எழுத்து - காரியவாகுபெயர் (நன்னூல், குறள் - தீர்த்தங்கரர் வாழ்த்தில்; தொல். எழுத்து அதிகாரம் என்னும் பெயரில்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
KMS > 'பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
> நான்முகன் தொழுதுநன் கியம்புவன் எழுத்தே'
> என்பதில், எழுத்து எவ்வாறு காரியவாகு பெயர் ஆயிற்று என்பதில் எனக்கு முழுத்தெளிவு கிடைக்கவில்லை, ஐயா.
ஆதியில் எழுதுதல் என்பது வரைதல். இன்றும் கன்னடம் எழுத மென்கலன்: வரைக (baraha) .
https://en.wikipedia.org/wiki/Baraha An early writer for Kannada.
https://web.archive.org/web/20040920085424/http://www.hindu.com/mp/2004/06/09/stories/2004060901060100.htm ’வரைக’ மென்கலன் உருவாக்கியவர்.
"எழுதுங்கால் கோல் காணா” என்னும் குறளில் இப் பழைய பொருள்தான் காண்கிறோம். சித்திரம் எழுதுதல். மடல் ஊரும்போது, ஒரு கொடியில் காதலியின் உருவை எழுதிப் பிடிப்பான். சித்திரம் எழுதியது தான் சிந்துவெளி குறியீடுகள். அப்போது உயிர், மெய் என்னும் மொழியின் அடிப்படையான ஒலியன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. (சிந்து எழுத்தைப் படிக்கிறேன் என்று கூறும் தமிழர்கள் இக்கருத்தைச் சிந்திக்கவேண்டும்.)
நன்னூல் எழுத்ததிகாரம் ஒலியன்களைப் பற்றிப் பேசுகிறது. மாத்திரை, வளி ...
https://tamiltutor.com/எழுத்துகளின்-பிறப்பு/எனவே, எழுத்ததிகாரக் கடவுள் வாழ்த்தில் கருவி ஒலி (மொழியில் உயிர், மெய் என்ற பகுப்பு, ...). எழுத்து அக் கருவியைக் காட்டுகிறது. எனவே, அது காரியம். காரியம் (எழுத்து), ஒலிகள் ஆகிய கருவிக்குப் பெயராக ஆதலால் காரியவாகுபெயர். காரைக்குடியில் தமிழன்னை கோயிலில் அமர்ந்திருக்க, வரித்தாய், ஒலித்தாய் இருபுறமும் சூழ நிற்கின்றனர்.
ஆக, முதலில் எழுத்து = சித்திரம். இந்த ஓவியக் குறியீடு பின்னால் உயிர், மெய் ஆகிய அக்ஷரங்களுக்கு பயன்படத் தொடங்கியது. மொழிக்கு அடிப்படையான உயிர், மெய் என்னும் ஒலிகளைக் குறிக்கும் காரியத்துக்கு எழுத்து (=ஓவியம்) ஆகிவரும் கருவி ஆவதால் எழுத்தைக் காரியவாகுபெயர் என்றனர்.
-----------------
நான் நேற்று எழுதியது. பல முன்னோர்கள் அறிவித்துள்ளமை இப்போது கண்டேன்.
மயிலைநாதர், நன்னூலின் முதல் உரையாசிரியர், எழுத்து, சொல் - கடவுள் வாழ்த்தில் வருவன ஆகுபெயர்கள் என முதலில் கூறியவர். பின்னர், சங்கரநமச்சிவாயர், ...
சோழவந்தான் (சோழாந்தகபுரம்) அரசஞ் சண்முகனார், திருக்குறள் ஆராய்ச்சி, 1908 (செந்தமிழ்) ஆய்விதழில் சொல்லியுள்ளார். பக். 387:
“அகர முதல - அகரமாகிய காரணத்தையுடையனவென்க. எழுத்தெல்லாம் - எழுத்தின் வகைகளெல்லாமென்க. எழுத்து ஒலிவடிவெழுத்தும், வரிவடிவெழுத்துமென இருவகைப்பட்டு அவை ஒவ்வொன்றும் பலவாகுமென்க. எழுத்து - தொழிற்பெயர். அஃதெழுதப்படும் இயல்பினவாய ஒலிவடிவையும் வரிவடிவையுமுணர்த்தலின் ஆகுபெயர்.”
https://books.google.com/books?id=YpG5AAAAIAAJ&(பேரா. கு.ஞா. சோழவந்தான் ஊரினர்.)
இலக்கணக்கடல் தி. வே. கோபாலையர்,
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/D04.htmlஎழுத்து : நான்மடியாகுபெயர் ஆதல் -
தன் பொருளை விட்டுத் தன்னுடன் தொடர்புடைய பொருளைச் சுட்டும் பெயரே ஆகுபெயர். ஒரு பெயர் முறையே விட்டு விட்டு நான்காவதாக ஒரு பொருளைச் சுட்டுதல் நான்மடியாகு பெயராம். எ-டு : எழுத்து - இது தொழிற்பெயர்; ஒலியை யுணர்த்துதலின் ஆகுபெயர் ஆகிறது. இது முதல்மடி. அடுத்து இதனையும் விட்டு, ஒலியினது இலக்கணம் என்றா வது இருமடி. இதனையும் விடுத்து, அவ்விலக்கணம் கூறும் நூலையுணர்த்துதல் மும்மடி. அதனையும் விடுத்து, இங்ஙனம் கூறிற்று எழுத்து - இங்ஙனம் அறிவித்தது எழுத்து - எனக் கருமகருத்தாப்பொருளையும் கருவிக்கருத்தாப் பொருளை யும் உணர்த்துவது நான்மடியாகுபெயராம். (கூறப் படும் எழுத்துஇலக்கணம் கருமம் ஆகிய செயப்படுபொருள் ஆதலும், எழுத்திலக்கணத்தால் செய்தி அறிவிக்கப்படுதலின் அது கருவியாதலும், எழுத்துக் கூறிற்று - எழுத்து அறிவித்தது - என்புழி முறையே ஆமாறு அறிந்து கொள்க.) (இ. கொ. 86)
பொள்ளாச்சி நா. மகாலிங்கம், பழைய அச்சு நூலைப் பெற்று (பஞ்சமரபு கண்டுபிடித்த பெரும்பும்புலவர் போன்றோரிடம்) இலக்கண விளக்கம் பதிப்பிக்க உதவினார். தி. வே. கோ. இலக்கணக்கொத்து, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக வெளிவந்தது. அதில், இ.கொ. நூலும், (இலக்கணக்கடல் உரையும்):
https://www.tamilvu.org/slet/l4330/l0H00uri.jsp?pglink=368&pno=242”எழுத்து என்னும் தொழிற்பெயர் அப்பொருளைவிட்டுப் பால்பகா அஃறிணைப் பொதுப்பெயராய்’ அப்பொருளை விட்டு ஓவியம் முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை உணர்த்தும் சிறப்புப் பெயராய். அப்பொருளை விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்வொலியினது இலக்கணத்தை உணர்த்தும் இருமடி ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடி ஆகுபெயராய். அப்பொருளை விட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்து எழுத்து’ எனக்கருமக் கருத்தாவையும், கருவிக்கருத்தாவையும் உணர்த்தும் நான்மடி ஆகுபெயராய் நின்று பல பொருள்பட்டது காண்க. இங்ஙனம் பலபல தொழிற்பெயர்க் குணங்களை விரிக்கின் பெருகும். அமைக.
[வி-ரை:
எழுதப்படுவது எழுத்து - தொழிற்பெயர்.
எழுதப்பட்ட வடிவம் எழுத்து - பொருட்பொதுப் பெயர்.
எழுதப்பட்ட அகரம் முதலியன - சிறப்புப் பெயர்.
அகரம் முதலியவற்றின் ஒலி வடிவம் - ஆகுபெயர்.
அகரம் முதலியவற்றின் ஒலியிலக்கணம் - இருமடி ஆகுபெயர்.
அவ்வொலியிலக்கணம் கூறும் நூல் - மும்மடி ஆகுபெயர்.
எழுத்துக் கூறப்பட்டது என எழுத்திலக்கணம் கூறும் நூல் கருமக்கருத்தா ஆதலும், எழுத்து அறிவித்தது என எழுத்திலக்கணம் கூறும் நூல் கருவிக்கருத்தாவாதலும் நான்மடி ஆகுபெயர் என்பது விளக்கப்பட்டது.]”
நா. கணேசன்