சிவகாசி அருகே குடைவரைக் கோயில்கள்

100 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 20, 2021, 12:21:01 AM7/20/21
to vallamai
சிவகாசியிலிருந்து 22கி.மீ. தொலைவில் இருப்பது செவல்பட்டி. அவ்வூர்க் குன்றில் இருக்கும் குடைவரையில் இன்று வணங்கப்படும் கடவுளர் எல்லாம் காலத்திற்கேற்ப மாறி இருந்தாலும்  அடிப்படையில் அது ஒரு சமணக் குடைவரைக் கோயில் என்று ஐயமின்றித் தெரிகிறது. 


புடைப்புச் சிற்பமாகக் காணப்படுவது ஒரு அடையாளம் என்று கொள்ளலாம். 
திருப்பரங்குன்றம் கருவறை, பிள்ளையார் பட்டிக் கருவறை போன்ற குடைவரைகளிலும் புடைப்புச் சிற்பங்கள் தாம். 
மும்பையிலிருந்து எலிபென்டா குகைக்குச் சென்று பார்த்தால் அங்கும் ஒரு பிள்ளையார் புடைப்புச் சிற்பமே உள்ளது என்பதை இங்கே நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

சக 

kanmani tamil

unread,
Aug 8, 2021, 5:41:55 AM8/8/21
to vallamai
விருதுநகர் மாவட்டத்தில் அளகாபுரி அருகே முதன்மைச் சாலையிலிருந்து 5கி.மீ. தொலைவில் இருக்கும் பாண்டியர் காலக் குடைவரை மலைக்கொழுந்தீஸ்வரர் எழுந்தருளிய மொட்டை மலை. அடிவாரத்தில் பெயரிலேயே வரலாற்றுச் சிறப்பான கதையைத் தாங்கியுள்ள மூவரை வென்றான் என்னும் ஊர். 

5ம் நூற்றாண்டில் இருந்து 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஊர். 

தண்ணீருக்காக மனிதர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அரசியல் புறநானூறு தொடங்கி இன்று வரை...

சிவகாசியிலிருந்து தூத்துக்குடி போகும் வழியில் 'எப்போதும் வென்றான்' என்ற பெயரில் ஒரு ஊரை மாணவப் பருவத்தில் கடக்கும் போதெல்லாம் 'இதில் ஏதோ வரலாறு பொதிந்துள்ளது' என்று எண்ணியதுண்டு. 

இப்போது மூவரை வென்றான் ஊர் தொடர்பான கதையைத் தெரிந்து கொண்டது... நாட்டார் வழக்காற்றின் உட்கருவான வரலாறை இனம் காட்டுகிறது. 

மலையின் மேலிருக்கும் ஊற்றுநீர் மலையடிவாரம் வரை கொண்டுவரப் பட்டுள்ள நேர்த்தி... வரலாற்றுக் காலத்தில் நீர்மேலாண்மையில் விஞ்சிய தமிழரின் உழைப்பையும் பெருமையையும் காட்டுகிறது.





சக 




kanmani tamil

unread,
Aug 8, 2021, 9:43:11 AM8/8/21
to vallamai
இந்தக் கோயிலில் உள்ள லிங்கத்தைப் போலவே தான் திருத்தங்கல் குன்றிலும் குடைவரையை ஒட்டி ஒரு லிங்கம் மலைப்பகுதியைச் செதுக்கியே அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடைவரையும் சமணம் சார்ந்தது. அதன் பிறகு 81ம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட திருப்பணிகள் கல்வெட்டுக்களில் உள்ளன. 

https://youtu.be/WUmIERQtH4E

kanmani tamil

unread,
Aug 8, 2021, 9:48:00 AM8/8/21
to vallamai
தவறு... 8ம் நூற்றாண்டில் இருந்து...

அது போலவே புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருக்கும் விநாயகர், முருகர் ஆடல்வல்லான் திருவுருவங்களும் காலத்தால் முற்பட்ட தன்மைக்குரிய அடையாளங்கள். 
சக 

kanmani tamil

unread,
Aug 14, 2021, 2:46:37 AM8/14/21
to vallamai
இக்கோயிலுக்கு நேரில் சென்று வந்த பள்ளித் தோழியின் பதிவு 


சக 

kanmani tamil

unread,
Feb 14, 2024, 1:52:37 AM2/14/24
to vallamai
20.07.2021 அன்று பதிவிட்ட செவல்பட்டி குடைவரைக் கோயில் பற்றி முகநூலில் வலம் வரும் செய்திகள்...

குகைக்குள் பாதிதூரம் சென்று செய்த பதிவு 


முறையான அடிப்படைக் கொள்கைகள் பற்றிய தெளிவு இன்றி அனுமானமாகச் சொல்லும் கருத்துக்கள்...

குகைக் கோயில்கள் சமணம் / பௌத்தம் சார்ந்தவை.
பல்லவர்க்கு முன்பே (கி.பி.6ம் நூற்றாண்டிற்கு முன்னரே) பாண்டியர் குடைவரைக் கோயில்களை வெட்டினர் என்ற கருத்து தொல்லியலாரின் கொள்கை ஆகும் (முனைவர் வேதாசலம் நேரில் கூறியது). 
தூண்களின் அமைப்பு காலத்தைக் கணிக்கத் துணை செய்யும் வலுவான ஆதாரம் ஆகும். தூணில் பிற்காலப் பாண்டியரின் சிற்பக்கலை அம்சங்கள் இருப்பது 10 / 11ம் நூற்றாண்டு வரை இங்கு வழிபாடும் திருப்பணியும் தொடர்ந்து உள்ளது எனக் காட்டுகிறது. 

 தொல்லியலாரின் முறையான
 ஆய்வு நடக்க வேண்டிய குகைகளுள் இதுவும் ஒன்று எனலாம். 

சக 

Reply all
Reply to author
Forward
0 new messages