உருக்குறு, உருக்கிய ... தொடர்ந்து முக்கியமான கேள்வி 1 ...

14 views
Skip to first unread message

rajam

unread,
Sep 16, 2018, 8:07:17 PM9/16/18
to vallamai, mintamil, தமிழ் மன்றம், rajam
உருக்குறு, உருக்கிய என்ற சொற்களுக்கிடையே வேறுபாடு உண்டா, அவ்வாறாயின் அதுவென்ன என்று கேட்டதுக்கு நேரம் எடுத்துக் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி.

அதன் தொடர்பாக முதல் கேள்வி:

நெய் உருக்கும்போது பால் தெளிப்பார்களா? நெய் உருக்கியபின் பால் தெளிப்பார்களா?

நான் பார்த்ததும் கேட்டதும் … வெண்ணெய் காய்ச்சி நெய் உருவாகும்போது முருங்கையிலை, கறிவேப்பிலை போடும் வழக்கம். பால் தெளிப்பதில்லை. உருக்கிய நெய்யிலும் பால் தெளித்ததில்லை.

சங்கப்புலவர் ஒருவர் ஏன் இப்படியோர் உவமை சொன்னார்? நற்றிணை 21-ஆம் பாடலைப் பார்க்கவும்.

நன்றி,
ராஜம்

C.R. Selvakumar

unread,
Sep 16, 2018, 9:21:51 PM9/16/18
to தமிழ் மன்றம், vallamai, rajam
நற்றிணை 21 ஆம் பாடல்  (உருக்குறு என்னும் சொல்லாட்சி
இடம்பெறுமிடம் காட்டப்பட்டுள்ளது).  
இப்பாடலில் 'பால்' என்பது பசும்பால் (பால் தெளிப்பது) அன்று
என்பது என் கருத்து.
இங்கே 'பால்' என்பதற்கு  'இடம்' /பக்கம் என்று பொருள் வரும் என்று
கருதுகின்றேன். என்பால் அன்பு கொண்டிருந்தார் என்பதுபோல்.
என் கருத்து பொருந்தாமல் இருக்கலாம். 
"
உருக்குறு நறு நெய் பால்"   நறுநெய் உருக்குறும்பொழுது அங்கே
அவ்விடத்தில் விட்டுவிட்டு சொடசொட என ஒலிவரும்
என்று சொல்வதாகப் பொருள் கொள்கின்றேன். அதுபோல
காட்டுக்கோழி 'அரிக்குரல்' எழுப்புகின்றது என்கிறார்கள்
என்று நினைக்கின்றேன். நான் உரைகளை இனிமேல்தான் படித்துப்
பார்க்கவேண்டும்.
----------------
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- 5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, 10
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Sep 16, 2018, 9:37:22 PM9/16/18
to C.R. Selvakumar, தமிழ் மன்றம், vallamai
நன்றி, செல்வா. தயவுசெய்து உரைகாரர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் பால்/பக்கம் அவசரப்பட்டுப் போகவேண்டாம்.

பாடலில் உள்ள உவமையை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள் என்று தெரிந்துகொள்வதுதான் தேவை.

நன்றி,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2018, 7:49:41 AM9/17/18
to vallamai, C.R. Selvakumar, தமிழ் மன்றம்
வெண்ணெயை உருக்கும்போது அதிலுள்ள நீர் துள்ளிஎகிறும். புதுவெண்ணெயில் அது பாலாக இருக்கலாம்.

திங்., 17 செப்., 2018, முற்பகல் 7:07 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Oct 21, 2018, 1:54:52 AM10/21/18
to vallamai, mintamil, தமிழ் மன்றம், kanmani tamil, தேமொழி, Pandiyaraja Paramasivam
என் முந்தைய பதிவில் உருக்குறு, உருக்கிய ஆகிய சொற்களைப் பற்றிக் கேட்டிருந்தேன். அது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. கண்மணி அவர்கள் உருகிவரும் நெய்யில் தயிர் தெளித்த ஒலிப்படம் அனுப்பியது மிக மிக மிக உதவியாக  இருந்தது.

தொடர்பாக அடுத்த கேள்வி: நற்றிணை 21-ஆம் பாடலில் புலவர் குறிப்பிடும் "கான வாரணம்” பெட்டையா சேவலா?

என் கேள்விக்கு அடிப்படை:

பொதுவாக வாரணம் என்றால் சேவல்/யானை … இப்படித்தான் படித்திருக்கிறேன்.

ஆனால், அண்மையில் ஒரு நண்பருக்கு இந்த நற்றிணைப்பாடலைப் படிக்க உதவ நேர்ந்தபோது … புறநானூற்றுப் பாடலில் (#52?) … "கான வாரணம் ஈனும்” என்ற சொல்லாட்சி என்னை மேலும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இணைய ஆர்வல-ஆய்வலரின் கருத்தென்ன என்று தெரிந்துகொள்ள விருப்பம்.

நன்றி,
ராஜம்


N. Ganesan

unread,
Oct 21, 2018, 12:35:30 PM10/21/18
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Sun, Oct 21, 2018 at 12:52 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
உறையூரை இலக்கியங்கள் வாரணம் என்றும் , கோழி என்றும் அழைப்பது மேற்சுட்டிய கருத்திற்கு ஆதாரம் அல்லவா?!
Sk


வாரணம் இருபாலுக்கும் பொதுவானது என்றெ தெரிகிறது.
ஆண்பால் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் “வாரணச் சேவல்” என்கின்றனர்.

(1)

ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த

மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,

பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65 - பரிபாடல்

-----------

(2)

பெரிய புராணம்:
வாரணச் சேவ லோடு வரிமயிற் குலங்கள் விட்டுத் 
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்
 

நா. கணேசன்

 

 
On Sun, Oct 21, 2018 at 11:56 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:


---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Sun, Oct 21, 2018 at 11:55 AM
Subject: Re: உருக்குறு, உருக்கிய ... தொடர்ந்து முக்கியமான கேள்வி 2 ...
To: rajam ramamurti <ra...@earthlink.net>


வாரணம் என்பது கோழி சேவலுக்குரிய பொதுப்பெயர் இல்லையா அம்மா?
ஒவ்வொரு ஜாமத்திலும் சேவல் கூவும்.
நாம் கோழி கூவுது என்று தானே சொல்வோம்.
பேச்சு வழக்கின்  இவ்வியல்பு ..........செய்யுளிலும் எடுத்தாளப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.
கண்மணி  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pavala

unread,
Oct 22, 2018, 8:27:35 AM10/22/18
to vall...@googlegroups.com, rajam
அன்பின் ராஜம் அம்மா,

வணக்கம்.

//நெய் உருக்கும்போது பால் தெளிப்பார்களா? நெய் உருக்கியபின் பால் தெளிப்பார்களா?

நான் பார்த்ததும் கேட்டதும் … வெண்ணெய் காய்ச்சி நெய் உருவாகும்போது முருங்கையிலை, கறிவேப்பிலை போடும் வழக்கம். பால் தெளிப்பதில்லை. உருக்கிய நெய்யிலும் பால் தெளித்ததில்லை.//

அம்மா வெண்ணெய் உருகி நெய் ஆகும் தருணம் இறுதியாக முருங்கை இலைக்கொத்து அல்லது கருவேப்பிலை கொத்து ஏதாவது ஒன்றை மோரில் நனைத்து மோர் சொட்டச் சொட்ட அந்த நெய்யில் போட்டு இறக்கிவிடுவோம். இதனால் நெய் அதிகம் கருகிவிடாமல் இருப்பதோடு மணமும் கூடும் என்று என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள். இன்றளவிலும் நானும் அப்படியே தொடர்கிறேன். நன்றி.

அன்புடன்
பவளா

On Sun, Oct 21, 2018 at 9:35 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari

Erode.
Tamil Nadu.
Reply all
Reply to author
Forward
0 new messages