Here is a mail that I wrote to Nuumbal DLS aiya on the word,
kukkubha/kukkura/kukkuDa "chicken, cock" coming from the
ideophone குக்-குக் எனல் which imitate the sound of chicken.
Probably coined by Dravidian speakers in Indus and elsewhere
in N. India several 1000 years ago.
More later.
best,
N. Ganesan
On Dec 16, 9:26 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>
> குக்குடம் என்றால் கோழி என்பது ஆகுபெயர் வழிவந்த சொல்
> முட்டை (குக்குடம்) வைப்பதால் குக்குடம் வைப்பதும் 'குக்குடம்' ஆயிற்று
> *சொல்லும் பொருளும் உடன் தொக்க *நிலை யில் உள்ள ஆகுபெயர்
>
அன்பு நூம்பல் த. லோ.சு. ஐயா,
வணக்கம். திரு. திவாகர் குக்குடக் கொடியோனின் இழை
சிறப்பாக உள்ளது. முருகபக்தர் நரசையாவும் பங்கேற்பது
மகிழ்ச்சி.
குக்குடம் என்றால் முட்டை என வடமொழி அகராதிகளில்
காணோமே. தமிழிலும் எங்கும் பார்த்ததாய் நினைவில்லை.
கோழி குக்-குக் என்று குஞ்சுகளுடன் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கும்.
இந்த ஓசையினால் ஏற்பட்ட ideophone குக்குபம்/குக்குடம் ஆகும்
என்கின்றன வடமொழி அகராதிகள். உ-ம்:
இந்தோ-ஆர்ய மொழிகளின் ஒப்பகராதி:
(1) kukkubha 3210 kukkubha m. ʻ the wild cock Phasianus gallus ʼ MBh.
[Cf. kukkuṭá -- 1]
Pk. kukkuha -- m. ʻ a kind of bird ʼ, A. kukuhā; H. kukuhī f. ʻ wild
hen ʼ; -- Kho. kúku m. ʻ
cock ʼ? kukkurá -- see kurkurá -- .
(2) kukkuṭá 3208 kukkuṭá1 m. ʻ cock ʼ VS., °ṭī -- f. ʻ hen ʼ VarBr̥S.,
°ṭaka- m. ʻ wild cock ʼ
lex., kurkuṭa -- m. Pañcat. [Onom., cf. kukkubha -- ]
Pa. kukkuṭa -- m., °ṭī -- f., NiDoc. kukuḍa m., Pk. kukkuḍa -- m., °ḍī
-- , °ḍiyā -- f.; Gy. as.
kukar ʻ hen, bird ʼ JGLS new ser. ii 258, pers. kukrī ʻ egg ʼ; Ash.
kukúṛ ʻ cock ʼ, Kt. kəkyuŕ,
Wg. kukú, Pr. kakayédotdot;; Dm. kukuŕ -- pai ʻ chicken ʼ, kukuŕīˊ f.
ʻ hen ʼ, Tir. kukuṛḗ f.,
Paš. kukūˊṛ m.f., kukuṛīˊ f., Shum. kúkuṛ m., kukuṛík f., Gaw. kukuṛĭ̄
f., kúkuṛ m., Woṭ.
kukúṛ m., kikíṛ f., Kal. rumb. n*lr -- kŕūku m., Kho. kúku m. (<
kukkubha -- ? -- kukuḷi ʻ
puppy ʼ < ʻ *chicken ʼ?); Bshk. kúkur m., kíkir f., Tor. kugū m.,
kuguīˊ f., Mai. kokō f., Sh.
koh. gur. kokṓ m., pales. kukūī˜ f., K. kŏkur, °koru m., kŏkürü f.,
ram. pog. ḍoḍ. kukkuṛ m.,
S. kukuṛu m., °kiṛi f., L. kukkuṛ m., °kiṛ f., P. kukkaṛ m., °ṛī f.,
WPah. bhad. kukkuṛ m., °kaṛī
f., Ku. kukuṛo m., °ṛī f., A. kukurā m., °rī f., B. kukuṛā m., °kṛī
f., Or. kukuṛā, H. kukaṛ, °kṛā
m., °kṛī f., G. kukṛɔ m., °ṛī f., °ṛã̄ n. pl. ʻ poultry ʼ; M. kukḍeku
n. ʻ crowing ʼ; Ko. kũkaḍa ʻ
fowl ʼ; Si. kukuḷā m., kikiḷi f.; -- with expressive aspiration
(rather than X pakhrū <
*pakṣirūpa -- ): WPah. cur. kukkhaṛ m., °khṛī f., N. kukhro.
kaukkuṭá -- , kaukkuṭika -- .
Addenda: kukkuṭa -- : WPah.kṭg. (kc.) kukhṛɔ m. ʻ cock ʼ, kv́khṛi f. ʻ
hen ʼ, kc. kukhṛe; J.
kukṛā m. ʻ cock pheasant ʼ; Garh. kukhṛu ʻ cock ʼ; Md. kukuḷu ʻ hen ʼ.
தமிழர்கள்/திராவிடர்கள் சிந்து சமவெளியில் குக்-குக் எனும் ஓசை
எழுப்பும்
கோழிகளைக் குக்குரம்/குக்குரி/குக்குபம்/குக்குடம்/குக்குறி, ... என்று
அழைத்து
இருக்கிறார்கள். அங்கிருந்து ஈரானுக்கும், கிரேக்க நாட்டுக்கும்,
அனுப்பியுள்ளனர்
எனத் தெரிகிறது. குக்-குக் எனல் கோழிக்கு உரிய ஓசை, இதனால் பெறும்
பெயர்கள் குக்குபம் (வ்யாசரின் மாபாரதம்), குக்குடம், ...
குக்-குக் எனும் கோழி, துட்கு எனும் நெஞ்சு
- இந்த ஒலிக்குறிப்புகள் பற்றி அல்லூர் நன்முல்லை
சங்க காலத்திலேயே குறித்துவிட்டார்:
குக்கூ என்றது கோழி; அதன்எதிர்
துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம் -
தோள்தோய் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தென்றால் எனவே!
குறுந்தொகை:157
Co Coo
crowed the cock
and my poor heart missed a beat
that the sword of morning came down
to cut me off from my lover
twined in my arms. Translated by A.K. Ramanujan
----------------
உங்கள் குக்குடம் பற்றிய மடலைப் படிக்கும் போது கோழி (உறையூர்)
சோழரின் சங்ககால தலைநகர், அது யானையைத் தாக்கியதால் பெற்ற பெயர்,
இதை விளக்கும் சங்க கால (கிபி. முதல் நூற்றாண்டு) காசு பற்றிக் கோவை
செம்மொழி மாநாட்டில் ஐராவதம் ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது.
இரண்டு கோழிகள் அடுத்தடுத்து வரும் சிந்து முத்திரைகளைக் காட்டினார்.
அது ஊர்ப் பெயர் கோழி என்பதாகலாம். சங்கச் சேரர் காசு போல
அவ்விடம் பேர் பெற்றிருக்கும் என்றார். இந்த ஒலிக்குறிப்பால்
ஏற்பட்ட கோழிப்பெயர் குக்குடம் என்பது பல ஊர்களுக்குண்டு.
குக்குடாரமம் அசோகர் வாழ்க்கையில் முக்கியமான இடம் -
பாடலிப்புதர் (பாட்னா) அருகே.
பாலி இலக்கியத்தில் குக்குடச் செட்டியார்:
http://www.palikanon.com/english/pali_names/ku/kukkuta.htm
http://www.palikanon.com/english/pali_names/ku/kukkutavatii.htm
கோழியின் பேரால் அமைந்த இடங்கள் பல. அவ்விட ஈஸ்வரன்
கோவில்கள் குக்குடேஸ்வரம் எனப்பட்டன போலும்.
வேண்டும் கோழிக்கொடி ஆண்டான் திருவருள்!
அன்புடன்,
நா. கணேசன்
> அன்புடன்
> நூ தா லோ சு
> மயிலை
>
> 2012/12/16 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> > அன்பின் மடலா டருக்கு ,
>
> > குக்குடம் என்றால் முட்டை என்றும் பொருள் உண்டு
>
> > இயற்கையாக ஆற்று வழியில் அடித்துவரும் கற்கள் உருண்டுதிரண்டு முட்டை
> வடிவமாக ஆகிவிடும்
> > பெரிதாகக் கிடைத்தால் அதனை லிங்கமாகப் பயன் கொள்வர் முட்டை வடிவமாக
>உள்ளதால் குக்குடம் என்றார்கள் குடம் என்றால் தெரிகிறது பானை வடிவம் அல்லவா
>அதுபோல் கு என்றாலும் கோள வ டிவத் தைக காட்டும்
>
>
கோளம் - முட்டை. கோளி - மனிதன் உண்ணும் முட்டையிடுவது கோளி/கோழி
என்பதிருக்கலாம்.
ஆனால், குக்குபம்/குக்குடம் - குக்-குக் என்னும் ஒலிக்குறிப்பு
ideophone.
ழான் அவர்களின் ideophones கட்டுரைகள் இரண்டு அனுப்பியுள்ளார்.
அவற்றைப் படித்தால் திராவிட மொழிகள் பாரதத்துக்குக் கோழி பற்றிய
சொல் தந்தமை விளங்கும். நன்றி.
நா. கணேசன்
kukkubha/kukkura/kukkuDa "chicken, cock" coming from the
ideophone குக்-குக் எனல் which imitate the sound of chicken.
On Dec 17, 6:03 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/12/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > kukkubha/kukkura/kukkuDa "chicken, cock" coming from the
> > ideophone குக்-குக் எனல் which imitate the sound of chicken.
>
> இங்கிலாந்து கோழி சிக் சிக் என்று கத்தும் போலிருக்கிறது. சிக்என்-பது
> சிக்கென் என்றானது போலும்.
>
அமெரிக்காவில் சிக்ஸ் என்றால் வேறு அர்த்தம் ஒன்றுண்டு :) அமெரிக்கர்கள்
வேந்தன், பழமை, செல்வன், ... சொல்வார்கள்.
------------
chicken - ch ஆதியில் க் தான். chemistry - கெமிஸ்ட்ரி.
தமிழிலும் கெம்-:செம்-, கை:செய்(தெலுங்கு), கிவி(கன்னடம்):செவி,
கேரள:சேரல, ....
- ககரம் ஆங்கிலத்தில் ch ஆனது. இந்தியர்கள் அனுப்பிய ஊண்.
> அது இருக்கட்டும். உண்மையிலேயே குக்கூ என்று கூவும் குயில்? அதற்கு ஏன்
> தமிழில் குயில் என்று பெயர்? ஆங்கிலத்தில் அது கூவும் விதத்திலேயே பெயர்
> இருக்கிறதே.
>
பின்னர் பேசலாம். எழுதியுள்ளேன். கோகிலம், குகில் > குயில்.
சிந்துசமவெளியில் தொல்தமிழர் வாழ்ந்தனர். குக்-குக் எனும் கோழியை
ஒலிக்குறிப்பால் குக்குரம்/குக்குடம்/குக்குபம் எனப் பெயர் கொடுத்தனர்.
சிந்தில் இருந்து ஈரான், சுமேரியா (ஈராக்), எகிப்து, கிரேக்கம், ...
கோழி ஊண்புள்ளாய் சிந்துச் செட்டிகள் கொண்டுசென்றனர்.
கோழிக்கொடி கொண்ட முருகன் செட்டிதானே.
குக்-குக் எனும் ஒலிக்குறிப்பை கொண்ட த்ராவிடர்களின் சொல் குக்குட-
பல் மாற்றங்கள் பெற்று சிக்கன் என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
புல்- பில் என்பதுபோல், குக்-குக் என்னும் ஒலிக்குறிப்பு சிக்-சிக்
என ஆனது போலும்.
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.9:1:5710.tamillex
பொம்மெனல் pom-m-eṉal
, n. Onom. expr. of (a) tinkling sound; ஓரொலிக்குறிப்பு. (பிங்.)
பொம்மென் பரிபுரம் (பாரத. அருச்சுனன்றீர். 9): (b) being sudden or
rapid; விரைவுக் குறிப்பு. மாதர் பொம்மெனப் புகுந்து (கம்பரா. உலாவியல்.
1): (c) being thick or crowded; அடர்ச்சிக்குறிப்பு. பொம்மெனிருள்வாய்
(திருக்கோ. 395).
------------------
நளவெண்பா:
376. ஒற்றைத் தனியாழித் தேரென்ன ஓடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலும்
தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.
Here, the ideophone "pom" seems to refer to rapidity, since chaiot is
the main theme.
---------------------
பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றை பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.
Here, "pom" is connected with the water stream, and so it is
"tinkling" sound.
In this Kaaraikkaal Ammai's TiruviraTTai maNimaalai verse,
Tiru. Vi. Ka. gives "pom" as the sound of a 5-hooded serpent.
3. பிரானென்று தன்னைப் பன்னாள் பரவித்
தொழுவார் இடர் கண்டு
இரானென்ன நிற்கிப்\nற ஈசன் கண்
டீர் இன வண்டு கிண்டிப்
பொரா நின்ற கொன்றைப் பொதும்பர்க்
கிடந்து பொம் மென்று ஓர் ஐ வாய்
அரா நின்று இரைக்குஞ் சடைச் செம்பொன்
நீள்முடி அந்தணனே
உரை - திரு வி.க.
பொரா நின்ற: ஒன்றோடொன்று போரிடும் கொன்றைப் பொதும்பர் : கொன்றைச்
செறிவில் (குழலில்) ஐ வாய் அரா: ஐந்து வாயினை உடைய பாம்பு , ஐந்தலைப்
பாம்பு பொம் என்று நின்று இரைக்கும் : ‘பொம்' என்று நின்று சீறும்
( பொம் : அநுகரண ஓசை)
-----------------------------------
In the Ciivaka cintaamaNi verse, "pom" - dense sound of warrior youth.
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=52&auth_pub_id=56&pno=1092
1930 பொருவருங் குரைய மைந்தர் பொம்மென வுரறி மற்றித்
திருவிருந் தகன்ற மார்பன் சேவடி சோ்ந்த யாங்க
ளெரியிருந் தயரு நீர்மை யிருங்கதி ரேற்ற தெவ்வர்
வருபனி யிருளு மாக மதிக்க வெம் மடிக ளென்றார்.
(இ - ள்.) பொரு அருமைந்தர் பொம்என உரறி - உவமை கூறுதற்கரிய (பதுமுகன்
நீங்கலான) தோழர்கள் கடுக முழங்கி; திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி
சேர்ந்த யாங்கள் - திருமகள் தங்கிய பரந்த மார்பனாகிய சீவகனுடைய சேவடியை
அடைந்த யாங்கள்; எரிஇருந்து அயரும் நீர்மை இருங்கதிர் - (வெப்பத்திற்கு
யாம் ஆற்றேம் என்று) தீசோர்வுற்றிருந்து அயரும் தன்மையையுடைய ஞாயிறு
ஆகவும்; ஏற்ற தெவ்வர் வருபனி இருளுமாக-எம்மை எதிர்ந்த பகைவர் பனியும்
இருளுமாகவும்; எம் அடிகள் மதிக்க என்றார் - எம் அடிகள் மதித்திடுக
என்றனர்.
N. Ganesan
On Dec 15, 5:55 pm, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-