இளைஞர் எழுச்சி நாள்
நேர்மை,எளிமை, உழைப்பு, தன்னம்பிக்கை இவையே அப்துல்கலாமின் வெற்றிக்கு காரணம்
வருமான வரி அதிகாரி பேச்சு
கவிதை,பேச்சு, பொன்மொழிகள் கூறி அசத்தல்
அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள்
பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்கள் அப்துல்கலாமின் ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள்.
அப்துல் கலாமின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டிசெல்வம் , சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.காரைக்குடி வருமான வரி அதிகாரி சுப்பிரமணியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில் , எல்லோருடைய பிறந்த நாளும் கொண்டாடப்படுவதில்லை. ஒரு சில சிறந்த மனிதர்களின் பிறந்த நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சரித்திரம் படைத்தவர்களின் பிறந்த நாள் மட்டுமே உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவர் நம் நாட்டின் முன்னாள் பதினோராவது ஜனாதிபதி ஆவார் . அப்துல் கலாமின் பிறந்த நாளை உலக இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம் .
நம்முடைய பிறந்த நாள்களை நம்முடைய வீட்டில் உறவினர்கள், நம்முடைய நண்பர்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர். நம்முடைய பிறந்த நாளும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்றால் நாம் சரித்திரம் படைக்க வேண்டும்.
நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் அவர்கள் கூறியது மாதிரியே அவருடைய வாழ்க்கை அமைந்தது.
அப்துல் கலாம் அவர்களின் சிறந்த குணங்களை வைத்து அவருடைய பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாம் கனவு காண வேண்டும் என்றால் தேவையான அளவு மட்டுமே தூங்க வேண்டும்.
நாம் எதைப்பற்றி சிந்திக்கிறோமா அது மட்டுமே கனவாக வரும். நாம் தீபாவளி புது ஆடை அணிந்தால் அதைப்பற்றி மட்டுமே கனவு வரும்.
நம்ம மனதில் பதிவது மட்டுமே இரவில் கனவாக வரும். நம்முடைய சிந்தனை தான் கனவாக வரும். நாம் சிறந்த ஆசிரியராக, பொறியாளராக, விவசாயியாக, மருத்துவராக, காமராசர் போன்ற சிறந்த அரசியல்வாதியாக வர வேண்டும் என்றால் நம்முடைய கனவுகளும் அதை நோக்கியே இருக்க வேண்டும்.
நாம் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை பற்றிய கனவு காண வேண்டும்..
நாம் படிக்கும் போதே நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று விட வேண்டும். மருத்துவராக வேண்டும் என்றால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வுகள் பல எழுதி மேற்படிப்பு படிக்க வேண்டும்.
நம் குடும்ப சூழ்நிலையை ஒத்து வரவில்லை என்று நாம் சொல்லக்கூடாது. எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் நாம் ஜெயிக்க வேண்டும். துன்பத்திற்கு நாம் துன்பம் தர வேண்டும்.
பறவைகள் மழைக்காலங்களில் இரை தேடாமல் வந்துவிடும். ஆனால் கழுகு என்ற பறவை மேலே உயர்ந்து சென்று மேகத்திற்கு சென்றுவிடும். உணவை எடுத்துக்கொண்டுதான் கழுகு வரும்.எனவே எவ்வளவு சிரமம் வந்தாலும் எடுத்த காரியத்தை முடித்து விடுங்கள் என்று பேசினார்.
ஆசிரியர்கள் வள்ளி மயில், முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டிசெல்வம் , சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.காரைக்குடி வருமான வரி அதிகாரி சுப்பிரமணியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.ஆசிரியர்கள் வள்ளி மயில், முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=8l8IHLsMdso