மாலகோயில் திருவிழாவில் தானப்பசுக்கள் வந்து குவிந்தன.

5 views
Skip to first unread message

PazamaiPesi

unread,
Jan 17, 2013, 4:40:44 PM1/17/13
to மின்தமிழ், vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
உடுமலை, ஜன. 17: உடுமலை அருகே உள்ள மாலக்கோயில் திருவிழாவில் நேற்று தானப்பசுக்கள் வந்து குவிந்தன.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=142899&cat=504

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி சோமவாரப்பட்டி கிராமத்தில் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. மாலகோயில் என அழைக்கப்படும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் திருவிழா விமரிசையாக நடைபெறும். விவசாயிகள் தங்கள் மாடுகளை கோயிலுக்கு தானமாக கொடுத்து வழிபடுகின்றனர். நேர்த்திக்கடனாக பொம்மை மாடுகளையும் வழங்குவார்கள்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. உழவர் திருநாள் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று  காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொள்ளாச்சி, பல்லடம், தாராபுரம், பழனியில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர் அனைவரும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.காலையில்  சிறப்பு தீபாராதனை நடந்தது.  நேர்த்திகடனாக பக்தர்கள் வழங்கிய மாட்டு பொம்மைகள் மலைபோல் குவிந்தன. 

நேற்று மதியம் வரை 18  பசுக்கள். 2 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. பிற்பகலில் ஏராளமான மாடுகள் கோயிலுக்கு வழங்கப்பட்டன.அம்மாபட்டி பெரியகேட்டை லிங்காமாவூர்,அடிவள்ளிராஜாவூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இசைக்கேற்ப நடனமாடும் மாடுகளைகொண்டு வந்திருந்தனர். இன்றிரவு 7 மணிக்கு மகா தீபாராதனை, 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கை நடக்கிறது.

இன்ஸ்பெக்டர் முருகையன், தீயணைப்பு அதிகாரி வாசுதேவன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பட்டி நோம்பி தெரியாதவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம். http://maniyinpakkam.blogspot.com/2013/01/blog-post_12.html

PazamaiPesi

unread,
Jan 17, 2013, 4:43:27 PM1/17/13
to மின்தமிழ், vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
உடுமலை: விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, உடுமலை ஆல்கொண்டமால் கோவிலில், இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. உடுமலை செஞ்சேரிமலை ரோட்டில் உள்ளது சோமவாரப்பட்டி ஊராட்சி. இங்கு முட்புதர்களால் சூழப்பட்ட கொடிய பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ், லிங்க வடிவில், புற்று உருவானது. அந்த காட்டுப்பகுதியில் மேயும் மாடுகள், லிங்க வடிவில் உருவான புற்றுக்கு பாலை சொரிந்து அபிஷேகம் செய்துள்ளன. தொடர்ந்து பசுக்கள் பால் சொரிவதை கண்ட முன்னோர்கள், ஆயர்பாடி கண்ணனின் மகிமை என்று உணர்ந்தனர். இக்கோவிலின் அருகே ஆலமரங்கள் நிறைந்த ஆலாமரத்தூர் என்னும் ஊர் உள்ளது. ஆலம் உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால் அங்குள்ள திருமாலை "ஆல்கொண்டமால் என்று மக்கள் வணங்க ஆரம்பித்தனர். சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவசாயிகள் பால், வெண் ணை ஆகியவற்றால், அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதையும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும், இந்த கோவில் வழிபாட்டு முறை காட்டுகிறது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ள ஆல்கொண்டமால் கோவிவிலில், பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன், பூஜைகள் துவங்கின. பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இவை இன்றும் தொடரவுள்ளன. அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி, உடுமலை பகுதி கிராம மக்கள், பாரம்பரிய நடனங்களை ஆடியும், வழிபாடுகள் நடத்தியும் வருகின்றனர். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, பக்தர்கள் மாட்டு வண்டிகளிலும், வாகனங்களிலும் வந்து இறைவனை தரிசித்து செல்வது வழக்கம். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, உடுமலை கிளை போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

PazamaiPesi

unread,
Jan 17, 2013, 4:47:14 PM1/17/13
to மின்தமிழ், vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

பச்சை பசேலென்ற விளை நிலங்களும், உயர்ந்த மலைகளும் நிறைந்த பூமி கொங்கு மண்டலம். இங்கு புகழ் பெற்ற கோவில்களும் உண்டு. `மேலைச்சிதம்பரம்' என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படை வீடு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலனை தரும் அவினாசியப்பர் கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என்று மும்மூர்த்திகளுடன் காட்சி தரும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கோவில்களின் வரிசையில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கி வருவது... சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்.

தல வரலாறு.......

பரமபதநாதனாகிய பரந்தாமன் துவாபர யுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன், யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார். கண்ணபிரானின் திருக்கண் பார்வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடி இன்றி வாழ்ந்தனர். இப்படி அருள் மழை பெய்து அடியவர்களை உய்விக்கும் திருமாலாகிய கண்ணபிரான், திருவளர்ந்தோங்கும் கொங்கு நன்னாட்டிலே உடுமலை-செஞ்சேரி மலை ரோட்டில் சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார்.

பண்டை காலத்தில் `ஆலாமரத்தூர்' என்று அழைக்கப்பட்ட இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. இங்கு விஷப் பாம்புகள் வாழும் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்த பகுதியில் மேய்ந்த பசுமாடுகள் இந்த புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தன. அதைத் கண்ட அப்பகுதி மக்கள் ஆலமரத்தின் கீழ் அமர்ந்த திருமாலையும், ஆலம் உண்ட சிவபெருமானையும் ஒரே கடவுளாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இன்று அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.

தமிழ் திருநாள் திருவிழா.........

இக்கோவில் மூலவரான ஆல்கொண்டமால் சிலையில், திருமாலாகிய மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் உள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவை மேல்பாகத்திலும், ராமவதாரத்தின் சின்னமாகிய ஸ்ரீராமரையும், சீதாதேவியையும் மத்திய பாகத்திலும், கல்கி அவதார சின்னமாகிய கல்கி பகவான் குதிரை மேல் பவனி வருவது போன்ற காட்சியை அடி பாகத்திலும் காண முடிகிறது.

ஆக இந்த சிலை மூன்று பிரிவுகளாக்கப்பட்டு, மேல் பாகத்தில் கிருஷ்ண பகவானுக்கு இருமருங்கிலும் சூரிய சந்திர உருவங்களுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இங்கு தமிழ் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப்பாலை சொம்புகளில் கொண்டு வந்து திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கின்றனர்.

அந்த திருநீறையும், தீர்த்தத்தையும் தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால் அவைகளுக்கு நோய்கள் எதுவும் வராது என்பது அவர்களது நம்பிக்கை. இதன் மூலம் கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்கி வருகிறது. மேலும், இக்கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

ஆல் கொண்டமால் கோவில் விழாவின் போது பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலைகளின் முன் வைக்கிறார்கள். தேங்காயை உடைத்து தேங்காய் தண்ணீரைக் கொண்டு உருவார பொம்மைகளின் கண்களில் தேய்த்து பொம்மைகளுக்கு கண் திறக்கின்றனர்.

பின்னர் தேங்காய், பழம், பத்தி சூடம் வைத்து உருவார பொம்மைகளுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டு முறை வேறு எங்கும் காண முடியாத ஒன்றாக உள்ளது.

அமைவிடம்.....

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து வடக்கே 12 கி.மீ. தூரத்தில் சோமவாரப்பட்டிக்கு அருகே ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. 

Innamburan Innamburan

unread,
Jan 17, 2013, 5:12:07 PM1/17/13
to vall...@googlegroups.com
அப்பா பழமை பேசி. ஏனப்பா இப்படி படிக்க முடியாத படி வண்ணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


2013/1/17 PazamaiPesi <pazam...@gmail.com>

--
 
 

பழமைபேசி

unread,
Jan 17, 2013, 5:16:18 PM1/17/13
to வல்லமை
Dear Sir,

Sorry; I am just copy-pasting through my phone as I am on travel!!
Sorry about that!!

On Jan 17, 5:12 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> அப்பா பழமை பேசி. ஏனப்பா இப்படி படிக்க முடியாத படி
> வண்ணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
> இ
>

> 2013/1/17 PazamaiPesi <pazamaip...@gmail.com>
>
>
>
>
>
>
>
> >http://cinema.maalaimalar.com/2012/01/26104718/somavara-patti-temple....


>
> > பச்சை பசேலென்ற விளை நிலங்களும், உயர்ந்த மலைகளும் நிறைந்த பூமி கொங்கு
> > மண்டலம். இங்கு புகழ் பெற்ற கோவில்களும் உண்டு. `மேலைச்சிதம்பரம்' என்று
> > அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படை வீடு மருதமலை
> > சுப்பிரமணிய சுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலனை தரும் அவினாசியப்பர்
> > கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என்று மும்மூர்த்திகளுடன் காட்சி தரும்
> > திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
> > இந்த கோவில்களின் வரிசையில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கி வருவது...
> > சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்.
>

> > *தல வரலாறு.......*


>
> > பரமபதநாதனாகிய பரந்தாமன் துவாபர யுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்,
> > யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார். கண்ணபிரானின் திருக்கண் பார்வையால்
> > ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடி இன்றி வாழ்ந்தனர். இப்படி அருள்
> > மழை பெய்து அடியவர்களை உய்விக்கும் திருமாலாகிய கண்ணபிரான்,
> > திருவளர்ந்தோங்கும் கொங்கு நன்னாட்டிலே உடுமலை-செஞ்சேரி மலை ரோட்டில்
> > சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார்.
>
> > பண்டை காலத்தில் `ஆலாமரத்தூர்' என்று அழைக்கப்பட்ட இப்பகுதி அடர்ந்த காடாக
> > இருந்தது. இங்கு விஷப் பாம்புகள் வாழும் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில்
> > ஒரு புற்று இருந்தது. இந்த பகுதியில் மேய்ந்த பசுமாடுகள் இந்த புற்றில்
> > தாமாகவே பாலை சொரிந்து வந்தன. அதைத் கண்ட அப்பகுதி மக்கள் ஆலமரத்தின் கீழ்
> > அமர்ந்த திருமாலையும், ஆலம் உண்ட சிவபெருமானையும் ஒரே கடவுளாக எண்ணி வழிபடத்
> > தொடங்கினர். இன்று அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.
>

> > *தமிழ் திருநாள் திருவிழா.........*


>
> > இக்கோவில் மூலவரான ஆல்கொண்டமால் சிலையில், திருமாலாகிய மகாவிஷ்ணுவின் பத்து
> > அவதாரங்களில் உள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவை மேல்பாகத்திலும்,
> > ராமவதாரத்தின் சின்னமாகிய ஸ்ரீராமரையும், சீதாதேவியையும் மத்திய பாகத்திலும்,
> > கல்கி அவதார சின்னமாகிய கல்கி பகவான் குதிரை மேல் பவனி வருவது போன்ற காட்சியை
> > அடி பாகத்திலும் காண முடிகிறது.
>
> > ஆக இந்த சிலை மூன்று பிரிவுகளாக்கப்பட்டு, மேல் பாகத்தில் கிருஷ்ண பகவானுக்கு
> > இருமருங்கிலும் சூரிய சந்திர உருவங்களுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
> > ஆண்டும் தை மாதத்தில் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இங்கு தமிழ் திருநாள் திருவிழா
> > கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப்பாலை
> > சொம்புகளில் கொண்டு வந்து திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கின்றனர்.
>
> > அந்த திருநீறையும், தீர்த்தத்தையும் தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது
> > தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால் அவைகளுக்கு நோய்கள் எதுவும் வராது என்பது
> > அவர்களது நம்பிக்கை. இதன் மூலம் கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில்
> > விளங்கி வருகிறது. மேலும், இக்கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும்,
> > சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
>
> > ஆல் கொண்டமால் கோவில் விழாவின் போது பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம்
> > தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை
> > சிலைகளின் முன் வைக்கிறார்கள். தேங்காயை உடைத்து தேங்காய் தண்ணீரைக் கொண்டு
> > உருவார பொம்மைகளின் கண்களில் தேய்த்து பொம்மைகளுக்கு கண் திறக்கின்றனர்.
>
> > பின்னர் தேங்காய், பழம், பத்தி சூடம் வைத்து உருவார பொம்மைகளுக்கு பூஜை
> > செய்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டு முறை வேறு எங்கும் காண முடியாத ஒன்றாக
> > உள்ளது.
>

> > *அமைவிடம்.....*

Innamburan Innamburan

unread,
Jan 17, 2013, 5:23:32 PM1/17/13
to vall...@googlegroups.com
நன்ரி.படிச்சுட்டேன்.


2013/1/17 பழமைபேசி <pazam...@gmail.com>
--



Reply all
Reply to author
Forward
0 new messages