மலர்மிசை ஏகியோன் யார்?

15 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 29, 2019, 12:21:58 PM9/29/19
to thiruppuvanam, Kalai Email
திருவள்ளுவன் வணங்கிய  மலர்மிசை ஏகியோன் யார்?

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் திருவள்ளுவர் எந்தக் கடவுளை வணங்கியுள்ளார்?  இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒருவாராக விளக்கம் அளிக்கின்றனர்.   திருக்குறளின் சொற்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை யென்றாலும், ஒவ்வொரு அறிஞரும் கூறும் பொருள் மாறுபடுகிறது.
மலர்மிசை ஏகினான் என்பது எந்தத் தெய்வத்தைக் குறிப்பிடுகிறது? எனப் பொருள் கண்டறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்  1) பகவன், 2)வாலறிவன், 3)மலர்மிசை ஏகினான், 4)வேண்டுதல் வேண்டாமையிலான், 5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், 6) பொறிவாயில் ஐந்தவித்தான், 7) தனக்குவமை இல்லாதான், 8)அறவாழி அந்தணன், 9)எண்குணத்தான், 10) பிறவிப்பெருங்கடலைக் கடந்துள்ள இறைவன் எனப் பத்துக் குறட்பாக்களும்  தெய்வங்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகின்றன.  5ஆவது குறளிலும் 10ஆவது குறளிலும் இறைவன் என்ற பெயர் உள்ளது.  மற்ற 8 குறட்பாக்களிலும் வேறுவேறு பண்பாகுபெயர்கள் உள்ளன. இக் குறட்பாக்களில் பெயர்ச் சொற்கள் இடம்பெறாமல், பண்பாகுபெயர்கள் உள்ள காரணத்தினால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து,  சிவன் என்போர் ஒருசாரார், திருமால் என்போர் ஒருசாரார், அருகன் என்போர் ஒருசாரார்.  ஏசு என்கின்றர் மற்றொரு சாரார்.  திருக்குறள் தமிழில் எழுதப்பெற்றிருந்தாலும், தமிழ்படித்த பேரறிஞர்கள் ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனை சார்ந்து வெவ்வேறு பொருள் கூறி வருகின்றனர்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வாழ்த்தப் பெறும் கடவுள் யார்?  என்ற வினாவிற்கு முடிந்தமுடிபான பொருள்தான் என்ன?

பாயிரம் போற்றும் தெய்வங்கள்.
திருக்குறள் பாயிரம் நான்கு அதிகாரங்களால் ஆனது.  இந்த நான்கு அதிகாரங்களும் நான்கு திசை தெய்வங்களை வணங்கி எழுதப் பெற்றுள்ளன.  1) கடவுள் வாழ்த்தானது கிழக்கு திசைதெய்வ வாழ்த்து ஆகும். 2) வான்சிறப்பானது மேற்கு திசைதெய்வ வாழ்த்து ஆகும். 3) நீத்தார்பெருமையானது தெற்கு திசைதெய்வ வாழ்த்து ஆகும். 4) அறன்வழியுறுத்தலானது வடதிசை தெய்வ வாழ்த்து ஆகும்.

padmanabhaswamy-golden-statue.jpg
கடவுள் வாழ்த்து
கடவுள்வாழ்த்து அதிகாரமானது கிழக்குதிசைக்கான வாழ்த்தாகப் பாடப் பெற்றுள்ளதால்,  கடவுள் வாழ்த்து அதிகாராத்தில் உள்ள ஒவ்வொரு குறளும் கிழக்குதிசைக்கான வெவ்வேறு தெய்வத்தைப் போற்றுவதாக உள்ளன.
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் - 3)
மலர்மிசை ஏகினான் என்பது எந்தத் தெய்வத்தைக் குறிக்கும்?
மலர் = தாமரை
மிசை = மேலே
ஏகினான் = சென்று சேர்ந்தவன்
என்பதால்,  மலர்மிசை ஏகினான் என்பது அயன் என்ற பிரம்மாவைக் குறிக்கிறது.  மலர்மிசை ஏகினான் என்பதை “மலர்மிசை முதல்வன்” எனப் பரிபாடலில் நல்லந்துவனாரும் பாடியுள்ளார்.  எனவே  மலர்மிசை ஏகினான் என்பது அயன் என்ற பிரம்மாவைக் குறிக்கும் என்ற பொருளே  ஏற்புடையதாகும்.
https://thirukkural-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html

அன்பன்
கி. காளைராசன்

கற்றவை -
பரிபாடல்  - 8
செவ்வேள் - பாடியவர் : நல்லந்துவனார்
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,

பொருள் -
இந்த மண்ணுலகத்தில் - மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும், அந்தப் பிரமனிடத்திலிருந்து தோன்றி
உலகின் இருளை அகற்றிய சூரியர் பன்னிருவரும்,
தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும்,
-----------------------------
மலர் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு .
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - குறள்:1 3/1
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் - குறள்:60 5/1
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது - குறள்:65 10/1
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் - குறள்:112 2/1

மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின் - குறள்:112 9/1
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - குறள்:115 2/1
நறு மலர் நாணின கண் - குறள்:124 1/2
நறு மலர் தண் கோதாய் நட்டார்க்கு நட்டார் - நாலடி:21 9/1
நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய் - நாலடி:27 6/1
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள் - நாலடி:40 3/2
புது மலர் ஒக்கும் நிறம் - நான்மணி 0/4
மையால் தளிர்க்கும் மலர் கண்கள் மால் இருள் - நான்மணி 35/1
நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய - நான்மணி 45/1
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா - இன்னா40 37/1
கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று - கார்40 9/1
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற - ஐந்70:4 46/3
முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி - ஐந்50:1 6/1
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து - ஐந்50:2 15/1
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் - திணை150:2 60/3
கழுநீர் மலர் கண்ணாய் கெளவையோ நிற்க - திணை50:2 11/1
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும் - திணை50:4 35/1
தே மலர் நீலம் பிணையல் செறி மலர் - திணை50:4 40/3
தே மலர் நீலம் பிணையல் செறி மலர்   தாமரை தன்னையர் பூ - திணை50:4 40/3,4
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணை50:5 47/2
நீர் சால் கரகம் நிறைய மலர் அணிந்து - ஆசாரக் 46/3
நீர் வரையவாம் நீர் மலர் - பழ 381/4
மை தக நீண்ட மலர் கண்ணாய் தீது அன்றே - சிறுபஞ் 97/3
நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி - கைந்:1 12/1
குருதி மலர் தோன்றி கூர் முகை ஈன - கைந்:3 26/1
தட மலர் கோதையாய் தங்கார் வருவர் - கைந்:3 36/3
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய் - கைந்:5 51/1
-------------------------------------------
மிசை என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு.
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - குறள்:1 3/1
நில மிசை நீடு வாழ்வார் - குறள்:1 3/2
மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை - நாலடி:3 1/1
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை - நாலடி:3 1/2
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை/ துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் - நாலடி:3 1/2,3
நிலவார் நில மிசை மேல் - நாலடி:3 2/4
கல் ஏர் புறவில் கவினி புதல் மிசை /  முல்லை தளவொடு போது அவிழ எல்லி - ஐந்70:2 24/1,2
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி - ஐந்50:1 10/3
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம் - திணை150:1 3/2
நில்லார் தாம் கட்டில் மிசை - ஆசாரக் 87/3
நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை / காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் - பழ 349/2,3
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் இசை கொல்லார் - சிறுபஞ் 46/2
-------------------------------------------------------
நன்றி
1) தொடரடைவுகள் http://tamilconcordance.in
2) பாடல்கள் sangacholai.in

Innamburan S.Soundararajan

unread,
Sep 29, 2019, 12:35:12 PM9/29/19
to vallamai, thiruppuvanam, Kalai Email
தரமுயர்ந்த கட்டுரை. 'மலர்மிசை ஏகினான் என்பது அயன் என்ற பிரம்மாவைக் குறிக்கும் என்ற பொருளே  ஏற்புடையதாகும்.' என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். தெய்வ வழிபாட்டின் அலை வரிசை வேறு. அதுவும் திருவள்ளுவர் போன்றோர் கடவுள் வாழ்த்தை சாதி மத முள்வேலிகளை களையெடுத்துத்தான், மலரை விகசிக்கவைத்து எழுதுவார்கள். உங்களுக்கு அம்மாவின் ஆத்மதரிசனம் நினைவில் இருக்கலாம். அவர் விஷ்ணுவுக்கு பிரம்மாவின் துணை தேடுகிறார். எதற்கு? பூவுலகைப் படைக்க.
அன்புடன்,
இன்னம்பூரான்

seshadri sridharan

unread,
Sep 30, 2019, 12:17:16 AM9/30/19
to வல்லமை
ஆயிரம் ஆரச்சக்கரத்தை(சஹஸ்ரார) தான் ஆயிரம் இதழ் தாமரை என்பர். அந்த ஆயிரம்  ஆரச் சக்கரத்தில் தன்  குண்டலினியை கொண்டு சேர்த்தவன் தாளினை வணங்குவார்க்கு என்பதே அதன் பொருள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFh3n%3D_rvgFtx6yK6r%3DZ%2BjnTW5b5_VKE5Z%2BrdTEX%3DxU-5kdcEw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 30, 2019, 4:15:22 AM9/30/19
to மின்தமிழ், vallamai

On Sun, Sep 29, 2019 at 3:35 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Sunday, September 29, 2019 at 9:21:59 AM UTC-7, கி. காளைராசன் wrote:
திருவள்ளுவன் வணங்கிய  மலர்மிசை ஏகியோன் யார்?

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் திருவள்ளுவர் எந்தக் கடவுளை வணங்கியுள்ளார்?  இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒருவாராக விளக்கம் அளிக்கின்றனர்.   திருக்குறளின் சொற்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை யென்றாலும், ஒவ்வொரு அறிஞரும் கூறும் பொருள் மாறுபடுகிறது.
மலர்மிசை ஏகினான் என்பது எந்தத் தெய்வத்தைக் குறிப்பிடுகிறது? எனப் பொருள் கண்டறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்  1) பகவன், 2)வாலறிவன், 3)மலர்மிசை ஏகினான், 4)வேண்டுதல் வேண்டாமையிலான், 5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், 6) பொறிவாயில் ஐந்தவித்தான், 7) தனக்குவமை இல்லாதான், 8)அறவாழி அந்தணன், 9)எண்குணத்தான், 10) பிறவிப்பெருங்கடலைக் கடந்துள்ள இறைவன் எனப் பத்துக் குறட்பாக்களும்  தெய்வங்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகின்றன.  5ஆவது குறளிலும் 10ஆவது குறளிலும் இறைவன் என்ற பெயர் உள்ளது.  மற்ற 8 குறட்பாக்களிலும் வேறுவேறு பண்பாகுபெயர்கள் உள்ளன. இக் குறட்பாக்களில் பெயர்ச் சொற்கள் இடம்பெறாமல், பண்பாகுபெயர்கள் உள்ள காரணத்தினால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து,  சிவன் என்போர் ஒருசாரார், திருமால் என்போர் ஒருசாரார், அருகன் என்போர் ஒருசாரார்.  ஏசு என்கின்றர் மற்றொரு சாரார்.  
 
"பகவன்" என்ற இந்த ஒரு சொல்லில் இருக்கிறது வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதன் பொருள்.
ஆகவே வள்ளுவர் காலத்தின் பொதுவழக்கில் யாரை பகவன் என மக்கள் சுட்டினார்கள் என விடை கண்டால் பொருளில்  தெளிவு ஏற்படும். 
காலப்போக்கில் பகவன் என்பதற்கு  நிகண்டுகளில் அத்தனை கடவுளர் பெயரையும் குறிப்பதிலிருந்து அச்சொல்லின் பொருள் மாறி பொதுத்தன்மையை ஏற்றுக் கொண்டது என்பது எனது கருத்து.
ஏசு வரை குறிப்பிட்ட பொழுது புத்தரையும் இந்த வரிசையில் இணைத்திருக்கலாம். 

இந்தியாவின் சமய நெறிகளுக்கு ஒரு நீண்ட நெடிய மரபு உண்டு. வள்ளுவர் கடவுளை வர்ணிக்கும் தொடர்கள்
எல்லாமே தமிழ்ச் சமணர்கள் தங்கள் இலக்கியங்களில் தொடர்ச்சியாய் ஆண்ட தொடர்கள் தாம்.
அவ்வகையில் “மலர்மிசை ஏகினான்” என்பது சமண கடவுள் என்பது வெள்ளிடை மலை. சமணர்கள் தாம்
வள்ளுவர் குறளை “எம் ஓத்து” என்று ஏத்தியவர்கள். 

“மலர்மிசை ஏகினான்” என்ற தொடரை வள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.
அதன் பொருளை அறிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் உள்ள சமணத் தமிழ் இலக்கியங்கள் கைகொடுக்கின்றன.
ரா. பானுகுமார் எழுதிய கட்டுரை காண்மின்:

அதே போல, வருணன் சமயம் பேசப்படுகிறது பட்டினப்பாலையில் என்றறிய நூற்றாண்டு தோறும்
உள்ள செவ்வியல் இலக்கியங்களை - தமிழ், வடமொழி - படித்தால் அறியலாகும். 

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 30, 2019, 9:52:58 AM9/30/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Sun, Sep 29, 2019 at 10:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

ஐந்து நிமிட தேடலில் சிலப்பதிகாரத்தில் மாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு கிடைக்கிறது.

சிலம்பின் காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

என்ன மாதிரி ஆராய்ச்சியை அறிஞர்கள் மேற்கொள்கிறார்கள் என தெரியவில்லை

This is known in History of Tamil Literature as Gajabahu Synchronism, first propsed by V. Kanakasabai Pillai (Ceylon/Chennai) more than a century ago.

இப்போது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிலம்பு என எந்தத் தமிழறிஞரும் கூறுதல் இல்லை.
பொதுவாக, கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படூவிட்டது.
சிலம்பு கதாபாத்திரப் பெயர்கள் அமைந்த முறைபற்றி எழுதியுள்ளேன்.
அகத்தியர், காதம், ... போன்றன மிகுந்து வருதலால் சங்க காலம் மருவினபோது
எழுதியது. களப்பிரர் காலப் படைப்பு என்றும் கொள்ளக்கூடும்.
பேராசிரியர்கள் கோவிந்தன் (கேரளா), கண்மணி (சிவகாசி), ... போன்றோர் கி.பி. 7-ஆம் 
நூற்றாண்டு சிலம்பு என்பர்.

நா. கணேசன்

ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது,
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து,
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால்,
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2Bv%2B1Tv7Pnzm%2BpLzFWRj3jMYixswtB4JVB-b4O%2B14B5Aa31YYg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Sep 30, 2019, 10:30:15 AM9/30/19
to mintamil, vallamai
எங்களுக்கு எல்லாம் முன்னர் வையாபுரிப்பிள்ளை சிலப்பதிகாரம் 7ம் நூற்றாண்டு என்று கூறியுள்ளார்.
சக  

N. Ganesan

unread,
Sep 30, 2019, 10:46:40 AM9/30/19
to மின்தமிழ், vallamai
On Mon, Sep 30, 2019 at 9:30 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
எங்களுக்கு எல்லாம் முன்னர் வையாபுரிப்பிள்ளை சிலப்பதிகாரம் 7ம் நூற்றாண்டு என்று கூறியுள்ளார்.
சக  

ஆமாம். சங்க காலம், சங்கத் தமிழ் பெயர் வைத்தவர் அல்லவா அவர்?
அவரது பேரன் நாதன் பிள்ளை (மனைவி டெல்லிக்காரர்) எங்கள் வீட்டருகே வசிக்கிறார். நல்ல நண்பர்.

நா. கணேசன்
 
நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2019, 11:26:10 AM9/30/19
to mintamil, vallamai, housto...@googlegroups.com
On Mon, 30 Sep 2019 at 19:22, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sun, Sep 29, 2019 at 10:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

ஐந்து நிமிட தேடலில் சிலப்பதிகாரத்தில் மாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு கிடைக்கிறது.

சிலம்பின் காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

என்ன மாதிரி ஆராய்ச்சியை அறிஞர்கள் மேற்கொள்கிறார்கள் என தெரியவில்லை

This is known in History of Tamil Literature as Gajabahu Synchronism, first propsed by V. Kanakasabai Pillai (Ceylon/Chennai) more than a century ago.

இப்போது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிலம்பு என எந்தத் தமிழறிஞரும் கூறுதல் இல்லை.
பொதுவாக, கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படூவிட்டது.
ஐயா,
கீழடி அகழாய்வு முடிவின்படி சங்ககாலம் என்பது கி.மு.6ஆம் நூற்றாண்டு என மாறுவதால்,  சிலம்பின் காலக்கணிப்பு மாறுபடுமா? 
இல்லை சிலம்பின் பழைய காலக்கணப்பில் மாற்றம் இல்லையா?

அன்பன்
கி. காளைராசன்
 
சிலம்பு கதாபாத்திரப் பெயர்கள் அமைந்த முறைபற்றி எழுதியுள்ளேன்.

வேந்தன் அரசு

unread,
Sep 30, 2019, 11:26:51 AM9/30/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

திங்., 30 செப்., 2019, பிற்பகல் 7:22 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Sun, Sep 29, 2019 at 10:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

ஐந்து நிமிட தேடலில் சிலப்பதிகாரத்தில் மாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு கிடைக்கிறது.

சிலம்பின் காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

என்ன மாதிரி ஆராய்ச்சியை அறிஞர்கள் மேற்கொள்கிறார்கள் என தெரியவில்லை

This is known in History of Tamil Literature as Gajabahu Synchronism, first propsed by V. Kanakasabai Pillai (Ceylon/Chennai) more than a century ago.

இப்போது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிலம்பு என எந்தத் தமிழறிஞரும் கூறுதல் இல்லை.
பொதுவாக, கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படூவிட்டது.
சிலம்பு கதாபாத்திரப் பெயர்கள் அமைந்த முறைபற்றி எழுதியுள்ளேன்.
அகத்தியர், காதம், ... போன்றன மிகுந்து வருதலால் சங்க காலம் மருவினபோது
எழுதியது. களப்பிரர் காலப் படைப்பு என்றும் கொள்ளக்கூடும்.
பேராசிரியர்கள் கோவிந்தன் (கேரளா), கண்மணி (சிவகாசி), ... போன்றோர் கி.பி. 7-ஆம் 
நூற்றாண்டு சிலம்பு என்பர்.

கனகவிசயர் குப்தர்களாகவுமிருக்கலாம். காளிதாசனின் சாகுந்தலத்தை ஒற்றி இளங்கோ சிலப்பதிகாரம் எழுதியிருக்கலாம்.

The Gupta Empire was an ancient Indian empire existing from the mid-to-late 3rd century CE to 543 CE. At its zenith, from approximately 319 to 543 CE, it covered much of the Indian subcontinent.[3] This period is considered as the Golden Age of India by some historians

kanmani tamil

unread,
Sep 30, 2019, 11:58:57 AM9/30/19
to vallamai, mintamil
20ம் நூற்றாண்டில் சாண்டில்யன், அகிலன் முதலியோர் சோழர் கால வரலாற்று நாவலை எழுதியது போல 7ம் நூற்றாண்டில் இளங்கோவடிகள்  தனக்கு முந்தைய காலச் சூழலைப் படைத்து ஒரு கற்பனைக் கதையை மிக அழகாக எழுதி .......அதுவெற்றிகரமான  நாடகமாகவும் நடிக்கப்பட்டுள்ளமை தெரிகிறது.  
சக   

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jA1O1GXKFvrEeKz%3DU6gHECML_phDNQPFUDtSbRDJQupQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 30, 2019, 12:13:38 PM9/30/19
to மின்தமிழ், vallamai
On Mon, Sep 30, 2019 at 10:58 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
20ம் நூற்றாண்டில் சாண்டில்யன், அகிலன் முதலியோர் சோழர் கால வரலாற்று நாவலை எழுதியது போல 7ம் நூற்றாண்டில் இளங்கோவடிகள்  தனக்கு முந்தைய காலச் சூழலைப் படைத்து ஒரு கற்பனைக் கதையை மிக அழகாக எழுதி .......அதுவெற்றிகரமான  நாடகமாகவும் நடிக்கப்பட்டுள்ளமை தெரிகிறது.  
சக   

குப்தர் அரசவையில் இருந்த மகாகவி காளிதாசர் மாளவிகாக்னிமித்திரம் என்னும் நாடகம் இயற்றினார்.
அது சுங்க வமிசப் பேரரசன் புஷ்யமித்ரன் பற்றியது. யாகங்களை அதிகம் வளர்த்ததால் அக்கினிமித்திரன் எனப் பெயர்
கொடுத்தார் காளிதாசர். https://en.wikipedia.org/wiki/M%C4%81lavik%C4%81gnimitram

இதே போல தெருப்பாடகர்களை கதாபாத்திரங்களாக வைத்து தமிழ்ப் பெருங்கவிகள் அரசர்கள், வேளிர்களுக்காக
இயற்றியவை சங்கப் பாடல்களில் பல என்ற கருத்துமுண்டு. திணைப்புலம் ஐந்து பற்றிய கோட்பாடு உருவாக்கியபின்னர்.

நா. கணேசன்
 
On Mon, Sep 30, 2019 at 8:56 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

திங்., 30 செப்., 2019, பிற்பகல் 7:22 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Sun, Sep 29, 2019 at 10:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

ஐந்து நிமிட தேடலில் சிலப்பதிகாரத்தில் மாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு கிடைக்கிறது.

சிலம்பின் காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

என்ன மாதிரி ஆராய்ச்சியை அறிஞர்கள் மேற்கொள்கிறார்கள் என தெரியவில்லை

This is known in History of Tamil Literature as Gajabahu Synchronism, first propsed by V. Kanakasabai Pillai (Ceylon/Chennai) more than a century ago.

இப்போது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிலம்பு என எந்தத் தமிழறிஞரும் கூறுதல் இல்லை.
பொதுவாக, கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படூவிட்டது.
சிலம்பு கதாபாத்திரப் பெயர்கள் அமைந்த முறைபற்றி எழுதியுள்ளேன்.
அகத்தியர், காதம், ... போன்றன மிகுந்து வருதலால் சங்க காலம் மருவினபோது
எழுதியது. களப்பிரர் காலப் படைப்பு என்றும் கொள்ளக்கூடும்.
பேராசிரியர்கள் கோவிந்தன் (கேரளா), கண்மணி (சிவகாசி), ... போன்றோர் கி.பி. 7-ஆம் 
நூற்றாண்டு சிலம்பு என்பர்.

கனகவிசயர் குப்தர்களாகவுமிருக்கலாம். காளிதாசனின் சாகுந்தலத்தை ஒற்றி இளங்கோ சிலப்பதிகாரம் எழுதியிருக்கலாம்.

The Gupta Empire was an ancient Indian empire existing from the mid-to-late 3rd century CE to 543 CE. At its zenith, from approximately 319 to 543 CE, it covered much of the Indian subcontinent.[3] This period is considered as the Golden Age of India by some historians

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jA1O1GXKFvrEeKz%3DU6gHECML_phDNQPFUDtSbRDJQupQ%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsdq0jx5CMhLosxSBsRj2hacPFMEZArpH8OnheuaYXjoA%40mail.gmail.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2019, 8:27:49 PM9/30/19
to mintamil, vallamai, housto...@googlegroups.com
வணக்கம் ஐயா.

On Mon, 30 Sep 2019 at 20:56, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

திங்., 30 செப்., 2019, பிற்பகல் 7:22 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Sun, Sep 29, 2019 at 10:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

ஐந்து நிமிட தேடலில் சிலப்பதிகாரத்தில் மாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு கிடைக்கிறது.

சிலம்பின் காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

என்ன மாதிரி ஆராய்ச்சியை அறிஞர்கள் மேற்கொள்கிறார்கள் என தெரியவில்லை

This is known in History of Tamil Literature as Gajabahu Synchronism, first propsed by V. Kanakasabai Pillai (Ceylon/Chennai) more than a century ago.

இப்போது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிலம்பு என எந்தத் தமிழறிஞரும் கூறுதல் இல்லை.
பொதுவாக, கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படூவிட்டது.
சிலம்பு கதாபாத்திரப் பெயர்கள் அமைந்த முறைபற்றி எழுதியுள்ளேன்.
அகத்தியர், காதம், ... போன்றன மிகுந்து வருதலால் சங்க காலம் மருவினபோது
எழுதியது. களப்பிரர் காலப் படைப்பு என்றும் கொள்ளக்கூடும்.
பேராசிரியர்கள் கோவிந்தன் (கேரளா), கண்மணி (சிவகாசி), ... போன்றோர் கி.பி. 7-ஆம் 
நூற்றாண்டு சிலம்பு என்பர்.

கனகவிசயர் குப்தர்களாகவுமிருக்கலாம். காளிதாசனின் சாகுந்தலத்தை ஒற்றி இளங்கோ சிலப்பதிகாரம் எழுதியிருக்கலாம்.
சங்கப்பாடல்கள் அனைத்திலும் வையை என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
பக்திப்பாடல்கள் அனைத்திலும் வைகை என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்தில் வையை என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது, வைகை என்ற சொல் இடம் பெறவில்லை.
எனவே சொற்களின் அடிப்படையில் சிலம்பின் காலத்தைக் கணித்தால்,  இதை சங்ககாலத்தில் கி.மு.6க்குப் பின்னாளும் கி.மு.3க்கு முன்னாளும் கொண்டு வைக்க வேண்டியுள்ளது ஐயா.

அன்பன்
கி.காளைராசன்
 
The Gupta Empire was an ancient Indian empire existing from the mid-to-late 3rd century CE to 543 CE. At its zenith, from approximately 319 to 543 CE, it covered much of the Indian subcontinent.[3] This period is considered as the Golden Age of India by some historians

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 30, 2019, 11:42:25 PM9/30/19
to vallamai
பேராசிரியர் புலவர் செல்லன் கோவிந்தன் பாலக்காடு அரசு கல்லூரியில் பணியாற்றியவர். 

சிலப்பதிகாரம் 11ம் நூற்றாண்டுக் காப்பியம் என்பார். அவரது நூலில் அதற்கு நிறைய சான்றாதாரங்களும் காட்டியிருக்கிறார். 

அவர் பயன்படுத்திய மொழிநடை  ஏற்றுக் கொள்ள இயலாதது. 

சக 
கைபேசியிலிருந்து. ..

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFh3n%3D-z1%2BEGyLeR5_x-C8AibY5X1ap9da-P%3DU49Dx3vQh9bog%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Oct 1, 2019, 11:01:48 AM10/1/19
to vallamai, mintamil

திங்., 30 செப்., 2019, பிற்பகல் 9:28 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
20ம் நூற்றாண்டில் சாண்டில்யன், அகிலன் முதலியோர் சோழர் கால வரலாற்று நாவலை எழுதியது போல 7ம் நூற்றாண்டில் இளங்கோவடிகள்  தனக்கு முந்தைய காலச் சூழலைப் படைத்து ஒரு கற்பனைக் கதையை மிக அழகாக எழுதி .......அதுவெற்றிகரமான  நாடகமாகவும் நடிக்கப்பட்டுள்ளமை தெரிகிறது.  

அந்தக்காலத்தில் வரலாற்று நூல்களும் இருந்துள்ளன என உணரலாம். கரிகாலன், செங்குட்டுவன், கயவாகு, நூற்றுவகன்னர் போன்றவர்களின் வரலாறு உட்பட.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Oct 6, 2019, 9:43:08 AM10/6/19
to மின்தமிழ், vallamai

On Sun, Oct 6, 2019 at 6:36 AM கி. காளைராசன் <kalair...@gmail.com> wrote:
மோட்டு நாண்மலர் மேலவன் முந்தைநாள்
நீட்டு மால்பதத் தாட்டிய நீத்தமாய்க்
கோட்டு அகத்தியன் கும்பப் புனலுமாய்
நாட்டும் யார் இது நாடி இனிப் பாடுவாம்.
(கூடற் புராணம் - நாட்டுப் படலம் - பாடல் எண் 1)

மோட்டு நாண்மலர் மேலவன் = மலம்மிசை ஏகியவன் = அயன் (பிரம்மன்)

அன்பின் காசிஸ்ரீ காளைராஜன்,

”மலம்மிசை ஏகியவன் = அயன் (பிரம்மன்)” - இது சரியா எனப் பாருங்கள். இழிவுப் பொருளை பிரமன் அடைகிறான்
எனத் தோன்றுகிறது.

வள்ளுவரின் மலர்மிசை ஏகினான் என்பது தீர்த்தங்கர ஸ்வாமியை. திருமூர்த்தி என்பர் சமணர்கள் (சிந்தாமணி).

நா. கணேசன்
 
அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 6, 2019, 11:09:08 AM10/6/19
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.

On Sun, 6 Oct 2019 at 19:13, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sun, Oct 6, 2019 at 6:36 AM கி. காளைராசன் <kalair...@gmail.com> wrote:
மோட்டு நாண்மலர் மேலவன் முந்தைநாள்
நீட்டு மால்பதத் தாட்டிய நீத்தமாய்க்
கோட்டு அகத்தியன் கும்பப் புனலுமாய்
நாட்டும் யார் இது நாடி இனிப் பாடுவாம்.
(கூடற் புராணம் - நாட்டுப் படலம் - பாடல் எண் 1)

மோட்டு நாண்மலர் மேலவன் = மலம்மிசை ஏகியவன் = அயன் (பிரம்மன்)

அன்பின் காசிஸ்ரீ காளைராஜன்,

”மலம்மிசை ஏகியவன் = அயன் (பிரம்மன்)” - இது சரியா எனப் பாருங்கள். இழிவுப் பொருளை பிரமன் அடைகிறான்
எனத் தோன்றுகிறது.

வள்ளுவரின் மலர்மிசை ஏகினான் என்பது தீர்த்தங்கர ஸ்வாமியை. திருமூர்த்தி என்பர் சமணர்கள் (சிந்தாமணி).

நா. கணேசன்
தட்டச்சுத் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா.
தவறைத் திருத்தி  விட்டேன்.

அன்பன்
கி.காளைரசான்
Reply all
Reply to author
Forward
0 new messages