பூட்டுத்தாக்கு கல்வெட்டு

22 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 20, 2022, 9:32:14 AM11/20/22
to வல்லமை

image.png

அமர்ந்தவாழ் அம்மன் ஆலயம், பூட்டுத்தாக்கு கல்வெட்டு , இராணிப்பேட்டை, வேலூர்:

மாவட்டம்: இராணிப்பேட்டை
ஊர் : பூட்டுத்தாக்கு,
மொழி: தமிழ்
அரசன் : பார்த்திவேந்திரன்,
ஆட்சியாண்டு: 10ம் நூற்றாண்டு.
வரலாற்றாண்டு: பொ.ஆ.பி.966-967.

கல்வெட்டு வரிகள்:
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப் பார்த்திவேந்திர
2.பன்ம(ற்)கு ப(த்)தாவது வட
3. வல்லன்  தா(ள்) கோயில் க(ல்)லு நிரைப்பித்
4. தென் ஈழச் த(சு)ன்றன் பண்டார்க்கு
5.ட்டி பெரி...யாநேன்
இது ழிசு
6.னலறன் இவன் மகன் திருவனா
7.கில்(ய) கொங் க வா(ள்)...காமுண்டநேன்
8. இது ரக்ஷி...(சி)ரசு யென்
9.....ன்றலை மேல்(லன)

கல்வெட்டு செய்தி:
சுமார் ஆயிரம் வருடங்கள் முன்பு, தொண்டை மண்டல பகுதி ஆட்சி புரிந்த பார்த்திவேந்திரன் என்ற மன்னரின் பத்தாவது ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொலியப்பட்டுள்ளது.இந்த வட வல்லன தாள் கோயிலுக்கு தரை முழுக்க கல் நிரப்பி சீர் செய்துள்ளனர். இந்த பணியினை மேற்கொண்ட தென் ஈழச் தன்றன் என்பவரின் மகன் கொங்கவாள்
காமுண்டன் இவ்வறச் செயலை செய்துள்ளார். மேலும் தான் மேற் கொண்ட இந்த பணியினை, வரும் காலத்தில் பாதிப்படையாமல் காப்பவர்களின் பாதத்தை தன் தலைமேல் வைத்து தாங்குவேன் என கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக சாக்கடை மேல் நடைபாலமாக பயன்பட்ட இக்கல்வெட்டை கண்டோம், மாவிட்டோம்,வராலாற்று தகவல் அறிந்தோம், பதிவிட்டோம் என்று இந்த முறை கடந்து செல்ல கூடாது என்று,மீட்டெடுக்கும் முயற்சியில் திரு.ஜனதா சண்முகம் போன்ற நல்லோர் குணத்தாலும், பணத்தாலும், உதவியதன் மூலமே இன்று இந்த கல்வெட்டு நிமிர்ந்து நிற்கின்றது.தாழ்க்கோவில் - தரைக்கும்  கீழே உள்ள கோவில்.

பார்த்திவேந்திரன் ஒரு பல்லவ அரசர் ராஷ்டிர கூட ஆட்சியில் தனி ஆட்சி செய்தவர். அவரது 10 ம் ஆட்சி ஆண்டில் வட வல்லான் நிலவறை கோவிலில் கல் நிரப்பி மேடுபடுத்தி தென் ஈழத்து தச்சன் தன்  இறைவனுக்கு கொடுத்த பெரியான் எனப் பெயரியன் ஆவான். இவன் மகன் திருவனாகில்ய கொங்க வாள் ஒன்றை கொடுத்த காமுண்டன் எனப்பெயரியன் ஆவான். இந்தக் கொடையை  காப்பவன் கால் என் தலைமேல்  இந்தக் கொடையை  காப்பவன் கால் என் தலைமேல்.

N. Ganesan

unread,
Nov 24, 2022, 7:59:23 AM11/24/22
to vall...@googlegroups.com
அமர்ந்தவாழ் அம்மன் ஆலயம், பூட்டுத்தாக்கு கல்வெட்டு , இராணிப்பேட்டை, வேலூர்:

மாவட்டம்: இராணிப்பேட்டை
ஊர் : பூட்டுத்தாக்கு,
மொழி: தமிழ்
அரசன் : பார்த்திவேந்திரன்,
ஆட்சியாண்டு: 10ம் நூற்றாண்டு.
வரலாற்றாண்டு: பொ.ஆ.பி.966-967.

கல்வெட்டு வரிகள்:
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப் பார்த்திவேந்திர
2.பன்ம(ற்)கு ப(த்)தாவது வட
3. வல்லன்  தா(ள்) கோயில் க(ல்)லு நிரைப்பித்
4. தென் ஈழச் த(சு)ன்றன் பண்டார்க்கு
5.ட்டி பெரி...யாநேன்
இது ழிசு
6.னலறன் இவன் மகன் திருவனா
7.கில்(ய) கொங் க வா(ள்)...காமுண்டநேன்
8. இது ரக்ஷி...(சி)ரசு யென்
9.....ன்றலை மேல்(லன)

---------------------------------

நன்று. -ம்- > -வ்- சொற்களுக்கு நல்ல உதாரணம் காமிண்டன் >> காமுண்டன் >> காவுண்டன்:

(1) காமிண்டன் > காமுண்டன் > கவுண்டன். கவுடன் என ஒக்கிலியர்களுக்கு வரும். உ-ம்: தென்னிந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் ஆன தேவெ கவுடரு (Cf. 2 =இரண்டு, இரடு (Ka.)). கோவையில் புகழ்பெற்று விளங்குவோர். ரங்கே கவுடர் வீதி, சண்முக கவுடர் வீதி. இக் குடும்பத்தார் ஆரம்பித்தது ஆனந்தகுமார் டெக்ஸ்டைல்ஸ். இதில் என் தந்தை நிறுவிய காலத்தில் இருந்து டைரக்டர். பொதுவாக, ஏராளமான மில்களை கோவையில் நடத்தினோர் ஆந்திராவில் இருந்து வந்த கம்மவார் நாயுடுமார். கவுண்டர் மில்கள் குறைவாக இருந்தன. இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாம் ரியல் எஸ்டேட். கொங்குநாடெங்கும் மில்களின் வளர்ச்சி.

காமிண்டன் என்பது காடுகளை வெட்டி, நாடாகத் திருத்துவோர் என்னும் பொருளில் அமைந்த சொல். அமெரிக்காவில் மிஸ்ஸிசிப்பி நதிக்கு மேற்கே இது மாதிரி குடியேற்றம் நிகழ்ந்தது. Westerns, Cowboy movies எல்லாம் சினிமாவில் பார்க்கலாம். அதுபோல், Frontiersmen ( https://en.wikipedia.org/wiki/Frontier )  என்பது தான் காமிண்டன். காமிண்டன் பேச்சுவழக்கில் காவுண்டன் என்றாகும். இச்சொல்லைக் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லியுள்ளார்.
    காவுண்டார் போர்க்களத்தில்! களங்கண்டார் சரித்திரத்தில் !
    பாவுண்டார் இலக்கியத்தில்! பழியுண்டதில்லையவர் !
    மாவுண்டு பரியுண்டுன்மானுண்டு தேனுண்டு
   கோவுண்டு குடியுண்டு குடிகாக்கும் கொடியுண்டு !
   பாலுண்ட போதே பகிர்ந்துண்ட தமிழுண்டு !
   போர்வந்த காலத்தே புறம்போய்ப் பதுங்காது
   காவுண்டதாலே கவுண்டரென்னும் பெயருண்டு!
       கொங்கு மக்கள் உள்ளம் கோயிலிலே பிறந்த உள்ளம் !  - கவியரசு கண்ணதாசன்

(2) பா- என்னும் தாதுவேர் பா(ய்)- பாய்தல். நீர் பாய்ச்சல். நீர்ப் பாசனம்.
பா- மெதுவாகப் பரவுதல். பா(ய்)ம்பு >> பாம்பு என்கிறோம்.
பாம்பு தெலுங்கில் பாமு, பழங் கன்னடத்தில் பாவு என வருகிறது.
துளு மொழியில் பாவு > ஹாவு என்கின்றனர்.

கொங்கு மலை வாழ் தொதுவர் (தோடர்) பொப்பு என்கின்றனர். இப் பழம்பெயர் சமவெளியிலும் கொங்குநாட்டில் விளங்கிற்று என்பது சிலப்பதிகாரத்தால் அறிகிறோம். சமவெளியில் பாம்பணன் என்ற பெயர் ஈசுவரனுக்கு வழங்குகிறது. திருச்செங்கோடு மலையடிவாரத்தில் பாம்பணன் (பாம்பலங்காரர், பன்னகாபரணர்) - பங்கயவல்லி அம்பிகை கோவில் மோரூரில் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாய் இலக்கியப் புரவலர்களாய் இருக்கும் கண்ணர் குலத்தார் குலதெய்வம். எனவே, பாம்பணன் என்ற பெயர் வைப்பது வழக்கம். தமிழிசை பற்றிய அறிவு சிலம்பின் உரையால் தான் நாம் அறியமுடிகிறது. எழுதியவர் அடியார்க்கு நல்லார் என்னும் கொங்குச் சமணர் ஆவார். அவரது புரவலனாக விளங்கினோன் இந்த மோரூர்க் குடும்பத்தான். பொப்பண காங்கேயன் அளித்த சோற்றுச் செருக்கால் அல்லவோ தமிழ் மூன்றுக்கு உரை சொன்னேன் என்று வாழ்ந்த்தினார் அடியார்க்கு நல்லார். அதேபோல, கட்டளைக் கலித்துறை பாடி, திருவருட்பா முழுமைக்கும் உரை சொல்வித்தவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் என உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளையவர்கள் வாழ்த்தும் உண்டு. அவர் மகன் ஔவை நடராசன் அவர்கள் இவ்வாரம் இயற்கையொடு ஒன்றினார்.

pāmpu pāmpu (p. 362)
 DEDR 4085 Ta. pāmpu snake; pāppu, in: pāppuppakai Garuḍa, the enemy of serpents (cf. 3808); (lex.) pā snake. Ma. pāmpu id. Ko. pa·b id. To. po·b id.; o·f id. (in songs; < Badaga ha·vu). Ka. pāvu id. Koḍ. pa·mbï id. Tu. hāvu id. (< Ka.); pāmbolů a kind of flat, long fish; pāmbolů-kērè rat-snake (cf. 2011). Te. pāmu snake. Kol. pa·m id. Nk. pām id. Nk. (Ch.) pām id. Pa. bām id. Ga. (Oll.) bām, (S.) bāmu, (P.) bāmb id. / Cf. Pkt. (DNM) pāva- snake. DED(S) 3361.

(3) தமிழரின் தனிப்பெரும் தெய்வம் சிவன் என்னும் பெயரும் -ம்- > -வ்- மாறுபாடு கொண்ட சொல் ஆகும். கெம்- என்பது தொல்திராவிட மொழியில் உள்ள தாதுவேர் ஆகும். கெம்- =>> செம்- என ஆகிறது. செம்மை, செந்தமிழ், செம்- செவப்பு/சிவப்பு எனத் தமிழில் மாறுகிறது. சிவன் என்னும் சொல் இவ்வாறே பிறக்கிறது. பவழம் போல் மேனியன் சிவபிரான். சிவன் செம்மை, மங்கலம் என்னும் பொருள் உள்ள சொல்லும் கூட.

ஸம்ஸ்கிருத மொழி உருவாக்கத்தில் ஶிவ முக்கியம் வாய்ந்தது. கெம்- எனுந் திராவிடத் தாதுவேர்ச் சொல் ஶிவ (>  ஶைவம், பாரதப் பெருஞ் சமையம்) என்ற சொல்லாக வடமொழியில் உருவாதலும், இதனை ஒத்த சொற்களும் பற்றி ஆராயும் கட்டுரை:
https://archive.org/details/NGanesan_IJDL_2018/mode/2up
Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language. Int. J. Drav. Ling., 2018.
ககர மெய்யின் உயிர்மெய் வரிசை எழுத்துக்களில் தொடங்கும் திராவிட மொழிச் சொற்கள், சம்ஸ்கிருதத்தில் ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ உயிர்மெய் கொண்ட சொற்களாக மாறுவதை ஆராயும் கட்டுரை. பேரா. வ. ஐ. சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கிப் பல்லாண்டாய் இயங்கிவரும் மொழியியல் ஆய்வேட்டில் எழுதியுள்ளேன். 

வெண்பாவில் விளாங்காய்ச் சீர்கள் வாரா. https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/
ஒரே ஒரு விதிவிலக்கு. மகாமந்திரம் ஆக விளங்கும் நமச்சிவாய < நமஶ்ஶிவாய தான். திருவாசகம் சிவபுராணத்தில் காண்க.
துணைவினை என 40+ வினைச்சொற்கள் தமிழில் இயங்குவது 17-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கணிகள் எழுதியுள்ளனர்.
அதுபோல், 20-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கணிகள் கண்டது, இந்த வெண்பாவில் ஓசை குன்றாமல் இருக்க இயங்கும் விதி/நுட்பம்.
100 (அ) 1000+ வெண்பாக்கள் எழுதத் தொடங்குவோருக்குப் பயனுடையதாக இருக்கும்.

குமி/குவி, சவரி/சமரி(=கவரி/கமரி, சாமரை), கோமணம்/கோவணம், உமணர்/உவளம், கமலை/கவலை (ஏற்றத்தின் சால்) ... போல நேம்பு-/நேமு- > நேவு- > நாவுதல் (அ) நாம்புதல் என்றும் வழங்குகிறது. கௌரி < கவரி: http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

NG--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTvOyN4HW3NJTbv_6fpoiyUMikLCL_V6gPQSnHSRHqRdQ%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Nov 24, 2022, 9:21:59 AM11/24/22
to vall...@googlegroups.com
On Thu, 24 Nov 2022 at 18:29, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அமர்ந்தவாழ் அம்மன் ஆலயம், பூட்டுத்தாக்கு கல்வெட்டு , இராணிப்பேட்டை, வேலூர்:

மாவட்டம்: இராணிப்பேட்டை
ஊர் : பூட்டுத்தாக்கு,
மொழி: தமிழ்
அரசன் : பார்த்திவேந்திரன்,
ஆட்சியாண்டு: 10ம் நூற்றாண்டு.
வரலாற்றாண்டு: பொ.ஆ.பி.966-967.

கல்வெட்டு வரிகள்:
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப் பார்த்திவேந்திர
2.பன்ம(ற்)கு ப(த்)தாவது வட
3. வல்லன்  தா(ள்) கோயில் க(ல்)லு நிரைப்பித்
4. தென் ஈழச் த(சு)ன்றன் பண்டார்க்கு
5.ட்டி பெரி...யாநேன்
இது ழிசு
6.னலறன் இவன் மகன் திருவனா
7.கில்(ய) கொங் க வா(ள்)...காமுண்டநேன்
8. இது ரக்ஷி...(சி)ரசு யென்
9.....ன்றலை மேல்(லன)

---------------------------------

நன்று. -ம்- > -வ்- சொற்களுக்கு நல்ல உதாரணம் காமிண்டன் >> காமுண்டன் >> காவுண்டன்:


"உல்" அசையா கருத்து கொண்டது ஆகும்.  உல் > உள் > உண்.  உண்டாங்கல் என்றால் அசைக்க முடியாத பாறை எனப்பொருள். உண்டன் என்ற பழஞ்சொல்லுக்கு பெயராமல் ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பவன் என்று பொருள், இதாவது காவலன் என்று பொருள். சிந்து முத்திரைகளில் கா உண்டன் என்ற பெயர் காணப்படுகின்றன. தமிழ், கன்னட கல்வெட்டுகளிலும் காஉண்டன் > காவுண்டன் >  காமுண்டன் ஆகிய பெயர்கள் புழங்குகின்றன. வழ வழ - மழ மழ என்பது  வ > ம திரிபு. காவுண்டன் இன்று கவுண்டன் ஆகிவிட்டது.  இதற்கு இடம் பெயரா காவலன் என்பதே பொருள். அசையா கருத்தில் இருந்து அசைவு கருத்து பிறப்பதை முன்பே  "கல்" வேரில் கண்டோம். "உல்" அந்த மகுடத்தில் மேலும் அணிசெய்யும் ஒரு "கல்" ஆகும்.

N. Ganesan

unread,
Nov 24, 2022, 9:53:32 AM11/24/22
to vall...@googlegroups.com
On Thu, Nov 24, 2022 at 8:21 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
>
> "உல்" அசையா கருத்து கொண்டது ஆகும்.  உல் > உள் > உண்.  உண்டாங்கல் என்றால் அசைக்க முடியாத பாறை எனப்பொருள். உண்டன் என்ற பழஞ்சொல்லுக்கு பெயராமல் ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பவன் என்று பொருள், இதாவது காவலன் என்று பொருள். சிந்து முத்திரைகளில் கா உண்டன் என்ற பெயர் காணப்படுகின்றன. தமிழ், கன்னட கல்வெட்டுகளிலும் காஉண்டன் > காவுண்டன் >  காமுண்டன் ஆகிய பெயர்கள் புழங்குகின்றன. வழ வழ - மழ மழ என்பது  வ > ம திரிபு. காவுண்டன் இன்று கவுண்டன் ஆகிவிட்டது.  இதற்கு இடம் பெயரா காவலன் என்பதே பொருள். அசையா கருத்தில் இருந்து அசைவு கருத்து பிறப்பதை முன்பே  "கல்" வேரில் கண்டோம். "உல்" அந்த மகுடத்தில் மேலும் அணிசெய்யும் ஒரு "கல்" ஆகும்.
>>>

உல், கல் இதற்கெல்லாம் காமிண்டன் என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு தொடர்பில்லை.

NGReply all
Reply to author
Forward
0 new messages