சாரல் பக்கங்கள்..

197 views
Skip to first unread message

அமைதிச்சாரல்

unread,
Apr 16, 2013, 5:26:59 AM4/16/13
to vall...@googlegroups.com, பண்புடன், tamizhsiragugal, Groups

வாங்க.... ரசிக்கலாம் (பண்புடன் இதழில் வெளியானது)


“ஹைய்யோ.. என்னமா ஜொலிக்குது இந்த நட்சத்திரங்களெல்லாம்”.. பயணத்தின்போது கார் ஜன்னல் வழியே வானத்தை எட்டிப்பார்த்த பையர் ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார். டிட்வாலா போய் சனிக்கிழமை சதுர்த்தியும் அதுவுமாக பிள்ளையாரைத் தரிசனம் செய்து விட்டு நல்ல இருட்டில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சட்டென அப்படியே பதினெட்டு வருடங்கள் பின்னால் சென்று விட்டாற்போன்ற குதூகலம் பையர் குரலில் தொனித்தது. “வீட்டுல பால்கனியில் நின்னாக்கூட நட்சத்திரம் பார்க்கலாம்ப்பா” என்று சொன்னேன். “ஆனா, இந்த அளவுக்குத் தெளிவாத்தெரியாதும்மா. நகரத்துல ஒளி மாசு அதிகமா இருக்குது, அதோட வீரியத்தால வானத்துல இருக்கற நட்சத்திரங்கள் தெளிவாத் தெரியறதில்லைன்னு எங்கியோ வாசிச்சேன். ஆனா, இது காட்டுப்பாதையா இருக்கறதால மினுக் மினுக்ன்னு மின்னுறது நல்லாவே தெரியுது” என்று ஆச்சரியம் அகலாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.உண்மைதான், கருகருவென்ற வெல்வெட்டில் வெண்முத்துகளையும் வைரங்களையும் சிதறி விட்டிருந்தாற்போல் சோகையாகவும் பளீரென்றும் டாலடித்துக் கொண்டிருந்தன விண்மீன்கள்.

“இந்த மாதிரி அழகான இருட்டுல நட்சத்திரங்களைப்பார்த்து எவ்ளோ காலமாச்சு!!..” தன்னை மறந்து லயித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ம்.. அதான் தெனமும் பார்க்கறோமே..” என்று கொக்கி போட்டேன்.

“இல்லைம்மா,.. ராத்திரியில் கரண்டு போகணும். அந்த இருட்டுல வானத்துல தெரியுற நட்சத்திரம் பார்க்கணும். எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா?.. ஒருக்கா,.. ஆச்சி வீட்டுக்குப் போயிருந்தப்ப ராத்திரி லைட்டு போயிருச்சு. அப்ப முத்தத்துல(முற்றத்தைத்தான் அப்படிச் சொல்கிறார் :-))) கட்டில் போட்டுப்படுத்துக்கிட்டு மேல வானத்துல தெரிஞ்ச நட்சத்திரத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தோம். எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நாட்களுக்குள் நுழைந்து விட்டது புரிந்தது.

“அப்படியா?.. எப்போ பார்த்தோம்” என்றேன்.

“அப்ப நான் நாலாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம் இன்னிக்கு மாதிரி ரசிச்சுப் பார்த்ததேயில்லை. அதென்னவோ,.. தோணவேயில்லை” என்றார். நான் கடைசியாக எப்பொழுது நட்சத்திரங்களை அவற்றுக்காகவே பார்த்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

காலேஜ் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து படிக்கும்போது (நம்புங்கப்பா.. :-)) முற்றத்தை அடுத்திருக்கும் முன்னறையின் மேற்கூரை மட்டத்தில் விடிவெள்ளி இருக்கும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்தபடியே கிடந்து விட்டு மெதுவாக எழுந்திருப்பேன். அதைத்தவிரவும் எனக்கு மிகவும் பிரியமான நட்சத்திரக்கொத்து ஒன்றும் உண்டு. அதற்கு கரடித்தலை என்றே பெயர் சூட்டியிருந்தேன். (அதன் உண்மையான பெயர் orion the hunter) அறுபது அல்லது எழுபது டிகிரி கோணத்தில் ஒரே நேர்கோட்டில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். பூமியின் சுழற்சியைப் பொறுத்து பாகையளவு மாறும். அதன் இடப்பக்கம் இந்தப்பக்கம் ஒன்றும் அந்தப்பக்கம் ஒன்றுமாக இரண்டு நட்சத்திரங்கள், அதில் ஒன்று இந்தக் கரடித்தலையிலிருக்கும் கண் மாதிரியே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதை ரசித்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஆனால் இந்த ரசிப்பும், பொழுதுபோக்கும் ஏதோவொரு புள்ளியில் என்னையறியாமலேயே நின்று போயிருந்திருக்கின்றன. பையருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதை உணர்ந்து ‘ஞே’வென விழிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங்களையும் கண்ணலக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு நம் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த சிறு குழந்தை எப்போது விலகிச்சென்றது என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். மாறுதல்களுக்கேற்ப மாறித்தானே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப நாமென்னவோ பெரியவர்களாகி விடுகிறோம். ஆனால், நாம் விட்டு விட்டு வந்த அந்தக் குழந்தை நம் வரவை நோக்கி அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கும். சரியான சமயத்தில் அதைக் கண்டு கொண்டால் உதடு பிதுங்க, முகம் அழுகையில் கோணியபடி, கண்ணீர் நதிகள் பெருக்கெடுக்க ஓடி வந்து நம்மைக் கட்டிக்கொள்ளும். அந்தச் சிறுகுழந்தை வேறு யாருமல்ல. நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தை மனம்தான். நாம் பெரியவர்கள் ஆனாலென்ன?. அந்தக் குழந்தையும் அதன் பாட்டிற்கு ஒரு ஓரமாய் வந்து கொண்டிருக்கட்டுமே.

நாமெல்லோருமே ஒரு குறிப்பிட்ட வயது வரை, கேள்விக்குறி போல் வளைந்த நாயின் வால், பொன்வண்டின் முதுகில் மினுங்கும் வண்ணங்கள், மழையில் குளித்த ரோஜாக்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்திருப்போம். மழை பெய்யும்போது வேண்டுமென்றே தொப்பலாக நனைவதும், நீர் தேங்கியிருக்கும் சின்னப்பள்ளங்களில் தபாலென்று குதித்து மற்றவர்களை நனைப்பது அல்லது வழிந்து சொட்டும் மழை நீரை உள்ளங்கையில் நிறைத்து நண்பர்களின் முகத்தை நனைப்பதுமாக   இருந்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் “சனியன் பிடித்த மழை” என்று திட்டத்தொடங்குவது ஆரம்பித்து விடுகிறது.

காரணங்கள் சுலபமானவை.. சிறு குழந்தைகளாக இருந்தவரைக்கும் கவலைகள் இல்லை, பொறுப்புகள் இல்லை… இந்தக்காலத்திய குழந்தைகளானாலும் கூட. அதுவே,.. வளர வளர எதிர்காலம் பற்றிய பயம், காத்திருக்கும் பொறுப்புகள் போன்றவை நம் மனதை ஆக்கிரமிக்கின்றன. குருவிகளின் கீச்.. கீச் போன்ற ரசித்த விஷயங்கள் இப்போது எரிச்சலூட்டுகின்றன அல்லது அமைதியாகக்கடந்து செல்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சிடுமூஞ்சிகளாகவோ இயந்திரங்களாகவோ மாறி விடுகின்றோம். மனதை இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் இதைத்தவிர்க்கலாம். ‘அதற்காக எப்பொழுதுமே விளையாட்டுப்பிள்ளையாக இருக்க முடியுமா?’ என்ற கேள்வி எழலாம். எப்பொழுதும் இல்லாவிட்டாலும் சில சந்தர்ப்பங்களிலாவது நம் மனதை விளையாட்டுப்பிள்ளையாக இருக்க விடுதல் நல்லதே. இறுக்கங்கள் விலகி பழையபடி உற்சாகமாகி விடலாம்.

இந்த விஷயத்தில் பெண்களிடம் கவனித்த ஒரு சில விஷயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் புடவை, பூ, லேசான மேக்கப், உடற்பயிற்சி என்று ரசனையுடன் பளிச்சென இருக்கும் நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பாகக் குழந்தைகள் பிறந்தபின் நம்மைக் கவனித்துக்கொள்வதில்லை? இனிமேல் என்ன வேண்டியிருக்கிறது என்று இழுத்துச் சொருகிய புடவை, அல்லது கசங்கிய நைட்டி, அள்ளி முடிந்த கூந்தல் என்று ஏனோதானோவென்று இருக்க ஆரம்பித்து விடுகிறோம். எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அலங்காரங்கள். சில இடங்களில் ஊர் வாய்க்குப் பயந்து கொண்டும் அப்படி இருப்பதுண்டு. எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் பெரிய பெண்ணாக ஆனபின் தாய் பின்னலிட்டுக்கொள்வதில்லை. அப்படியே பின்னிக்கொண்டாலும் அதைச் சுருட்டிக் கொண்டையாக இட்டுக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். அதுவே மும்பையில் வயதானவர்கள் கூட காலையில் எழுந்ததுமே குளித்துப் ப்ரெஷ்ஷாகி சுத்தமான ஆடையணிந்து ஏதோ அந்த நிமிடம் வெளியே செல்லத் தயாராக இருப்பதைப்போல காட்சியளிப்பதையும் கண்டிருக்கிறேன்.வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கிறார்களோ என்று சில சமயம் தோன்றும்.

எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல் சிரியஸாகவும் பார்ப்பது நல்லது. கவலைகள், துக்கங்கள் எல்லாம் வாழ்க்கையில் அது பாட்டிற்கு ஒரு ஓரத்தில் ஊறுகாய் மாதிரி இருந்து கொண்டிருக்கட்டுமே. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டால் மட்டும் சரியாகி விடுமா என்ன?. ஊறுகாய் ருசியில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் பாயசத்தின் ருசியை அனுபவிப்பது எப்படி?. ‘அடடா!!.. உளுந்த வடையில் ஓட்டை போடாமல் இருந்திருந்தால் கூடுதலாக இன்னும் ஒரு விள்ளல் வடை கிடைத்திருக்குமே’ என்று கவலைப்படுவதை விட ‘அடடா!!. டோநட் தயாரிக்கிறதுக்கு நம்ம இந்தியர்கள்தான் ரோல் மாடல்களா இருந்திருக்காங்க” என்று பெருமையுடன் இன்னொரு ப்ளேட் வடை சாம்பாரை உள்ளே தள்ளுவது மேலல்லவா?..  ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை செய்யும் மாயாஜாலமும் இதுதான். வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள். 

டிஸ்கி: வெளியிட்ட பண்புடன்  மின்னிதழுக்கு நன்றி.

amaithi cchaaral

unread,
May 6, 2013, 1:14:12 AM5/6/13
to vall...@googlegroups.com, பண்புடன், tamizhsiragugal, Groups

May
06
அமைதிச்சாரல்
காற்தடம் பதியாப்பாதையெனவும்,
எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
முன் நீண்டு கிடக்கிறது
இன்றைய தினம்.

புட்களின் அதட்டலுக்குப் பயந்த
விடிகாலைச்சூரியன்
மேகப்போர்வை விலக்கி
மெல்ல முகம் காட்டவும்
தலையசைத்துப் பூமழை சொரிந்து
பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
வரவேற்பு அளிக்கவுமென
நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தினமும்,
வெற்றுக்காகிதமென.

ஏதேனும் சில வரிகளாவது கிறுக்கப்படலாம்,
மனங்களை வெல்லும்
வண்ண ஓவியமொன்று வரையப்படலாம்,
வரலாற்றைப் புரட்டிப்போடும்
சகாப்தங்கள் எழுதப்படலாம்,
அல்லது
எதற்குமே உபயோகப்படுத்தப்படாமல்
கசக்கி வீசப்படவும் கூடும்.
எதற்குமே அது கோபித்துக் கொள்வதில்லை.
மீண்டும் மீண்டும் வந்து
காலைக்கட்டிக்கொள்ளும்
செல்லக்கோபத்திற்குப் பயப்படாத குழந்தையாய்
வந்து கொண்டுதான் இருக்கிறது நம்மிடம்.

தான் சுமந்திருக்கும் பூக்களின் நறுமணத்தில்
தன்னை மறந்து
பால்வெளியில் உயரப்பறக்கும்
மிதவைத்தருணங்களில்
சேற்றிலும் விழுந்து தொலைத்து விடுகிறது,
சட்டென இழுபட்டு.
கருப்புக்கறைகளைக் காலம் முழுக்கச் சுமக்க நேரிட்ட
அவலத்தையெண்ணி,
அவை நினைவு கூரப்படும்போதெல்லாம்
மவுனத்தைப் பூசிக்கொண்டு விடுகிறது.

அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
ஏதேனும் ஒரு
கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
அதை
வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.


தேமொழி

unread,
May 6, 2013, 1:35:26 AM5/6/13
to vall...@googlegroups.com, பண்புடன், tamizhsiragugal, Groups
இப்பொழுதான் வல்லமை தளத்தில்  என் கருத்தினைப் பதிந்தேன் சாந்தி.
அது அங்கு மட்டுறுத்தப்பட்டு வெளியாகும் முன் சுடச் சுட அதன் நகல் இங்கே  ...உங்களுக்காக.

***
புதிய நாளும் வெற்றுத் தாளும் 
தாளை உபயோகிக்கும் விதமும் அந்நாளில் நிகழ்த்திய செயல்களுமென 
நீங்கள் ஒப்பிடும் பரிமாணம் அருமையாக இருக்கிறது சாந்தி.
கவிதையும் அதன் தலைப்பும் பொருத்தம், அருமை, நன்றி.
அன்புடன் 
..... தேமொழி 

amaithi cchaaral

unread,
May 6, 2013, 6:33:46 AM5/6/13
to vall...@googlegroups.com
 மிக்க நன்றி தேமொழி..

2013/5/6 தேமொழி <them...@yahoo.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

PRASATH

unread,
May 6, 2013, 8:33:55 AM5/6/13
to தமிழ் சிறகுகள், vallamai, பண்புடன்
கவிதை நன்று...

ஆனாலும் இரண்டாம் பத்தியின் இறுதி வார்த்தையின் அவசியம் எனக்கு புரியவில்லை... அது இல்லாமலேயே கவிதை பூர்த்தியாகிறதே...

கூரப்படும் பொழுதா, கூறப்படும்பொழுதா???


2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>

May

amaithi cchaaral

unread,
May 6, 2013, 9:09:44 AM5/6/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன்
சில தினங்கள் நினைக்கும்போதே மகிழ்வு தரக்கூடியதாகவும், சில தினங்கள் துக்க தினங்களாக அனுசரிக்கப்படுவதாக, நினைவில் வரும்போதே வருத்தம் தருவதாகவும் இருக்கின்றதே. அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.



2013/5/6 PRASATH <pras...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

vallamai editor

unread,
May 6, 2013, 9:15:04 AM5/6/13
to vall...@googlegroups.com
சாந்தி வல்லமையாளரின் கடைசி பேராவில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவளா

2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>

amaithi cchaaral

unread,
May 6, 2013, 9:16:19 AM5/6/13
to vall...@googlegroups.com
இது எப்போ!! :-)


2013/5/6 vallamai editor <vallama...@gmail.com>

amaithi cchaaral

unread,
May 6, 2013, 9:21:08 AM5/6/13
to vall...@googlegroups.com
கண்டுகொண்டேன்..

மிக்க நன்றிகள் திவாகர்ஜி :-)

PRASATH

unread,
May 6, 2013, 12:27:18 PM5/6/13
to vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனது கருத்தை உங்களிடம் சரிவர சொல்லத் தெரியவில்லை எனக்கு...

எனது முந்தைய பதிலை மீண்டும் படித்து பார்க்கவும்... வேறு மாதிரி சொல்லத் தெரியவில்லை எனக்கு...


2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>

amaithi cchaaral

unread,
May 6, 2013, 1:17:24 PM5/6/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன்
முதலிலிருந்து இரண்டாம் பத்தியைப்பற்றிக் கேட்டதையும் கடைசியிலிருந்து இரண்டாம் பத்தியைப் பற்றிக் கேட்டதையும் பிரிச்சுப் பார்த்திருந்தா குழம்பியிருக்க மாட்டேன். போகட்டும் :-)

புதிய தினமும் ஒரு வெற்றுக்காகிதத்தைப் போன்றதே என்பதைத்தான் அங்கே சொல்லியிருக்கிறேன் சகோ.(தெளிவாச் சொல்லியிருக்கேனா.. மீ இன் த குழப்பம்)

2013/5/6 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
May 6, 2013, 1:34:05 PM5/6/13
to vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
நான் சொல்ல வந்ததை இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்ல பார்க்குறேன்...

முதல் பத்தியிலேயே வெற்றுக் காகிதத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டீர்கள் அல்லவா... அதனால் இரண்டாம் பத்தியின் இறுதியில் வெற்றுக் காகிதம் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என எனக்குத் தோன்றியது... குறிப்பிட்டதால் யாதொரு தீங்கும் இல்லை ஆயினும், சில விஷயங்களைச் சொல்லாமல் விட்டு, படிப்பவரைச் சிந்திக்க தூண்டுதல் நலமென்பதால் எனக்கு இந்த நிலைப்பாடு... அவ்வளவே... நிற்க.

பிறகு கவிதையில் நினைவு கூரப்படும்போதெல்லாம் என்று ஒரு வரி இருந்தது.

அதில் வருவது கூறப்படுதலா, கூரப்படுதலா என ஐயம்...

நினைவு கூர்தல் என்றே புழக்கத்தில் சொல்வோம் என்பதால் கூரப்படுதல் என்பது சரியே... நான் தான் தேவையில்லாமல் குழம்பி விட்டேன்///


2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>

sk natarajan

unread,
May 6, 2013, 7:18:42 PM5/6/13
to vall...@googlegroups.com, பண்புடன், tamizhsiragugal, Groups
அருமையான பதிவு
வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/16 அமைதிச்சாரல் <amaithi...@gmail.com>

sk natarajan

unread,
May 6, 2013, 7:19:19 PM5/6/13
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன், Groups
அருமை
வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>

amaithi cchaaral

unread,
May 7, 2013, 1:04:12 AM5/7/13
to vall...@googlegroups.com
சில சமயங்களில் சொல்லாமலும் விடுவதுண்டு.. இங்கே ஏனோ சொல்லவேண்டுமென்று தோன்றியது அவ்வளவே.

amaithi cchaaral

unread,
May 8, 2013, 2:05:30 AM5/8/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, பண்புடன், Groups

ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா.. (பாகம்-2)

ஒவ்வொரு நிமிடத்திற்கும் கலக்கலாய்க் கலர்கலராய் ஆடை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் ஆகாயப்பெண். அவளுக்கும் அலுக்கவில்லை, சப்ளை செய்யும் சூரியனாருக்கும் அலுக்கவில்லை. பார்க்கும் நமக்கு மட்டும் அலுக்குமா என்ன?. 

நீல வெல்வெட்டில் வர்ணக்குப்பியைக் கொட்டிக்கவிழ்த்த குறும்புக்குழந்தை யார்?.. இப்பவே தெரிந்தாகணும் :-))


மழைக்காலத்தைய மந்தஹாசமானதொரு மாலைப்பொழுதில் மலைப்பகுதியில் மாட்டிய மரங்கள்...


கம்பத்தை விட விளக்கைப் பெரிதாகப் படைத்த சிற்பி யாரோ!!!

இன்னுமொரு நாளே.. புறப்படுவோம் இலக்கு தேடி..

வேகவேகமாய் உருவங்களை மாற்றிக்கொள்ளும் மேகங்களிடம் உருவங்களைக் கண்டறிதல் சிறுகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் வேடிக்கையான பொழுதுபோக்கு. இந்தப்படங்களிலிருக்கும் மேகங்களில் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று சொல்லுங்களேன். கண்டறிந்து விளையாடுவோம் :-))





நிலமும் நீரும் ஆகாயமும் நெருப்பும் காற்றுமாக பஞ்சபூதங்களும் சந்திக்கின்றன இந்தக் குமரி முனையில்..

கதிரவனின் கண்ணாமூச்சி விளையாட்டு. எத்தனைதான் மேக முந்தானையில் முக்காடிட்டுக் கொண்டாலும் கொண்டையை மறைக்கத்தெரியவில்லை :-))))



இதோ கண்டுபிடித்து விட்டேனே :-))

முதல் பாகம் இங்கேயிருக்கு..

அமைதிச்சாரல்

unread,
May 8, 2013, 11:12:58 AM5/8/13
to panb...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal, Groups
மிக்க நன்றி எஸ்.கே ஐயா..

அமைதிச்சாரல்

unread,
May 8, 2013, 11:15:05 AM5/8/13
to panb...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்
சொல்லாமல் விடலாமென்றாலும் இங்கே சொல்ல வேண்டும்போல் தோன்றியது.. அவ்வளவே..

//நினைவு கூர்தல் என்றே புழக்கத்தில் சொல்வோம் என்பதால் கூரப்படுதல் என்பது சரியே..//

அதே.. அதே..

அமைதிச்சாரல்

unread,
Jun 26, 2013, 1:41:18 AM6/26/13
to panb...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்

கிருஷ்ண கமல்..


பச்சைப்பசேல் பின்னணியில் நீலக்கற்களைப் பதித்தது போல் பூத்திருப்பவைகளைக் கண்டாலே மனது நிறைந்து போகிறது.'க்ருஷ்ண கமல்' இப்படித்தான் மஹாராஷ்டிர மக்கள் இந்தப்பூவை அழைக்கிறார்கள். 'பிரம்மகமலுக்கு' அடுத்தபடியாக இந்தப்பூவை வீட்டில் வளர்ப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். வீட்டில் இந்தப்பூச்செடியை வளர்த்தால் ஐஸ்வரியம் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் இந்தப்பூவை 'Passion flower' என்று அழைக்கிறார்கள். கொடி வகையைச்சேர்ந்ததால் மல்லிகையைப்போலவே வாசலில் இதைப் பந்தலிட்டும் வளர்க்கலாம். பற்றிப்படர ஏதுவாக தொட்டியிலேயே நான்கு அல்லது ஐந்தடி உயரத்திற்கு சில மூங்கில் குச்சிகளை ஊன்றி வைத்து அதிலும் படர விடலாம். நர்சரிகளில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.மேலும் சில வழிமுறைகள் இங்கே இருக்கின்றன. கொஞ்சம் விலையுயர்ந்த வகை என்பதால் நர்சரிகளில் எண்ணிக்கையில் குறைவாகத்தான் வைத்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கும் அளவு மற்றும் நர்சரிகளைப்பொறுத்து, ஒரு செடி 200 ரூபாயிலிருந்து 400 வரை விலை போகிறது.

வெள்ளை, பிங்க், மற்றும் நீல வண்ணங்களில் பூக்கும் க்ருஷ்ணகமலில் நீலம் நாட்டு வகையைச் சேர்ந்ததாம். மற்றவையெல்லாம் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தவை என்று நர்சரி நடத்துபவர் கூறினார். க்ருஷ்ணகமலில் சுமார் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். எங்கள் வீட்டில் வளர்வது எந்த வகை என்று அறியும் ஆவலில்விக்கியண்ணனிடம் கேட்டபோது அது 'passiflora incarnata' வகையைச் சேர்ந்தது என்று கூறினார். மேலும் பல விவரங்களை அள்ளித்தந்திருக்கிறார்.

இதற்கு எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றனவாம், கூடவே பக்க விளைவுகளும். மூலிகையாயிற்றே.. பக்க விளைவுகள் இருக்குமா என்ன? என்று ஆச்சரியத்தோடு மேலும் கேட்டால் அதிர்ச்சியூட்டும் தகவல்களை நம் முன் அள்ளிக்கொட்டுகிறார் கூகிளாண்டவர். ஆகவே இந்தச்செடியை வெறுமே அலங்காரத்திற்கும் பூஜைக்குமாக மட்டுமே வளர்ப்பது சாலச்சிறந்தது. எங்கள் வீட்டில் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே..

மொட்டு ஒன்று மலர்ந்திடக்காத்திருக்கிறது..
மெல்ல மெல்ல இதழ் விரித்து..
ரகசியமாய் ஒரு புன்னகையுடன்..
மலர்ந்து சிரிக்கிறது..

பூவைத்தேடி வந்த தேனீ..
பளீரென்ற சிரிப்பு..
இந்தப்பூவுக்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்றும் பெயருண்டு என்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. அதாவது..

நீலக்கலரில் சுற்றியிருக்கும் இதழ்கள் கௌரவர்களாம்..

அதன் உட்புறம் மஞ்சள் கலரில் இருக்கும் ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்களாம்..

அதற்கு மேற்புறம் மஞ்சள் கலந்த பச்சைக்கலரில் உருண்டையாக இருப்பது திரௌபதியைக்குறிக்குமாம்..

அதற்கும் மேற்புறம் இருக்கும் மூன்று இழைகள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளைக் குறிக்கின்றனவாம்.

நீலத்தின் உட்புறம் தெரியும் பர்ப்பிள் வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச்சக்கரத்தைக் குறிக்கிறதாம்.

இப்படியெல்லாம் நினைத்துப்பார்க்க சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது இல்லையா :-)

வேடிக்கை காட்டிய களைப்பில் நொந்து நூடுல்ஸாகி..
இந்தப்பூவை வீட்டில் வளர்த்தே ஆகவேண்டும் என்று தவமாய்த்தவமிருந்து வாங்கிக் கொண்டு வந்து, "இது என் செடி, நானே தண்ணி ஊத்தி வளர்க்கப்போறேன்" என்று சொல்லி வீட்டில் நட்டு வைத்து விட்டு, அப்புறம் அதை அம்பேல் என்று விட்டு விட்ட என் பெண்ணிற்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-)))))))

என் செடிகளுக்குப் பொசியும் நீர் ஆங்கே கிருஷ்ண கமலுக்கும் பொசிகிறது :-))

வலைத்தளத்திலும் வாசிக்கலாம்..

sk natarajan

unread,
Jun 26, 2013, 10:00:46 PM6/26/13
to vall...@googlegroups.com, பண்புடன், tamizhsiragugal, Groups
அருமை
வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/16 அமைதிச்சாரல் <amaithi...@gmail.com>

sk natarajan

unread,
Jun 26, 2013, 10:01:35 PM6/26/13
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன், Groups
அருமை
வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>

sk natarajan

unread,
Jun 26, 2013, 10:04:56 PM6/26/13
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
அருமையான பதிவு
படங்கள் அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/6/26 அமைதிச்சாரல் <amaithi...@gmail.com>

amaithi cchaaral

unread,
Jun 26, 2013, 11:56:24 PM6/26/13
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன், Groups
மிக்க நன்றி எஸ்.கே,

amaithi cchaaral

unread,
Jun 26, 2013, 11:57:02 PM6/26/13
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி எஸ்.கே,

amaithi cchaaral

unread,
Jul 1, 2013, 7:45:55 PM7/1/13
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், Groups

தினகரன் நாளிதழும் ஞானும் பின்னே அல்வாவும்..

பாம்பே அல்வா என்று பெயரிடப்பட்டிருப்பதால் இது பாம்பேயாக இருந்து மும்பையாக மாறியிருக்கும் ஊரைத்தான் தாயகமாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை வாசிக்கத்தெரிந்த சிறுகுழந்தை கூட சொல்லிவிடும். அதேபோல், சைனாக்ராஸ் எனப்படும் அகர்அகரை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் இந்த அல்வாவை சைனாவிலோ, பாம்பே அல்வா என்ற நாமகரணம் கொண்டிருப்பதால் மும்பையிலோ  செய்ய வேண்டுமென்ற அவசியமுமில்லை. எந்த ஊரில் செய்தாலும் அல்வா.. அல்வாதான்.

கோபால் பல்பொடி மாதிரியே இதுவும் ஆசியாவின் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சைனா, போன்ற நாடுகளில் புகழ்வாய்ந்தது. அகர் அகர் உடல்சூட்டைத்தணிக்கும் குணம் கொண்டது. ஆகவே இதில் அல்வா,  புடிங் என்று வகைவகையாகச் செய்து அசத்தலாம். இளசான தேங்காயின் நறுக்.. நறுக்கையும் வழுவழுப்பையும் கொண்டிருக்கும் இந்த அல்வாவை வெயில் காலங்களில் மட்டுமல்லாது எல்லாக்காலங்களிலும் கொடுத்து மகிழலாம். என் வீட்டினருக்கு அல்வா கொடுப்பதென்று முடிவெடுத்து விட்டால் அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன். உடனே ஓடிவிடுவேன்.. பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு :-) நினைத்த போதெல்லாம் அல்வா செய்து கொடுத்து மகிழத்தான் கிட்ஸ் கம்பெனிக்காரர்கள் உடனடி மிக்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களே. அதில் ஒன்றிரண்டு பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வருவது வழக்கந்தான் :-)

முதன்முறை இந்த அல்வா செய்யப்போய் அது எனக்கு அல்வா கொடுத்த கதையும் உண்டு. கடைசித்தம்பியின் திருமணத்தின்போது அவனுக்கு என் கையால் அல்வா செய்து கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் மும்பையிலிருந்தே பாக்கெட் வாங்கிப்போயிருந்தேன். எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டுமென்று தெரியாமல் நானே குத்து மதிப்பாக ஒரு கணக்கைப்போட்டுக்கொண்டு காய்ச்சிய பாலில் அல்வாமிக்ஸை மிக்ஸிவிட்டு அது  கரையும் வரையில் கிளறி, பாயசம் மாதிரியே இருக்கிறதே என்று மனதில் கடைசி வரையில் தோன்றிக்கொண்டே இருந்த எண்ணத்தைத் தூக்கிக்கடாசி விட்டு, அல்வாக்கலவையை தட்டில் கொட்டிவிட்டேன்.  அதுவானால் இறுகாமல் விழித்துக்கொண்டே இருந்தது. சரி, விடியும் வரைக்கும் விட்டு வைத்தால் இறுகிவிடும், டிபனுடன் பரிமாறலாமென்று எண்ணி, ஒரு தட்டைப்போட்டு மூடி வைத்து விட்டேன். விடிந்து பார்த்தால் தட்டிலிருந்ததில் பாதியைக்காணோம்.மீதி இன்னும் பாஸுந்தி மாதிரியே இருக்கிறது.

ஆஹா!!.. ருசியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது, வீட்டிலிருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் மீதம் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விழுந்தது மண். இரவோடு இரவாக உலா வந்த பூனையார் டேஸ்ட் பார்த்துவிட்டு மீதியை எங்களுக்கு விட்டு வைத்திருந்தார் :-) ஆகவே கிண்டிய அல்வாவை கடைசியில் குப்பையில் கடாச வேண்டியதாகப்போயிற்று. அதன்பின் அகர் அகர் அல்வா முயற்சியில் இறங்கவேயில்லை. சமீபத்தில் மகள் அழகாக பக்குவமாகச் செய்து பரிமாறினாள்... ஜூப்பர். கொஞ்சம் கெட்டியான பாயாசம் அளவுக்கு வரும்வரை சுமார் பத்து நிமிடங்களுக்காவது கிளறிக்கொண்டே இருக்க வேண்டுமாம், இதுதான் ரகசியம். அவ்வளவுதான்.. விட்ட பைத்தியம் மறுபடி பிடித்துக்கொண்டது எனக்கு. அரை லிட்டர் பால் மீந்தாலும் போதும். டின்னரில் தட்டில் அல்வா இருக்கும். உடலுக்கும் நல்லதாயிற்றே..

பாக்கெட்டைப் பிரித்து..

கொதித்த பாலில் அல்வா மிக்ஸைக்கொட்டிக்கிளறி..
தட்டில் ஊற்றி..
துண்டு போட்டால்..
அல்வா ரெடி..
துருவித்தூவிய பாதாம் மாயமாய் மறைந்த விந்தையென்ன என்று திகைக்க வேண்டாம். அது போன மாதம்.. இது இந்த வாரம் :-)

என்னதான் அதிலேயே ஸ்கிம்டு பால்பவுடர் இருந்தாலும் 80கிராம் பாக்கெட்டுக்கு அரை லிட்டர் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் செய்தால் அருமையாக வருகிறது. பாதாம், ஏலக்காய், குங்குமப்பூ, பிஸ்தா என்று எல்லாமும் இருப்பதால் பார்ட்டிகளுக்கு ஏற்ற டெஸர்ட்டாகவும் இருக்கிறது. உலர்பழங்கள், பால் சாப்பிடப்பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படிச் செய்து கொடுத்து சத்தை உள்ளே தள்ளிவிடலாம். 

இப்பொழுது ஏன் அல்வா கொடுக்கிறேன் என்று இந்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.. கேட்காவிட்டால்?... ஹி..ஹி.. நானே சொல்லி விடுவேனாக்கும் :-)))

என்னுடைய புகைப்படப்பதிவுகளைப்பற்றிய பேட்டி குங்குமம் தோழி இதழின் "கண்கள்" பகுதியில் வந்தது தெரிந்ததே.
அந்தப்பேட்டி இப்பொழுது மே மாதம் எட்டாம் தேதி வெளியான தினகரன் நாளிதழிலும் மறுபதிப்பு ஆகியிருக்கிறது. கண்டெடுத்துச்சொன்ன புகைப்படப்பிரியன் அதிபர் சகோதரர் "மெர்வின் அன்டோ" அவர்களுக்கும், புகைப்படப்பிரியன் பக்கத்தில் அறிவித்த சகோதரர் "சுந்தரராஜன்"அவர்களுக்கும் வாழ்த்திய அனைவர்க்கும் எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டாமா!! ஆகவேதான் அல்வா கொடுத்து நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

தினகரன் நாளிதழின் மகளிர் பகுதியில் எனது நேர்காணலை வாசிக்கச் சொடுக்குங்கள் சாட்டையை.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1792

தேமொழி

unread,
Jul 2, 2013, 12:05:46 AM7/2/13
to vall...@googlegroups.com
மீள்பதிவிற்கு மீண்டும் வாழ்த்துக்கள் சாந்தி 

..... தேமொழி 




amaithi cchaaral

unread,
Jul 2, 2013, 12:19:34 AM7/2/13
to vall...@googlegroups.com
மறுபதிப்புக்கு மீண்டும் வாழ்த்தியமைக்கு நன்றி தேமொழி. அல்வா எடுத்துக்கிட்டீங்களா ;-)

Rishi Raveendran

unread,
Jul 2, 2013, 12:21:32 AM7/2/13
to vallamai
 
 
ஐ ! பால்கோவா ! ரொம்ப நல்லா வந்திருக்கு ! 


2013/7/2 amaithi cchaaral <amaithi...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


amaithi cchaaral

unread,
Jul 11, 2013, 3:15:14 AM7/11/13
to mint...@googlegroups.com, tamizhsiragugal, பண்புடன், வல்லமை

ஈச்சை... பேரீச்சை!!..

ஒரு காலத்தில் "பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழேம்ம்ம்ம்ம்" என்று கூவிக்கொண்டு வருபவரைக் கண்டால் குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம்தான். திருவிழாக்களிலும், பழைய பொருட்களை வாங்குபவரிடமும் மட்டுமே பேரீச்சம்பழம் கிடைத்துக்கொண்டிருந்த காலமது. இப்போது மாதிரி அப்போதெல்லாம் பிரபலமான கம்பெனிகளின் விதவிதமான பேரீச்சம்பழம் மற்றும் சிரப்புகளின் டப்பாக்கள் கடைகளில் மலிந்து கிடக்காது. எங்கள் கம்பெனிகளின் தயாரிப்புகள்தான் சிறந்தவை, அவைகளையே வாங்குங்கள் என்று வலிந்து வாய்க்குள் திணிக்காத  குறையாய் அலறும் விளம்பரங்கள் எதுவும் அப்போது வரவில்லை. இப்பவும்கூட கோயில் திருவிழாக்கள் என்றால் அங்கே பேரீச்சம்பழக் கடைகள் இல்லாமல் இருக்கின்றனவா என்ன?. நாங்களெல்லாம் சுசீந்திரம் தேரோட்டத்திற்குப் போவதே ஓலைப்பெட்டியில் பேரீச்சம்பழமும் வாங்குவதற்காகத்தான். அதெல்லாம் அப்போது காணாப்பண்டம் :-)) "இதெல்லாம் பாலைவனத்தில் மட்டுந்தான் வளருமாக்கும்" என்ற நினைப்பு வேறு அதை அபூர்வமாக்கி வைத்திருந்தது.

இங்கே வந்து இத்தனை நாட்களானபின்னும் அப்படியான நினைப்புதான் இருந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் அரைப்பக்குவமான மஞ்சள் நிறப் பழக்கொத்துகளைக் காண நேரும்போது கூட அது பேரீச்சம்பழம்தான் என்று அடையாளம் காண முடியவில்லை. மால்களிலும் சூப்பர்மார்க்கெட்டுகளிலும் ஃப்ரெஷ் பழம் வழக்கமான அடர்ந்த பிரவுன் கலரில் வேறு இருந்து தொலைத்தால் என்னதான் செய்வது. சத்தியமாக மரத்தையே போட்டுத்தாண்டினாலும் நம்பியிருக்க மாட்டேன். பின்னொரு காலம் அடர்சிவப்பில் மார்க்கெட்டில் மின்னிய பழங்களைக்கண்டதும், வாங்கி வந்தேன். இனிப்பும் லேசான துவர்ப்புமாக நன்றாகத்தான் இருந்தது. அப்பொழுது கடைக்காரரிடம் கேட்டபோதுதான் இது பாலைவனத்தில் மட்டுமல்ல, நன்கு பராமரித்தால் உள் நாட்டிலும் வளரும் என்றார். 

ஆச்சரியமாக இருந்தது.. முதன்முதலில் பேரீச்சை மரத்தை நேரில் கண்டபோது. அதுவும் அந்தச்சமயத்தில் பழங்களோடு இல்லாமல் இருந்திருந்தால் அப்போதும் தெரிந்துகொண்டிருக்க இயலாது. பட்டிக்காட்டாள் முட்டாய்க்கடையைப் பார்த்ததைப்போல் பார்த்துக்கொண்டேயிருந்தேன். நவிமும்பையில் பேலாப்பூரிலிருக்கும் croma-வின் வெளியே சுமார் இருபது மரங்களாவது இருக்கும். கடைக்காரர்கள் நன்றாகவே பராமரிக்கிறார்கள்.  வெயில் காலத்தில் பாளை விட்டுப்பூத்துக் காய்க்க ஆரம்பித்து மழைக்காலம் முழுவதும் கனிகளை அள்ளியள்ளித்தருகிறது பேரீச்சை மரம்.
பாளைச்சிரிப்புடன்..
குலை குலையாய்ப் பேரீச்சைக்காய்..
ஒரு மரப்பழங்களுக்கு ஒரு கொத்து பதம்..

பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து இருப்பது எல்லோரும் அறிந்ததே. வீட்டில் யாருக்காவது, முக்கியமாக கர்ப்பிணிப்பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக டாக்டர் சொல்லி டானிக்குகளை எழுதிக்கொடுத்தாலும், நாமும் நம் பங்கிற்கு கீரை முதலியவற்றுடன் பேரீச்சம்பழங்களையும் கொடுக்க ஆரம்பிப்பதுண்டு. என்னதான் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் குழந்தைகள் சரியான வளர்ச்சியில்லாமல் புஷ்டியாக இல்லாமல் இருந்தால் உடனே, "நாலஞ்சு பேர்த்தம்பழத்த பால்ல போட்டு கொதிக்க வெச்சு மசிச்சுக் கொடுக்கப்டாதா.. புள்ள நல்லா கிண்ணுன்னு ஆகிருவானே" என்று விவரமறிந்த பெரியவர்கள் சிபாரிசும் செய்வதுண்டு. பழத்தைத் தேனில் ஊறவைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் வலுவாக இருப்பார்கள்.

இப்படிப் பேரீச்சம்பழத்தைப் பாலில்  வேக வைத்துச்சாப்பிடுவது நிறையக் குறைபாடுகளை நீக்குகிறது. முக்கியமாக இதயத்திற்கும் நல்லது.  இதனுடன் ஒன்றிரண்டு பாதாம்பருப்புகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும், ஞாபகசக்தியும் கூடும். இதுபோகவும் இந்தப் பழத்தில் கால்சியம், விட்டமின் பிபி2, பி5மற்றும் விட்டமின்  சத்துக்கள் நிறைந்திருக்கின்றனனவிட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வையில் கோளாறுகள் இருப்பவர்கள் இதைத்தொடர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 
  

மங்களகரமாய் ஆரம்பம்..

பேரீச்சம்பழம் பனை வகையைச் சேர்ந்ததுதான். பொதுவாகப் பாலைவனம் அல்லது வறண்ட மண்ணில்தான் வளரும் என்றாலும், நம் நாட்டில் வேறு எங்கேனும் வளர்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக கூகிளாத்தாவை நாடியபோது, தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார்.

தண்ணீர் வளமுள்ள நம் தென்னிந்தியாவில் அதுவும் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில்  வளர்த்துச் சாதனை புரிந்திருக்கிறார் சகோ.திருப்பதி. திண்டுக்கல் நகர்ப்பகுதியில் நாகல் நகர், மெங்கிள்ஸ் ரோடு பகுதிகளில் தானாகவே வளர்ந்திருந்த மரங்களைப்பார்த்துவிட்டு, இதை ஏன் நாம் பெரிய அளவில் முயற்சி செய்து வளர்க்கக்கூடாது என்று எண்ணினார். அப்போதுதான் குஜராத்திலிருக்கும் பேரீச்சம்பண்ணையைப் பற்றியும் அறிந்து கொண்டார். அங்கே நடத்திய விசாரணையில் 'பரி' என்னும் வகை மரத்திலிருந்து பறித்ததுமே சாப்பிட ஏதுவானது என்று தெரிந்து கொண்டார். இப்போது மார்க்கெட்டில் கிடைப்பதும் இந்த வகைதான். (சில வகைகளில் 'டாரின்' பால்சத்து கூடுதலாக இருக்கும். சாப்பிட்டால் தொண்டை கரகரக்கும், இவைகளைப் பதப்படுத்தாமல் சாப்பிட முடியாது) லண்டனிலிருந்து கொண்டு வந்த திசுக்கன்றுகளை குஜராத் பண்ணையின் உதவியுடன் வளர்த்து, பின் ஊருக்குக் கொண்டு வந்து சுமார் 12 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்.

பேரீச்சமரம் வளர அடிப்படைத்தேவையாக 40 டிகிரி வெப்பமும், தண்ணீர் வசதியுமே போதுமானது. நம்மூர் வெப்பநிலையும் கிட்டத்தட்ட இவ்வளவுதானே இருக்கிறது.  சொட்டு நீர்ப்பாசன முறையில் தண்ணீரும் கிடைத்ததில் மூன்று வருடங்களில் காய்க்க ஆரம்பித்து இப்போது ஒரு மரத்திற்கு சுமார் 20 கிலோ அளவில் பழங்கள் கிடைக்கிறதாம். கேரளாவிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து வாங்கிப்போகிறார்களாம். இங்கே மும்பையிலும் இப்போது அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இப்போது நோன்பு காலமாதலால் விலை மலிவாகவும் கிடைக்கிறது. சீசன் ஆரம்பத்தில் கிலோ 200 ரூபாய் இருந்தது இப்போது 80 ரூபாயாக இருக்கிறது.

சீசன் சமயங்களில் பேரீச்ச மரத்திலிருந்து 'ரஸ்' (நம்மூர் பதநீர் மாதிரி) இறக்குவதுண்டு. இதிலிருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதைக் கதைக்களமாகக் கொண்டு அமிதாப், நூதன் நடித்து வெளியான 'சௌதாகர்' என்ற இந்திப்படம் ரொம்பவே பிரபலம். படத்தை விட 'சஜ்னா ஹை முஜ்ஜே.. சஜினா கே லியே' என்ற பாட்டு ரொம்பவே பிரபலம். அழகுசாதன விளம்பரங்கள் ஒன்றிலும் இந்தப்பாட்டை உபயோகப்படுத்தியிருந்தார்கள்.


பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழேம்ம்ம்ம்..

பதப்படுத்தப்பட்ட பழங்கள் ஒருவகை ருசி என்றால், 'பரி(றி)'த்த பழங்கள் இன்னொரு வகை ருசி. எக்கச்சக்கமான இனிப்புடன் அடிநாக்கில் லேசான துவர்ப்புடன் அருமையாக இருக்கிறது. நாமெல்லாம் அப்படியே சாப்பிடும் ரகம் என்றாலும் சமையல் ராணிகள் பக்குவப்படுத்தப்பட்ட பழங்களை வைத்து விதவிதமாகச் சமைத்து விருந்தே படைத்து விடுவார்கள். வழக்கமாகச் செய்யும் அல்வா, மில்க்ஷேக், லட்டு தவிரவும் எக்கச்சக்கமான தீனிகள் இங்கே மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நம்மூர் சிங்கம் விற்கும் பழங்களைத்தவிரவும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃப்ரெஷ் பழங்களும் மால்களில் கிடைக்கின்றன. ஏதாவது புதிதாக சாப்பாட்டுஅயிட்டம் செய்யலாம் என்று வாங்கி வந்தால் 'என்ன செய்யலாம்?' என்று சிந்திக்கும்போதே கைக்கும் வாய்க்குமாக வேலை கொடுத்து விடுகிறது அதன் ருசி :-)) அதனாலென்ன?.. 'அடுத்த தடவையாவது' என்ற வார்த்தை எதற்குத்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகவே அடுத்த தடவையாவது :-))))

amaithi cchaaral

unread,
Jul 12, 2013, 12:43:01 AM7/12/13
to பண்புடன், வல்லமை, Groups, tamizhsiragugal
குஜராத்தில் பழப்பண்ணையே இருக்கு கீத்தாம்மா.. இப்பவும் இங்கே கிடைக்கும் பழங்களை உலர்த்திப் பதமாக்கிக்கலாம்ன்னா மழை கொட்டுதே. 'அவனை'த்தான் ஒத்தாசைக்குக் கூப்பிடணும். 

amaithi cchaaral

unread,
Jul 12, 2013, 12:43:23 AM7/12/13
to பண்புடன், வல்லமை, Groups, tamizhsiragugal
மிக்க நன்றி எஸ்.கே,

amaithi cchaaral

unread,
Jul 18, 2013, 12:26:26 AM7/18/13
to mint...@googlegroups.com, பண்புடன், tamizhsiragugal, வல்லமை

உலத்தி.. (கூந்தற்பனை)

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தோரணங்களுடன், வாசலில் குலையுடன் கூடிய வாழைமரம் போன்றவற்றைக் கட்டி வைத்து அலங்கரிப்பது வழக்கம். அதிலும் திருமணங்களில் கூடுதல் அலங்காரமாக செவ்விளநீர்க்குலைகளையும் வாசலில் கட்டி வைப்பார்கள். சில காலம் முன்பு வரைக்கும் திருமணங்களை வீட்டில், முற்றத்திலோ அல்லது வீட்டின் முபக்கத்திலோ, அருகிலோ இருக்கும் மைதானங்களில் தென்னையோலைக் கிடுகுகளால்(பின்னப்பட்ட ஓலைகள்) ஆன பந்தலிட்டு நடத்துவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பந்தலைத் தாங்குவதற்காக ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் மூங்கில் கம்புகளில் அலங்காரமாக வித்தியாசமான பச்சை ஓலைகளையும் செருகியிருப்பார்கள். மீன் வால் மாதிரியும் சிறகுகள் மாதிரியும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருக்கும் அந்த ஓலைகள் கூந்தல் பனை என்றும் உலத்தி என்றும் அழைக்கப்படும் மரத்தினுடையவையே.

கூடுதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வாசல் அலங்காரத்தில் கூந்தல் பனையின் கூந்தலையும் கட்டி வைப்பார்கள். ஒரு கூந்தலை இரண்டாக வெட்டி இரண்டு பக்கமும் கட்டுவது வழக்கம். "என்னது!!.. கூந்தலா?" என்றுதானே நினைக்கிறீர்கள்.பச்சைப்பட்டாணிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் நீளமான சாட்டைகளைச் சேர்த்துக் கட்டியதுபோல் காட்சியளிக்கும் பூங்கொத்தைத்தான் கூந்தல் என்று சொல்லுவோம். சிறுசிறு அரும்புகள் போன்று காட்சியளிக்கும் பூக்கள் முதிர்ந்து பட்டாணியளவில் சின்னஞ்சிறு காய்கள் ஒட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும். இப்பருவத்தில் ஒரு கூந்தலின் விலை இரண்டாயிரம் வரைக்கும் போகுமாம். கல்யாண வீடுகளில் முஹூர்த்தம் முடியும்வரைக்கும் கூடக் காத்திருக்காத பொறுமையிழந்த குழந்தைகள், இந்தச்சாட்டைகளை அறுத்து வைத்துக்கொண்டு மனம்போல் விளையாடுவதுண்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens.  'யா மரம்' என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ். லத்தீன்  மொழியில் urens என்ற பெயருக்கு 'அரிக்கும் தன்மையுடையது' என்ற அர்த்தமுண்டு. பெயருக்கேற்றாற்போல் கூந்தலில் இருக்கும் காய்களை வெகு நேரம் கையாண்டால் லேசான அரிப்பு ஏற்படும்.(இதிலிருக்கும் ஆக்சிலிக் ஆசிட்டின் காரணமாகவே அரிப்பு ஏற்படுகிறதென்று அறிவியல் சொல்கிறது.) இதற்காகவே சிறுவயதில் நாங்கள் இதை வைத்து விளையாடும்போது பெரியவர்கள் எச்சரித்த நினைவிருக்கிறது. 

இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக்கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப்போலவும் தோன்றுவதால் கூந்தற்பனை, மற்றும் உலத்தி என்ற பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. பனைவகையைச் சேர்ந்த இம்மரங்கள் சுமார் 15 மீ. வரை வளரக்கூடியது. வழவழப்பான, உருண்டையான இதன் தண்டுப்பகுதி சுமார் 30 செ.மீ விட்டமுடையதானதாக இருக்கும். உதிர்ந்த இலைகள் இதன் உடலில் விட்டுச்செல்லும் தடங்கள் பார்ப்பதற்கு வளையங்களைப் பதித்தது போலவே இருக்கும்.  கூந்தற்பனை (இலங்கை வழக்கில் கித்தூள்) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவரஇனமாகும்.

பொதுவாகவே பனைக்குடும்ப வகையைச் சேர்ந்த மரங்களிலிருந்து பதநீர் இறக்கப்படுவதும், அது காய்ச்சப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதும் உண்டு. இதற்கு கூந்தற்பனைமரமும் விதி விலக்கல்ல. இதிலிருந்து இறக்கப்படும் நீர் 'கித்தூள் பானி' என்று அழைக்கப்படுகிறது. இளநீர், பதநீர் என்று அழைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மரங்களை இளநீர் மரம் என்றோ பதநீர் மரம் என்றோ நாம் அழைப்பதில்லை. மாறாக தென்னை, பனை என்று அழைக்கிறோம். ஆனால், கூந்தற்பனையிலிருந்து பெறப்படும் நீர் 'கித்தூள்' எனப்படுவதால் கித்தூள் மரமென்று அழைக்கப்படும் பெருமை இம்மரத்திற்கு மட்டுமே உண்டு. ஆமாம்,..இலங்கையில் இந்த மரத்தைக் கித்தூள் மரமென்றுதான் அழைக்கிறார்கள் :-)) சமையலில் வழக்கமான வெல்லத்திற்குப் பதிலாக இதைப்பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம். 
இதன் அழகான கூந்தலுக்காகவும் இலையின் அழகுக்காகவும் இது வீட்டின் உள் மற்றும் வெளி அலங்காரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. ஓரளவு வளரும்வரை தொட்டிகளில் க்ரோட்டன்ஸ்களைப்போல் வீட்டுக்குள் வளர்த்துவிட்டு பின் வெளித்தோட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். நவிமும்பையில் சில பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுவதுண்டு. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்ததுமே சின்னதாகப் பாளை விட்டு அரையடிக்கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு நிற்கும் சின்னஞ்சிறு உலத்திகளைப் பார்க்கும்போது 'பாப்'வெட்டிக்கொண்ட எலிக்கேஜி குழந்தையைப் போலிருக்கும். 

தென்னை மற்றும் பனை மரங்களைப்போலவே இதிலும் ஒவ்வொரு மடலுக்கும் ஒரு பாளை வரும். அந்தப்பாளை வெடித்து வரும்போது கூந்தலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து இறுதியில் ஒன்பதடிக்கூந்தலை உலர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பாள் இந்தக் கூந்தலழகி. தனிமரம் தோப்பாகாதுதான். ஆனால், நன்கு செழித்து வளர்ந்த ஒரே ஒரு கூந்தற்பனை கிட்டத்தட்ட தோப்பையே வளர்க்கும் தோற்றத்தைக் கொடுக்கும். ஒரு கூந்தற்பனையை வீட்டு முன் தோட்டத்தில் வளர்த்தாலே போதும்.. வீட்டுக்கே ஒரு தனியழகு வந்தது போலிருக்கும். வீட்டின் முன் அலங்கரித்த தேரை நிறுத்தியிருப்பது போன்றதான, யானையைக் கட்டிப்போட்டு வளர்ப்பது மாதிரியான அழகு அது.

Rishi Raveendran

unread,
Jul 18, 2013, 11:20:06 PM7/18/13
to vallamai

முழு ஆண்டு வினாத்தாள்:  2013

கூந்தற்பனை பற்றி ஒரு கட்டுரை வரைக.               1 X 15 = 15

விடை: சாரல் அவர்களின் கூந்தற்பனை கட்டுரை.  


2013/7/18 amaithi cchaaral <amaithi...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
அன்புடன்

amaithi cchaaral

unread,
Jul 25, 2013, 1:10:13 AM7/25/13
to வல்லமை, tamizhsiragugal, Groups

குங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி.

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.

சாரல் துளிகளை ஆரம்பத்தில் சும்மா விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தேன். அதன்பின் நாளாக நாளாக கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களைப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இது ஆகிவிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்ததும் உற்சாகமாக எழுத ஆரம்பித்தேன். ஃபேஸ்புக்கில் எழுதும் துளிகளில் சிலவற்றைக் 'குங்குமம் தோழியின் தினமொழிகள்' வெளியீட்டிலும் காணும் பேறு கிடைத்தது. நமக்கான அங்கீகாரத்தை விடவும் மகிழ்ச்சியான விஷயம் இருக்கிறதா என்ன :-)

கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக்கில் பகிர்பவற்றை குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்(சுமார் 10 துளிகள்) சேர்ந்ததும் இங்கே ப்ளாகிலும் பகிர்ந்து வருகிறேன். பின்னாளில் என்றைக்காகவது புத்தகமாக வருமா? என்றும் சில நல்ல உள்ளங்கள் கேட்பதுண்டு. காலம்தான் அதற்குப்பதில் சொல்ல வேண்டும்.

'சாரல் துளிகள்' மொத்தமும் எப்பொழுது புத்தகமாக வருமென்று நானறியேன், ஆனால் இந்தத்தொகுப்பிலிருந்து ஒரு துளியான, 

"வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்."

என்ற துளி, அச்சுப்புத்தகத்தில், அதாவது இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது. 

குங்குமம் இதழுக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.

shylaja

unread,
Jul 25, 2013, 2:18:36 AM7/25/13
to vallamai, tamizhsiragugal, Groups
வாழ்த்துகள் அமைதிச்சாரல்! 


2013/7/25 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 

amaithi cchaaral

unread,
Jul 25, 2013, 2:44:25 AM7/25/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, Groups
 நன்றிகள் ஷைலஜாக்கா..

தேமொழி

unread,
Jul 25, 2013, 11:17:27 AM7/25/13
to vall...@googlegroups.com
சாந்தின்னா சாந்திதான்.

எனக்கு மிகவும் பிடிப்பது ... நீங்கள் கிருஷ்ண கமலம், பேரீச்சைமரம், கூந்தற்பனை போன்று பகிர்ந்து கொள்ளும் தாவரவியல் (தாவரவியல்தான் படித்தீர்களோ?) பதிவுகள். 

வாழ்த்துக்கள் சாந்தி.

அன்புடன் 
..... தேமொழி 

amaithi cchaaral

unread,
Jul 25, 2013, 1:06:36 PM7/25/13
to vall...@googlegroups.com
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தேமொழி,

படித்தது விலங்கியலென்றாலும் செடிகள், பூக்கள் மேல் விருப்பம் என்பதை விட பைத்தியம் என்றே சொல்லலாம் 

2013/7/25 தேமொழி <them...@yahoo.com>

சாந்தின்னா சாந்திதான்.

எனக்கு மிகவும் பிடிப்பது ... நீங்கள் கிருஷ்ண கமலம், பேரீச்சைமரம், கூந்தற்பனை போன்று பகிர்ந்து கொள்ளும் தாவரவியல் (தாவரவியல்தான் படித்தீர்களோ?) பதிவுகள். 

வாழ்த்துக்கள் சாந்தி.

அன்புடன் 
..... தேமொழி 

 
அன்புடன்,
330.gif

Parvathy Ramachandran

unread,
Jul 26, 2013, 12:28:00 AM7/26/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, Groups
மனமார்ந்த நல்வாழ்த்துகள் திருமதி.சாந்தி அவர்களே!!

மிக்க அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

amaithi cchaaral

unread,
Jul 26, 2013, 1:44:33 AM7/26/13
to vall...@googlegroups.com
மிக்க நன்றி பாரு என்ற பார்வதி..

சாந்தின்னு கூப்பிட்டாலே போதும். 'அவர்களே' என்ற விளி வேண்டாமே. ஏதோ அரசியல்வாதிகள் பேசற மாதிரியே இருக்கு. 
330.gif

Parvathy Ramachandran

unread,
Jul 26, 2013, 1:56:56 AM7/26/13
to vall...@googlegroups.com
அப்படியே கூப்புடுறேன். பார்வதியை வுட பாருவே நல்லாருக்கு. டாங்க்ஸூ. 

பார்வதி இராமச்சந்திரன்.

amaithi cchaaral

unread,
Jul 28, 2013, 11:10:15 PM7/28/13
to வல்லமை, tamizhsiragugal, Groups, பண்புடன்

மழைப்பேச்சு கேட்க வாங்க..

எதிரே வரும் வாகனத்திற்காக ஒதுங்குவதை விட, அது தெறிக்க வைத்துச்செல்லும் மழைத்தண்ணீரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கும் மனிதர்களே அதிகம்.. ஸ்ஸ்ஸப்பா.. 

வருணரிடம் ஒப்படைத்துச்சென்ற மும்பை கரைந்திருக்கிறதா? அல்லது அப்படியே இருக்கிறதா? என்பதைப் பார்ப்பதற்காக ஒரு நாள் விசிட் வந்திருக்கிறார் சூரியர். காலையிலிருந்து வெய்யிலடிக்கிறது.

மழைக்காலத்தில் தண்ணீரைத்தான் வெந்நீராய்த்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள், 'தேவையில்லை அப்படியே அருந்துங்கள்' என்கிறார்கள் மினரல் வாட்டர் கம்பெனியினர்.. ஒரே கொயப்பமப்பா.
நாலு சக்கர வாகனத்தில் செல்லும்போது தேரில் அசைந்தாடிச்செல்லும் உணர்வையும், இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஒட்டகத்தில் பயணிக்கும் உணர்வையும் தருகின்றன மழை நீர் நிரம்பிய குண்டுகுழிகள். ஸ்ஸ்ஸப்பா..

மழைக்கோட்டின் தொப்பியிலிருந்து வழியும் தண்ணீரை உள்ளங்கையில் பிடித்துத் தெறித்து, குடைக்குள் தலை நனையாமல் வரும் அம்மாவின் முகத்தை நனைக்கிறது குறும்புக்குழந்தையொன்று.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர் குடை பிடிப்பதால் இருவருமே நனையாமல் செல்லலாம் என்பதைக் கண்டு கொண்டதால், மும்பையில் மழைக்கோட்டுகள் வியாபாரம் டல்லடிக்கும் அபாயம் இருக்கிறதென்று பட்சி சொல்கிறது.
மழைக்கு இதமாக எத்தனையிருந்தாலும் அத்தனையிலும் விஞ்சி நிற்பது இஞ்சி,ஏலக்காய் போட்ட தேநீர்தான், என்பதைக் கண்டறிந்தவன் மிகவும் ரசனைக்காரனாக இருந்திருக்க வேண்டும்.

ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப்பெண்கள் பழைய, தாத்தா காலத்து வாக்கிங் ஸ்டிக் குடைகளுக்கு மாறி வருகிறார்கள். புதியன கழிதலும் பழையன புகுதலுமாய் உருளுகிறது ஃபேஷன் சக்கரம்.

நடந்து போவதற்குப் பதிலாக நாட்டியமாடியபடிச் செல்கிறார்கள்.. மழைநீர் தேங்கிய பள்ளங்களில் பதிக்கப்பட்டிருக்கும் சிறு கற்களின் மேல்..

தேங்கிய மழைநீரில் ஆட்டம் போடுகிறார்கள் சிறியவர்கள்,.. வீட்டினுள் வந்த நீரை ப்ளாஸ்டிக் முறமெடுத்து விரட்டுகிறார்கள் பெரியவர்கள்.. சம்பவம் நடந்தது, நடந்து கொண்டிருப்பது நடக்கப்போவது மும்பையில்..
நான்கடிக்கு ஒருமுறை முளைத்து உதிரும் நீர்ச்சிறகுகளை விரித்துப் பறந்து வருகின்றன வாகனப்பறவைகள்.

அலுவலகமோ கல்விச்சாலையோ விட்டு வெளியே வரும்போது நனையவா, குடைபிடிக்கவா என்று மனதில் நடக்கும் பட்டிமன்றத்திற்கு தலையில் நீர் தெளித்துத் தீர்ப்பளிக்கிறது மழை.

வரிசையில் செல்லும் எறும்புகளைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களினூடே குறும்புக்கார எறும்பாய், கிடைக்கும் இடைவெளிகளில் நுழைந்து செல்கிறது இருசக்கர வாகனமொன்று.

டிஸ்கி: மழைக்கால அவதானிப்புகள்.

தேமொழி

unread,
Jul 29, 2013, 12:41:55 AM7/29/13
to vall...@googlegroups.com
///நான்கடிக்கு ஒருமுறை முளைத்து உதிரும் நீர்ச்சிறகுகளை விரித்துப் பறந்து வருகின்றன வாகனப்பறவைகள்.///

ஆஹா...எங்கயோ போயிட்டீங்க  நீங்க...

..... தேமொழி 

amaithi cchaaral

unread,
Jul 29, 2013, 10:31:46 AM7/29/13
to vall...@googlegroups.com
மிக்க நன்றி தேமொழி,

amaithi cchaaral

unread,
Jul 29, 2013, 10:35:11 AM7/29/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, பண்புடன், Groups
அமைதிச்சாரல்
கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.

பறக்கும் தட்டுகளும்கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..

எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் மின்னிதழுக்கு நன்றி

amaithi cchaaral

unread,
Aug 1, 2013, 12:52:12 AM8/1/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, பண்புடன், Groups

நிழல் யுத்தம்.. (தினமலர்-பெண்கள் மலரில் வெளியானது)

கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னையோலைகளின் கைங்கர்யத்தால் தாழ்வாரத்தைத் தொட்டுத்தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது. தென்னையோலைகளின் மேல் ஓடுவதும் பின் அங்கிருந்து மதில் சுவரின் மேல் பாய்வதுமாக இரண்டு அணில்கள் தொட்டுப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. வழக்கமாக இதையெல்லாம் ரசிப்பவள் அன்று சூன்யத்தை வெறித்தவாறு படுத்திருந்தாள். அவளது பார்வையைக் கவனித்தால் அவள் மனம் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போலிருந்தது.

“புதனோட புதன் எட்டு.. நேத்து ஒன்பது.. இன்னிக்குப் பத்து. ஹூம்.. அந்தப்புள்ளையோட பேசி இன்னியோட பத்து நாளாச்சுது. “அத்தை.. அத்தை”ன்னு காலைச் சுத்திச்சுத்தியே வளர்ந்த புள்ளை. இன்னிக்கு அது என்னியப்பாத்தாலே வெலகிப்போற மாதிரி ஆக்கிட்டாரே இந்தப் பெரிய மனுஷன்.. வயசான காலத்துல புத்தி இப்படியா போகணும்?” நினைக்கும்போதே கரகரவென்று கண்ணீர் ஊற்றெடுத்து கையின் வழி சொட்டித் தரையை நனைத்தது. அப்படியே படுத்துக்கிடந்தவள் பெருமூச்சுடன் எழுந்தமர்ந்து, கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள். ஒரு கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தவளின் கை சுளீரென்று வலித்த இடுப்பை அனிச்சைச்செயலாகப் பற்றிக்கொண்டது. முந்தானையை உதறி அதிலேயே முகத்தைத்துடைத்துக்கொண்டு இடுப்பில் செருகிக்கொண்டவள் அடுக்களையை நோக்கி நடந்தாள்.

சாயந்திர டிபனுக்காக நனைத்து ஒட்டப்பிழிந்த அவலைத் தாளிதத்தில் போட்டுக்கிளறியவள் ஒரு கை தண்ணீரை எடுத்து அதில் பட்டும் படாமல் தெளித்தாள். சுர்ர்ர்ர்ர்.. என்ற ஓசையுடன் ஒன்றிரண்டு அவல் துகள்கள் குதித்தன. மூடி போட்டு வெந்ததும், உப்பு சரி பார்த்து கைப்பிடித்துணியால் கை சுட்டு விடாமல் இறக்கி வைத்தாள். “அவலு தாளிச்சதுன்னா ஆலாப்பறப்பாளே” மனதுக்குள் நினைத்தபடி ஒரு கிண்ணத்தில் அள்ளி வைத்துக்கொண்டு முந்தானையால் பொதிந்துகொண்டு கொல்லைப்புறத்துக்குச்சென்றாள். இடது பக்க வீட்டை நோக்கி மண் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எட்டிப்பார்த்தாள். எதிர்பார்த்தது கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் “ ஏட்டி,.. இந்தா. அவலு தாளிச்சேன், வந்து வாங்கிக்கோ” என்று அழைத்தாள்.

அந்தப்பக்கம் அமர்ந்திருந்த இளம்பெண் அதைக்காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

மறுபடி மறுபடி அழைத்துப்பார்த்துச் சலித்த விசாலாட்சி, ”ஏட்டி,.. பெரியவங்க இன்னிக்கு சண்டை போட்டுக்கிடுவாங்க, நாளைக்கு சேர்ந்துக்கிடுவாங்க. நீ எதுக்கு நடுவுல வாரே? உனக்கும் எனக்கும் என்ன சண்டை? நீ எங்கிட்ட பேசுறதுக்கு என்னா? வீம்பு பிடிக்காதே” என்று கெஞ்சினாள்.

“ஆமா, வீம்பு பிடிக்கிறாங்க வீம்பு. இவங்க வான்னா வரணும்,.. போன்னா போகணுமா?.. களவாணிக வீட்டுக்கெல்லாம் இவங்க வந்தா இவங்க கவுரவம் என்னாவுறது?” என்று வேண்டுமென்றே சத்தமாகப்புலம்பி விட்டு அந்தப்பெண் வீட்டினுள் சென்று விட்டாள்.

பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் விசாலாட்சி. இதே மாதிரியான ஒரு சாயந்திரத்தில்தான் அந்த இரண்டு குடும்பங்களுக்குமிடையேயான பிளவின் அஸ்திவாரத்தில் முதல் கல் விழுந்தது. இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு ஆற மாட்டேன் என்கிறது அவளுக்கு.

அந்த மாலைப்பொழுதில்,..

“காப்பி ஆறிப்போவுது. இன்னுமா குடிக்காம வெச்சிருக்கீங்க?.. இது கொள்ளாம். பொறவு “ஆறிப்போச்சு சூடாக்கித்தா”ன்னு வந்து நிப்பீங்க. அத சூட்டோட குடிச்சாத்தான் என்ன?” வாசலை நோக்கி எதற்கோ வந்தவள் டீபாயின் மேலிருந்த காபியின் மேல் படிந்திருந்த ஆடையை விரலால் எடுத்துச் சுண்டியவாறே கேட்டாள்.

“ஒரு நிமிஷம் இரு வாரேன். மளிகைக்கு ஐயாயிரம், பாலுக்கு ஆயிரம், ம்… அப்றம்,.. அவ்ளோதான்” சொல்லியபடியே டைரியில் எழுதியிருந்த லிஸ்டைச் சரி செய்து பேனாவால் டிக் செய்த சொக்கலிங்கம், ஒற்றைத்தாளாய் மீதியிருந்த ஐநூறு ரூபாய் பணத்தை டைரியின் உள்ளேயே வைத்து மூடினார். பேனாவின் மூடியைத்திருகி மூடியவர் கையில் அப்பியிருந்த மசியைத் தலையில் தேய்த்துக்கொண்டார்.

“என்ன அத்தான்?.. காப்பி குடி நடக்குது போலுக்கு.” மிதியடியில் காலைத்தேய்த்துத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தார் குரலுக்குச் சொந்தக்காரர். கூடவே நுழைந்தனர் ஒன்றிரண்டு நண்பர்கள்.

“யாரு?.. பெருமாளா?.. வா.. வா.. சாலாச்சி, திருக்கழுக்குன்றம் கழுகு பதிவா வர்ற நேரம் தப்பினாலும் தப்பும், ஒங்கண்ணன் காப்பி நேரத்துக்கு வாரது தப்பாது. போயி சூடா கொண்டா” 

“எங்க அண்ணனை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தின்ன சோறு செரிக்காதே. மலைக்குப் போனாலும் மச்சான் தயவு வேணும்ன்னு சொல்லுவாங்க.  எங்கண்ணங்கிட்ட  பார்த்துப் பேசுங்க  ஆமா,.. சொல்லிட்டேன்”  என்று சிரித்துக்கொண்டே வந்தவள் “இந்தாங்கண்ணே” என்று டம்ளர்களை அண்ணனிடமும் மற்றவர்களிடமும் கொடுத்து விட்டு உள்ளே போனாள்.

மச்சானும் மச்சினனும் நாட்டு நடப்புகளைப்பேசிக்கொண்டிருந்தார்கள். “ஊர் ஞாயம் பேச ஆரம்பிச்சா ரெண்டு பேருக்கும் நேரம் போறதே தெரியாதே” என்று புன்னகையுடன் நினைத்தபடி அடுக்களையில் இரவுச் சமையலுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டாள் அவள். கால் மணி நேரம் சென்றிருக்கும். வாசல் மணி அழைத்தது. எழுந்து வாசலுக்குச் சென்றார் சொக்கலிங்கம்.

“என்னடா?..  “

“அப்பா காலைல வந்த பேப்பரை வாங்கிட்டு வரச்சொன்னா மாமா” 

உள்ளே வந்து ஹாலெங்கும் தேடி எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டு வந்தார். “சரி,.. அப்போ நான் வீட்டுக்குப் புறப்படறேன்” என்று எழுந்த பெருமாள், பேயறைந்த முகத்துடன் எதையோ தேடிக்கொண்டிருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்து ஒரு நிமிடம் நின்று “ என்ன தேடுறீங்க அத்தான்?” என்றார்.

அவர் அதைக் காதிலேயே வாங்கவில்லை. வாய் மட்டும் தன்னிச்சையாகப் புலம்பிக்கொண்டிருந்தது. கைகள் மேஜை இழுப்பறையைத் திறந்து கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தன.

“இப்பத்தானே உள்ளே வெச்சேன். எங்கே போச்சு?” 

“என்ன போச்சுங்கறீங்க”

“காணலை.. கை கால் முளைச்சு நடந்து போயிருக்குமா? இதென்ன அதிசயமா இருக்கு”

“இப்படி மொட்டையாச் சொன்னா என்னத்தைப் புரியும்?. எதைக்காணலைன்னு சொல்றீங்க?”

“டைரிக்குள்ள வெச்சிருந்த ரூவாயக் காணலைய்யா. ஐநூறு ரூவாயாச்சே..”

“ஐநூறு ரூவாயா? அத பீரோவுல வைக்காம டைரிக்குள்ளயா வெச்சீங்க. சரி, பீரோவுக்குள்ள வச்சுட்டு மறந்து போயி வேற இடத்துல தேடிட்டிருக்கப்போறீங்க. ஒங்களுக்குத்தான் வெச்ச இடம் ஒரு நாளும் ஓர்மை இருக்கது கெடையாதே. இன்னொருக்க தேடிப்பாருங்க”

“எங்கியும் வைக்கலையே.. இப்பத்தான் நீங்க வர்றப்பதான் உள்ளே வெச்சேன். அப்றம் நாம பேசிட்டிருந்தோம், அப்றம் நான் வெளியே போனேன். இப்ப உள்ளே வந்து பார்த்தா ரூவாயக் காணலை”

“அது எப்படிக்காணாமப் போகும்?”

“அதானே எனக்கும் தெரியலை. பெருமாளு, அத்தான் கிட்ட வெளையாடலாமேன்னு நீங்க சும்மா வெளையாட்டுக்காக ஏதாவது..” என்று இழுத்தார். 

பெருமாளின் முகம் கறுத்தது. “என்னிய சந்தேகப்படறீங்களா?.. ரூவாய நான் எடுத்துருப்பேன்னு நினைக்கிறீங்களா?” நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

“நீங்க வேணும்ன்னு எடுத்திருப்பீங்கன்னு சொல்லலை. சும்மா வெளையாட்டுக்கு செஞ்சீங்களான்னுதான் கேட்டேன்.”

“ரெண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்யா. ச்சே.. ஒங்கள என்னவோ பெரிய மனுஷன்னு நினைச்சேன். புத்தியைக் காட்டிட்டீரே. இத்தனை பேருக்கு நடுவுல சபையில மூக்கறுத்துட்டீரே”

சொக்கலிங்கம் சூடானார் ”தங்கச்சி வீட்டுலயே கையை நீட்டுறது மட்டும் நல்ல புத்தியோ?”

அவ்வளவுதான் பெருமாளின் ஆத்திரம் தலைக்கேறியது. “பொண்ணையும் கட்டிக்கொடுத்து களவாணிங்கற பட்டமும் வாங்கிக்கிட்டாச்சு. இத்தனை பேரு இருக்கையில அது எப்படிய்யா என்னைப் பார்த்து இப்படிக் கேக்கத்தோணிச்சு?. அப்படி இத்தனி நாளு உங்க வீட்டுலேர்ந்து எத்தனை பொருளைய்யா திருடியிருக்கேன்?. போதும்யா உங்க சகவாசம்” என்றபடி விறுவிறுவெனப் படியிறங்கி விட்டார்.

நடந்த விவரமறிந்த விசாலாட்சிதான் பாவம் திருகையிலகப்பட்ட தானியமாய் அரைபட்டுக்கொண்டிருந்தாள். இந்தப்பக்கம் கணவன், அந்தப்பக்கம் சகோதரன். பாவம்… யாருக்குத்தான் பரிந்து பேசுவாள். மடை திறந்த வெள்ளமென சொக்கலிங்கம் திட்டிக் கொட்டிக் கொண்டிருந்த வார்த்தைகளனைத்தையும் மௌனமாக உள்வாங்கிக்கொண்டிருந்தாள். விஸ்வரூபமெடுத்தவர் ஒருவாறு அடங்கி அமர்ந்தபோது டைரியின் பக்கங்கள் மட்டும் மௌனத்தைக் குலைத்து காற்றில் படபடத்துப் பேசிக்கொண்டிருந்தன. எழுந்து அதை பீரோவில் வைப்பதற்காக எடுக்கப்போனவள் திடுக்கிட்டாள். படபடத்த பக்கங்களுக்கிடையே மறைந்து மறைந்து பளிச்சிட்டுக்கொண்டிருந்தது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு.

பரபரப்புடன், “ஏங்க,.. இங்கே பாருங்க” என்று கூவினாள்.

“அடச்சை.. இது இங்கேயா இருக்கு. தாளுக்களுக்கு இடையில ஒட்டிக்கிட்டிருந்ததுல கவனிக்காம உட்டுட்டேன். இப்ப என்ன செய்யறது?”

“ஆமா,.. இப்பக் கேளுங்க. எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டு என்னத்தையாம் செய்ய வேண்டியது. பொறவு முழிக்க வேண்டியது. ஒங்களுக்கு இதே பொழப்பாப்போச்சு. இருங்க.. வாரேன்” என்றவள் டைரியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்துக்கு ஓடினாள். பின் வாசல் வழியாக அண்ணனின் வீட்டுக்கு. 

இதற்குள் செய்தி அங்கேயும் எட்டியிருந்தது. அனைவரின் முகங்களும் இறுகிப்போய்க்கிடந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் அண்ணனின் அருகில் சென்றாள். டைரியை விரித்து பக்கங்களுக்கிடையில் இருந்த ரூபாயைக் காட்டினாள்.

“தப்பு நடந்து போச்சுண்ணே.. ஒக்கல்ல புள்ளைய வெச்சுட்டு ஊர் முழுக்கத் தேடுன மாதிரி ரூவாய இதுக்குள்ள வெச்சுட்டு வேண்டாத்த பேச்சு பேசிட்டார் அந்த மனுஷன். எனக்காச்சுட்டி அவர மன்னிச்சுருங்க. மயினி,.. நீங்களும் எங்கள மன்னிச்சுருங்க. அண்ணங்கிட்ட எடுத்துச் சொல்லுங்க..” என்று அண்ணியின் மோவாயைத் தொட்டுக் கெஞ்சியவள், “ஏட்டி, நீயாவது அப்பாட்ட சொல்லுட்டி,. நீ சொன்னா அப்பா கேப்பாரு” என்று அண்ணன் மகளைத்துணைக்கழைத்தாள்.

“மன்னிக்கச் சொல்லுகதுக்கு என்ன இருக்கு அத்த?.. என்னதான் சொந்தம்ன்னாலும் நாலு பேத்துக்கு மத்தியில மாமா எங்க அப்பா மேல திருட்டுச் சொல்லு சொல்லிட்டாரே. இனிமே யார் வீட்டுக்கும் போனாலும் எப்படி மன சமாதானமா போக முடியும்? என்னத்தையும் காணலைன்னா எங்களைச் சொல்லிருவாங்களோன்னு பயந்துல்லா கெடக்கணும்.” சூடாக வந்தது பதில்.

அன்றிலிருந்து தொடங்கியது நிழல் யுத்தம். தெருவில் எதிரெதிரே வரும்போது முகத்தைத் திருப்பிக் கொள்வதில் ஆரம்பித்து, அந்த வீட்டுப்பெண்கள் குழந்தைகள் கூட கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காமல் இருப்பது வரை யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கமே நேரடியாகப் போய் மன்னிப்புக் கேட்டுச் சமாதானப்படுத்த முயன்றும் இறங்கி வரவில்லை. “சபையில மூக்கறுத்துட்டு தனியா வந்து மருந்து தடவுதீங்களா?” என்று விறைப்பாகப் பதில் வந்ததாகச் சொன்னார் விசாலாட்சியிடம். 

ஊருக்குள்ளும் அரசல் புரசலாகச் செய்தி பரவியிருந்ததில் வெளியே தலை காட்ட இரு குடும்பத்தினருமே சங்கடப்பட்டுக்கொண்டிருந்தனர். நகமும் சதையுமாக இருந்தவர்களை ஊர் மெச்சிய காலம் போய், இப்போது ஊருக்கு அவலாக தங்கள் வீட்டு சங்கதி ஆகி விட்டதே என்று விசனப்பட்டனர். அப்படியும் இப்படியுமாக இரண்டொரு மாதங்கள் உருண்டோடின. முன் பகல் நேரத்துத் தாளித வாசனையாய் வன்மம் பரவிக்கொண்டுதான் இருந்தது. பலகாரங்கள் பகிர்ந்து கொள்ளாமல், பிடிக்குமே என்று பதார்த்தங்கள் கொடுத்தனுப்பப் படாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

வழக்கம்போல் சாயந்திரம் கோயிலுக்குப் புறப்பட்டார் சொக்கலிங்கம். பிரகாரம் சுற்றி வந்து பிரசாதம் வாங்கி விட்டு, “என்னப்போ… ஈஸ்வரா” என்று மெலிதாய் அந்த ஈஸ்வரனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு கோயிலின் திண்ணையை நோக்கி நகர்ந்தார். தோளிலிருந்த துண்டை எடுத்துத் திண்ணையில் பட்டும் படாமல் அடித்துத் தூசியைத் துரத்தி விட்டு உட்கார்ந்து கொண்டார். 

கோயிலுக்குள்ளிருந்து வருவது,.. யாரது?.. பெருமாளா? அவரேதான். ‘கிட்டப்போயி பேசினா சுள்ளுன்னு விழுவான். அதுக்காக அப்படியே உட்டுர முடியுமா?’ நினைத்தபடி எழுந்து அருகில் சென்றார். இவரைக் கண்டதும் பெருமாள் விலகி நடக்க முயன்றார்.

“செரி,.. போட்டும். தப்பு நடந்துட்டுது. இன்னும் எத்தனை தடவதான் ஒங்க கிட்ட கெஞ்சட்டும் நான்?. மன்னிச்சு உடுவீங்களா.. அத விட்டுட்டு இன்னும் அதையே புடிச்சுத் தொங்கிட்டிருக்கீங்களே” என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டு நயமாகப் பேச்சைத்தொடங்கினார் சொக்கலிங்கம்.

“சபையில அவமானப்படுத்துன ஒம்ம கிட்ட எனக்கென்ன பேச்சு?.. வழிய விடுங்க.” என்றபடி கையை விடுவித்துக்கொள்ள முயன்றார் பெருமாள். இருவரின் கைகளிலும் விரோதத்தின் பழைய விறைப்பு இல்லை. பாசத்தின் அதிர்வுகளையும் எங்கோ ஒரு ஆழத்தில் உணர முடிந்ததில் கண்கள் பனித்தன இருவருக்கும்.

“சரி,.. இன்னும் அதையே சொல்லிட்டிருக்காதீங்க. அவசரப்பட்டு ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்தையும் நானே கெடுத்துட்டேன். இப்ப என்ன?.. இத்தனை பேர் நெறைஞ்சுருக்காங்க இந்தக்கோயில்ல. எல்லாத்துக்கும் மேல என்னப்பன் தாணுமாலயன் கருவறைக்குள்ள உக்காந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ‘நடத்துங்கடே’ன்னு சொல்லி சிரிச்சிட்டிருக்கான். இவங்க முன்னாடி மன்னிப்பு கேட்டா போதுமா?.. எல்லோரும் நல்லாக்கேட்டுகிடுங்க. என் மச்சினர் அப்பாவி, ஒரு பாவமும் அறியாத்தவர். அவசரப்பட்டு நாந்தான் அவரு மேல திருட்டுப்பழிய போட்டுட்டேன். என்னய மன்னிச்சுக்கிடுங்க” என்று சொன்னவர் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் மளாரென்று பெருமாளின் காலில் விழுந்தார் அத்தனை பேர் முன்னாலும்.

அவரவரும் நின்ற இடத்திலேயே நின்று போயினர். முதலில் சுய நினைவுக்கு வந்த பெருமாள்தான் துள்ளி விலகி “என்ன காரியம் செஞ்சீங்க. எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க. எங்கால்ல விழறதாவது? மொதல்ல எந்திரிங்க..எந்திரிங்க சொல்றேன்” என்று தங்கை கணவரை எழுப்பித் தோள் சேர்த்துக் கொண்டார். 

“மனசுல ஒண்ணும் வெச்சுக்கிடாதீங்க..” என்று மச்சினரின் தோளில் சாய்ந்து விம்மினார் சொக்கலிங்கம்.

“அடப்போங்க அத்தான்.. ஒங்களை எனக்குத்தெரியாதா?.. அவசர புத்தியில ஏதாச்சும் செஞ்சுட்டு முழிப்பீங்க. என்ன?.. இந்தத்தடவை என் கழுத்துக்கு கத்தி வெச்சிட்டீங்க. சரி, போட்டும். ஆண்டவன் சன்னிதியில சொன்னதே போறும் எனக்கு.. சவத்தெ விடுங்க. நம்ம மேல பட்ட திருஷ்டி வெலகிச்சுன்னு நினைச்சுக்கறேன். என்ன சிக்கல்ன்னா வீட்டுல இருக்கற உருப்படிகளைச் சமாதானப்படுத்த கொஞ்சம் காலம் செல்லும். எல்லாம் சரியாயிரும்.. நீரடிச்சா நீர் வெலகப்போவுது” என்று அவர் சொன்ன தினுசிலேயே தன்னை மன்னித்து விட்டார் என்று சொக்கலிங்கத்திற்குப் புரிய மனசு லேசானது. 

கை கோர்த்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினர் இரண்டு பெரியவர்களும்.
டிஸ்கி: இந்தச்சிறுகதையை 'பெண்கள் மலரில்' வெளியிட்ட தினமலருக்கு நன்றி.

தேமொழி

unread,
Aug 1, 2013, 12:56:10 PM8/1/13
to vall...@googlegroups.com
வாழ்த்துக்கள் சாந்தி. கதை பிடித்தது. 

..... தேமொழி 


Aadhiraa

unread,
Aug 1, 2013, 1:32:33 PM8/1/13
to vall...@googlegroups.com
வாழ்த்துகள் தோழி. கதை  ரசனையாக உள்ளது.


2013/8/1 தேமொழி <them...@yahoo.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
அன்புடன்,
முனைவர். ப. பானுமதி 

amaithi cchaaral

unread,
Aug 1, 2013, 10:09:42 PM8/1/13
to vall...@googlegroups.com
வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி தேமொழி,

amaithi cchaaral

unread,
Aug 1, 2013, 10:10:18 PM8/1/13
to vall...@googlegroups.com
வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி ஆதிரா,

Tulsi Gopal

unread,
Aug 1, 2013, 10:25:14 PM8/1/13
to vall...@googlegroups.com
அருமையான கதையும் நடையும்!

இனிய பாராட்டுகள்!


2013/8/2 amaithi cchaaral <amaithi...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
என்றும் அன்புடன்,
துளசி

amaithi cchaaral

unread,
Aug 2, 2013, 3:05:02 AM8/2/13
to vall...@googlegroups.com
 நன்றிகள் துள்சிக்கா,

amaithi cchaaral

unread,
Aug 4, 2013, 10:36:43 PM8/4/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, பண்புடன், Groups

மிசல் பாவ்.. அம்ச்சி மும்பை ஸ்பெஷல்.

மழைக்காலமும் அதற்குப் பின் குளிர்காலமும் வந்தாலே, சூடாகவும் சுவையாகவும் காரசாரமாகவும் நச்சென்று நாலு அயிட்டங்களைக் கேட்கிறது நான்கு இஞ்ச் நீளம் கூட இல்லாத இந்தப் பொல்லாத நாக்கு. இன்றைக்கு அதை 'மிசல் பாவ்' கொடுத்து அடக்குவோம். 'மிசல்பாவ்' மஹாராஷ்ட்ராவில் வடாபாவுக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. எல்லா நேரத்திற்கும் ஏற்ற உணவு. டிபனாகவோ அல்லது லஞ்ச், மற்றும் ப்ரேக்ஃபாஸ்டாகவோவும் சாப்பிடப்படுகிறது. சின்னச்சின்ன டிபன் ஸ்டால்களிலும்கூட இதற்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. வாருங்கள்,.. இதை நாம் வீட்டிலும் செய்து ரசித்துப் புசிப்போம்.

மிசல் செய்ய அரைகப் வெள்ளை அல்லது பச்சைப்பட்டாணி, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் சோளே மசாலாத்தூள், இரண்டு தேக்கரண்டி சமையல் எண்ணெய், உப்பு, இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், ஒரு பெரிய தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு டிஷ்யூ டவல், இரண்டு சின்னக்கிண்ணங்கள், ஒரு பெரிய கிண்ணம், எலுமிச்சை இவற்றுடன் கொஞ்சம் பொறுமையும் தேவை.

முதலில் பட்டாணியை அளந்து எடுத்துக்கொள்ளவும். அரை கப் அளவு இருக்கிறதா என்று சரிபார்க்கவும். சரியாக இருந்தால் உங்கள் திறமைக்கு ஷொட்டும், இல்லையென்றால் குட்டும் கொடுத்துக்கொள்ளவும். இதை வேண்டிய அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். வேண்டிய அளவு என்றால் எவ்வளவு என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இந்தத்திருநாட்டில் உண்டு. ஆகவே அதைப் பயன்படுத்திக்கொண்டு, பட்டாணி நன்கு முழுகி நீச்சலடிக்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி விட்டு, பொறுமை என்னும் நகையை அணிந்து கொண்டு கடலை நன்கு ஊறும் வரைக்கும் வேறு ஏதாவது வெட்டி வேலை பார்க்கவும்.

கடலை ஊறியபின் தண்ணீரை வடித்து வைக்கவும். முதலில் பூர்வாங்க வேலைகளைச் செய்து வைக்கலாம். எலுமிச்சையைத் துண்டுகளாக அரியவும். ஒரு தக்காளியை வட்டவட்டமாக அரிந்து கொள்ளவும். அதன் பின் வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் நறுக்கும்போது வழியும் கண்ணீரை டிஷ்யூவால் துடைத்துக் கொள்ளவும். 'இதை' மட்டும் வீட்டிலிருக்கும் ரங்க்ஸ்களின் முன்னால் செய்தால் பல அற்புதங்கள் நடக்கும்.

இப்போது குக்கரையோ அல்லது அடிப்பாகம் கனமான பாத்திரத்தையோ எடுத்துக்கொள்ளவும். ‘குக்கர் என்றால் குக் செய்பவர்தானே?. எங்க வீட்டில் ‘*****’தான் குக்கர் என்றெல்லாம் மொக்கை போடக்கூடாது. அழுது விடுவேன் ஆமாம் :-). இப்பொழுது பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, அதில் எண்ணெய்யை ஊற்றவும். சீரகத்தைப் போட்டு வெடிக்க விட்டபின் இஞ்சியை அதில் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் தக்காளியைப் போட்டு லேசாக வதங்கியபின், மசாலாத்தூள்களையும் ருசிக்கேற்றபடி உப்பையும் போட்டு இன்னும் வதக்கவும். வெந்து குழைந்து கிடக்கும் தக்காளிக்கலவையின் மேல் பட்டாணியைப்போட்டு, மூன்று கப் தண்ணீரை ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் குளிருவதற்குள் சாப்பிடுவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம். ஒரு வெங்காயத்தைப் ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போடவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்ட வெங்காயங்களை நறுக்கும்போது கண்ணீர் வருவதில்லை என்பது இங்கே சொல்லாமல் சொல்லப்பட்ட டிப்ஸ் எனக்கொள்க. இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் கொத்துமல்லித்தழைகளை நறுக்கி வைக்கவும். இப்பொழுது ஆவி அடங்கிய குக்கரைத்திறந்து, மிசலை இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். ரொம்பவும் நீர்க்க இருப்பதைப் பார்த்து பயந்து விட வேண்டாம். தண்ணீர் நிறைய இருந்தால்தான் அதில் போடப்படும் மிக்சர் நன்கு ஊறி சாப்பிட நன்றாக இருக்கும். பின் மிசலை இன்னொரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, சாப்பிடும் இடத்தில் கொண்டு போய் வைத்துக்கொள்ளவும். 

பரிமாறும் தட்டில், மிசலை ஊற்றவும், அதன் மேல் ஒரு பிடி மிக்சரைப் போடவும். இங்கே, மும்பையில் கிடைக்கும் மிக்சரை நாங்கள் ஃபர்ஸாண் என்று சொல்லுவோம். பின் கொஞ்சம் வெங்காயத்தைத் தூவவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலையால் அலங்கரித்து, ஒரு ஸ்பூனும் போட்டு, ஒரு எலுமிச்சைத்துண்டும் வைத்து இரண்டு பாவ்கள் அல்லது ப்ரெட்டுடன் பரிமாறவும். இந்த இடத்தில், முன்னொரு முறை சாப்பிட்ட பாவ்பாஜி உங்கள் நினைவுக்குக் கண்டிப்பாக வரும். 

எலுமிச்சையை இரண்டு சொட்டுகள் மிசலில் பிழிந்து கொண்டு, ஸ்பூனால் எல்லாவற்றையும் கலக்கிக்கொண்டு பாவை குழம்பில் முக்கிச்சாப்பிடவும். விரும்பினால் இடையிடையே மிசலையும் ஸ்பூனால் சாப்பிடலாம். மும்பைக்கர்களைப் பொறுத்தவரை இது ரெடி டூ ஈட் அயிட்டம். மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைப்பவற்றை வாங்கி வந்து வீட்டில் சட்டென்று ரெடி செய்வதுதானே ரெடி டூ ஈட்டின் தத்துவம் :-). தத்துவத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பது எப்படியென்றால், மும்பை மார்க்கெட்டுகளில் நவதானியங்களைத் தனித்தனியாக ஊறவைத்து முளைகட்டி விற்கப்படுபவற்றை, ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போதோ, அல்லது மிசல்பாவ் செய்ய வேண்டுமென்று நினைத்தவுடனோ சட்டென்று தேவைக்கேற்ப ஊற வைத்த பட்டாணி, மற்றும் இத்யாதிகளை வாங்கி வந்து டின்னருக்கு ஐந்து நிமிடத்தில் மிசல் பாவ் ரெடி செய்வதுதான். தன் கையே தனக்குதவி என்றிருப்பவர்கள் தனித்தனி டப்பாக்களில் தலா நூறு கிராம் விரும்பிய தானியங்களை ஊற வைத்து முளைகட்டி ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம். வேண்டிய சமயம் வெளியே எடுத்தால் விதவிதமான அயிட்டங்களை நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம்.

Granny Visalam

unread,
Aug 5, 2013, 5:25:11 AM8/5/13
to vall...@googlegroups.com
ஆஹா  தாதர் சர்கிளில் இதற்கு என்று ஒரு கடை மிகவும் பிரசித்தி பெற்றது என் வீடும் தாதரில் {தாய் வீடு} இருப்பதால் போனால் இந்த மாதிரி சாட் ஐட்டம் தான் எனக்கு டின்னர் . . தோசை இட்லி எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிடுவேன் என் பழைய ஞாபகம் திரும்பி வருகிறது  மிக்க நன்றி  சாந்தி   


2013/8/5 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--

Parvathy Ramachandran

unread,
Aug 5, 2013, 8:27:05 AM8/5/13
to vall...@googlegroups.com

ஆஹா!! படிக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது. அவசியம் செய்து பார்க்கிறேன். தாங்கள் எழுதியிருக்கும் விதமே அசத்தல்!!. மிக்க நன்றி.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

Parvathy Ramachandran

unread,
Aug 5, 2013, 8:34:53 AM8/5/13
to vall...@googlegroups.com
அருமையான சிறுகதை!!. நீரடித்து நீர் விலகாது என்பதைப் போல், சொந்தங்கள் வன்மத்தை மறந்து, ஒன்று சேர்ந்த விதம் மனதை நெகிழ்த்தியது. பகிர்விற்கு மிக்க நன்றி.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


amaithi cchaaral

unread,
Aug 5, 2013, 9:35:29 AM8/5/13
to vall...@googlegroups.com
வாசித்தமைக்கு முதலில் நன்றி விசாலம்மா. மிசல் பாவின் வாசனை உங்களை இங்கே இழுத்துக்கொண்டு வந்து விட்டது :-)

தாதர் சர்க்கிளிலா?.. அடுத்த தடவை அந்தப்பக்கம் போனால் தேடிப்பார்க்கிறேன்.

amaithi cchaaral

unread,
Aug 5, 2013, 9:36:08 AM8/5/13
to vall...@googlegroups.com
வாசித்தமைக்கு மிக்க நன்றி பாரூ.. :-)

amaithi cchaaral

unread,
Aug 5, 2013, 9:36:52 AM8/5/13
to vall...@googlegroups.com
மிக்க நன்றி பாரூ..

amaithi cchaaral

unread,
Aug 12, 2013, 12:38:55 AM8/12/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, பண்புடன், Groups

நினைவுச்சின்னங்கள் - என் காமிராப்பார்வையில்: 2 (சர்க்கா-மும்பை)

பறவைகள் வந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதோ, அல்லது கிளம்பிப் போகும்போதோ, அசுத்தப்படுத்தப் படுவதற்கும், நினைவு நாட்கள், விசேஷ நாட்களில் மாலை சுமந்து நிற்பதற்கும், எதிர்க்கட்சியினரால் உடைக்கப்படுவதற்கும் மட்டுமல்லாது, அவர்கள் வாழ்ந்த காலங்களையும் அவர்கள் செய்த செயல்களையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன அவர்களது நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்ட சிலைகள். இவ்வாறு சிலைகள் மட்டுமன்றி, ஒரு சில நிகழ்வுகளை என்றென்றும் நினைவு கூரும் வகையில் ஒரு சில கட்டிடங்களோ அல்லது அமைப்புகளோ கூட நினைவுச்சின்னங்களாக எழுப்பப்படுகின்றன.

இன்னும் சில, அப்படியெல்லாம் எந்தவொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமலே எழுப்பப்பட்டாலும் நாளடைவில் நினைவுச்சின்னங்களாக ஆகிவிடுகின்றன. மும்பையில் 'க்ராஸ் மைதான்' என்றழைக்கப்படும் சிலுவை மைதானத்திலிருக்கும் 'சர்க்கா' அப்படியானவற்றில் ஒன்று. மும்பையிலிருக்கும் 'கேட் வே ஆஃப் இந்தியா'வைப்போன்று இப்போது சர்க்காவும் மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது. இந்த சர்க்கா 'நூரு கரீம்' என்ற ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்டது. இவர் இதை, மும்பையில் டாடா ஸ்டீல் கம்பெனியும் I&Bயும் (Indian Architect and Builder) சேர்ந்து நடத்திய architectural and engineering design போட்டிக்காக வடிவமைத்திருந்தார். நாடு முழுவதுமிலிருந்து சுமார் நூறு பங்கேற்புகள் அந்தப்போட்டியில் இடம்பெற்றன. நூறையும் பின்னுக்குத்தள்ளி விட்டு நூரு கரீமின் படைப்பு போட்டியில் வென்றது. அப்படியென்ன சிறப்பு அந்தப்படைப்பில் இருக்கிறது?.
 நாட்டியமாடும் சர்க்கா..
இந்தியா என்றதுமே எப்பொழுதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காந்தியும், சர்க்காவுமாகத்தான் இருக்கும். அன்னியப் பொருட்களைப் பகிஷ்கரித்து அவர் உபயோகிக்கச் சொன்ன சுதேசிப்பொருட்களில் முக்கிய இடம் பெற்றது கதர்தானே. அதை நூற்க அவர் உபயோகித்த சர்க்காவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் நூரு கரீம் இதை உருவாக்கியிருந்தார். 'சமகாலத்திய அளவில் இந்தியாவிற்கான அடையாளம்' என்பதைத் தலைப்பாகக் கொண்டிருந்த போட்டியில், என்றுமே இந்தியாவிற்கு முக்கிய அடையாளமாக விளங்கும் சர்க்கா ஜெயித்ததில் ஆச்சரியமென்ன! நமது தேசியக்கொடியிலிருக்கும் அசோகச்சக்கரம் கூட ஒரு வகையில் சுழலும் சக்கரத்தைக்கொண்டிருக்கும் சர்க்காவைத்தானே நினைவு படுத்துகிறது.

வட்டத்துக்குள் கட்டம் கட்டப்பட்டிருப்பதுதான் மும்பையின் மேற்கு ரயில்வேயின் தலைமையகம்..
சுமார் 30 அடி அளவு உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த சர்க்கா மும்பைக்கு வந்த விதம் சுவாரஸ்யமானது. காந்தியின் கொள்கையைப் பிரதிபலிப்பதால் இதைக் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தின் காந்தி நகரிலும், அவர் ஒரு தடவை சிறை வைக்கப்பட்டிருந்த பூனாவிலும் நிறுவ இடம் பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் சரிப்படாமல் கடைசியில், க்ராஸ் மைதானத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த ஓவல் (Organisation for Verdent Ambience and Land (OVAL)) ட்ரஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இதை இங்கே நிறுவினார்கள். இதைத்தான் 'வரணும்ங்கறது வராம இருக்காது' என்று சொன்னார்களோ :-))
கடிக்க வரும் சுறாமீனை நினைவுபடுத்துகிறது இந்தக்கோணம்..
முப்பதடி உயர அளவில் கைமுறுக்கு மாதிரியும் ஜாங்கிரி மாதிரியும் முறுக்கித் திருகிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி காட்சி தருகிறது. சர்க்கா சுழலுவதையே இதன் திருகல்கள் குறிக்கின்றனவாம். காந்தியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் கடந்த 2011-ம் வருஷம், அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று டாடா ஸ்டீலின் வைஸ் சேர்மன் முத்துராமன் முன்னிலை வகிக்க இயக்குனர் R.K.கிருஷ்ணகுமார் திறந்து வைத்திருக்கிறார். இங்கே வரும் மக்கள் விவரம் அறிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாகக் கல்வெட்டும் இருக்கிறது. தஞ்சாவூரில்தான் கல்வெட்டு இருக்குமா என்ன? மும்பையிலும் இருக்கிறதாக்கும் :-)
வாஸ்து எதுவும் பார்க்காமலேயே இந்த சர்க்கா சரியான இடத்தில் அமைந்து விட்டது போலிருக்கிறது. ஒரு புறம் வி.டி ஸ்டேஷன், அடுத்த புறம் சர்ச் கேட் ஸ்டேஷன் என்று இரண்டு பிரபலமான ரயில் நிலையங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு மும்பையின் பிரபலமான ஃப்லோரா ஃபவுண்டனுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. வி.டி. மற்றும் சர்ச் கேட் நிலையங்களை இணைக்கும் பாதையாகவும் இந்த மைதானம் அமைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கும், பொழுதைப்போக்க வருபவர்களுக்கும் குறைவில்லை. இந்தப்பாதைதான் மும்பையின் சரித்திரப்புகழ் பெற்ற காவூ கலி(khau gali) என்று அழைக்கப்படுகிறது. மராட்டியில் காவூ என்றால் தின்பண்டம். gali என்றால் தெரு அல்லது சந்து என்று அர்த்தம். பேல்பூரி, சேவ்பூரி, வடாபாவ், ஆலு டிக்கி, போன்றவையும் மேலும், விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் எப்போதும் விற்பனையாகிக்கொண்டிருப்பதால் இரண்டு ஸ்டேஷன்களிலும் இருந்து வெளி வரும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குப்போகுமுன் இங்கு வந்து பேட்பூஜா அதாவது வயிற்றுக்கும் சிறிது ஈயாமல் செல்வதில்லை. பற்றாக்குறைக்கு கிரிக்கெட்டு விளையாடும் சிறுவர்களுக்கும் குறைவில்லை. எப்பொழுதும் ஜேஜேவென்று இருக்கும், புகழ்பெற்ற ஃபேஷன் ஸ்ட்ரீட்டும் இங்கேதான் இருக்கிறது.
புதுக்கோணம்.. புதுத்தோற்றம்..
சர்க்காவின் அருகிலேயே குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டுச் சாதனங்களடங்கிய பூங்காவும், வருபவர்கள் அமர்ந்து இளைப்பாற சிமிண்டுத்திண்ணைகளும் இருப்பதால் குடும்ப சகிதம் வருபவர்களும் உண்டு. வி.டி ஸ்டேஷனிலிருந்து டாக்சி மூலம் இங்கே வரலாம். ஆசாத் மைதான் அருகே என்று சொன்னால் நிறையப்பேருக்குப் புரியும். முதன் முதலில் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு எலும்புக்கூடு போன்று வினோதமாகத் தோன்றத்தான் செய்கிறது. இதற்காகவே மக்கள் இதன் முன் நின்று படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குழந்தைகளோ இதையும் ஒரு விளையாட்டுப்பொருளாக எண்ணி ஏணிப்படிகளில் ஏறுவதுபோல் கடகடவென்று ஏற ஆரம்பித்து விடுகின்றன. இதனருகில் செல்ல அனுமதியில்லை என்றாலும், வெள்ளை வெளேரென்று தந்தம் போல் மின்னும் இந்த அமைப்பு கிட்டே போய்த் தொட்டுப்பார்க்கத் தூண்டுவதென்னவோ நிஜம்.

தேமொழி

unread,
Aug 12, 2013, 12:55:34 AM8/12/13
to vall...@googlegroups.com
புதிய தகவலுக்கு நன்றி சாந்தி.

///குழந்தைகளோ இதையும் ஒரு விளையாட்டுப்பொருளாக எண்ணி ஏணிப்படிகளில் ஏறுவதுபோல் கடகடவென்று ஏற ஆரம்பித்து விடுகின்றன.///

அவர்களைச் சொல்லி குற்றமில்லை, எனக்கும் அப்படித்தான் தோன்றியது.  எனக்கு இந்தச் சிலை புரியவில்லை என்று சொல்லிக்கொல்வதைத் தவிர வேறு வழியில்லை.  பள்ளிச் சிறுவர்கள் காமா சோமா என்று செய்த டி என் ஏ டபுள் ஹெலிக்ஸ் சயின்ஸ் ப்ராஜெக்ட் மாடல்  போல இருக்கிறது. 

அன்புடன்
..... தேமொழி 

amaithi cchaaral

unread,
Aug 14, 2013, 10:16:11 PM8/14/13
to Groups, tamizhsiragugal, பண்புடன், வல்லமை

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்"

பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-)

நகர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்களுக்காக..




'இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..


2013/8/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2வது படம் அழகாக உள்ளது. வித்தியாசமான கோண்டத்தில் இதன் சிற்பி நினைத்து வடித்திருக்கின்றார்.  

சுபா


2013/8/12 amaithi cchaaral <amaithi...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

amaithi cchaaral

unread,
Aug 17, 2013, 12:54:27 AM8/17/13
to Groups, tamizhsiragugal, பண்புடன், வல்லமை

"என்னவோ போடா மாதவா.."

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் வாழ்வையும் ஈந்த எத்தனையோ தியாக உள்ளங்களைப்பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களையும் நம் வருங்காலத்தலைமுறையினருக்கு நம்மில் ஒருசிலரேனும் எடுத்துரைத்துக்கொண்டுதானிருக்கிறோம். என்றாலும் பிற பண்டிகைகளையும் காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு தினங்களையும் கொண்டாடும் அளவுக்கு நாம் குடியரசுதினத்தையும், சுதந்திரதினத்தையும் கொண்டாடுகிறோமா என்றால் வேதனைக்குரிய பதில்தான்  கிடைக்கிறது. அதிலும், "குடியரசுதினம் கொண்டாடப்படுமளவுக்குச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?.. இங்கே மட்டுந்தான் இப்படியா? அல்லது தேசம் முழுக்கவே இப்படியான மனோநிலைதான் நிலவுகிறதா!" என்பதில் எனக்கு என்றுமே சந்தேகமுண்டு..
மற்ற இடங்களில் எப்படியோ.. மும்பையில் குடியரசுதினம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. குடியிருப்புகளும் அரசாங்க அலுவலகங்களும், வீதிகளும் அன்று அட்டகாசமாக தேசியக்கொடியின் தோரணங்களாலும், வண்ணக்காகிதங்கள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையில் கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தேறும். அதன்பின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகளும் நடத்திப் பரிசளிக்கப்படும். அன்று நல்ல நேரத்தில் சத்ய நாராயணா பூஜை செய்யப்பட்டு தேச, மற்றும் மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடக்கும். மாலையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ‘ஹல்திகுங்கும்’ நிகழ்ச்சியுமுண்டு. குடியிருப்பில் அன்று லஞ்சோ அல்லது டின்னரோ கட்டாயமுண்டு.


இத்தனை அமர்க்களங்களும் வேண்டாம்.. அதில் ஒன்றிரண்டையாவது சுதந்திரதினத்தன்று கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அலுவலகங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில குடியிருப்புகளையும் தவிர மற்ற இடங்களில் கொடி கூட ஏற்றுவதில்லை. இப்படியிருக்கும் சுதந்திரத்தையும் அந்தச்சுதந்திர தினம்தானே நமக்கு வழங்கியிருக்கிறது. 

சென்ற சுதந்திர தினத்தன்று, வழக்கம்போல் புகைப்பட வேட்டைக்காகப் புறப்பட்டேன்.(வண்டிக்கருகில் வந்த விற்பனையாளர்களைத்தவிர சாலைக்காட்சிகளெல்லாம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குற்றம் குறை பொறுத்தருள்க). ஒன்றிரண்டு இடங்களிலாவது பொதுஇடங்களில் கொடியேற்றும் வைபவம் நடக்கும்.. பார்க்கலாம், காமிராவிலும் பிடிக்கலாம் என்று ஆசையோடு கிளம்பிய எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வழியில் தென்பட்ட ஒன்றிரண்டு மாண்டிசோரி நர்சரிப்பள்ளிகளில் மட்டும், மூவர்ணப்பலூன்களும் கொடிகளுமாக அலங்காரங்களும் தேசபக்திப்பாடல்களுமாகக் குழந்தைகள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏதோ.. குழந்தைகளாவது கொண்டாடுகிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதைத்தவிர தெருவில் சுதந்திரதினம் என்பதற்கான எந்த அடையாளமுமில்லை. அரசு அலுவலகங்களிலும்கூட பிரத்தியேகமான அலங்காரங்கள் எதுவும் தென்படவில்லை. போனால் போகிறதென்று கொடி மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. 



தொல்லைக்காட்சியின் முன் மக்கள் முடங்கி விட்டதால், அதிகம் ஆளரவமற்ற கடைத்தெருவிலும் சாலைகளின் சிக்னல்களிலும் கொடிகளை விற்றுக்கொண்டிருந்தவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்தியமாக இதுவும் இன்னொரு நாளாகத்தான் தெரிந்தது. வீட்டுக்குத்திரும்பும்போது வாங்கி வந்த காகிதக்கொடிகளில் ஒன்றைக் குடியிருப்பின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளியின் மேசையில் குத்தி வைத்து விட்டு வந்தேன். இப்படியாக, ‘எங்க குடியிருப்பிலும் கொடியேத்தியாச்..”



2013/8/15 amaithi cchaaral <amaithi...@gmail.com>

தேமொழி

unread,
Aug 17, 2013, 1:45:44 AM8/17/13
to vall...@googlegroups.com
:-( 
என்னவோ போங்க ...ஏதோ நீங்களாவது கொடி ஏற்றியவரை மகிழ்ச்சி. 

..... தேமொழி

amaithi cchaaral

unread,
Aug 23, 2013, 6:32:28 AM8/23/13
to வல்லமை, பண்புடன், tamizhsiragugal, Groups

இலைகள்.. PIT போட்டிக்காக..

மலர்களுக்கு வாரி வழங்கிய வர்ணங்களையும் வடிவமைப்பையும் எந்த வித கஞ்சத்தனமுமில்லாமல், பாரபட்சமில்லாமல் இலைகளுக்கும் வழங்கியிருக்கிறாள் இயற்கையன்னை. பூக்களின் அழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்து விடாத "இலைகள்"தான் இம்மாத 'பிட்'போட்டிக்கான கருப்பொருள். கண்டதையெல்லாம் பிடித்துக்கொண்டு வந்ததில் இரண்டாவது படத்திலிருக்கும் க்ரோட்டன்ஸ் 'நான் போட்டிக்குப் போகிறேன்' என்று அடம் பிடித்ததால் அதை 'சென்று வா.. வென்று வா' என்று வீரத்திலகமிட்டு வாழ்த்தி அனுப்பியிருக்கிறேன். மீதமிருப்பவை எக்ஸிபிஷனில்..

நான் போட்டிக்குப் போறேனே..











 காடு மேடு எல்லாம் சுற்றினாலும் தோட்டத்து மூலிகையை மறந்து விட முடியுமோ!!.. எங்கள் வீட்டு வெற்றிலைகள் முகம் மறைத்து.. 




2013/8/17 தேமொழி <them...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

amaithi cchaaral

unread,
Sep 16, 2013, 10:12:11 AM9/16/13
to வல்லமை, பண்புடன், tamizhsiragugal, Groups
அமைதிச்சாரல்
அமைதியாய் நகர்ந்துகொண்டிருந்த வரிசைகளில்
எறும்பாய் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
முன்னும் பின்னுமாய் முட்டிமோதியும்
தவித்துத் தடுமாறியும்
நகர முயன்றுகொண்டிருந்தன.
கிடைத்த இடைவெளிகளில் புகுந்தவையோ
நங்கூரமிட்டுக்கொள்ள,
அடைபட்ட அவஸ்தையில்
அலறிக்கொண்டிருந்தன அத்தனையும்
தொண்டை கிழிய..
கடலாய்ப் பரந்திருந்த போக்குவரத்தை
வாய்க்காலாக்கிய பெருமையுடன்
மிட்டாய்க்காக அடம்பிடிக்கும் குழந்தையென
கால் பரப்பி நின்றிருந்தது
நாற்சந்திச்சாலை நடுவில் வாகனமொன்று
பசுந்தழைகளை உடுத்திக்கொண்டு..
“பத்து பேராய்ச் சேர்ந்தால் ஓரத்திற்கு நகர்த்தி விடலாமே,
மற்றவர்களுக்கு இடையூறில்லாதபடி..”
என்றபடி
எத்தனையாவது மனிதனாகவோ
கடந்து கொண்டிருந்தேன் நான்.


2013/8/23 amaithi cchaaral <amaithi...@gmail.com>

தேமொழி

unread,
Sep 16, 2013, 12:14:06 PM9/16/13
to vall...@googlegroups.com
மிகவும் அருமையான கருத்து சாந்தி.

///“பத்து பேராய்ச் சேர்ந்தால் ஓரத்திற்கு நகர்த்தி விடலாமே,
மற்றவர்களுக்கு இடையூறில்லாதபடி..”
என்றபடி
எத்தனையாவது மனிதனாகவோ
கடந்து கொண்டிருந்தேன் நான்.///

என்ற வரிகளும், வரிகளுக்கேற்ற மிகவும் பொருத்தமான தலைப்பும் மனத்தைக் கவர்ந்தன. 

அன்புடன்

amaithi cchaaral

unread,
Sep 16, 2013, 1:04:51 PM9/16/13
to வல்லமை
மிக்க நன்றி தேமொழி..

Sk Natarajan

unread,
Sep 16, 2013, 10:02:42 PM9/16/13
to தமிழ்ச் சிறகுகள், வல்லமை, பண்புடன், Groups
வாவ் .......
அருமையான பளிச்சிடும் படங்கள்
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/8/23 amaithi cchaaral <amaithi...@gmail.com>

Sk Natarajan

unread,
Sep 16, 2013, 10:06:19 PM9/16/13
to தமிழ்ச் சிறகுகள், amaithi cchaaral, வல்லமை, பண்புடன், Groups
மிகவும் அருமை
இப்படித்தான் நல்ல எண்ணங்களுக்கு  மதிப்பு தராமல் ,அவசர கதியில் இயங்கிக்கொண்டிருக்கின்றோம்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/9/16 amaithi cchaaral <amaithi...@gmail.com>

Parvathy Ramachandran

unread,
Sep 17, 2013, 1:07:22 AM9/17/13
to vall...@googlegroups.com, amaithi cchaaral, Groups

மிக அழகான, சிந்திக்கத் தூண்டும் கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

amaithi cchaaral

unread,
Sep 19, 2013, 12:57:02 AM9/19/13
to வல்லமை
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி எஸ்.கே,

amaithi cchaaral

unread,
Sep 19, 2013, 6:11:31 AM9/19/13
to tamizhsiragugal, பண்புடன், வல்லமை, Groups
பூந்தோட்டம்.. (19-09-2013 அன்று பூத்தவை)

மணிச்சிகை: கோலாகலமாய் அம்ச்சி மும்பைக்கு வந்த கணபதி அதே கோலாகலத்தோடு
திரும்பிப் போயிருக்கிறார். குழுவினர் தங்கள் முழு பலத்தையும் காட்டி
வாசித்த பாண்டு வாத்திய இசையைக் கேட்டவண்ணம் வந்தபோதே அடுத்து வரும்
சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவருக்கான ஆசனத்தில்
அமர்த்தி, மாலை மரியாதை செய்து, மோதகம் நிவேதனம் செய்து, காதுக்கினிமையாக
ஆரத்திப் பாடல்களைப்பாடி அவரை மகிழ்வித்தனர். உபசாரங்களில் மகிழ்ந்து
சற்றே ரிலாக்ஸாக இருந்த பொழுதில் திடீரென்று ஹைபிட்சில் ஒலித்த 'லுங்கி
டான்ஸ்' பாட்டால் தூக்கி வாரிப் போட்டதன் காரணமாக கையில் வைத்திருந்த
மோதகம் தெறித்து எங்கோ விழுந்து விட்டதாகக் கேள்வி. போன வருஷப்
பிள்ளையார்கள் 'ஷீலா கி ஜவானி, சிக்னி சமேலி' போன்ற காலத்தால் அழியாக்
காவியங்களைக் கேட்டு இன்புற்றதை இந்த வருஷப் பிள்ளையார்கள் அறியவில்லை..
பாவம்.

தினமும் ஆரத்தி முடிந்ததும் அடுத்து அனுபவிக்கப்போகும் இ(ம்)சையை
எதிர்நோக்கி காதுகளை இறுக மூடிக்கொண்டதால் பக்தர்களின்
பிரார்த்தனைகளுக்குக் கூட சரியாக காதுகொடுக்க முடியவில்லையாம். "போனால்
போகட்டும் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி வீட்டுக்கு
வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். வந்து நிம்மதியாக உட்கார்ந்து
கொண்டார். ரெண்டு வகை மோதகங்கள், போளி எல்லாம் சாப்பிட்டு விட்டு,
"அம்மாடி,.. இங்கே ஒண்ணரை நாள் நிம்மதியா இருந்தேன். அடுத்த வருஷமும்
வாரேன்" என்றுவிட்டுப் போயிருக்கிறார்.
எங்க வீட்டுப்பிள்ளை..
"பாட்டா பாடுறீங்க?.. உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கறுவியர்,
மும்பையின் ஒரு மண்டலில் ட்ரெஸ் கோட் கொண்டு வந்துவிட்டார். தேசிய உடையான
பெர்முடாஸில் வந்தவர்களை அலேக்காகக் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு
போய் பந்தலுக்கு வெளியே விடும்படி அமைப்பாளர்களின் மனதில் புகுந்து
கொண்டு இவர் செய்த திருவிளையாடலை என்னவென்பது!!! "இருங்க,.. இன்னும்
பதினஞ்சு நாளில் எங்கம்மா வருவாங்க. அவங்க கிட்ட உங்க விளையாட்டைக்
காட்டினா தெரியும் சேதி" என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார்.
"ஹைய்யோ.. ஹைய்யோ.. புரியாத விளையாட்டுப் பிள்ளையா(ரா) இருக்கியே.
அந்தம்மா வந்தாங்கன்னா பத்து நாளும் எங்களோட சேர்ந்து கும்மியடிப்பாங்க
தெரியுமோ" என்று மக்கள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உந்தூழ்(மூங்கில் பூ): புகைப்படப்பிரியனில் நான் எடுத்த இந்தப்படம்
முத்துக்கள் பத்தில் ஒரு முத்தாக வெற்றி பெற்றது. தீர்ப்பு சொன்ன
நாட்டாமைக்கு நன்றி :-)

எறுழம்பூ: வீட்டுக்கு வெளியே போனாலே சுவாரஸ்யமான அனுபவங்களுக்குக்
குறைவிருக்காது. ஒரு சமயம் வண்டியை ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே
பார்க்கிங்கில் சுவரையொட்டி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். வேலை
முடிந்து திரும்பி வந்து பார்த்தால் பின்னால், பக்கவாட்டுகளில் என்று
சகட்டு மேனிக்கு வண்டிகளை நிறுத்தியிருந்தார்கள். எந்த வகையிலும் நகர
முடியாமல் மாட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தோம்..
ஹார்ன் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று முயற்சிக்கலாமென்றால்
அதற்கும் பலனிருக்காது. அந்தச்சாலையில் ஓடும் எக்கச்சக்க வண்டிகளில்
ஏதாவதொரு வண்டியின் ஹார்ன் என்று நினைக்கப்பட வாய்ப்பிருக்கிறதே.
கடைசியில், வண்டியின் ஹெட்லைட்டுகள் மற்றும் பிற லைட்டுகளைப் போட்டு
விடச்சொல்லி ரங்க்ஸிடம் சொன்னேன். லைட்டுகளைப் போட்டு விடுவதால் பாட்டரி
டவுன் ஆகிவிடுமே என்று ரங்க்ஸுக்குத் தயக்கம். பயந்தால், தயங்கினால்
காரியம் ஆகுமா என்ன?. "சும்மா வெறும் ரெண்டு செகண்டுக்குப் போட்டு
விடுங்க. லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியறதைப் பார்த்தால் யாராவது வருவாங்க"
என்று சொல்லிக்கொண்டே....... இருந்தேன். அது படியே ஆகிற்று :-). என்
நச்சரிப்புத் தாங்காமல் விளக்குகளை எரிய விட்டார்.

முதல் தளத்திலிருந்த ஒரு கடைப்பையர் பார்க்கிங்கிலிருக்கும் வண்டியின்
விளக்குகள் எரிவதைப் பார்த்து விட்டு உதவிக்கு வந்தார். அவரிடம்
விஷயத்தைச் சொன்னதும், "அந்த வண்டியின் ஓனரின் ஆபீஸ் இங்கேதான் இருக்கு.
விஷயத்தை அவரிடம் சொல்றேன்" என்று கூறிவிட்டு ஓனரை அழைத்து வந்தார்.
'ஸாரி' கேட்டு விட்டு அந்த வண்டி நகர்ந்து வழியேற்படுத்திக் கொடுத்ததும்,
நாங்கள் கிளம்பினோம். "சொன்னாக் கேக்கணும்ன்னு இதுக்குத்தான் சொல்றது"
என்று சொன்னபடியே அவரைப் பார்த்தேன். என்றுமில்லா முனைப்போடு சாலையைக்
கவனித்துக் கூர்ந்து பார்த்தபடி கியரை மாற்றினார் அவர் :-))))))))

சுள்ளி(மராமரப்பூ): சாரல் துளிகளில் ஒரு துளியை "குங்குமம் தோழி"
ஃபேஸ்புக்கின் முக வரி பகுதியில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மிக்க
நன்றி தோழி.
கூவிரம் பூ: எல்லைப்பிரச்சினையென்பது அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும்
பரவியிருப்பது என்னவோ உண்மைதான். என்றாலும் மின்சார ரயில்களிலும் அவை
அதிகமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன போலும். எதையாவது விற்றுக்கொண்டு
வருபவர்கள் அதைத் தீவிரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைச் சமீபத்திய
ஒரு பயணத்தில் காண நேர்ந்தது. பத்து ரூபாய்க்குப் பதினைந்து எலுமிச்சம்
பழங்கள் விற்கும் இரண்டு பசங்கள் ஒரே சமயத்தில் ரயிலில் ஏறி விட்டார்கள்.
அப்புறமென்ன வாய்த்தகராறுதான் இருவருக்கும். "இது என் ஏரியான்னு
தெரியுமில்லே.. அப்புறம் ஏன் வண்டியில் ஏறினே?.." என்று கேட்டான்
முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?" என்று கேட்டு
விட்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான் இரண்டாமவன். முதலாமவன்
திகைத்து நின்று விடவில்லை. "தஸ் கா லிம்பு லே லோ..(பத்து ரூபாய்க்கு
எலுமிச்சம்பழம் வாங்கிக்கோங்க)" என்று இரண்டாமவன் சவுண்ட்
விடும்போதெல்லாம் "அச்சா,.. படாவாலா இதர் ஹை (பெரிய நல்ல பழங்களெல்லாம்
இங்கே கிடைக்கும்)" என்று தன் கையிலிருந்த பழப்பொதிகளைக்
காண்பித்துக்கொண்டிருந்தான். உண்மைக்குமே அவன் வைத்திருந்த பழங்கள் நல்ல
தரமானவையாக இருந்தமையால் சட்சட்டென விற்றுத்தீர்ந்து கொண்டிருந்தன. முகம்
சிறுத்துப்போன இரண்டாமவன் எந்த ஸ்டேஷனில் இறங்கி வெளியேறினான் என்று
தெரியவில்லை :-)))

amaithi cchaaral

unread,
Sep 19, 2013, 9:30:37 AM9/19/13
to வல்லமை, பண்புடன், tamizhsiragugal, Groups

பூந்தோட்டம்.. (19-09-2013 அன்று பூத்தவை)

மணிச்சிகை: கோலாகலமாய் அம்ச்சி மும்பைக்கு வந்த கணபதி அதே கோலாகலத்தோடு திரும்பிப் போயிருக்கிறார். குழுவினர் தங்கள் முழு பலத்தையும் காட்டி வாசித்த பாண்டு வாத்திய இசையைக் கேட்டவண்ணம் வந்தபோதே அடுத்து வரும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவருக்கான ஆசனத்தில் அமர்த்தி, மாலை மரியாதை செய்து, மோதகம் நிவேதனம் செய்து, காதுக்கினிமையாக ஆரத்திப் பாடல்களைப்பாடி அவரை மகிழ்வித்தனர். உபசாரங்களில் மகிழ்ந்து சற்றே ரிலாக்ஸாக இருந்த பொழுதில் திடீரென்று ஹைபிட்சில் ஒலித்த 'லுங்கி டான்ஸ்' பாட்டால் தூக்கி வாரிப் போட்டதன் காரணமாக கையில் வைத்திருந்த மோதகம் தெறித்து எங்கோ விழுந்து விட்டதாகக் கேள்வி. போன வருஷப் பிள்ளையார்கள் 'ஷீலா கி ஜவானி, சிக்னி சமேலி' போன்ற காலத்தால் அழியாக் காவியங்களைக் கேட்டு இன்புற்றதை இந்த வருஷப் பிள்ளையார்கள் அறியவில்லை.. பாவம்.

தினமும் ஆரத்தி முடிந்ததும் அடுத்து அனுபவிக்கப்போகும் இ(ம்)சையை எதிர்நோக்கி காதுகளை இறுக மூடிக்கொண்டதால் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குக் கூட சரியாக காதுகொடுக்க முடியவில்லையாம். "போனால் போகட்டும் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். வந்து நிம்மதியாக உட்கார்ந்து கொண்டார். ரெண்டு வகை மோதகங்கள், போளி எல்லாம் சாப்பிட்டு விட்டு, "அம்மாடி,.. இங்கே ஒண்ணரை நாள் நிம்மதியா இருந்தேன். அடுத்த வருஷமும் வாரேன்" என்றுவிட்டுப் போயிருக்கிறார்.
எங்க வீட்டுப்பிள்ளை..
"பாட்டா பாடுறீங்க?.. உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கறுவியர், மும்பையின் ஒரு மண்டலில் ட்ரெஸ் கோட் கொண்டு வந்துவிட்டார். தேசிய உடையான பெர்முடாஸில் வந்தவர்களை அலேக்காகக் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் பந்தலுக்கு வெளியே விடும்படி அமைப்பாளர்களின் மனதில் புகுந்து கொண்டு இவர் செய்த திருவிளையாடலை என்னவென்பது!!! "இருங்க,.. இன்னும் பதினஞ்சு நாளில் எங்கம்மா வருவாங்க. அவங்க கிட்ட உங்க விளையாட்டைக் காட்டினா தெரியும் சேதி" என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார். "ஹைய்யோ.. ஹைய்யோ.. புரியாத விளையாட்டுப் பிள்ளையா(ரா) இருக்கியே. அந்தம்மா வந்தாங்கன்னா பத்து நாளும் எங்களோட சேர்ந்து கும்மியடிப்பாங்க தெரியுமோ" என்று மக்கள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

உந்தூழ்(மூங்கில் பூ): புகைப்படப்பிரியனில் நான் எடுத்த இந்தப்படம் முத்துக்கள் பத்தில் ஒரு முத்தாக வெற்றி பெற்றது. தீர்ப்பு சொன்ன நாட்டாமைக்கு நன்றி :-)

எறுழம்பூ: வீட்டுக்கு வெளியே போனாலே சுவாரஸ்யமான அனுபவங்களுக்குக் குறைவிருக்காது. ஒரு சமயம் வண்டியை ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே பார்க்கிங்கில் சுவரையொட்டி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தால் பின்னால், பக்கவாட்டுகளில் என்று சகட்டு மேனிக்கு வண்டிகளை நிறுத்தியிருந்தார்கள். எந்த வகையிலும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தோம்.. ஹார்ன் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று முயற்சிக்கலாமென்றால் அதற்கும் பலனிருக்காது. அந்தச்சாலையில் ஓடும் எக்கச்சக்க வண்டிகளில் ஏதாவதொரு வண்டியின் ஹார்ன் என்று நினைக்கப்பட வாய்ப்பிருக்கிறதே. கடைசியில், வண்டியின் ஹெட்லைட்டுகள் மற்றும் பிற லைட்டுகளைப் போட்டு விடச்சொல்லி ரங்க்ஸிடம் சொன்னேன். லைட்டுகளைப் போட்டு விடுவதால் பாட்டரி டவுன் ஆகிவிடுமே என்று ரங்க்ஸுக்குத் தயக்கம். பயந்தால், தயங்கினால் காரியம் ஆகுமா என்ன?. "சும்மா வெறும் ரெண்டு செகண்டுக்குப் போட்டு விடுங்க. லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியறதைப் பார்த்தால் யாராவது வருவாங்க" என்று சொல்லிக்கொண்டே....... இருந்தேன். அது படியே ஆகிற்று :-). என் நச்சரிப்புத் தாங்காமல் விளக்குகளை எரிய விட்டார்.

முதல் தளத்திலிருந்த ஒரு கடைப்பையர் பார்க்கிங்கிலிருக்கும் வண்டியின் விளக்குகள் எரிவதைப் பார்த்து விட்டு உதவிக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், "அந்த வண்டியின் ஓனரின் ஆபீஸ் இங்கேதான் இருக்கு. விஷயத்தை அவரிடம் சொல்றேன்" என்று கூறிவிட்டு ஓனரை அழைத்து வந்தார். 'ஸாரி' கேட்டு விட்டு அந்த வண்டி நகர்ந்து வழியேற்படுத்திக் கொடுத்ததும், நாங்கள் கிளம்பினோம். "சொன்னாக் கேக்கணும்ன்னு இதுக்குத்தான் சொல்றது" என்று சொன்னபடியே அவரைப் பார்த்தேன். என்றுமில்லா முனைப்போடு சாலையைக் கவனித்துக் கூர்ந்து பார்த்தபடி கியரை மாற்றினார் அவர் :-))))))))

சுள்ளி(மராமரப்பூ): சாரல் துளிகளில் ஒரு துளியை "குங்குமம் தோழி" ஃபேஸ்புக்கின் முக வரி பகுதியில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தோழி.
கூவிரம் பூ: எல்லைப்பிரச்சினையென்பது அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவியிருப்பது என்னவோ உண்மைதான். என்றாலும் மின்சார ரயில்களிலும் அவை அதிகமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன போலும். எதையாவது விற்றுக்கொண்டு வருபவர்கள் அதைத் தீவிரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைச் சமீபத்திய ஒரு பயணத்தில் காண நேர்ந்தது. பத்து ரூபாய்க்குப் பதினைந்து எலுமிச்சம் பழங்கள் விற்கும் இரண்டு பசங்கள் ஒரே சமயத்தில் ரயிலில் ஏறி விட்டார்கள். அப்புறமென்ன வாய்த்தகராறுதான் இருவருக்கும். "இது என் ஏரியான்னு தெரியுமில்லே.. அப்புறம் ஏன் வண்டியில் ஏறினே?.." என்று கேட்டான் முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?" என்று கேட்டு விட்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான் இரண்டாமவன். முதலாமவன் திகைத்து நின்று விடவில்லை. "தஸ் கா லிம்பு லே லோ..(பத்து ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கிக்கோங்க)" என்று இரண்டாமவன் சவுண்ட் விடும்போதெல்லாம் "அச்சா,.. படாவாலா இதர் ஹை (பெரிய நல்ல பழங்களெல்லாம் இங்கே கிடைக்கும்)" என்று தன் கையிலிருந்த பழப்பொதிகளைக் காண்பித்துக்கொண்டிருந்தான். உண்மைக்குமே அவன் வைத்திருந்த பழங்கள் நல்ல தரமானவையாக இருந்தமையால் சட்சட்டென விற்றுத்தீர்ந்து கொண்டிருந்தன. முகம் சிறுத்துப்போன இரண்டாமவன் எந்த ஸ்டேஷனில் இறங்கி வெளியேறினான் என்று தெரியவில்லை :-)))

தேமொழி

unread,
Sep 19, 2013, 10:33:29 AM9/19/13
to vall...@googlegroups.com

புகைப்படப்பிரியனின் "பத்தில்ஒருத்தி"க்குப் பாராட்டுக்கள்.


..... தேமொழி

coral shree

unread,
Sep 19, 2013, 10:35:04 AM9/19/13
to vallamai, பண்புடன், tamizhsiragugal, Groups
அன்பின் சாந்தி,

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா


2013/9/19 amaithi cchaaral <amaithi...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

amaithi cchaaral

unread,
Nov 4, 2013, 10:27:15 PM11/4/13
to வல்லமை, பண்புடன், tamizhsiragugal, Groups

பாதுகாப்பே மகிழ்ச்சியானது..

தீபாவளிக்கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?.. பெண்களெல்லாம் பலகாரங்கள் சுட்டு முடித்த களைப்பில் இருப்பார்கள். மற்றவர்கள் அவற்றை ஒரு கை பார்த்த களைப்பிலும் புதுப்படங்களைக் கண்டு களித்த மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். ஆனால், இந்தப் பொட்டுப்பொடிசுகளுக்கு மட்டுந்தான் இன்னும் தீபாவளி முடியவில்லை. பின்னே.. வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகள் இன்னும் மீதம் இருக்கிறதே :-) நடுராத்திரி என்றும் பாராமல் வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். சிறிசுகள் பட்டாசு கொளுத்தும் ஸ்டைலைப் பார்த்தால் பழமொழியில் பொய்யில்லை என்றுதான் தோன்றும் :-). புதுத்துணிகள் பலகாரங்கள் கொடுப்பதை விட பட்டாசுகள்தானே அவர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி.

"எக்கா.. லெச்சுமி வெடி, குருவி வெடியெல்லாம் வெடிக்கறது இருக்கட்டும். அணுகுண்டை வெச்சு வெடிக்க வைப்பியா?" என்று நக்கலுடன் கேட்டான் வயதில் இளையவனானாலும் விளையாட்டுத்தோழனான வெங்கிட்டு. எல்லாம் ஒரு காலத்தில் நான் பட்டாசு வெடித்த லட்சணத்தைப் பார்த்துத்தான். ஒரு தாளைக் கிழித்து அதில் பட்டாசுத்திரி படும்படி வைத்துவிட்டு தாளின் ஒரு முனையைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ பரவி பட்டாசுத்திரியைத் தொட்டதும் படாரென்று வெடிக்கும். அவ்வளவு வீர தீர தைரியசாலியான என்னை.. என்னைப் பார்த்து ஒரு சிறுவன் இப்படிக் கேட்கலாமோ!! :-))). நக்கலடித்ததுமில்லாமல் "நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். 

 நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

இங்கேயும் சில பிரகஸ்பதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். வெடிகளை மட்டுமென்ன, ராக்கெட்டுகள், பூச்சட்டி என்று சொல்லப்படும் பொறிவாணங்களையும் கூட அனாயாசமாகக் கையில் பிடித்துக்கொண்டுதான் பற்ற வைக்கிறார்கள்.அது பொங்கி மங்களம் பாடும்போது இவர்களும் சேர்ந்து கொண்டு "ஐயோ.. அம்மா, வலிக்குதே" என்று கோரஸ் பாடுவதுண்டு.

மும்பையில் தீபாவளி தேய்பிறை ஏகாதசியன்று ஆரம்பித்து, வளர்பிறை துவிதியை வரைக்கும் ஏழு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் லக்ஷ்மி பூஜை மிகவும் முக்கியமான பண்டிகை. இதைப்பற்றி விவரமாக ஏற்கனவேஎழுதியிருக்கிறேன்சாயந்திரம் வீட்டில் லக்ஷ்மி பூஜையை முடித்து விட்டு, புதுசை உடுத்திக்கொண்டு பார்க்கிங்கிற்குப் போய் வாகனங்களுக்குப் பொட்டிட்டு, மாலை சாற்றி, ஊதுவத்தி காண்பித்து பூஜை செய்தபின் பட்டாசுகளைக் கொளுத்துவது இங்கே வழக்கம். நாங்களும் வழக்கம்போல் வீட்டில் பூஜை முடித்து, வாகனங்களுக்கும் பூஜை செய்து விட்டு பட்டாசு கொளுத்த ஆரம்பித்தோம். பையருக்கு நட்சத்திரப்படி நேற்று பிறந்தநாளும் கூட :-))

எங்கள் வீட்டில் கடந்த சில வருடங்களாக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக்கொண்டு ஒளிவெள்ளத்தில் மூழ்கடிக்கும் பட்டாசுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். "Go green" என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளின் ஆர்டர். அவ்வப்போது குழந்தைகள் சொல்வதையும் பெரியவர்கள் கேட்க வேண்டும்தானே :-). இந்த வருடம் மும்பை முழுக்கவே ஒலிப்பட்டாசுகள் குறைவாகவும் ஒளிப்பட்டாசுகள்தான் அதிகமாகவும் வெடிக்கப்பட்டதாக நாளிதழ் தகவல் கொடுத்தது. இதைக் கண்கூடாகவும் கண்டோம். 

பட்டாசு கொளுத்தி முடித்தபின் வீட்டுக்கு வந்து, தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் பில்டிங்கின் எதிர் வரிசையிலிருக்கும் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் கடைகளும் உண்டு. கடைக்காரர்கள் பை நிறைய விதவிதமான பட்டாசுகளை வைத்துக்கொண்டு ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். கேலியும் கூத்துமாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. வெடிகளில் 25 shots என்றொரு வெடிவகை உண்டு. இரண்டு செங்கல்களை ஒட்டி பாக்கெட் போட்டுக்கொடுத்தாற்போன்ற அமைப்பிலிருக்கும் அதை திரியைக் கொளுத்தி வைத்து விட்டால் போதும். 25 வெடிகளும் பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகக் கிளம்பி வானத்தில் போய் வெடித்துப் பூப்பூவாய்ச் சிதறும். இதை அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருத்தர் பற்ற வைத்து விட்டு யதாஸ்தானம் திரும்பினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

சர்ர்ர்ரென்று வேகமாக வந்த ஹோண்டா சிட்டி வாகனமொன்று புகைந்து கொண்டிருந்த வெடியின் மேலாகக் கடந்து அதை இழுத்துக்கொண்டு சென்றது. "அரே.. பாப்ரே.." என்று அலறினார்கள் அக்கம்பக்கம் நின்றவர்கள் அனைவரும். நடந்த விபரீதத்தை வண்டியின் டிரைவர் உணருமுன்னே வண்டிக்கடியில் மாட்டியிருந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு வெடியாகக் கிளம்பி டாம்.. டாமென்று வெடிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான் தடதடவென்று வண்டியிலிருந்தவர்கள் இறங்கி ஓடி  பாதுகாப்பாக நின்று கொண்டார்கள். உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது என்று சொல்வார்களே!! அதை அன்று கண் முன் கண்டேன். கெட்டதிலும் நல்லதாக ஒரு விஷயம் நடந்திருந்தது. அதாவது வண்டியில் மாட்டி இழுத்த வேகத்தில் பெட்டி கிடைமட்டமாகச் சரிந்திருந்ததால் வெடிகளும் மேற்புறமாகக் கிளம்பாமல் கிடைமட்டமாகச் சாலையில் சென்று வெடித்துக்கொண்டிருந்தன. மேற்புறமாகக் கிளம்பியிருந்தால் வண்டி என்னவாகியிருக்குமென்று நினைத்துப்பார்க்கவே குலை நடுங்குகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதே. அதுவும் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தை குட்டிகளுடன் சென்று கொண்டிருந்த குடும்பம் அது.

சாலைகளில் வெடிகளை வைப்பவர்கள் கடந்து செல்பவர்களை எச்சரிக்க வேண்டாமோ!! வழக்கமாக "பட்டாசு வெச்சிருக்கோம். கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க" என்று அனைவரும் எச்சரிக்கை செய்வது வழக்கம்தான். என்னவோ போங்க.. அன்றைக்கு அந்தக் குடும்பத்தினரின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியந்தான். காரின் கீழிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வெடிகளையும் பதைபதைக்கும் மனங்களோடு நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு சின்னப்பொறி எத்தனையோ குடும்பங்களின் வீடுகளை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறது. அதேபோல் கண்ணீர்க்கடலிலும் மூழ்கடித்து விடவும் வல்லது. நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத்தான் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். காலத்துக்கும் நினைத்துப் பார்த்து வெம்பி வேதனைப்பட அல்ல.
நேற்று இரவில் சுமார் பதினொரு மணியளவில் பக்கத்துப் பில்டிங்கில் எல்லோருடைய தூக்கத்தையும் கலைக்கும் வண்ணம் அதிரும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. தவுசண்ட் வாலாவோ என்னவோ!!. "திவாலி முடிஞ்சாச்சு.. போய்த்தூங்குங்க" என்று கத்த வேண்டும் போலிருந்தது. அதன் பின் ஒன்றரை மணியளவில் ஆரம்பித்து விடியற்காலை சுமார் நான்கு மணி வரைக்கும் கூட பட்டாசுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாம். ear muffler மற்றும் ear plugs துணையிருந்தும் சத்தம் காரணமாகத் தூங்க முடியாமல் தவித்த பையர் விடியலில்தான் தூங்கியிருக்கிறார். நமக்கே இப்படியென்றால் கைக்குழந்தைகள் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் என்ன கதியோ!!. பண்டிகையின் மகிழ்ச்சியையே கெடுத்து விடுகிறது இப்படிப்பட்ட சிலரின் செயல்கள். அததற்கென்று நேரம் காலம் இருக்கத்தானே செய்கிறது.

எல்லோரும் சந்தோஷப்படத்தான் பண்டிகைகள். அத்தனை பேரையும் வேதனைக்குள்ளாக்கி ஒரு சிலர் சந்தோஷப்பட அல்ல. நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. (எங்கூர்ல இன்னும் திவாலி முடியலை :-)

sathiya mani

unread,
Nov 5, 2013, 1:49:57 AM11/5/13
to vall...@googlegroups.com
பிறருக்கு கொண்டாட்டம்....மற்றவர்க்கு திண்டாட்டம்
அமைதியாக விளக்கேற்றி கொண்டாடுவதை
வெடிவைத்து விபரிதமாக ஆக்குவது
தனக்கும்  தன் புவிக்கும் கேடு விளைவிக்கும் 
நரகாசுரத்தனம் தான். கட்டுரையின் இக்கருத்தை
கவிதையில் இப்படி கொடுத்தேன்


பட பட பட்டாசு இடபுறம்
படபடப்புடன் பலர் வலபுறம்
வெடி வெடி வெடியென இடபுறம்
வெடியால் செவிடர்கள் வலபுறம்
புகைந்திடும் சூழல் இடபுறம்
இருமலில் இரைப்பவர் வலபுறம்
கலகலச் சக்கரம் இடபுறம்
கடனுக்கு கஞ்சி வலபுறம்
இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்
இயலாமையில் சிலர் மறுபுறம்
ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்
நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்
குய‌வ‌ரின் விள‌க்குக‌ள் எரிந்திடவே
க‌ய‌வ‌ரின் இன‌ங்களும் குறைந்திடவே
பிணிக‌ளும் பேய்க‌ளும் நீங்கிட‌வே
அணிக‌ளும் வாழ்த்தும் சேர்ந்திட‌‌வே
அன்புட‌ன் இனிப்பாய் ! புத்தாடை
அணிந்தே ஆட‌டி “தீபாவ‌ளி”
 
S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406


amaithi cchaaral

unread,
Nov 8, 2013, 9:20:16 AM11/8/13
to வல்லமை
வாசித்தமைக்கு மிக்க நன்றி திரு. சத்யா.


2013/11/5 sathiya mani <sathi...@yahoo.com>



--

தேமொழி

unread,
Nov 8, 2013, 12:41:15 PM11/8/13
to vall...@googlegroups.com

படங்களும், பதிவும் அருமை சாந்தி.


..... தேமொழி

coral shree

unread,
Nov 8, 2013, 7:52:29 PM11/8/13
to vallamai
அழகான படங்கள். அதற்கேற்ற விளக்கங்கள். வாழ்த்துக்கள் சாந்தி. அடிக்கடி மறைந்து விடுகிறீர்கள். ரொம்ப நாட்களாக காணவில்லையே?

அன்புடன்
பவளா


2013/11/8 தேமொழி <them...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

amaithi cchaaral

unread,
Nov 9, 2013, 6:24:17 AM11/9/13
to வல்லமை
வாசித்தமைக்கு மிக்க நன்றி தேமொழி..

amaithi cchaaral

unread,
Nov 9, 2013, 6:27:50 AM11/9/13
to வல்லமை
வாசித்தமைக்கும் விசாரித்தமைக்கும் மிக்க நன்றி சங்கரி.

வீட்டுக்கடமைகள் "எங்களையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?" என்று கெஞ்சலுடன் அதட்டுகின்றன. இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு அஞ்ஞாத வாசம்தான் 
330.gif

coral shree

unread,
Nov 9, 2013, 6:31:50 AM11/9/13
to vallamai
சீக்கிரம் வாங்க..  சாந்தி..உங்க இடம் வெயிட்டிங்..!

அன்புடன்
பவளா


2013/11/9 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
330.gif

amaithi cchaaral

unread,
Nov 9, 2013, 7:35:57 AM11/9/13
to வல்லமை, பண்புடன், Groups, tamizhsiragugal

எப்படிச்சொல்வேனடி தோழி!! (குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்)

ஃபேஸ்புக்கில்"குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது. எனது சாரல்துளிகளும் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கம் என்றாலும் இந்தத்தடவை தனது அளவற்ற அன்பினால் என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டாள் என் தோழி. செப்டம்பர் இறுதி நாளில் தொடங்கி அக்டோபர் 10-ம் தேதி வரைக்கும் ஒன்றிரண்டு நாட்களைத்தவிர தினமும், அதாவது கிட்டத்தட்ட அந்த வாரம் முழுவதையுமே எனது "சாரல் துளிகளுக்காக" ஒதுக்கிய அவளது அன்பை என்னவென்பது.

"இந்த வாரம்.. எனது வாரம்" என்று வீட்டில் சற்றே கர்வப்பட்டுக்கொண்டேன். பின்னே,.. நம் அருமை பெருமைகளை வீட்டிலுள்ளவர்களிடம் இது மாதிரியான சமயங்களில்தானே டமாரம் அடித்துக்கொள்ள முடியும். நமக்கென்று ஒரு கெத்து இருக்கிறதல்லவா :-)))

உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதே சமயம் என் கல்வெட்டுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமே. ஆகவே இங்கே பகிர்ந்து விட்டேன் :-)








இன்னொரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 9, 2013, 7:56:28 AM11/9/13
to vall...@googlegroups.com, Groups
ஒவ்வொரு தினமொழியும் முத்து!!.. அருமை!!!.... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/11/9 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--

coral shree

unread,
Nov 9, 2013, 7:59:03 AM11/9/13
to vallamai
சூப்பர்.... வாழ்த்துக்கள் சாந்தி!

அன்புடன்
பவளா


2013/11/9 amaithi cchaaral <amaithi...@gmail.com>

எப்படிச்சொல்வேனடி தோழி!! (குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 10:05:26 PM11/13/13
to Groups, பண்புடன், tamizhsiragugal, வல்லமை
வாசித்தமைக்கு மிக்க நன்றி பாரு..


2013/11/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ஒவ்வொன்றும் மிக நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.

சுபா


2013/11/9 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 10:06:05 PM11/13/13
to Groups, பண்புடன், tamizhsiragugal, வல்லமை
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சங்கரி..


2013/11/14 amaithi cchaaral <amaithi...@gmail.com>

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 10:06:32 PM11/13/13
to Groups, பண்புடன், tamizhsiragugal, வல்லமை
ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுபா..

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 10:08:18 PM11/13/13
to Groups, பண்புடன், tamizhsiragugal, வல்லமை

சின்னஞ்சிறு மனிதர்கள்..

எத்தனை வயதானாலும் சரி, மனிதன் தன் நினைவுக்கிடங்கில் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருவது அவனது குழந்தைப்பருவ நினைவுகளாய்த்தானிருக்கும். வளர்ந்தபின் தூக்கம் தொலைத்த இரவுகளில் கள்ளங்கபடமற்ற, சுமைகளற்ற அந்தப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதும், இயல்பே. "குழந்தையாவே இருந்துருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும்" என்ற பெருமூச்சினூடே நம்முடைய ஏக்கங்களையும் வெளியிட்டுக்கொள்கிறோம்.
உண்மையில் அந்தந்த வயதுக்குரிய கவலைகளும் ஏக்கங்களும் இருக்கத்தானே செய்கின்றன. விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை, பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்(ன்), அப்பா அம்மா குட்டிப்பாப்பாவையே அதிகம் கவனிக்கிறார்கள், நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு பருப்பு, எண்ணெய் எல்லாம் யார் கொண்டு போய் கொடுப்பார்கள், அப்பா வாங்கி வந்த இனிப்பில் தம்பிக்கு, தங்கைக்கு  ஒரு விள்ளல் அதிகம் கிடைத்து விட்டது என்று எத்தனையோ உலகமகாக்கவலைகளால் நாமும்தானே பாதிக்கப்பட்டிருந்தோம். நெல்லிக்காய் கொடுத்து தாஜா செய்து வைத்திருந்த ஃப்ரெண்டை, கலர் சாக்பீஸ் கொடுத்து தட்டிக்கொண்டு போன எதிரியை நினைத்து எத்தனை நாள் கறுவியிருப்போம். டீச்சர் பாடம் நடத்தும்போது நம்மை நறுக்கென்று கிள்ளி வைத்த எதிரியை, இமை தாண்டாத நம் கண்ணீர் கண்டு பதறி, சமயம் பார்த்து தலையில் குட்டி பழி வாங்கிய நம் தோழமையை "மை ஃப்ரெண்டு" என்று தோள் சேர்த்து அணைத்திருப்போம். இப்படி நாளொரு கவலை, பொழுதொரு வருத்தம் என்று இருந்திருந்தாலும் நம் எனிமீஸ்களை பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசுடன் மன்னித்து விடும் பெருந்தன்மையும் நமக்கிருந்தது. அதே பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசு நம் எதிரிகளுக்கும் இருந்தது வேறு விஷயம் :-)))

ஆனால் இன்றைய குழந்தைகளின் நிலையே வேறு. எதற்கெடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் என்று குழந்தைப்பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களை அலைக்கழிக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விடுவார்கள் :-). இந்தச் சின்னஞ்சிறு மனிதனுக்கு இத்தனை பெரிய கவலையா என்று சிரிப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் புரியும். காலை எழுந்தவுடன் படிப்பு,.. பின்பும் படிப்பு, மேலும் படிப்பு என்றே நாளைக்கழிக்க வேண்டியிருக்கிறது. இதை விட்டால் இருக்கவே இருக்கிறது விளையாட்டு. விளையாட்டு என்றவுடன் மைதானத்திலும் தெருவிலும் விளையாடுவார்கள் என்று எண்ணிக்கொண்டால் நீங்கள் அந்தக்காலத்து ஆள் என்று அர்த்தம். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட அசையாமல் கம்ப்யூட்டரில் விளையாடுவார்கள் என்று பதில் சொன்னால் உங்களுக்கு ஒரு சபாஷ் கொடுத்துக்கொள்ளுங்கள்.

மதிப்பெண் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டுப்போட்டு இந்தப்பிஞ்சு உள்ளங்கள் களைத்துத்தான் விடுகின்றன. இப்பொழுதெல்லாம் கோடை விடுமுறைகளையும் கூட விட்டு வைப்பதில்லை. கராத்தே, நீச்சல், டான்ஸ் , ஓவியம், கிரிக்கெட், மியூசிக் என்று ஆயிரத்தெட்டு வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு விடுகிறார்கள். வருடம் முழுக்க கல்விக்கூடங்களுக்குப் போய் வந்த குழந்தைகள் விடுமுறையில் பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள். அங்கேயும் ஹோம் வொர்க் போன்றவை உண்டாம். என் தோழியின் பையன் சொன்னபோது "அடப்பாவமே.." என்றிருந்தது. வளரும் வயதில் குழந்தைகள் எதையும் சீக்கிரம் கிரகித்துக்கொள்வார்கள், இது கற்றுக்கொள்ளும் வயது என்பதெல்லாம் சரிதான். அதற்காக இப்படியா?!!!!!

முக்கியமாக குழந்தைகளுக்குக் கதை சொல்லுதலைப் பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். அப்பொழுதெல்லாம் கதை நேரமாக சாப்பாட்டு நேரம் இருந்தது. பாட்டியின் கதையோடு இரண்டு கவளம் சாதம் கூடுதலாக உள்ளே இறங்கும். இல்லையென்றால் தாத்தா பாட்டியின் மேல் கால், கைகளைப் போட்டுக்கொண்டு 'உம்' கொட்டிக்கொண்டு குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டு விழித்திருக்க, கதை சொன்ன தாத்தா பாட்டிகள் தூங்கி விடும் இரவுகளும் உண்டு. சில சமயங்களில் குழந்தைகளையே கதை சொல்லவும் தூண்டுவார்கள். குழந்தைகளும் நன்றாகக் கதை விடுவார்கள் :-))இது குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்ப்பதாகவும் இருந்தது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் மாரல் வகுப்புகளும் நடக்கும். அதிலும் கூட குழந்தைகளை நல்ல நீதிக்கதைகளைச் சொல்லச்சொல்வது வழக்கம். இதனால் மேடைக்கூச்சமில்லாமல் பத்துப்பேருக்கு முன்னால் பேசவும், தன் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்கவும் பயின்றார்கள். பிள்ளைகளும் வளரும்போதே நல்ல பழக்கங்களுடன் வளர்ந்தார்கள். இந்த மாரல் வகுப்புகளின் அருமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளில் மறுபடியும் மாரல் வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. அப்படி வரும் மாரல் வகுப்புகளை, மற்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் பிடுங்கிக்கொள்ளாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்..

ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினத்தன்று கூகிள் லோகோவை வடிவமைக்கும் போட்டியை குழந்தைகளுக்காக நடத்தி வருகிறது. இந்த வருடம் பூனாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான காயத்ரி கேதாராமன் வடிவமைத்த லோகோ முதலிடம் பெற்றிருக்கிறது.  இறுதிச்சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட பன்னிரண்டு லோகோக்களையும் வென்று வாகை சூடியிருக்கிறது காயத்ரியின் லோகோ. "இந்தியப்பெண்களுக்கு(அவர்கள் திறமைகளுக்கு) வானமே எல்லை" என்று காயத்ரியால் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த லோகோ பெண்களைக்கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காயத்ரியின் லோகோவை கூகிள் தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது.
குழந்தைகளுக்கும் மனதால் இன்னும் குழந்தையாக இருப்பவர்களுக்குமாக இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 10:21:06 PM11/13/13
to Groups, பண்புடன், tamizhsiragugal, வல்லமை
இந்த இழையில் பகிர்ந்த குழந்தைகள் தின சிறப்புப்பதிவு எங்கே போச்சு :-((


2013/11/14 amaithi cchaaral <amaithi...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

unread,
Nov 13, 2013, 11:26:48 PM11/13/13
to vall...@googlegroups.com
///இந்த இழையில் பகிர்ந்த குழந்தைகள் தின சிறப்புப்பதிவு எங்கே போச்சு :-((///

இப்பொழுது எனது முறை சாந்தி.  
எனக்கு பதிவு தெரிகிறதே 


///இந்த வருடம் பூனாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான காயத்ரி கேதாராமன் வடிவமைத்த லோகோ முதலிடம் பெற்றிருக்கிறது.  இறுதிச்சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட பன்னிரண்டு லோகோக்களையும் வென்று வாகை சூடியிருக்கிறது காயத்ரியின் லோகோ. "இந்தியப்பெண்களுக்கு(அவர்கள் திறமைகளுக்கு) வானமே எல்லை" என்று காயத்ரியால் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த லோகோ பெண்களைக்கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காயத்ரியின் லோகோவை கூகிள் தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது.///

நல்லதொரு பதிவு..தகவலுக்கு நன்றி...

அன்புடன்
..... தேமொழி

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 11:40:31 PM11/13/13
to வல்லமை
ஹி..ஹி..ஹி.. 100 அடிச்சதும் காணாமப்போயிருச்சு. அறிவிப்பு கொடுத்த கையோட நேரடியா க்ரூப்ல போயி கண்டுபிடிச்சுட்டேன் தேமொழி. இப்ப நீங்க உயிர் கொடுத்ததும் என் கண்ணுக்கும் தெரிய ஆரம்பிச்சுருச்சு 


2013/11/14 தேமொழி <them...@yahoo.com>
330.gif

coral shree

unread,
Nov 13, 2013, 11:57:58 PM11/13/13
to vallamai
குழந்தை மனசுள்ள உங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சாந்தி. :-))

அன்புடன்
பவளா


2013/11/14 amaithi cchaaral <amaithi...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.
330.gif

amaithi cchaaral

unread,
Jan 3, 2014, 4:01:50 AM1/3/14
to Groups, பண்புடன், tamizhsiragugal, வல்லமை

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். 
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இது என்னுடைய முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன். 
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும்அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.


2013/11/14 amaithi cchaaral <amaithi...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Ranjani Narayanan

unread,
Jan 3, 2014, 4:04:12 AM1/3/14
to vall...@googlegroups.com
முதல் கவிதை நூல் வெளியிட்டிற்கு வாழ்த்துக்கள், சாந்தி!
இந்தப் புத்தாண்டில் மேலும் பல மகுடங்கள் உங்களுக்கு வந்து சேரட்டும்.
பாராட்டுக்கள்!


2014/1/3 amaithi cchaaral <amaithi...@gmail.com>

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 3, 2014, 4:08:37 AM1/3/14
to vall...@googlegroups.com
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சாந்தி.. மிக மிக  மகிழ்ச்சியாக இருக்கிறது.. தங்கள் திறமைக்கான சிறப்புகளின் முதல் பக்கமே இது!!..இது போல் இன்னும்..இன்னும் பல சிறப்புகள் அணிவகுத்து வரக் காத்திருக்கின்றன.பாராட்டுக்கள்!


2014/1/3 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

தேமொழி

unread,
Jan 3, 2014, 4:28:05 AM1/3/14
to vall...@googlegroups.com

///"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். ///



வாழ்த்துகள் சாந்தி, நூலின் தலைப்பும் அதற்கு நீங்கள் கற்பிக்கும் விளக்கமும் உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது, வாழ்க ...வளர்க.

நீங்கள் கூறியது ஜானதன் லிவங்ஸ்டன் சீகல் (ரிச்சர்ட் பாக்) கூறியதை நினைவு படுத்துகிறது.

“The gull sees farthest who flies highest” 
― Richard BachJonathan Livingston Seagull

Way to Go Girl ........

அன்புடன்
..... தேமொழி

துரை.ந.உ

unread,
Jan 3, 2014, 4:31:50 AM1/3/14
to வல்லமை
​​வாழ்த்துகள் ​


2014/1/3 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

முதல் கவிதை நூல் வெளியிட்டிற்கு வாழ்த்துக்கள், சாந்தி!
இந்தப் புத்தாண்டில் மேலும் பல மகுடங்கள் உங்களுக்கு வந்து சேரட்டும்.
பாராட்டுக்கள்!




--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
It is loading more messages.
0 new messages