தமிழ் வியாசர் - ம வீ ரா

8 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 16, 2023, 12:50:19 AMSep 16
to வல்லமை
தமிழ் வியாசர் - ம வீ ரா 
     

 தமிழ் மொழிக்கும்பாரத தேஸத்தின் விடுதலைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், பொதுவாழ்க்கைக்கும், ஜாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு மனித குல உயர்வுக்கும்  பிராமண குலத்தின் பல பெரியோர்கள் ஆங்காங்கே செய்துவந்த எத்தனையோ நற்பணிகள் மறைக்கப்பட்டு...  பிராமண எதிர்ப்பு மற்றும் வெறுப்பு என்னும் நச்சுப்புகை பகையாக, அரசியல்ஊடகம்எழுத்துபேச்சு இவற்றின் மூலம் பரப்பப்படுகிறது.

     பிராமணர்கள் இந்த தேஸத்தில் வாழக்கூடாத விஷக்கிருமிகள் போலவும் சுயநலம் கொண்ட இனவெறியர்கள் என்னும் விஷமிகள் பொய்யைப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

     பிராமணர்கள் ஆற்றிய அறவாழ்வின் சுவடுகள்தியாகங்கள், தொண்டுகள்செயற்கரிய சேவைகள் மறக்கடிக்கப்படுகின்றன.  

       அந்த பிராமண துவேஷிகளின் கூற்றுகளை மறுத்துரைக்கவும், இந்த கருத்துத்  தோழர்கள், மானமிகுகள், உடன்பிறப்புகள் எனச் சொல்லிக்கொள்ளும் “மயக்க வா(வியா)திகள்” எல்லோருக்கும் புரியவைக்கவும் 

     தமிழ் மொழி, தேசம், மனிதகுல வளர்ச்சி என அத்தனை துறைகளிலும் பிராமண பெரியோர்கள் பலர் தன் உடல் பொருள், ஆவி, என்று  தியாகம் செய்து வந்தவருகின்ற அறப்பணிகளை அடையாளம் காட்டி அந்த பெரியோர்களை “பிராமண ரத்னாக்களை”ப் பற்றிப் பதிவு செய்யும் பகுதியாக “பிராமண ரத்னா” என்னும் சிந்திக்கவைக்கும் சிந்தனைப் பகுதி... 

                         ****************************************************************************
 பிராமண ரத்னா -1  

“தமிழ் வியாசர்” ம.வீ.ராமானுஜாசாரியர்

     “இப்படியும் ஒரு மாமனிதர் இருந்தார் என உலகம் நம்புவது கடினம்தான்”. ஆம்! அப்படிச் சில மாமனிதர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்று  அறுதியிட்டு உறுதியுடன் கூறலாம்.

     அப்படி ஒரு மாமனிதர்தான் ம.வீ.ரா. எனப்படும் மணலூர் வீரவல்லி. ராமானுஜாச்சாரியர் அவர்கள்.

     திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக்கும்  இடையேயுள்ள நரசிங்கன்பேட்டைக்கு அருகே உள்ளது மணலூர் என்னும் கிராமம். தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்த ஊரான சூரியமூலை இவ்வூரின் அருகேதான் உள்ளது.

      1866 இல் ம.வீ.ரா. எளிய வைஷ்ணவ  பிராமண குடும்பத்தில் வைஷ்ணவ  பிறந்தவர். மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் என்னும் சைவ மடத்தின் ஆதரவிலும் மற்றும் பல அன்பர்களின் ஆதரவிலும் பள்ளிக்கல்வி படித்துகாசியில் திருப்பனந்தாள் ஸைவ ஆதீன மடத்தின் கிளையில் குமாரசாமி மடத்திலும் கற்று ஸம்ஸ்க்ருதம், தமிழ் என்னும் இரு செம்மொழிகளிலும் தேர்ந்தார்.

பின் தாயின் வேண்டுகோளுக்கு ஏற்ப மணலூர் திரும்பி கும்பகோணம் நேட்டிவ் மேல்நிலை பள்ளியில் தமிழ் பண்டிதராக 18 வருடம் பணியாற்றி  (1893-1910) பின் கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் தொண்டாற்றி, அதன் பிறகு வேலையை விட்டு விலகி அவர் தன் வாழ்க்கையையே தியாக வேள்வியாக்கிக்கொண்டார்.

.     ஐந்தாவது வேதம் எனப்படுவதும், எல்லா தருமங்களும் இதில் உள்ளது என உறுதியாக சொல்லப்படுவதும், எந்த கதையை நீங்கள் குறிப்பிட்டாலும் அந்தக் கதையின் கரு இந்த இதிஹாசத்தில் இருக்கும் என உறுதியாக சொல்ல வாய்பளிப்பதாகவும்

       உலகின் கடைசியில் இரண்டு ஹிந்துக்கள் இருந்தால் கூட அவர்கள் இரண்டு  இதிஹாசங்களைப் பேசுவார்கள் என்று  தேசபக்த துறவி விவேகானந்தர் கூறிய இதிஹாசங்களில்  ஒன்றானதும்…   
 
      நாத்திகரான மு.கருணாநிதி அவர்களிடம் உங்களுக்கு பிடித்த இலக்கியம் எது? என ஒரு வார இதழ் கேள்வி எழுப்பியபோது அதற்கு எந்த இதிஹாசத்தின் பெயரை அவர் கூறினாரோஅப்படிபட்ட உயர்ந்த நூலாம்...

      இரண்டாவது இதிஹாசம் என்று  புகழப்படுவதாகிய மஹாபாரதம் என்னும் நூலை எத்தனையோ தமிழ் பண்டிதர்கள்எத்தனையோ ஸம்ஸ்க்ருத மேதாவிகள், எத்தனையோ கலாசாலைகள், எத்தனையோ கல்லூரிகள், எத்தனையோ பல்கலைக்கழகங்கள்எத்தனையோ மடங்கள்எத்தனையோ அமைப்புகள் சுமார் 5000 வருடங்கள் ஆகியும் தமிழில் மொழிபெயர்க்க முடியாதபோது

        தனி ஒருமனிதராக தனது வருமானம் தரும் கல்லூரிப்பணியை துறந்து 1905ல் மொழி பெயர்ப்புப் பணியை 39வது வயதில் 200 பக்கங்கள் உள்ள ஒரு சஞ்சிகை என்னும் ரீதியில் 45 சஞ்சிகைகளாக 18 பர்வங்களையும் 14 புத்தகங்களாக பதிப்பிக்கும் எண்ணத்தில் பதிப்பு பணியைத் துவங்கி,  1908 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் சஞ்சிகையை (200 பக்கங்கள்) தனது 42வது வயதில் வெளிக்கொண்டுவந்து,  பிப்ரவரி 1932ல் தனது 66 வயதில் 1932ல் பூர்த்தி செய்து 27 வருடங்களாக இந்தப் பணியிலேயே தொடர்ந்தது. இதற்காகவே வாழ்ந்து  1940ல் தனது 74வது வயதில் திருமாலடி சேர்ந்த ம.வீ.ரா.வின் பணி நிச்சயம் சாதனைதான்.

       மஹாபாரதத்தைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துத் தமிழ்த்தாய்க்கு அணிகலனாக ஆக்கிய வியாசர் ம.வீ.ரா.

     மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி மற்றும் அச்சுப்பணியைத் தமிழ்தாத்தா உ.வே.சா அவர்களுடய வீட்டில் குடியிருந்த (1904-1921) போதுதான் ம.வீ.ரா துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

     மஹாபாரதத்தை மொழிபெயர்ப்பு செய்து, தமிழ்தாத்தா மூலம் பதிப்பு செய்ய முயற்சிகள் ஆரம்பித்து பின் தொடக்க நிலையிலேயே நின்றுவிட்டது.

     மொழிபெயர்ப்புப் பணியை தான் செய்ய விரும்புவதைத் தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களுக்கு தெரிவித்த உடன் அவர் ரூபாய் 30 அனுப்பியதையும். பின்னர் தொடர்ந்து உதவியதையும் ம.வீ.ரா நன்றியுடன் தனது மஹாபாரத பதிப்பு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.   

      மொழிபெயர்ப்புப் பணியில் தமிழுக்கு அவர் செய்த தொண்டு அல்லது தமிழுக்கு அவர் தந்த கொடை. நேற்றும் இன்றும் நாளையும் யாராலும் செய்யமுடியாத பகீரத பிரயத்தனம்.  

     ஆம்! அச்சுத்துறையில் இன்றைக்கு உள்ளது போன்று நவீன வசதிகள் இல்லாத 100 வருடங்களுக்கு முந்தைய காலம் அது. 9000 பக்கங்கள் அச்சுத்துறையில் அன்றைக்கு யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலம்.
     
அதற்கு அவர் செலவிட்ட தொகை 1,35,000 கைமுதலாக (கையை சுட்டுக்கொண்டது) 15,000. இதை 1932 இல் வெளிவந்த யதார்த்தவசனி, சுதேசிமித்ரன் போன்ற இதழ்கள் இந்தத் தகவலை உறுதி செய்கின்றன.   

மொழி பெயர்புப் பணி என்றால் அதில் அவ காட்டிய தீவிரம் நுணுக்கம் ஆச்சர்யம் தரத்தக்கது.  

      மூல நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைத் தக்க பண்டிதர் இருவர் சரிபார்ப்பார்கள். அதன் பெயரில் அவர்கள் சொல்லும் ஆட்சேபனைகள் முதலில் மொழிபெயர்த்தவருக்கு அனுப்பப்பட்டு அவரது சமாதானம் அல்லது திருத்தம் விவாதிக்கப்படும். பின் அதைத் தமிழ் வசன நடையில் இன்றுள்ளவர்கள் கூடப் படிக்கும் அளவு 100 ஆண்டுகள் முன்னரே எளிமையான தமிழ் நடையில் ம.வீ.ரா. எழுதிப் பதிப்புப்பணி நடைபெறும்.

      வியாசர் என்னும் சொல், எடிட்டர் (ஆசிரியர்) என்பதை குறிக்கும் வேத வியாசர் செய்த மஹாபாரதம் என்னும் உண்மை சம்பவங்கள் அடங்கிய நூலைத் தமிழில் வியாசர் போலவே நூலாக்கியவர் நமது ம.வீ.ரா. ஆம்! அவர் தமிழ் வியாசர்தான்.
 
                                         
                       ம.வீ.ரா.வின் மஹாபாரத பதிப்புப்பணி

      பதிப்புப் பணி இன்னும் சில வருடங்கள் முன்பே முடித்திருக்கும் எனவும் ஆனால்... தனக்கு ஆதரவு தருவதாக வாக்களித்தும் பிறகு, செய்வதாகக் கூறிய பொருள் உதவியையும், செய்யாதவர்கள் பலர், வெளியீடுகளை வாங்கிக் கொள்வதாகக் கையெழுத்துடன் ஒப்புதல் அளித்துப் பின் சஞ்சிகைகளைத் திருப்பி அனுப்பியவர்கள் பலர். உமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? என்றவர்களும் உண்டு என்று  தனது பதிப்புப் பணிகளில் ஏற்பட்ட துயரங்களை கூறும் ம.வீ.ரா.  வலிய வந்து தனது சிரமங்களைத் கேள்விப்பட்டு உதவியர்களை மட்டும் மறக்காது பெயருடன் பதிப்பித்துத் தனது மஹாபாரத பதிப்பின் முடிவில் எழுதிய முன்னுரையில் விவரிக்கிறார்...

      திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீ சொக்கலிங்கத்தம்பிரான் முதல் ஆடுதுறை தோல்கிடங்கு ஜனாப் எம்.ஜி‌.முகமது அப்துல்லா ஸாஹிப் பஹதூர், சென்னை “தாருல் இஸ்லாம்” பத்ராதிபரும் தனது மாணாக்கருமான ஜனாப்.பி.தாவூத்ஷா ஸாஹிப் பஹதூர் போன்றோர் என வளர்ந்து ஆங்கிலேய ஜில்லா கலெக்டர் R.B.WOOD என பலர் உதவியதையும் 1923 இல் இந்த பெரும்பணியை முடிக்க இயாலாதோ என எண்ணி நிறுத்திவிட எண்ணிய போது பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர்களான ஸ்ரீ.ராவ்பகதூர், ஸ்ரீ.வி.டி.கிருஷ்ணமாச்சாரியர் போன்றோர் இப்பணி தொடரச் செய்த உதவிகள். மொழிபெயர்ப்பு செய்து உதவிய பண்டிதர்கள் என அத்துணை நபர்களையும் மறவாது குறிப்பிடுகிறார் ம.வீ.ரா

     ஸ்ரீ.ம.வீ.ரா.வின் மகன் ஸ்ரீ M.R.ராஜகோபாலன் அவர்கள் 1921 முதல் தந்தையாரின் பணிகளில் தோள்கொடுத்தும், வயது முதிர்ந்த நிலையில் சென்னைக்கும் கும்பகோணத்திற்கும், தனது கிராமமான மணலூருக்கும் என மாறி மாறி சென்றபோது 1929 இல் தந்தைக்காகத் தனது பணியைத் துறந்து அவருடன் இருந்தார்.

      மஹாபாரத முழு பதிப்புக்கும் ஆன செலவு 1,35,000. வங்கிக்கடன், அதற்கு வட்டி என பணம் ஏற்பாடு நடைபெற்றது .

     .சென்னை, கும்பகோணம், மணலூர் என பதிப்பு பணிகளின் போது மாறி மாறி ம.வீரா இருந்தாலும் அவரது பதிப்பு பணி திருக்குடந்தையில் (கும்பகோணம்) ஆரம்பித்து திருக்குடந்தையிலேயே நிறைவடைந்தது.

     நாலாயிர திவ்ய பிரபந்தத்தினைக் காட்டித்தந்த சார்ங்கபாணிபெருமாள் தமிழுலகுக்கு மஹாபாரதத்தை  ம.வீ.ரா. மூலம் தந்தார் என்பதே உண்மை.  

 தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்கு ஸ்ரீ.,ம.வீ.ரா. பத்துப்பாட்டு ஆராய்சியிலும், புறநானூறு ஆராய்சிக்காக சங்க இலக்கியம் முழுவதும் ஆராயவும் உதவியதைத் தனது சுயசரிதமான என் சரித்திரம் நூலில் தமிழ்தாத்தா குறிப்பிட்டுள்ளார்.                             ம.வீ.ரா.வுக்குப்பின்....

மவீரா அவர்களின் காலத்துக்குப்பிறகு அவரது குமாரர் தங்களது குடும்ப நண்பரான ஸ்ரீ சிவராம கிருஷ்ண ஐயர் அவர்களுக்கு காப்புரிமையையும் மகாபாரதம் பிரஸ்ஸும் விற்கப்பட்டு... தற்போது சிவராம கிருஷ்ண ஐயர் பேரன் ஸ்ரீ S. வெங்கடரமணன்     மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளார்.

     வியாசர் என்னும் சொல், எடிட்டர் (ஆசிரியர்) என்பதைக் குறிக்கும் வேத வியாசர் செய்த மஹாபாரதம் என்னும் உண்மைச் சம்பவங்கள் அடங்கிய நூலைத்  தமிழில் வியாசர் போலவே நூலாக்கியவர் நமது ம.வீ.ரா. ஆம்! அவர் தமிழ் வியாசர்தான். 

     மஹாபாரதத்தைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துத் தமிழ்த்தாய்க்கு அணிகலனாக ஆக்கிய வியாசர் ம.வீ.ரா. என்னும் ப்ராஹ்மண ரத்னாவின் முழுமையான அனைத்துப் பர்வங்களும் அடங்கிய மஹாபாரத தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் வேண்டுவோர்  தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி…  
       
S. வெங்கடரமணன், 9, நம்மாழ்வார் தெரு, கிழக்கு தாம்பரம்,சென்னை – 59

Cell: 9894661259 மெயில் venkat.s...@gmail.com 


Reply all
Reply to author
Forward
0 new messages