைச்சிறப்பு பேசப்படுகின்ற இந்தக் குழுமத்தில் எழுதவேண்டியது அவசியம். அப்படி என்ன கவிதைச்சிறப்பு இந்தப் பாடலுக்கு?

வேட்டையாடி பிழைத்துவந்த வால்மீகி,  நாரதமுனியோடு உரையாடி இராமகாதையை சுருக்கமாக அறிந்தபின், தமஸா நதியில் காலை நேர நீராட்டத்திற்காகச் சென்று மீண்டு வருகையில், ஒரு வேடன் எய்திய அம்பில், காமமோஹிதமாய் இருந்த இரண்டு பக்ஷிகளில் ஒன்றான ஆண்பறவை கீழே விழுந்து கதற அதைக் கண்ட முனிவருக்கு தன்னை அறியாமல் கோப உணர்ச்சி பொங்கி அந்த வேடனைச் சபித்து விடுவதுபோல் அமைந்த பாடல் இது. 

இதுவரை வேடனாக இருந்தவர். கவிபாடும் திறமை பெற்றிலருமல்லர். இருப்பினும் தம்மை அறியாமல் அவரிடமிருந்து வெளிப்பட்ட பாடல் கவிதை இலக்கணத்துக்குரித்தான 'சந்தஸ்' பிறழாமல் இருந்ததைக் கண்டு தாமே வியந்தார். இத்திறமை எங்ஙனம் வந்தது என்ற மகிழ்ச்சியுடன், அடடா, இது என்ன முதல் வாக்கியமே ஒரு வேடனை சபிக்குமாறு அமைந்துவிட்டதே என்ற வருத்தமும் சேர்ந்தே இருந்தது. மேலும் முதலெழுத்தும் 'மா' என்ற சிறப்பற்ற (வடமொழியில், மா என்றால் நிஷேதம்; அதாவது எதிர்மறைப் பொருளில் வரும் சொல்).

இதைத் தொடர்ந்து அங்கு வந்த ப்ரும்மாவிடம் முறையிட, அவரோ கலைமகளின் கணவர், வாக்சாதுர்யத்துக்குக்  கேட்கவா வேண்டும். 
'முனிவரே! ஏன் மனம் கலங்குகிறீர்? ஶ்ரீமந்நாராயணனைப் பாடும் அழகான துதி அல்லவா இது? மங்கலகரமாக அமைந்த இந்தப் பாடலையே வைத்து ஶ்ரீராமாயணம் மேலே தொடர்ந்து எழுதும்' என்று பணித்தார்.

முனிவர் ஒன்றும் புரியாது திகைத்தார். தம்மை அறியாமலேயே, இந்தப்பாடல் ஒரு சிறந்த சிலேடைப் பாடலாகவும் அமைந்து, மங்கல வாழ்த்தாகவும் அமைந்த விதத்தை எண்ணி மனம் பூரித்தார்.

என்ன இது ஒரு சிலேடைப் பாடலா? இந்த சிறப்புச் செய்தியைச் சொல்லாமல், ஏதேதோ அன்றிலா, மன்றிலா, குருகா என்று கவிதைநயத்திற்கு தொடர்பில்லாத விவரங்கள் பேசப்பட்டு வருகின்றதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. 

முதலில் பாடலைப் பார்ப்போம்.

मा निषाद प्रतिष्ठां त्वमागम: शाश्वतीसमा: |
यत्क्रौञ्चमिथुनादेकमवधी: काम मोहितं ||

இதை நேரிடையாகப் பொருள் கொண்டால், ஏ வேடனே! (निषाद!) காம மோஹிதமாய் இருந்த இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற உனக்கு ஆயுட்காலம்வரை (प्रतिष्ठां तु मा गम:) நல்ல நிகழ்வுகள் ஒன்றுமில்லாமல் போகட்டும்.
சாதாரணமாக இதை ஒரு கதைவடிவில் படிப்போருக்கு இதுதான் பொருள். 

பறவைகளாக உருவகப்பட்டவர்கள் இராமனும், சீதையும். இவர்களைப் பிரித்த வேடனாகிய இராவணன் அழிந்துபடட்டும் என்று சூசகமாய்  இராமாயணத்தின் கருப்பொருளை உணர்த்துவதாகத்தான் பொருள் கொள்வர். 

ஆனால் கவித்துவம் நிறைந்த பண்டிதர்களோ, இதில் உள்ள சொற்களைப் பிரித்து வேறுவிதமாக அந்வயித்து, இந்தப் பாடலை ஒரு மங்கலப்பாடலாகவும் பொருள் கொள்வர்.

मा निषाद!--मा என்ன்னும் சொல் மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்;  निषाद! இலக்குமிதேவி நித்யவாஸம் செய்கின்ற திருமார்பை உடையவன் திருமால், அதாவது ஶ்ரீநிவாஸன் என்று சொல்லப்படுபவன். ஏ வேடனே! என்று பொருள் சொல்லப்பட்ட முறை இப்பொழுது மாறிப்போய், ஹே ஶ்ரீநிவாஸ! என்று அழைப்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பன் என்பது ஆழ்வார் வாக்கு. எனவே, முதலெழுத்து மங்கல எழுத்தாகவும் அமைகிறது. 

இங்கே பறவைகளாக உருவகிக்கப்பட்டவர்கள் இராவணனும், மந்தோதரியும். காமமோஹிதமாய் இருந்த ஆண்பறவையான இராவணனை வதம் செய்த இராமனுக்கு மங்கலம் உண்டாகுக என்று பொருள் கொள்ள வேண்டும். प्रतिष्ठां त्वमागम: என்பதை, प्रतिष्ठां त्वं आगम: என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும் 

சௌந்தர்




Pavala

unread,
Jul 10, 2018, 7:23:20 PM7/10/18
to vallamai
உளமார்ந்த வாழ்த்துகள் கணேசன் சார்.


அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari

Erode.
Tamil Nadu.
Reply all
Reply to author
Forward
0 new messages