Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்

80 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 8, 2016, 10:19:03 AM8/8/16
to மின்தமிழ், vallamai


On Monday, August 8, 2016 at 7:03:49 AM UTC-7, mukunthan wrote:
அன்பின் இராம.கி ஐயா,
​இது சம்பந்தமாக ஒரு ஐயம்:
ஈரைஞ் ஞூற்றுவர் - ​ ஆயிரவர் - இவர்கள் சகர்கள் ஆக இருக்க ஏதாவது சாத்தியங்கள் உள்ளனவா?
நூற்றுவர் கன்னர் - சதகர்ணி போல, ஆயிரவருக்கும் வேறு மொழியில் ஏதாவது பெயர் இருந்திருக்கலாமா? (சகஸ்ர - ஆயிரம் என்பது போல)


”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்தொழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக்குறிக்காது நூற்றுவர் கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப்பாடும் எனக்கு உண்டு.
இதையும் பாருங்கள் ஐயா.. சிலவேளை உதவலாம்.


ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட போலம்பூந் தும்பை
ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய
 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியர்களுடனே சினங்கொண்டு, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையைச் சூடிய (பாண்டியருடைய) நூறு சேனைத் தலைவரும் (ஈரொன்பதின்மர் என்பது பாடமாயின் பதினெட்டுச் சேனைத் தலைவரும், போர்க்களத்திலே படும்படி....

அடுத்த அடியாகிய “பெருஞ்சோறு மிகுபதம் வரையறு கொடுத்தோய்” என்பதற்குப் பொருள் கூறுவேன். பெருஞ்சோறு என்பதற்குச் சிறப்புப் பொருள் உண்டு. அதனைத் தொல்காப்பியம் புறத்திணையியல் வஞ்சித்தினைப் பகுதியில் காணலாம். வஞ்சித் திணை என்பது ஓர் அரசன்மேல் வேற்றுநாட்டரசன் ஒருவன் படை
யெடுத்து வந்தால் அவன் மேல் போருக்குச் செல்வது. இந்த வஞ்சித் திணையின் துறைகள் பதின் மூன்றில் பெருஞ்சோற்றுநிலை என்பதும் ஒன்று. எதிர்த்து வந்த அரசன்மேல் போருக்குச் செல்லும் அரசன், போருக்கு புறப்படுவதற்குமுன் சேனைவீரர்களுக்கு விருந்து செய்வான். அந்த விருந்துக்குப் பெருஞ்சோறு, அல்லது பெருஞ்சோற்று நிலை என்பது பெயர். இந்த விருந்தின்போது அரசனும் உடனிருந்து உண்பான்.
(மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர் நூலிலிருந்து)
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=293&pno=279

சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை
    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த



புறநானூறு போலவே இளங்கோ அடிகள் பாடியிருப்பது மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர் - கௌரவர்கள் தாம். சாதகர்ணிகள் அல்லர்.

மகாபாரதம், இராமாயணம் கதைகளும், இலங்கைக்கு உள்ள தொடர்பும் பற்றி
ஒரு முக்கியமான ஆய்வேடு. மதுரை மீனாக்ஷி புராணம் போலவே, இலங்கை அரசர்கள் புராணமும் உள்ளது காண்க.

Πανδαιη and Sītā: On the Historical Background of the Sanskrit Epics

Asko Parpola
Journal of the American Oriental Society
Vol. 122, No. 2, Indic and Iranian Studies in Honor of Stanley Insler on His Sixty-Fifth Birthday (Apr. - Jun., 2002), pp. 361-373

கட்டுரை முழுக்க இங்கே படிக்கலாம், தந்துள்ளேன்:


நா. கணேசன்


 
நன்றி

N. Ganesan

unread,
Aug 10, 2016, 10:09:08 AM8/10/16
to மின்தமிழ், vallamai


On Monday, August 8, 2016 at 7:20:15 AM UTC-7, mukunthan wrote:
காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் :
सतसहसानि   , सतसहसेहि  -  ஸதஸஹஸேஹி - நூறாயிரம்
(http://www.jatland.com/home/Hathigumpha_inscription)
ஸஹ - சக - ஆயிரம் - சகர்கள் எனக் கூறப்படுபவர்களாக இருக்கலாமா?


ஸஹஸ்ரம். இது சாசிரம்/சாயிரம் என்றாகி தமிழில் ஆயிரம் என வந்த வடசொல் ஆகும்.  
ஸபை > அவை போல, ஸஹஸ்ர- > ஸாயிரம் > ஆயிரம்.

ஸஹஸ்ரம் என்னும் எண்ணுப்பெயருக்கும் சகர்கள் (உ-ம்: சாக்கிய நாயனார். போதிதருமரும் சாக்கியர் தான்.
சீன ஆவணங்கள் Aryan demon with blue eyes என போதிதருமரை வர்ணிக்கின்றன.) என்னும் இனத்தாருக்கும் தொடர்பில்லை.

சகர்கள் < ஶக-    சாக்கிய நாயனார் <  ஶாக்ய நாயனார்.

ஸஹஸ்ரம் வேறு, ஶக-, ஶாக்ய  வேறு.

ஶகர்கள் (சகர்கள்): பற்றி அறிமுகம்: https://en.wikipedia.org/wiki/Saka

நா. கணேசன்


Mukunthan Pathmanesan

unread,
Aug 10, 2016, 1:34:12 PM8/10/16
to mint...@googlegroups.com, vallamai
அன்பின் கணேசன் ஐயா,
சகர் (சாகர்) வேறு சாக்கியர் வேறு
​..
புத்தர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர். நான் கூறவருவது இராம.கி ஐயா குறிப்பிட்ட இந்தோ-சித்திய  சகர் எனும் நாடோடி இனத்தவரை.

https://en.wikipedia.org/wiki/Saka

N. Ganesan

unread,
Aug 10, 2016, 2:01:28 PM8/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

I've given the entry on 'Saka tribes in my earlier mail.

ஶக- என்னும் குலத்தைத் சார்ந்ததால் ஶாக்யமுனி எனப்படுகிறார் புத்தர். அதனைத்தான்  குறிப்பிட்டேன்: சளுக்கர் என்னும் குலம் சம்ஸ்கிருதத்தில் சாளுக்ய என்றாகும். அதுபோல், ஶக என்னும் குலப்பெயர் ஶாக்ய- என்றாகிறது.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Aug 15, 2016, 9:34:54 AM8/15/16
to மின்தமிழ், vallamai
On Monday, August 15, 2016 at 6:08:49 AM UTC-7, இராம.கி wrote:. இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பது அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம்பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று சொல்வதில்லையா? (ஆயிரமென்பது தமிழ்வேர்கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங் கொண்ட திரு. நா.கணேசன் தலைகீழாய் ஸஹஸ்ரம்>ஸாஸிரம்>ஸாயிரம்>ஆயிரம் என்பார். இவருக்கு மறுமொழி சொன்னால் நீளும். வேறொருமுறை பார்ப்போம்.) 

*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

பர்ரோ போன்றோர் எழுதியுள்ளனர். நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பதும்.

சிலப்பதிகாரம் என்ற நாவல் பற்றி எழுதுங்கள். ஆயிரம் என்பது ஸஹஸ்ரம் என்னும் ஆரிய மொழிகளின் சொல்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 15, 2016, 11:37:46 PM8/15/16
to மின்தமிழ், vallamai


On Monday, August 15, 2016 at 8:30:15 AM UTC-7, இராம.கி wrote:
திரு.நா. கணேசன்,
 
நானும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.  இந்த name dropping ஐ எப்பொழுதுதான் விடப்போகிறீர்கள்?
 
பர்ரோவும் எமனோவும் என்ன கடவுள்களா? அவர்களும் ஆய்வாளர் தாமே? அவர் எழுதியதெல்லாம் வேதவாக்கா?  Every scientific assertion can be challenged in this world. நாளைக்கு நான் எழுதியதை மறுப்பதற்கும் யாரோவொருவர் வருவார். அது இயற்கை.  நம்மூரில் நக்கீரனென்ற ஒருவன் இருந்தானாம். கதை உங்களுக்குத்  தெரியுமென எண்ணுகிறேன். ”ஆயிரம் தமிழல்ல” என்றால் அதை உங்கள் வாக்கால் நிறுவுங்கள். ”அது தமிழ்” என்பதை என் வாக்கால் நான் நிறுவுகிறேன். அதைவிட்டு வெறுமே அவரைக்கூப்பிட்டு இவரைக்கூப்பிட்டுச் செய்துவிடலாமென எண்ணாதீர்கள்.

தமிழ்ப் பேராசிரியர்கள் சென்னைப் பல்கலைப் பேரகராதி தயாரித்தனர். அவர்கள் என்ன கடவுள்களா? அதனை மொழியியல் பேராசிரியர்கள் பர்ரோர் எமனோ சரிபார்த்து எழுதினர்?
பழைய தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும்  ஆராய்ந்து எழுதியிருப்பது ஸஹஸ்ரம் என்பது தமிழில் ஆயிரம் ஆயிற்று என. ஒப்பீடு: ஸமணர்  அமணர் என்று தமிழில் ஆவது போல.
நீங்கள் அதனை மறுத்து எழுதுங்கள். கடவுள் வேதவாக்கு என படிக்கலாம். நான் பார்த்தவரை கடல் போன்றவற்றின் மணலுக்கும் ஸஹஸ்ரம் ஆயிரம் ஆவதற்கும் தொடர்பு ஒன்றுங் காணோம்.
தமிழின் மூத்த பேராசிரியர்கள் ஆயிரம் என்ற சொற்பிறப்பை எழுதியிருப்பது சரிதான் என்பது என் துணிபு. அவர்கள் கன்னடத்தில் சாயிரம் என ஆயிரம் வழங்குதலைக் கொடுக்கவில்லை.
அதையும் சேர்த்தால் மேலும் உறுதிப்படுகிறது: எனவே தான் கிட்டலின் கன்னட இலக்கியச் சான்று அளித்துள்ளேன்.

சிலப்பதிகாரம் பேரிலேயே வடசொல் இருக்கிறது. வான்பகை என்பதற்கு புதிதாய் ஹேலி’ஸ் காமெட் என்றெல்லாம் எழுதினீர்கள். செங்குட்டுவன் என்ற பேரே இல்லை சங்க இலக்கியத்தில்.
சிலம்பு புதினத்தில் வட இந்தியா மன்னர்களை தோற்கடித்தார் என்கிறார் இளங்கோ அடிகள். கற்பனைக்குக் காப்பியம் அது. இவ்வளவு பெரிய வெற்றி சங்க இலக்கியத்தில், அப்போது
செங்குட்டுவன் வாழ்ந்திருந்தால் பதிவாகாமல் இருக்குமா? 

பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் வெ சு. சுப்பிரமணியாசாரியார், ”சிலப்பதிகாரமும், ஆரியக் கற்பனையும்” என்ற நூல் எழுதியுள்ளார். அதனைப் படித்துப் பாருங்கள்.
ஏன் சிலம்பு பிற்கால நூல். சங்க காலத்தில் இளங்கோ அடிகள் வாழவுமில்லை என அறியலாம்.

நா. கணேசன்
 
 
அப்புறம் ”சிலப்பதிகாரம் ஒரு நாவல்” என்று சொல்வதில். அத்தனை மகிழ்ச்சி கொப்பளிக்கிறதோ? ஏன் ”இராமாயணம் ஒரு நாவல்”, ”மகாபாரதம் ஒரு நாவல்” என்று சொல்லிப்பாருங்களேன்?  (அப்படி உங்கள் கூற்றுக்களில் ஒருநாளும் நான் பார்த்ததில்லை.) நாவலுக்கும் காப்பியத்திற்குமுள்ள வேறுபாடு  உங்களுக்குத் தெரியுமா? அதையும்போய் திரு. நாகசாமியிடம் கேளுங்களேன்?
 
இராம.கி. 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mukunthan Pathmanesan

unread,
Aug 16, 2016, 5:51:01 AM8/16/16
to mint...@googlegroups.com, vallamai
​​
பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு நடந்ததென்று கொண்டு இராம.கி ஐயா குறித்த காலக்கணிப்பு - ஒரு தொகுப்பு

வானவரம்பன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 193 - 143
(மனைவி நல்லினி , மக்கள்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
பல்யானைச் செல்கெழு குட்டுவன்)

 
செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், (குடக்கோ நெடுஞ்சேரலாதன் )  பொ.உ.மு. 166 - 109
(
மனைவி பதுமன்தேவி = மக்கள்
 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் , ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
மனைவி நற்சோணை , மகன் செங்குட்டுவன் )

செங்குட்டுவனின்  சிற்றப்பன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்,
பொ.உ.மு. 156 - 132
(அண்ணன் ஆட்சி நடந்தபோதே தம்பி இறந்திருக்கலாம்.)


செங்குட்டுவன்  பொ.உ.மு. 131  -  77
செங்குட்டுவனின் ஒன்றுவிட்ட அண்ணன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பொ.உ.மு. 131-107
செங்குட்டுவனின்  ஒன்றுவிட்ட உடன்பிறந்தான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ( ஆட்டனத்தி)  பொ.உ.மு. 106 - 75

செங்குட்டுவனின்  மகன் குட்டுவன் சேரல்


இரும்பொறைக்கிளை
 கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
அந்துவன் சேரல் இரும்பொறை பொ.உ.மு. 190-147
(மக்கள் - செல்வக் கடுங்கோ வாழியாதன் ,மாந்தரஞ் சேரல் இரும்பொறை )

சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் பொ.உ.மு. 164-140
(அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான்.)


(யானைக்கட் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை
( மகன் இளஞ்சேரல் இரும்பொறை)

வாழியாதன் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பொ.உ.மு. 139-123

(பாலைபாடிய பெருங்கடுங்கோ )


 குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (மருதம்பாடிய இளங்கடுங்கோ ) பொ.உ.மு. 122-107
(கொங்குவஞ்சியில் சதுக்கபூதத்தை நிறுவிச் சாந்திவேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம் )

கட்டுரை காதையின் படி (79-84ஆம் வரிகள்), ஐங்குறுநூற்றைத் தொகுப்பிக்க உதவிய (யானைக்கண் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை செங்குட்டுவனின் சமகாலத்தவன் ஆகிறான்.


------------------------------------------------------------------------------------
அன்பின் இராம.கி ஐயா
நெடுஞ்செழியன் வாழ்ந்த காலம்  - பொ.உ.மு. 130 - 80 (மதுரை எரிந்தது பொ.உ.மு. 80 எனக்கொண்டு) ஆக இருக்குமா? அப்படியாயின் மற்றைய அரசர்களின் காலம் ஒத்துப்போகின்றதா எனப் பார்க்கலாமா?

1. பல்யானைச் செல்கெழு குட்டுவன்
​பொ.உ.மு. 156 - 132​


​​
சிலப்பதிகாரம் - கட்டுரை காதை

வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு

பதிற்றுப்பத்து - மூன்றாம் பத்து - பதிகம்
'நீர் வேண்டியது கொண்மின்' என,
'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என,
பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி
வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும்
பார்ப்பனியையும் காணாராயினார்.

பராசரன் பரிசு பெறச் சென்றது பல்யானைச் செல்கெழு குட்டுவனிடம். அக்காலம் பாண்டிய நாட்டை ஆண்டவன் நெடுஞ்செழியன் . (வார்த்திகனைச் சிறையிடல்)

2.

சிலப்பதிகாரம் - கட்டுரை காதை
காவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி!
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந் தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!


வார்த்திகனைச் சிறையிடும் நிகழ்ச்சி நடந்தபோது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,  மாந்தரஞ் சேரல் இரும்பொறை ,பல்யானைச் செல்கெழு குட்டுவன் வாழ்ந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்த்தபோது
ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண,
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்

என்று எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. இது நடந்ததன் பின் நெடுங்காலம் நெடுஞ்செழியன் ஆண்டிருக்கமுடியுமா?

3.
பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு
செங்குட்டுவன்  பொ.உ.மு. 131  -  77
படையெடுப்புக் காலம் ஏறத்தாழ 3 ஆண்டுகள். (எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது)

நடுகல் காதை
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன்பின்னும்,

50 ஆண்டு கழிந்ததாக மாடலன் கூறுகின்றான்.
செங்குட்டுவன்   ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என பதிற்றுப்பத்து 5ம் பத்து கூறுகின்றது.

ஆகவே படையெடுப்பின் பின் 8 ஆண்டுகள் (மாடலன் ஐ-ஐந்து இரட்டி சென்றதன்பின்னும் எனக் கூறியபின் 5 ஆண்டுகள்) செங்குட்டுவன் வாழ்ந்திருக்கின்றான்.

4.

நடுகல் காதை
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
(பல்யானைச் செல்கெழு குட்டுவன்)

“போற்றி மன் உயிர் முறையின் கொள்க” என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,
(யாரென்று புரியவில்லை.. போர் வேண்டாம் எனத் தவிர்த்த மன்னனா? இருபக்கமும் பெருஞ்சோறு அளித்த பெருஞ்சோற்று உதியன் ??)


வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அல்லது அவனுக்காக செங்குட்டுவனுடன் சென்றவன்)

மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,

உரு கெழு மரபின் அயிரை மண்ணி,
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,

(பல்யானைச் செல்கெழு குட்டுவன்)

சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்,
(குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை)

மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்


போர் நடந்தது பொ.உ.மு.80 எனின் பொ.உ.மு.83 இல் பல்யானைச் செல்கெழு குட்டுவன் இல்லை, மாந்தரஞ்சேரலும் இல்லை அவன் மகன்  இளஞ்சேரல் இரும்பொறையும் இல்லை. ஆனால் வார்த்திகன் நிகழ்வு நடந்தபோது மாந்தரஞ்சேரல்,  பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருந்திருக்கின்றார்கள். மேலும் ஆடித் திங்கள்  அரைசு கேடுறும் என்று கூறியதன் பின் மதுரை எரிந்தது எவ்வளவு காலம் என அறிந்தால் மேற்கூறிய காலவரிசையில் சில திருத்தங்கள் செய்யலாம் என நினைக்கின்றேன்.

நன்றி,
முகுந்தன்

Mukunthan Pathmanesan

unread,
Aug 16, 2016, 6:12:06 AM8/16/16
to mint...@googlegroups.com, vallamai
எனது தொகுப்பில் ஒரு தவறு


(யானைக்கட் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை
( மகன் இளஞ்சேரல் இரும்பொறை)

இது பிழை


தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
( மகன் இளஞ்சேரல் இரும்பொறை)

என வரவேண்டும்.
தவறுக்கு வருந்துகின்றேன்.

 


N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:38:36 AM8/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 2:51:06 AM UTC-7, mukunthan wrote:
​​
பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு நடந்ததென்று கொண்டு இராம.கி ஐயா குறித்த காலக்கணிப்பு - ஒரு தொகுப்பு

செங்குட்டுவன் என்ற பெயரே சங்க இலக்கியப் பாடல்கள் ஒன்றிலும் இல்லை.

பதிற்றுப் பத்து - ஐந்தாம் பத்து - பதிகம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது. அப் பதிகத்தில் சேர்த்தப்பெற்ற செங்குட்டுவன் என்னும்பெயர்
சிலம்பின் தாக்கத்தால் இருக்கலாம்.

வஞ்சி (கருவூரில்) இருந்து செங்குட்டுவன் மலைவளம் பார்க்கச் செல்வதை சிலம்பு வர்ணிக்கிறது. இச் செங்குட்டுவன் காலம்
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என மு. இராகவையங்கார் 1915-ல் விளக்கியுள்ளார்.

நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages