சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்

63 views
Skip to first unread message

AnnaKannan K

unread,
Mar 21, 2023, 2:32:48 PM3/21/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
இந்திய அணுசக்தித் துறையில் ஹோமி பாபா, ராஜா ராமண்ணா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர், அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையில் பங்களித்தவர். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் ஜெயபாரதன் எத்தகைய அனுபவங்களைப் பெற்றார்? இதோ அவரே சொல்கிறார்.

https://youtu.be/UhaZph_2nyI

AnnaKannan K

unread,
Mar 27, 2023, 7:00:09 AM3/27/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்திய அரசே ஏற்க வேண்டும் என்பது சரியா? அணுசக்தித் துறையில் தனியார் ஈடுபடுவது ஏற்புடையதா? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

https://youtu.be/EazRdw1q1ew

Annakannan

unread,
Mar 27, 2023, 12:28:50 PM3/27/23
to சி. ஜெயபாரதன், Vallamai, தமிழ் மன்றம், pushpa christy
பெருஞ்செயல் செய்திருக்கிறார், புஷ்பா கிறிஸ்டி.

---------- Forwarded message ---------
From: pushpa christy <Unknown>
Date: Saturday, 25 March 2023 at 03:41:31 UTC+5:30
Subject: Re: சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்
To: மின்தமிழ் <Unknown>ஐயாவின் வரலாற்றைக் கேட்டு, எழுதினேன். நேரம் இல்லாதவர்கள் படித்து அறியலாமே!
புட்பா கிறிட்டி.

தமிழ் சொல்லித் தந்தது பாரதி. அவரை எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தையார். அவர் பெயர் சிங்கார வேலுப் பாண்டியன். அவர் ஒரு சுதந்திர வீரர். நான் பிறந்த இடம் திருமங்கலம். சத்திரிய நாடார் சந்ததி. அவர்கள் சம்பாதியத்தில் ஒரு பகுதியை சமூகத்திற்கு தரவேண்டும். உயர்ந்த சாதி கைவிட்ட நிலையில் அவரவர் பணம் போட்டு, உயர்ந்த சமூகமாக மாற்றினர். எல்லாரும் ஒரு தொகையை கொடுத்தனர்.
மதுரையை ஆண்ட பாண்டியன் என்பதால், சிங்கார வேலு என்னும் பெயருடன் பாண்டியன் என்றும் இணைத்தார்.

காலை எம்மை எழுப்பி, குளிப்பாட்டி, அதிகாலையில் பாடுவொம்.
அதிகாலை 6 மணிக்கு கடவுள் பிரார்த்தனை. வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழ்.. எனப் பாடியது. அதில் பாரதி பாடல்கள் மனத்தில் பதிந்தன. பாரதி, காந்தி என 6,7 வயதில் அன்று தெரிந்தவர்கள். அப்படியே தமிழ் என்னுள் பதிந்தது.
மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தினர். அந்தக் கல்லூரியில் பி.யு.சி படித்தேன். அங்கு கணிதத்தில் 100 வாங்கினேன். என் ஆசிரியர் என்னை அழைத்துச் சென்று கேட்டார். எப்படி வாங்கினாய்? எனக் கேட்டார். ராமனுஜர், தன் 8 வயதில், தன் ஆசிரியருக்கு பாடம் சொன்னாராம். எப்படி எனக் கேட்டவர்க்கு, அது கடவுள் "நாமகிரித் தாயார்" தயவினால் என்றாராம்.

ஜீலிய சீசரின் "அன்ரனி சாரேசன் " ஜீலிய சீசரின் உடலை காட்டிப் புரட்சி செய்தார். அன்ரனி சாரேசனை தமிழ் படுத்தினேன்.

முதலில் தமிழாக்கிய வாக்கியம். 7ம் வகுப்பு படிக்கிறேன். king of the Golden River- பொன் நதியின் புரவலன்.
பி.யூ.சி முடித்தேன். தமிழாசிரியராக விரும்பினேன். அது சோறு போடாது. நீ இஞ்சினியரிங் காலேஜ் போ என ஆசிரியரே அனுப்பினார்.
அப்பா சோப் கம்பனி வைத்திருந்தார். சோப், வேமசிலி கம்பனி வைத்து, ஒரு புத்தகத்தில் படித்து, சோப் உருவாக்கினார். 8 வயதில் வேலை செய்தேன். அவர்களுடன் கூட இருந்து சாப்பிடுவேன். காந்தி கட்சியாளர். தாழ்ந்த குலத்தவர்க்கு வேலை கொடுத்தார். ஒருவரின் மண் சட்டி உடைந்து, அவரின் கஞ்சி கொட்டி விட்டது. ஆக என் தந்தை தொழிலாளர்கள் 8 பேருக்கும், ஈயம் பூசிய பித்தளை பாத்திரம் வாங்கித் தந்தார்.
பித்தளை ஈயம் பூசி சாப்பிட வேண்டும். மோர், தயிர் அசிட் உள்ளதால், அவை நஞ்சேறி விடும். ஆகவே ஈயம் பூசாத பாத்திரம் கடோடாகி, நஞ்சேறும்.
ஆகஸ்ட் போராட்டத்தில் அப்பா கைது. என் பக்கத்து வீட்டுக்காரர், இதை அறிந்து, வேறு இடத்தில் மாற்றினார். வியாபாரம் விழுந்தது.

ஓம் சக்தி ஓம் பாடிக்கொண்டிருக்கிறோம். பிரிட்டிஷ் காரர் கைது செய்ய வந்தனர். 5 பிள்ளைகள், இவருக்கு 8 வயதில் தந்தை கைது. ஒம் சக்தி பாட பிரிட்டிஷ் காரர் வந்தனர். நான் காலை பிரார்த்தனை பண்ணாமல் வரமாட்டேன் என்றார் அப்பா
"
உங்களை விட்டுப் போகிறேன். பணத்துக்கு ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறேன்". என்று சொல்லிச் சென்றார்.
என் தந்தை. வாசலில் சென்றார். அங்கு என் தந்தையை பளார் என அறைந்த அதிகாரிக்கு, உன்னை என்னால் அறைய முடியாது, காலம் வர நான் உன்னை அறைவேன். என்றார். பெல்லாரி சிறையில் சாப்பிடாமல், 4 சவுக்கடி பெற்று, வாழ்ந்தார். அவரைச் சென்று பார்க்க முடியவில்லை.

அம்மாவும், ஆச்சியும் எம்மை வளர்த்தனர்.
ஆச்சிக்கு கணவர் இறந்த பின் யாருமில்லாததால், என் தந்தை அவரை எம்முடன் வைத்துக் கொண்டார்.
நெல் அவித்து காய வைத்து, சங்கக் கடைக்கு தருவார்கள். ஏற்றிச் செல்ல வண்டி தருவார்கள். குறுநல், தவிடு தருவார்கள். சின்னக் கனி நாடார், எமக்கு உதவினார். அதற்கு 4 மைல் நானும் என் சகோதரியும் நடந்து சென்று, 10 ரூபாய் வாங்க வருவோம். அப்பா விடுதலையானார். வீட்டில் வறுமை. திண்டுக்கல் வீட்டை விற்று வந்தோம்.
ஆச்சி வீடு வந்தோம். தகப்பனார் வீடு இருந்தது. சுத்தம் பண்ணி, திருமங்கலத்தில் குடிபுகுந்தோம். காந்தியிடம் வேலை செய்த உங்களிடம் நாங்கள் வேலை வாங்க முடியாது யாரும் வேலை தரமாட்டார்கள். என் வறுமையால் "பிச்சை புகினும் கற்கை நன்றே" என கடிதம் எழுதி, நாடார் கூட்டத்திடம் பிச்சை கேட்டு, அப்படி, பெற்ற பணத்தில், மதுரை பல்கலைக்கழகம் செல்ல வேட்டி, சட்டை, புத்தகம் வாங்கினார். திண்டுக்கல், கூட்டங்களில், பாரதி பித்தன் எனும் பேரில், அச்சமில்லை, விடுதலை பாடல்கள் பாடுவார்.
திண்டுக்கல் திருமங்கலத்தில் கூட்டங்களில், அச்சமில்லை அச்சமில்லை, என பாடினாராம்.

"கத்தியின்றி இரத்தமின்றி என்னும் யுத்தம் ஒன்று வருகிறது" என நாமக்கல் கவிஞர் பாடினார். அந்தப் பாடலைப் பாடிய நாமக்கல் கவிஞரே பின்னால் வந்து தன்னை அறிமுகம் செய்தாராம். என் பாட்டில் இத்தனை சக்தி இருக்குது என்பது நீ பாடிய பின்னரே எனக்குத் தெரியுது என்றாராம்.

மதுரை நாடார் மகா சங்கம், இந்திய நாடார் மகா ஜன சங்கம், பெரிய கல்லூரிகள் நடத்துவர். இஞ்சினியர் மாணவர்க்கு கடன் தர, 4 வருட காலம் 200 ரூபா ஒரு தவணைக்கு கடன் பெற்று படித்தேன்.
வீட்டில் வறுமை. என் தம்பி ஜவகர், மதுரை சென்று தீப்பெட்டி கம்பனியில் பெட்டி வாங்கி வந்து அதனை ஒட்டி, பெட்டி செய்து, வாரம் 50 ரூபாய் பெற்று, என் தந்தை பெட்டி செய்தார். சகோதரிகள் உதவினர்.

ஜே. எஸ். கண்ணப்பர் வீட்டில், தங்கி இருந்தோம். தன் மனைவியை விட்டு, மாதவி என்னும் சினிமா நடிகையுடன் வாழ்ந்தனர். என் தந்தை அவரிடம் கேட்கிறார். மதுரை இஞ்சினியர் காலேஜில் இடம் கிடைத்தது. கொஞ்சம் பணம் குறைகிறது. எவ்வளவு குறைகிறது? எனக் கேட்டார். 100 ரூபாய் என சொன்னதும். அந்த அம்மா கொண்டு வந்து 100 ரூபா தந்தார்.

அவரின் மகன், லஜபதி சொன்னதும், கற்கண்டு, போன்றவற்றிற்கு அவன் கதை எழுதுவது. கண்ணப்பர் அவனைத் திட்டுவார். நீ படிக்காது கதை எழுதுகிறாய். ஜெயபரதன் இன்சினியர் படிக்கிறான் என்றார்.
இந்த மாதம் பணம் கட்டாதவர் பெயர்ப் பட்டியலில் அவரின் பெயர் முதலில் இருக்கும். நேருக்குக் கடிதம் எழுதினார் தந்தை. பண்டிட் நேருவுக்கு கடிதம் எழுதினார். அவரிடமிருந்து மூன்று வாரத்தில் பதில் வந்தது. எனக்கு மாதம் 20 ரூபாயுடன் கல்லூரியில் பணி கிடைத்தது.

எல்லாரும் படிக்கும் போது, வேலை பண்ணிட, என் படிக்கும் நேரம் போய் விடுமே என்று அப்பாவிடம் சொல்வேன். நூலகத்தில் உள்ள பழைய நூல்களில் படித்தேன். அப்பாவிடம் சொன்னேன். எனக்கு படிக்க சிக்கலாக உள்ளது என்றேன். அப்பா சொன்னார். நீ படி. நீதான் முதாலாவதாக வருவாய் என்றார்.

படித்து, 3 வருடம் முதல் தரத்தில் படித்தனர். சீனிவாசன், பட்டாபிராமன், ராகவன், சீனிவாசன் என 4 பிராமண மாணவர்களிலும் முதலாவதாக வந்தேன்.
வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்.
உடுப்பி ஓட்டல் முதலாளி மகன், ரகுபதிராவ், மகன் என் வகுப்பு மாணவன், அவன் என் பாடங்களை வாங்கிப் படி எடுப்பான். இஞ்சினியரிங் காலேஜ் லாபரட்டியில் நான் செய்த குறிப்புகளை அவன் எடுத்து நகல் எடுத்துப் படிப்பான்.

மெக்கானிக்கல் இஞ்சினியர், மெடல்களை என் பேரன் எடுத்துச் சென்றுள்ளார்.
ஜவகர்லால் நேரு..எழுதிய கடிதம் மதுரை கல்லூரியில் உள்ளது. மேஜர் மார்லி என்னும் பிரிட்டிச் காரார். சிலர் இங்கு தங்கினார்.
one boy wrote a letter to Javaharlaal Neru. அவருக்கு என் மேல் கோபம். அதனை நான் எழுதவில்லை. என் தந்தை தான் எழுதினார் என்றேன். அவருக்கு என் மேல் கோபம். தமிழில் எழுதியது. அதை விட ஜவகர்லால் நேரு எத்தனை பெரிய மனிதர். அவருக்கு தமிழில் எழுதியது தவறு.

பெரியார் திட்டத்தில் 1956 மதுரை வைகை தண்ணீரை மின்சாரம் தயாரிக்க உதவியது. அதில் முதல் ராங்க் வாங்கிய அவருக்கு வேலை கிட்டியது.

எப்படி வேலை கிட்டியது?
முதல் ராங்க். வாங்கியும் வேலை கிட்டாததினால், என் அப்பா சென்னை சென்று, கே. அப்பாத்துரை முதல் இஞ்சினியரிடம் சென்றார் அப்பா. நான் சுதந்திரப் போராளி, என மகனுக்கு வேலை வேண்டும். நான் முதல் சம்பளம் வாங்கினதும். தீப்பெட்டி செய்வதை நிறுத்தினார்.

நீ வாங்கும் சம்பளத்தில், 3 பெண்களுக்கும் கரை சேர்த்திட, திருமணம் செய்து வைக்க நீ இப்போது கல்யாணம் செய்யாதே. அவர்களைக் கவனிக்க வேண்டும் என்றார்.
மூன்று பேரிலும் நடு சகோதரி திறமையானவள்.
சரோஜினி, ஜெயபரதன், இந்திரா, கஸ்தூரி, ஜவகர் என காங்கிரஸ் பெயர்கள்.

இந்திரா கடும் உழைப்பாளி. சோப்பில் ஒட்டும் பசையில் நீல நிறத்தில் காப்பர் சல்பைட் மணந்ததினால், இந்திரா இறந்தார். அப்பா நான் காலையில் வேண்டினேனே. எனக்கு உதவியாக இருந்த மகள் இறந்தாளே. என வேண்டி, இறுதியில் மன வேதனையில் வேண்டுவதை நிறுத்தினார். வேலை இல்லாததால், கால மாற்றத்தினால், வாழ்வில் துயரம்.

காமராஜரிடம் முன்னர் கண்ட போது, வீட்டில் வறுமை என்று சொல்லவில்லை. காலேஜுக்கு பணம் இல்லை என வறுமை சொல்லாதவர், குசேலர், தன் வறுமையைச் சொல்லாது கிருட்டினரிடம் சென்று வந்தார். அது போல இவரும் சொன்னதில்லை.

ஆனால், இப்போது, அவரிடம் சென்றார் அப்பா. 5 பிள்ளைகள், மகன் இஞ்சினியர். அவன் பணம் வர நாளாகும் என்றார். 100 ரூபா பென்சன் போட்டுக் கொடுத்தார். அதில் தான் நாங்கள் வாழ்ந்தோம். நாடார் சமூகத்தில், சீதனம் இருந்தது. அது ஒருமாதிரி வேதனைப் படுத்தியது.
அப்பா காந்தியை நேரில் கண்டார். நாங்கள் அனைவரும் அவரைக் கண்டோம். காந்தி பக்கத்தில் எம்மை உட்காடர வைத்தார். காந்தி பற்றி என் தந்தை பாடல் எழுதி அது தினமணியில் வந்தது.
காந்தி மகான் இன்று வருகின்றார். கருணையின் வடிவே வருகின்றார். சாந்த குபேரன் வருகின்றார் சற்குண சீலன் வருகின்றார். பண்டிதர் நேரு வந்த போதும் அவரை நேரில் கண்டோம். பெரியார் திட்டத்தில் வேலை 250 மாத சம்பளம். அணுசக்தி பற்றி இந்திய பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. பெரியார் திட்டத்தை விட்டு, 1957 ஆகஸ்டில், பம்பேயில் dept. of atomical engineering சேர்ந்தேன்.

AnnaKannan K

unread,
Apr 3, 2023, 6:45:06 AM4/3/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
கல்பாக்கம், கூடங்குளம் என இரண்டு அணு உலைகளைத் தமிழ்நாட்டின் தலையில் கட்டிவிட்டார்களா? ஆபத்து மிகுந்த தொழில்நுட்பம் நமக்கு எதற்காக? அணு உலைகள் பாதுகாப்பானவையா? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

https://youtu.be/1tTWxskomd8

AnnaKannan K

unread,
Apr 10, 2023, 4:26:42 AM4/10/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், வானுயர்ந்த கட்டடங்களுடன் இன்று இந்திர லோகமாய் விளங்குகின்றன. கதிரியக்கத்தை அகற்றும் தொழில்நுட்பம், பெரும் தொழிலாய் வளர்ந்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் செர்னோபில் நகரம், இன்னும் ஆளரவம் அற்ற பகுதியாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

https://youtu.be/RzSaXJz0Wgk

AnnaKannan K

unread,
Apr 24, 2023, 12:07:13 PM4/24/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடா அணு உலைகளில் பணியாற்றச் சென்றது ஏன்? இந்திய அணு உலைகளில் இருந்த அரசியல் எத்தகையது? தில்லியில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிய பஞ்சாபிப் பெண் விசா கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டது ஏன்? இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு, கனடா நாட்டுக் குடியுரிமையை ஏற்றது ஏன்? குடியுரிமை ஏற்கும்போது கனடாவின் தேசிய கீதத்தைப் பாடாமல் வாய்மூடி இருந்தது ஏன்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

https://youtu.be/XZGv1VJQVAA

AnnaKannan K

unread,
Apr 25, 2023, 4:05:40 AM4/25/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
If you do good things, guardian angels will protect and save you in the right time. Short message from Atomic Scientist Jayabarathan.

https://youtu.be/aR32RO5ExGY

S. Jayabarathan

unread,
Apr 30, 2023, 2:28:42 PM4/30/23
to AnnaKannan K, Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்
நண்பர் அண்ணாகண்ணன்,

[ஐயாவின் வரலாற்றைக் கேட்டு, நான் எழுதினேன். நேரம் இல்லாதவர்கள் படித்து அறியலாம்!

புஷ்பா கிறிஸ்ட்டி.]

யாரிந்த திறமைசாலி புஷ்பா கிறிஸ்டி ? நன்றி கூற வேண்டும்.

அன்புடன்
சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
May 1, 2023, 6:08:02 PM5/1/23
to AnnaKannan K, Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், pushpa christy
புஷ்பா கிறிஸ்டி வசன மாற்றத்தில் எழு எட்டு பிழைகள் உள்ளன.  மதுரைக் கல்லூரி, கோயமுத்தூர் பொறியியல் கல்லூரி.

சி. ஜெ

On Tue, 25 Apr 2023 at 04:05, AnnaKannan K <annak...@gmail.com> wrote:

AnnaKannan K

unread,
May 18, 2023, 11:22:33 AM5/18/23
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார்.

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் - பகுதி 7 
Reply all
Reply to author
Forward
0 new messages