10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி காலமானார்...!
மேலும் செய்தி:
எனது ஆழ்ந்த இரங்கல்.
கவிஞர் வாலி, நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை
இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்கவைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாகஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே,கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள்ஏராளம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வெம்புலி பெற்ற அம்புலி - கவிஞர் வாலி
கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால்,
ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ;
தொப்பூழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி -
இங்கிருக்கும் சோழத்தமிழன்தான்
அங்கிருக்கும் ஈழத்தமிழன் ;
அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான்
இங்கிருக்கும் சோழத்தமிழன்!
சோழத் தமிழன்
சோர்வு தவிர்க்க- ஓர்
'அண்ணா' வாய்த்தது போல்-
ஈழத் தமிழன்
ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி'
வாய்த்தான்!
முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?
நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ?
பிரபாகரனின் பிதா -
வேலுப்பிள்ளை ; அந்த
வேலுப்பிள்ளை பெற்ற பிள்ளையை.....
கதிர்காமத்துக் கந்தனைப் போல்-
வேல் பெற்ற பிள்ளை எனலாம்;
பார்வதியின்-
சூல்பெற்ற பிள்ளை எனலாம்;
ஈழத்தமிழர் - விழி
ஈரமெல்லாம் -
வற்றாத புனலாம்; அவனதை
வற்றவைக்க வந்த அனலாம்!
மாதரசி
மதிவதனியைத் -
திருமணம் முடித்தான்
திருப்போரூரில்;
ஆனால்
அவன் -
அகத்தைப் படிக்காமல்
புறத்தைப் படித்தான்....
தாழ்ந்தும்
தவித்தும்- தன்
இனத்தோரெல்லாம்
இருப்போரூரில் !
தகவார்ந்த
தந்தை செல்வா சென்ற...
காந்தி வழியில்
காரியம் ஆகாதென்று -
நேதாஜி வழியை
நேர்ந்தான் ;
தூர்த்தரைத்
தூர்க்கத் -
துடைப்பம் உதவாதென்று
துப்பாக்கியைத் தேர்ந்தான் !
நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!
ஆலயங்களில் நாம்
ஆராதிக்கும்-
ஆண்டவனாரெல்லாம்
அன்புமழை;
அவர்கள் கரங்களிலேயே
ஆயுதங்கள் இருக்கையில்-
அறத்தைக்காக்க மனிதனும்
ஆயுதம் ஏந்தினால் என்ன பிழை?
தீர்த்தம் விழையாது-
தீனி விழையாது-
தீர்ந்து போனான்
திலீபன் எனும் தீர்த்தன்
கண்ணிழப்பினும்
மண்ணிழக்க மாட்டேன் என்று-
குட்டிமணி என்பான்
கொட்டடியில் ஆர்த்தன் !
எங்கே இருக்குமோ வீரம்;
அங்கே இருக்கும் சோரம்;
உடனிருந்தே உளவு சொன்னது -
ஒரு நா ; அது கரு நா ; அந்தக்
கரு நா பெயர் கருணா!
பிரபாகரன் எனும் சொல் -
ஒளிப்பிழம்பெனப் பிரகாசிக்கும்-
சூரியனைக் குறிக்கும் ;
சூரியனோ
சூழும் இருளைத் தின்று செரிக்கும்!
அது
அத்தமிக்கும் ஓரிடத்தில்;
அதே நேரம்
அவிர்ந்திருக்கும் வேறிடத்தில்;
இருப்பதுமாய்;
இல்லாததுமாய்;
இருப்பதுதான் அது;
அணையா
நெருப்பதுதான் அது!
கண்டேன் சேனல் நான்கை;
அது காட்டியது சிங்களர் தீங்கை;
எரிந்தது என் ஈரக்குலை;
என் சொல்ல அந்த கோரக் கொலை?!
பிரபாகரனின் பிள்ளையே!
வர இருக்கும் வில்லங்கம் புரியாது -
எதையோ வாயில் சுவைக்கும் வெள்ளையே!
ஆறிரண்டு வயதான அம்புலியே!
காடையர் கண்ணுக்கு-
அம்புலியும் ஆனதென்ன வெம்புலியே!
புலியின் புதல்வன்
புலியானான் என்றால் பொருத்தம்;
புல்லரின் புல்லட்டுக்குப்
பலியானான் என்பதுதான் வருத்தம்!
வண்டு துளைத்தாலே
வலி தாங்காப் பூவே! அஞ்சு-
குண்டு துளைத்துன்னைக்
கொண்டதென்ன சாவே?
சலனம் ஏதுமின்றி
சாவை எதிர்கொண்டாயாமே?
அடடா!
அதுதான் விந்தை!
கவுரவப் படுத்தினாய்
கண்ணா! நீயுன்-
தந்தை
விந்தை !
முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்...
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?
என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!
நன்றி - குமுதம்