வில்வ இலையின் மருத்துவ குணங்கள் வில்வ இலையின் மகத்துவங்கள்

66 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 27, 2017, 7:40:01 AM10/27/17
to vall...@googlegroups.com

வில்வ இலையின் மருத்துவ குணங்கள் வில்வ இலையின் மகத்துவங்கள்


வில்வம் என்றாலே நினைவுக்கு வருவது சிவாலயங்கள் தான் அனைத்து சிவாலயங்களிலும் இந்த வில்வ மரம் கண்டிப்பாக இருக்கும். இதை மக்கள் சிவனுக்கு மாலையாக சாத்தி வழிபட்டால் சிவன் மகிழச்சிடைந்து பல நன்மைகளை தருவார் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பரவி இருக்கிறது. ஆனால், இதில் உள்ள மருத்துவ குணங்கள் மிக குறைந்த மக்களுக்கே தெரியும். இதனுடைய மருத்தவ குணங்களை புரிந்து கொணட நம் முன்னோர்கள் சிவஸ்தலங்களில் தீர்த்தமாகவும்,பிராசதமாகவும் தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் அனைத்து மகா விஷ்னு கோவில்களிலும் துளசியை தீர்த்தமாகவும்,பிராசதமாகவும் வழங்கப்படுகிறது.


வில்வத்தை கூவளம் என்றும் கூறுவார்கள் இதனுடைய இலை உடலில் சொறி, கரப்பான்(ஒரு வகையான தோல் வியாதி) முதலியவற்றை தடுக்கக் கூடியது மேக நோய் சம்பந்தமான புண்களைப் போக்கக் கூடியது. உடல் வற்ட்சியை நீக்கும் மற்றும் மூளை சோர்வுகளை போக்கக் கூடியது.


இது தமிழகத்தின் மிக தொன்மையான மர வகுப்பைச் சேர்ந்ததாகும். இம்மரம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.


சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் இதன் இலை,காய்,பட்டை வேர் முதலியவைகள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் இலையினால் தாயாரிக்கப்படும் வில்வ குடிநீர், மகா வில்வாதி லேகியம் ஆகியவை மிகவும் பிரசித்தமானவையாகும்.


வில்வக் குடிநீர் என்பது ஒரு பிடி இலையை சுமார் நான்கு அவுன்ஸ் நீரில் எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் ஊற வைத்து, பின் இலையை நீக்கி நீரை மட்டும் அருந்துவதாகும். தீராத ரோகங்களிலும் இக்குடிநீர் நல் பலனளிக்கவல்லது. ஆயுர்வேத , ஆஙகில மருத்தவர்கள் கூறும் எல்லாவகை குன்ம ரோகங்களுக்கும் இது ஒன்றே போதுமானது.
அக்குடிநீரையே அதிகாலையில் ஒரு அவுன்ஸூக்கு குறையாமல் அருந்தி வருவதன் மூலம் வாத வலிகள் , மேக நோய் முதலியவற்றைப் போக்கிக் கொள்ளலாம். இக்குடிநீர் மூளைக்கு நல்ல பலத்தை அளித்து ஞாபக சக்தியை பெருக்குகிறது.
வில்வ மரப் பட்டையை இரண்டு ரூபாய் எடை அளவு எடுத்துக் கொண்டு கால் படி நீர் விட்டு காய்ச்சி அருந்தி வர விக்கல்,மார்புவலி மற்றும் வாயு தொந்தரவுகள் நீங்கும்.
வில்வத்தில் இரண்டு வகையான மரங்கள் உண்டு ஒரு வகையில் உருண்டை வடிவமான காய்களும் மற்றொன்றில் தடித்து உருண்டை வடிவாகவும் இருக்கும். இவைகளின் குணங்கள் ஒரே மாதிரியானவை. இந்த பழம் உடல் உஷ்ணம், எரிச்சல் மற்றும் உடல் அரிப்புகளை (தினவு) போக்கக்கூடியது. பழத்தை எண்ணெயில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வருவதால் மூளை, கண் முதலியவை குளிர்ச்சியை பெறும்.


இலையை மட்டும் எந்த ரூபத்திலாவது சாப்பிட்டு வர மேற்கூறிய அனைத்து நோய்களும் நீங்கும் உடல் பளபளப்பாய் விளங்கும்.
வாய்வுத் தொந்தரவுகள்,குன்ம(அல்சர்) வயிற்று வலிகள் ஜீரணக் கோளாறு, உடல் பலகீனம், பசி இன்மை முதலிய நோய்களும் இலையை உலர்த்தி தூள் செய்து பசும்பால் விட்டுச் காய்ச்சி, போதுமான அளவு பனை வெல்லமும்,நெய்யும் சேர்த்து லேகிய பதமாய் செய்துகொண்டு சாப்பிட்டு வரலாம்.


Radha Ragul‎, NAGERCOIL  

Image may contain: fruit, food and outdoor
Reply all
Reply to author
Forward
0 new messages