வானொலியில் ‘இயற்கை இன்பம் – சுற்றுச்சூழல் சிந்தனைகள்’ சிறப்புப் பேச்சுத் தொடர்

2 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jun 30, 2026, 1:48:19 AM (24 hours ago) Jun 30
to

வானொலியில் ‘இயற்கை இன்பம் – சுற்றுச்சூழல் சிந்தனைகள்’ சிறப்புப் பேச்சுத் தொடர்

மதுரை, ஜூன் :

அகில இந்திய வானொலியின் மதுரை மற்றும் இராமேஸ்வரம் நிலையங்களில், ‘இயற்கை இன்பம் – சுற்றுச்சூழல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் சிறப்புப் பேச்சுத் தொடர் ஜூன் 1 முதல் 16ஆம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் அவசியம் மற்றும் பசுமை வாழ்வியல் குறித்து உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி மதுரை வானவில் 103.3 எப்.எம்.இராமேஸ்வரம் வானவில் 100.9 எப்.எம். மற்றும் மதுரை முதன்மை அலைவரிசை 1269 ஏ.எம். ஆகிய வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்பாகிறது.

மேலும், இணைய வழியாகவும் நிகழ்ச்சியைக் கேட்கலாம். மதுரை வானவில் ஒலிபரப்பை https://radiosindia.com/maduraifm.html மற்றும் மதுரை முதன்மை அலைவரிசை ஒலிபரப்பை https://www.tamilradios.com/air-madurai-pc-am-1269 என்ற இணையதளங்கள் மூலம் கேட்கலாம்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி தலைமையில், நிகழ்ச்சி பொறுப்பாளர் கார்த்திகை தீபன் மற்றும் பகுதி நேர அறிவிப்பாளர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தப் பயனுள்ள நிகழ்ச்சியை அனைவரும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

IMG-20260630-WA0018.jpg
1003490419.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages